குதிரே... குதிரே
எவ்வளவு நாட்கள் முதலைப் படத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்? இதோ குதிரை படம். இது கையால் நெய்யப்பட்டு ஆப்கானிஸ்தானில் தயாராகும் கம்பளம் வகையறா, ஆனால் சுவரில் மாட்டக்கூடியது. இதைப் பார்த்தவுடன், மிக ஆசைப்பட்டு உடனே வாங்கியது. என் கணவரும் உடனே வாங்க ஒத்துக் கொண்டது , உலகமகா அதிசயம்!
நீளம் நாலடி, அகலம் ஐந்தடி இருக்கு. கம்பளி நூலால், கையால் இத்தனை தத்ரூபமாய் நெய்திருக்கிறார்கள். குதிரைகளின் காலடியில் சிதறும் தண்ணீர் துளிகள், தூரத்து காட்டு மரங்கள், சிலிர்க்கும் குதிரைகளின் பிடரி முடி, அதன் கண்கள் என்றுப் பார்க்க, பார்க்க
அழகுதான். இந்த அழகை நான் ரசிக்க மூலக்காரணம் ஆப்கானிஸ்தானத்தின் சிறு பிள்ளைகளின் உழைப்பு. மெல்லிய பிஞ்சு விரல்களால்தான் நுண்ணிய முடிச்சுக்கள் போட முடியுமாம்.
இன்னும் ஒரு பீஸ், இது சிறியது. அகலம் நாலடி, நீளம் ஒன்றரை அடி. இது அரபு பாரம்பரியத்தைக் காட்டுகிறது. சின்ன சின்ன விஷயங்கள், எவ்வளவு நுணுக்கமாய் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்.
பிடித்த விலங்கு என்னவென்று கேட்டால், குரங்கு என்று சொல்லும் குரங்கு புத்தி. ஆனால் கவர்ந்த விலங்கு என்றால் குதிரைதான். மோகம் என்றுக்கூட சொல்லலாம். சிறுவயதில் டி.டியில் பார்த்த பழைய எம்.ஜி.ஆர் படங்களோ, வாசித்த பல சரித்திர நாயகர்கள் குதிரையில்
டக், டக், டக் என்று பயணித்து மனதை கவர்ந்தார்களோ தெரியவில்லை.
கல்கியின் குதிரையுடன் பேசும் வந்தியதேவன், வாதாபி நோக்கி பயணித்த பரஞ்சோதி, எம்.கே. முன்ஷியின் ஜெய் சோமநாத்தில் பத்மடி பெண்ணே என்று தன் குதிரையைக் கொஞ்சும் ராஜபுத்திரன், சாண்டில்யனின் குதிரை வியாபாரம் செய்ய வரும் யவனர்கள் ... இன்னும்
எவ்வலவு சொல்ல?
கடற்கரையில் மணலில் ஓடும் குதிரைகள் போஸ்டர், நல்ல பித்தளையில் செய்த காலைதூக்கிக் கொண்டு நிற்கும் குதிரை என்று தேடி வாங்காமல், வீட்டில் குதிரைகள் அங்கங்கு கண்ணில் படும். சேணம் போடாத குதிரைகளே அழகு.
ஒரு நாள் துபாய் வீதியில் அரபு குதிரை ஒன்றைப் பார்த்ததும், மோகம் முற்றிப் போனது. தெருவில் நடந்துச் சென்ற கண்கள் மட்டுமல்லாது சாலையில் போகும் கார்கள் கூட நின்று திரும்பி பார்க்கும்படி அதன் கம்மீரம் இருந்தது.
பிறகு அடுத்து வந்தது Horse whisperer நாவல்., Nicholas Evans எழுதியது. கதையின் களம் முழுக்க முழுக்க குதிரை, குதிரைதான். இந்த நாவலை முதலில் சிறந்த காதல்கதை என்றே நினைத்திருந்தேன். பிறகு அந்நினைப்பு அம்மா, மகளின் உறவின் மேன்மை சொல்வதுப்
போலவும் மாறிப் போனது. இக்கதையை படமாய் எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி தெரிந்தாலும், பார்க்க பயமாய் இருந்தது. எப்படி மாற்றி இருப்பார்களோ என்று?
சிலவாரங்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில் இரவு, சானல்களை மாற்றிக் கொண்டு இருக்கும்பொழுது இந்த படம்! தவிர்க்க இயலாமல் பார்த்தேன். கதையில் இருந்த ஜீவன் படத்தில் இல்லை. உப்பு சப்பு இல்லாமல் இருந்தது. படத்தின் முடிவில் நாயகியின் இரண்டாவது
காதலையும் பண்பாடு (!) கருதி மாற்றிவிட்டார்கள். படத்தில் குதிரை அருமையாய் நடித்துள்ளது. நாயகன் வேடத்தில் ஒரு அரை கிழவனைப் போட்டு, கதையின் அழகைக் கெடுத்துவிட்டார்கள். மகள் மற்றும் தாயின் நடிப்பும் பரவாயில்லை.
