Monday, May 15, 2006

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை- 1

எம். ஜி. எம் நிறுவனத்தார் தயாரிப்பில் உருவான "டாம் அண்டு ஜெரி" கார்ட்டூன் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஓயாமல் எலியை பூனை துரத்தி துரத்தி பாடாய் படுத்தும். அதே சமயம், பூனை பேசாமல் இருக்கும்பொழுதும், இந்த எலி வாலை சுருட்டிக் கொண்டு இராமல், பூனையை வம்புக்கு இழுக்கும். நன்கு கூர்ந்துப் பார்த்தால், அந்த பூனையாலும், எலியாலும் ஒன்றை ஒன்று பிரிந்து இருக்கவே முடியாது என்பது விளங்கும்.

அதுப் போலதாங்க, நம்ம ஊரூ, புருஷன் பொண்டாட்டியின் தாம்பத்திய வாழ்க்கையும். என்னத்தான் நித்தமும் அடிச்சிக்கிட்டாலும், டிவோர்ஸ்க்கு எல்லாம் போக மாட்டாங்க. நமக்கு வாச்சது அவ்வளவுதான் என்று தத்துவம் பேசிக்கிட்டு இருப்பாங்க. இது ஆணுக்கும்
பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.

நான் இப்ப இங்க பதியப் போகிற சமாச்சாரம் எல்லாம், சொந்த மேட்டரூ அல்லாம, அங்க இங்க கேட்டது, பார்த்தது சேர்த்துதாங்க. ஆனா ஒண்ணுங்க, இது பெண்ணீய போர்வையில் ஆண்களை தவறாக சித்தரிக்கப் போவதில்லை. பொதுவாய் கணவன், மனைவி இருவர்களின் பிரச்சனை, மனநிலை என்று எழுதப் போகிறேன். சில சமயம் சேம் சைடு கோல், அப்பட்டமா இருந்தா யாரும் கோச்சிக்காதீங்க.

ஒரு காமடியான விஷயம். சினிமா ஸ்டாரூங்க, கல்யாணம் ஆன மூணாவது நாளு, அசத்தலான போட்டோக்களுடன் பத்திரிக்கைகளில் போஸ¥ம், பேட்டியும் கொடுப்பாங்க. ஈரோ, மனைவி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று, புது மனைவியைச் சொல்வதும், அத்தனை பெரிய ஈரோ காலையில் காப்பி போட்டு தன்னை எழுப்பவார் என்று காதல் பொங்க மனைவி சொல்லும்பொழுது, கோடிகள் வாங்கிக் குவிக்கும் ஈரோ, வீட்டில் நாலைந்து வேலைக்காரர்கள், சமையலுக்கு ஆள் இருக்க, அவரே காப்பி போட்டு எழுப்புவார் என்றால் படிப்பவள் கண்ணில் நீர் வருமா இல்லையா?

அதை விட, தன் மனைவி , சீதா தேவி, பத்தினி தெய்வம் கண்ணகிக்கு இணையானவள் என்று தியாக பட்டியலை, ஈரோ சொல்ல சொல்ல, நம் ஆளுக்கு வயிறு எரியும். சே என்று பத்திரிக்கையை தூக்கி எறிந்து தன் இயலாமையை தணித்துக் கொள்வார். ஆனால் இந்த "மேட் பார் ஈச் அதர்" ஜோடி, கல்யாணம் ஆன சில வருடங்களில் புட்டுக் கொண்டு, அதே பத்திரிக்கையில் இருவரும் ஒருவரை ஒருவர் நாற அடித்துக் கொள்வார்கள்.

அடுத்து, பிரபலங்கள் பேட்டி, அதிலும் இத்தகைய கணவன்/ மனைவி கிடைக்க தான் போன ஜென்மத்தில் என்ன பாக்கியம் செய்தோமா என்று எல்லா பிரபலங்களும் சொல்லி வைத்தார் போல ஓரே மாதிரி சொல்வார்கள். ஆனால் இவை எல்லாம் எந்தளவுக்கு உண்மை
என்றால், அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.

