Tuesday, February 07, 2006

மனசே சரியில்லைங்க- உண்மை சம்பவம்

நேற்று இரவு வெளியே போய்விட்டு வீடு வந்து சேர நேரமாகிவிட்டது. ஆனா மறுநாள் ஸ்கூல் ஆபிஸ் ( எனக்கில்லை) இருப்பதால், ஐந்தே முக்காலுக்கு அலாரம் வைத்து எழுந்து ஹீட்டர் போட்டு காபி, டிபன் என்று தயார் செய்து அனுப்பிவிட்டு, கதவை சாத்தினால் தூக்கம் கண்ணை சுற்றியது. அது என்னவோ எங்கள் வீட்டு ஹால் சோபாவில் படுத்தால் போதும், தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கும், தூக்கம் மட்டும் அமிர்த்தமாய் பொழியும்.

ஏதோ பழைய பாட்டு ஓடிக் கொண்டிருக்க, சமையல், பாத்திரம் கழுவுதல், சலவை இயந்திரத்தில் காலையில் போட்ட துணிகள் போன்றவை நினைவுக்கு வந்தாலும் சின்னதாய் ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்னும் பொழுது போன் அடித்தது. பார்த்தால் என் தோழி. வழக்கமாய் தமிழ் பதிவுகள் வாசிப்பவள். ஆனால் பிளாக்கர் அக்கவுண்ட் இல்லை என்று சொல்வதால், எனக்கு ஒற்றை பின்னுட்டமோ, ந. குத்துக்கோ பிரேஜினம் இல்லாதவள். அவளிடம் ஓரே குறை. நிறைய அட்வைஸ் செய்வாள். நானோ அட்வைசும் செய்ய மாட்டேன், கேட்டுக் கொள்ளவும் மாட்டேன். ஆனால் அவளிடம் பல முறை அட்வைஸ் செய்தாதே என்ற அட்வைஸ் மட்டும் செய்தும், அவள் கேட்பதாக இல்லை. என்னை திருத்துவது அவள் கடமையே கண்ணாய் இருப்பாள்.

வரும் கொட்டாவியை அடக்கிக் கொண்டு "ஹலோ" என்று தமிழில் பேச ஆரம்பித்தேன். "இன்னைக்கு பிளாக்ஸ் பார்த்தாயா?" என்று ஆரம்பித்தாள். "உம்" என்றேன்.

"உன்ன கிண்டல் அடிச்சி ரெண்டு பதிவு வந்திருக்கு"

"அப்படியா? என்று அசுவாரசியமாய் கேட்டுவிட்டு, நேற்று கதையை சொல்லிவிட்டு, பத்து நிமிடம் தூங்கிவிட்டு எழுந்துப் பார்க்கிறேன் என்றேன்.

"நா கேக்கிறேன்னு தப்பா நெனைக்காதே. உன்ன கிண்டல் அடிச்சிருக்காங்கன்னு சொன்னா, உன் பி.பி எகிறணும். உணர்ச்சி வசப்பட்டு இரண்டு பக்கத்துக்கு அவங்கள கிழிக்க வேண்டாமா?"

"நானே லோ பிபி ஆளு நானு. அப்புறம் உணர்ச்சிவசப்படுகிற பழக்கம் இருந்திருந்தா எப்பவோ லோ பிபி சரியாயிருக்குமே"
என்றவள், சரி ஏதோ சிரியஸ்ஸான மேட்டர் போலிருக்கு என்று நினைத்து, தூக்கத்தை துக்கத்துடன் ஓரக்கட்டி வைத்துவிட்டு, "என்ன மேட்டர்?" என்றுக் கேட்டேன்.

"சாமிநாதன் தெரியுமா?'

