Wednesday, November 15, 2006

சொ. செ. சூ- usha style அல்லது நான் கற்றப்பாடங்கள்

தலைப்பை முதலில் எனக்கு வாய் கொஞ்சம் அதிகம் என்று வைத்துவிட்டு, கலக்கலாய் இருந்தால்தான் டாப் டென்னில் வர வாய்ப்பு இருக்கும் என்பதால் மாற்றிவிட்டேன். சரி, விஷயத்துக்கு வருவோம்.

பிசியோதொரபி எடுக்க ஆஸ்பத்திரிக்குப் போய் கொண்டு இருக்கிறேன். எனக்கு எப்பொழுதும் ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்களைப் பார்த்தால் பாவமாய் இருக்கும், எப்ப பார்த்தாலும்
நோயாளி முகங்களைப் பார்த்துக்கிட்டு, வாழ்க்கையே சோகமாய், பாவமாய் இருக்கும்.


சரி பிசியோதொரபி செய்யும் பொழுது வாய் சும்மா இருக்க முடியுமா? எந்தூரூ மா என்றதும், கதை ஆரம்பமானது. பாலீஸ்தீன பொண்ணு, ரொம்ப ஸ்மார்ட். வழக்கப்படி ஊர் சோகத்தைச் சொல்லிவிட்டு மாமியார் தன்னுடன் இல்லை, ஆனால் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு ப்ளோர் மேலே இருக்கார். சின்ன பிள்ளை இருப்பதால், உதவியும் தேவை, ஆனால் வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் பிடுங்கலும் இல்லை என்று மகிழ்ச்சியுடன் சொல்லும்பொழுது, மனக்கண்ணில் "கோம்பை" மேடம் புன்னகைத்தார்.

அடுத்து, இங்க இருக்கும் லோக்கல் மக்களுக்கு உள்ள சம்பளத்தையும், தான் இரவு எட்டு மணிவரை உழைத்தாலும், சாதாரண வரவேற்பாளருக்கு, டாக்டரைவிட சம்பளம் அதிகம் என்று ஓரே புலம்பல். நான், நாம் பிழைக்க வந்தவர்கள், அவர்கள் சொந்த நாடு இது, மேலும் மிக குறைந்த சதவீத மக்கள் தொகை இருப்பதாலும், அவர்களுக்கு இப்படி அலவன்ஸ் தருவது தப்பில்லை என்றாலும் அப்பெண்ணின் புலம்பல் நிற்கவில்லை. நான் சும்மா இல்லாமல், நாம் வேலைக்கு வந்து உழைத்துவிட்டு சம்பளம் வாங்கிறோம், அவங்க சம்பளம் வாங்கிவிட்டு வேலை விருப்பப்பட்ட செய்வாங்க என்று சொன்னதும், வெடி சிரிப்பு சிரித்தார். இந்த பொண்ணு சிரிப்பைக் கேட்டுவிட்டு, சீனியர் டாக்டர்,(அங்க ஹைதராபாத்) என்ன சிரிப்பு என்றுக் கேட்டுவிட்டு தானும் ஜோதியில் ஐக்கியமானார்.

அந்நேரம் பார்த்து, அதே வரவேற்பாளினி ஒரு பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே வர, இவங்க ரெண்டு பேரூம் சிரிப்பை அடக்க முடியாமல். ''என்னமா அதிசயமாய் இருக்கு, ஆறு மணிவரை வேலை செய்யரே" என்றுக் கேட்டு விட்டு, கொடுத்த பேப்பரில் கையெழுத்துப்
போட்டு அனுப்பினார். அந்த பெண் போகும்பொழுது என்னைப் பார்த்து முறைத்ததாய் எனக்கு தோன்றியது. சிரிப்பு சத்தம் கேட்டு இந்த பேப்பரை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாள், வெளியே நின்று ஒட்டு கேட்டுவிட்டு உள்ளே வந்துள்ளாள் என்று பாலஸ்தீன பெண் சொல்ல, தேவையா உஷா உனக்கு என்று மனசாட்சி திட்டியது.

அடுத்தமுறை வழக்கப்படி, ரிசப்ஷனில் என் பெயரைச் சொல்லும்பொழுது, அரபியில் கடகடவென்று பக்கத்தில் இருந்த பென்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தாள்.அது என்னைப் பற்றியோ என்று சம்சயம். அந்நேரம் பார்த்து பிசியோதரபி டாக்டரம்மா, என்னை அன்புடன் வா வா என்று உற்சாகத்துடன் பெயரிட்டு அழைத்து பேச தொடங்கினார்.

