Monday, April 24, 2006

கலைஞர், கமல் மற்றும் தேவன்

வழக்கமான டீ கடை, சில பெஞ்சுகள், பாட்டு பொட்டி "கல்யாணமாம் கல்யாணம்" பாடிக் கொண்டு இருந்தது. சில பெஞ்சுகளில் சில மனிதர்கள்.

உ.பி 1 - இன்னாடா மேட்டரு? காலங்கார்த்தால யோசிச்சிக்கினு கீரே?

உ.பி 2- நேத்து ரெட்ட எல மீட்டிங்குல விந்தியாவ பார்த்தேண்ணே! அளகா இருந்துச்சுண்ணே! சிம்ரனும் ரெட்ட வெரல காட்டிச்சு. இன்னா ஜெனம் தெரியுமா? ஏண்ணே, நம்ம கட்சில பாக்கிராஜ இட்டாந்தோமே. அசினு, ஜோதிகான்னு மேட ஏத்துனா எத்தினி நல்லா இருக்கும்?

உ.பி 1- டேய் கூ முட்ட தலையா! அதுக்கு எல்லாம் டப்பு வோணும். வை.கோ, சரத்துகுமாரூன்னு போய்கீனே கீராங்க. இந்த சிம்ரனு, விந்தியா கட்சி பணியா பாக்குதுங்க? சொம்ம துட்டுக்கு ஆக்டு குடுக்குதுங்க . எலிக்சன் முடிஞ்சதும் காணாம பூடுவாங்க.

இவர்கள் பேச்சு போய் கொண்டு இருக்க, சிறிது தொலைவில் ர.ர கூட்டம்.

ர.ர 1- எப்படி கீது?

ர.ர 2- ஒண்ணும் சொல்ல முடியாதண்ணே. கலர் டீவி பிலிம் காட்டி கலைஞர் கூட்டத்த இஸ்துட்டாரூ.

ர.ர 3- ஆமாண்ணே! எம் பொஞ்சாதிகூட ஒதய சூரியனுக்குதா ஓட்டு போடுவேன்னு கூவின்னுக்கீரா.

ர.ர 2- ஏண்ணே, அம்மா நடிகைங்கள மேட ஏத்தினாங்களே, விக்ரம், சூர்யா, விஜய்யின்னு புட்ச்சா கூட்டம் அம்முமே?

ர.ர 1- அவுங்க எல்லாம் வர மாட்டாங்க. ரஜினி நைசா நளுவிட்டாரூ. கமலு ஊர்ல இல்லியாம்.

ர.ர 3- கமல சொலபமா புட்சியிருக்கலாம்ணே! மர்தநாயகம் பட்த்த முடிக்க துட்டு இல்லாம அல்லாடுராரூ.

ர.ர2- சினி கூத்துல போட்டிருந்துச்சு, நூறுகோடி வேணுமாம் பட்த முடிக்க!

உ.பிக்கள் காதில் இப்பேச்சுக்கள் அரைகுறையாய் விழுகின்றன.

உ.பி 2 -பாத்தீயாடா, சிம்ரனும், செந்திலு, விந்தியான்னு கூட்டத்த இஸ்துக்கீனு கீராங்க, இப்ப கமலாம்!

உ.பி 1- கோடிங்க இவுங்க வாயில எத்தினி சுளுவா வருது பாருங்க. நாம கஞ்சிக்கு இல்லாம அல்லாடுரோம்.

அப்ப அங்கு வந்த தொகுதி பொறுப்பாளர் அவர்களை கண்டு கத்துகிறார்.

தொ.பொ- இன்னாடா, ஆபீசுல ஒர்த்தனையும் காணோம்னு பார்த்தா அல்லாரும் இங்க குந்திக்கீனு கீறீங்க. பேட்டா வாங்குறீங்க இல்லே. எந்திரிச்சி ஆபிசுக்கு போங்க. இனி டீ வேணும்மானா நாயர் கடையில அக்கவுண்ட் வெச்சிக்கினு, பைய கட்சி ஆபிசுக்கு சப்ளை செய்ய சொல்லுங்க.

அவர் கத்தலில் பயந்துப் போன உ.பிக்கள், பேச்சை மாற்ற,

உ.பி 2- அண்ணே, விஷயம் தெரியுமா? நடிகர் கமல, நூறு கோடி குட்து இஸ்துட்டாங்கண்ணே!

தொ.பொ- இன்னாடா சொல்ரே? சொம்ம கத வூடாதீங்க

உ.பி 2- சத்தியமாண்ணே. தோ அங்க மின்னல்ரவியும், சிலுக்கு ஜிப்பா கதிரும் பேசிக்கினத நாங்க கேட்டோம்.

தொ.பொ- தோ வரேன்

என்றவர், மெல்ல ர.ரக்கள் பக்கம் செல்கிறார். அவரைப் பார்த்ததும் ர.ரக்கள் பேச்சு நிற்கிறது.