"ஆமாம். சாமி பாட்டு எடுத்துப் போடுவாரே. சின்ன பையன் தான். ஆனா பக்திமான்"

"இன்னைக்கு புல்லாகி பூண்டாகி பாட்டு போட்டு இருக்கார். புல்லுனா யாரு... நீதான். அடுத்து ரமணன் சமையல் குறிப்புல வெண்டக்காய் நுனிய ஒடிச்சிப் பார்த்து வாங்கணும்னு டிப்ஸ் கொடுத்திருக்கார். ரெண்டு பேரூம் ஓரே ஆளுத்தான். நுனியையும் புல்லையும் சேர்த்தா நுனிப்புல் வருதா. ஐபி அட் ரஸ் தெரியும். கேஸ் போடுவேன்னு ஆரம்பி. இதெல்லாம் தெரியாம, நீ எல்லாம் இலக்கியம் வளர்த்து... ஹ¥ம்!"

தூக்கம் போன எரிச்சலில் " தோ பாரூ. இப்படி ஒண்ணு ஒண்ணுக்கும் குயுக்கியா யோசிக்க எனக்கு வராது. கேசா? இங்க
வக்கீலுங்க கிட்ட போனா, சொத்தையே எழுதி வைக்கணும். அதவிட எங்க வீட்டுக்காரர் மூணு தடவை தலாக்குன்னு சொல்லிட்டுப் ஈசியா போயிடுவாரு, அவங்க என்னமோ எளுதிட்டுப் போறாங்க. எனக்கு தூக்கம் வருது. வையி போன" என்றேன்

"இவ்வளவும் கேட்டுட்டு தூக்கம் வருதுன்னு சொல்லுறீயே. படைப்பாளி எந்நேரமும் எழுத்தை பற்றியே யோசிக்க வேண்டும்"

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "கமலஹாசனின் காதலா காதலா படம் பார்த்தீயா? அதுல படைப்பாளி, துடைப்பாளி ஜோக்...." முடிப்பதற்குள், " மொதல்ல இப்படி சிரிக்கிறத நிறுத்து. படைப்பாளி ஐ மீன் இலக்கியவாதிகள் இப்படி சிரிக்கக்கூடாது. மொதல்ல உன்னோட பிளாக் பெயரை மாத்து. சிந்தனை சிற்பியின் எண்ண சிதறல்கள் மாதிரி இருந்தா ஒரு கெத்தா இருக்குமில்லே? அப்புறம் அது என்ன மொதல படம்? சின்ன புள்ளதனமா இருக்கு? சிந்திக்கிறாமாதிரி ஒரு போஸ் இருந்தா எப்படி இருக்கும்?

புலி, புலிக்குட்டியோட ஒரு படம் இருக்கு என்று சொல்ல நினைத்தவள், அதை அப்படியே முழுங்கிட்டு, "ஒரு அதி மேதாவியின் அற்புத சிந்தனைகள்னு சீக்கிரம் மாத்திடரேன்" என்றேன் எரிச்சலை அடக்கிக் கொண்டு!

"அது சரி. நா எல்லா பிளாக்கும் படிக்கிறேன்னு ஏன் ஒப்புதல் வாக்குமூலம் தந்தே?"

சரிதான் வீட்டுல ஏதோ பிரச்சனை நம்ம போட்டு தாக்குறான்னு நெனச்சிக்கிட்டு, "படிக்கிறேன், சொன்னேன். அதுக்கு என்ன இப்ப?" எனக்கும் கோபம் வந்தது.

"உனக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்க மாட்டேங்குது. இப்படி பப்ளிக்கா எல்லா பதிவையும் படிக்கிறேன்னு சொல்லக்கூடாது. எல்லாத்துக்கும் கமெண்டும் போடக்கூடாது. என்னைக்காவது ஒரு நாள், பாராட்டி ஒரு கமெண்ட் போட்டா? ஆஹா! ராமசந்திரன் உஷாவே பாராட்டியிருக்காங்களேன்னு நாலு பேரூ பெருமையா பேசுவாங்க. இல்லே யாரையாவது விமர்சிக்கணும்னு நெனைச்சா, நான் பொதுவா பிளாக்ஸ் படிப்பதில்லை என்று ஆரம்பித்து, ஆனா இன்று உங்க பதிவு கண்ணில் பட்டது. நீங்கள் 2- 2- 2002 அன்றைக்கு போட்ட பதிவில் XXX க்கு கொடுத்த பதிலில் அவர் எழுத ஆரம்பித்த 5- 5- 1995 ஆம் ஆண்டில் இருந்து, சுமார் நூற்றி இருபது பதிவுகளில் இருந்தவைகளை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். ஆனால் YYY க்கு நீங்கள் அளித்த பதில் வெறும் நன்றி. இதில் இருந்தே உங்கள் சுயரூபம் தெரிந்துவிட்டது என்றெல்லாம் விளக்கமாய் எழுத வேண்டும் "

