Wednesday, April 26, 2006

போலி டோண்டு ரசிகர்களுக்கு சில கேள்விகள்.

ஐயாக்களே!
நல்லா இருக்கீங்களா? வீட்டுல அம்மா, அக்கா தங்கச்சி, கல்யாணம் ஆயிருந்தா பொம்பள பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா? இது என்ன அவுங்கள மட்டும் விசாரிப்பு என்று நினைக்கிறீர்களா? இன்னைக்கு காலைல இவுங்கள "விசாரிச்சு" போலி டோண்டுவிடமிருந்து எனக்கு மூன்று கமெண்டு வந்துச்சுங்க.

ஐயா, சில நாளுக்கு முன்னாடி, நம்ம தோழி ஒருத்தி, போலி டோண்டு பேட்டி கொடுத்திருக்காரூ. ஜாதியை ஒழிக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சில ரசிகர்களும் கெளம்பியிருக்காங்க, பெரியார் ரேஞ்சுக்கு புகழு அவருக்கு, நீங்க படிச்சீங்களான்னு
மெயில் போட்டாங்க. ஒடனே போயி கிளிக்கினா எங்கண்ணுல விழுந்தது ரெண்டே மேட்டருங்க, இணையத்தில் இருக்கும் சாதி கொடுமைக்கு அயராது பாடு படப்போவதாகவும், இனி பெண்களுக்கு/ வீட்டு பெண்களை இழுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்னு சொன்னதைப்
படிச்சேனுங்க.

சரிதான், திருந்திட்டாரூ போலன்னு நெனச்சி சந்தோஷப் பட்டேங்க. ஆனா இன்னைக்கு காலைல............. என்னத்த சொல்லுறது? ஆனா ஒண்ணுங்க, இப்ப இந்த "வார்த்தைகள்" எல்லாம் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கப்பதில்லைங்க. மொத வரியிலேயே, லட்சணம் புரிஞ்சிப் போறதாலா, டெலிட்டு கிளிக்க வேண்டியதுதான்.

ஐயா ரசிக பெருமக்களே, ஒங்களுக்கும் வீட்டுல கூட பொறந்த பொறப்புங்க, அறியா புள்ளைங்க இருக்கும். இப்ப ஒங்கள கேக்குறேனுங்க, சாதி, மத புல்லரிப்புகள், மற்றவங்கள கேவலப்படுத்துவது எம் பதிவுல நா எளுதுரேனா? அப்படி வர பின்னூட்டத்த அனுமதிக்கிறேனா? இல்லே, மத்தவங்க பதிவுல அப்படி எதாவது எளுதரேனா? இல்லே போலி டோண்டு பெயரில் இன்னொரு போலி உருவாகிவிட்டாரா?

பதிலை எதிர்பார்த்து,
உங்கள் சகோதரி

37 பின்னூட்டங்கள்:

At Wednesday, 26 April, 2006, சொல்வது...

ஐய்யோ உஷா,

இன்னிக்கு ரெண்டு வாட்டி எனக்கும் வந்துருச்சு. நல்லவேளை இப்பெல்லாம் 'ஸ்பெல்செக்' செஞ்சு உடனே
டிலீட் செய்ய முடிஞ்சது. இனிமே இப்படி எல்லாம் செய்யமாட்டேன்னு (அ)சத்தியம் செஞ்சு பேட்டி கொடுத்துட்டார்னு
நினைக்கிறேன். இப்ப இதுக்கு என்னென்ன வரப்போகுதோ?

தனிமடல் பார்க்கவும்

 
At Wednesday, 26 April, 2006, சொல்வது...

//...இல்லே போலி டோண்டு பெயரில் இன்னொரு போலி உருவாகிவிட்டாரா? //

ஆகா போலிக்கே போலியா, சபாஷ் சரியான போலி.... சி... போட்டி.

ஸ்ரீதர்

 
At Wednesday, 26 April, 2006, சொல்வது...

எனக்கும் வந்தது...மறுமொழி மட்டுறுத்தல் செய்து இருந்ததால பதிவுல வராம தவிர்க்க முடிஞ்சது...ஆனா என்ன திட்டி இல்லை..வேறு சிலரை திட்டி..அதுல என்ன தான் சுகம் காணுறாறோ தெரியாது...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

///ஆகா போலிக்கே போலியா, சபாஷ் சரியான போலி.... சி... போட்டி.////

அவருடைய வளமான தமிழ் நடை தான் எல்லாருக்கும் தெரியுமே...அது போலி தான்...

