Friday, April 28, 2006

பதிவு செய்யப்படும் அவமானங்கள்

இளந்திரையன் பின்னூட்டத்தில் பரபரப்பிற்காக இந்த பிரச்சனையை எழுப்பின்னீரா என்றுக் கேட்டிருந்தார். இன்னும் இரண்டு நட்புகள், இதையெல்லாம் எழுதி, தரத்தைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்று தனிமடலிட்டிருந்தார்கள்.

ஏன் எழுதினேன் என்றாரல், இந்த கேள்விகள் என்னையே நான் கேட்டுக் கொண்டது. திரும்ப, திரும்ப ஆபாசமாய் திட்டி வரும் மடல்களுக்கு என்ன காரணம்? என்னுடைய மத, சாதி நிலைப்பாடுகளை பல முறை சொல்லியும் ஏன் எனக்கு இந்த நிலைமை? அத்தகைய மடல்களைப் பார்த்ததும் ஆத்திரம், அவமானம் போன்ற உணர்வுகளை வரத்தான்
செய்கின்றன. என்ன ஒன்று இப்பொழுது பழகிவிட்டாலும், முதல் வரியில் ஆரம்பிக்கும் ஆபாச வசவு கண்ணில் பட்டதும் கூசித்தான் போகிறது.

சாதி என்பது நான் கேட்டுப் பெற்றதில்லை. இந்த சாதியில் பிறந்தது என் தவறா? ஆக என் எழுத்துக்கள் நான் பிறந்த சாதியை வைத்தே பார்க்கப்படுகிறதா? இதைவிட கேவலம், படைப்பாளிக்கு வேறில்லை.

நெருப்பு சிவா எழுப்பிய கேள்வியும் நான் நினைத்ததுதான். ஆனால் சம்மந்தமில்லாதவர்களை தாக்க என்ன காரணம்? இதுவும் ஒருவகையான சாதி வெறிதானே? ஆக்ரோஷமாய் எதிர் கருத்துக்கள் வைப்பதில் தவறில்லை. ஆனால் வார்த்தை பிரயோகங்கள்?

மன உணர்வுகளை, சொல்லும் சொற்கள் சரியாய் விளக்குவதில்லை. சொற்களால் சொல்ல முடியாததை, வார்த்தையால் வடிக்க முடிவதில்லை. ஏதோ கொஞ்சம் மனப்பாரம் குறைகிறது.
சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவமானங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி.

11 பின்னூட்டங்கள்:

At Friday, 28 April, 2006, சொல்வது...

இது அவர்களின் ஆற்றாமையையும், இயலாமையையுமே காட்டுகிறது.

"கடவுளே!, இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்!"

என்று யேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு அமைதியாகுங்கள்.

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

நேற்று நீங்கள் செயத பதிவால் போலி தன் பலத்தை நிரூபித்து விட்டார் என்றே தோன்றுகிறது. 500 வலைப் பதிவர்கள் மற்றும் சர்வதேச போலீஸ் போன்றேர்கள் இதுவரை நெருங்க முடியாத அளவிற்குத் தண்ணி காட்டுகிறார் என்றால் அவனின் திறமை எப்படிப்பட்டது என்று என் நண்பர் கேட்டார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனினும் நேற்றய பதிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய பதிவு என்றே நினைக்கிறேன்.

இப்போது நான் எழுதுவதும் ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்த்துதான். என் பதிவிற்கு வந்து போலிப் பின்னூட்டம் இட அதைத் திறந்தவுடன் அவரைப் பற்றிய சில தானாகச் தகவல்கள் சேகரிக்கப்படும். அவர் 'Mega Proxy' வழியாக வருகிறார் என்ற ஒரு சந்தேகம் உள்ளது. இன்று அது தீர்ந்து விடும். தைரியமிருந்தால் வா!!!!!

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

உஸாஜி,

இவர்கள் தங்களையும் யாராவது கவனிக்க மாட்டார்களா என்று தான் இப்படி நடக்கின்றார்கள்.எந்த கீழ்த்தரத்துக்கும் போகின்றார்கள். ignore செய்வது தான் இதை முடிவுக்குக் கொண்டுவரும்.100%அலட்சியம்.

மற்றும்படி உங்கள் உணர்வுகள் விளங்குகின்றது.

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

காலம் ஒரு நாள் மாறும்...

மாறிக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

உஷா,
இது தனக்கு மட்டும் நேருவதாக ஒவ்வொருவரும் நினைத்துக்கொள்வது தான் பிரச்சினை .கிட்டத் தட்ட எல்லோருக்கும் வருவதாகத் தான் நினைக்கிறேன் .ஆனால் என் போன்றவர்கள் அதை அழித்துவிட்டு பேசாமல் இருக்கிறோம் .உங்களைப் போல சிலர் பேசுகின்றனர் ..யாருடைய செயல் இத்தகைய தீய போக்கை ஊக்குவிக்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

ஜெயகுமார், தருமி நன்றி.

