Tuesday, May 02, 2006

அன்புள்ள அந்நியன் அவர்களுக்கு,

அன்புள்ள அந்நியன் அவர்களுக்கு,
பூனைக்கு மணி கட்டுகிறேன் என்று வலைப்பதிவாளர்களுக்கு போலிகளால் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க முயலுகிறேன் புறப்பட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. ஆனால்
என்னில் எழும் சில சந்தேகங்களை பொதுவில் வைக்கிறேன்.

1- நீங்கள் செய்வது ஆக்கப்பூர்வமான வேலை. அதை ஏன் உங்கள் சொந்த பெயரில் செய்யவில்லை. எழுது பெயருக்கும், அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் பெயருக்கும் வேறுபாடுகள் உள்ளது இல்லையா?

2- போலிகளால் தொந்தரவு ஏற்படும் என்று பதில் அளித்தால், நாங்கள் எல்லாம் எப்பொழுதோ அனைத்தையும் ஏறக்கட்டியிருப்போம். ஆக, வேறு காரணம் என்ன?

3- அடையாளத்தை வெளியிடுவதில் என்ன தயக்கம்? உங்கள் சொந்த பெயரில் இத்தகைய தைரியமான வேலைகள் செய்ய முற்படும்பொழுது, உங்கள் மீது நம்பிக்கை அதிகமாகும் இல்லையா? பலரும் உங்களுடன் சேரலாம்.

4- அந்நியன் என்ற பெயர் எனக்கு சந்தேகமாய் இருக்கிறது. இதுவும் டபிள் ஆக்ஷனோ என்று எச்சரித்தவரின் எச்சரிக்கை இந்த பதிவை எழுத தூண்டியது. சந்தேகம் நியாயமானது தானா?

இவை உங்களின் நேர்மையை கேலி செய்யவோ, உங்கள் முயற்சியை தடை செய்ய முற்பட்டோ எழுதவில்லை. முகம் தெரியாமல் இணையத்தில் உலாவுகிறவர்கள் மீது ஏற்படும் சாதாரண பயத்தால் ஏற்பட்ட சந்தேகங்கள் இவை. விருப்பமிருந்தால், பொதுவில் பதிலளிக்கவும்.

முகமூடியை, ஐ மீன் :-)) மாஸ்க்கை கழட்டிவிட்டு வெளியே வந்தால், தைரியமாய் கைக் கொடுக்க பலரும் இருக்கிறார்கள்.

8 பின்னூட்டங்கள்:

At Tuesday, 02 May, 2006, Blogger துளசி கோபால் சொல்வது...

அவ்வண்ணமே கோரும்
துளசி கோபால்

 
At Tuesday, 02 May, 2006, Blogger டிபிஆர்.ஜோசப் சொல்வது...

என்னங்க நீங்க..

அவர் என்னதான் செய்யறார்னு பாக்கலாமே..

நமக்கு வேண்டியது இந்த அசிங்கம் பிடிச்ச தொல்லை ஒழியனும்.. அது நடந்தா நல்லதுதானே..

அவர் முகமூடியோட செஞ்சா நமக்கென்ன?

என்ன துளசி.. நீங்களும் சேர்ந்துக்கிட்டீங்க?

இதுவும் போலியோட வேலையாயிருக்கும்னு பயப்படுறீங்களா என்ன?

 
At Tuesday, 02 May, 2006, Blogger ஜெ. ராம்கி சொல்வது...

அவ்வண்ணமே கோரும்

 
At Tuesday, 02 May, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஜோசப் சார், கணிணி பற்றி சரியான புரிதல் இல்லாததால், பயமாய் இருக்கிறது. எப்படி நம்பி
சந்தேகம் கேட்பது என்று யோசனையாய் இருந்தது. பலருக்கும் இந்த சந்தேகம் இருப்பது தளசி,
ரஜினி ராம்கியின் பின்னுட்டம் உறுதிப் படுத்துகிறது.

அந்நியன், உங்கள் பதில் கிடைத்தது. சந்தேகம் தெளிவானது. நன்றி

 
At Wednesday, 03 May, 2006, Blogger arunagiri சொல்வது...

I agree with Mr. Joseph. What’s in a name? That which we call a rose, by any other name would smell as sweet. No?

 
At Wednesday, 03 May, 2006, Blogger பொன்ஸ்~~Poorna சொல்வது...

அக்கா, அந்நியன் பேர்லயே ஒரு போலி இருக்காரு இப்போ:

அவரு ஐடி:

http://www.blogger.com/profile/23702107

 
At Wednesday, 03 May, 2006, Blogger ஜெயக்குமார் சொல்வது...

யாரும் இதில் அவசரப்படவேண்டும். இதில் பல ஆபத்துகளும் இருக்கின்றன. பிண்ணூட்டம் இடுபவர்களின் Password-களை மிக எளிதாக எடுத்துவிட இது வழிவகுக்கும்.
இது இன்னும் தெளிவாக வேண்டிய விசயம். இதைப்பற்றி நான் தெளிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

 
At Saturday, 06 May, 2006, Blogger Geetha Sambasivam சொல்வது...

என்ன செய்தாலும் போலி இப்போது Doondu என்ற பெயரில் வந்து அந்நியனைத் திட்டிவிட்டுப் போகிறான் என் பதிவில். என்ன செய்வது இதற்கு?

 

Post a Comment

<< இல்லம்