Friday, November 03, 2006

என் கணவர் டயட் செய்கிறார்

போன வருடம் ஒருநாள், இளைத்து துரும்பாய் போன அஜித் படம் ஒன்று வந்ததே, பரமசிவம் தானே, இந்த மாதிரி படங்கள் எல்லாம் எல்லாம் நான் பார்ப்பதில்லை. அதில் அஜீத்தின் இளைப்பு பரிதாபமாய் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு சில
மாதங்களுக்கு முன்பு அஜித்தின் புகைப்படங்கள் ஆனந்தவிகடனில் வந்தது. அழகான கோணத்தில், சரியான லைட்டிங்கில் எடுத்த படம் . அந்த அஜீத்தைப் பார்த்து வியந்து, ஐயோ காலேஜ் பையன் மாதிரி அஜித் ஆயிட்டாரே என்று என் மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தப் பொழுது ஆ.வியை எட்டிப் பார்த்துவிட்டு, "இது என்ன அதிசயம்? டயட் இருந்தால் உடம்பு இளைக்கிறது" என்றார் நம்மாளு.

வழக்கப்படி இந்த வசனத்தைக் கேட்டு நீண்ட பெருமூச்சு விட்டேன்.. இதிலிருந்தே என் கணவரின் எடையை நீங்கள் உகித்திருக்கலாம்.

உடனே என் மகன், "எங்கே நீ இளைத்துக்காட்டு பார்போம்" என்று பாயிண்டைப் பிடித்தான். "நடக்கிற விஷயமா பேசு" என்றேன் விரக்தியுடன்.

"அவ்வளவுதானே, இளைத்து காட்டரேன் பாரூ" என்று சவால் விட்டார். "எவ்வளவு வருஷத்தில்?" மகள் நக்கலாய் கேட்டாள்.

"ஆறே மாதத்தில்" என்றதும், பையன் "சேலஜ்" என்றவன், அன்றிலிருந்து மகனும் மகளும் தந்தையை "இளைய அஜீத்" என்று அழைக்கத் தொடங்கினர்.

உடனே என் கணவர் டய்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்றெல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க. இது அவ்வப்பொழுது பேசி காற்றோடு போகும் சமாச்சாரம் இது. ஆனால் நாங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்போம். வெளியே வாக்கிங் செய்ய நேரமில்லை என்று
சொன்னதால், என் சேமிப்பில் டிரெட் மில் வாங்கிக் கொடுத்தேன். சில நாள் செய்திருப்பார். பின்பு அதையும் விட்டு விட்டார்.

நான் ஒரு முறை ஊருக்கு சென்று வரும் பொழுது சைக்கிளிங் மிஷின் உட்கார்ந்திருந்தது. ஆனால் ஒண்ணு, டிரெட் மில்லையாவது சில நாட்கள் உபயோகித்துப் பார்த்துள்ளேன். இதில் உட்கார்ந்துக் கூட நான் பார்த்ததில்லை.

வேஸ்ட்டாய் போகிறதே என்று மாலை ஆனந்தம் அல்லது மலர்கள் தொடர்களைப் பார்த்துக் கொண்டு, இவைகளை உபயோகித்து ஆரம்பித்தேன்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இளைய அஜீத், நான் டயட் செய்யப் போகிறேன் என்று அனஸ்மெண்ட் கொடுத்தார். உணவு கட்டுப்பாடு செய்யப்போகிறேன், காலையில் கார்ன்பிளேக்ஸ், மதியம் தயிர்சாதம், இரவு டிபன் என்று சொன்னார். பொதுவாய் காலை டிபன் என்பது இட்லி, தோசை, அடை, பொங்கல் வித் சட்னியுடன் இருக்கும். சட்னி இருந்தாலும் நம் ஜோ போல, நல்லெண்ணைய் நன்றாக விட்டுக் கொண்டு பொடியும் உண்டு. வெள்ளைக்காரர்களைப் பார்த்து காப்பி அடிக்கும் பிரட், கார்பிளேக் சாப்பிடும் பழக்கம் கிடையவே
கிடையாது.