குதிரைக்கதைகள் போதுமா?
22 பின்னூட்டங்கள்:
குதிரை கம்பீரமானதுதான்.
அக்கா,
உங்க குதிரை புராணம் நல்லா இருக்குது.
இன்று தான் நானும் குதிரையில் பயணிக்கும் படம் போடலாமா என்று யோசித்தேன், அப்புறமா மாத்திட்டேன்.
profile ல் இருக்கும் குதிரைப்படம், ஏன் பதிவின் தமிழ்மண முகப்பில் வரவில்லை? யாராவது சொல்லுங்களேன்.
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் படித்திருக்கிரீர்களா ? அது குதிரை கதை கிடையாது.. ஆனால் நல்ல தலைப்பு :-)
//"குதிரைக்கதைகள் போதுமா?"//
இன்னும் இருந்தால் எடுத்துவிடுங்கள்.
அன்புடன்,
(துபாய்)ராஜா.
http://rajasabai.blogspot.com/
இங்கேயும் இதே குதிரை கார்ப்பெட் கிடைக்கிறது. வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஏனோ தள்ளிப்போனது. இனி வாங்கிட வேண்டியது தான்.
//profile ல் இருக்கும் குதிரைப்படம், ஏன் பதிவின் தமிழ்மண முகப்பில் வரவில்லை? யாராவது சொல்லுங்களேன்.//
சவுதியில் இந்த வலைத்தளம் (நீங்கள் குதிரைப்படத்தினை சேமித்து வைத்திருக்கும் தளம்) தடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அமீரகத்திலும் அப்படி இருக்கலாம். அதனால் தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு.
ப்ரபேலில் படம் போட்டு 24மணி நேரம் ஆனாதான்... அது.. படத்தை ஏத்துக்கிடும்.
அதனால் தான் தமிழ்மணத்தில் வரலை...
24மணிநேரம் கழித்து அடுத்த பதிவு என்றால் நிச்சயம் வரும்
கே.வி.ஆர் என்ற ராஜா, இங்க பிரச்சனையில்லை. நான் முதலில் இருந்தே அந்த வலைத்தளத்தை உபயோகப் படுத்துகிறேன். அப்புறம் அந்த கார்பெட், நல்ல பேரம் பேசுங்க. நான் வாங்கின விலையில் பாதிவிலைக்கு இங்கு இன்னொருவர் வாங்கினார்.
துளசி, யானையை விடவா :-)
பரஞ்சோதி, நல்லவேளையாய் முந்திக்கிட்டேன்.
யாத்ரீகன், கதை கல்கில வந்துச்சு இல்லையா? ஆனா அதுல கூட மா.செ குதிரை படங்கள் போட்டார் இல்லையா?
பகல் கனவாளரே, சுஜாதாவின் பிறந்தநாளுக்குப் போடணும்னு பார்த்தேன். முடியலை. அடுத்த பதிவு ஜீனோதான்.
துபாய் ராஜா, அதுக்கு என்ன குதிரை, எம்.ஹெச். உசேன் என்றுப் போய்கொண்டே இருக்கலாம்:-) ராஜா எத்தனைராஜாக்கள்? ஜெயம்ரவி ஒரு படத்துல சொன்ன ராஜா பெயர் ஜோக் பார்த்தீங்களா?
ஆழியூரான் தகவலுக்கு நன்றி
உஷா
குதிரை ஊர்வலம் இருக்கட்டும். மே மாதம் ஊர் பக்கம் வரலையா? போன் வரவில்லையே?
உஷாஜி,
//இந்த அழகை நான் ரசிக்க மூலக்காரணம் ஆப்கானிஸ்தானத்தின் சிறு பிள்ளைகளின் உழைப்பு. மெல்லிய பிஞ்சு விரல்களால்தான் நுண்ணிய முடிச்சுக்கள் போட முடியுமாம்.//
'குழந்தைத் தொழிலாளிகளின் பிஞ்சுவிரல் பட்டபொருளை வாங்கி குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கி உற்சாகப்படுத்தும் உங்கள் 'பூர்ஷ்வா' மனப்போக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
ஏதோ நம்மால முடிஞ்சது :-)
சாத்தான்குளத்தான்
யாத்ரீகன் சொன்ன மாதிரி, பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் ல நிறைய குதிரை கவிதை நல்லா இருக்கும்.
உங்களின் முன் "வாகனம்" முதலை பற்றியும் கரையோரமுதலைகள் ல எழுதி இருப்பார்.
