Saturday, November 11, 2006

தொலைக்காட்சி, இணையம், ஆனந்தவிகடன் கல்கி- போட்டு தாக்கு

சன் டீவி டாப் டென்னில் வல்லவனுக்கே முதல் இடம். ஆனால் அஜீத்தின் வரலாறு நன்றாக ஓடுகிறதாம். குளோசப்பில் அஜித் முகம் பார்க்க பயமாய் இருக்கிறது. என்னமோ, வீட்டுல புருஷன் ஒரு வார்த்தை தப்பா பேசினா கூட உள்ள வெச்சிடுவாங்கன்னு சட்டம் எல்லாம் வந்திருக்கு, ஆனா வன்புணர்வுயில் ரெட்டை புள்ளை பெத்திக்கிறதா சீன் வருது. கேட்ட இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு முந்திய பிளாஷ்பேக்குன்னு சொல்லுவாங்க. அது சரி, கதை அப்ப நடக்கும்போது இந்த சட்டம் இல்லையே :-)

ஹமாம் நலுங்கு மாவு அல்லது நலங்கு மாவு என்று ஒரு சோப் வருதே, அதுக்கு மற்ற மொழிகளில், ஆங்கிலம் உட்பட என்ன பெயருங்க? இங்க கிடைக்காததால், விளம்பரம் வரும்பொழுது எல்லாம் இந்த சந்தேகம் வருகிறது ஆமாம், நலங்கு/ நலுங்கு மாவு
என்ற பெயர் தமிழில் கேட்டதே இல்லையே? அப்படி ஒரு மாவு இருக்கா என்ன?

ஜெயாவில் ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு வழங்கும் ஜெயம் சீரியல் என்ன பேய், பூதம் கதையா? அல்லது ஏதாவது பிரீயட் படமா மன்னிக்கவும் ப்ரீயட் சீரியலா? எல்லாரும் விசித்திர ஆடை அலங்காரங்களுடனும் பயமுறுத்தும் மேக்கப்புடனும் வருகிறார்களே?
லைட்டிங் வேறு விசித்திர கோணத்தில் சுதா சந்திரனையும், நளினியையும் காட்டி பயமுறுத்துகிறது. அப்படியே கல்கி, ரோஜா சீரியலையும் யாராவது பார்க்கிறீர்களா? எப்பொழுதும் டிரெயிலரில் பழி வாங்குதல், குழந்தை கடத்தல், இரண்டு கல்யாணம் என்று
ஓரே மாதிரி வருகிறது? அது சரி எல்லாம் சீரீயலிலும் இதே கதைதானே?

அடுத்து, இணையத்தில் அதிகம் இடம் பெற்ற இந்த வார சொல் பார்பனர்/ பிராமணன் மற்றும் பெரியார். என்ன ஒற்றுமை! முதல் வார்த்தை இருபதாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்றரை தடவையும், அடுத்த வார்த்தை இருபதாயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஒன்றே கால்
தடவையும் வந்துள்ளது. (கால், அரை கணக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக், அதாவது அவசரத்தில் உணர்ச்சி வேகத்தில் தட்டச்சும் பொழுது கால் போட தவறியது போன்று)

அடுத்து இளைய ராஜா வேகமாக முன்னேறியதுப் போல தோன்றினாலும், மேற் சொன்ன இரண்டு பெயர்களே இ.ரா பதிவின் பின்னுட்டத்திலும் அதிகம் காணப்பட்டதால் அவர் மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இரண்டு இடத்திற்க்கு போட்டி அதிகம், ஜெயிக்கப் போவது பெரியாரா, பார்பனரா என்பதை கணிக்க இயலவில்லை.

பத்திரிக்கை மேட்டருக்குப் போவோமா? சக்தி விகடனில் வரும் அபத்தங்கள் 22, செப்டம்பர் 2006, சக்தி விகடனில் வந்ததாய் பத்மா அரவிந்த் எழுதியது மீண்டும் உங்கள் பார்வைக்கு. இந்தளவு மூட நம்பிக்கை கருத்துக்கள் உங்கள் பத்திரிக்கைகளில் வருவது உங்கள் பார்வைக்கு வருகிறதா ஆனந்தவிகடன் எடிட்டர் சார்?