அவருடன் பிசியோதிரபிக்கு செல்லும்பொழுது, முதுகு முறைக்கும் கண்களால் எரிந்தது. என்ன செய்ய இதைதான் சொ.செ.சூ என்பதா?

நான் என்னவோ யதார்த்தமாய், ஜோக் என்று நினைத்து சொன்னது எனக்கே வினையானது பாருங்க. இப்ப போய் நான் என்ன விளக்கம் கொடுக்க முடியும்? நான் வேண்டாம் என்றாலும் நான் இந்த செட்டுன்னு முத்திரை குத்தியாச்சு. ஹ¥ம்.. சல்தா ஹைன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.


மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் நான் கற்ற பாடங்கள்:

1- யாரு எங்கே இருக்காங்கன்னு பாக்காம பேசக்கூடாது. தெரியுதோ தெரியல¨யோ.. ஆச்சரியமா இருந்தாலும் (சம்பள விவகாரம் ஆச்சரியமா இருந்துதுங்க, அதைச் சொல்றேன்), சிரிப்பா இருந்தாலும் வெளிய காமிச்சுக்கிட்டா நம்ம முகமூடி கிழிஞ்சு தொங்கும். (முகமூடி போடாலைன்னு நா நெனச்சி புண்ணியமில்லை)

2- டாக்டர் கிட்டே பேசினா ரிசப்ஷனிஸ்ட் என்ன நினைக்கிறா? இவ டாக்டர் கட்சி! அடிக்கடி வந்து அட்டெண்டண்ஸ் குடுக்கறா. அதே டாக்டர் தப்பு பண்ணதுக்கு (லேட்டா வந்தாங்க) இவ முன்னாடியே முணங்கியது இவளுக்கு மறந்து போயிடுச்சு.

3-யாரோ யாரைப்பத்தியோ என்னவோ பேசற இடத்துலே வாயை இறுக்க மூடிக்கணும்.

4- உஷான்னு பேரூ இருந்தா மட்டும் போதாது, உஷாராகவும் இருக்க பழகிக்கணும்


பாடம் எல்லாம் கத்துக்கிட்டேன்.. கடைப்பிடிப்பேனான்னு கேட்டுடாதீங்க! ஹூம் :-)

32 பின்னூட்டங்கள்:

At Wednesday, 15 November, 2006, சொல்வது...

நாந்தான் இங்கேயும் ஃபர்ஸ்ட்டா

சென்ஷி

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

Been there.. done that ....

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

:)))

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

போன போஸ்டில் கடைசியா ஒரு citation பார்த்தேனே..
:))

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

//சாதாரண வரவேற்பாளருக்கு, டாக்டரைவிட சம்பளம் அதிகம் //


இன்னும் கொஞ்ச நாளில் அந்த வரவேற்பாளர் டாக்டருக்கு பாஸ் ஆகிவிடுவார்....

நீங்கள் வேறு டாக்டரை பார்க்கவேண்டும்...

உங்க ஊருலே நியூ மெடிகல் சென்டர் இல்லையா? அங்கே எல்லாரும் இந்தியர்தானே. அங்கே வேறு விதமான புலம்பல்கல் இருக்கும்

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

பலமா குத்திட்டாங்களோ? முத்திரையைத் தான் சொன்னேன். :-)

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

இரண்டு முறை படித்தேன். இரண்டு முறையும் வெகுவாக ரசித்தேன். இரட்டை பாராட்டு & நன்றிகள்.

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

//பாடம் எல்லாம் கத்துக்கிட்டேன்.. கடைப்பிடிப்பேனான்னு கேட்டுடாதீங்க!//

என்ன பிரயோஜனம்??

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

சென்ஷி, இங்க... ஆமாம்.

ஜெயஸ்ரீ, நீங்க சொல்வது ரொம்ப தத்துவார்த்தமாய் இருக்கு :-)

ரவி, ஒரு சோகக்கதை சொல்லும்பொழுது இவ்வளவு சிரிப்பாணி ஏன்?

ரவியா, தெய்வமே காலைக்காட்டுங்க கும்பிட்டுக்கிறேன். போட்டிங்களே ஒரு போடு :-))))))))))))))))))

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

// இரண்டு முறை படித்தேன். இரண்டு முறையும் வெகுவாக ரசித்தேன். இரட்டை பாராட்டு & நன்றிகள்.

