"இந்து" என்ற சொல் தவறா?
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ளவே இந்த கேள்வி.
சில வருடங்களாய் தமிழிணய அறிமுகத்தில் பல முறை கண்ணில் பட்ட செய்தி- இந்துமதம் என்பதே ஒன்றில்லை. அப்படி உருவாக்கியது ஆங்கிலேயரின் சூழ்ச்சி என்று பலரும் சொல்லக் கேட்டுள்ளேன். ஜைன, புத்த, சீக்கிய மதங்கள் இந்துமதத்தில் ஒன்றாக்கப்பட்டன என்கிறார்கள். இது சரியான கருத்தா என்ற சந்தேகமே என் கேள்வி. இன்று உலகில் உள்ள அனைத்து பிரபல மதங்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. தனியாய் வழிப்பாட்டு தலங்கள், வழிப்பாட்டு முறைகள் உள்ளன. ஒருவரின் வழிப்பாட்டு தலைத்தில் மற்றவர் நுழைய மாட்டார்கள்.
இந்தியா என்று இன்று அழைக்கப்படும் பாரதத்தில் வடக்கில் இருந்து தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்திற்கு யாத்திரை வருவது, காசிக்கு இங்கிருந்து புனித யாத்திரை செல்வது காலக்காலமாய் நடந்த வழக்கம். காரைக்கால் அம்மையார், கைலாசபதியை தரிசிக்க சென்றதும், கேரளாவை சேர்ந்த சங்கரர் காஷ்மீர வைஷ்ணவதேவியை தரிசிக்க, கால்நடையாய் சென்றதும் நாம் அறிந்தவையே!
இந்திய கோவில்கள் அனைத்திலும் பிள்ளையாய் வீற்றிருப்பார். லிங்க வடிவில் ஈஸ்வர வழிப்பாடு. பிரம்மாவுக்கு கோவில் வழிப்பாடு இல்லை. இப்படி பல பொது அம்சங்கள் இந்துகோவில்கள் அனைத்திலும் பார்க்கலாம்.
ஒரு வார்த்தை வடமொழி அறியாத தென் தமிழகத்தில் தருமரும், அர்சுனனும், சகாதேவனும், சீதையும் ராமரும், லக்குமணனும் வழக்கில் இருக்கும் பெயர்கள். இந்த பெயர்கள் பொதுவான இந்து பெயர்கள். பாஞ்சாலியும், திரெளபதியும் அம்மனாய் வீற்றிருக்கிறாள். நூற்றாண்டுகளாய் கிராமங்களில் பாரதமும், ராமாயணமும் படிப்பது வழக்கம்.
புத்தமதத்தில் கடவுளைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. பின்பு அவரையே வழிப்பட தொடங்கினர் புத்தமதத்தை சார்ந்தவர்கள். ஜைனமதத்தில் சிவன், கிருஷ்ணன், பார்வதி, பிள்ளையார் போன்ற கடவுள் சிலைகளை தில்வாரா ஜைன கோவில் கண்டேன். அதேப் போல
புத்த கோவிலிலும் கார்திகேயன், பிள்ளையார் உருவங்கள் கண்ணில் பட்டது.
திருமணம் போன்ற சடங்குகளில் நெருப்பு முக்கியசாட்சியாகிறது. கேரளா, தமிழ் கல்யாணத்தில் சில சடங்குகளில் ஒற்றுமை இருப்பதுப் போல தமிழ் ஆந்திரா, கர்நாடகா கல்யாண சடங்குகளில் சில ஒற்றுமைகள் இருக்கும். அதேப் போல ஆந்திர, கர்நாடகாவைப் போல மராத்தி, ராஜஸ்தானி என்று தொடர்ந்து வட இந்திய சடங்குகளில் சில ஒற்றுமை இருக்கும்.
அக்னி சாட்சி, மெட்டி அணிவித்தல், வலம் வருதல், தாலி கட்டுதல், மாங்கல்யதாரணம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை வளைத்து குங்குமம் இடுதல் போன்றவைகள்
பெரும்பாலும் அனைத்துமே இந்து திருமண சடங்குகள். ( இவைகளை சில நேரிலும் பல சினிமா, தொ.காட்சியிலும் பார்த்தவைகள்).
திருமணம் அல்லாமல், கணவனை இழந்தவளை விதவையாக்கும் சடங்குகளிலும் பல ஒற்றுமைகள் உண்டு. இவை தவிர சமூக, குடும்ப பழக்க வழக்கங்களிலும் பல ஒற்றுமைகள் பரவலாய் உண்டு.
அப்படி இருக்க, "இந்து" என்ற சொல்லே ஆங்கிலேயர் உருவாக்கியது என்று சொல்லப்படுவது சரியா என்பது என் கேள்வி?
47 பின்னூட்டங்கள்:
யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்...
எவ்வளவு பெரிய மேட்டரு.. புசுக்குன்னு கேட்டு புட்டிங்களே...
இது பத்தி தனியா பெரீரீரீரீரீரீரீய பதிவே போடலாம். அது பொறவு..
இப்போதைக்கு...
//"இந்து" என்ற சொல்லே ஆங்கிலேயர் உருவாக்கியது என்று சொல்லப்படுவது சரியா என்பது என் கேள்வி?// ஒட்டு மொத்த நாட்டையும் இணைத்து..
சட்டங்களில் அந்தச் சொல்லை பயன்படுத்தியது அவர்கள் செய்தது.
ஆனாலும் அதற்கு முன்னமே ஆதிசங்கரர் மூலம் இச்சொல் வழக்கத்தில் வந்து விட்டது.
{உங்களுக்கு தெரியுமா? திராவிடர்கள், குறிப்பாக.. தமிழர்கள் இந்துக்களே அல்ல..!}
தம்பி, அறியா புள்ளைங்க அப்படிதாங்க கேட்கும் :-)
ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாய் இந்தியாவைப் பிடிப்பதற்கு முன்பு, நாடு பலரிடம் பிரிந்திருந்தது.
சட்டதிட்டங்கள் ஏற்படுத்த மக்களை சாதிவாரியாய் ஆங்கிலேயர்கள் பெயர் சூட்டியிருக்கலாம். ஆனால்
"இந்து" என்ற பெயரை அவர்கள் ஏற்படுத்தியது போல சொல்லப்படுகிறதே?
அதுசரி, திராவிடர்கள் அதாவது தமிழர்கள் இந்து இல்லை என்று சொன்னது யார்? இப்படி ஒரு மத
பிரிவில் இருப்பவர்களை மற்ற பிரிவினர்கள் இழிந்து பேசுவது வழக்கம்தானே!