ஒருவர் இறந்த பின் அவரது கண், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாமா? என் அம்மாவின் கண்களைப் பொருத்தி இப்போது இருவர் பார்வை பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என் மனதில் உள்ளது. என்ன செய்வது?

_ ஆர்.விஜயா, பாண்டிச்சேரி.

இந்தியாவுக்கு என்று ஒரு தனி மரபு உண்டு. இந்த மண்ணில் பிறந்தவன் அப்படியே மண்ணில் போய்ச் சேர்கிறான். அவன் வேறு எங்கேயும் போகக்கூடாது என்பது நம் கோட்பாடு. ஒரு மனிதன் இறந்த பின், பூத உடல் கிடக்கும்போதே, ‘இந்த உடலில் உள்ள பஞ்ச பூதங்கள், அந்தந்த பூதங்களோடு போய்ச் சேரட்டும்’ என்று பிள்ளை மந்திரம் சொல்கிறார். ‘உயிர் போன உடலை என்ன செய்வது?’ என்கிற கேள்விக்கு வேதம் முன்னமேயே பதில் சொல்லியிருக்கிறது. எந்தப் பஞ்ச பூதத்திலிருந்து மனிதன் தோன்றினானோ அதே பஞ்ச பூதங்களில் கரைந்துவிடவேண்டும்.

தற்காலிகமாக ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தது என்பதில் நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாது. கண்ணை வாங்கியவர், அவரது இயல்பான பார்வையைப் பெற முடியும் என்பது பொய். எந்தப் பொருளை தானம் செய்வது என்று நியதி உண்டு. யானை செத்தாலும் பயனுண்டு, மனிதன் செத்தால் யாருக்கும் பயனில்லை என்று பழமொழியே உண்டு.

முதல் நாள் தீவைத்து எரிக்கிறோம். மறு நாள் அந்தச் சாம்பலைக் கொண்டு போகிறோம். எரியாமல் ஏதாவது மிச்சம் இருந்தால், அதையும் எரிக்கிறோம். உங்கள் தாயாரின் கண்ணைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அங்கே அவர் முழுசாக இல்லை. வேறு எங்கேயோ கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. கர்மாவே பண்ண முடியாது. எல்லாம் எரிந்தால்தானே பாலே விட முடியும்? ஏதாவது குறைபாடு இருக்குமேயானால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் வலியுறுத்தும்.

ஒருவரின் உடலுறுப்பை இன்னொ ருத்தருக்குப் பயன்படுத்துவது நம் சாஸ்திரத்துக்கு விரோதமானது. சாஸ்திர விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்யப்படுகின்றன. இதையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஒருவருக்குக் கண்ணைக் கொடுத்து விட்டு ஒதுங்குவதற்குப் பதிலாக அவருக்குக் கண்ணாக இருந்து உதவி செய்யலாமே? கால் இல்லாதவர் என்றால், அவர் உட்கார்ந்து செய்வது மாதிரியான வேலை கொடுத்து அரவணைக்கலாமே..? இப்படியும் சிந்திக்கலாமே
!

கேள்வி பதில் பல முன்னுக்கு பின் முரணான பதில்கள். . இந்த வாரம் ஒரு கேள்விக்கு
பதில் படியுங்கள்.

வேத காலத்தில் மைத்ரேயி & சாவித்ரி போன்ற ஸ்திரீகள் மந்திர த்ரஷ்டாக்களாக இருந்ததை அறிய முடிகிறது. இந்தக் காலத்தில் பெண்கள் மந்திரங்களைச் சொல்ல முடியுமா? அதற்கு சாஸ்திரங்கள் அனுமதிக்கிறதா?

& தேதியூர் பாலு, சென்னை&11

வேத காலப் பெண்கள் மாதிரியே நம் பெண்களும் தகுதி வரவழைத்துக் கொள்ள முடியுமானால், இந்தக் காலத்திலும் மந்திர த்ரஷ்டாக்களாக வரலாம். நாம்தான் நமது கலாசாரத்தில் இருந்து வெகுதூரம் விலகி வந்து, மாற்றுக் கலாசாரத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு விட்டோமே... நம்மால் எப்படி அவர்களை பழைய மாதிரியாக மாற்ற முடியும்?