"தோ பாரு. நா எழுதினதே எனக்கு ஞாபகம் இருக்காது. இதுல யாரூ என்னைக்கு என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் வெச்சிக்கிற தெம்பு எனக்கு இல்லை. கமெண்டும் அப்படித்தான். அந்த நேரம் என்ன தோணுதோ அத போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன். இப்படி குருட்டு யோசனை செஞ்சிக்கிட்டு இருந்தா, படுத்தா தூக்கம் வருமா?"

"இலக்கியவாதியின் முதல் அடையாளம் தூக்கத்தை விரட்டும் சிந்தனைகள். ஆனா, பிளாக் எழுத்தாளரில் பெரிய ஆள் என்று பெயர் வாங்க வேண்டும் என்றால் சைலண்டா அங்கங்க நடக்கிறத நோட் பண்ணிக்கணும். அப்பதானே சமயத்துல எடுத்துவிட்டா எல்லாரும் ஆடிப் போவாங்க? அப்புறம் உங்கள பார்த்து பரிதாபப்படுகிறேன், உங்கள் மனநிலை சரியாக வைத்தியம் செய்துக் கொள்ளுங்கள், உங்கள் வாதம் நகைப்புக்கு இடமளிக்கிறது, உங்கள் நேர்மை பல்லிளித்துவிட்டது போன்ற வார்த்தைகளை அங்கங்கு சேர்த்துக் கொள்ளவேண்டும்"

"இது என்ன கமல், அபிராமிக்கு லவ் லட்டர் எழுதினா மாதிரி" சொல்லி முடிப்பதற்குள், " இது இலக்கிய மேட்டர்" என்று உறுமியவள், "அப்புறம் ஏதாவது புரியலைன்னா பேசாம இரு. அதவிட்டுட்டு புரியலை, புரியலைன்னு பொலம்பாதே. படைப்பாளிக்கு முதலில் தேவை தன்னம்பிக்கை. படைப்புன்னா சும்மாவா? முதல்லா நீ ஒரு சிறந்த படைப்பாளின்னு நம்பு" என்றாள்.

"அதுக்கு என்ன, தோ! இந்த செகண்டுல இருந்து நான் ஒரு அதிமேதாவின்னு நினைக்க ஆரம்பிக்கிறேன். ஆனா, அத மத்தவங்க நம்பணுமே?"

"அத பத்தி நீ ஏன் கவலைபடரே? இப்படி யோசிச்சா, ஒருத்தராலையும் படைப்பாளின்னு பெருமைபட முடியுமா?" என்றவள், "சரி சாமிநாதனுக்கும், ரமணனுக்கு சூடா ஒரு மறுமொழி நாலு பக்கத்துக்கு எடுத்து விடு பார்க்கலாம்" என்றாள்.

"சான்சே இல்லை. அப்படி அவங்க சொன்னாலும், சொல்லிக்கிட்டுப் போகட்டும். யாராவது திட்டினாலோ கிண்டல் அடிச்சாலோ அதை ஏன் நான் மறுக்கணும்? நா ஒண்ணு சொல்ல அவங்க ஒண்ணு சொல்ல, அது அனுமார்வாலாய் நீண்டுக்கிட்டுப் போகும். ஆனா சில சமயம் அவங்க சொல்லுரதும் சரியா இருக்கிறா மாதிரி தோணும்"

"அப்ப நீ எழுதினதே சரியா இல்லைன்னு நெனைக்கிறேன்னா, அப்ப நீ எழுதுனதுல நேர்மையேயில்லைன்னு சொல்லு"

" இன்னைக்கு ஒரு விஷயத்துல ஒரு கருத்து நினைக்கிறோம். ஆனா அது சரியில்லைன்னு பின்னாடி ஒருநா தோணாதா?இதுக்கும் நேர்மைக்கு என்ன சம்மந்தம்? எனக்கு தெரிஞ்ச நேர்மை என் சொந்த பெயரூல, என் புகைப்படத் தோட பதிவு போடரேன். இன்னொரு புனை பெயர் எல்லாம் கிடையாது, ஆமா இங்க ஆளு ஆளுக்கு நேர்மை நேர்மைன்னு சொல்றாங்களே அப்படினா என்ன?

