Thursday, May 25, 2006

மதுமிதா.........................

மதுமிதா எழுத ஆரம்பித்துள்ள வலைபூ பட்டியலுக்கு என்னைப்பற்றி!

வலைப்பதிவர் பெயர்: உஷா, எழுத்து பெயர்- ராமசந்திரன் உஷா

வலைப்பூ பெயர் : nunippul

சுட்டி(url) : http://nunippul.blogspot.com

ஊர்: பிறந்த மண்- தமிழகம், தற்பொழுது இருப்பது புஃஜெய்ரா

நாடு: தாய் நாடு- இந்தியா, காலத்தின் கட்டாயமாய் வசிப்பது ஐக்கிய அரபு நாடு

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: மதி

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 6 அக்டோபர், 2005

இது எத்தனையாவது பதிவு: 93

இப்பதிவின் சுட்டி- http://nunippul.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள எனக்கென்று ஒரு இடம் தேவையாய் இருந்தது.

சந்தித்த அனுபவங்கள்: சில கசப்புகள், சில இனிப்புகள், பல பாடங்கள்

பெற்ற நண்பர்கள்: ர(ம)யில் சிநேகிதமாய் ஆரம்பித்து, நல்ல நட்புகளாய் வளர்ந்துள்ளது.

கற்றவை: தொடர்கிறது, முடியவில்லை

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ஓரளவு உண்டு, ஆனால் இன்னும் அனைத்து கருத்தையும் எழுதாக்க முடியவில்லை

இனி செய்ய நினைப்பவை: பார்க்கலாம்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: விளையாட்டாய் எழுத ஆரம்பித்தது, இன்று என் வாழ்க்கையை
எழுத்து எடுத்துக் கொண்டு விட்டது என்பதில் மிகையில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இன்னும் பல பெண்கள் எழுத
முன் வர வேண்டும். எழுத நினைப்பவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம்

இப்படிக்கு,
உங்கள் தோழி
ராமசந்திரன் உஷா

7 பின்னூட்டங்கள்:

At Thursday, 25 May, 2006, சொல்வது...

உண்மையிலே இணையம் ஒரு வரப்பிரசாதம் தானுங்க.
நாம் கிறுக்குவதற்கு ஒரு இடமும் கிறுக்கியதை உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் படித்து உடனே பதில் தருவதும் சாதாரண விசயமா என்ன?

 
At Thursday, 25 May, 2006, சொல்வது...

//இன்னும் பல பெண்கள் எழுத முன் வர வேண்டும். //
இது தான் நடக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது அக்கா.. :(

 
At Thursday, 25 May, 2006, சொல்வது...

நானும் துபாய் தாங்க புதுசா நாலு வலை பூ நட்டுருக்கேன் வந்து பாத்து இந்த புதியவனுக்கு ஆலோசனை சொல்லுங்க... நன்றிங்க
http://kilumathur.blogspot.com
http://mahendhiran.blogspot.com
http://paarima.blogspot.com
http://inthavaaram.blogspot.com

 
At Thursday, 25 May, 2006, சொல்வது...

//இது தான் நடக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது அக்கா.. :(//

என்ன பொன்ஸ், இப்படி சொல்றீங்க.. தடையா என்ன இருக்குன்னு சொல்லுங்க. ஒடச்சு எறிவோம்.

 
At Friday, 26 May, 2006, சொல்வது...

நன்றி உஷா.

நமக்குள்ள என்ன நன்றி
ஏன் இந்த செண்டிமெண்ட்-ன்னு
கேப்பீங்க.

என்ன செய்யறது உஷா
உள்ளத்துல பொங்கற நன்றி உணர்வை
மூணு எழுத்து போட்டு தடுக்க முடியுதான்னு பாப்போம்.


மகேந்திரன் - ட்ட
சரியான சுட்டி குடுக்கச் சொல்லுங்க உஷா

 
At Friday, 26 May, 2006, சொல்வது...

//முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 6 அக்டோபர், 2005//
என்னங்க, உங்க profileஇல் ஜூன் 2005ன்னு இருக்கு. முதல் பதிவிலே இது ஆறாவது ஆரம்பம்னு இருக்கு.முதமுதல்லே எப்ப ஆரம்பிச்சீங்க ?

 
At Friday, 26 May, 2006, சொல்வது...

நாகை சிவா, ஆமாங்க ஊக்கத்தை கைவிடாமல் எழுதுங்கள். வாழ்த்துக்கள்

பொன்ஸ், நான் சொல்ல வந்ததை வெங்கட் சொல்லிட்டார்.

வெங்கட், அதுதானே, இதுக்கு எல்லாம் பயந்தா முடியுமா? ஐயா, ஒரு தனி மடல் போடுகிறேன். பாருங்க.

மகேந்திரன், அறிவுரைதானே பிடியுங்க- யார் கிட்டையும் எந்த அறிவுரையும் கேட்காதீங்க :-)
நான் அப்படிதாங்க. அறிவுரை கேட்கவும் மாட்டேன், பிறருக்கு வழங்கவும் மாட்டேன்.


மணியன், நடுவுல வெறுத்துப் போயி இழுத்து மூடினேனே ஞாபகம் இல்லையா? ஆனா பழைய பதிவுகளும் போயிந்தி!

மதுமிதாவின் கமெண்டுக்கு மட்டும் பதில் கிடையாது :-)

 

Post a Comment

<< இல்லம்