கடைசி வரிகள், என்னமோ பெண்கள் மட்டும் கலாச்சாரத்தை விட்டு விட்டு மேன் நாட்டு மோகத்தில் அலைவதாக சொல்லியிருக்கிறார். ஆ.வி குழுமத்து எடிட்டர் ஐயா! உங்கள் பார்வைக்கு இவை எல்லாம் வருவதில்லையா? ஏன் இத்தகைய மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறீர்கள்? பொது ஜன ஊடகம் தரும் பாதிப்பு மிக அதிகம். ஆனந்தவிகடன் போன்று மக்களின் நம்பிக்கைப் பெற்ற,அதிக வாசகர்கள் கொண்ட பத்திரிக்கைகள் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் செய்வது சரியா?

குமுதத்திலும் இத்தகைய அபத்தக்கங்கள் உண்டு . கையில் கிடைத்த கல்கி 29-10- 2006 இதழ். சுவாமி சுத்தானந்தாவின் (யார் இவர்) "ஏன் கடவுள் ஏன் தோழன்" தொடர் ஆரம்பிக்கப் போகிறதாம். எங்கிருந்துதான் இந்த ஆனந்தாக்களைப் பிடிக்கிறார்களோ? ஒவ்வொரு
பத்திரிக்கைக்களும் கொடுக்கும் விளம்பரத்தால் இத்தகைய ஆன்மீகவாதிகள் வாழ்க்கை ஒளிர தொடங்குகிறது. என் இளமைப் பருவத்தில் டாக்டர் உதயமூர்த்தி ஆனந்தவிகடனில் எழுதிய தொடர்கள், பிறகு இறையன்பு, தென்கச்சி சாமிநாதன் போன்றவர்களின் கட்டுரைகள் கொடுத்த தாக்கம் மிக அதிகம்.

இவ்வார சூப்பர் பஞ்ச். உபயம் சுஜாதாவின் க.பெ


வாயைத் திறக்காமல் ஒன்றுமே தெரியாத முட்டாள் போலத் தோன்றுவது, வாயைத் திறந்து அதை ஊர்ஜிதம் செய்வதைவிட மேல்!

& மார்க் ட்வெய்ன்

25 பின்னூட்டங்கள்:

At Sunday, 12 November, 2006, சொல்வது...

ஆஹா

சூப்பர் ரிப்போர்ட்... ஒரு வார ஹாட் நியூஸ் ஒரே மூச்சில படிக்க வச்சுட்டீங்க...

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

//நலங்கு//

சீமந்தம் தானே!

சீமந்தத்திலே /நலுங்குல என்ன செய்வாங்கன்னே தெரியாது. மஞ்சள் பூசுவாங்க. ஒருவேளை மஞ்சளைத்தான் சொல்றாங்களோ!

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

//என்னமோ, வீட்டுல புருஷன் ஒரு வார்த்தை தப்பா பேசினா கூட உள்ள வெச்சிடுவாங்கன்னு சட்டம் எல்லாம் வந்திருக்கு, ஆனா வன்புணர்வுயில் ரெட்டை புள்ளை பெத்திக்கிறதா சீன் வருது. //
விகடனில் ஞானி படிக்கலியா நீங்க? அதான் வன்புணர்ச்சியே சட்டப் படி குற்றமில்லைன்னு உச்சநீதி மன்றமே சொல்லியாச்சாமே! இந்தப் பக்கம் குடும்ப வன்முறைச் சட்டம், அந்தப் பக்கம் வன்புணர்ச்சி முயற்சியே குற்றமில்லை.. எப்படி? :(

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

நலங்கு மாவு இருக்கு...

