Saturday, June 10, 2006

நமீதா vs. விவேக்

திருட்டு பயலே படத்தை எல்லாரும் அலசி ஆராய்ந்து காயப்போட்டு விட்டதால், படத்தைப் பற்றி சொல்வது என்றால் விஜய், அஜித் கொடுமைகளுக்கு இது ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை. அங்கங்கு லாஜிக் இல்லாவிட்டாலும், படம் பரவாயில்லை
என்றே சொல்லலாம்.

பிரபல நகைச்சுவை நடிகர்கள் படத்தின் தங்கள் பகுதியை அவர்கள் எழுத ஆளை வைத்துக் கொள்வதும், தனக்கு என்று சில துணை நடிகர்களையே வழக்கமாய் கூட நடிக்க வைப்பதும் எல்லாரும் அறிந்த விஷயம். திருட்டு பயலே படத்தில் விவேக் நமீதாவை வைத்து காமடி என்ற பெயரில் அசிங்கப்படுத்தியுள்ளார். அதை இதுவரை யாராவது, எந்த ஊடகத்திலாவது சுட்டிக்காட்டினார்களா என்று தெரியவில்லை.

இந்த காமடி டிராக், படத்தில் ஒட்டவே இல்லை. சம்மந்தமே இல்லாமல் விவேக், நமீதா முன்னேற்ற கழகம் (NDF) என்று தெருவில், சில வெள்ளைக்காரர்களுடன் போராட்டம் நடத்துகிறார். நமீதாவின் படத்துடன், கையில் பல தட்டிகளுடன் ஆட்கள். ஒரு தட்டியில் உயிர் நமீதாவிற்கு, உடல் மண்ணுக்கு என்று எழுதப்படாமல், மாற்றி தவறாய் எழுதப்பட்டதை, "என்னடா இது தப்பா மாத்தி எழுதிருக்கே?" என்று சொல்லிவிட்டு, அடுத்து மிக ஆபாசமாய் வசனம் சொல்கிறார் விவேக்.

ஆண்டாண்டு காலமாய் நகைச்சுவை நடிகர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை தகர்த்து, உடை, அலங்காரம் என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி படத்தில் ஹீரோவிற்கு இணையாய் வலம் வரும் விவேக், படித்தவர், நல்ல கருத்துக்களை படங்களின் மூலம் சொல்பவர் என்றெல்லாம் பெயர் எடுத்த விவேக், சக தொழிலாளியைக் கேவலப்படுத்தியது மிக தவறான செய்கை.

15 பின்னூட்டங்கள்:

At Saturday, 10 June, 2006, சொல்வது...

எங்களுக்கு பார்க்க முடியாத படமெல்லாம் சீக்கிரமே பார்த்துடறீங்கப்பா!
விவேக் ஸ்டாண்டர்ட் வர வர ரொம்பத்தான் எறங்குது. சர்வைவல் பைட்தான்னு நினைக்கிறேன்

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் என்பதே இல்லாமல் போய்விட்டது. :)) நம்மில் பல பேர் நமிதாவை நினைத்துக் கொண்டு இரவில் தூங்குவதில்லையா? :))நாமெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை விவேக் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். என்ன தவறு? என்ன செய்யது என் போன்ற இளைஞர்கள் நமீதா பைத்தியமாக இருக்கிறோமே.

வாங்க மக்களே, ஆரம்பித்துக் கொடுத்து விட்டேன். அடித்து ஆட வேண்டியது உங்கள் சாமர்த்தியம் :)))

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

I have been a regular reader of your blogs - well thought out and well presented; most of the time - my compliments to you!

I guess I see this Vivek Vs Namitha issue in a different perspective - something hilarious; and just that. I am not sure I agree that Namitha was belittled - but exposing the craze that majority of average tamil movie goers have over this actress. Sure, there is exaggeration in the way of presentation, but I simply see it as a comic act for one to laugh and move on. Can one make inferences from this act? Sure, it depends on individual's perspective again.

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

படமே ஆபாசம், பச்சை, இதிலே காமடி டிராக்கும் அப்படி தானே இருக்கும், நான் ஏற்கனவே போட்ட விமரிசனம் படிச்சீங்களா?

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

ஆகா.. நமீதாவுக்கு விவாத மேடையா.. எங்க சங்கத்து சார்பா பார்த்திபனைத் தான் அனுப்பணும் :)

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

தாணு, ஓரிஜினல் வீடியோ காசெட்டுகள் கிடைத்துவிடும். விவேக்கு சர்வைவல் பிரச்சனையா? தலைகனமா?