தொ.பொ- எப்படி போவுது? இன்னா விஸ்யம்? கருத்து கணிப்பு பாத்தீங்களா? காத்து எங்க பக்கம் அடிக்குது. ஆமா, இன்னாமோ கமலுன்னு காதுல வுளுந்துச்சு? இன்னா மேட்டரூ?

ர.ரக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ர.ர 1, மற்றவர்களைப் பார்த்து லேசாய் கண்ணடித்துவிட்டு,

ர.ர 1- கமலு, எங்க கட்சிக்கு வரப் போறாரூ. ரெட்ட எலைக்கு ஓட்டு போட சொல்லிக் கேக்கப் போறாரூ. பேச்சு வார்த்த நடந்துக்கீனு கீது.

தொ.பொ - அவுரூ தி.க ஆளு. சொம்ம ரீல் வுடாதீங்க........... நாயர் ஒரு ஸ்ட்ராங் டீ

என்றவர் மெல்ல பின் வாங்கி, செல்போனை எடுக்கிறார்.

தொ.பொ- அண்ணே, விசயம் தெரியுமா? நூறுகோடி குடுத்து கமல இஸ்துட்டாங்கண்ணே.

போன் குரல்- நெசமாலுமா? இரு, இரு. கமலு ஆபிசுல வேல செய்யிர ஆளோட மச்சான் ஒருத்தன் இருக்கான். அவன கேட்ட விஸ்யத்த புட்டு புட்டு வெப்பான். இப்ப போன வெய்யீ.

உ.பி- அண்ணே, விஸ்யம் மெய்யாலுமான்னு கேட்டு சொல்லுங்க. டென்சனா கீது.

உபிக்கள் பணம் படுத்தும் பாட்டை பேசிக்கொண்டிருக்க செல் அடிக்கிறது.

போ. கு- கமலு ஊர்லையே இல்லியாம். ஜோதிகாகூட ஒரு படத்துல நடிக்கிறாரே, அது விஸ்யமா அமெரிக்கா போய்ட்டாராம். அவுரூ சுயமரியாதைகாரரூ, பெரியாரூ பக்தன். இன்னிக்கு பெரியாரூ கொள்கைய காப்பாத்துர ஓரே கட்சி நம்ம களகம்தான். நூறு கோடி கொட்தாலும் அவுரூ ரெட்ட எல பக்கம் போவ மாட்டாரூ.

அவர் போனில் சொல்ல, சொல்ல பக்கத்தில் சில காதுகளில் இந்த பேச்சுக்கள் விழுகின்றன.

(மறைந்த எழுத்தாளர் தேவன், வதந்திகள் எப்படி பரவுகின்றன என்பதை ஒரு சிறுகதையில் விவரித்திருப்பார். அந்த தாக்கத்தின் (விபரீத) விளைவு இது.)

16 பின்னூட்டங்கள்:

At Monday, 24 April, 2006, சொல்வது...

//கமலு ஊர்லையே இல்லியாம். ஜோதிகாகூட ஒரு படத்துல நடிக்கிறாரே, அது விஸ்யமா அமெரிக்கா போய்ட்டாராம். அவுரூ சுயமரியாதைகாரரூ, பெரியாரூ பக்தன். இன்னிக்கு பெரியாரூ கொள்கைய காப்பாத்துர ஓரே கட்சி நம்ம களகம்தான். நூறு கோடி கொட்தாலும் அவுரூ ரெட்ட எல பக்கம் போவ மாட்டாரூ.
//


ஒவ்வொரு வார்த்தைக்கும் குபீர் சிரிப்பு உத்திரவாதம்! :-)

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

வாத்தி அது ஒரு கலத் இன்பர்மேஷன்னு சொன்னாரு.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

சில பேரு அடுத்தாப்ல எண்ண வதங்தீனு லுக்கு உட்டுக்னு இருக்காங்கபா அவங்களுக்கு "கோழி (சாரி சங்கு டிலிப்பு... சீ டங்கு சிலிப்பு) தோழி எடம் மாற தாயார் ட... தயார். ஆட்சி உங்குளுது, பார் சப்ளை எங்குளுது.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

ஓ.எழுத்தாளர் தேவனா??
நல்ல வேளை இந்த விஷயத்தைக் கடைசியில(யாவது) போட்டீங்க.நான் கூட சின்னிமாப் பாட்டுப் பாடற தேவன் ஏகாம்பரத்தைத் தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்.
பட்டையக் கிளப்பிட்டீங்க போங்க.
5 ஸ்மைலி போட்டுக்குங்க.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

அருமையான கற்பனை...
அற்புதமான எழுத்து நடை...

பின்...னிட்டீங்க!

:-))

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

நல்லாத்தாம்மே எயுதிக்கீறே. மேட்டரு அப்படியே இஸ்த்துக்கிச்சு.