கல்யாணசமயத்தில நலங்கு வைக்கும் போது இந்த மாவு இருக்கும். பைத்தம்பருப்பு, மஞ்சல் இன்னும் ஏதோதோ,வாசனைக்காக, போட்டு அரச்சு வச்சிருப்பாங்க.. நாயுடு சமூக கல்யாணத்தில கண்டிப்பா இருக்கும்,,

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

//
வாயைத் திறக்காமல் ஒன்றுமே தெரியாத முட்டாள் போலத் தோன்றுவது, வாயைத் திறந்து அதை ஊர்ஜிதம் செய்வதைவிட மேல்!//

இது திருக்குறளாச்சே.

யக்கோவ், செம ஹாட் நியூஸ். :))

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

//
வாயைத் திறக்காமல் ஒன்றுமே தெரியாத முட்டாள் போலத் தோன்றுவது, வாயைத் திறந்து அதை ஊர்ஜிதம் செய்வதைவிட மேல்!//

இது திருக்குறளாச்சே.



மொத்தமா இந்தப்பதிவு:
யக்கோவ், செம ஹாட் நியூஸ். :)) இதுமாதிரி வாரம் ஒண்ணு கண்டிப்பா போடுங்க.

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

என்னங்க உஷா, டிவி சீரியலை ஒண்ணும் விடாமப் பார்க்கறிங்க போல?:-)))

எல்லாம் ஒரே கு.ஊ.ம.தானே? :-))))

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

அது என்ன மகளிர் அணி மட்டுமே ஆஜர் பட்டியலில் இருக்கிறீர்கள் :-) tag செய்யும் பொழுது "பெண்ணீயம்" என்ற தலைப்பு எல்லாம் கொடுக்கலையே ;-)

மங்கை தலைப்பை "செம்ம ஹாட்டு மச்சி" ன்னு மாத்திடட்டா?

பிரேமலதா, அதுக்கு பெயர் நலங்கு/ நலங்கு இடுதல் என்றால் மஞ்சளை பாதத்தில் தடவி, அதே மஞ்சளுடன் கொஞ்சம் சுண்ணாம்பு
சேர்த்தால் அது சிவப்பாகி விடும். பாதத்தின் ஓரத்தி கோடு போல தடவுவார்கள்.

மங்கை, ஆக தெலுங்கு பெயரா? எனக்கு தெரிந்து தமிழில் இல்லை. சந்தேகத்தை தீர்த்ததற்க்கு நன்றி

மீண்டும் மீண்டும் பிரேமலதாவுக்கு, வாரம் ஒன்னுதானே போட்டுடலாம் :-) திருக்குறளா, தேடிப் படிக்கிறேன்,

துளசி, டிரெய்லர் பார்த்தேன் என்று தெளிவாய் குறிப்பிட்டு இருந்தேனே, பார்க்கலையா? "ஜெயம்" ரெண்டு நாளுக்கு முன்னால் பார்த்து 'சுதா சந்திரனைப் பார்த்து பயந்துப் போய், டிவியை அணைத்துவிட்டேன் என்றால் நம்புவீர்களா? அது என்ன
கு. ஊ. ம? ஏதோ உள்குத்து மாதிரி இருக்கே, விளக்குக

பொன்ஸ், லிஸ்டில் செக்ஸ்யூவல் ஹாரஸ்மெண்டுக்கு தண்டனை உண்டு என்று இருந்ததே? ரேப், ஹாரஸ்மெண்ட்டில் வாராதா ;-(

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

என்ன உஷா, இதைப்போய் உ.கு/வெ.குன்னுட்டு?:-))))

'குட்டையில் ஊறின மட்டை'ப்பா

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

இத்தன புத்தகம் படிச்சு இத்தன நாடகம் பாக்குறீங்க. எப்படி முடியுது?

இந்த நலுங்குமாவு பேர இப்பத்தான் கேள்விப்படுறேன்.

ரெண்டு கேள்விகளும் பேத்தல். ரெண்டு விடைகளும் மகாபேத்தல்.

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

துளசி :-)))))))))

ராகவா, இனிமேல் பதிவை ஒழுங்கா படிக்காம பின்னுட்டம் விட்டால், ஒரு பிழைக்கு பத்து பின்னுட்டம் பைன் :-)
டிரெய்லர்/ விளம்பரம் காட்டுகிறார்களே என்ன கதை என்றல்லவா கேட்டு இருக்கிறேன்? சீரியல் எல்லாம் பார்க்கும்
அளவிற்க்கு பூமாதேவிக்கு இணையான பொறுமை எனக்கு இல்லையப்பா!
பிறகு, சும்மா எப்பொழுதும் சீரியசாய் இருக்க முடியுமா? சில சமயம் பேத்தல், அபத்தம் போன்றவையும் வாழ்க்கைக்கு சுவைக் கொடுக்கும்.