எனக்கு என்னமோ இது ரொம்ப ஹாட் டாப்பிக் போல தெரியுது...ஒரு 300 பின்னூட்டம் வருமா ஹிஹிஹி...

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

///போலி டோண்டு ரசிகர்களுக்கு சில கேள்விகள். ///

இந்த அ(சி)ங்கத்துக்கு ரசிகர் கூட்டம் வேறயா ? அந்த ரசிகர் வீட்டுல உள்ள அம்மா, தங்கச்சிக்கு எல்லாம் இத படிச்சு காட்டுவாங்களா இந்த ரசிகர்கள்...

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

இவரு இன்னும் திருந்தலையா.. என்னத்த கேள்வி கேட்டு... என்னத்த பேட்டி எடுத்து..
ம்ஹும்

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

தங்கள் இடுக்கையில் அதர், அனானிமஸ் ஆப்ஷன்களை கொஞ்சம் நிறுத்திவிடுங்கள்.

இதனால், ரிஜிஸ்டர் ஆன நல்ல பின்னோட்டங்களே தங்களுக்கு வரும்.

மேலும், இம்மாதிரி வரையறுக்கப்படாத இடங்களில் யார் பெயரிலும் யார் வேண்டுமானாலும் பதிவு செய்து எவர் பெயரையும் கெடுக்கலாம். குழப்பத்தை விளைக்கலாம். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அதனால், இம்மாதிரி தாங்கள் வரையறுத்து எங்களுக்கும் உதவ வேண்டும்.

நன்றி

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

திரு. ரவி,
எழுத்துக்கு ஊக்கம் பின்னுட்டமே தவிர, பின்னுட்டத்துக்காக நான் என்றுமே எழுதியதில்லை. பேட்டியில்
தொனித்த உத்தம வேடமும், அதற்கு சில பின்பாட்டுகளும் அதிர்ச்சியை தந்தன. இனி அப்படி
ஆபாச பின்னுட்டம் வராது என்ற சத்திய வாக்கை பார்த்ததும், ஓரளவு நிம்மதியாய் இருந்தேன்.
போனவை போனவையாக இருக்கட்டும், பெரிதுப்படுத்த வேண்டாம் என்று இருந்தால், இப்பொழுது இப்படி?

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

சும்மா சொன்னேங்க...பின்னூட்டத்துக்காகவா நாம எழுதரோம்..ஹி ஹி..

செயராமன் சார் சொன்னது மாதிரி அனானி ஆப்சனை நீக்குங்க..

கொஞ்சம் லோக்கல் பாசயில சொன்னா,
கந்தன் புத்தி கவட்டையில...

அம்புட்டுதான்..

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

எப்படி இந்த அனானி & அதர் ஆப்ஷனை எடுக்கரது?

கொஞ்சம் சொல்லுங்க.

இன்னொண்ணு என்னன்னா,
போலியும் ப்லொக்கர் அக்கவுண்டு வச்சுருக்காரே. அதுலே இருந்துல்லே (கல்லை)போடறார்(-:

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

அந்த இழிபிறவியின் ரசிகர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருமே அவனேதான். அம்மாதிரி 'பேட்டி' கண்டவரைப் பற்றியும் எனக்கு சந்தேகங்கள் உண்டு.

ஜயராமன் அவர்கள் சொன்னது போல பிளாக்கர் பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிக்கவும்.

என்னுடைய போட்டோ மற்றும் பிளாக்கர் எண் சோதனைகள் இரண்டுமே வெற்றி பெற்றால் மட்டும் என் பெயரின் கீழ் வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தி அனுமதிக்கவும்.

இப்பின்னூட்டத்தின் நகலை போலி டோண்டு பற்றிய என் பதிவில் பின்னூட்டமாக இடுவேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

மறுமொழி மட்டுறுத்தல் பண்னாலே போதும்..எல்லா பிரச்சனையும் ஓஞ்சுடும்..

அதாவது எந்த பின்னூட்டமும் உங்க மின்னஞ்சல் முகவரிக்கு தான் முதல்ல வரும்..நீங்க தேவை இல்ல அப்படின்னு நினைத்த Reject அடிச்சிடலாம்..

http://www.blogger.com/start

போங்க முதல்ல..Sign In பண்னுங்க..

உங்க Blog Name வருதா..அத க்ளிக்குங்க..

