Thursday, May 11, 2006

போரும் அமைதியும்

சுறாவளியின் வீச்சு குறைந்து
அமைதி காற்று மெல்ல
வீசத் தொடங்கியது
ஒன்றுமே நிகழாததுப் போல
அசட்டு புன்னகையுடன் கண்கள்
சுற்றுமுற்றும் பார்க்கின்றன
உள்ளுக்குள் ரத்தமும் சீழுமாய்
புரையோடிய காயங்களை
வெளிக்காட்டிக் கொள்ளாமல்
கைகள் வெகு ஜாக்கிரதை
உணர்வுடன் குலுக்கப்படுகின்றன
இன்னும் பல கூரிய ஆயுதங்கள்
உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன
எங்கிருந்தாவது ஒரு கல் வீசப்படும்
மீண்டும் தொடங்கும் போர்.

14 பின்னூட்டங்கள்:

At Thursday, 11 May, 2006, சொல்வது...

//எங்கிருந்தாவது ஒரு கல் வீசப்படும்//

இன்னும் வீசப்படலைன்னு நினைக்கறீங்களா?!

:(

 
At Thursday, 11 May, 2006, சொல்வது...

வீசப் போவது யார்னு தான் இத்தனை நாள் காத்திருந்தாங்கன்னு நினைக்கிறேன்.. !!!:(

 
At Thursday, 11 May, 2006, சொல்வது...

கலவரத்தை அடக்க நினைப்பவன்
முச்சந்தியில் செருப்பு தைப்பவன்
சாலையை கடக்கும் சிறுமிகள்
சாகிறார்கள்
கல் விட்டெறிபவன்
சிரிக்கிறான்
ஒளிர்கிறது சாதி மதமற்ற
புனிதபாரதம்

 
At Friday, 12 May, 2006, சொல்வது...

சொல்லாமலேயே சொல்றதுங்கறது இதுதாங்களா?

 
At Friday, 12 May, 2006, சொல்வது...

(வீட்டிற்கு) உள்ளே ? / வெளியே ?
:-)))

 
At Friday, 12 May, 2006, சொல்வது...

Arumaiyaana Kavithai.. This post will fit a lot of situations...

Excellent choice of words akka.:)

 
At Friday, 12 May, 2006, சொல்வது...

//உணர்வுடன் குலுக்கப்படுகின்றன
இன்னும் பல கூரிய ஆயுதங்கள்
உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன
எங்கிருந்தாவது ஒரு கல் வீசப்படும்
மீண்டும் தொடங்கும் போர். //

எப்பொழுதுமே
கல் வீசுபவனின்
தூரங்கள் அதிகமாகவே இருக்கின்றன..

 
At Friday, 12 May, 2006, சொல்வது...

இளவஞ்சி, பொன்ஸ், முத்து (தமிழினி), நாகு, லதா, தேவ், ஞானி பின்னுட்டங்களுக்கு நன்றி.

வாழ்க்கை அமைதியாய் போவதை நம் மனம் விரும்புவதில்லையா? ஏதோ ஒரு பரபரப்பும், ஒருவரை ஒருவர் கீறிக்
கொள்ளுதலும், அதன் காயமும் வலியும் இன்பத்தை தருகிறதா? போர்களை நாம் விரும்பி வரவேற்கிறோமா என்ற
கேள்விகளே இங்கு கவிதையானது - இது கவிதை என்று தேவ் சொல்லிவிட்டார் :-)

 
At Saturday, 13 May, 2006, சொல்வது...

விவேக் ஸ்டைலில்..

ஒண்ணுக்கு கீழ ஒண்ணு போட்டா- கவிதை.
ஒண்ணுக்கு அடுத்து ஒண்ணுக்கு போட்டா - கதை (பதினொண்று அல்ல)

//எங்கிருந்தாவது ஒரு கல் வீசப்படும்//

எதற்கு இந்த கவிதை இப்போ....

கவிதையே கல்லாயிடப்போவுது
:-))))))

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

இந்த கவிதை ஈழ தமிழர்களை கருத்தில் கொண்டு எழுதப்படவில்லை என்றாலும், என் மனம் என்னவோ அவர்களுக்காக அழுகின்றது.
அன்புடன்
நாகை சிவா

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

நல்ல கவிதை.

எனக்கு தமிழக அரசியல் தான் நினைவுக்கு வருகிறது.

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

மனசு, நான் கவிதைன்னு எங்காவது சொன்னேனா?????

மனசு, சிவா, பச்சோந்தி நன்றி. பொதுவாய் சண்டைக்கு அலையும் மனுஷங்க மனசை நினைத்து எழுதினேன்.

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

நீங்கள் சொல்வது சரிதான்.
வன்முறையில் நேரடியாக ஈடுபடாத மனிதர்கள் ஒன்று தன்னைப் பற்றிய பாதுகாப்பு நினைத்து, இல்லையென்றால் சந்தர்ப்பம் இல்லாமல்!

பாதுகாப்பான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தால் அனைவர் மனதிலும் உள்ளூறியிருக்கும் வன்முறை வெடித்துக் கிளம்பும் என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் நீங்கள் எழுதியிருப்பது வன்முறையை வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பவர் பற்றி! அதுவும் சரிதான்!

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

ப்ரதீப் நன்றி, சாதாரண மனித உறவுகளில் இந்த உரசல்கள் இல்லாமல் வாழ்க்கை சுமுகமாய் போக பலரும் விரும்புவதில்லை. இதை வன்முறை என்று சொல்ல முடியாது இல்லையா? சண்டைக்கு அலையும் குணம், நாம் சச்சரவு வேண்டாம் என்று ஒதுங்கிப் போனாலும் வம்புக்கு வருவார்கள்.
அதனால்தானோ, சீரியல்கள் இந்த கான்சப்டை வைத்து அரைத்தோ அரை என்று வெற்றி கண்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இங்கு கணவன் - மனைவி உறவைச் சொல்லவில்லை.

 

Post a Comment

<< இல்லம்