"ஆங்... நேத்து சாயந்தரம், ஆறுமணிக்கு யாரோட டீ குடிச்சே? அது பதிவுல எழுதினியா? எழுதுல இல்லே? அப்ப நீ நேர்மையாவன் (வள்) இல்லைன்னு சொல்லணும். நாம சொல்வது மட்டும் நேர்மையானது, ஆனா மத்தவங்க சொல்வது அனைத்தும் நேர்மையின்மை என்பதை நல்லா மனசுல பதிய வெச்சிக்கணும். அதெல்லாம் ஒனக்கு எங்க புரியப் போகுது என்றவள் " "நா சொல்லரேன்னு தப்பா நினைக்காதே!.. நீ ஒரு நாளும் இலக்கியவாதி ஆக முடியாது" என்று சொல்லி போனை டொக் என்று வைத்துவிட்டாள்.

அந்த வார்த்தையைக் கேட்டதில் இருந்து மனசே சரியில்லைங்க. அதுதான் உங்கக்கிட்ட என் மன வருத்தத்தை பகிர்த்துக்
கொள்ளலாம்னு எழுத ஆரம்பிச்சேன். ஆனா மதியம் சாப்பிடதும், ஒரு மணி நேரம் படுக்காட்டா என்னால எதுவும் முடியாது.
ரெண்டு மணி நேரம் தூங்கிட்டு, எழுந்து டைப் அடிக்க ஆரம்பிச்சேன். இவ்வளவு தூங்கிட்டியே ராத்திரி தூக்கம் வருமான்னு கேட்டுடாதீங்க, இப்ப தூங்கியது நேற்று கோட்டா!

பி.கு இது அத்தனையும் இன்றைக்கு காலைல எனக்கும் என் தோழிக்கும் நடந்த உரையாடல். நாந்தான் சொன்னேனே, அவ எல்லா பதிவையும் ஆழ்ந்து நுணுக்கமாய் படிப்பாள்னு. அவ சொன்னது யாரையாவது குறிப்பிடுதான்னு யோசிச்சிப் பார்த்தேன். அப்படி ஒன்னும் எனக்கு புலப்படலை. சரிதானே???? அப்படி அவ, யாரையாவது மறைமுகமா குறிப்பிட்டு இருந்தா, அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்.

42 பின்னூட்டங்கள்:

At Tuesday, 07 February, 2006, சொல்வது...

+ போட முடியவில்லை

error வருகிறது

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

usha....nijama onga friend thana phone panninadhu?? ellaati.multiple personality maadhiri....vera dress la neengaleva??....nermaiya ezhudha kathukonga Usha.ilakkiyavaadhikku romba thevaiyana onnu.!!!

Radha

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

'நுனி முள்' இந்தப்பத்திவு.

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

உஷா,
சூப்பர். வாசித்துவிட்டு சிரித்துக் கொண்டே பின்னூட்டமிடுகிறேன். திருவள்ளுவர் மனசிலே ஆழமா பதிஞ்சிருக்கார் போல- துன்பம் வரும் வேளையில் சிரிங்கன்றதை- தூங்குங்கன்னு மாத்திக்கோங்க!!

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

நுனிப் புல்லூ புல்லை மட்டுந்தென் நுனியா மேயுரீங்க... மத்ததெல்லாம்..

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

//" தோ பாரூ. இப்படி ஒண்ணு ஒண்ணுக்கும் குயுக்கியா யோசிக்க எனக்கு வராது//

:-))))))))))))))))))) +
ஒரு - :-))))))))

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

- போட முடியலையே:-))))))))

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

உங்க சினேகிதி பேச்சை கேக்கவே மாட்டீங்க போல! ஒளிவட்டம் இருக்கிறதா கற்பனை செய்த இரண்டாவது வரியிலேயே எனக்குத் தெரியலேன்னு ஒரு கமெண்ட்!

