Friday, October 06, 2006

மரண தண்டனை தேவையா?

மரணதண்டனை என்ற தண்டனை கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வியை முன் வைத்தே மட்டுமே இந்த பதிவு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய நாடு ஒன்றில் இரு சிறுமிகளை கடத்தி வீட்டு நிலவறையில் அடைத்து வைத்து, தன் வக்கிரங்களுக்கு பலிகடா ஆக்கி பின்பு அக்குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது ( எங்கு, எப்பொழுது
என்ற விவரம் நினைவில்லை)

பல்வேறு சாட்சிகள், விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளால் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டது. மனநிலைமை குன்றிய, அந்த சைக்கோவிற்கு சரியான தீர்ப்பு மரண தண்டனைதான். ஆயுள் தண்டனை கொடுத்தால், ஆயுள் முழுக்க தன் குற்றத்தை நினைத்து வருந்துவான் அதனால் குற்றமிழைத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை சரி என்பார்கள் சிலர்.

ஆனால் மனிதனுக்கு தன் உயிர் பறிக்கப்படும், அதாவது தன் மரண தேதியை முன் கூட்டியே அறியப்படுவதை விட பெரிய தண்டனை உலகில் இல்லை. ஆயுள் தண்டனை என்றால் விடுதலை ஒரு நாள் நிச்சயம். நன்னடத்தை,, தலைவர்கள் நினைவாய் தண்டனை நாட்கள் குறைப்பு இதனால் எல்லாம் அவனுக்கு விடுதலை நிச்சயம் என்பதே ஒரு வித நிம்மதியை தரலாம். மரண தண்டனையே சில குற்றங்களுக்கு சரியான தண்டனையாய் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை சரியில்லை என்பது என் அபிப்ராயம். இதில் மிக முக்கிய காரணமாய் நான் கருதுவது- அரசியல் சார்ந்த கொலையாளிகளுக்கு மரணதண்டனை தந்தால் அவர்களை ஹ¥ரோ ரேஞ்சுக்கு உயர்த்தி, தண்டனையை தியாகமாக கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும்.

நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

34 பின்னூட்டங்கள்:

At Friday, 06 October, 2006, சொல்வது...

மரண தண்டனை தேவையா ?

கண்டிப்பாக தேவைதான்,

தண்டணைகள் கடுமையானால் தான்,
தவறுகள் குறையும்.

/****************************/
ஆனால் மனிதனுக்கு தன் உயிர் பறிக்கப்படும், அதாவது தன் மரண தேதியை முன் கூட்டியே அறியப்படுவதை விட பெரிய தண்டனை உலகில் இல்லை
/****************************/

இதற்காகவாவது மரண தண்டனை அவசியம் தான்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

//
நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?
//

கற்கால மத நம்பிக்கையே சிறந்தது என்று எண்ணி பல உயிரைக் குடிக்க குண்டு வைப்பவன்களையெல்லாம் இந்த உலகில் உயிருடன் வைத்துக் கொள்வது தான் மனித நேயம் என்றால் அத்தகய மனிய நேயம் வாழப்பிறந்த மனிதனுக்குக் தேவையில்லை.

எப்படி அந்த தீவிரவாதிக்கு " கடவுள் " அதிகாரம் வழங்கி "நம்பாதவர்களை" கொல்லச் சொல்கிறானோ அதே அதிகாரம் சாட்சியங்களின் மூலம் நிறுபனமாகி குற்றவாளியாக நிற்பவன், அரசியல் கைதி என்றாலும், மரண தண்டனை வழங்க நீதிபதிக்கு உள்ளது.

எங்கள் நீதிபதியே இவர்கள் கடவுளுக்குப் போதும், என்ற எண்ணம் அவர்களிடம் உண்டாக்கும். தீவிரவாதியை ஹீரோ ஆக்கும் கூட்டம் இருக்கு என்றால், அவனது உண்மையான ரூபமான வில்லன் ரூபத்திற்கு ஆதாரம் அவனுக்கு மரண தண்டனை வழங்குபவர்கள்.