மதியம் குழம்பு/ சாம்பார் என்று ஒன்றும், பொரியல், ரசம், கெட்டி மோர் என்று சம்பிரதாயமாய் உள்ளே போகும். இரவு பெரும்பாலும் சாதம்தான். பலமுறை சப்பாத்தி செய்து, சாதம் இல்லாவிட்டால் சரிப்படவில்லை, என்று சப்பாத்தி + சாதம் என்று போனதால்,
பயந்துப் போய் சப்பாத்தி செய்வதை விட்டு விட்டேன்.

ஆனால் இம்முறை இரவு கட்டாயம் சாதம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இட்லி, தோசை வகையறாக்கள் இரவுக்கு மாறின. இரண்டொரு நாளுக்கு பிறகு கார்ன்பிளேக்ஸ் museli க்கு மாறியது. மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு போகிறேன் என்று சொன்னதால், தயிர்சாதத்துடன் கேரியரில் ஒரு மேல் அடுக்கில் ஒரு பொரியல், நடு அடுக்கு காலியாய் இருந்ததால் அதில்
உரித்த ஆரஞ்சு ஒன்று, கொஞ்சம் திராட்சை பழங்கள், சில துண்டுகள் முலாம் பழம். தனியாய் ஒரு ஆப்பிள்.

இப்படி ஒரு வாரம் போனது. மனுஷன் சாப்பிடுவானா இதை என்ற காலை டிபனின்பொழுது முணுமுணுப்பு ஆரம்பித்தது. வழக்கமான டிபன் செய்துவிடேன் என்றார். அதற்கென என்று நான் யதார்த்தமாய் விளைவுகளைப் பற்றி அறியாமல் சொல்லி விட்டேன்.

அதாவது காலை, மாலை டிபன் வேண்டுமாம். சமையல் செய்வது சுலபம். ஆனால் காலை, மாலை பலகாரம் என்றால் மண்டை காய்ந்து விடுகிறது. சில டிபன்கள் காலையில் செய்யலாம், ஆனால் இரவு டிபன் என்றால் அதற்கென்று சில உண்டு. எப்படியும் மதியம்
வழக்கமான சமையல் எங்களுக்கு வேண்டும். ஆக, சமையல் அறை சிங்கில் பாத்திரங்கள் எப்பொழுதும் தேய்க்க குவிந்துக் கொண்டே இருந்தன. சோகத்துடன் செய்துக் கொண்டு இருக்கிறேன்.

இது இப்படி இருக்க, நேற்று மகனின் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சந்திப்பு. ஆசிரியர்களுடன் பேசிவிட்டு வரும்பொழுது திரு. திருமதி ...., ஆச்சரியத்துடன் பார்த்து, "என்ன இவ்வளவு ஸ்லிம்மா ஆயிட்டீங்க? டயட் ஏதாவது செய்றீங்களா?" என்றுக் கேட்டதும், அப்படியே நின்று விட்டேன்.

அவர் கேட்டது என்னை !!!!

35 பின்னூட்டங்கள்:

At Saturday, 04 November, 2006, சொல்வது...

// ஆக, சமையல் அறை சிங்கில் பாத்திரங்கள் எப்பொழுதும் தேய்க்க குவிந்துக் கொண்டே இருந்தன. சோகத்துடன் செய்துக் கொண்டு இருக்கிறேன். //
உடல் இளைக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா ?
:-)

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

மூணு வேளையும் விதம் விதமா சமைச்சுப் போட்டா அப்படி தான் கேப்பாங்க. காலையிலே இட்லி, தோசை, அடை with சட்னியா? ஹ்ம்ம்ம் பெருமூச்சு விட்டுக்கிறேன் :-)

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

//இது இப்படி இருக்க, நேற்று மகனின் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சந்திப்பு. ஆசிரியர்களுடன் பேசிவிட்டு வரும்பொழுது திரு. திருமதி ...., ஆச்சரியத்துடன் பார்த்து, "என்ன இவ்வளவு ஸ்லிம்மா ஆயிட்டீங்க? டயட் ஏதாவது செய்றீங்களா?" என்றுக் கேட்டதும், அப்படியே நின்று விட்டேன்.