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

// ramachandranusha said...
ராகவா, இனிமேல் பதிவை ஒழுங்கா படிக்காம பின்னுட்டம் விட்டால், ஒரு பிழைக்கு பத்து பின்னுட்டம் பைன் :-)
டிரெய்லர்/ விளம்பரம் காட்டுகிறார்களே என்ன கதை என்றல்லவா கேட்டு இருக்கிறேன்? சீரியல் எல்லாம் பார்க்கும்
அளவிற்க்கு பூமாதேவிக்கு இணையான பொறுமை எனக்கு இல்லையப்பா!
பிறகு, சும்மா எப்பொழுதும் சீரியசாய் இருக்க முடியுமா? சில சமயம் பேத்தல், அபத்தம் போன்றவையும் வாழ்க்கைக்கு சுவைக் கொடுக்கும். //

சரி. இதோ பைன் பின்னூட்டம். :-)

பூமாதேவிக்கே பொறுமை அப்பப்பப் போகுதாம். ஏதேதோ நெலநடுக்கம். சுனாமின்னு சொல்றாங்களே.

நலுங்கு தமிழோ தெலுங்கோ...ஆனா தமிழ்நாட்டுல ரொம்பப் பாப்புலர். என்னோட BIL கூட அந்த சோப்புப் போடுறாரு. நாம வழக்கம் போல மெடிமிக்ஸ்தான். இதுக்கு எதுவும் விளம்பரம் வருதா என்ன?

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

அந்த கேள்வி பதில்களைப் பார்த்தால் ஏன்தான் இப்படி எல்லாம் எழுதி வாசிப்பபவர்களை முட்டாளாக்குவதில் சந்தோஷப்படுகிறார்கள் என்று தோன்றுகின்றது. ம்ம்ம்ம்ம்.

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

உஷா, நானும் அந்த கேள்வியை படித்துவிட்டு மிகவும் மனம் நொந்து போய்விட்டேன். நான் இனிமே மந்திரம் எல்லாம் சொல்ல முடியாதா என்று ஒரே வேதனையாய் போய்விட்டது. நீங்கள் குமுதம் ஜோசியம் கேள்வி பதில் படித்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். அசைவம் சாப்பிடுவர்கள் எந்த மாதிரியான கொடூர தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்று ஒரே விளக்க மழைதான். நலுங்கு மாவு தெரியாது என்று சொல்லி இப்படி கலாசார சீரழிவை காட்டலாமா உஷா?:))

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

இன்றைய பத்திரிக்கைகள் அக்கறை காட்டும் ஒரு விஷயம்,

பணம், பணம், பணம்.
(டீஜெண்டா சொன்னா அதிக பிரதிகள் விற்க வேண்டும்).

அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதாக எனக்கு தோன்ற வில்லை.

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

ராகவா, டிவியைப் போட்ட நலுங்குமாவுதானே? கடைக்குப் போனால் வாய் ஆட்டோமெடிக்கா ஹமாம் நலுங்குமாவு சோப்பை கேட்கும்
நிலைக்கு தள்ளுகிறார்கள் :-) நான் எப்பொழுதும் டோவ்தான். அப்பதான் சருமம் fine ஆ மட்டுமல்லா பிரமாதமாகவும் இருக்கும்
:-))))))))))))))

மங்கை அதேதான், முட்டாள்தனமான உளரலையோ, அபத்தத்தையோ சகித்துக்கொள்ளலாம். ஆனால் வாசகர்களை முட்டாள் ஆக்கும், தவறான வழியில் இழுக்கும் எழுத்தை அனுமதிப்பது ஆபத்தில்லையா?

