Wednesday, November 22, 2006

தர்ம அடி போடுவது எப்படி?

சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் கண்ணில் அவ்வப்பொழுது விழும் சமாச்சாரம்தான் இது. பெரும்பாலும் சின்ன குற்றங்கள் செய்து கையும் களவுமாய் பிடிப்படுவர்கள், பார்க்க கொஞ்சம் அப்பாவியாகவும், ஒற்றை ஆளாக மாட்டினால் எதிர்க்க திறன் இல்லாதவருமானால் தர்ம அடி நிச்சயம். இதில் விசேஷம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர் கூட பாவம் விட்டுடுங்க என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டாலும், போகிறவர்கள், வருகிறவர்கள் ஆளுக்கு ஒரு சாத்து சாத்திவிட்டுப் போவார்கள். அவர்களுக்கு அடிக்க ஒரு ஆள், அதாவது அடி வாங்க ஒரு ஆள் மாட்டியாகிவிட்டது. என்ன நடந்து என்று தெரியாமலேயே போடு தரும அடி. மாட்டிக்கொண்டரும் தெய்வமே என்று வாங்கிக் கொண்டிருப்பார். என்ன ஒன்று, அவர் கண்ணில் வேறு யாராவது இப்படி மாட்டினால், தான் வாங்கி தர்ம அடிகள் நினைவு வந்து, தானும் நாலுப் போட்டு தன் பழைய கணக்கை தீர்த்துக் கொள்வார்.

பி.கு நான் இதுவரைப் போட்ட பதிவிலேயே மிக சிறிய பதிவு இது. சென்னையைப் பற்றிய விசேஷ செய்தி குறிப்பு.

25 பின்னூட்டங்கள்:

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

உள் குத்து

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

இன்று காலையிலிருந்தே அனைத்தையும் படித்து வருகிறீர்கள் போலும்.

:)

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

சிபி முதல் பின்னுட்டத்துக்கு :-(

அடுத்ததற்கு காலையில் படிக்க ஆரம்பித்தது. மீண்டும் மாலையில் பார்க்கும்பொழுது வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. என்ன ஏது என்ற ஆதி மூலம் புரியாமல் குழம்பிப் போய் "எப்படி" என்பதற்கு ஏதாவது பதிவு போடுவோம் என்றுப் போட்டேன்.

நாடோடி, உள் குத்து எல்லாம் இல்லை. பொதுவாய் தர்ம அடி மேலாகத்தான் விழும். உள்குத்து அதாவது உள் காயம்
என்றால் போலீஸ் கேஸ் ஆகிவிடுமே :-)))

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

சிவபாலனின் இளையராஜா பதிவு பாருங்கள், தர்ம அடி போடுவது
எப்படி என்று?

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

தர்ம போஸ்ட்டு போடுவது எப்படி என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்:-))

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

தர்ம அடி வாங்குவது எப்படி என்பதில்தானே தங்களின் நிபுணத்துவம் இருக்கிறது. :-) போடுவது எப்படி என்று மாற்றி எழுதியிருக்கிறீர்களே :-)

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

உஷா மேடம்,
உங்கள் பதிவு தமிழ் மணம் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங்க் டெக்னாலஜியில் சேர்க்கப்பட்டுள்ளது.

:)

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

:-))

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

நான் பின்னூட்டம் எழுதினா எப்படியும் வெளியிடப்போவதில்லை... அதனால எதுவும் எழுதலை.

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

பி.கே.எஸ். சொன்னது எனக்கு சரின்னு படுது!!!

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

ஆதிரை, கடந்துப் போன டிரெண்டு இளையராசா மேட்டர். நான் ஒழுங்கா படிச்சது வெளிகண்டருடைய பதிவு
மட்டுமே, என்னைப் பொருத்தவரையில் சிறந்த இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர். மற்றப்படி ஞானி என்று தலைக்கு மேல் வைத்து ஆடுவது, அவரின் தனிப்பட்ட ஆசாபாசங்களை அலசுவதும் சரியில்லை. உள்ளே என்ன நடந்ததோ, வீரப்பன் ராஜ்குமாரை கடத்துவிட்டு, தமிழர் நலனுக்காய்
விடுத்த கோரிக்கைகள் என்ன என்ன என்ன? ஆனால் கடத்தல் நாடகத்தின் கிளைமாக்ஸ் பண
பரிவர்த்தனைதானே ;-)))))
நீங்கள் குறிப்பிட்ட பதிவை தேடிப் படிக்கணும்.

