Thursday, October 12, 2006

எனக்கு பொழுதுபோகவில்லை

பொழுது போகவில்லை எனக்கு
கையில் கிடைத்த அட்டையில்
ஜிகினாதாளை ஒட்டி தயாரிக்கிறேன்
ஒரு அட்டை கத்தி
விளக்கொளியில் பளபளக்கிறது கத்தி!
காற்றில் விசுகிறேன்
மனம் போனப்படி!
லேசாய் படுகிறது
எதிராளியின் கண்ணில்
தொடங்கியது யுத்தம்
வேண்டாம் இந்த சலசலப்பு
சும்மா இரு என்று பலர் கூறினாலும்
பொழுது போகவில்லையே எனக்கு!
லேசான காயம், சொரிந்து
சொரிந்து பெரியதாகிறது
ரத்தமும், சீழும் வழிகிறது பார்
என்றுக் கூக்குரலிட்டேன்
மருந்தும் அறிவுரையும்
நாலாப்பக்கத்தில் இருந்துவர
மனதிற்குள் புன்னகைக்கிறேன்
புண்ணின் வலி அதிகரித்தாலும்
சொரிவதில் உள்ள சுகம்
அவர்களுக்கு தெரியவில்லை
என்ன செய்வது
எனக்கு பொழுதுபோகவில்லையே!

22 பின்னூட்டங்கள்:

At Thursday, 12 October, 2006, சொல்வது...

நல்ல கவிதை!

:)

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

எனக்கு பொழுது போதவில்லை.

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

//புண்ணின் வலி அதிகரித்தாலும்
சொரிவதில் உள்ள சுகம்
அவர்களுக்கு தெரியவில்லை
என்ன செய்வது
எனக்கு பொழுதுபோகவில்லையே! //

என்ன, மறுபடி ஆரிய திராவிட பதிவு எதுவும் சூடா ரெடியாகுதா?

மாயா,லக்கிலுக்,முத்து தமிழினி எல்லாம் ரெடியா இருங்கப்பா......

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

//காற்றில் விசுகிறேன்
மனம் போனப்படி!//

இருட்டில் வீசாம இருந்தாச் சரி:-)

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

//என்ன செய்வது
எனக்கு பொழுதுபோகவில்லையே!//
யக்காவ், சூப்பர்!!

மனசு, அழைக்க வேண்டியது அந்த லிஸ்டை அல்ல.. :)))

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

உஷா..

பலரின் எரிச்சலை, அழகான கவிதையில் சொல்லி விட்டீர்கள்..

//புண்ணின் வலி அதிகரித்தாலும்
சொரிவதில் உள்ள சுகம்
அவர்களுக்கு தெரியவில்லை
என்ன செய்வது
எனக்கு பொழுதுபோகவில்லையே//

:-(

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

:-))))

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

:)

சூப்பர் கவிதை!

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

குரங்கின் மேல் சாயம் தடவிய கதைதான்..

பதிவு நன்று,...

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

ஒரு சந்தேகம், சொரி - சொறி எது சரி?

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

சற்று விளங்கவில்லை என்றாலும் நல்ல கவிதை...

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

சிபி, நன்றி

குமரன், அதுதான் தெரியுமே? புதுசா இரண்டு பதிவு ஆரம்பிச்சத்தைப் பார்த்தேன்.

மனசு, பொன்ஸ்! கவிதை என்பது அவரவர் பார்வையில் ஒவ்வொருவிதமாய் பொருள் கொள்ளப்படும். அது அவரவர்
அறிதலின் பொருத்தே! ஆகையால் இதுவா அதுவா என்று படைத்தவனி (ளி) டம் கேட்க்கக்கூடாது என்று கவிதை உலகின் ஆதார விதி!

துளசி, அட்டை கத்தியை வீசும்பொழுது வெளிச்சமா இருட்டுன்னு பார்க்க வேண்டுமா என்ன?

மனதின் ஓசை அழகான கவிதை என்றதற்கு நன்றி

கல்வெட்டு, தேவ், பூங்குழலி நன்றி

ரவி, நான் ஒரு சாதாரண வீட்டு பெண். அதனால் பொழுது போகவில்லை என்பதை கவிதையாய் வடித்துள்ளேன். இப்ப புரியுதான்னு பாருங்க

பொன்ஸ், சின்ன ரீயா பெரிய றீ யா என்று எனக்கும் குழப்பமாய் இருக்கிறது.

 
At Friday, 13 October, 2006, சொல்வது...

//ஒரு சந்தேகம், சொரி - சொறி எது சரி?//

சொறிதல் - தூவுதல் என்ற பொருளில் வரும். அதாவது பூச்சொறிதல் என்றால் பூக்களைத் தூவுதல்.

சொரிதல் - சொரிதல் என்பது அரிக்கும் இடத்தில் சொரிந்து கொள்வதைக் குறிக்கும். உதாரணம் பொங்கல் இனாமிற்காக தலையைச் சொரிதல்.

என்று நினைக்கிறேன்.

 
At Friday, 13 October, 2006, சொல்வது...

ஆவி அண்ணாச்சி!

சொரிதல்- பூச் சொரிதல் அதாவது கொட்டுதல்; எனும் கருத்துடையது" பொன்பூச் சொரியும் பொலிந்து செழுந்தாதிறைக்கும்.....என ஒரு பாடல் உண்டு; கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய ...என ஓர் பெரிய புராணப்பாடலும் உண்டு.