நானும் சொல்றேன் - நீங்கள் ஒரு நாளும் இலக்கியவாதி ஆக முடியாது

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

ஹா... ஹா.... ஹா...

:-)))))))

Super'O'Super !!

நல்லா கோர்வையா எழுதியிருக்கீங்க!!!

ஆனாலும் 'மேட்டர்' கொடுத்தது உங்கள் தோழி-ன்றதுனால, நேர்மையாப் பாத்தா அவுங்களுக்குத்தான் பாராட்டு போய்ச்சேரனும்-னு நெனக்கிறேன்!!!

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மானுடரை நினைந்து விட்டால்.......

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

உஷா பதிவில் + போட இங்கே கிளிக்கவும்!!

- போட எனக்கு இஷ்டமில்லை!!! (மெய்யாலுமே!)

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

நீங்க நிச்சயமா பெரிய இலக்கியவாதிதான் உஷா. இல்லாட்டி பதிவு போட்ட பத்து நிமிசத்துல பத்து பின்னூட்டம் வருமா? அதுல எதுவுமே உங்க பதில் பின்னூட்டம் கிடையாது. எல்லாமே படிச்சவங்களோடது தான்.

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

ராதா, இவ்வுரையாடல்கள் அனைத்தும் என்னைப்போன்ற "உணர்ச்சிவசப்படாத" நட்புகளுடன் பேச பட்டவை. இதை நம்புவது
உங்கள் விருப்பம். ஆனால் இதில் நான் சொல்பவையாய் வருவது அனைத்தும் என்னுடைய கருத்துக்கள் மற்றும் நான் செய்தவை.
இணையத்தில்"நேர்மை" என்பதை யாராலும் நீரூபிக்க முடியாது. வெறும் நம்பிக்கைத்தான்.

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

சொல் பேச்சக் கேட்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்களோ?

:)))

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

ஞான்ஸ், அது என்னவோ எனக்கு ந.குவுக்கும் ராசியில்லை. ஆனா, இங்கேல போயி டெஸ்ட் குத்து குத்தி பார்த்துட்டேன் :-)
ஆனா என் தோழிக்கு தாங்ஸ் சொல்லணும் சொல்றீங்களே நியாயமா? நானே அவ என்னை இலக்கியவாதி ஆவ மாட்டேன்னு சாபம் குடுத்துவிட்டாளே என்று கண்ணீர் வடிச்சிக்கிட்டு இருக்கேன்....:-(

குமரரே! நீங்களாவது என்னை இலக்கியவாதின்னு சொன்னீங்களே, மிக்க நன்றி

அனானி, முத்துக்குமரன் ஞான்ஸ் சொல்லி வழியில போயி + - போட்டு பாருங்க.

ரவுசு, வேர் எல்லாம் கடிக்க ஆரம்பிச்ச கசக்கும். நுனிப்புல்லே இனிக்கும்.

சிறில், முள் உங்களை குத்தலையே?

இளந்திரையன், இந்த "நிலைகெட்ட மாந்தர்" நான் இல்லையே?

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

தாணு, சிரிங்க சிரிங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது டாக்டரம்மாவுக்கு அட்வைஸ்.

யூ டூ சுரேஷ் :-)))))

பச்சோந்தி, நாங்க எல்லாம் என்னைக்கு யாரு பேச்சை( உபதேசத்தை) கேட்டிருகோம்? கேட்டு இருந்தா ஒழுங்கா உருப்பட்டு போயிருப்போமே
:-))))

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

உஷா மேடம்,

++ for right time and well said

//..கேஸ் போடுவேன்னு ஆரம்பி. இதெல்லாம் தெரியாம, நீ எல்லாம் இலக்கியம் வளர்த்து... ஹ¥ம்!"//

இலக்கியம் வளர்த்து = கேஸ் போடுவேன்னு - புது தியரி (நான் என்னமோ ஒருத்தனுக்கும் புரியாம பேசுரதுனுனால நினைச்சென்)

//நான் பொதுவா பிளாக்ஸ் படிப்பதில்லை என்று ஆரம்பித்து,.....உங்கள் சுயரூபம் தெரிந்துவிட்டது என்றெல்லாம் ...//

+ :-))))))))))))))))))

//பிளாக் எழுத்தாளரில் பெரிய ஆள் என்று பெயர் வாங்க வேண்டும்//

வாங்கி ??