ராபின்ஹூட், உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி :-))))))))))

வெளிகண்டரே, இப்பத்தான் படிச்சேன். இதில் யோகராஜா விஷயம் என்ன? அதுல ஏதோ விஷயம் இருக்கு போல இருக்கு. சிநேகிதி சொன்னதுப் போல, ஐஞ்சாம் வகுப்பில் ரெகார்ட் டான்ஸ் பார்ப்பதும், செய்வது எல்லாம் கேப்மாரிதனம், ஆனா
மனசு பார்த்து வருவது காதல் என்று உபதேசம். பணக்காரன் செய்யும் இரண்டு கொலைகள், நம்ம ஊரில் சட்டம், ஒழுங்கு இவ்வளவு மோசமா என்று நினைக்க தோணுகிறது.

பொன்ஸ், நோ விளையாட்டு, நான் சீரியசாய் எழுதியிருக்கேனாக்கும்:-)

ரசியா, நடிக, நடிகயரின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசும் எண்ணம் எனக்கில்லை. நான் அதிகப்படங்களும் பார்ப்பதில்லை.
நடிப்புக்கு முக்கிய மூலதனம் உடல். உடம்பை காட்டும் சரத்குமார்களோ, நமிதாக்களோ இர்ண்டும் ஒன்றுதான். விவேக், மும்தாஸ்ஜை கிண்டல் அடித்தது எந்த படம்? இது காமடி என்ற பெயரில் செய்யப்படும் தரக்குறைவான செய்கைக்கு
என் எதிர்ப்பை சொல்லியிருக்கிறேன்.

ராம்ரவி சங்கர், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன் திரைப்படத் துறையினர் மட்டுமல்ல, ஆனந்தவிகடனில் ஒவ்வொரு வாரமும் நமீதா படங்கள். ஆனால் படத்தில் காமெடி என்ற பெயரில் ஆபாச வசனம் பேசுவது நடிகைகள் கவனத்தில் போகிறதா? ரசியா சொல்வதைப் பார்த்தால், இதற்கு முன்பு மும்தாஸ்ஜை கேவலப்படுத்தியிருக்கிறார்.
இதை சாதாரண காமடி என்று என்னால் நினைக்க முடியவில்லை.

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

மும்தாஜைக் கேவலப் படுத்திய அந்தப் படத்தில் அவங்களே இருந்தாங்க.. குஷி படம் பேரு.. சென்சார் பண்ணி வந்ததுல வசனம் எல்லாம் கட் பண்ணிட்டாங்க.. மக்கள் ஊகத்துக்கே விட்டாச்சு.. இன்னும் மோசம்!!

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

நகைச்சுவைகளின் தரம் தாழ்ந்துவிட்டது என்றோ, சமீப கால நகைச்சுவைகள் என்றோ தலைப்பு வைக்காமல் "நமீதா vs விவேக்" என்று ஏன் வைத்தீர்கள்?? -:))))

பொன்ஸ், ரசியா சொன்ன படம் குஷி இல்ல... செல்லமே னு நினைக்கிறேன்.

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

பொன்ஸ், டிடி, மனசு! ஏறக்குறைய எல்லாரும் விவேக் கருத்து கந்தசாமியாய்
காமிராவைப் பார்த்து விடும் சவுண்டுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லை என்று
சொல்கிறீர்கள்.
ஆணாதிக்க மனபான்மையா அல்லது இந்த பெண்களை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணமா? சிலுக்கைக்கூட கவுண்டமணி பேசியிருந்தாலும், அதைக் கேரக்டரை சொல்வது போல இருக்கும். இந்த படத்தில் அப்படி இல்லையே.

மனசு, சமீபக்கால நகைச்சுவை என்று சொன்னால், பல படங்களை சொல்ல வேண்டும். நான் வீடியோ
கேசட்டானாலும், தேர்தெடுத்தே பார்ப்பேன். நமீதாவுக்கும், விவேக்குக்கும் ஏதாவது தனிப்பட்ட
மோதலாய் இருக்குமோ என்று இந்த தலைப்பை வைத்தேன்.

 
At Saturday, 10 June, 2006, சொல்வது...

நடிப்பு விடி வெள்ளி நமிதா UAE ரசிகர் மன்றம் எப்ப ஆரம்பிச்சிங்க?? (பயங்கர சப்போர்ட் ஆ இருக்கு, விவேக் நிறைய படத்தில் அப்துல் கலாம், ஜோதிகா வ எல்லாம் கிண்டல் பண்ணியிருப்பார்.... இதெல்லாம் பத்திரிக்கைல வர கார்டூன்ஸ் போல, just for fun)

உடனே ஆணாதிக்கம் னு சொல்லிராதிங்க -:)))

நம்மளையும் மன்றதில உறுப்பினரா சேர்த்துக்கிறீங்ளா... ( யேய் யாருப்பா அது பின்னால தள்றது, க்யு ல வாங்கப்பா...)