பத்மா, நரகம் பற்றி சில புராணங்களில் வரும். அதைப் படித்தால் உலக மனுஷ பிறவியில் ஒருவருக்கு கூட சொர்க்கம்
கிடைக்காது. இனிமேல் சுலோகம் சொல்லாமல் சாமி கும்பிடுங்கள் :-)
நலுங்கு மாவு என்று தமிழில் சொல் உண்டா? என்ன குண்டு தூக்கிப் போடுரீங்க?

வெங்கட் ராமன், பணம் தேவை என்றாலும் சமூக பொறுப்பு என்று ஒன்று உண்டல்லாவா? சிகரெட், மதுபான விளம்பரங்கள்
ஆனந்தவிகடனில் வராது என்பது தெரியுமல்லவா? அவர்களா இப்படி மூட நம்பிக்கையை பரப்புகிறார்கள்
என்று ஆச்சரியமாய் இருக்கிறது.

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

உஷா, அது தமிழா தெலுங்கா சம்ஸ்கிருதமா ன்னு தெரியாது. சின்ன வயசில பாட்டி வீட்டுக்கு போனா அதுதான் சோப்.
அப்புறம் இங்கெ அமெரிக்காவில் ஒரு தோல் நிபுணர் தோழிக்கிட்ட அதப்பத்தி சொல்ல போக, கொஞ்சம் கிடச்சா அது எப்படி ஸ்கின் செல்சோட ஆயி சுரப்பிகளோட வேலை செய்யும்ன்னு பார்க்கலாமே ன்னு பேசிக்கிட்டிருந்த ஞாபகம் வருது.

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

எல்லா topic ஹாட் நியூசையும் ஒரு கலக்கு கலக்கிட்டீங்க !!

//ஒருவரின் உடலுறுப்பை இன்னொ ருத்தருக்குப் பயன்படுத்துவது நம் சாஸ்திரத்துக்கு விரோதமானது. சாஸ்திர விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்யப்படுகின்றன. இதையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். //

உடல் உறுப்பு தானத்திற்கு இப்பொழுதுதான் சில பேர் முன் வரும் பொழுது...பிரபல பத்திரிக்கைகள் இம் மாதிரியான பதில்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது..

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

ஒருவரின் உடலுறுப்பை இன்னொ ருத்தருக்குப் பயன்படுத்துவது நம் சாஸ்திரத்துக்கு விரோதமானது. //

அடப் பாவிகளா?
இதை எழுதியவர், இதைப் பதிப்பித்தவர்கள் இவர்களுக்கெல்லாம் எந்தவித தண்டனை கிடைக்குமாம்?

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

"ஆனந்தவிகடன் போன்று மக்களின் நம்பிக்கைப் பெற்ற,அதிக வாசகர்கள் கொண்ட பத்திரிக்கைகள் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் செய்வது சரியா?"

உஷா, எந்த காலத்தில் இருக்கிறீர்கள். ஜூனியர் விகடன் என்று ஒரு பத்திரிக்கை இருப்பது தெரியுமா? அதன் கவர் ஸ்டோரியில் வருவதை வீட்டில் அனைவரும் உட்கார்ந்து விவாதிக்க முடியாது...ஏன்? ஆனந்த விகடனையே தமிழ் தெரியாத மக்கள் மத்தியில் வைத்து மும்பை ரயிலில் பிரித்து படிக்கையில் நமது தரத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வெட்கமாக இருக்கும்...

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

//அடுத்து, இணையத்தில் அதிகம் இடம் பெற்ற இந்த வார சொல் பார்பனர்/ பிராமணன் மற்றும் பெரியார். என்ன ஒற்றுமை! முதல் வார்த்தை இருபதாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்றரை தடவையும், அடுத்த வார்த்தை இருபதாயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஒன்றே கால்
தடவையும் வந்துள்ளது. (கால், அரை கணக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக், அதாவது அவசரத்தில் உணர்ச்சி வேகத்தில் தட்டச்சும் பொழுது கால் போட தவறியது போன்று)//

என்னை வெச்சி காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?:):)

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

//முதல் வார்த்தை இருபதாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்றரை தடவையும், அடுத்த வார்த்தை இருபதாயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஒன்றே கால்//