Settings அப்படின்னு ஒரு டேப் வருதா..அத க்ளிக்குங்க..

அதுக்கு உள்ளார

Comments அப்படின்னு ஒரு டேப் வருதா..அத க்ளிக்குங்க..

Enable comment moderation? அப்படி இருக்க செலெக்ஷன் பெட்டியில Yes Select பன்னுங்க...

உங்க மின்னஞ்சல் முகவரிய அதுல இடுங்க...

அம்புட்டுத்தேன்...

இப்ப யார் கமன்ட் பன்னாலும்
அது முதல்ல உங்க பார்வைக்கு வந்து நிக்கும்...

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

துளசி, ஜெயராமன் நாறடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பல வழிகள் உண்டு. இதில்
இருந்து தப்ப ஓரே வழி இணையத்துக்கு போட வேண்டும் ஒரு முழுக்கு :-)
இப்பொழுதெல்லாம் இபப்டி பட்ட மெயில்கள் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதை
மீண்டும் சொல்கிறேன்.

பிரேமலதா, உங்கள் பர்சனல் மெயிலை படித்ததும் மறந்துபோய் பப்ளிஷ் செய்துவிட்டேன். உடனே தூக்கிட்டேன்.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

--ரசிகர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருமே அவனேதான். --

Yaar sonathu?????

jaathi,ina veri endra sakadayil peeralum panikaluku engalidam no answer


if u hv dare smell my ip then u will find where we are

-poli dondu rasigar mandram
(middle east branch)

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

அதனை பெரிய விசயமாக நாம எடுத்துக்க போய்தான் உஷா ..இந்த அளவிற்கு சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது..அப்படியே விட்டுடவேண்டியதுதான்..எனக்கும் வந்திருக்கிறது..அப்படியே சாக்கை பாட்டு அமுக்கி கொன்னுறுவேன் நான்.. இப்பயெல்லாம் உண்மையான நபரிடமிருந்து வந்தால்..க் கூட அப்படியே டெலிட் பண்ணிருவேன்..

இங்க உங்களுக்கு கொடுத்த கமெண்டை அவர் பார்த்தாக் கூட டொபுக்குனு ஒரு கமெண்ட் வந்து விழுந்துடுமோன்னு பயமா இருக்குது..
:)

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

உஷா,

எனக்கும் சில தடவைகள் அர்ச்சனைகள் வந்ததுண்டு (தாயில்லாப் பிள்ளை போல...). சீப்பை ஒளிச்சு வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன?

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

//இங்க உங்களுக்கு கொடுத்த கமெண்டை அவர் பார்த்தாக் கூட டொபுக்குனு ஒரு கமெண்ட் வந்து விழுந்துடுமோன்னு பயமா இருக்குது..//

அட, இன்னா "நன்பா", இதுக்காண்டி மெர்சில் ஆவுரியே. கண்டுகாதே...

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

"இப்பயெல்லாம் உண்மையான நபரிடமிருந்து வந்தால்..க் கூட அப்படியே டெலிட் பண்ணிருவேன்.."

இதானே வேணாங்கறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

//சரிதான், திருந்திட்டாரூ போலன்னு நெனச்சி சந்தோஷப் பட்டேங்க. //

திருந்துற மாதிரி காட்டிக்க வேண்டியது. யாராவது கேட்டால் கூட "நானா, அப்படியா. எனக்கு ஜாதி பத்தி பேசினா பிடிக்காது. அதனால கோபப்படுவேன், மத்தபடி நான் சொக்கத்தங்கமாக்கும்" என்று பேசுவார். அடுத்த விநாடியில் இருந்து மறுமொழிப்பெட்டியில் சொல்லக் கூசும்படியான வார்த்தைகள் வந்து விழும். இது தெரிந்த விஷயம் தானே.

உலகத்திலே இருக்கிற எல்லோரும் எழுதுறத நிறுத்திட்டா அவருக்கு சந்தோஷமா தான் இருக்கும். அப்படி எழுதினாலும் "அண்ணன் நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு"ன்னு சொல்லிக்கிட்டு இருக்கணும். இல்லைன்னா இப்படி கூசும் மொழிகள் வந்து விழும்.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

அனைவருக்கும் நன்றி.

ஆனா கே.வி. ஆர், லக்கி லுக் இங்க "பெரியவர" பத்தி நா பேச்சையே எடுக்கவில்லை. இதெல்லாம் பழகிப் போய்விட்டது. ரசிக மன்ற பிள்ளைகள் மூச்சையே விட காணோம்? என் கேள்விகளுக்கு பதில் என்ன?