எதை மனித நேயம், 21 ம் நூற்றாண்டு, ஏற்றுக் கொள்ளவேண்டுமோ, அதை ஏற்றுக் கொள்ளும். எதை புறந்தள்ளவேண்டுமோ, அது தள்ளப்படும்.

இன்றய சூளலில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற தத்துவங்களே உயிருடன் இருக்கும். அவன் வாழ்க்கைக்கு உலை வைக்கும் நீங்கள் சொல்லும் மனித நேயம் எல்லாம் செத்தே போகும்...

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

மரண தண்டனை என்பது தேவைதான். ஆனால் எத்தகைய குற்றங்களுக்கு அந்தத் தண்டனை என்பதையும் முடிவு செய்ய வேண்டும். இதோ ஒரு வருடம் ஆகியிருக்கிறது. கொல்கொத்தாவில் ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு. அவனுக்கு என்ன தண்டனை தருவது? ஆயுள் தண்டனையா? இன்றைக்கு ஒரு குற்றவாளியின் கருணைமனு பரிசீலனைக்குப் போயிருக்கிறது. ஆனால் அது பரிசீலிக்கப்படக் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்காமல் கொடூரம் செய்கின்ற எவருக்கும் மரண தண்டனை பொருந்தும்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

இது பற்றிய என் கருத்தை "மரணம் தண்டனையா" என்ற தலைப்பின் கீழ் தேன்கூடு போட்டிக்கு அனுப்பியிருந்தேன். என் வலைப் பூவில் இப்பொழுதும் காணலாம்.
மரண தண்டனை என்பது சனநாயக நாடுகளிலிருந்து நீக்கப் பட வேண்டும் என்ற கருத்துடையவன் நான்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

I am not for death sentence, except in rarest of the rare cases.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

அமெரிக்காவில் மரண தண்டனை கொடுக்கும் விதத்தை பார்த்தால்,
இதை விட நல்ல முறையில் சாகவே முடியாது.முதலில் ஒரு தூக்க
மருந்து கொடுத்து தூங்க வைப்பார்கள். தூங்கியபிறகு மீண்டும் ஒரு
வீரியமான மருந்து. நோய், வலி இல்லாத மரணம்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

/ஆனால் மனிதனுக்கு தன் உயிர் பறிக்கப்படும், அதாவது தன் மரண தேதியை முன் கூட்டியே அறியப்படுவதை விட பெரிய தண்டனை உலகில் இல்லை/


சபாஷ்.,..அப்ப அந்த தண்டனையை வழங்க இது தான் நல்ல காரணம்.

19 உயிரை பறிச்ச சண்டாளனுக்கு இது மிக குறைவான தண்டனைதான்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

இரண்டு சிந்தனைகள்:
1. மரண தண்டனை குறித்த என்னுடைய முந்தைய பதிவு - Points to ponder against Capital Punishment

2. இந்தியாவில் ஆயுள் தண்டனை குறித்த சில சந்தேகங்கள்: Life Sentence, Parole, Capital Punishment

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

செல்வனின் பின்னூட்டம்தான் என்னுடையதும்

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

அப்ப குசராத்தில் ஆயிரக்கணக்கான உயிரைப் பறிச்ச சண்டாளர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?//

அவனையும் தூக்கில் போடுங்கள்.

குற்றம் செய்தவன் எவனாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் தண்டிக்க வேண்டும்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

செல்வன் சொல்வது போல்,
குற்றம் குற்றமே..கோத்ரா ரயிலை கொளுத்தியவர்களுக்கு,குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்றவர்களுக்கு,கோயமுத்துரில்/ மும்பையில் குண்டு வைத்தவர்களுக்கு ஒரே தண்டனை தான்.

பாலா

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

தேவை.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

இதென்ன மேலை நாடுகளில் வருவது போன்ற தள்ளுபடி விற்பனையா.[Sale]

நூறு ரூபாய் சட்டை வேண்டுமெனின். நூறு ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

அதே போல, பல உயிர்களைப் பறித்த குற்றவாளிக்கு அவன் மற்றவருக்குச் செய்த மரணம் எப்படி இருக்கும் எனக் காட்டுவதே முறை.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

கற்கால வழக்கம் என சகட்டு மேனிக்கு சொல்லி விட்டீர்களே!