ஒரு விஷயம் யோசிச்சிப் பாருங்க, ஒரு குடும்பத்தில் கணவன் சொன்னதை எல்லாம் மறு பேச்சு கேட்காமல், மனைவி செய்வதும், மனைவி சொல்லே மந்திரம் என்று வீடு இருந்தால் அது நல்லாவா இருக்கும். மேலே சொன்ன வரிகளை நல்லா ஒரு முறைப் படிச்சிக்குங்க.
நான் சொல்ல வருவது இருவரும் ஒருவர் பேச்சை அப்படியே கேட்டு நடப்பது, ஒருவர் மட்டும் அல்ல :-)

அப்ப, அப்ப சின்ன சின்ன சண்டைகள்/ இலக்கிய தரமாய் சொல்ல வேண்டும் என்றால் ஊடல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை சுவைக்கும். சண்டையே போடாத தம்பதியர் என்று யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் ஏதோ பிரச்சனை. பெயருக்கு கணவன் மனைவியாய் ஊருக்காக வாழ்ந்துக் கொண்டு அவரவர் வழியில் போய் கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

எதற்கும் ஒரு முறை "தேவை ஒரு அவன் விகடன்" என்று எழுதி இருந்தேன்.

இதைப் படித்துவிடுங்கள்.


சரி, முதலில் பிரச்சனை எப்படி ஆரம்பிக்கிறது என்றுப் பார்ப்போமா?

22 பின்னூட்டங்கள்:

At Monday, 15 May, 2006, சொல்வது...

என்ன சொல்றீங்க...ஊடுதல் காமத்திற்கின்பம்னா? ம்ம்ம்...புரியுது புரியுது.....நாலு ஜிலேபிய நச்சு நச்சுன்னு தின்னுட்டு மிக்சர் சாப்புடுற மாதிரீங்கிறீங்க.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

எங்க போனாலும் இந்த சினிமாகாரங்க பாடு திண்டாட்டம்தான்... துபாய்ல கூட வம்புக்கு இழுக்குறாங்க...

இதெல்லாம் சம்சார சாகரத்தில் நீந்தி கடந்த்தவங்க பேசற டாபிக். நான் இன்னும் அந்த அளவுக்கு போகவில்லை என்பதால் வருகைப் பதிவு மட்டும் செய்கிறேன்.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

டாம் அன்ட் ஜெர்ரியை ஒப்பிட்டு சூப்பரான ஆரம்பம்க்கா.. இன்னோரு சிலேட்டு வாங்கிகிட்டு வந்து உட்கார்ந்துட்டேன் :).. அப்படியே தொடருங்க :)

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

போட்டிப்பதிவைத் துவ்ங்கி விட்டார்கள்!

கோயபல்ஸ் பிரச்சாரம் தொடங்கி விட்டது தோழர்களே.. உடனே பொங்கி எழுங்கள்.

ஆரம்பம் அமைதியாக இருக்கிறதே என்று அடங்கிவிடாதீர்கள், இது புயலுக்கு முன் அமைதி.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

migavum nalla pathivu. romba nalla ezudhareenga.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

ஜிரா, நடுவுல நாலு வரி மட்டும் படிக்க இது என்ன பின் நவீனத்துவ எழுத்தா? சாதாரண எழுத்தாளி ஐயா நானு! ஒழுங்க முதலில் இருந்து படிக்கவும் :-)

பாரதி, கல்யாணம் ஆகாதவர்களுக்கு புரிய வைக்கத்தான் இந்த பதிவு. இங்கு ஆண்/ கணவன் - பெண்/ மனைவி உறவு பற்றி மட்டுமே. இங்கு தோல்வி என்பதற்குப் பொருள் வெற்றிங்க :-)

பொன்ஸ், உதயகுமார்! உங்களுக்காகதானே இந்த பதிவு. சம்சார சாகரத்தில் தொபுகடீர் என்று குதித்து, மூச்சு திணறக்கூடாது இல்லையா, ஒழுங்காக வகுப்புக்கு வாங்க, உய்ய வழிக் கிடைக்கும்

முரளி, வாங்க வாங்க

பினாத்தலாரே, உங்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்படுள்ளது. வேற என்ன? நடுவில் குட்டையை குழப்ப முயற்சிக்க வேண்டாம் :-))))))))))))))

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

ஜனநாயகத்தில், கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் முயற்சிதானே என் நியாயமான குரலுக்குப் பதில் சொல்ல முடியாமல் அனுமதிஉ மறுக்கப்பட்டாதாக அடக்குமுறையை ஏவி விடுகிறீர்கள்?

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

இளவஞ்சிக்குப் போட்டியாக இந்தப் பதிவுகள் எழுதப்படுகின்றனவா ?
:-)))

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

லதா, அங்க நடக்கிறது சோக புலம்பல். ஆனா நான் இரு பக்கத்தையும் அலசி ஆராய்கிறேன் :-)

சுரேஷ், நோ கமெண்ட்ஸ் :-)))

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

முதலைத் தலைல மாட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி போஸ் கொடுக்கும் போதே நினைச்சேன்,
இது மாதிரி வில்லங்கமா ஏதாவது வரும்னு!
செய்யுங்க!
செய்யுங்க!
என்னதான் வருதுன்னு பாத்துருவோம்!

