என் படைப்புகள்
ஒரு வருடம், நூற்றி முப்பத்தி இரண்டு பதிவுகள், 50,000க்கு அதிகமான வாசகர்கள் மற்றும் என் படைப்புகள் குறித்து சில செய்திகள்
தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்ப நாளில் இருந்து தீவிர வாசகி நான். பின்னுட்டம் போடுவதையே கடமையாய் நினைத்து போட்டுக் கொண்டு இருப்பேன். என் பின்னுட்டத்தைப் பார்த்து எல்லாரும் அலறி, யூனிகோர்ட்டில் போடுங்க என்று கெஞ்சி ஆளு ஆளுக்கு டியூஷன் எடுத்து, ஒரு வழியாய் பின்னுட்டம் மட்டும் ஒழுங்காய் போட கற்றுக் கொண்டேன்.
பிளாக் ஆரம்பிக்கவில்லையா என்று எல்லாரும் கேட்க ( அப்பொழுது பிளாக்கர்கள் எண்ணிக்கை சில பத்துக்கள்தான்) எதற்கு வம்பு என்று ரிஸ்க் எடுக்க தயங்கினேன். முதல் பிரச்சனை கண்ணி அறிவு இல்லை. அடுத்து ஒழுங்காய் அப்டேட் செய்ய, என்ன எழுதுவது என்று குழப்பம். பிறகு "தோழியர்" என்ற கூட்டு வலைப்பதிவில் மதி (சந்திரமதி கந்தசாமி) அழகாய் எல்லாம் செய்துக் கொடுக்க, அதில் எழுத ஆரம்பித்தேன்.
இருந்தார்போல, ஒரு நாள் ஏதோ செய்ய ஆரம்பிக்க, நுனிப்புல் பிளாக்கரில் அரைகுறையாய் ஏறி, கணிணி நட்புகளை பிடிங்கி எடுத்து (லிஸ்டில் பலர் உண்டு) நுனிப்புல்லை சரிசெய்து அதை தமிழ் மணத்திலும் இணைத்துவிட்டேன்.
நுனிப்புல்லை போன வருடம் 2005 மார்ச்சு மாதம் ஆரம்பித்து நடுவில் இரண்டு மாதம் லீவு விட்டு, பின்பு ஓரே மாதத்தில் கடையைப் பூட்டிவிட்டு திரும்ப அக்டோபரில் திறந்து, நவம்பரில் பார்வையாளர்கள் கணக்கு ஏற்றிப் பார்த்ததில் ஐம்பாதாயிரம் வாசகர்கள். (அதில் என் பங்கு சில ஆயிரங்கள்)
அப்பொழுது மாடரேஷன் என்பது இருக்கிறது என்பது தெரியாததால் ஏகப்பட்ட பிரச்சனைகள். பின்னுட்டத்தில் தோன்றியதை வாந்தி எடுத்துவிட்டுப் போக, எரிச்சலில் ஏன் இந்த வேண்டாத வேலை என்று தோன்றும். என்ன எப்பொழுதும் நம் வலைப்பதிவையே பார்த்துக் கொண்டா
இருக்க முடியும்? பிறகு மாடரேஷன் போட்டதும், அனானிமஸ் கமெண்ட்சை நீக்கியதும் பெரிய தொல்லைவிட்டது என்று இருந்தது.
ஆனாலும் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. முன்பு போல தீவிர ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை. பெரிய ஆட்கள் எல்லாம் பிளாக் எழுதுவதில்லை, எழுத ஆரம்பித்ததையும் நிறுத்திவிட்டார்கள் என்ற தமிழ் இலக்கிய உலக நியதிப்படி, நான் பெரிய ஆள் ஆகவில்லை என்பதால் தொடர்ந்து பிளாக்கிக் கொண்டு இருக்கிறேன்.
ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
என் முதல் படைப்பு, என் மனதிற்க்கு இனியது.
சமீபத்திய படைப்பு
தீபாவளி ஸ்வீட்- தேங்காய் பர்பி நன்றாக வந்திருந்தது. பக்கத்தில் ஆமை வடை. அதாவது வெங்காயம் கிடையாது. எல்லாம் சொந்த ரெசிபி. தேங்காய் பர்பியில் நாலு டீ ஸ்பூன் மில்க் பவுடர் போட்டுவிட்டேன். வேஸ்டாய் போகிறதே என்று :-) ஆனால் சுவை சூப்பராய் இருந்தது.
