Sunday, June 11, 2006

செய்திகள் வெறும் தகவல்கள்தானா?

இங்கு, துபாய்க்கு வந்தவுடன் கல்ப் நியூஸ் என்ற செய்திதாள் வாங்க ஆரம்பித்தோம். அதில் இரண்டொரு நாளுக்கு ஒருமுறை வரும் செய்தி, பாலஸ்தீனிய சண்டையில் குண்டடிப்பட்ட சிறு பிள்ளைகளின் மரணம்- படத்துடன். ஒவ்வொரு முறை, காலையில் பேப்பரை பிரித்ததும் கண்ணில் படும் இந்த படுகொலைகள், கதறும் பெற்றோர் என இன்று காலைவரை தொடர்கின்றன.

சென்ற வருடம், இலங்கையில் ஒரு நாள் சுற்றுபயணம் செய்தப் பொழுது, பிரமாண்ட புத்த கோவில்களுக்கு ஆவலுடன் சென்றுக் கொண்டிருந்தேன். அடுத்த முறை இன்னும் பார்க்க வேண்டிய கோவில்களை பட்டியல் இடும்பொழுது, என் கணவர் பதில் சொல்லவில்லை. அவர் முகத்தைப் பார்த்து என்னவென்று விசாரித்தப் பொழுது, இந்த பிட்சுகளால்தானே தமிழர்களுக்கு அத்தனை கொடுமையும்? இந்த புத்தவிகாரங்களை பார்க்க விருப்பப்படவில்லை என்றார் வெறுப்புடன்.

காஷ்மீரம்- சொல்லவே வேண்டாம், இதுவும் தினமும் பார்க்கப்படும் செய்தி ஆகிவிட்டது. மேற்சொன்ன அத்தனை இடங்களிலும் நடப்பது இன படுகொலைகள். இதற்கு முடிவு உண்டா என்று கேள்வி, இந்த செய்திகளைப் பார்க்கும்பொழுது எல்லாம் மனம் கேட்கும்.

அந்த காலத்தைப் போல, அரசர்கள் நேருக்கு நேர் நின்று போரிடுவதில்லை. துன்பத்துக்கு ஆளாவது அனைத்தும் அப்பாவிகளும், சிறுகுழந்தைகளும். இப்பொழுது இலங்கையில் நடக்கும் செய்திகள். மனிதனுக்கும் சாத்தானுக்கும் வேறுப்பாடு இல்லை என்று நிரூபிக்கிறது, விலங்கு என்று சொல்லமாட்டேன். எந்த விலங்கும் இப்படி செய்யாது.

இந்த பதிவை எழுத தூண்டியதற்குக் காரணமானவர்கள் இவர்களே.
http://selvaraj.weblogs.us/archives/204
http://karthikraamas.net/pathivu/?p=143
http://koluvithaluvi.blogspot.com/2006/06/blog-post.html

இங்கு போய் படித்துவிட்டு, என்ன பின்னுட்டம் இடுவது என்று தெரியாமல், தடுமாறிப்போனேன். சில இடங்களில், நம்மால் சொல்லப்ப்பட்ட வார்த்தைகள் நாமே திரும்ப படிக்கும்பொழுது அபத்தமாய் இருக்கும். எதுவே செய்ய முடியாத கைலாகாதத்தனத்தின் இன்னொரு வடிக்காலாய் இந்த பதிவு. இல்லை எதுவே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. செய்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய மதம் எந்த மத பெருமையையும் என் பிள்ளைகளின் மனதில் ஊன்றவில்லை. சிறுதுளி பெரு வெள்ளமாகலாம்.

11 பின்னூட்டங்கள்:

At Sunday, 11 June, 2006, சொல்வது...

மனதை வலிக்கும் இச்செய்திகளின் மேல் நமது கையாலாகாத்தனமும் சேர்ந்து நம் மனசாட்சியை வதைப்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. உலகின் உயிரினங்களிலேயே கொடூரமானவன் மனிதனே என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 
At Sunday, 11 June, 2006, சொல்வது...

உஷா, நீங்க சொல்றது உண்மைதான். கையாலகாதத்தனம் என்று சொல்வதை தவிற நம்மால் வேறு என்ன தான் செய்யமுடியும்?

சில நேரங்களில் நம்மை நினைத்து நமக்கே ஒரு வெறுப்பு வரும், அதே போன்ற எண்ணம் இப்பொழுதும் ஏற்பட்டது.

 
At Sunday, 11 June, 2006, சொல்வது...

அந்தக் குழந்தைகள் தூக்கில் தொங்குவதும், அந்த வலைப்பதிவர் 'அவர்கள் திட்டமிட்டு காண்டம் எடுத்து வந்திருக்கிறார்கள்' என்று கொடுத்த செய்தியும் அந்தப் பெண்ணிண் படமும் என் தூக்கத்தில் கூட வந்து போகின்ற அதி பயங்கரங்கள்.