உலக மதங்களினுள் கட்டப்பாடே வரையரைகளே குறைந்தமதங்களுள் இந்து மதமும் ஒன்று இந்து மதத்தினுள் நிர்ப்பந்தம் என்பது இல்லை ஒருவன் மாமிசம் படைப்பான் இன்னொருவன் சைவம் படைப்பான் அதுதான் இந்து மதம்
"காய்கின்ற மரமானால் கல்லெறி படத்தான் செய்யும் அவற்றை எல்லாம் கணக்கில் எடுக்கப் படாது
உங்கள் விளக்கத்திற்காக,
இந்து என்று இந்த மக்களுக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது ஆங்கிலேயர்கள் அல்லர்; அரேபியர்களே. அவர்கள் சிந்து நதியை ஒட்டிய பகுதியில் இருந்த மக்களை இந்து என்றே பல நூற்றாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுள்ளனர். மறைந்த பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களும் இதனை உறுதி படுத்தியுள்ளார்கள்.
இந்த சுட்டியில் சென்று பாருங்கள்.
http://www.kamakoti.org/tamil/part1kural28.htm
இந்தியான்றதாலே இந்துன்னு பேர் வந்துருச்சோ?
தமிழக அரசின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்ட கையேட்டின்படி தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொண்ட தமிழர்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து எண்பத்து ஐந்தாயிரம் பேர்.(80%)
http://www.tn.gov.in/deptst/Tab01_03.htm
தமிழன் என்பது ஒரு இனத்தின் பெயர்.எந்த மதத்திலும் தமிழன் இருக்கலாம்,இந்து மதம் உட்பட.தமிழன் எல்லாம் இந்து இல்லை என்பது ஜல்லியடி.
கவலைபடாமல் எழுதுங்கள்..பார்த்துக்கலாம்...
அழகப்பன், "காமகோடி"படிக்காமாலேயே :-) "இந்துக்கள் வாழும் இந்துஸ்தான் என்று பண்டைய பாரதம் அழைக்கப்பட்டது தெரியும்.
துளசி உங்களுக்கும் பதில் இதுதான்
யாழ்கோபி, இந்து என்று சொல்லிக்கொள்வதில் எந்த புல்லரிப்பு இல்லாவிட்டாலும், நான் பிறந்த மதம் என்பது பெற்றதாய் போல, அம்மாவிடம் நிறை மட்டுமா, குறைகளும் தெரியுமே!
//தமிழன் என்பது ஒரு இனத்தின் பெயர்.எந்த மதத்திலும் தமிழன் இருக்கலாம்,இந்து மதம் உட்பட.தமிழன் எல்லாம் இந்து இல்லை என்பது ஜல்லியடி.//
செல்வன், அதேதான். நெத்தியடி அடிச்சிட்டீங்க
முத்து (தமிழினி) பயமா? பவ்யமாதானே சந்தேகத்தைக் கேட்கிறேன் :-)
இந்து என்ற சொல் பாரதத்தின் பழங்குடிகள் எல்லாரையும் ஒட்டுமொத்தமாய்க் குறிக்கப் பயன் படுத்திய சொல்லாக இருக்கலாம். இதை வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது என்று சொல்வது மிகத்தவறு. மத்தியகிழக்கு நாடுகளில் இன்றும் இஸ்லாமியர்கள் ஹிந்த் என்றுதான் இந்தியாவை, இந்தியர்களைச் சொல்கிறார்கள். பழைய அராபிய நூல்களில் ஹிந்த் என்ற பெயரைப் பார்க்கலாம். ஹிந்துகுஷ் என்ற இடத்தின் பெயர் எவ்வளவு பழமை வாய்ந்தது எதனால் அந்தப் பெயர் வந்தது என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள்.
பள்ளியில் படிக்கும்போது 'இந்துகுஷ்' என்ற மலைத்தொடரைப் பற்றி பூகோளப் பாடத்தில் படித்துவிட்டு மறந்து விடுவது நம் வழக்கம். இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தேடிப் பார்த்தால் ஒரு பெரிய சோகக்கதை தெரிய வரும். வரலாறு பதிய மறுத்த கதை இது.
Hindu Kush means Hindu Slaughter
By Shrinandan Vyas
http://www.hindunet.org/hindu_history/modern/hindu_kush.html
//அக்னி சாட்சி, மெட்டி அணிவித்தல், வலம் வருதல், தாலி கட்டுதல், மாங்கல்யதாரணம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை வளைத்து குங்குமம் இடுதல் போன்றவைகள்
பெரும்பாலும் அனைத்துமே இந்து திருமண சடங்குகள். ( இவைகளை சில நேரிலும் பல சினிமா, தொ.காட்சியிலும் பார்த்தவைகள்).//
நீங்க இந்துவா? முதல்ல அத சொல்லுங்கோ! அது என்ன 'இவைகளை சில நேரிலும் பல சினிமா, தொ.காட்சியிலும் பார்த்தவைகள்'னு எப்படி எழுதக் கூடும்.
அனானிமஸ், காந்தார நாடு என்ற ஆப்கானிஸ்தானத்தின் வரலாறு ஓரளவு தெரியும் என்றாலும் சுட்டிக்கு நன்றி. இந்த அழித்தொழித்தல் விஷயமாய் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்
"எந்நாட்டு சரித்திரத்தைப் புரட்டினாலும் அதன் பக்கங்கள் ரத்தத்தாலேயே எழுதப்பட்டிருக்கும்" என்பதே!
சிரிப்புக்காரன், பல முறை கேட்க நினைத்த கேள்விகள். இன்று கேட்டு விட்டேன்.
வெளிகண்டரே! உங்க கேள்வி டூ மச்சுங்க :-)
ஆமாங்க, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி கல்யாணம் எல்லாம் படங்களில் மட்டுமே கல்யாண சீன்ஸ் பார்த்திருக்கேன். ஹிந்தி என்றால் சீரியலிலுங்க. அப்பால, நம்ம நடிகர் சிவகுமார், சிரஞ்சி பொண்ணுக்கு கல்யாண போட்டோ பார்த்தேனுங்க!
உங்களுக்குக் கிடைக்கும் விளக்கங்களை வைத்து நான் முடிவு செய்து கொள்கிறேன்
தாணு என்னவென்று முடிவெடுப்பீங்க :-)
முத்துவின் பதில் நான் போட்ட கமெண்டு
//முத்து, சத்தியமாய் தெரிந்துக்கொள்ளவே இக்கேள்வியை எழுப்பினேன். இந்து என்பது நான் பிறந்த மதம் என்று எனக்கு சொல்லப்பட்டது. அதில் உள்ள குறைகள் மிக தெளிவாய் எனக்கு தெரியும். ஆனால் மதம் என்பதையே தள்ளி வைக்கும் எனக்கு
இதை விடவும் உயர்ந்தது உள்ளது என்பதிலும் நம்பிக்கையில்லை, உலகில் இன்று நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மதமே காரணமாய் உள்ளது என்றும் நினைக்கிறேன்.
