Wednesday, October 11, 2006

கிளி

கிளிக்கு வாழ்க்கை சுகமாய்தான்
போய் கொண்டிருந்தது
வேளைக்கு உணவும்,
கழுத்தை அலங்கரிக்கும்
அணிகலங்களுமாய்
பக்கத்து கூண்டு கிளி தோழிகளுடன்
வம்பளந்துக் கொண்டு
கூண்டில் பாதுகாப்பாய் இருந்தது கிளி
சற்றே வேகமாய் வீசிய காற்றில்
சரியாய் மூடப்படாத கூண்டின் கதவு
திறந்துக் கொண்டது ஒரு நாள்
மெல்ல வெளியே வந்து எட்டிப்
பார்த்த கிளியின் கண்ணில்
பட்டது ஒரு சின்னஞ்சிறு பறவை
உனக்கும் உண்டு இறக்கைகள்
வா வெளியே என்று கூவிக் கொண்டே
பறந்தோடியது அப் பறவை
வீசிய காற்றில் மடங்கியிருந்த
சரியாய் வெட்டப்படாத இறக்கைகள்
தன் இருப்பைக் காட்டின
நானும் சுதந்திரவானில் பறக்கப் போகிறேன்
என்று அறிவித்தது அக்கிளி
உன்னை கிழித்து கூறுப் போட்டு விடும்
கழுகுகளும், கோட்டான்களும்
அலறின தோழி கிளிகள்
பறப்பது பறவைகளின் பிறப்புரிமை
உனக்கும் உண்டு நகங்களும்
கூரிய அலகும் மறவாதே
ஓங்கி ஒலித்தது ஒரு
கிழ கிளியின் நடுங்கும் குரல்
முகத்தில் மோதிய காற்று
பரவசத்தை தந்தாலும்
கொஞ்சம் பயத்துடன்
சுதந்திர வானில் பறக்க மெல்ல
தன் இறக்கைகளை விரித்தது கிளி.

14 பின்னூட்டங்கள்:

At Thursday, 12 October, 2006, சொல்வது...

நல்லா இருக்கு கவிதை.

கவிதைதானே உஷா?

அடுக்கடுக்கா வெட்டிவெட்டி எழுதி
கீழே வருதுல்லையா . அப்ப அது கவிதைதான்:-)))))

சரியா உஷா?

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

உஷா!
நீங்கள் சொல்ல வந்த கருத்துப் புரிகிறது. இது கவிதையா??இல்லையா??? என்பதனை ஆய்வதற்குரிய அறிவு எனக்கு மிகக் குறைவு.
உங்கள் இந்த வடிவத்தை வாசித்துப் புரிய முடிகிறது. ஆனால் சிலர் எழுதுவது; புரியக்கூடாதெனக் கங்கணம் கட்டி எழுதுவது போல் உள்ளது.
யோகன் பாரிஸ்

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

http://sivacalgary.blogspot.com/2006/10/blog-post_116062621106036103.html

ம்..ம்.. ஒருத்தர் கிளியை கூண்டில் வளர்த்து சந்தோசமாக இருக்கிறேன் என்கிறார்..
நீங்கள் விடுதலைதான் கிளிக்கு சந்தோசம் என்று சொல்கிறீர்கள்..

any...உள்குத்து here ?
:-))

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

உஷாக்கா என்ன ஆச்சு??

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

சரி. இப்ப கிளி எங்கயிருக்கு? என்னாச்சு? இந்தக் கவிதைய இப்பப் போட என்ன காரணம்? விளக்கமாச் சொன்னா நல்லாயிருக்கும். கவிதையெல்லாம் லேசுல நமக்குப் புரிய மாட்டேங்குதுங்க. அதான் கேக்குறேன்.

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

போட்டிக்கா உஷா?

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

துளசி, கவிதைன்னு நெனச்சிக்கிட்டு எழுதினா அது கவிதைத்தான்னு நாம மொதல்ல நம்பண்ணுன்னு எங்க குருஜி
சொல்லியிருக்கிறார்.