அவர் கேட்டது என்னை !!!!//

ஹி...ஹி...யாரோ ஒருத்தங்க இளைச்சாங்க இல்ல...விடுங்க! ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க.
:)))

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

Almost same story in each and every expatriate home in the middle east. My wife lost 5 kgs but I gained 5 Kgs in the last 6 months. :(

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

அட என்ன அக்கா இப்படி சொல்லிட்டீங்க.

வரலாறு பாத்துட்டு நான் கூட ஷாலினிக்கு மெயில் அனுப்பிச்சு கேக்கலாமான்னு நினச்சுகிட்டிருந்தேன். வேணாமா?

சப்பாத்தி மட்டும் சாப்பிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருப்பதில்லை என்பதென்னவோ உண்மைதான்.

டிபனோ போட மாட்டேன், ஸ்லிம்மும் ஆகணும்னா பாவம் என்னதான் செய்வாரு?

சூப்பர்.

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

எப்படியும் மதியம்
வழக்கமான சமையல் எங்களுக்கு வேண்டும். ஆக, சமையல் அறை சிங்கில் பாத்திரங்கள் எப்பொழுதும் தேய்க்க குவிந்துக் கொண்டே இருந்தன. சோகத்துடன் செய்துக் கொண்டு இருக்கிறேன்.

Sell the tread mill and exercise bycycle and keep that money safe.Ask him to get you a dish washer or ask him to wash all vessels when he is back from work.
Does your husband read your blog?.

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

நல்ல அனுபவம்......... :-))))

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

as always, satire was good in yr article. mild and gentle satire with proper/ optimum usage of words.

onnu vena pannalam. ovvoru chapathukko, idlikko, adaikko, oru murai, area vai suthi odi vara sollalam, ungal anbu kanavarai. paasa migudhiyal, avarukkaga neenal vodaamal irundhal sari!!

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

வாய்க்கு உருசியாக ஆக்கிப் போட ஆள் இருந்தால் டயட்டிங் ஆவது ஸ்லிம்மிங் ஆவது ?

இப்போதெல்லாம் ramp இல் கூட இளைப்புக்கு மதிப்பில்லையாமே !-- இது நான் என் மனைவிக்குசொல்வது :))

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

இந்த கதையை அமெரிக்காவிலும் கேட்ட மாதிரி இருக்கே. ஹிஹிஹி....

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

ஹி..ஹி...ஒரு பக்கமா நீங்க சொல்றத வச்சி எப்படி ஒரு முடிவுக்கு வர்றது, அந்த அப்பாவி(!) என்ன சொல்றார்னு தெரிஞ்சாத்தானெ ஒரு முடிவுக்கு வரமுடியும்....

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

//அதாவது காலை, மாலை டிபன் வேண்டுமாம். சமையல் செய்வது சுலபம். ஆனால் காலை, மாலை பலகாரம் என்றால் மண்டை காய்ந்து விடுகிறது. சில டிபன்கள் காலையில் செய்யலாம், ஆனால் இரவு டிபன் என்றால் அதற்கென்று சில உண்டு. எப்படியும் மதியம்
வழக்கமான சமையல் எங்களுக்கு வேண்டும். ஆக, சமையல் அறை சிங்கில் பாத்திரங்கள் எப்பொழுதும் தேய்க்க குவிந்துக் கொண்டே இருந்தன. சோகத்துடன் செய்துக் கொண்டு இருக்கிறேன்.// இதே மாதிரி புலம்பல் தான் இங்கேயும், உடல் இளைக்க ஏதாவது பிரயத்தனம் பண்ணி குறைக்கலாமுன்னு நம்ம நினைச்சாலும் இப்படி மூக்க சிந்தி நம்மளை அப்படியே வச்சு பார்க்க தான் ஆசை, ம்.. எப்ப இளைச்சு, எப்ப சின்ன அஜீத்தாகறது நம்ம!