இந்த மக்கள் அனைவரும் பின்பற்றுவது உண்மையில் வேதங்களில் சொல்லப்ப்டும் இந்து மதமா என்பதுதான் முக்கியமான கேள்வி. எங்கோ நமக்கு சம்மந்தமில்லாதவர்கள், அவர்கள் மொழியில் உருவாக்கிய வேதம்/ மனு நீதிகள் இன்றும் நம் சமூகத்தில் நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் அது காரணம் என்றால், அவைகளை ஏன் பிடித்து தொங்க வேண்டும்? ஆக அப்படி தொங்குபவர்களுக்கு ஏதோ லாபம்
உள்ளது என்றுதானே பொருள்?
நாட்டர் தெய்வங்கள் போல உள்ளூர் தெய்வங்கள்/ சிறு தெய்வங்கள் அனைத்து இந்து உட்பிரிவுகளிலும் உண்டு. மூன்று மாதங்கள்
மாட்டு வண்டியில் பயணித்து காசி யாத்திரை செல்வது பணப்படைத்தவர்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது. பல பிரிவினர்களின்
மடங்கள் காசியில் உள்ளது. சாதியை இங்கு இழுத்தால் கதை வேறு பாதையில் செல்லும் :-)
சடங்குகளில் இருக்கும் ஒற்றுமை என்பது உட்பிரிவில் மட்டுமே.
உண்மை சுடும், ஆனால் அது உண்மை என்று தெரியும்வரும் குளிர்ச்சியாகவே இருக்கும்
இப்போதுள்ள காலகட்டத்தில் இந்து என்று சொல்வதும் தவறுதான். ஆனால் இந்து என்று ஒரு மதம் இல்லை அது ஒரு தர்மம் என்றும் அதற்கு மதம் மாறுவது ஒரு தீர்வு இல்லை என்றும் அதே ஆச்சாரியார் தான் கூறி உள்ளார். இந்த நாடு இந்தியா என்று அழைக்கப் படுவது ஆங்கிலேயர் வந்ததற்குப் பின்னால் தான். அதற்கு முன்னால் பாரதம் என்று தான் அழைக்கப் பட்டது. கொஞ்ச நாள் முன்பு நான் படித்த அம்மன் தரிசனம் புத்தகத்தில் பாரத வர்ஷம் என்பது வடக்கே ஆப்கான் தெற்கே கன்யாகுமரியும் மேற்கிலும், கிழக்கிலும் பாகிஸ்தான் தாண்டியும், கிழக்கே பர்மா தாண்டியும் போட்டிருந்தது. அதில் நம் நாடு பரதக் கண்டம் என்று சொல்லப் பட்டதாகவும் படித்தேன். ஆனால் அவற்றை ஆதாரம் காட்டினாலே இங்கு தப்பாக எடுத்துக் கொள்ளப் படும். இன்றைய நாளில் ஒருத்தர் இந்து என்று சொன்னால் தான் பத்திரிகை உலகிலிருந்து எல்லாவற்றாலும் தீண்டத் தகாதவர்.இந்து மதம் என்று அழைக்கப் பட்டாலும் இதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். அது இந்த மதம் கொடுக்கும் சுதந்திரம்.
கீதா, அகண்ட பாரதம் என்பது ஆப்கானில் ஆரம்பித்து கம்போடியா வரையில் இருந்திருக்கிறது. தாட்சாயிணி ஆடிய தாண்டவத்தால், அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த சக்தி பீடங்களில் ஒன்று இஸ்லாமிய நாடான பங்களாதேஷீல் உள்ளது.
மற்றப்படி, உங்கள் கருத்துக்கள் நான் கேட்ட கேள்விக்கான பதில் இல்லை என்பது என் அபிப்ராயம்.
நான் தெளிவாகக் கூறி உள்ளேன். இன்றையக் கால கட்டத்தில் இந்து என்று கூறுவதும் மற்ற மதத்தவர் நான் கிறிஸ்துவன், நான் ஜைன், நான் முஸ்லிம், நான் சீக்கியம் என்று கூறுவதும் ஒன்று ஆகாது. நான் இந்து என்று நீங்கள் கூறினால் நீங்கள் ஒரு மத வெறி பிடித்த இந்து தீவிரவாதி ஆவீர்கள். இதுதான் நிதரிசனம். மற்றபடி நீங்கள் பாட்டுக்கு உங்கள் கோவில் யாத்திரை போகலாம். அது எல்லாம் இதில் வராது.எனக்கு எந்த மதமும் பிடிக்காது என்று கூறுவதை விட இந்து மதம் பிடிக்காது என்று கூறுவதுதான் புத்திசாலித்தனம்,.
கீதா, அதனால்தானே இரண்டு பக்கமும் திட்டு வாங்கிக்கிட்டு இருக்கேன். பலரும் கேட்டாகிவிட்டது,
நம்பிக்கையில்லை என்றால் ஏன் கோவிலுக்குப் போகிறாய் என்று. என் மூதாதையர்களின் ஆற்றலா
அல்லது மனிதனின் முயற்சியைக் கண்டு வியப்பா என்று தெரியவில்லை, கோவில்களைத் தேடிப் போய்
கொண்டு இருக்கிறேன். ஆனால் நான் தேடி பார்ப்பது அனைத்தும் பழங்கோவில்கள்.
அதே சந்தோஷமும் பிரமிப்பும் இலங்கையில் பார்த்த மிக பழைய புத்த கோவிலுக்கும், துருக்கியில் உள்ள சர்ச்சுக்கும் உண்டு.
பங்களாதேஷ், பாக்கிஸ்தான், கம்போடியா ஆகியவை பார்க்கவேண்டிய லிஸ்டில் உள்ளன. தருமி அவர்களின் பதிவில் சொன்னது- நம்பிக்கையுடன் வணங்குபவர்களை கேலி செய்ய மனம் வருவதில்லை என்று.