அதே :)

//முதுகு முறைக்கும் கண்களால் எரிந்தது

Receiptionistக்கு பக்கத்தில் இருந்த பெண்தானே முறைத்தது ?? கண்டுக்காதீங்க ;)

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

அபுதாபியை விட துபாய், ஷார்ஜாவில் இந்திய டாக்டர்கள் எண்ணிக்கை எல்லா இடத்திலும் அதிகம். இன்ஷீரஸ் கார்ட்டு இருப்பதால், கொஞ்சம் காஸ்ட்டிலியான ஹாஸ்பிடல் போனாலும் கணிசமாய் இந்திய டாக்டர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களிலும் இந்தியர்கள் நிறைய இருப்பார்கள்.

குமரன் , நீங்க வாங்காததா :-))))

பாபா, விக்கி ! இரட்டை ரசிப்புக்கு இரட்டை நன்றிகள். யார் முறைச்சாலும் உணர்வு ஒரே மாதிரிதான் இருக்கும் :-)

சுரேஷ், படிப்பினைகள் தினமும் படிக்கிறோம். ஆனால் தவறுகள் புதுசு புதுசாய் செய்கிறோமே ? பழைய பாடம், புது தவறுக்கு சரியாகாதே. நல்ல கேள்வி.!

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

உஷா எல்லோருக்கும்
சரியா தான் சொல்றீங்க:-)

உங்க விஷயத்தில இப்படி ஆகிறதே:-(

உஷா உஷாராயிட்டீங்களா இல்லையா

சொ.செ.சூன்னா என்ன உஷா?????

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

"பகலிலே பக்கம் பார்த்துப்பேசு. இரவிலே அதுவும் பேசாதே"

உஷாரா இல்லாம மாட்டிக்கிட்ட ஒருத்தர் சொல்லி வச்சுட்டுப்போனது
அந்தக் காலத்துப் பழமொழி. இதுலே இருந்து என்ன தெரியுது?

நாம இன்னும் ஒண்ணும் கத்துக்கலை(-:

மது,
இப்படி அநியாயத்துக்கு
அப்பாவியா இருந்தா எப்படி?
உஷா, கொஞ்சம் சொல்லிக் குடுங்கப்பா மதுவுக்கு.

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

உஷா
கற்பது நின்று விட்டால் வாழ்க்கை சுவாரசியம் அற்று போய்விடும்.This phase too shall pass

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

Hee Hee Jeyashri solra maadhiri, been there, done it... pathaadhukku still doing it :(

 
At Wednesday, 15 November, 2006, சொல்வது...

என்னங்க உஷா "பேட்ச் ஒர்க்கா(patch work)" சும்மா லுலுலாயி கண்டுக்காதிங்க :-)

 
At Thursday, 16 November, 2006, சொல்வது...

மது,
சமையல், சாப்பாடு, தூக்கம், புத்தகம் எழுதுவது தவிர கொஞ்ச நேரம் ஒழுங்கா தமிழ் மணம் படியுங்கள். இப்படியா கேள்வி கேட்பது :-)), இதுல நான் என்னவோ எல்லாரையும் உட்கார வைத்து அறிவுரை சொல்கிறேன்னு வேற சொல்றீங்க
:-((((((((

துளசி,
கற்றுக்கொள்வது உயிர் இருக்கும்வரை தொடரும்

பத்மா,
அதுதானே, எல்லாம் புரிந்துப் போனால் வாழ்க்கை அலுத்துவிடும்.

WA,
அவ்வளவு சீக்கிரம் ஞானோதயம் வருமா ;-)))

குழலி,
கவிதைக்கே பொருள் சொல்லக்கூடாது என்று சொல்லும்பொழுது, கட்டுரைக்கு எல்லாம் விளக்கவுரை சொல்வது சரியா? மதுமிதா, எல்லாருக்கும் தேவையான அட்வைஸ்ன்னு சொல்லிட்டாங்க, உங்கப் பங்குக்குக்கு பாட்ச் ஒர்க்ன்னு சொல்றீங்க. பேட்ச் வொர்க் செய்து அந்த ரிசப்ஷனிஸ்ட் கிட்டே நல்லபேர் வாங்கணும்ங்கறது அவ்வளோ அவசியமா என்ன? அதுவும் தவறா புரிஞ்சிக்கிட்டே தீர்றதுன்னு பிடிவாதமா இருக்கவங்க ஒதுங்கிப் போவதுதான் புத்திசாலிதனம் என்பது என் கருத்து. நீங்க
சொல்றா மாதிரி, இதையெல்லாம் பெருசா கண்டுக் கொள்வது கிடையாது ;-)))

 
At Thursday, 16 November, 2006, சொல்வது...

nunalum than vaayal kedum!!