இதெல்லாம் கற்காலத்தில் கிடையாது.

மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த பின் வந்த தாலி, கற்பு, குடும்பத்தைக் காப்பாற்றுதல், நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதிருத்தல் போன்றவைதான் இதுவும்.

இது வேண்டாமென்றால் அதுவும் வேண்டாம் எனச் சொல்ல முடியுமா?

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

சிறில் தன் பதிவில் நான் மரணதண்டனை குறித்த பதிவில் முடிவாய் எந்த கருத்தையும் கூறவில்லை
என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது முற்றிலும் சரி. வேண்டும் என்றோ வேண்டாம் வெட்டு
ஒன்று துண்டு ரெண்டாய் சொல்ல முடியவில்லை. மேலும் எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, மெல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.

அரசியல் கொலைகளுக்கு "மரண தண்டனை தேவையில்லை" என்பதே என் எண்ணம். மரணத் தேதி குறிக்கப்பட்டு, அந்நாள் நெருங்க நெருங்க அதைவிட பெரிய தண்டனை குற்றமிழைத்தவனுக்கு கிடையாது என்று சொல்லிவிட்டு மனித நேயம் பேசுகிறீர்களா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

ஆனால் அரசியல் போராளிகள்/ கொலைக்காரர்கள் தாங்கள் செய்வது என்னவென்றும், அதனால்
பின்னால் என்ன நடக்கும் என்று தெரிந்தும், அவை தியாகம் என்று மூளை செலவை செய்யப்பட்டதால் பயமில்லாமல் செயலில் இறங்குகிறார்கள். அவர்கள் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கும். சரித்திரத்தில் இடம் பெறப் போகும் செயலாகவும், பொருளாதார ரீதியாய் இழப்பு அதிகம் இல்லாமல் இருக்கும் என்று அவர்களுக்கும் மூளை சலவை செய்யப்படலாம்.

இதில் மாஸ்டர் மைண்டும், மிக பெரிய நெட் ஒர்க்கும் இருக்கும். பெரிய ஆட்கள் என்றுமே வெளிச்சத்துக்கு வரமாட்டார்கள். இரு பக்கமும் சமாதானம் நாடும்பொழுது நம்பர் ஒன் நாட்டை ஆளவும் செய்யலாம்.

கொலையாளி என்று ஒருவனையோ அல்லது சிலரையோ பிடித்து தூக்கில் போட்டால் என்ன பயனும் இல்லை. அடுத்த வரிசை மூளை சலவை செய்யப்பட்டு முன்னே தள்ளப்படும்.

அதனால் இவர்களுக்கு ஆயுள் முடியும் வரை சிறைதண்டனை கொடுக்க வேண்டும். தனிமை சிறையில், கடின வேலை தர வேண்டும். வெளிநபர்கள், நெருங்கிய சொந்தங்கள் உட்பட யாரும் பார்க்க அனுமதிக்கக்கூடாது. இதுவே இவர்களுக்கு சரியான தீர்ப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன். இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை பொதுவில் அறிவித்துவிட்டால், அடுத்து
வருபவர்களுக்கு பயத்தைத் தரலாம்.

பதில் அளித்த வெங்கட் ராமன், வஜ்ரா, வைசா, ஜிரா, ஜெயபால், ரவி ஸ்ரீனிவாஸ், ஆதிரை, செல்வன், பாபா, பன் பட்டர் ஜாம், செல்வன், பாலா, சிவா, மனதின் ஓசை, எஸ்.கே ! உங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

அரசியல் கொலைகளுக்கு "மரண தண்டனை தேவையில்லை" என்பதே என் எண்ணம்.//

ஏன் இந்த ஸ்பெஷல் டிரீட்மெண்ட்? அரசியல் கொலையில் செத்தவன் மட்டும் மனிதன் இல்லையா?