எனக்கு நம்பிக்கை வரவில்லை. அவ்வளவே, என்னைப் போல யாராவது உண்டா என்று தெரிந்துக்
கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அப்பாவி தமிழரே! பின்னூட்டத்துக்காக பதிவில்லைங்க. மகா சோம்பேறி நான் :-)
மோகன் காந்தி அவர்களே நன்றி
//{உங்களுக்கு தெரியுமா? திராவிடர்கள், குறிப்பாக.. தமிழர்கள் இந்துக்களே அல்ல..!}//
இது சரிதான். தமிழர்கள் அனைவரும் சைவர்களாகவும் சிவனை வழிபடுபவர்களாகவும் இருந்தனர். சிந்துசமவெளி நாகரீகத்திலும் சிவன் வழிபாடு இருந்திருக்கிறது. பின்னாளில் ஆரியபடையெடுப்பின் பின் சிவன் ஈஸ்வரனாக வேறுபெயர்களில் வழங்கபட்டார். தொன்னாடுடைய சிவனே போற்றி என்ற பாடல்கள் மூலம் சிவனே தமிழர்களின் தெய்வம் எனத்தெரியவருகிறது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல. இந்துக்களாக அறியப்பட்டார்கள். சித்திரை முதல் நாள் தமிழ் ஆண்டு பிறப்பும் அல்ல
- சம்மட்டி
சரியான கேள்வி!
அந்தக் கேள்வியிலேயே உங்களுக்கான பதிலும் அடங்கி இருக்கிறது!
ஆம்! 'என்னைப் போல் யாராவது உண்டா?' என்று கேட்டீர்களே, அதுதான் இந்து மதத்தின், இந்த மதத்தின் சிறப்பு!
உங்களைப் போல், திரு. முத்து'தமிழினி' யைப் போல், 'முத்துக்குமரனைப்' போல், 'விடாது கறுப்பு' வைப் போல், 'துளசி கோபாலைப்' போல், 'குழலி'யைப் போல், என்னைப் போல் இன்னும் எத்தனை எத்தனை மாறுபாடுகள் உண்டோ, அத்தனையையும் போல் இருக்கும் அனைவரையும் உள்ளடக்கி, அரவணைத்துச் செல்வதுதான், இந்து மதம்! அதுதான் அதன் சிறப்பு!
வேறு எந்த மத்த்திலும், இந்நேரம் தள்ளி வைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது அந்தந்தக் கோயில்களில் மறுக்கப்பட்டிருப்பார்கள், இந்த மதத்தைத் தவிர!
தன் குழந்தைகளே தன்னை இகழ்ந்தாலும் அன்புடன் பொறுத்துக்கொண்டு, புன்சிரிப்புடன் அவர்களும் எம்மக்கள்தான் என அறுதியிட்டுக் கூறுவதுதான் இந்து மதம்.
பெயரில்லாத இந்தப் பழம்பெரும் அமைப்புக்கு, இடையில் வந்து புகுந்த மற்ற மதங்களையும், தன் வீட்டில் வாழ அனுமதித்ததால், தனக்கும் ஒரு பெயரை வைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு அதனையும் யாரோ சிலர் சூட்டிய போதும், இன்றும் தான் ஒரு தாய்தான் , அப்படித்தான் அறியப்படுவேன் என தலை நிமிர்ந்து தரணி புகழ நின்று கொண்டிட்ருக்கும் மதம்தான் நம் அனைவரின் இந்து மதம்!
இவர்களெல்லாம் இல்லையென மறுதளித்தாலும், பாரதி சொன்னபடி,
"தாயும் தன் பிள்ளையைத் தள்ளிடப் போமோ?"
என்று, வள்ளுவன் கூறிய வாக்கின் வண்ணம்,
"தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை"
என்று தாங்கிக் கொண்டிருப்பவள்தான் நம் இந்து மதம்.
மதத்தில் குழப்பம், குளறுபடிகள் பண்ணி தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்ட "அனைவரும்" கயவர்கள்தான், பர்ர்ப்பனர் அல்லாதார் உட்பட.
தன் மீதுள்ள தவறுகளை மறைக்கவெனவே, ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் சாடி வருபவர்களுக்குப் புரியப் போவதில்லை எனினும்,
பெருவாரியான தமிழ் மக்கள் இன்னும் நியாய உணர்வுடன் தான் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள் என்பது ஒன்றே ஆறுதல் அளிக்கும் விஷயம்.
"மனிதன்,தமிழன், இந்தியன், மானுடன்"!
எஸ.கே,
அது தனிசிறப்பு அல்ல..தனி டெக்னிக்..இவ்வளவு கதையையும் படிச்சுட்டு உங்களுக்கும் சுதந்திரம் கொடுப்பதுதான் இந்து மதத்தின் சுதந்திரம் என்று கீதா அம்மையாரும் நீங்களும் ஒரு கருத்தை சொன்னா நான் என்ன பண்ணட்டும்?
இந்த பதிவை பத்தி உங்களுக்கு புரியலை...சுத்தமா புரியலை..உஷா கொஞ்சம் டிசண்ட்டா சொல்லியிருக்காங்க..அவ்வளவுதான்.
தலை வலிக்குதுங்க...ப்ளீஸ்...
உங்களுக்கு என்ன பதில் தரதுன்னே தெரியலை..கண்டுக்காம விட்டுர்றேன்..சரியா...
"குறிப்பிட்ட சாராரை" உங்களுக்கே ஆபாசமா இல்லை..இதை திருப்பி திருப்பி சொல்ல...
உஷா,
இந்த மாதிரி திரித்தல் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதித்தால் நான் ஆட்டத்தில் இருந்து விலகி கொள்கிறேன்.நன்றி.
பின்னூட்டங்கள் உங்கள் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன். நிஜமாக வே தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு கேட்பதாக எனக்குப்படுவதால், விளக்கம் கொடுத்துவிட முடிவெடுத்துவிட்டேன். ஒன்றல்ல, பல!
1. நான் 1954ல் பிறந்தவன். எனக்கு எட்டு வயதாகும் வரை இந்து என்ற சொல்லையே கேட்டதில்லை. எனவே இந்து என்ற கருத்தாக்கம் 1962க்குப் பிறகு மட்டுமே உலா வருகிறது. அதற்கு முன் இந்துவும் கிடையாது. இந்தியாவும் கிடையாது.
2. சைவர் வைணவர், சாக்தர் கபாலிகர் எனப்பல தனித்தனி மதங்களாக அலைந்துகொண்டிருந்தவர்களை ஒன்றாக சேர்த்ததன் பின்புலத்தில் இருக்கும் அடிப்படைவாதம் இந்றைய பா ஜ க வின் இந்துத்துவத்துக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை (என்ன புரியலையா? அதானே நோக்கமே!)
3. வேதங்களை யாரும் பின்பற்றுவதில்லை. ஜாதிகளை அனைவரும் பின்பற்றுகின்றனர். எனவே வேதங்களே ஜாதி பிரச்சினைக்கு காரணம். (இது ஒரு சூப்பர் அரை லாஜிக்!)