By the by what is the expansion for "so, se soo" Hp u dont hold back the suspense for long like 'salavaikkaari joke' of writer sujatha

Happy / effective physio sessions!!
Sridhar(latha)

 
At Thursday, 16 November, 2006, சொல்வது...

ஐயோ.......இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம். என்னுடைய பெங்களூர் மாமா ஒரு கன்னடர். அவருடைய வீட்டில்தான் நான் முதலில் தங்கியிருந்தேன். அவரது உறவினர் ஒருவர் பெங்களூருக்கு வந்திருந்தார். அவர் அரசாங்கப் பணியாளி. எல்லாரும் வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள். அப்பொழுது எஸ்மா போட்டு அரசாங்கம் அனைவரையும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த அழைத்திருந்தது.

நான் உள்ளே ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு என்னுடைய மாமா பையனிடம் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் தமிழ், கன்னடம், இந்தி, இங்கிலீஷ் எல்லாம் பேசுறவன். "எஸ்மா போட்டாச்சுன்னு அவரு வந்திருக்காரு. இல்லைன்னா அரசாங்கம் கடுமையா நடவடிக்கை எடுக்கும்னு"

அது அவர் காதுல தெள்ளத் தெளிவா விழுந்துருச்சு. உள்ள வந்து கொஞ்ச நேரம் அவங்க பக்கத்து நியாயங்களை எனக்குப் பாடம் சொன்னாரு.

இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் நீங்க என்ன நினைச்சீங்களோ...அத அன்னைக்கு நான் நெனச்சேன்.

 
At Friday, 17 November, 2006, சொல்வது...

எல்லோருக்கும் நடப்பதுதான். சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொள்வது, பின்னால் நண்பன் நிற்கிறான் என்று நினைத்து கமென்ட் அடித்துவிட்டு வழிவது இதெல்லாம் சகஜமப்பா...

ஆனாலும் நீங்கள் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வலைப்பக்கத்தைப் போல அடுத்தமுறை வரவேற்பாளருக்கு இரண்டு Smiley extraaவாக தெளித்துவிடுங்கள் :)))

 
At Friday, 17 November, 2006, சொல்வது...

//பாடம் எல்லாம் கத்துக்கிட்டேன்.. கடைப்பிடிப்பேனான்னு கேட்டுடாதீங்க! ஹூம் :-)//

இதெல்லாம் நடக்கிற காரியமா உஷா..

இதுக்கெல்லாம் நாம திருந்தீட்டா உலகம் தாங்காது..;-))

 
At Friday, 17 November, 2006, சொல்வது...

அட என்னக்கா இத போயி சொ.செ.சூ. அப்படின்னு சொல்லிக்கிட்டு. அடுத்த தடவை அங்க ரிசப்ஷனில் இருக்கும் போது, அவங்களோட கொஞ்சம் கடலை போட்டு எப்படி அவங்க ஊரில் டாக்டருக்கு படிக்க வசதி இல்லாததால் அவர்கள் படிக்க முடியாமல் ரிசப்ஷனிஸ்ட் ஆகவும் அண்ட வந்த பிடாரிகள் நல்ல வேலைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு விடுதாகவும் ஒரு சோகக் கதையை சொல்ல கேட்டு அங்கேயும் த்சூ த்சூ எனச் சொல்லி ஆதரவைக் காமியுங்கள். அப்புறம் என்ன ரிசப்ஷனில் அவர்கள் நண்பர், உள்ளே போனால் இவர்கள் நண்பர் என நடத்த வேண்டியதுதானே.

என்ன, அதைப் பற்றி ஒரு பதிவு போடலாம் அப்புறம் சர்வ சமாதான இம்சை அப்படின்னு ஒரு நாட்டமை தீர்ப்பு கிடைக்கும்.

 
At Friday, 17 November, 2006, சொல்வது...

இப்பவும் நீங்க ஒரு ஆண் என்றும் உஷா என்பது உங்கள் முகமூடி எனவும் ஒரு பருந்தார் வந்து சொன்னாலும் சொல்வார், அதுக்கும் ஒரு பதில் தயார் பண்ணி வெச்சுக்குங்க. ஹிஹி..