ஜோ அப்படியா? தனி மடலை விடுங்க. பொதுவில் உங்கள் எல்லாரையும் அவரவர் சாதியை இழிவாய் சொல்லி க்மெண்ட் வருதா? எனக்கு என்னை சொன்னதுமட்டுமே கண்ணில் விழுந்தது. இதை எல்லாம் ஏன் பெரியதாய் எடுத்துக் கொள்ள வேண்டும்? புதியதா என்ன? யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், சினிமா எடுக்கலாம் இல்லையா?

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

அனேகம் பேர் சொன்னததை தான் நானும் சொல்கிறேன்.

இதெற்கெல்லாம் மதிப்பு கொடுக்காதீர்கள். டெலிட்டுவிட்டு வேறவேலைய பாருங்க உஷா.

இதற்கு ஒரு பதிவு போட்டால்,மீண்டும் ஒரு மெயில் வரும்,நீங்கள் பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்து.

நீங்கள் பதிவு இடுவது, மெயில் அனுப்பியவருக்கு பெரிய வெற்றியாய் தோன்றும்.

just ignore it and you dont get mails after someme time.

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

படித்தாலும், சிந்திக்கத் தெரிந்தாலும் அதன் படி நடப்பது எப்படி என்று தெரியாத, அல்லது விரும்பாதவர்களின் மன ஆற்றாமை அது. அதை வெளிப்படுவத்துவதில் எவ்வளவு வேகம் உள்ளதோ அதைப் பொறுத்து அவர்கள் தாழ்ந்து போகிறார்கள்.

இவர்களும் இவர்களது குறுகிய மனம் படைத்த வட்டமும், தனிமையில் இதைப்பற்றிப் பேசிச் சிரித்து தத்தம் ஆற்றாமைக்கு மருந்திட்டுக் கொள்கிறார்கள். இதில் இன்னும் சிரமம், ஒரே நபரிடத்தில் நல்லவராக நடித்து அவரைப்பற்றியே மற்றவரிடத்தில் இரண்டாம்தர காமெண்டுகளால் நாரடிப்பவர்களும் இணையத்தில் உலாவுகிறார்கள்.

நுட்பம் மற்றும் இலக்கியம் பேசுபவர்களையும் ஜாதி அடிப்படையில் ஏதுவது என்பது பின்னோக்கிய செயல்.

திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. காமெண்டுகளை மட்டுறுத்துங்கள். எக்காலத்திலும், அவர்கள் செயலில் ஆத்திரமடைந்து எதிர்வினையில் இறங்கிவிடாதீர்கள். அதுவே அவர்கள் எதிர்பார்ப்பது. (இந்தப் பதிவே தேவையற்றது என்கிறேன். நீங்கள் இதைப்பற்றி சொல்லவேஇல்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைவது உறுதி)

எனக்கு எதிர்பார்ப்பு, தரமான சிந்தனைகளைப் படிக்க உதவியாய் இருப்பது தமிழ் இணையம் மட்டுமே. அவற்றை இந்த ஈனர்கள் திரும்ப இழிந்த சமூகமாய் மாற்றிவிடுவார்களோ என்பதுதான். (இன்றைய பத்திரிகை உலகம் போல). போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்.

ஏதோ, அவர்கள் அவர்களுக்கு மட்டுமாவது உண்மையாய் நடந்துகொண்டால் சரி.

 
At Saturday, 29 April, 2006, சொல்வது...

உஷா,

//உங்கள் எல்லாரையும் அவரவர் சாதியை இழிவாய் சொல்லி க்மெண்ட் வருதா? //

நான் இல்லாத ஜாதியில் நான் இருப்பதாக நினைத்துக்கொண்டு எனக்கு 'மெயில்' வருதே! :-)))

 
At Saturday, 29 April, 2006, சொல்வது...

உஷா!
இன்று தான் தங்கள் வலைபதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்களின் போன பதிவை பார்த்து எனக்கு கொஞ்சம் வருத்தம். ஏன் இதற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று? உங்கள் ஆதங்கம் புரிகிறது. NO Pain NO Gain சாதிக்க வாழ்த்துக்கள். கடந்த காலத்தை மறந்து நல்ல பதிவுகளை பதிவு செய்யவும்
அன்புடன்
நாகை சிவா

 
At Saturday, 29 April, 2006, சொல்வது...

:-)))

 

Post a Comment

<< இல்லம்