 
At Sunday, 11 June, 2006, சொல்வது...

//உடனே ஆணாதிக்கம் னு சொல்லிராதிங்க //

ஆகா இப்பத்தான் விவகாரம் சூடு பிடிச்சிருக்கு.

//உடல் நமீதாவிற்கு, உயிர் மண்ணிற்கு//

இதில் என்ன ஆபாசம் எங்கே இருக்கிறது. உங்களுக்கு கவர்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. :)) உங்களின் பெண் வர்க்கம் தானே பணத்துக்காக ஆபாசமாக நடிக்கிறது.(சும்மா, சீன்டி விட்டுப் பாக்குறேன்) இதெல்லாம் ஆணாதிக்கத்தின் விளைவுகள் என்று சொல்லாதீர்கள். ஆண் இயக்குநர்கள் நடிக்கச் சொன்னால் அவர்களுக்கு எங்கே போனது புத்தி. :))

அன்றைக்கு கவர்சிக்கென்று தனி நடிகைகள் இருந்தார்கள். இன்று அதனை நாயகிகள் செய்கிறார்கள். நீங்கள் அரபு நாட்டில் இருப்பதனால் இன்றைய சென்னை, தமிழ்நாடு அவ்வளவாகத் தெரியவில்லை போலும்.

இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்த சென்னை இப்போது இல்லை. ஸ்பென்சர் பிளாசாவில் இன்று நடக்கும் கூத்துகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிகக் குறைவாக இருந்தது. என்ன செய்வது தினமும் அலுவகத்திற்கு அங்கு தான் செல்ல வேண்டிய்ள்ளது. திங்கள் கிழமை லீவு விட்டு விட்டு சனிக்கிழமை அலுவலகம் வருவதற்கு என் மேனேஜரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன்.

 
At Sunday, 11 June, 2006, சொல்வது...

யோகராசா கதை தனி ஆச்சே!

அது சரி பெண்ணியத்தை விட்டுட்டு இந்த நமீதா, விவேக் ட்ராக்ல போய்ட்டீங்கண்ணு பார்த்தேன், திருப்பி புடிச்சீட்டிங்க போல-:)

 
At Sunday, 11 June, 2006, சொல்வது...

நமீதாவைப் பற்றி இப்படி ஒருத்தன் நாக்கு மேல பல்லுப் போட்டு பேசிருக்கான்; அவன இன்னுமா சும்மா வுட்டு வெச்சுருக்காங்க; அப்டிப் பேசுன அவனோட நாக்க இழுத்து வெச்சு அறுக்கனும்!

நமீதா! நமீதா!! நமீதா!!!

 
At Sunday, 11 June, 2006, சொல்வது...

படத்தில் விவேக் செய்திருப்பது ஒன்றும் தவறாக இல்லைங்கிறது என்னோட வாதம். படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே இதை சொல்லுகிறார். அதே சமயம் அவர் சொன்ன நல்ல கருத்துக்களை விட்டுடீங்களே உஷா. குப்பையை பத்தியும், உருவ பொம்மையை எரிப்பது பத்தியும் கூட சொல்லியிருக்கார். விவேக் எவ்வளவோ நல்லது சொல்லியிருக்கார். நமீதா ஒன்னாவது சொல்லியிருக்காங்களா? இதுல நான் ரசியா கட்சிங்க.

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

மனசு, ஞான்ஸ், இந்தளவு நமிதா விசிறிகள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலைங்க :-) (ஞான்ஸ்க்கும்
மட்டும்- நர, நற -பல்லைக்கடிக்கிறேன்)

வெளிகண்டரே! ஆண் ஈயமாவது, பெண் ஈயமாவது. அந்தாளு செய்யறது சரியான்னு கேட்டேன் அவ்வளவு தான். யோகராசா கதையைப் பற்றி தனிமடல் ப்ளீஸ்!

ராபின் ஹூட், உடல் அழகைக் காட்டுவது- நடிப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கு வித்தியாசம் இல்லை என்று சொல்லிவிட்டேன். எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து சட்டைக்கு வக்கில்லாத பாவம் சல்மான்கான் வரை பேசியாச்சு :-)

இளா,

//விவேக், படித்தவர், நல்ல கருத்துக்களை படங்களின் மூலம் சொல்பவர் என்றெல்லாம் பெயர் எடுத்த விவேக், சக தொழிலாளியைக் கேவலப்படுத்தியது மிக தவறான செய்கை.//

என்று தெளிவாய் எழுதியிருக்கிறேனே பார்க்கவில்லையா?

 

Post a Comment

<< இல்லம்