வைசா, பொறாமை என்பதைவிட பயம்தான் சரியானகாரணம். எதுக்கு வம்பு நல்லா சாப்பிட்டுகிட்டு,
நகை, பட்டு புடவைன்னு இருக்காமா, எதுக்கு எழுதி வம்பை விலைக்கு வாங்கணும். அப்படி எழுதினா, மங்கையர் மலர்வகையறாவுக்கு கோவக்கா அல்வா, பாவக்காய் பாயாசம்ன்னு எழுதலாம் இல்லையா?

யோகன், இன்றுவரை எனக்கு புரியாத விஷயம் கடவுள் ஒன்று கவிதை மற்றொன்று. நீங்க கவிதைன்னு நெனச்சா
இது கவிதை. இல்லைன்னு சொன்னா நான் ஒத்துக்கிறேன் :-)

கல்வெட்டு, அனாவசியமா வம்பு ஆரம்பிக்காதீங்க :-)

மனசு, என்ன ஆச்சுன்னு தெரியலை :-)காலைல இருந்து கவிதையா கொட்டுது, இன்னொன்னு நாளைக்குப் போடுகிறேன்.

ராகவா, உணர்ச்சிவசப்படாதீங்க. அமைதி அமைதி! வெளியே வந்த கிளிங்க, நாளொரு அறிவுரையும்
( ஒரு பெண் எப்படி
இருக்க வேண்டும் என்றெல்லாம்) பொழுதொரு திட்டு வாங்கிக் கொண்டு இருக்கின்றன. சரிதானே துளசி, பொன்ஸ்?
என்னை எழுத வைத்தது இந்த பதிவு http://sakhthi.blogspot.com/2006/10/blog-post.html

பொன்ஸ், இது ஒரு மீள் பதிவு. கதை நாட் இருக்கு, இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

கவிதைதானே உஷா?

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

இந்த அறியாமையே சுகமாய் அப்படியே இருக்கும் கிளிகளும்,உன்னால் பறக்க முடியாது என்றூ நம்பி சிறகிருந்தாலும் பயன்படுத்தி பார்க்காத கிளிகலும் கூட உண்டு. ஷ்ரேயாவின் பதிவை பார்த்தீர்களா

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

ரவியா, உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை :-)

பத்மா, பல முறை பேசி அலுத்துப் போன மேட்டர். எத்தனை சொன்னாலும் பரஸ்பர மரியாதையை, ஆண்க்கு இருக்கும் அதே உணர்வுகள்தான் பெண்ணுக்கு இருக்கும் என்று சொல்லிப் பார்த்தும் புரிந்துக் கொள்ள தயாராய் இல்லை. ஒரு சமயம்
நினைத்தால். அந்தக்காலத்தில் என் பாட்டி ( அம்மாவின் அம்மா) இருந்ததுப் போல் இருந்துவிட்டால் பிரச்சனை யில்லை என்று தோன்றும். நினைப்பு என்று ஒன்று இல்லாமல், தாத்தாவே உலகம் என்று இருந்தாள். என்ன குறைந்துப் போனது
இல்லையா? கொஞ்சம் சுடர்மிகும் அறிவுடன் பிறந்தது படைப்பின் தவறோ :-)))

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

//சுடர்மிகும் அறிவுடன் பிறந்தது படைப்பின் தவறோ :-)))//


ஹா.......

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

புரிந்துக் கொள்ள தயாராய் இல்லை. ஒரு சமயம்
நினைத்தால். அந்தக்காலத்தில் என் பாட்டி ( அம்மாவின் அம்மா) இருந்ததுப் போல் இருந்துவிட்டால் பிரச்சனை யில்லை ---அப்படி இருந்தால் உன்னதம். இது குறையே இல்லை என்று நினைத்துக்கொண்டால் வாழ்க்கை சுகம்தானே.

 
At Tuesday, 17 October, 2006, சொல்வது...

நிர்மல், கவிமொழி பின்னுட்டம் அழகாய் இருக்கிறது.

பத்மா, இல்லை சுயத்தை இழத்தல் என்பது வேறு வழியில்லாமல், மனதுக்குள் வருத்தம இராதா என்ன?

 
At Tuesday, 17 October, 2006, சொல்வது...

///மனதுக்குள் வருத்தம இராதா என்ன? ////


அதெல்லாம் இல்லாமல் நிறைய இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் உஷா:))

 

Post a Comment

<< இல்லம்