ஆமை வடை, அதாவது நான் செய்தது பருப்பு வடை. சம பங்கு து. பருப்பு, க. பருப்பு. ரெண்டு டீ ஸ்பூன் அளவு உ.பருப்பு. கணிசமாய் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (காரம் இருந்தால்தான் பருப்பு வடை நன்றாக இருக்கும்), பெருங்காயம், உப்பு போட்டு அரைத்து, ஊற வைத்த கையளவு பாசி பருப்பை சேர்த்து (இதை அரைக்க வேண்டாம்), கட்டு கொத்தமல்லியை கழுவி, மெல்லியதாய் நறுக்கிப் போட்டு, எண்ணையில் போட வேண்டியதுதான். (ரெசிபி துளசிக்கு)
சமையலோ, எழுத்தோ ரசனை முக்கியம். முதலில் எனக்கு பிடிக்க வேண்டும், நன்றாக இருந்தால் உங்கள் பார்வைக்கும் வரும் ;-)
32 பின்னூட்டங்கள்:
முதல் படைப்பு புகைப்படமும் அருமை.
நிறைய பருப்பு போட்டு இஞ்சி போடாவிட்டால் எப்படி? (நிறைய gas வராதோ
//*ஆனாலும் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. முன்பு போல தீவிர ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை*//
என்னங்க நீங்க இப்படிச் சொல்றீங்க. இலக்கியம் என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே உங்களை வச்சுக்கப் பார்ப்பதாலே அப்படி தோணுகிறதோ? இலக்கியம் தாண்டி, சமூக விழிப்புணர்வோடு எழுத நிறைய விசயங்கள் இருக்கிறதே.யோசிங்க. வரும்.
சில சமயங்களில் உங்களுக்கு பிடித்தது தீவிர இலக்கியவாதிகளுக்கு பிடிப்பதில்லை என்பதுதான் சோகம்:-)
¯„¡Å¢ý ¸¨¾¸¨Ç Á¡ò¾¢Ãõ ¾¡ý ¿¡í¸û
> ÀÊì¸ ÓÊÔõ! †¥õ!
«ó¾ ´Õ ¾ñ¼¨É §À¡¾¡¾¡? ···· ¦ÀÂ÷ ÌÈ¢ôÀ¢¼ôÀ¼Å¢ø¨Ä
ஞாபகம் இருக்கிற்தா? :-))
உஷா,
முதலில் இந்தாங்க, எங்க வாழ்த்துகளைப் பிடியுங்க.
அம்பதாயிரம் ஹிட்டுங்களா? அதுவும் ஒரே வருஷத்துலே!!!!
இலக்கிய உலகில் இடம்பிடிச்சாச்சு. ஜமாய்:-))))
(மசால்) பருப்பு வடைகளைப் பார்த்ததும் மனசுக்குத் தனி சந்தோஷம்.
என்னையும் நினைவு கூர்ந்ததுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா சந்தோஷம்தான்:-)
முதல் படைப்பு...... தூள் கிளப்பிட்டீங்க. மகளுக்கு எங்கள் அன்பு.
பத்மா, சொன்னதுபோல இஞ்சி போடணும்தானே?
( இன்னும் எங்களுக்கு இங்கே காஸ் சிலிண்டரில்தான் வருது)
ஆகா முதல் புகைப்படம் சூப்பர். முதல் வருட பர்த்டேக்கு வாழ்த்துக்கள்
சும்மா எளுதி கலக்குங்கக்கோவ்...
உஷா, சோத்துக்கட்சி சொல்வதைதான் நானும் சொல்ல வந்தேன்.
சமூக விழிப்புணர்வோடு தேவையான பல செய்திகளை சொல்லாமே?
படத்தில் இருப்பது யார்? உங்கள் குழந்தையா? அவங்க வளரும்போதும், வளர்ந்து பெரியதானவுடன் வசிக்க நல்ல சூழல் உருவாக்க பாடுபடுவோமே?
(நீங்க வெளியூர்ல இருக்கீங்கன்னாலும் உங்களுக்கு அந்த கவலை இல்லையா என்ன? உங்க குழந்தை போல் பல குழந்தைகள் எதிர்காலமும் பிரகாசமா இருக்க வகை செய்யுங்கள்)
Best Wishes!