அம்மனுக்கு அடுத்து எந்த வாகனம்???
இனிய உஷாஜி,
குழந்தைத் தொழிலாளர்கள் நெய்த ரத்தினக் கம்பளம் என்றால் துபாய்க்குள் இறக்குமதி செய்ய இயலாது, தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஷேக்கிற்காக, கண்டாலாவில் (அதே அதே ஆமீர்கான் ரானி முகர்ஜி ஆத்தி க்யா கண்டாலா - அதே) பிரத்தியோகமாக நெய்த ரத்தினக் கம்பளத் தயாரிப்பில் குழந்தைத் தொழிலாளர் வேலை செய்தனர் என்று யாரோ தகவல் தர, சுங்கத்தில் அப்படி அல்ல - அந்த நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்று நிரூபித்து வெளியே கொணர்வதற்குள் நண்பர்களுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிட்டது.
அப்புறம் அது எம்.எஃப். உசேன் :)
அன்புடன்
ஆசாத்
தாணு, மெயில் அடிக்கிறேன். தேர்தலால் தள்ளிப் போன பயணம், இப்பொழுது ஆகஸ்டுக்கு மாறிவிட்டது.
ஆசிப்ஜி, உங்க பேரைப் பார்க்காமல் படித்துவிட்டு ஆடிப்போனேன். இதேடதா வில்லங்கம் என்று! கொடுமை கொடுமைன்னு
கோவிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை, டிங்கு டிங்குன்னு ஆடிக்கிட்டு இருந்ததாம்.
மனசு, இரும்பு குதிரை தொடரில் கோட்டு சித்திரமாய் குதிரைபடம் வரவில்லை??? எனக்கு சரியாய் நினைவில்லை. பாம்பு, குரங்கு, புலி&புலிக்குட்டிகளுடன் நிறைய படங்கள் கை வசம் இருக்கு :-)
யோகன், வெளிச்சம் இருந்தாலும் சிறுவ சிறுமியரின் உழைப்பையும், அவர்களின் இளமையையும் சேர்த்தே அந்த கம்பளங்கள் உறிஞ்சியிருக்கும். அந்தகாலத்தில் அதை பாரசீக கம்பளம் என்பார்கள்.
இங்கும் சந்தைகளில் பிரமாண்டமான கம்பளங்கள் பார்த்திருக்கிறேன். அந்த நுட்பமான டிசைன்கள் வெகு அழகு. அரபியர் கூட்டம், ஒட்டகங்கள் படம் போட்டு இருக்கிறேனே அதைப் பார்த்தீர்களா?
ஆசாத்ஜி,
வெள்ளிக்கிழமை சந்தை என்று ஒரு இடம் இருக்கிறது. முழுக்க கம்பள வியாபாரம்தான். அவர்கள், கம்பளங்கள் ஆப்கானிஸ்தானில்
இருந்து வருவதாய் சொன்னார். அங்குள்ள நிலைமை அனைவரும் அறிந்ததே!
ரொம்ப நாள் ஆயிற்று, இப்படி பெயரை மாற்றிப்போட்டு, இன்று இன்ஷியல் :-)
எப்படியோ, போட்டோ மாத்தினதுக்கு கதை சொல்லிட்டீங்க:)
குதிரையெல்லாம் எனக்குப் பிடிக்காதுக்கா.. ஒன்லி யானை :)
That "arai Kizhavan" is Robert Redford and one of the finest hollywood actor.
"பட்சி எனும் உக்ர துரகமும்" - அருணகிரி...அவருக்கும் குதிரை பிடிச்சிருக்கு. அதான் மயிலைக் குதிரைன்னு சொல்றாரு.
Black Beauty படிங்க. அதுவும் குதிரை பத்துன கதைதான்.
பொன்ஸ், யானை சரியான சோம்பேறி , குதிரை என்ன சுறுசுறுப்பு :-)
அருப்புகோட்டையாரே! எனக்கு அவர் அந்த வேடத்திற்கு பொறுத்தமில்லை என்று தோன்றியது. இது வழக்கமாய் கதையை சிலாக்கிப்பவர்களின் மனநிலையே! அவரவர் மனதில் கற்பனையாய் வரைந்துக் கொண்ட உருவங்களுக்கு நிஜ மனிதர்கள் பொறுந்துவதில்லை.
ராகவா!, எழுதியது யாரூ?
Usha
My comments do not show up in your blog. Please take a look.
முதலை போய் குதிரை வந்தது - அதுவும் இரட்டையாக முகப்புப் படத்தில் நன்றாக உள்ளது. குதிரையில் வேகம் ஓட்டத்தில் அதிவும் இரட்டை வண்ணத்தில் அருமை.
Post a Comment
<< இல்லம்