//கொலையாளி என்று ஒருவனையோ அல்லது சிலரையோ பிடித்து தூக்கில் போட்டால் என்ன பயனும் இல்லை. அடுத்த வரிசை மூளை சலவை செய்யப்பட்டு முன்னே தள்ளப்படும். //

அந்த வரிசையையும் அழிப்போம்.எத்தனை தீவிரவாதிகள் வந்தாலும் அத்தனை பேரையும் அழிப்போம். ஏனெனில் அவன் குண்டு வைக்க போவது நம் யார் வீட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்

//தனிமை சிறையில், கடின வேலை தர வேண்டும். வெளிநபர்கள், நெருங்கிய சொந்தங்கள் உட்பட யாரும் பார்க்க அனுமதிக்கக்கூடாது. இதுவே இவர்களுக்கு சரியான தீர்ப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன். இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை பொதுவில் அறிவித்துவிட்டால், அடுத்து
வருபவர்களுக்கு பயத்தைத் தரலாம். //

தூக்கு தண்டனை தராத பயத்தை கடின உழைப்பு தருதா? என்னங்க ஜோக் அடிக்கறீங்க..

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

செல்வன்! நான் சொல்லவருவது ஒன்றே ஒன்றுதான். மரணதண்டனை இவர்களுக்கு எந்த பயத்தையும் தராது. அதைவிட கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதே என் கருத்து.

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

அதை விட கடுமையான தண்டனை கழுவேற்றுவதுதான். ஜனநாயக நாட்டில் அதற்கெல்லாம் அனுமதி இல்லை.

ஜெயிலில் விட்டால் ஜாலியாக தனிராஜ்ஜியமே நடத்துவார்கள். இவர்களை தூக்கில் இடுவது தான் ஒரே வழி

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

மரணதண்டனை கட்டாயம் தேவையான ஒன்று தான். ஆனால் அதனை நிறைவேற்றும் வழிமுறைகளை வேண்டுமானால், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் குற்றச் செயல்முறைகளுக்கு ஏற்றவாறு சாதுவான முறையிலோ (அதாவது அமெரிக்க மரணதண்டனை), மிதமான முறையிலோ (இந்திய மரணதண்டனை) அல்லது கொடுரமான முறையிலோ (அரபு நாடுகளின் மரணதண்டனை) நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை, தொலைகாட்சிகளின் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப் படவேண்டும். அப்பொழுதுதான் இனிமேல் அதனை போன்றதொரு குற்றங்களை செய்ய மற்றவர்கள் பயப்படக்கூடும்.

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

கண்டிப்பாக தேவை

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

உஷா!
சரியான விசாரணையைத் துரிதமாக நடத்தி; குற்றவாளி யென்பது உறுதியானால்; ஒரு கொலைக் குற்றவாளிக்கு; மரண தண்டனை தப்பில்லை.
ஆனால் இலங்கை;இந்தியா போன்ற பொய்ச்சாட்சிகளைக் காசுக்கு உருவாக்கும்;சாதிக் கொரு நீதி;நீதிபதிகளே கையூட்டு வாங்குவது போன்ற அவலங்கள் உள்ள நாடுகளில் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே!!!!
தப்புச் செய்தால் தண்டனை எனும் பயம் இருக்கவேண்டும். அதுவும் மரணபயம்.....கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும்.
பிரான்சில் பல கற்பழித்துக் கொலை செய்தவர்கள்; ஆயுள் தண்டனை யெனும் பெயரில் சிலவருடங்கள் சிறையில் இருந்து;நன்னடத்தை யென வெளியேறி; மீண்டும் அதே தவறைச் செய்துவிட்டார்கள்.
இப்போ சிறை என்பதும் வசதியான வீடுதான்!!!அரசுக்கு வீண்செலவு.....இப்பணத்தை நல்லவர்களுக்குச் செலவு செய்யலாம்.
சமநீதி என்பது நமது நாடுகளில் முதல் வரவேண்டும்.
யோகன் பாரிஸ்

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

தேவை தான். ஒரு வேளை ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும் வரை சிறைனு சில நாடுகளில் உள்ளதைப் போல வரும்னா, மரண தண்டனைக்கு தேவை இல்லனு சொல்லலாம்.

இருந்தும் ஒரு கொலையாளியால் இறந்தவனின் குடும்பத்தைப் பார்க்கும் போது, மரண தண்டனை தேவை தான்.