4. இந்து என்ற வார்த்தை தவறா சரியா என்று கேட்கிறீர்களே? இந்து இந்து என்று கூறி என் சகோதரனை பீய்ள்ள வைத்தவர்கள் செய்தது தவறு என்பதை நீங்கள் உணரவில்லையா? (நோ கனெக்ஷன் - ஒன்லி செலெக்ஷன்!)
5. எங்க ஊருபக்கம் ஆயிரம்கட்டியார் வம்சம் ஒன்று இருக்கிறது. அதில் என் தந்தைக்குதான் எப்போதும் முதல் மரியாதை.பதினெட்டுபட்டியும் ஒன்றாகக் கூடி வந்து மகிழும். ஆனாலும் பக்கத்துத் தெரு தலித்துகளுக்கு அனுமதியில்லை. இந்த அவலம் அனைத்துக்கும் இந்துக்களும், வேதங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும்தானே காரணம்? இவர்களை ஒழித்தால் என்ன தவறு? (அப்பா பாவம் அப்பாவி)
பேர் வாணாம் ஸிஸ்டர்!
அனைவருக்கும் நன்றி. ஓரே ஒரு அனானிமஸ் பின்னூட்டம் மட்டுமே நிறுத்தியுள்ளேன். மன்னிக்கவும்.
எஸ்.கே, ஜாபாலி போன்றவர்கள் வேத காலத்தில் நாத்திகவாதம் பேசியிருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். மதுமிதா, கொஞ்சம் வாங்க.
இன்று மதங்களை மறுக்கும் பிற மத தோழியர்களும் எனக்கு உண்டு. இது இந்துமதத்திற்குரிய சிறப்பு என்று மட்டும் நினைக்காதீர்கள். ஆனால் மதங்களை மறுத்து, மனித நேயம் மட்டுமே பேசும் மனிதர்கள் அதிகமாகி வருவதும் சந்தோஷ விஷயம். தென்கொரியாவில் 40% மக்கள், மத மறுப்பாளர்கள் என்கிறது விக்கிபீடியா!
சம்மட்டி, இன்னொரு அனானிமஸ் பின்னூட்டத்துக்கு நன்றி.
முத்து கேள்வி கேட்கும்பொழுதே, பதில் சரியாய் வராது என்று உணர்ந்தே இட்டேன். முற்றும் போட்டு விடலாமா?
//நீங்களும் ஒரு கருத்தை சொன்னா நான் என்ன பண்ணட்டும்?
இந்த பதிவை பத்தி உங்களுக்கு புரியலை...சுத்தமா புரியலை..உஷா கொஞ்சம் டிசண்ட்டா சொல்லியிருக்காங்க..அவ்வளவுதான்.//
ஒன்றும் செய்ய வேண்டாம். ஒத்துக்கொள்ளுங்கள்; அல்லது மறுத்துப் பேசுங்கள் அல்லது, உங்கள் பாணியில் இன்னொரு தனிப்பதிவு ஆரம்பியுங்கள்!
//உங்களுக்கு என்ன பதில் தரதுன்னே தெரியலை..கண்டுக்காம விட்டுர்றேன்..சரியா...//
சரி! எனக்கும் சம்மதமே! ஏனெனில், நான் பதிலிறுத்தது, திருமதி.உஷாவின் கேள்விக்குத்தான்.
//"குறிப்பிட்ட சாராரை" உங்களுக்கே ஆபாசமா இல்லை..இதை திருப்பி திருப்பி சொல்ல...//உங்களுக்கு ஆபாசமாக இல்லாதபோது[இதையே திருப்பித் திருப்பி சொல்ல], எனக்கும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
உஷா,
இந்து என்ற சொல்லைப்பற்றிக் கேட்டீர்களா? இந்து மதத்தின் பெருமைகளைக் கேட்டீர்களா எனச் சந்தேகம் வந்துவிட்டது சில பின்னூட்டங்களைப் படித்தபின்.
//எத்தனை எத்தனை மாறுபாடுகள் உண்டோ, அத்தனையையும் போல் இருக்கும் அனைவரையும் உள்ளடக்கி, அரவணைத்துச் செல்வதுதான், இந்து மதம்! அதுதான் அதன் சிறப்பு!
வேறு எந்த மத்த்திலும், இந்நேரம் தள்ளி வைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது அந்தந்தக் கோயில்களில் மறுக்கப்பட்டிருப்பார்கள், இந்த மதத்தைத் தவிர!//
இப்படித்தான் பலபேர் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரு.தருமி அவர்கள் கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி, அம்மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்டதால் கிறிஸ்தவ மதத்திலிருந்து அவரை விலக்கி வைத்து விடவும் இல்லை. அவரது கல்லூரியிலிருந்து துரத்தி விடவும் இல்லை.
சேலத்தில் பஷீர் என்றொரு டாக்டர் இருக்கிறார். அவருக்கு இஸ்லாத்தில் உள்ள சில சடங்குகளின் மீது நம்பிக்கை இல்லை. ரம்ஜான் நோன்பு இருக்கமாட்டார். (நோன்பு இருப்பது உணவு கிடைக்காத மனிதர்கள் படும் துன்பத்தை அறிவதற்காக. தான் சிறுவயதிலேயே ஏழ்மையை அனுபவித்ததால் அக்கொடுமையை நன்றாக உணர்ந்திருக்கிறேன் என்பது அவரது கருத்து). ஒரு நாளைக்கு 5 தடவைகள் தொழுகை செய்யமாட்டார். காலை குளித்தவுடன் ஒரு தடவையுடன் சரி. அதனால் அவரை இஸ்லாத்திலிருந்து தள்ளி வைத்து விட்டார்களா?
நன்றி
கமல்
பின்குறிப்பு :- விவாதத்தைத் திசை திருப்பும் நோக்கில் இப்பின்னூட்டம் இடப்படவில்லை.