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

உஷா,

நீங்க சொன்ன மிஷின்கள் எல்லாம் இங்கே, நம்ம வீட்டிலேயும் இருக்கு. ஆனா பார்க்கறதுகு
மலர்களோ அப்புறம் ஆனந்தமோ இன்ன பிற வகைளொ இல்லீங்களே.
இப்பத் தெரிஞ்சுப்போச்சு, என்னாலே இளைக்கமுடியாத காரணம்? எங்கெ அந்த மலர்கள்?

( கோபால் தினமும் ட்ரெட்மில் ஓட்டம், ஆஃபீஸுக்கு நடை, அதுவும் 4 தடவை)

காலை இட்டிலி தோசை எல்லாம் போயே போச்.
நாங்க வெள்ளைக்கலர் இல்லாத வெள்ளைக்காரங்க:-))))

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

ஏதோ பழமொழி சொல்வாங்களே - ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... அந்த மாதிரி உங்க கணவருக்காக நீங்க கஷ்டப்பட்டு... இப்போ நீங்க 'சின்ன ஷாலினி'-ஆயிட்டிங்க போல..

இங்கே கதை அப்படியே உல்டா... என் மனைவி கொஞ்சம் வெயிட் போடனும்னு நான் உதவி பண்ணப்போயி... அதே பழமொழிதான் :-(

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

ஏதோ உங்களுக்காவது பலன் கிடைக்கிறதே :)

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

துளசி...
---நாங்க வெள்ளைக்கலர் இல்லாத வெள்ளைக்காரங்க---

:))

'என் சோகக்கதையக் கேளு தாய்க்குலமே...'

ட்ரெஸிங் இல்லாத சாலட்டுடன்,
-பாலாஜி

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

//"என்ன இவ்வளவு ஸ்லிம்மா ஆயிட்டீங்க? டயட் ஏதாவது செய்றீங்களா?" என்றுக் கேட்டதும், அப்படியே நின்று விட்டேன்.

அவர் கேட்டது என்னை !!!!
//

வெடித்துச் சிரித்துவிட்டேன்.
:))

நீங்கள் சொல்லும் மெனுவை பார்த்து பொறாமை தான் பட முடியும் என்னால். சாப்பிடும் நாள் என்னாலோ தெரியாது.ம்ம்ம்ம்

அக்கா, வெயிட் போட வழி எதாவது இருந்தா சொல்லுங்களேன். ப்ளீஸ்.

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

வரென் வரேன், கொஞ்சம் நிதானமாய் வந்து எல்லாருக்கும் பதில் சொல்கிறேன்

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

// அக்கா, வெயிட் போட வழி எதாவது இருந்தா சொல்லுங்களேன். ப்ளீஸ். //

இன்னும் திருமணம் ஆகாமலிருந்தால், சமையல் நன்றாகச்(!) செய்யத் தெரிந்தவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்:-)))

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

பால்ராஜ்கீதா, சென்னைக்கு வந்துட்டீங்க இல்லே, எடை ஏறியிருக்குமே :-)

ராசா, வெங்காய சட்னி அரைக்கும்பொழுது உன்னை நினைத்துக்கொள்வேன் :-)
ரவா தோசை, பாசி பருப்பு தோசை பட்டியலில் விடுப்பட்டுப்போனது (என்ன வாராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க?

கைப்புள்ள,
// ஹி...ஹி...யாரோ ஒருத்தங்க இளைச்சாங்க இல்ல...விடுங்க! ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க.
:)//

நானே அண்டர் வெயிட்டில் இருந்து சில வருடமாய் சில கிலோக்களை ஏத்திருக்கிறேன் :-(

அபிராமன், இங்கு கிடைக்கும் பாலும் மோரும் மற்றும் வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிடுவது ஒரு காரணம் இல்லையா?