//எனக்கு தெரிஞ்ச நேர்மை என் சொந்த பெயரூல, என் புகைப்படத் தோட பதிவு போடரேன்//

++

//நேர்மை நேர்மைன்னு சொல்றாங்களே அப்படினா என்ன?//

ஹமாம் சோப்பு :-))))

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

என்னத்த சொல்றது, வந்து ரொம்ப நாளாச்சு, ஒன்னும் புரியலையே... என்னடா, அம்மணிக்கு மனசு சரியில்லங்கிறாங்களேன்னு வந்து பார்த்தா, ஒன்னும் புரியலையே, ம்.. புடிபட கொஞ்ச நாளாகுமாக்கும்!

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

உஷா உங்க நண்பி ஐடியாச்சுரங்கமாய் இருக்கிறாரே. கொஞ்சம் கேக்கிறது தானே? . வாசித்துச்சிரித்தேன்.

கயல்விழி (லொக்கின் பண்ண விடுதில்லை ஏன்)

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

Usha i was just kidding....please dont be mad at me.....i tried a little humor....anyway it was a good post with underlying humor in it.so i thought i should try some humor in my comments....guess i failed miserably!!!

Radha

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

"இலக்கியவாதியின் முதல் அடையாளம் தூக்கத்தை விரட்டும் சிந்தனைகள். ஆனா, பிளாக் எழுத்தாளரில் பெரிய ஆள் என்று பெயர் வாங்க வேண்டும் என்றால் சைலண்டா அங்கங்க நடக்கிறத நோட் பண்ணிக்கணும். அப்பதானே சமயத்துல எடுத்துவிட்டா எல்லாரும் ஆடிப் போவாங்க? அப்புறம் உங்கள பார்த்து பரிதாபப்படுகிறேன், உங்கள் மனநிலை சரியாக வைத்தியம் செய்துக் கொள்ளுங்கள், உங்கள் வாதம் நகைப்புக்கு இடமளிக்கிறது, உங்கள் நேர்மை பல்லிளித்துவிட்டது போன்ற வார்த்தைகளை அங்கங்கு சேர்த்துக் கொள்ளவேண்டும்"


தோழிகள் இருந்தாலே ஒரு பக்க பலம் தான்!

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

அது சரிங்க, உஷா நீங்க என்னத்த எழுதிட்டீங்கன்னு இத்தன பேரு பாஆஆஆஆராட்டி பின்னூட்டம் போடறாங்க..

இதுல உங்களுக்கு இலக்கியவாதின்னு பட்டம் வேறு..

ஹூம் பொறாஆஆஆமையாஆஆ இருக்கு.

பாருங்க வேலை மெனக்கெட்டு நானும் போட்ருக்கேன்..

என்னமோ நல்லா இருங்க:-((((((

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

ராதா நீங்க ஸ்மைலி போடாததால சீரியசா சொல்றீங்கன்னு நெனச்சிட்டேன் :-)

கயல்விழி, சிங்கு தோழி பயங்கர கடுப்புல இருக்காங்க. அவ சொல்லாததையும் நான் சேர்த்து எழுதிட்டேனாம். அது படைப்பாளியின்
கைவண்ணம்/ மசாலா சேர்ப்பு என்றால் அவள் ஒத்துக்கொள்ளவில்லை.

கார்திக், எனக்கு கூட யாராவது நேர்மைனா உடனே ஹமாம் சோப்புதான் ஞாபகம் வரும் :-)

வெ.நா, ஜோசப் சார், என்னைப் போலவே புரியலைன்னு சொல்லக்கூடாது. அது இலக்கியவாதிகளுக்கு அழகில்லை. ஆனா
எனக்கு கூட புரியலை, இது எதுக்கு இத்தன + குத்துன்னு :-)))

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

உங்கள் பதிவை ரசித்து
சிரித்தேன். உங்கள்
தோழியை ;) கேட்டதாக
சொல்லுங்கள்.