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

நாட்டின்/சமுதாயத்தின் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் இம்மாதிரியான கொலைவெறிப் பட்டறைப் பயிற்சி எடுத்த கொலைகாரர்களை களை எடுப்பதற்கு மரணதண்டணை மிக அவசியம். அதுவும் 12மாதத்திற்குள் விரைந்து நிறைவேற்றப்படவேண்டும்.

ஆயுள் தண்டணை, காலம் தாழ்த்திய நீதிவிசாரணை / தீர்ப்பு பின்னாளில் இன்னொரு காந்தகார் விமானக் கடத்தல் மாதிரியான தேச அவமானச் சம்பவம் நடந்து அரசு மண்டியிட்டு இந்தியப் பிணைக்கைதிகளை இம்மாதிரி கொலைகார தீவிரவாதிகளை விடுவித்து மீட்க வேண்டிய சுப காரியம் செய்யக் களம் அமைத்துத் தரும்.

மனிதனாக வாழ்ந்து சிறு தவறு செய்வோருக்கு மனிதநேயம் காட்டி நெறிப்படுத்தலாம். கொலைவெறி மிருகங்கள் வேட்டையாடப் பட்டே ஆகவேண்டும் களத்தில் போராடும் போதே அல்லது நீதி/தீர்ப்பை நிறைவேற்றுவதன் மூலம்!

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

//குற்றம் செய்தவன் எவனாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் தண்டிக்க வேண்டும்.// என்று செல்வன் சொல்வது மிகவும் சரி, ஆனால் சிறிதும் சாத்தியமில்லை.

நாடாளுமன்றத்தை தாக்கிய அப்சல்கள் பிடிக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படவேண்டும். மிகவும் சரியே.

நம் நாட்டையே, இந்தியாவின் பன்முகத்தையே உருக்குலைத்து 'கோத்ரா நாடகமாகவும்' 'குசராத் பாடமாகவும்' வெறித்தாண்டவமாடியவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.நம்மையே ஆளவும் தலைப்படுகிறார்கள். ஏனெனில்
வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

ஆக, நம் தேவைக்கெற்ப நியாயத்தை சரி காணுகிறோம், இல்லையேல் 'சாத்தியமில்லை' என்று விட்டு விடுகிறோம்.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

தூக்கில் போட வேண்டாம், அப்ப தான் எதாவது மினிஸ்டர் மகளோ இல்லை ஃப்ளைட்டோ கடத்தப்படும் போது விடுவிக்க வசதியாய் இருக்கும்.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

//ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை//

பயந்துக்கொண்டே படித்தேன். என்னை ஏமாற்றவில்லை உஷா !

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

செல்வன், நாகு,தருமி, யோகன்,பொற்கொடி, ஹரிஹரன், ராஜ், மனசு, ரவியா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

ரவியா நீங்களாவது என் கட்சியில் இருக்கிறீர்களே (அப்படிதானே) நல்லவேளை :-)
ஒருத்தர் மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர்களையும் தூக்கில் போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நானே
பயந்துப் போயிருக்கிறேன் :-)

செல்வன், கழுமரத்தில் ஏற்றுதல் பற்றி ஒரு பதிவு போட வேண்டியதுதான்.

மனசு, மந்திரி மகளைக் கடத்துகிறாரோ அல்லது சூப்பர் ஸ்டார்களைக் கடத்துகிறார்களோ சமாளிக்க வேண்டியது அரசாங்கத்தின் வேலை. ஆக அரசு பலம் பொறுந்தியதால் இருந்தால் இவைகளை முளையிலேயே கிள்ளலாம்."நோய் நாடி நோய் முதல் நாடி" இங்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

இப்பதிவு பொதுவாய் மரணதண்டனைக்களுக்கு எதிரானது என்பதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

எல்லைப் பாதுகாப்புல ஈடுபட்டிருக்காங்களே அவங்களைப் பார்த்து எதிரிகள் சுடும் போது இவர்கள் திரும்பவும் சுடணுமா?கூடாதா ?
அப்ப """நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை """ அப்படீன்னு அறிவுறை சொல்லிட்டு நாம் மட்டும் செத்துப் போயிடணுமா ?