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

ராமநாதா! நீயும் சப்பாதிக்கு எதிரியா? சப்பாத்தியுடன் சாதம் சாப்பிட்டால் எடை கூடும் என்று எங்கோ படித்தேன். ஹூம்... ஷாலினி சொல்லை அஜித் கேட்பார், அவர் மட்டுமல்ல அனைத்து பிரபலங்களும் என் வெற்றிக்கு காரணம் என் கணவன்/
மனைவி என்ற வசனத்தை கட்டாயம் சொல்வது எனக்கு புரியாத ஆச்சரியம் :-(

ஸ்ரீநிதி, நான் ஒரு இல்லத்தரசி (பெரூதான் பெத்த பேரு என்று பாட்டி சொன்ன பழமொழி ஞாபகம் வருகிறது) இன்றைக்கு
காலையில் படித்து விட்டு, கமுக்கமாய் சிரித்தார். நேற்றே எழுத போகிறேன் என்று சொல்லிவிட்டே எழுதினார். எழுதிய பிறகே கொஞ்சம் வயிற்றேரிச்சல் குறைந்தது.

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

ஸ்ரீராம் ஸ்ரீதரன், நன்றி !சொன்ன பேச்சை கேட்கிற கணவனாய் இருந்தால் சொல்லலால். அதெற்கெல்லாம் எனக்கு
குடுப்பினை இல்லை.

மணியன் !கொஞ்சம் சுமாராய் இருந்தால் எனக்கே உள்ளே இறங்காது. பிரச்சனையின் மூலக்காரணம் அதுவாய் கூட இருக்கலாம்.

இ.கொ, இது சத்தியமாய் சொந்த, சோகக்கதை ஐயா :-)

ஐயா, கிளம்பி வாங்க. அப்படியே உங்களுக்கு பிடித்த சாப்பாட்டு லிஸ்ட்டையும் போட்டு முதலிலேயே அனுப்பிடுங்க

 
At Saturday, 04 November, 2006, சொல்வது...

வெ. நா பிரச்சனை விபரீதாய் போவதற்க்கு முன்பு விழித்துக்கொள்ளுங்க. நான் கூட ஆரம்பத்தில் எங்காளூ "மம்முட்டி"
மாதிரியே இருப்பார் என்று பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தேன்.

துளசி, //கோபால் தினமும் ட்ரெட்மில் ஓட்டம், ஆஃபீஸுக்கு நடை, அதுவும் 4 தடவை//

ஹூம்...... உங்களுக்கு ஜன்னல் வழியா பார்த்தால் நிஜ மலர்கள் பார்த்து ஆனந்தம் படலாம். நாங்க பாலைவனத்துல சன் டீவி மலர்கள் பார்த்து மனச தேதிக்கணும்.குடும்பத்துல ஒண்ணு இப்படி இருந்தா இன்னன்னு
அப்படித்தான் இருக்கும்போல, நான் காலையில் ஓட்ஸ் கஞ்சி, நடுவில் ஒரு ஆப்பிள் அல்லது மோர். பிள்ளைகளும்
காலையில் கார்ன்பிளேஸ்தான்

ஸ்ரீதர் வெங்கட், நான் எப்பொழுதும் "சின்ன ஷாலினி"தான் :-)

 
At Sunday, 05 November, 2006, சொல்வது...

பாபா., ஐயோ பாவம் ;-)

சின்னதம்பி, வெயிட் போட வேண்டும் என்றால், காசு பணம் பார்க்காமல் பக்கத்தில் ஏதாவது ஜிம் இருந்தால் சேர்ந்து
விடுங்கள். சேர்ந்து மூணு மாசம் கழித்து இந்த அக்கா சொன்ன வைத்தியத்தின் ரிசல்ட் பற்றி சொல்லுங்கள்.