சொறி: தலை சொறிதல்; சொறிசிறங்கு வியாதி; போன்றவற்றைக் குறிக்கும்

யோகன் பாரிஸ்

 
At Friday, 13 October, 2006, சொல்வது...

யோகன் பாரீஸ்,

சரியான விளக்கத்தைக் கொடுத்தமைக்கு நன்றி!

சந்தேகம் இருந்ததால்தான் //என்று நினைக்கிறேன்// என்று கடைசியில் சொல்லியிருந்தேன். நல்லதாகப் போயிற்று.

நீங்கள் பாரீஸிலா இருக்கிறீர்கள்? நான் தாம்பரம்.

 
At Friday, 13 October, 2006, சொல்வது...

ஆவி அண்ணாச்சி!
நான் பாரிசில் இருக்கிறேன். ஈழத்தில் யாழ்ப்பாணம் சொந்த இடம்.
தயவு செய்து சொறி சிரங்கு - என வாசிக்கவும்.
யோகன் பாரிஸ்

 
At Saturday, 14 October, 2006, சொல்வது...

உஷா அவர்களுக்கு,

யதார்த்தத்தை எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. மொட்டையாக எழுதியதால் எதற்கு வேண்டுமானாலும் பொருந்தும் போல இருக்கிறது. ஒருவேளை நீங்கள் நினைத்ததும் அதுதானோ என்னவோ? :-)

அட்டைக்கத்திக்காரி அட்டைக்கத்தியை வைத்திருக்கிறோம் என்று உணர்வோடு நிஜ கத்திக்காரர்களிடம் அடக்கி வாசிக்கலாம். இப்படி அட்டைக்கத்திக்காரர்களிடம் வம்பிழுப்பவர்களும் இதே "பொழுது போகவில்லை" பாலிஸியில்தான் வம்பிழுக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

நானோ,...அடுப்பில் ஏதோ காய்கிறது போல!! வீட்டுவேலையை பார்க்கிறேன்...

நன்றி

 
At Saturday, 14 October, 2006, சொல்வது...

ஆவி, யோகன் புண் என்பதற்கு சொறி சரி. ஆனால் சொரிதல் என்பதற்கு சின்ன ரி தான் வரும் என்று தோன்றுகிறது.

ஜயராமன் சார், கவிதை என்று எழுதிவிட்டு, பக்க பக்கமாய் எழுதியவர்கள் விளக்கம் தரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆக என்ன பொருள் என்பது படிக்கிறவர்கள் நினைப்பதுதான்.

ஆனா, சின்ன கேள்வி அது என்ன அட்டைக்கத்திகாரி, காரன் இல்லையா?

ஒரு சின்ன விஷயம்- இங்க எழுதுகிற பெண்கள் பெரும்பாலும் தங்கள் பெயரையோ, அடையாளத்தையோ மறைப்பதில்லை :-)

 
At Saturday, 14 October, 2006, சொல்வது...

உஷா அவர்களே,

நன்றான பதில்களுக்கு நன்றி.

மேலும் விளக்கங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போலும்...

///ஆனா, சின்ன கேள்வி அது என்ன அட்டைக்கத்திகாரி, காரன் இல்லையா? ///

இல்லை. இந்த பதிவின் context ல் இல்லை.

////ஒரு சின்ன விஷயம்- இங்க எழுதுகிற பெண்கள் பெரும்பாலும் தங்கள் பெயரையோ, அடையாளத்தையோ மறைப்பதில்லை :-) ////

வாஸ்தவம்தான்... நானும் அதை முறையில் சிந்திப்பவன் ஆனதால் இந்த நிலைப்பாடு மனசுக்கு புரிகிறது. எத்தனையோ திட்டுகளும், மிரட்டல்களும் வந்தும் வேறு ஐடியா தோன்றவில்லை...

ஆனால், இது ஒரு விசேஷமான qualification அல்லது certificate ஆக தோன்றவில்லை. இப்போதய சூழலில் இணையத்தில் சகஜமாக யதார்த்தமாக இல்லாமல் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியது. சிலர் தேவை என்றும் சொல்லலாம். அவ்வாறு முடிவெடுப்பவர்கள் ஒருவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. நாமும் விசேஷமானவர்களும் அல்ல.

வணக்கம்.

 
At Saturday, 14 October, 2006, சொல்வது...

//நீங்கள் பாரீஸிலா இருக்கிறீர்கள்? நான் தாம்பரம்.
//
ஆவி, "நான் என்று எண்ணப் படுபவர்கள்" என்று நீங்கள் போடுவதாக இருந்தால், தளபதி சிபியாரின் பெயரை மறக்காமல் குறிப்பிடவும்! ;)

 
At Saturday, 14 October, 2006, சொல்வது...

ஜயராமன் சார், ஆமாம். இது அவரவர் சொந்த விஷயம். என்னுடைய நிலைப்பாடு, பிரச்சனைக்குரிய விஷயமானாலும்
என் பெயரிலேயே எழுதுவது என்று வைத்துள்ளேன்.இதை இங்கு பெருமையாக சொல்லிக் கொள்ளவில்லை. இதுவும்
என் சொந்த விஷயம் :-)

வாய்சொல்லில் வீரன் (!), மேலே ஜயராமனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும்! பொதுவாய் பெண்களுக்கு தைரியம்
அதிகம் என்பது என் கருத்து.

 
At Tuesday, 17 October, 2006, சொல்வது...

வைசா, தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

Post a Comment

<< இல்லம்