:-))

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

அக்கா,
எனக்கு ஒரு சந்தேகம்.. வகுப்பு ஆரம்பிச்சு ஒரு நாள் கூட இல்லை, அதுக்குள்ள என்ன சந்தேகம்னு கேக்கறீங்களா, அதான் அட்சய திருதியைல இருந்தே அங்கங்க பாடம் சொல்லிகிட்டு தானே இருக்கீங்க..
இந்த "கிளியப் பிடிச்சு பூனை கையில குடுத்துட்டீங்க" டைப்ல, இன்னிக்கி கூட எங்க வீட்ல சண்டை நடக்குதே, இது கூட ஊடலோட பகுதி தானா? இவ்வளவு ஹார்ஷா சொல்வதெல்லாம் கூட "சின்ன சின்ன சண்டைகள்"ல சேந்துருமா?
பல வருடங்களுக்கு அப்புறம் இப்படி எல்லாம் பேச/நினைக்கிறதுக்கு, இப்படியான தொல்லைகளில் மாட்டிக்காமயே இருந்திடலாம் இல்லை?!!

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

அண்ணன் ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடத்துவோம் அப்பாவி ஆண்களுக்கு எதிராய் எழுதினால் :-))))))))))))))

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

எஸ்.கே இதெல்லாம் ஜூஜூபி மேட்டரூ, இதுக்கும் முதலை வாயில் தலையை விடுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
முதலை வாய், பொதுவாய் இணையத்தில் எழுதுவதை சிம்பாலிக்காய் குறிப்பிடுகிறது.

மனசு, என்னத்தான் பெண்ணீயம் பேசுவதில்லை என்று இருந்தாலும், கணவன் பெயரை பின்னால் போடுவதில்லை :-)
இது அப்பா பெயர், கல்யாணத்துக்கு முன்னே அனைத்து ஆவணங்களிலும் இன்ஷியலை விரிவாக்கிப் போட்டதால்
ராமசந்திரன் என்ற அப்பா பெயரை அப்படியே, புதுமையாக இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டேன். நிறைய
பேர்கள் ஆண் என்று என்னை நினைத்துக் கொள்வார்கள் :-)

பொன்ஸ், என் சிஷ்யைக்கு சந்தேகமா? வரக்கூடாதே? இந்த கிளி, மற்றும் கிணறு பழமொழி எல்லாம் சாகும் வரை
வரும், அதை எல்லாம் கண்டுக்க கூடாது. ரெண்டு நாளு கழித்து மேட்டர் எப்படி போகுது என்று சொல்லு? அம்மா என்ன நிறத்தில் புடவை எடுத்தார் அல்லது அப்பா அம்மாவுக்கு எந்த நிறத்தில் புடவை எடுத்துக் கொடுத்தார் என்று
சொல்லு.

டிரீமர், வந்துக் கொண்டே இருக்கிறது

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

என்ன உஷா,

//கல்யாணம் ஆகாதவர்களுக்கு புரிய வைக்கத்தான் இந்த பதிவு. //
இப்படிச் சொல்லிட்டீங்க. அப்ப.... கல்யாணம் ஆனவங்க படிக்கக்கூடாதா?

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

ஆஹா........

ரெண்டு பேர் சேர்ந்தாலே புடவை தானா......

சரி சரி என்ன கலர்னு சொல்லுங்க.

(வீட்ல கேட்டாங்க)

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

//...சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை சுவைக்கும். சண்டையே போடாத தம்பதியர் என்று யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் ஏதோ பிரச்சனை.//

So, couples start your fight today!!!

பழனிமலை முருகா! நீ என்ன தினமும் வள்ளி+தெய்வயானையுடன் சண்டை போடுகிறாயா?

சிவனே(ன்னு) சும்மா இருந்தாலும் சக்தியுடன் சண்டை போடச் சொல்கிறார்களே!!

லஷ்மியும் நாராயணனும் சண்டைகள் போடுகின்றனரா!!?

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

ஜி.ராகவன்...//"நாலு ஜிலெபிய...தின்னுட்டு மிக்சர் சாப்புடுற மாதிரி...//
மாத்தி சொல்லிடீங்க....
கொஞ்சம் மிக்சரை தின்னுட்டு நாலு
ஜிலேபிய வெட்டுற
மாதிரி னு இருக்கனும்
சரிதானா ரமச்சந்திரன் உஷா?