லதா எனக்கு கல்யாணம் ஆகும்பொழுது எனக்கு சமைக்கவே தெரியாது. என் கணவர் எனக்கு முதன் முதலாய் தந்த பரிசு என்ன தெரியுமா? சமைத்துப்பார்- மீனாட்சி அம்மாளின் மூன்று புத்தகங்கள்.

 
At Monday, 06 November, 2006, சொல்வது...

வெயிட் குறைந்தது போல ஹுமரும் கொஞ்சம் குறைந்த மாதிரியில்ல இருக்கு. வயிற்றெரிச்சலை குறைக்க எழுதினாலும் சிறிது நேரமெடுத்திருக்கலாம். சீக்கரம் "வெயிட்" போடுவீர்கள் என்று எதிர்ப்பார்க்கும்..
ரவியா

 
At Monday, 06 November, 2006, சொல்வது...

உஷா இங்கே வர்றதுக்கு முந்தி நடந்ததா

இங்கே வர்றப்பவே சின்ன ஷாலினியா தானே வந்தீங்க!!!!!

 
At Monday, 06 November, 2006, சொல்வது...

உஷா இங்கே வரும்போதே நானும் நிர்மலாவும் கேட்டோமே?

பிறகு அந்த பணியாரம்...
ஜீரா, முருகன்...

நீங்க டயட் வேற இருக்கணுமா என்ன?
இப்பவே சின்ன ஷாலினியாதானே
இருக்கீங்க

 
At Monday, 06 November, 2006, சொல்வது...

//பொதுவாய் காலை டிபன் என்பது இட்லி, தோசை, அடை, பொங்கல் வித் சட்னியுடன் இருக்கும்//

what!!!! you crazy?

//மதியம் குழம்பு/ சாம்பார் என்று ஒன்றும், பொரியல், ரசம், கெட்டி மோர் என்று சம்பிரதாயமாய் உள்ளே போகும். இரவு பெரும்பாலும் சாதம்தான். பலமுறை சப்பாத்தி செய்து, சாதம் இல்லாவிட்டால் சரிப்படவில்லை, என்று சப்பாத்தி + சாதம் என்று போனதால்,
பயந்துப் போய் சப்பாத்தி செய்வதை விட்டு விட்டேன்.//

ஓடிருச்சு என்னோட (எங்குடும்பத்தோட) ஒருவார சாப்பாடு!!

//சமையல் அறை சிங்கில் பாத்திரங்கள் எப்பொழுதும் தேய்க்க குவிந்துக் கொண்டே இருந்தன//

dishwasher is my best friend!

எதிர்பார்த்த climax.

(I am the unhealthy one in my house. He is a health/gym nut.)

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

:-))))))

வக்கனையாய்ச் சாப்பிடுவதில் நமக்கு நிகர் நாமேதான். தேங்காய்த் துவையலும் சாம்பாரும் இருந்தாலும் இட்டிலிக்கும் தோசைக்கும் வெங்காயச் சட்டினிக்கும் பொடிக்கும் ஆலாய்ப் பறக்குமே நாக்கு...ஆகா...அப்புறம் என்னத்த டயட்டிங் பண்றது.

உஷா, ஓட்ஸ் பயன்படுத்துங்க. நல்ல கொழுப்பெதிரி அது.

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

ரவியா, நிஜமாகவே இது சோகக்கதைதான். நல்லா பாருங்க நையாண்டி, நகைச்சுவையிலா இணைஞ்சிருக்கேன். இதுல
யூமர் கம்மி என்பது சரியில்லை :-(

மது சில உடல் பிரச்சனையாலும், கன்னாபின்னாவென்று மாத்திரைகள் சாப்பிடுவதாலும் வயிற்று பகுதி பெரியதாகிதது. எல்லாம் ஊருக்குப் போனா சரியாகிவிடும்.