ஐய்யய்யோ உஷா, தப்பா நினைச்சுக்காதீங்க. படிச்சதோட தாக்கம் அப்படியே வந்துருச்சு:-)))))

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

usha,

nalla irunthuthu..

theerthal medaila enna vena pesalam.. yaaru confirm panna poranngarathu thaane matter..

ithe style la niraiya karpanai pannaunga..

anbudan vichu
www.neyvelivichu.blogspot.com

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

ரசினி ராம்கி, தேசாந்திரி, மோகனுதாசு, சீதரூ, நெய்வேலீ, தொள்சி, ஞான்சு, சுதர்சனு டாக்சுபா.

அனானிமசு, அர்சில்ல பிரண்டும் கெடையாது, எனிமியும் கெடையாதுன்னு சொல்வாங்களே, மறண்டியா? அத்தினியும் பிசினசு

மோகனுதாசு, வாத்தியாரூம் சொல்டாரா! எனிக்கும் குன்சா டவுட்டு இருந்திச்சு

சீதரூ, பொறந்துது பொள்ளாச்சின்னு எங்கம்மா சொல்லும், ஆனா படிட்சி வள்ந்துது பட்ணம்தான்.

தொள்சி, இன்னாமே ஸ்மைலி போட்டு மன்ச நோவ அடிக்காதேமே நாம தாயா புள்ளியா எத்தினி
வர்சமா பளகுரோம்.
சுதர்சனு, வில்லனு தேவனான்னு கேக்காம போனியே? மலையாள ஆக்டரூ தேவன சொன்னேன்.

இன்னா பிரிச்சின பிளாக்குல, தேசாந்திரி கமெண்டு மட்டும் காட்டுது, மத்தவங்களுக்கு டேக்கா
கொடுக்குது, இன்னா சமாச்சாரம் புர்லையே

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

அடடே! இது கதையா! மெய்யாலுமே...சச்ச...மெய்யாகவே இதெல்லாம் நடந்தாலும் வியப்படையக் கூடாது.

தேவன் எனக்கும் பிடித்த எழுத்தாளர். ரொம்ப நல்ல எழுத்து.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

உஷா,

மெட்ராஸ் பாஷைல வெளுத்து வாங்கரிங்களே........படிக்க சுவாரஸ்யமாக இருன்தது.தேவன் எனக்கும் பிடித்த எழுத்தாளர்.அவருடைய சின்னஞ்சிறு கதைகள் படித்திருக்கிரேன்.
தமிழ்ல ட்ய்ப் அடிக்கர்துகுள்ளே நுரை தள்ளிடுச்சு......ம்ம்ம்ம்ம்ம்ம்
கமல் மண்டை செமையா உறுளுது......பாவம் அவர்.....

ராதா

 
At Tuesday, 25 April, 2006, சொல்வது...

ஆப்பு முன்பைவிட இன்னும் இளமையாக விரைவில் காணக் கிடைக்கும்.

விரைவில் எதிர்பாருங்கள்.

வலைப்பதிவில் நம்பர் ஒன்!

 
At Tuesday, 25 April, 2006, சொல்வது...

உஷாக்கா, வதந்தீ சூப்பர்.. அப்பப்போ டெஸ்ட் எழுதறீங்களே, பாஸ் ஆனீங்களா இல்லயா?

 
At Tuesday, 25 April, 2006, சொல்வது...

உஷாக்கா சொம்மாங்காட்டியும் TEST... TEST...அப்படின்னு கேப்ல்ல கொரலு உட்னு இருக்கீங்களே அதுல்ல எதோ முக்கியமான சிக்னல் இருக்குது அது இன்னா மேட்டர்ன்னு ஆருக்கும் பிரியல்லன்னு நினைக்கிறேன்... எதோ உஷாரா ஆவச் சொல்லுறீங்கன்னு நினைக்கிறேன்.. கரிக்கிட்டா

 
At Tuesday, 25 April, 2006, சொல்வது...

//தேவன் எனக்கும் பிடித்த எழுத்தாளர். ரொம்ப நல்ல எழுத்து//

ஜிரா, தேவன் எழுதுவது நல்ல எழுத்து என்று இங்க வந்து என்ன சர்ட்டிபிக்கேட்டு :-))

கீதா, இஸ்டாட் பண்ணுரப்ப அப்டிதா பயங்காட்டும், அப்பால சுளுவா வந்துடும்.

ஆப்பு! பயமுறுத்தாதையா :-(

பொன்ஸ், பாஸ் ஆயிட்டேனான்னு நீங்கதானே சொல்லணும்

தேவ், எனக்கு மட்டும் இல்லை பலருக்கும் நேற்று இந்த பிரச்சனை இருந்திருக்கிறது. கமெண்ட்
பதிவாகவில்லை. தமிழ்மண லிஸ்டிலும் வரவில்லை. மத்தப்படி வேற ஒண்ணுமில்லே

 

Post a Comment

<< இல்லம்