டோண்டு சார், நிலா நண்பரை சொல்றீங்களே, எலி குட்டி, பூனைக்குட்டி இந்த தலைவலிகளுக்கு பதில் டெலிட் கிளிக்குவது சுலபம் :-)

ரவி, இந்த பிரச்சனை பூதாகாரமாய் மாறியப் பிறகு தமிழ்மணத்துல மாடரேஷன் கம்பல்சரிங்க. ஆனா அந்த எளவுங்கள நாம மொதல்ல படிக்க வேண்டியிருக்கே :-((((

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

டோண்டு மட்டும் தான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்ளவில்லை ஒரே ஒரு வார்த்தையச் சொல்லச் சொல்லுங்கள். எங்கள் தலைவர் போலி டோண்டு அவரின் பகிரங்க மன்னிப்பைக் கோருவார்.

ஒருவர் ஒரே ஒரு வார்த்தை சொல்வதினால் அனைவருக்குமே பிரச்சினை தீர்கிறது என்றால் சொல்லலாமே. அது வரைக்கும் இது தொடரும்.

இப்படிக்கு,
நங்கநல்லூர் போலி டோண்டு ரசிகர் மன்றம்.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

இதோ கடந்த இரண்டு நாட்களாக எனக்கும் வருகிறது - பல முறை வந்து விட்டது. போலிகள் (அவர் தானே சொல்லியிருக்கார் - நாங்கள் ஐவர்ன்னு) திருந்திட்டோம்ன்னு சொன்னாங்களேன்னு பார்த்தா, ஆறாவதா ஏழாவதா இல்லை இன்னும் ஐவர் சேர்த்து பத்து பேரா ஆகிட்டாங்களோன்னு தோணுது. நீங்கள் சொல்வது போல் இப்போதெல்லாம் முதல் வரியிலேயே புரிந்துவிடுவதால் உடனே ரிஜெக்ட் அழுத்த வேண்டியது தான். முழுதாய் கூட படிப்பதில்லை. என்ன இந்தவகை பின்னூட்டங்கள் இப்போது பல பெயர்களில் வருகின்றன. உங்கள் பெயரிலும் என் பெயரிலும் கூட இனி வரலாம்.

திருந்திவிட்டீர் என்று சொன்னீரே என்ன ஆயிற்றுன்னு கேட்டா அவர் என்ன சொல்லப் போறார்ன்னு தான் தெரியுமே - புத்தாண்டு முதல் எல்லா தமிழ் வலைப்பதிவர்களும் திருந்திவிட்டார்கள், அதனால் இனிமேல் அப்படிப்பட்டப் பின்னூட்டங்கள் இடப்போவதில்லை என்று தான் சொன்னேன். ஆனால் யாரும் திருந்தவில்லை; அதனால் மீண்டும் தொடங்கிவிட்டோம் என்பார்(ன்). இவர் நினைத்தால் எல்லோரும் திருந்திவிட்டார்கள்; இவர் நினைத்தால் எல்லோரும் திரும்பவும் கெட்டுப் போய்விட்டார்கள். தீர்மானிக்கும் உரிமை இவருக்குத் தானே உண்டு. :-)

அதர், அனானிமஸ் ஆப்சனை நிறுத்தலாம் தான். ஆனால் அது போலிகளின் பின்னூட்டத்தை நிறுத்தாது. அதனால் அதர், அனானிமஸ் ஆப்சனை எடுத்துவிட்டு ப்ளாக்கர் அக்கவுண்ட் இல்லாத நண்பர்களின் பின்னூட்டத்தைத் தடுக்க மனமில்லை. இப்படிப் பட்ட பின்னூட்டம் வந்தால் கிள்ளி எறியவேண்டியது தான்.

//டோண்டு சார், நிலா நண்பரை சொல்றீங்களே, எலி குட்டி, பூனைக்குட்டி இந்த தலைவலிகளுக்கு பதில் டெலிட் கிளிக்குவது சுலபம் :-)
//

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு இந்த தர்மசங்கடம் வந்ததில்லை. ஐயா தான் நம்ம பதிவு பக்கமே வர்றதில்லையே. அதனால வேலை சுலபம்.