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

/"இன்னைக்கு புல்லாகி பூண்டாகி பாட்டு போட்டு இருக்கார். புல்லுனா யாரு... நீதான். அடுத்து ரமணன் சமையல் குறிப்புல வெண்டக்காய் நுனிய ஒடிச்சிப் பார்த்து வாங்கணும்னு டிப்ஸ் கொடுத்திருக்கார். ரெண்டு பேரூம் ஓரே ஆளுத்தான். நுனியையும் புல்லையும் சேர்த்தா நுனிப்புல் வருதா. ஐபி அட் ரஸ் தெரியும். கேஸ் போடுவேன்னு ஆரம்பி. இதெல்லாம் தெரியாம, நீ எல்லாம் இலக்கியம் வளர்த்து... ஹரூம்






குட்டி ரேவதி முகவரி வேணுமா, உஷா? அவுங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும், எங்க கண்டன கூட்டம் போடலாம் யாரை எல்லாம் கூப்பிடலாம்னு. (பினாத்தல் சுரேஷையும்,டி.பி.ஆர். ஜோசப்பயும் கூப்பிட்றாதிங்க.....எதிர்கட்சி ஆளுங்க போல....) என்னயும் கூப்பிடாத்ங்க நான் எப்பவாவது தான் blog படிக்கிறது (உங்க தோழி சொல்வது போல்)

சண்டகோழி பார்த்துட்டிங்க தானே?

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

அய்யய்யோ.. ஓடியாங்கோ....
முகமூடியும் ஞான்ஸ்-ம் ஒரே மாதிரி கமெண்ட் உட்ருக்காங்கோ பாருங்கோ...

ஞான்ஸ்:

'மேட்டர்' கொடுத்தது உங்கள் தோழி-ன்றதுனால, நேர்மையாப் பாத்தா அவுங்களுக்குத்தான் பாராட்டு போய்ச்சேரனும்"

-------

முகமூடி:

உங்கள்
தோழியை ;) கேட்டதாக
சொல்லுங்கள்.


===================

Vote here:
Plus (+) ...|...Negative (-)

 
At Tuesday, 07 February, 2006, சொல்வது...

சூப்பர்.

-Satheesh

 
At Wednesday, 08 February, 2006, சொல்வது...

மனசு, அதெல்லாம் பெரிய ஆளு ஆனா பார்த்துக் கொள்ளலாம். சண்டக்கோழிதானே இங்க பாருங்க.
http://nunippul.blogspot.com/2006/01/blog-post_17.html

முகமூடி, ( நல்லவேளையாய்) நன்றி.

மறுபடியும் ஞான்ஸ், எதையாவது கெளப்பாதிங்க
:-))))

 
At Wednesday, 08 February, 2006, சொல்வது...

சத்தீஷ் நன்றி

 
At Wednesday, 08 February, 2006, சொல்வது...

:-)

(வேற என்னத்தைங்க சொல்றது.. அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே..!!)

 
At Wednesday, 08 February, 2006, சொல்வது...

உஷா! மிகவும் ரசிச்சு படிச்சேன்

அர்ர்ருமைய்யா எழுதுரீங்க!

அன்புடன்
உ..பி..ச.. மீனா :)

 
At Wednesday, 08 February, 2006, சொல்வது...

உண்மை சரியில்லைங்க :)

 
At Wednesday, 08 February, 2006, சொல்வது...

உங்கள் தோழியின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை பொதுவில் இட்டதற்காக வக்கீல் நோட்டிஸ் அனுப்பி விடப் போகிறார் ;-)

ஞான்ஸ் புண்ணியத்தில் + குத்தியாச்சு.

பதிவு மொத்தமாகப் பிடித்திருந்தாலும்,
---நா எழுதினதே எனக்கு ஞாபகம் இருக்காது---

:-)))

 
At Wednesday, 08 February, 2006, சொல்வது...