 
At Friday, 17 November, 2006, சொல்வது...

ஸ்ரீதர் சார், நுணலும் தன் வாயால் கெடும் என்பதை இருபத்திஒன்றாம் நூற்றாண்டு தமிழில் சொல்வது-
சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது (அதாவது அவரவருக்கே). என்று. மதுமிதா!
நீங்களும் பார்த்துக்குங்க ;-)

ராகவா, ஆக அன்னிக்கிருந்துதான் நல்ல பிள்ளையா மாறிட்டீங்களா?

மணியன், அனாவசியமயாய், ஸ்மைலியை வீணடிப்பதில்லை என்பது சமீபத்திய உறுதி!

மங்கை, ஆஹா நம்ம செட்டு :-)))

கொத்தனாரே, அதைவிட சுலபமான வழியாய் சர்வசமய சமாதானவாதியாய் கன்வர்ட் ஆக முயற்சி
மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன். இருய்யா, அடுத்த பின்னுட்டத்தை மேலோட்டமாய் படிச்சி பீதியில நடுநடுங்கிப் போய்விட்டேன். இப்படி எல்லாம் பயமுறுத்துவது என்று எத்தினி
பேர் கிளம்பியிருக்கீங்க ;-(

 
At Friday, 17 November, 2006, சொல்வது...

---ஒரு சோகக் கதையை சொல்ல கேட்டு அங்கேயும் த்சூ த்சூ எனச் சொல்லி ஆதரவைக் காமியுங்கள். ---

இ.கொ... ; ))

 
At Friday, 17 November, 2006, சொல்வது...

உஷா, அப்படி தத்துவார்த்த்மா நான் என்ன சொல்லிட்டேன் ? )))

 
At Saturday, 09 December, 2006, சொல்வது...

இதெல்லாம் இந்தி பேசுவதால் வரும் தொல்லை.
நீங்க தமிழிலே பேசி இருக்கணும். அவங்களுக்கும் புரியாது.:-)
பேசின மாதிரியும் ஆச்சு.

 
At Saturday, 09 December, 2006, சொல்வது...

பகலில் பக்கம் பார்த்து பேசவும், இரவில் அதுவும் கூடாது என்பது சமீபத்தில் 1955-ல் என் அன்னை எனக்கு கூறியது.:))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Saturday, 09 December, 2006, சொல்வது...

//உஷான்னு பேரூ இருந்தா மட்டும் போதாது, உஷாராகவும் இருக்க பழகிக்கணும்// உஷாரில்லேன்னு யார் சொன்னா??

 
At Sunday, 10 December, 2006, சொல்வது...

மங்கை, எனக்கு அப்படி தோணுதே :-)))))))))))))))))))))))))))))))))))

வல்லி, நல்ல பாருங்க. பாலஸ்தீன பொன்ணுக்கூட ஹிந்தியிலா பேசுவீங்க? நிறைய விஜயகாந்த படம் பாப்பீங்களோ ;-))))))))))))))

வெளி, உஷாரூன்னு நெனச்சிக்கிட்டு இருந்தாலும், சில சமயம் தப்பாய் போயிடுது :-)))))

டோண்டு சார், உங்கம்மா சொன்னது வீட்டுக்கு உதவாதே, தலையணை மந்திர குசுகுசு பேச்சுக்கள்
இரவில்தானே ஓதப்படும் :-)

 
At Sunday, 10 December, 2006, சொல்வது...

அந்த அரபிபொண்ணுக்கு புரிய வெச்சி என்ன பயன். அப்படியே விட்டுடுங்க!

 
At Sunday, 10 December, 2006, சொல்வது...

நம்ப ஊர்ல மட்டும் என்னவாம்..
இங்கயும் முறையா படிச்ச டாக்டர விட போலி டாக்டருக்குதான் பேஷண்டும் ஜாஸ்தி.. வருமானமும் ஜாஸ்தி..

சும்மாவா சொன்னாங்கோ பெரியவங்கோ... தவள தன் வாயால கெடும்னு.. இன்னாதான் நாம டபுள் உஷாரா இருந்தாலும் சில பார்ட்டிங்கோ பேசி பேசியே நம்ப வாய பிடுங்கிடுவாங்க.. மீதிக்கு நாமளே ஒளரிடுவோம்...

அதனால பார்த்து எங்க போனாலும் கேர்புல்லா இருந்துக்கோங்க...

:)))))))

 

Post a Comment

<< இல்லம்