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

துளசி என்ன இப்படி கேட்டுட்டீங்க? உங்க மாதிரி நண்பிகள் அவ்வப் பொழுது எடுத்துக் கொடுக்கணும், தவறுகளை சரி செய்யணும், சரியா????

மனசு, சீரீயசான மேட்டர் இது, ஊடால புகுந்து காமடி செய்யக்கூடாது :-)

ஜான்ஸ், புராணமே படிச்சதில்லையா?
1) முருகன் பேமிலி டிவோர்ஸ் செய்துவிட்டு, தன்னந்தனியே கோவணாண்டியாய் பழனியில் காட்சி தருகிறார். அவருக்கு மிஸஸ். பழனியாண்டி உண்டா என்று எனக்கு தெரியாது. நான் பழனிக்குப் போனதில்லை.
2) அப்பா வீட்டு பங்கனுக்கு, வூட்டுக்காரர் சிவன் அனுப்ப மாட்டேன் என்றாலும், பிடிவாதமாய் போய், தாட்சாயிணி
ஆடிய ருத்ர தாண்டவம் தெரியாதா?
3) திருப்பதி பெருமாள், டெய்லி ராத்திரி பொண்சாதியைத் தேடிக்கிட்டு, மலை இறங்கி, திருசானூர் வாராரே, தெரியாதா?
மேடம், தனியாத்தான் லிவ் பண்ணுராங்க.
4) புள்ளையார், எம்.ஜி. ஆர் மாதிரி , அம்மா போல பொண்ணை தேடிக்கீனு இருக்கார்.

ஆக, இது மாதிரி எல்லாம் இல்லாம, "அப்ப அப்ப" சின்ன சின்ன சண்டைகள் வேண்டும் என்றேன். கண்ணாடியை நன்கு துடைத்துவிட்டு, ஒழுங்காய் படிக்கவும்.

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

முருகன் பழனி போனது டிவோர்ஸ் பண்ணி இல்ல, அப்பா அம்மா கூட சண்டை போட்டு தான்.

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

மனசு, உங்களுக்கு தமிழ் தெரியாதா? அப்பா, அம்மா, கூட பிறந்தவங்களை விட்டு விட்டு தனியாப் போய்விட்டா,
பேமிலியை டிவோர்ஸ் பண்ணிட்டு போய்விட்டதாய் தமிழில் சொல்லுவோம் :-))))))))))

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

உஷா மேடம்,

First & formost karthik present !

// "டாம் அண்டு ஜெரி"

இதுல யார் டாம் = கணவன், ஜெரி= மனைவி .. அப்படின்னா கணவன் பாவம்.. கார்ட்டூன் கணக்குல.

// ஒருவர் பேச்சை அப்படியே கேட்டு நடப்பது, ஒருவர் மட்டும் அல்ல :-)

அப்படினா நம்ம கூட்டாளிக மாதிரி இருக்கணுமா (I mean friends) ?

// அப்ப, அப்ப சின்ன சின்ன சண்டைகள்/ இலக்கிய தரமாய் சொல்ல வேண்டும் என்றால் ஊடல் கட்டாயம் இருக்க வேண்டும்

இபடி சின்ன சண்டை பெருசா ஆகாதுன்னு என்ன நிச்சயம்.. ? .. இப்படி தினமும் சண்டை போட்டுதான் காதலை / அன்னோனியத்தை வளர்க்கணுமா ? . இதுக்கு தினமும் எவ்வளவு நேரம் ஒதுக்கனும் ? யாரு முதல்ல சண்டைய ஆரம்பிக்கணும் ? பிரச்சனை பெருசு ஆகுற மாதிரி இருந்தா யாரு முதல்ல இறங்கி வரணும் ? 2 பேருக்கும் அவங்க தரப்பு நியாங்கள் இருக்கும்.. அதை எதுக்கு வீட்டுகொடுக்கணும் ?

இந்த சண்டை எல்லாம் எத்தனை வருசம் ? வாழ்க்கை முழுவதுமா ? கல்யாணம் பண்ணுறதே சண்டை போடவா (அன்னோனியத்தை வளர்க்கவா)?

வாழ்க்கைல இப்படி எல்லாம் பேச/நினைக்கிறதுக்கு, இப்படியான தொல்லைகளில் மாட்டிக்காமயே இருந்திடலாம் இல்லை?!!

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

ம்.. பட்ட கஷ்டம் என்னாதான்னு அடுத்தவங்க சொல்ல கேட்டுப்பார்ப்போம்-:)

 

Post a Comment

<< இல்லம்