முத வார்த்தைக்கு கொஞ்சம் அதிகம் போட்டு உங்க புத்தியைக் காட்டிட்டீங்களே!!! :-D

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

(வீட்டுல புருஷன் ஒரு வார்த்தை தப்பா பேசினா கூட உள்ள வெச்சிடுவாங்கன்னு சட்டம் எல்லாம் வந்திருக்கு, ஆனா வன்புணர்வுயில் ரெட்டை புள்ளை பெத்திக்கிறதா சீன் வருது. கேட்ட இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு முந்திய பிளாஷ்பேக்குன்னு சொல்லுவாங்க. அது சரி, கதை அப்ப நடக்கும்போது இந்த சட்டம் இல்லையே :-)

சரியான லாஜிக். k.s.ரவிகுமாருக்கு உதவும்.

(நலங்கு/ நலுங்கு மாவு
என்ற பெயர் தமிழில் கேட்டதே இல்லையே? அப்படி ஒரு மாவு இருக்கா என்ன?)

LIFCO அகராதியில் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) என்று போடப்பட்டுள்ளது.

(அது சரி எல்லாம் சீரீயலிலும் இதே கதைதானே?)

இதை பற்றி நான் எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது.

(கால், அரை கணக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக், அதாவது அவசரத்தில் உணர்ச்சி வேகத்தில் தட்டச்சும் பொழுது கால் போட தவறியது போன்று)

இதெல்லாம் இனையத்துல சகஜமுங்க.

(ஆனந்தவிகடன் போன்று மக்களின் நம்பிக்கைப் பெற்ற,அதிக வாசகர்கள் கொண்ட பத்திரிக்கைகள் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் செய்வது சரியா?)

இதை விட கொடுமை. சுவாமிகள் என்ற பெயரில் யார் என்ன எழுதினாலும் அதை அப்படியே வெளியிடும் சமூக சீர்திருத்த பத்திரிகைகள் ஏராளம் உண்டு.

சென்ஷி

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

(நாம்தான் நமது கலாசாரத்தில் இருந்து வெகுதூரம் விலகி வந்து, மாற்றுக் கலாசாரத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு விட்டோமே... நம்மால் எப்படி அவர்களை பழைய மாதிரியாக மாற்ற முடியும்?)


விதி படத்தில் பாக்யராஜ் வரும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

உஷா அக்கா நான் முழுசா பின்னூட்டத்தையும் படிச்சுட்டுத்தான் எழுதினேன்.

சென்ஷி

 
At Sunday, 12 November, 2006, சொல்வது...

சுந்தரி, உங்க கருத்துதான் எனக்கும்.

தருமி சார், என்ன தண்டனையா? நேரா நரகம்தான் ;-)

பிரபு, இணையத்தில் படிப்பதால் வேண்டிய பக்கம் மட்டும் படிப்பவர்கள் கண்ணில் மட்டும் படுகிறது. ஆனால் புத்தகமாய்
இருந்தால், எல்லா பக்கங்களையும் புரட்டுகிறோம், கண்ராவிகள் நம் கண்ணிலும் விழுகிறது, மற்றவர்கள் பார்வையிலும் படுகிறது. நான் இணையத்தில் படிப்பதால் ஜூவியின் தாக்கம் அதிகம் தெரியவில்லை.

கருப்பு சார், அனைத்து பெருமையும் நீங்களே எடுத்துக்கொள்வது நியாமில்லை :-)

இ.கொ, இன்றைய நிலவரப்படி பெரியார் மிக பின்னால் போய்விட்டார். என்ன செய்வது நான் நடந்துக் கொண்டு இருப்பதைதானே எழுத முடியும் :-)))))

சென்ஷி, நலங்கிடுதல் என்பதை பற்றி பின்னுட்டத்தில் சொன்னதுதான். மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்ந்தது என்று, ஆனால்
நலுங்கு மாவு சோப், சுண்ணாம்பை முகத்தில் தேய்த்தால் என்னவாகும்? விதி வந்து இருபது வருடத்திற்க்கு மேலே
இருக்கும். இந்த பதில்கள் அதைவிட பிற்போக்குதனமாய் இருக்கே!

 

Post a Comment

<< இல்லம்