//இன்று மதங்களை மறுக்கும் பிற மத தோழியர்களும் எனக்கு உண்டு. இது இந்துமதத்திற்குரிய சிறப்பு என்று மட்டும் நினைக்காதீர்கள். ஆனால் மதங்களை மறுத்து, மனித நேயம் மட்டுமே பேசும் மனிதர்கள் அதிகமாகி வருவதும் சந்தோஷ விஷயம்.//
உண்மைதான் உஷா. மதங்களை மறுப்பவர்களும், அல்லது மதங்களைப் பற்றியே சிந்திக்காதவர்களும் மனிதநேயம்பற்றி மட்டுமே பேசத் தெரிந்தவர்களும் அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம். நோர்வேஜியர்கள் பலரைப் பார்த்து, நீ கிறிஸ்டியனா என்று கேட்டால், இல்லையே என்கிறார்கள். அப்படியானால் எந்த மதம் என்று கேட்டால் எந்த மதமும் இல்லையே என்கிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் சேர்ச்சுக்கு போகிறார்கள். அவர்களை சேர்ச்சிற்கு போகாமல் எவரும் தடுப்பதில்லை. மதத்திலிருந்து தள்லி வைப்பதுமில்லை. எனவே இந்த சுதந்திரம் இந்து மதத்தில் மட்டுமல்ல, மற்ற மதங்களிலும் இருக்கிறது (அல்லது பரவி வருகிறது) என்பதுதான் உண்மை. இந்து மதத்தில் மட்டும்தான் இது சாத்தியம் என்பது உண்மை அல்ல. இங்கே பலர் அப்படி கருத்து வைக்கும்போது, சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது இது. இப்போது உங்கள் மூலம் சொல்லியிருக்கிறேன். :)சரியாகச் சொல்வதானால், மூட நம்பிக்கைகளை புரிந்து கொள்ளவும், உண்மை நிலைகளை ஆராய்ந்து, அறிந்து கொள்ளவும் முற்படுபவர்கள், கடவுள்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல், மனித நேயம்பற்றி சிந்திக்கிறார்கள் என்றுதான் தோன்றுகின்றது. இது நல்ல அறிகுறிதான் என்று எனக்கும் தோன்றுகின்றது.
பேசாமல் மனிதநேயம் என்று ஒரு மதத்தை ஆரம்பித்து விடலாமா? :)
//நம்பிக்கையுடன் வணங்குபவர்களை கேலி செய்ய மனம் வருவதில்லை என்று.எனக்கு நம்பிக்கை வரவில்லை. அவ்வளவே, என்னைப் போல யாராவது உண்டா என்று தெரிந்துக்
கொள்ள ஆவலாய் உள்ளேன்.//
உள்ளேன் உஷா. :)
//எஸ்.கே, ஜாபாலி போன்றவர்கள் வேத காலத்தில் நாத்திகவாதம் பேசியிருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். மதுமிதா, கொஞ்சம் வாங்க.//
Could you pl. explain this, Ms. Usha?
ஏதாவது சொல்லலாம்னு தோணுது ஆனாலும் நாம ஏதாவது சொன்னா அதை சரியா எடுத்துக்குவாங்களா படிக்கிறவங்கன்னும் தயக்கமா இருக்கு....
This comment has been removed by a blog administrator.
ஏதாவது சொல்லலாம்னு தோணுது ஆனாலும் நாம ஏதாவது சொன்னா அதை சரியா எடுத்துக்குவாங்களா படிக்கிறவங்கன்னும் தயக்கமா இருக்கு.... //
கண்டிப்பா எதை சொன்னாலும் ஒரு கூட்டம் அதை சரியா எடுத்துக்காது.ஒரு கூட்டம் அதை ஏத்துக்கும்.எதை எழுதுனாலும் அதை எதிர்க்கவும் ஆதரிக்கவும் இங்க ஒரு பெருங்கூட்டமே சுத்திகிட்டிருக்கு.எதோ ஒரு ஜோதில ஐக்கியமாயிருங்க.இல்லைனா யாரும் கண்டுக்க மாட்டாங்க.அவ்வளவுதான் விஷயம்.
This comment has been removed by a blog administrator.
உஷா உங்களின் கேள்வி,
'இந்து' என்ற சொல்லே ஆங்கிலேயர் உருவாக்கியது என்று சொல்லப்படுவது சரியா?
இதற்கு நான் அளித்த பதில்,
இந்து என்று இந்த மக்களுக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது ஆங்கிலேயர்கள் அல்லர்; அரேபியர்களே. அவர்கள் சிந்து நதியை ஒட்டிய பகுதியில் இருந்த மக்களை இந்து என்றே பல நூற்றாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுள்ளனர். மறைந்த பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களும் இதனை உறுதி படுத்தியுள்ளார்கள்.
என் பின்னூட்டத்திற்கு உங்களின் மறுமொழி,
'காமகோடி'படிக்காமாலேயே :-) 'இந்துக்கள் வாழும் இந்துஸ்தான் என்று பண்டைய பாரதம் அழைக்கப்பட்டது தெரியும்.
இப்போது மீண்டும் என்னுடைய பதில்,
இந்து என்பது ஒரு மதம் என்று அடையாளம் காணப்படுவதற்கு முன்பே, இந்த பகுதியை (அதாவது இந்தியா, பாகிஸ்தான் போன்றவற்றை) இந்து என்றும், அந்த பகுதியில் வாழ்ந்தோர் இந்துக்கள் என்றும் அரேபியர்களால் அறியப்பட்டிருந்தனர். எனும்போது 'இந்துக்கள் வாழும் இந்துஸ்தான்' என்று எப்படி கூறமுடியும்? அன்றும் சரி; இன்றும சரி; இந்தியாவைச் சார்ந்த முஸ்லிம்களையும், கிருஸ்தவர்களையும், இந்துக்களையும் இந்து என்றே அரபிகள் கூறுகின்றனர்.
இங்கு நான் அரேபியர்களை முன்னிலைப்படுத்தக் காரணம், இந்து என்ற பெயர் வருவதற்குக் காரணமே அவர்கள்தான் என்பதாலும், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள அரேபிய நூல்களிலும் இந்த பதம் பயன்படுத்தப்பட்டு இன்றளவும் அந்த நூல்கள் நடைமுறையில் இருப்பதுமே.
உங்கள் சந்தேகத்தைப் புரியாமல் வழக்கம்போலவே பெரும்பாலோர் இந்து மதம் என்று அறியப்படும் மதத்தின் பெருமைகள் குறித்து பேசுகின்றனர். அந்த பதம் குறிப்பிட்ட மதத்துக்குச் சொந்தமானதா என்பதே இங்கு கேள்வியாக உள்ளது.
usha,
thanks..i will stop here
முத்து, உங்களுடையதும் குமரனுடைய மறுமொழியும் ஜங்க் மெயிலில் இருந்தது. அதனால் தாமதம்.
மற்றப்படி இதுவரை இரண்டு கமெண்ட் மட்டுமே நிறுத்தியிருக்கிறேன். சம்மந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்.
கமல், நல்லவேளையாய் நீங்கள் மறுமொழி போடுவதற்கு முன்பே எஸ்.கே அவர்களுக்கு பதிலளித்துவிட்டேன்.