ராசா, அது என்னவோ எல்லாரும் நல்லா இருக்கு என்று சொல்வதால் நானும் நல்லா இருக்குன்னு சொல்லுகிறேன்னு
சொல்லுகிறாமாதிரி இருக்கு :-)

அனானி, நீங்க சொல்வது முற்றிலும் உண்மைங்க

மீனா, எங்க இருந்து திடீரென்று வந்து காட்சி தரீங்க? ஆளு அட்ரசே இல்லே????

பாபா, ///பதிவு மொத்தமாகப் பிடித்திருந்தாலும்,
---நா எழுதினதே எனக்கு ஞாபகம் இருக்காது---
:-))) //

அந்த வரிகள் சத்தியமான உண்மை

 
At Thursday, 09 February, 2006, சொல்வது...

பதிவை படிச்சி முடித்த போது தோன்றியதில் ஒன்று "யூ டூ ?!"

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

இடுக்கண் வருங்கால் உறங்குக!

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

என்னம்மோ போங்க...தமிழ் ப்ளாக் உலகில் படிச்சா மட்டும் போதாது. நாலு பேர பத்தி எதாவது உளறிக் கொட்டி நாமும் கோதால இறங்கினாத் தேன் குத்தும் விழும் பின்னூட்டமும் வரும்...என்ன சரி தானே நாஞ்சொல்றது?

(இல்லாட்டா வருஷா வருஷம் பத்து ஓட்டு வித்தியாசத்துல தேர்தல்ல தோக்கடிச்சுருவாங்க)

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

சாப்ட் டெஸ்டர், நல்லா இருங்கன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

குழலி, யூ டூவா? தேவையா இதுன்னு பளிச்சுன்னு கேளுங்க :-)))

நாமக்கல்லாரே, கொசுக்கடிங்களுக்கு பழகிடுச்சுன்னா தூக்கத்துக்கு என்ன குறைச்சல்.

டுபுக்கு, கருத்து கணிப்பு பாருங்க. நம்மள மாதிரி நிறைய பேரூ நொந்து நூலா இருக்காங்கன்னு விளங்கும்.

 
At Saturday, 11 February, 2006, சொல்வது...

தொடர்ந்து வலை அரசியலைக் கவனிக்காததால் புரியவில்லை என்ற உண்மையை நேர்மையாகப் பதிவு செய்யும் அதே வேளையில் உங்கள் இந்தப் பதிவு காலத்தால் அழியாத வரலாற்றுப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய அற்புதமான பதிவு என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்.:-)
தொடர்ந்து கவனிக்காமல் இந்தப் பதிவின் சிறப்பு எப்படிப் புரிகிறது என்று யாராவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அது குறித்து கவலைப்படாமல் பதிவின் நடையை ரசித்த காரணத்தால் பாராட்டினேன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று தோன்றியது.
சரி..நிறையத்தான் பாராட்டியிருக்கிறேனே, என்ன பின்னணி என்று விளம்பக் கூடாதா?:-))

சரி விடுங்கள்..பல சமயங்களில் அறியாமை நிம்மதியைத் தருகிறது என்று எடுத்துக் கொள்கிறேன்..

உஷா, பதிவுக்கு நன்றி.

எங்க ஊரில் இது தேர்தல் நேரம் என்பதால் எனது எழுத்தும் அந்த செல்வாக்குக்கு உட்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்..:-)

+ குத்தியிருக்கிறேன்.. அதனால் இந்தப் பின்னூட்டத்தை கிண்டல் என்று நினைக்க மாட்டீர்கள் தானே..உங்கள் தோழியிடம் இருந்து போனில் அழைப்பு வந்து ஏதாவது கூறிவிடுவார்கள் என்று வேறு பயமாக இருக்கிறது.

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

உங்க தோழியின் அடுத்த போனுக்காகக் காத்திருக்கேன்.

ச்சும்மா, சிரிக்கறதுக்குத்தான்.

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

ராம்கி, வரலாற்று பதிவு அது இதுன்னு கிண்டல் அடிக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லே ;-))))))

மஞ்சூர் ராஜா, நன்றி.

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

காதலர் தினத்தில் நடந்த இந்த சம்பவத்தையும் படியுங்கள். மனசு சரியாயிடும்..டும்..டும்..

 

Post a Comment

<< இல்லம்