சொல்ல மறந்துட்டேன்.
படத்தில் இருக்கும் குழந்தை மிக அழகு.
அந்தக் குழந்தைக்கும், அதை மிக அழகாக புகைப்படம் எடுத்தவர்க்கும் ஒளிமயமான எதிர்காலம் கிட்டும்.
//பெரிய ஆட்கள் எல்லாம் பிளாக் எழுதுவதில்லை, எழுத ஆரம்பித்ததையும் நிறுத்திவிட்டார்கள் என்ற தமிழ் இலக்கிய உலக நியதிப்படி,//
அட! சும்மா டெம்பரவரியாத்தான் நிறுத்தி வெச்சிருக்கேன்! நிறுத்தவல்லாம் இல்லை!
எனிவே வாழ்த்துக்கள்!
உஷா,
வாழ்த்துக்கள்.
பத்மா, இஞ்சி போட்டதில்லை. அடுத்த முறை முயலுகிறேன்.
துளசி சோம்பு போட்டு அரைத்து, சிறியதாய் வெங்காயத்தை நறுக்கிப் போட்டால் மசால் வடையாய் உருமாற்றம் அடையும்.
பிரபு, எழுதுவது முதலில் எனக்கு பிடிக்க வேண்டும் :-) இலக்கியவாதி ஆக வேண்டும் என்று எழுத என்னால் முடியாது. பிறகு நீங்க சொன்ன மேட்டர் லேசாய் நினைவுக்கு வருகிறது ;-))))))))))))
WA, இது ஒன்றரை வயதில் எடுத்தது என்று நினைக்கிறேன். மேலே நாலு பல்லு, கீழே நாலு பல்லு இருக்கு பாருங்க
இ.கொ, முத்து நன்றி
வைசா, மேட் நியூஸ், பத்மா, துளசி, WA அனைவருக்கும் முதல் படைப்பு ரொம்ப பிடித்துவிட்டது போல இருக்கு ;-)
பேட் நியூஸ்! சோத்துக்கட்சி! படம் எடுத்தவங்க, தட்டு தடுமாறி எழுத்தாளர் பட்டம் வாங்க முயற்சிக்கிட்டு இருக்கா. பல்லை காட்டும் குழந்தையின்
எதிர்க்காலம் பிரகாசமாய் இருக்கும் என்று நம்புகிறேன். இரண்டாம் வருஷம் சட்டம் படிக்கிறது இல்லையா :-))))
பேட் நியூஸ், சோத்துக்கட்சி! கன்ணில் படும், காதில் கேட்கும் விஷயங்களை பதிவு செய்து வருகிறேன். என்னுடைய
பதிவுகளை தொடர்ந்து படித்துவந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். வெறும் டைம் பாஸ்க்கு, எதையாவது போட்டே
ஆக வேண்டும் என்று எழுதியதில்லை. எழுத்து படிப்பவர்களுக்கு கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் என்பதையும்
கடைப்பிடிக்கிறேன். நான் சொல்லவந்தது தமிழ் இணைய உலகத்தின் சில போக்குக்கள், ஆர்வத்தை குறைக்கிறது
என்று சொல்ல வந்தேன். இதை எனக்கு மட்டும் பலரின் கருத்தும் இது என்று நினைக்கிறேன்.
நாமக்கல்லாரே, காலையில உங்க கவிதையைப் படிச்சிட்டேன் ;-)))))))))))))))))))
பத்மா, இஞ்சி வேண்டாம்னு நினைக்கிறேன்.. அதான் பெருங்காயம் போடுறாங்களே வாயுவுக்கு...
(ஆனா இஞ்சி போட்டால் சுவையா இருக்கும் ;))
உஷா, இப்படிப் பசி நேரத்தில் ஆமை வடை, தேங்காய் பர்பி எல்லாம் போட்டோ போட்டுக் காட்டி ம்ஹும்.. இன்னிக்கு மதியம் கொட்டுற மழைக்கு வீட்டுக்குப் போய் சாப்பிடக் கூட முடியாது :(((!!!
ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்...
ராமச்சந்திரன் உஷா
"பெரியவர்கள் யாரும் இப்போது இங்கு எழுதுவதில்லை"-இதே கருத்தை தான் திரு ஆசாத் இங்கு வந்திருந்த போது சொன்னார்.