கலை, நான் மூன்று வருடத்திற்கு முன்பு நார்வேக்கு வந்தப் பொழுது அங்கு காதில் விழுந்த சங்கதிதான். ஞாயிற்றுகிழமைகளில் தேவாலயங்கள் ஆளரவமின்றிருந்ததை, ஆஸ்லோவில் கண்டேன். இதைக் குறித்து எழுதியும் இருக்கிறேன். என்னைப் போன்ற
எண்ணத்துடன் என் தோழியும் இருக்கிறாள் என்பது தெரிந்து மனம் மகிழ்கிறேன். ஆனா மனிதநேய மதமா? வேணாம் தாயி, பிறகு
அந்த மதம் தான் உலகிலேயே சிறந்த மதம் என்று யாராவது கொடி பிடிக்க ஆரம்பிப்பார்கள் :-)
எஸ்.கே! ஜாபாலி குறித்து நான் எழுதிய சிலவரிகள் மட்டுமே எனக்கு தெரிந்தவை. மதுமிதா, சமஸ்கிருதம் படித்தவர் என்பதால் அவர் விளக்கலாமே என்று அவர் பெயரை குறிப்பிட்டேன். மதூஊஊஊஊஊஉ காதுல விழுகிறதா?
அழகப்பன், நீங்க கொடுத்த சுட்டியைப் பார்த்தேன். நான் இன்றைய ஆசாமிகள் எழுதுவது என்று நினைத்து அந்த பக்கம் போவதில்லை. மறைந்த காஞ்சி பெரியர் எழுதிய 'அருள்வாக்கு" மற்றும் நீங்கள் குறிப்பிட்ட அந்த பத்தியும் நான் முன்பே படித்ததுதான். நன்றி.
குமரன், எழுதுங்க, எழுதுங்க. இங்க இல்லாவிட்டால், நம்ம ஜிரா மாதிரி உங்க பதிவிலாவது போடுங்க.
செல்வன், அப்படி என்றால் நான் எந்த குழு :-) இந்த ஜூஜூபிக்கு எல்லாம் கவலைப்பட்டால் தமிழ் பிளாக்குல குப்பைக் கொட்ட முடியுமா? சரிதானே குமரன்???
H. செல்வா, என்ன செய்யலாம் என்கிறீர்கள்? மதங்களின் பெயரால் உலமெங்கும் கொடுமைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. மதம் என்பதை விட்டு, கடவுள் நம்பிக்கை என்று மனிதனின் தனிப்பட்ட நம்பிக்கையாய் வழிப்பாடுகள் மாற வேண்டும். இல்லை என்றால் அனைத்து மதங்களையும் விட்டு மனிதர்கள் வெளி வர வேண்டும். குஜராத்தில் நடந்த கலவரம் சம்மந்தமாய் ஒரு சேவை மையம்,
நடிகை நந்திதாதாஸ் நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்த சி.டி ஒன்றை பற்றி நண்பர் சொன்னார். இரண்டு செகண்டுக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றார்.
ஒரு பெண் அல்ல சிறுமி, பதினைந்து வயதுக்கு உட்பட்டவள். கண்ணில் எந்த சலனமும் இல்லாமல் வெற்று பார்வையுடன் நடமாடும்
பிணமாய் இருந்தாள். அவள் எந்த மதம் என்று தெரியாது. ஆனால் உங்க மதமோ என் மதத்தை சார்ந்தவர்களோ, தங்கள் மதத்தின்
கடவுளின் பெயரால் அவளுக்கு இழைத்த கொடுமை நடந்தது இந்த நூற்றாண்டில். போதுங்க மதம் என்ற வார்த்தையே வெறுப்பாய் இருக்கிறது.
திரு அழகப்பன் சொல்வது சரியே. இந்தியாவை விட்டு வெளியே போய் விட்டால் நீங்கள் முஸ்லீமாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து மதம் என்று பலராலும் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் மதத்தைச் சேர்ந்தவரானாலும் இந்து தான். மேலும் உங்களுக்கு மதத்தை ஆதரிப்பவர்கள் மனித நேயம் அற்றவர் என்று யார் சொன்னார்களோ. மனித நேயத்திற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் மேலும் குழப்பிக்கொள்ளாமல் ஏதாவது ஒன்றை மட்டும் தீர்மானமாக எடுத்துக் கொள்ளுங்கள்.ஒன்று கடவுளை நம்புங்கள். அல்லது நம்பாமல் இருங்கள்.திரு முத்து (தமிழினி) தன் தீர்மானத்தில் உறுதியாக உள்ளார். அது மாதிரி நீங்கள் உறுதியான தீர்மானம் எடுத்தால் போதும். எதற்கு இரண்டு பக்கமும் திட்டு வாங்க வேண்டும்?உங்களைப் போல் நான் பெரியாரைப் படித்ததும் இல்லை, அவரின் சிஷ்யையும் இல்லை. நான் படித்தது முழுக்க முழுக்கக் கிறித்துவப் பள்ளி. அதனால் என் மத நம்பிக்கை குறையவில்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களைப் பற்றிக் கேட்டு த் தெளிவு பெறத் தான் தெரியும்.மிக நீளமாகப் போகிறது. நிறுத்திக் கொள்கிறேன்.
கீதா, உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
நான் இரண்டு பக்கமும் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறேன் என்று நீங்கள் குறிப்பிட்டதால் தான் நான் அந்த மாதிரி எழுதினேன். இது ஒன்றும் அறிவுரை என்ற எண்ணமும் எனக்கு இல்லை. உங்கள் குழப்பம் தீரத்தான் யோசனை சொன்னேன். உங்கள் மூத்த சகோதரி சொன்னாள் என்று அலட்சியம் செய்து விடுங்கள். கட்டாயம் நான் உங்களை விட வயதில் மூத்தவளாக இருப்பேன்.இத்துடன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி. ஆனால் உங்கள் பதிவுகளைக் கட்டாயம் படிப்பேன். நன்றி.
கீதா அவரவர் கருத்து அவரவருக்கு. இதில் கோபிக்க என்ன இருக்கு? நான் பெரியார் சிந்தனையும்
படித்திருக்கேன். பெரியவரின் அருள்வாக்கும் மேய்ந்திருக்கிறேன். பெரியாரைப் போல கடவுளை
நம்புகிறவன் முட்டாள் என்று சொல்ல வாய் வரவில்லை. அதே சமயம், கோவிலில் காணும் சிலைகள்
கடவுளாக வழிப்படவும் முடியவில்லை.
இன்று உங்கள் கருத்து நாளை எனக்கு சரியாய் படலாம். மாற்றமே மனித மனத்தின் வழக்கம்.. படியுங்கள். உங்கள் கருத்தை எழுதுங்கள். இது அனைவருக்குமே சொல்வது.
நான்காவது நூற்றாண்டில் fahien பயணக்குறிப்பில் இந்தியாவை
'சிந்து' என்று எழுதி வைத்திருக்கிறான்.(gutenberg இல் இருக்கிறது.)
இது நாட்டின் பெயர். மதத்தின் பெயர் அல்ல. 'ஸ' மருவி 'ஹ' வாகுவது சகஜம்தான்.