//ஐயா ரசிக பெருமக்களே, ஒங்களுக்கும் வீட்டுல கூட பொறந்த பொறப்புங்க, அறியா புள்ளைங்க இருக்கும். இப்ப ஒங்கள கேக்குறேனுங்க, சாதி, மத புல்லரிப்புகள், மற்றவங்கள கேவலப்படுத்துவது எம் பதிவுல நா எளுதுரேனா? அப்படி வர பின்னூட்டத்த அனுமதிக்கிறேனா? இல்லே, மத்தவங்க பதிவுல அப்படி எதாவது எளுதரேனா? இல்லே போலி டோண்டு பெயரில் இன்னொரு போலி உருவாகிவிட்டாரா?
//

நானும் இதே கேள்விகளைக் கேட்கிறேன். போலிகளும் அவர்களின் ரசிகர்களும் பதில் சொல்லவேண்டாம். அவர்களை அவர்களே கேட்டுக் கொள்ளட்டும் - அவர்கள் செய்வது சரியா என்று.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

//டோண்டு மட்டும் தான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்ளவில்லை ஒரே ஒரு வார்த்தையச் சொல்லச் சொல்லுங்கள். எங்கள் தலைவர் போலி டோண்டு அவரின் பகிரங்க மன்னிப்பைக் கோருவார்.

ஒருவர் ஒரே ஒரு வார்த்தை சொல்வதினால் அனைவருக்குமே பிரச்சினை தீர்கிறது என்றால் சொல்லலாமே. அது வரைக்கும் இது தொடரும்.

இப்படிக்கு,
நங்கநல்லூர் போலி டோண்டு ரசிகர் மன்றம்.

//

அப்படி என்றால் இது தனி மனிதத் தாக்குதல் மட்டும் தானே. உங்கள் போலி(கள்) சொல்வது போல் சாதியை எதிர்த்தப் போராட்டம் அல்லவே? டோண்டு சார் தான் பெருமிதம் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சாதிக் கட்சிகளையும் கலைத்துவிடுவார்களா? இல்லை உங்கள் போலி(கள்) தான் நிஜவுலகில் அந்த சாதி வெறிகளை எதிர்த்து என்ன செய்தார்கள்? இங்கே ஒருவரை எதிர்க்கிறோம் என்று சொல்லி எல்லா வலைப்பதிவர்களையும் வருத்தப்படவைப்பது எந்த வகையில் நியாயம்? உங்கள் தலைவர் வந்து பகிரங்க மன்னிப்பைக் கோருவார் என்றால் என்ன செய்வார்? - நேரில் அந்த ஐவரும் வந்து எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தோன்றி எல்லா தமிழ்வலைப்பதிவர்களிடமும் மன்னிப்பு கோருவாரா? அவர் சொன்ன உறுதி மொழியே இங்கே அசத்தியம் ஆகிவிட்டது. நீர் யாரோ? நீர் சொல்வதை எப்படி நம்புவது?

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

அஞ்சுமில்ல.. பத்துமில்ல. எல்லாம் பில்டப். ஒரே ஒரு ஜந்து இதை ஆரம்பித்து வைத்தது உண்மை. அதன் பிறகு தமிழ் வலையுலகம் முழுக்க போலி டோண்டு குறித்து சுவாரசியமாக பேச ஆரம்பித்த உடன் ஜாலிக்காக மேலும் இருவர் போலி டோண்டு என்ற பெயரையே பயன்படுத்தி அதே அநாகரிகங்களை கக்க ஆரம்பித்தனர். ஒரு கால கட்டத்தில் பிரச்னை போலீஸ், பத்திரிகை பேட்டி என்றெல்லாம் போக ஆரம்பித்தவுடன், ஜந்துவின் நண்பர்கள் ஜகா வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு இந்த இருவரும் அந்த ஜந்துவுடன் தொடர்பு கொண்ட மின்னஞ்சல்களை வைத்துக் கொண்டு, "நான் மாட்டினால் நீங்களும் காலி" என்று அந்த ஜந்து மேற்படி இருவரை மிரட்டி வருகிறானாம். எனவே பாம்பு புத்துக்குள் கையை விட்ட கணக்காய் இருவரும் முழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்போது, சம்பந்தப்பட்ட துறையினர் பல்வேறு வகைகளில் போலி டோண்டு(க்களின்)வின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருவதால், கடைசி கட்ட நடவடிக்கையாக ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த இணைய தொடர்பை துண்டித்து விட்டு, புதிய இணைய தொடர்புடன் போலி டோண்டு சமர்த்தாய் உட்கார்ந்திருக்கிறானாம். இவ்வளவு நாட்கள் பெரிய பருப்பு மாதிரி போலி டோண்டு, வெங்காயம் என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தவன் இப்போது வம்பன், சும்பன், கம்பன் என்றெல்லாமும், அநாநிமஸாகவும் அலைவதன் காரணம் இது தான். பிரச்னையை திசை திருப்ப எதுவும் வழி இருக்கிறதா என்று அவன் ஆராய்வதாகவும் தகவல்.