பினாத்தலாரே, அது என்ன தர்ம போஸ்ட் நான் மட்டுமே போடுகிறேன் என்று அனைத்து புகழையும்
எனக்கே தருகிறீர்கள்? தமிழ் வலைப்பதிவுகளை ஒழுங்காய் படியுங்கள் ஐயா!

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

விடாது பருப்பு,பின்னுட்டத்துக்கு நன்றி

சிபி, மிக்க நன்றி

குமரன் ஸ்மைல்லிக்கு ஒரு பதில் :-))))

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

பி.கே. எஸ்ஜி. அது என்ன போகிறப்போக்கில் ஒரு குட்டு ;-)

முகமூடி, ஏதோ நினைக்கிறேன், அதை ஏனோ மறைக்கிறேன் என்று பாடியதற்க்கு நன்னி, நன்னி, நன்னி.

ஆஹா, கொத்ஸ், இதுதானய்யா தர்ம அடி :-)))

At Wednesday, 22 November, 2006, சொல்வது...

:((

At Thursday, 23 November, 2006, சொல்வது...

பெண்கள் தர்ம அடி எங்கும் வாங்குவதில்லேயே! ஏன்?? (P. வாசு படத்தில் கூட)
ஆனால் சீரியலிலும் சினிமாவிலும் கன்னத்தில் உங்களுக்கு முதலிடம்...
:))

At Thursday, 23 November, 2006, சொல்வது...

கொத்ஸ், PKS யை வழிமொழிகிறேன்.

At Thursday, 23 November, 2006, சொல்வது...

நீங்க யாருகிட்டயாவது தர்ம அடி வாங்கியிருப்பீங்கன்னு சந்தோஷத்துல ஓடி வந்தா இப்படி ஏமாத்திட்டீங்களே..?
:)

At Thursday, 23 November, 2006, சொல்வது...

ஜொள்ளு பாண்டி, நீங்க வருத்தப்படுகிறாமாதிரி இப்ப என்ன நடந்துடுச்சு :-))))

ரவியா, சீரியல், சினிமாவுக்கு வாழ்க்கைக்கு வித்தியாசம் இல்லையா? அப்புறம் தர்ம அடி பெண்கள் வாங்குவதில்லைன்னா
சொல்றீங்க, அப்படியா :-)))))))))))))))

மனசு, நானும் வழிமொழிகிறேன் ;-)

நிலவு, என்ன நல்ல மனசுங்க உங்களுக்கு, நல்லா இருங்க :-))))

At Thursday, 23 November, 2006, சொல்வது...

கோலங்கள் தொடரில் அபி வாங்காத அடியா?

மெட்டிஒலியில் சரோ வாங்காத அடியா?

கணவருக்காக தொடரில் சந்தியா வாங்காத அடியா?

At Thursday, 23 November, 2006, சொல்வது...

ஆ. அண்ணாச்சி, அது சீரியலுங்க, அதையும் நிஜ வாழ்க்கையைப் போட்டு குழப்பிக்கக்கூடாது. உங்க பூர்வீகத்தை
நினைவு படுத்திட்டேனே? மன்னிச்சுங்குங்க. சரி,சரி கண்ணைத் துடைங்க.

At Thursday, 23 November, 2006, சொல்வது...

உங்க பாவா இந்த பதிவ படிச்சுட்டாரா???

At Thursday, 23 November, 2006, சொல்வது...

ரொம்ப பாவாங்க அவுரு.

At Thursday, 23 November, 2006, சொல்வது...

பெருசு, பாவா என்ற சொல்லுக்கு பொருள் சகோதரியின் கணவன் மட்டுமே! அப்புறம் என்னக் கேட்டிங்க,...அது எல்லாம் தாம்பத்தியதின் தனிப்பட்ட சுவாரசியங்கள்.;-)

At Friday, 01 December, 2006, சொல்வது...

hello!!
naan unga blog -ku pudhusu.. inaikku kalalayilerndhu ungaloda padaipugala padichitae iruken.. rhombha rhombha nalla iruku.. tamizh la en arvathai innum thoonduthu... naan..
unga rasigai,
Punitha
Chennai.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

ஆனாலும் மரத்தடி ஒன் லைனர் போல இல்லை :-)

Post a Comment

<< இல்லம்