பிரேமலதா, நீங்க எல்லாம் வெள்ளைக்காரர் ஊர்ல வசிக்கிறவங்க... ஆனா நாங்க .... இருங்க கண்ணைத்துடைச்சிக்கிறேன்,
நல்லா பழகியாடுச்சு, இனி மாத்த முடியாது. டிஷ் வாஷர், ரிப்பேராகி ஒருவருஷம் ஆச்சு. ஆமாம் எல்லாத்தையும் தேச்சி
அதில் போடணும், அதுக்கு கையிலேயே உடனடியாய் கழுவுவது சுலபமாய் இருக்கு.

ஜிரா, ஒழுங்கா பதிவைப் படிச்சிட்டுதான் கமெண்ட் போட்டியா? என்னமோ எனக்கு வெயிட் குறைய அட்வைஸ் செய்யரா மாதிரி இருக்கு :-)

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

ஆஹா உஷா... மகளிர் மன்றத்திலேயே நான் கொஞ்சம் Goody Goody Girl போல இருக்கே... இந்த நினப்புலேயே எனக்கு எடை கூட போகுது...

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

:-))

ரைஸ் சாப்பிட்டா உடம்பு குறையறது கஷ்டம்...

காலைல கார்ன் ஃபிளேக்ஸ் இந்த மாதிரி லைட்டா சாப்பிடறதவிட கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டுக்கலாம்... மதியம் நிறைய சாப்பிடத்தேவையிருக்காது.

மதியம் சப்பாத்தி + கொஞ்சம் ரைஸ்,
தயிரெல்லாம் சாப்பிட கூடாது... மோர் வேணும்னா சாப்பிடலாம்... பால் கண்டிப்பா சேத்துக்கனும்... (இதுலயும் ஸ்லிம் மில்க் இருக்கு... With out Fat) கால்சியம் சத்துக்காக

இரவு பழம் ஏதாவது சாப்பிட்டக்கனும்.

இந்த மாதிரி இருந்தா மூணு மாசத்துல உடம்பு குறைஞ்சிடும்...

எப்ப பசிச்சாலும் ஏதாவது பழம் சாப்பிட்டுக்கலாம். ஜீஸ் வேண்டாம்... அதுல நார் சத்து இருக்காது...

தினமும் 2 கி.மீ நடக்கலாம்... தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்...

Eat Breakfast like a king, lunch like a Prince and supper like a beggar :-))

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

//எல்லாத்தையும் தேச்சி
அதில் போடணும்//

எதுக்கு?

நாங்கள் அப்படியே போடுவோம்.
:)

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

கோமாளிகளாக்கப்படும் அப்பாவி கணவர்கள் சார்பாக ஒரு கண்டனக் குரல் கொடுக்க ஆசைப்படுகிறேன்! :-)
உங்கள் பதிவைப் படித்த போது எனக்கு ஒரு கதைக்கான கரு கிடைத்திருக்கிறது!
தலைப்பு: இட்லிப்பொடி அரசி 23 வயசு ராட்சஸி
எழுதி முடிச்சதும் உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன். அப்பாவி கணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அதையும் உங்கள் வலைப்பூவிலேயே பிரசுரிக்கக் கடவீர்களாக!!!!!

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

மங்கை பார்த்து :-)

வெட்டி, டயட்டும் உடல் பயிற்சி மட்டும் போதாது.மனசும் இளக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். நம்பாளு ஆரம்பிக்கும்பொழுதே, சப்ஜெட்ட மாத்து என்பார் ஹூம்...

ஜி.கெளதம், என்னடா ஒரு ஆண்மனம் இன்னொரு ஆணுக்குதானே புரியும், கண்டன குரல் போதாதே என்று நினைத்தேன்.
கதை எழுதி எனக்கு அனுப்பாதீங்க, குங்குமத்துல போட்டுடுங்க :-)

பிரேமலதா, டிஷ் வாஷ்ர் வேலை உங்க தலைவருடையதா :-))))))))))))

 

Post a Comment

<< இல்லம்