உஷா ,

இந்தக் கேள்வியை நையாண்டிக்காக கேட்கவில்லை...சொல்ல வருவது என்னவென்றால் ...உயிர் பயம் என்பது இருந்தால்தான்..முறையாக வாழும் ஆசை வரும்...கற்காலம் தொட்டே ... . கட்டமைப்பான சமுதாயத்தில் அந்த உயிர் பயத்தை ஏற்படுத்துவதுதான் இது போன்ற தண்டனைகள்...அதில் மிலிடரியில் எதிரியை கொல்வதானாலும் அல்லது நீதிபதி தூக்கு தண்டனை கொடுத்தாலும்.......இப்படி தண்டனை இருக்கிறதே...அதனால் இந்தத் தப்பை செய்யக்கூடாது என்கின்ற பயம் இல்லாது போய்விடக்கூடாது...

அப்படியும் மீறி தப்பு செய்பவன் தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான்....:(

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

சங்கர், கண்ணுக்கு கண் என்ற கோட்பாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் சரிதான். ஆனால் இதனால் குற்றம் குறையும் என்று நம்புவது வெறும் நம்பிக்கை மட்டுமே. இதில் நான் சொல்ல வந்தது அரசியல் கொலையாளிகளுக்கு
மரணதண்டனை தீர்வாகாது என்பதே.
இவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற வரிகள், இங்கு பொருத்தமா என்ற யோசனையுடன் இடுகிறேன். பொருத்தம் என்றுதான் காஷ்மீரில் அப்சலை வாழ்த்தி புகழ்பாடும் கூட்டங்கள் சொல்கின்றன.

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

உஷா ,

/////சங்கர், கண்ணுக்கு கண் என்ற கோட்பாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் சரிதான். ////

இல்லை...தவறுக்கு ஏற்ற தண்டனை என்பதில்தான் உடன்பாடு

//////ஆனால் இதனால் குற்றம் குறையும் என்று நம்புவது வெறும் நம்பிக்கை மட்டுமே./////

இல்லை...அதுதான் உண்மையும் கூட...சிங்கப்பூரில் ரோடில் குப்பை போடாதவன்/எச்சில் துப்பாதவன் மறுநாளே இந்தியா வந்ததும் அதை செய்யத்தலைப்படுவது எதனால் என்று நினைக்கிறீர்கள் ?ஒட்டு மொத்த சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டின் முதல் படி சரியான சட்டம் மற்றும் தண்டனையே...கல்வி மற்றும் விழிப்புணர்வு எல்லாம் அப்புறம்(அதாவது சிங்கப்புரில் பொது இடத்தில் குப்பை போடுவது/எச்சில் துப்புவது தப்பு/தண்டிக்கத்தக்கது என்று சட்டம் போட்டார்கள்..(அப்புறம் போதித்தார்கள்....)அதன் தொடர்ச்சியாக இன்று அவர்கள் விழிப்புணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள்...ஆனால் அது இல்லாத பிற நாட்டவர்களை அங்கு கட்டுப்படுத்துவது வழுவாத சட்டமும் கடுமையான தண்டனையுமே.

////// இதில் நான் சொல்ல வந்தது அரசியல் கொலையாளிகளுக்கு
மரணதண்டனை தீர்வாகாது என்பதே.
இவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற வரிகள், இங்கு பொருத்தமா என்ற யோசனையுடன் இடுகிறேன்.//////

அவர்களை விட்டு விட்டாலும் விடுதலைப் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அரசியல் பண்ணுவார்கள்...

////// பொருத்தம் என்றுதான் காஷ்மீரில் அப்சலை வாழ்த்தி புகழ்பாடும் கூட்டங்கள் சொல்கின்றன.//////

சரியோ தவறோ...எந்த ஒரு விஷயத்திற்குமே மாற்றுக்கருத்து இருக்கும்தான்....அதனால்தான் சரி/தவறை நிர்ணயிக்க சட்டம் என்று ஒன்று இயற்றப்படுகிறது...சரியான நீதியை விமர்சிக்கக்கூடாது என்று சொல்வதற்கும் இதுவே காரணம்
(ஆனால் இங்கு பெரும்பாலும் நீதித்துறையும் வெகுவாக அரசியல் சார்ந்ததாக ஆகிவிட்டது என்பது வேறு விஷயம்)

 
At Wednesday, 18 October, 2006, சொல்வது...