ஒன்றுமறியா அப்பாவிகளைக் கொன்று குவிப்பது எந்த இயக்குமாக அல்லது நாடாக இருந்தாலும் அவைகள் வன்மையாக கண்டித்து வைத்து அடக்கி வைக்கப் பட வேண்டியவைகள்தாம்.

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

மணியன், மஞ்சூர் ராஜா, சுல்தான்! மன வேதனைகளை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

உஷாக்கா உங்க பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறென்.கடவுளே அந்த தொடுப்பில் இருந்த படங்களை பார்த்தவுடன் மனசு அப்படியே கனமாகிப்போனது...

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

உஷா,
நல்ல பதிவு. நீதியும் தர்மமும் வென்றே தீரும். ஈழத்தமிழரின் இன்னல்கள் மறையும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

நன்றி.

அன்புடன்
வெற்றி

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

யோகன், வெற்றி! ( நீங்களும் ஈழதமிழர்தானே), எல்லாம் மாறும், நாளை நல்லவிதமாய் விடியும் என்று நம்புங்கள். இழந்தவைகளுக்கு என்ன
ஆறுதல் வார்த்தைகள் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். ஆயுதங்களை விட்டொழித்துவிட்டு, சாத்வீகமான
முறையில் பிரச்சனைகள் தீரும் என்பதை இருபாலோரும் உணர வேண்டும்.அந்நாளை விரைவில் வரும் என்று எல்லோரும் காத்திருப்போம்.

ராம், அந்த படங்களை ஒரு நொடிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை.

 
At Monday, 19 June, 2006, சொல்வது...

// விலங்கு என்று சொல்லமாட்டேன். எந்த விலங்கும் இப்படி செய்யாது //

உங்கள் இந்தக் கருத்தை மிக வருத்ததுடன் என் பக்கத்தில் இட்டுள்ளேன்.
http://jeyapal.blogspot.com/2006/06/blog-post_115012770353572483.html

 
At Monday, 19 June, 2006, சொல்வது...

ஜெயபால், பார்த்தேன். வார்த்தைகளால் வெளிப்படும் ஆறுதல்கள் மட்டுமே எங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என்பதே நிதர்சனம்.

 
At Monday, 19 June, 2006, சொல்வது...

உஷா, இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து மனசு சரியில்லை. பதிவு போடலாம் என்றால்...என்ன போடுவது...வயிறு எரிகிறது என்றா? அதனால் நல்லது நடக்குமா? விடிவு கிடைக்குமா? இதையெல்லாம் நினைத்து இறைவனை வேண்டுவதைத் தவிர எனக்கு ஒருவழியும் தெரியவில்லை.

பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணம் எது தெரியுமா? ஏதோ ஒரு விதத்தில் நாம் உயர்ந்தவர் என நினைப்பது. இனத்தால், மதத்தால், மொழியால், நிறத்தால், படிப்பால், செல்வத்தால், அதிகாரத்தால், இன்னும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இந்த தாம் உயர்ந்தவர் என்ற எண்ணத்தின் குழந்தைதான் மற்றவர் தாழ்ந்தவர் என நினைக்கும் சாத்தானியம். ஆக...தன்னை விடத் தாழ்ந்தவன் இருக்கக் கூடாது. ஒன்று தாழ்ந்தவன் நம்மோடு ஒத்துப் போய் விட வேண்டும். இல்லையே...உலகத்தை விட்டே போய் விட வேண்டும். இதற்கு ஆயுதமாக எதெல்லாம் கிடைக்கிறதோ அதெல்லாம் பயன்படுத்தப்படும் என்பதே வரலாற்றில் கண்கூடு. இந்நிலை மாற வேண்டும். எதற்கெடுத்தாலும் சண்டை போடுகின்ற நாம் அரவணைத்துச் செல்லும் பக்குவத்திற்கு வர வேண்டும். ஆனால் இதெல்லாம் நடக்குமா என நினைத்தால் வருத்தம்தான் மிஞ்சுகிறது.

 
At Monday, 19 June, 2006, சொல்வது...

மற்றொன்று சொல்ல மறந்து விட்டேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் இட்ட பதிவு "2006லாவது இலங்கைக்குப் போவோம்". அதற்கு இது காலம். தமிழக அரசியல்வியாதிகளே..உங்கள் பிரச்சனைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு கொஞ்சம் கீழே குனிந்து பாருங்கள்...பிறகு உங்கள் ஆதரவில் நடக்கும் அரசாங்கத்தை நோக்கி மேலே பாருங்கள்.

 

Post a Comment

<< இல்லம்