இன்னும் ஓரிரு வாரங்களில் அவன் ஆட்டம் முடிவுக்கு வந்து விடம் என்கிறார்கள் 'விஷயம்' அறிந்த வட்டாரத்தினர்.

போலி கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்..

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

ஐயா ரசிகரே!
என்னை இத்தனை உயர்ந்த இடத்தில் வைத்தற்கு மிக்க நன்றி. வலைப்பதிவாளர்கள் என்ன எழுதுவது
என்பது என் ஆணையினின் படியா? சூப்பருங்க, யாரு என்ன எங்க எப்படி எது எது உங்கள
பாதிக்குதுனு லிஸ்ட்டுப் போட்டு அனுப்புங்க. அவுங்க உடனே நிறுத்தும்படி ஆணையிடுகிறேன்.

குமரன், ஒத்த வார்த்தையில் சொன்னால், "போகாத ஊருக்கு வழி தேடுவதுப் போல" யாரு என்ன எழுதினா நான் எப்படி பொறுப்பாக முடியும்? எனக்கு ஏன் ஆபாச மெயில் போட வேண்டும். மாயவரத்தான் அவர்களே, வெறுத்துப் போய்விட்டது.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

***இன்னும் ஓரிரு வாரங்களில் அவன் ஆட்டம் முடிவுக்கு வந்து விடம் என்கிறார்கள் 'விஷயம்' அறிந்த வட்டாரத்தினர்.***

haaa haaa hehehehe huhuhu yehahaha purrrrrrrr

-Poli Dondu Rasigar Mandram
MYLADUDURAI

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

உஸாஜீக்கும் பரபரப்பு பிடித்திருக்கின்றது. ஜமாயுங்கள்.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

ஆதரவுடன்,
போலி டோண்டு ரசிகர்கள் நற்பணி மன்றம்.
கொழும்பு,இலங்கை.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

ஒருவரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவது மிகத் தவறு. மிகமிகத் தவறு. பின்னூட்டம் போடுவது டோண்டுவா போலியா என்று கூடப் படிக்காமல் அழித்து விடுவதுதான் நடக்கிறது.

கருத்து மோதல் என்பது நேர்மையாக நடக்க வேண்டும். இரண்டு பக்கத்திலும் வீர வசனங்கள் கேட்கின்றன. தேர்தல் வசனங்கள் போல இருக்கின்றன. முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

உஷா அவர்களே, அவர்களைப் பற்றி பேசி அவர்களுக்கு பெருமை சேர்க்கவேண்டாம். அந்த அறிவுசீவிகளின் "இயக்கம்" ஒரு கோழையான இயக்கம்.

இவர்களின் குறிக்கோளே தமிழுக்கும் தமிழனுக்கும் சிறுமை ஏற்படுத்துவதே.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

ஜெயில்ல ரசிகர் மன்றமெல்லாம் ஆரம்பிக்க முடியுமா யாராச்சும் கேட்டு சொல்லுங்கப்பா.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

Sent me the email Poli Dondu... I like to see your email. If you have guts please sent to me... Saval... I am Kattunaikkan. I am proud to say my jathi. Computer professional from USA. Working in Yahoo for about 6 years. Mattaladu kanna

cbe_thambi@yahoo.com

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

சதயம், எல்லாமே இருக்கட்டும். இதுக்கெல்லாம் மனம் புண்பட மாட்டேன். சில சமயம் முன்ன பின்ன
ஆகிவிடுகிறது. இப்பத்தான் வெளிய போய்விட்டு வந்தேன். பிரண்ட் வராங்க. வரட்டா

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

பெண்ணென்றும் பாராமல் ஒருவர் மீது இப்படி சேற்றை வாரி இறைக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையிலேயே விரைவில் சந்திக்கப் போகிறார்கள், தாங்க முடியாத குடும்ப அவமானங்களை!

பொறுமையுடனும், அமைதியாகவும் இதை எதிர்கொள்ளுங்கள்,'ரா.உஷா '.

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

<< இல்லம்