ஆனால் இங்கு பெரும்பாலும் நீதித்துறையும் வெகுவாக அரசியல் சார்ந்ததாக ஆகிவிட்டது என்பது வேறு விஷயம்//
ச. சங்கர் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
ஆம், நானும் கசப்புடன் அதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தெருவில் குப்பைப்போடுவதும், எச்சில் உமிழ்வதற்க்குமான
தண்டனைகளைப் பற்றி வேறு ஒரு தளத்தில் பேசலாம். அரசியல் கொலை வேறு அது வேறு.

 
At Sunday, 29 October, 2006, சொல்வது...

மரணம் என்னும் நிலையை சகித்துக்கொள்ளும் ஒருவனால் தான் கொலை செய்ய இயலும். மரணத்தைக் கண்டு பயந்தவனால் கொலை செய்ய இயலுமா? அவனுக்கு மரண தண்டனை கொடுப்பது கோமாளித்தனமே. அவனை உயிரோடு வைத்திருந்து, நாட்டு நலனுக்காக ரோடு போடவும், மரம் நடவும் உழைக்க வைக்கலாம். என்னைப் பொருத்த வரை அதுவே கொடிய தண்டனை அவனுக்கு. ஒரு கொள்கைக்காகவோ, ஒரு குலத்திற்காகவோ தன் உயிரை பணயம் வைத்து இறங்குபவர்கள், மரணம் கண்டு அஞ்சும் சாமான்யர்கள் அல்லவே! மரண தண்டனை அவனை போன்றோருக்கு பயம் தராது வீரத்தின் முக்தி நிலையாகத் தோன்றும் - மேலும் அவர்களை கொள்கை வாதிகள் ஆக்கும். எனவே அரசாங்கம் எதிர் பார்க்கும் பயனை இந்த முடிவு சமூகத்திற்கு தரும் வாய்ப்புக்கள் குறைவு என்பது என் வாதம்!

 
At Sunday, 29 October, 2006, சொல்வது...

நன்றி மதுரா, என்கருத்தையே சொல்லியிருக்கிறீர்கள். கடுமையான தண்டனை தேவையே தவிர, அரசியல் கொலைகளுக்கு மரண தண்டனை தீர்வல்ல என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். அவனை ஹீரோ ஆக்கி, வழிப்பட்டு, இன்னும் சிலரை பலிக்கடா ஆக்கும் நிலைமை வேண்டுமா என்றுக் கேட்கிறேன்.

 
At Wednesday, 24 September, 2008, சொல்வது...

அன்புடையீர்,

ஒவ்வொரு மனிதனும் ஒரு சக்தி. இந்த சக்தியை மரண தண்டனை மூலம் வீணாக அழிப்பது தவறு என்றுதான் கருதுகிறேன்.

இந்த சக்தியை ஆக்க சக்தியாக மாற்றலாம். எப்படி?

இப்போது அறிவியல் ஆராய்ச்சிக்காக எலி, பன்றி, குரங்கு போன்ற விலங்குகளை பலிகடாவாகப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த கட்ட நிலையில் தன்னார்வம் கொண்ட மனிதர்களைப் பலிகடாவாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த அறிவியல் ஆய்வு எப்படியும் அமையலாம். நன்மையும் நடக்கலாம், எதிர்பாராத தீமையும் நடக்கலாம்.

இந்த பலிகடா மனிதர்களுக்குப் பதில், கொலை செய்த குற்றவாளிகளை ஈடுபடுத்தலாம். இதனால் இந்த மனித சக்தி ஆக்க முறையில் பயன்படுத்தப்படுகிறது.

பலிகடாவாகப் பயன்படுத்தப்படும் குற்றவாளி, ஒரு அறிவியல் ஆய்வில் தப்பித்து விட்டால், அடுத்தடுத்த அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Post a Comment

<< இல்லம்