படத்தில் குழந்தையின் முகம் பிரதிபலிப்பு கூட நன்றாக விழுந்திருக்கிறது.
முதலாண்டு நிறைவுக்கும் நிறைவான படைப்புகளுக்கும் பாராட்டுக்கள்!!
படைப்புக்கள் எவருக்குமே முதலில் அவருக்குப் பிடித்தமானதாக அமைய வேண்டும். இல்லையென்றால் அவை வேலைகளே :)
வேலையில் பிடித்தமானதை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அது இறைவன் கொடுத்த வரம்.
Yekkov, azhagaa sirikira mudhal padaippukku oru vayasukku mela achunnu theriyume :) The birthday wishes was for your blog's first birthday :D
PS: Office machine, indha dhabaa mattum ennoda tanglish-a manichu vittuvidavum :)
//ஆனாலும் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. முன்பு போல தீவிர ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை. //
முற்றிலும் உண்மைங்க உஷா. இதுக்கு என்ன காரணம்னு சொல்லத்தான் முடியலைங்க.
உங்க பொண்ணுக்கு த்ருஷ்ட்டி சுத்திப் போடுங்க உஷா..கொள்ள அழகு! :)
பொன்ஸ் இஞ்சி போட்டால் டேஸ்ட் மாறிவிடுமா? காய்ந்த மிளகாய், பெருங்காயம் நல்ல காம்பினேஷன் இல்லையா?
ஸ்ரீதர் சார், அதுதான் முதல் படைப்பு, இப்ப சட்டம் படிக்குதுன்னு சொல்லியிருக்கேனே, இன்னுமா புரியலை :-)
வடூவூராரே, ஆசாத் சொன்னது சரிதான். ஆனால் சில விலக்குகள் உண்டு, ஆசாத் புத்தகம் எல்லாம் போட்டிருக்கார்.
மணியன் மனமார்ந்த நன்றி. ஆனால் எல்லா வேலைகளையும் இப்படி மனதுக்கினியதாய் மாற்றிக் கொள்ள முடிவதில்லை இல்லையா? அப்படி மாற்றிக் கொள்ள முடிந்தால் ஜென் சன்யாசி ஆகிவிடுவோம். இது சம்மந்தமாய் சின்ன கதை
ஞாபகம் வருகிறது. பின் ஒருசமயம் எழுதுகிறேன்.
WA, manniththeen :-)
அனாமிகா, நன்றி
இளா, காரணம் ஊரறிந்த ரகசியம்
:-))))
என்னுடைய வாழ்த்துகள் உஷா. எழுத்து என்பது அலுக்குமா என்று தெரியவில்லை. எழுத்து என்பது சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது. அலுப்பது கடினம்தான். எழுத்து சலிப்பது எழுதும் அளவுக்கு சிந்தனை சிறக்காத பொழுது என்று நினைக்கிறேன்.
பர்பி நல்லாயிருக்கு. பாக்கவே வெளுவெளுன்னு. வடையும்தான். கொத்தமத்தி பச்சைப் பச்சையா அழகாத் தெரியுது. எனக்குக் கீரைகள் நெறையப் போட்டிருந்தா ரொம்பப் பிடிக்கும். கொத்துமல்லிக்குப் பதில் தண்டுக்கீரையும் போட்டுச் செய்யலாம். இஞ்சி பத்தி பெரிய விவாதமே நடந்திருக்கு. இஞ்சிக்குப் பதிலா பெருங்காயம் போட்டுக்கிறது நல்லது.
poligal? matrum anonymous? illadha deepavali kondadi irukureergal.)) Vazhthukkal.
வாழ்த்துக்கள் உஷா, உங்கள் முதல் படைப்பு படத்தைப் பார்த்தாலே ரொம்ப சுட்டி என்று தெரிகிறது. எழுதுவது ஒரு கலை, அதை நிறுத்தவே கூடாது.
ஜிரா, தண்டு கீரை போட்டால் சப் என்று இருக்குமே, ஆனால் முளைக்கீரை போடலாம், இதுலா அல்லது உளுந்து வடையிலா
என்று சந்தேகமாய் இருக்கிறது. ஆனால் பருப்பு வடையில், வாழை பூ அரிந்துப் போட்டால் அதுதான் வாழை பூ வடை -துளசியின் பார்வைக்கு :-)
வன்னியன் நன்றி.