எங்க ஊர் கோயிலில் ஏன் கிருஷ்ணர், ராமர் எல்லாம் இல்லை?
நன்றி. ஆதிரை. மார்கோ போலோ பயணக் குறிப்பு மற்றும் அவர் சென்ற பாதையின் வரைப்படத்தில் "இந்து மகா சமுத்திரம்" என்று இருக்கிறது. நீங்களும் அப்புதகத்தின் விமர்சனம் எழுதினீர்கள் இல்லையா?
வட நாட்டிலும் பல சமூகத்தில் கடவுள்கள் லோக்கல்கள்தான். எதிரியிடமிருந்து மக்களைக் காப்பாற்ற உயிர் தியாகம் செய்தவர்கள், சதி என்னும் பத்தினிகள். கன்னிகள் போன்றவர்கள் கடவுளாய் வணங்குவது உண்டு. பல கோவில்களின் சாமி பெயர்கள் கேட்டே இருக்க மாட்டோம்.
44 பின்னூட்டம் படிக்க பொறுமையில்லை. யாராவது ஏற்கனவே சொல்லியிருக்காலாம்.
அலெக்சாண்டர்தான் முதன்முதலாக இப்படியொரு வார்த்தையை சொல்லியதாக recordகளில் இருக்கு. நம்மகிட்ட எப்பவுமே recordஏ கிடையாதுங்கிறதால, இதுக்குமேல கொஞ்சம் கஸ்டம்.
சிந்துச்சமவெளியில் இருந்த மக்கள் இந்துக்கள், அவர்களின் மதம் இந்து என உருவாகியதாக சொல்லுவார்கள்.
what anon says agrees with the "alexander" theory, that Alexander came upto காந்தார நாடு only. he did not know anything south of that.
Today's இந்து மதம் என்பது aggregation of several tribal beliefs..
புத்தமதம் மற்றும் ஜைன மதத்தில் இருந்து நிறைய இந்து மதத்துக்கு வந்தது. புத்தமதம் was the first religion to promote vegetarianism. before that there were no any vegetarians (இது நான் சொல்லல. இதில phd படிச்சிருக்கிற ஒருத்தரோட conclusion).. இந்துல இருந்து புத்தமதம் வரல், it was vice versa with so much confusion with other mergers etc.. that is why there are hinsu deities in Budha temples and Budha statue in hindu temples...
நிறைய அடிச்சேன். காணாப் போச்ச். :((
யப்பா.. எல்லா பின்னூட்டத்ற்கு அப்புறம் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா!!!!!!!
தலைப்பு தவறோன்னு தோணுது.... இந்து என்ற சொல் ஆங்கிலேயன் கொண்டுவந்தது என்பது தவறா என்றிருந்திருக்கலாம்.(உள்ளே அப்படி தான் இருக்கிறது) நாளிதழ்களுக்கு வால் போஸ்ட் அடிப்பது போல் தலைப்பு சுண்டி இழுக்குது.
//ஆனால் மதம் என்பதையே தள்ளி வைக்கும் எனக்கு
இதை விடவும் உயர்ந்தது உள்ளது என்பதிலும் நம்பிக்கையில்லை,//
அது தான்... அதே தான்.
//இன்று மதங்களை மறுக்கும் பிற மத தோழியர்களும் எனக்கு உண்டு. இது இந்துமதத்திற்குரிய சிறப்பு என்று மட்டும் நினைக்காதீர்கள்.//
உண்மையாய் இருக்கலாம். ஆனால் அவர்களை அந்த மதம் மறுத்திருக்கும். கேரளாவில் ஒரு சிறுமி நடனம் பயின்றதற்காய் அந்த மதம் அவர்கள் குடும்பத்தை மறுத்துவிட்டதை ஊடகங்களில் கேள்விப்பட்டிருக்கலாம்.
கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாருக்கும், கீமாயணம் எழுதிய அண்ணாவிற்கும் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் நிலை ஏற்படவில்லை இங்கு.
சரித்திரத்திலேயே சிந்து சமவெளி நாகரிகம்னு தானே சொல்றாங்க.. இந்து என்ற வார்த்தை அதிலிருந்து வந்தது என்று தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
ஒரு யேசு கிறிஸ்துவோ, ஒரு புத்தரோ வந்து தோற்றுவித்த சமயமல்ல இந்து மதம்.. அதனால் தான் இதற்கு எப்போது பேர் வந்தது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
மற்றபடி நான் அறிந்த மந்திரங்களில் உள்ள பெயர் "பரதக் கண்டம்", "பாரத வருஷம்" = சகுந்தலையின் மகன் பரதன் பெயரால் இந்தப் பெயர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் .
தேர்தல் நேரத்திலே கேட்டீங்கன்னா, 'இந்து' என்ற சொல் தவறேயில்லை அப்படீன்னு பதில் வரும். மற்ற நேரங்களில் கேட்டீங்கன்னா, 'இந்து' என்றால் 'திருட்டு பயல்' 'பொறம்போக்கு' அப்படீ இப்படீன்னு சில பொறம்போக்குகள் சொல்லும். கேட்டா தமிழ் இனத்தின் ரெப்ரசெண்டேட்டிவ் அப்படீன்னு தனக்கு தானே வேற சொல்லிக்குவாங்க!
hi.....
half century!!!!
பிரேமலதா, பொன்ஸ். மனசு! உங்க பின்னுட்டங்களுக்கு ( உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க) (மிக தாமதமாய் வழக்கபப்டி) நன்றி நன்றி, நன்றி
பிரேமலதா, அந்த புத்தமதத்தை பின்பற்றும் கிழக்காசியர்கள் பறப்பன, ஊர்வன, நடப்பன என்று எதையும்
விடுவதில்லை. தின்னுவதைத்தான் சொன்னேன். ஆனால் ஜைன மதமே புலாலை மறுத்தது. புத்தம்
சொல்லவில்லை என்று எங்கோ படித்தேன்.
அனானிமசு, யார சொல்லுறீங்கன்னு நல்லா வெளங்குதப்பூ! அது அரசியலுங்க :-))))
மனசு, கடவுள் நம்பிக்கையை இகழ்வதற்கும், ஒதுக்கி தள்ளுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது
இல்லையா? பிற மதத்திலும் வழிவழியாய் வரும் சடங்குகளை ஒதுக்கிவிட்டு வாழ்பவர்கள் நிறைய
பேர்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்துமதத்தில் கடவுள் மறுப்பு என்பது வேதக்காலங்களில் வாக்குவாதமாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் படிக்க வேண்டும், சமஸ்கிருதம் கற்க வேண்டும். பிறகு பேசலாம் :-)
Post a Comment
<< இல்லம்