கானா பிரபா, வாலு இல்லை அறுத்த வாலு.
ஜிரா, பிரபா எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லவில்லை, தமிழ் வலைப்பதிவு அலுப்பை தருகிறது என்று சொன்னேன். இளா, இப்பொழுது புரிகிறதா :-)
முதல் படைப்புக்கும்
அந்த அம்மனியின் படிப்புக்கும்
சமீபத்திய படைப்புக்கும்(?)
இனி
நீங்கள் படைக்கப்போகும்
பல நுனிபுற்களுக்கும்...
வாழ்த்துக்கள்.....
அட. Great People think alike. :-)
வடையைப் பத்தி சொன்னேன். :-)
வாழ்த்துக்கள் உஷா மேடம்,
/ஒரு வருடம், நூற்றி முப்பத்தி இரண்டு பதிவுகள், 50,000க்கு அதிகமான வாசகர்கள் /
என்ன.. விஜயகாந்த் படம் ஏதாவது பார்தீங்களா ??
/பின்னுட்டம் போடுவதையே கடமையாய் நினைத்து போட்டுக் கொண்டு இருப்பேன்./
அதே தான் நான் தற்சமயம் செய்து கொண்டிருக்கிறேன்..
/ என் பின்னுட்டத்தைப் பார்த்து எல்லாரும் அலறி/
எல்லாரும் அலறி..ஒரு தடவை என்னை தலைப்புச் செய்தியாய் ஆக்கிட்டீங்க..நன்றி சகோதரி..
/ஆனாலும் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. முன்பு போல தீவிர ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை. /
எங்களின் ஆதரவு எப்போழுதும் உண்டு..இன்னும் எழுதுங்கள்..பின்னூட்டம் எப்போழுதுவாது இட்டாலும் உங்கள் பதிவுகளை படிப்பவன் நான்..
/என் முதல் படைப்பு/
அழகு,அட்டகாசம்,அருமை..எல்லாரும் சொல்லியது போல் திருஷ்டி சுத்தி வையுங்கள்..
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
//ஆனால் முளைக்கீரை போடலாம், இதுலா அல்லது உளுந்து வடையிலா
என்று சந்தேகமாய் இருக்கிறது//
முளைக்கீரை இதுல தான் போடுவாங்கன்னு நினைக்கிறேன்.. அப்படியே முருங்கைக் கீரை போட்டாக் கூட நல்லாத் தான் வரும்..
பங்காளி (எங்கிருந்து பிடிக்கிறாங்கப்பா இந்த பெயர்களை :-) நன்றி
குமரன், தெய்வமே ;-)
மாயா கிருஷ்ணன்,
சமீபத்தில் பார்த்தது திருடா திருடி ;-)
ஆமாம், உங்களை யாரூ பின்னுட்டம் போடசொன்னது : )))))))))))))))))))
பொன்ஸ்,
செஞ்சிப் பார்த்துட வேண்டியதுதான். கொத்துகடலை ஊற வைத்து இதே போல வடை செய்யலாம் தெரியுமா? நல்லா மொறு மொறுன்னு வரும்- துளசி, பார்த்துக்குங்க!
///ஒரு வருடம், நூற்றி முப்பத்தி இரண்டு பதிவுகள், 50,000க்கு அதிகமான வாசகர்கள் மற்றும் என் படைப்புகள் ///
வாழ்த்துகள் உஷா
படம் அருமை
ரெசிபியும் ஓகே
வடையைப் பாத்தா துளசி நினைவு.
ப்ளாக் விஷயம் படித்ததும் மெரினா கடற்கரை, அருணா ஸ்ரீநிவாசன், கார்,
சைதாப்பேட்டை, ஸ்ரீ ராம் காலனி...
ம் என்னவோ போங்க உஷா
மலரும் நினைவுகள் வர்றப்ப எல்லாம் வயசாயிடுச்சோன்னு தோணது.
மது, எனக்கு நினைவில் இனிப்பது எல்லாம் முருகன் இட்லி கடையில் போட்ட மகளிர் ஸ்பெஷல் கூட்டம்தான். அடுத்த முறை
சென்னை வாழ் மகளிர் அனைவரும் வர வேண்டும் என்பது என் ஆசை.
கேர்ஸ், இந்த அழைப்பை பார்த்துவிட்டீர்களா :-)
Post a Comment
<< இல்லம்