Thursday, December 14, 2006

2006

போன வருடம் எழுதிய திரும்பிப்பார்க்கிறேன்- 2005ல் முதல் பத்தியில் சில, பல வரிகள்.

தமிழ் இணையம்- இணையத்தில் தமிழின் வளர்ச்சியைப் பார்க்க, பார்க்க பிரமிப்பாய் இருக்கிறது. நிறைய புதுமுகங்கள், தமிழில் முதல் முறையாய் தட்டச்சு செய்ய ஆரம்பித்தவர்கள் கூட, மிக அருமையான படைப்புகளைப் படைக்க ஆரம்பித்துள்ளார்கள். இணையம் ஒருவகையில் குருபீடங்களை தகர்த்து விட்டது என்று சொல்லலாம். நன்றாக எழுதப்படும் எழுத்து நிற்கும். யார் எவர் என்று எல்லாம் ஆள் பார்த்து, வாழ்த்தாமல் எழுத்தைப் பார்த்து பாராட்டுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அறிகுறி. ஆரம்பத்தில் பிரபலமானவர்கள் எழுத ஆரம்பித்து, பின்பு விலகி புதியவர்கள் தமிழில் எழுதி பழக்கமில்லாதவர்கள் புதிது புதிதாய் தினமும் வலையுலகில் நுழைவதைப் பார்க்கும்பொழுது, தமிழ் வாழும் என்ற நம்பிக்கை வருகிறது. சங்க தமிழ் போல, இணையத் தமிழ் என்று ஒன்று மெல்ல, மெல்ல உருவாகி வருகிறது.

இனி இவ்வருடம் - 2006

எனக்குப் பிடித்த சில பதிவர்களையும், பதிவுகளையும் நினைவுப்படுத்திக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க என் ரசனையே தவிர, இவர்கள் யார் என்ன என்ற விவரமோ, தனிப்பட்ட நட்போ கிடையாது என்ற நினைவுடன் படிக்குமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும், இந்த வருடம் அதாவது 2006ல் பிளாக் எழுத ஆரம்பித்தவர்கள்.

இதில் முதலில் கவிதா, http://kavithavinpaarvaiyil.blogspot.com

அம்மணி சும்மா இல்லாமல் ஒரு குரங்குக்குட்டியை மன்னிக்கவும், அணில்குட்டியை மடியில் கட்டிக் கொண்டு எழுதுராங்க. இந்த உத்தி மிக அருமை. கிட்டதட்ட மனசாட்சி மாதிரி. இவங்க சீரியசா ஏதாவது சொன்னா, இந்த அணிலு அனிதா எடக்குமடக்கா கமெண்ட் அடிக்குது. வர வர கவிதாவின் பதிவைப் படிக்க ஆரம்பிக்குபோதே, கடைசியில் அனிதா எப்படி வாரப்போகுது என்ற ஆவல் அதிகமாயிட்டே போகுது. கவி, வாழ்த்துக்கள், விடாதீங்க இந்த உத்தியை. தொடர்ந்து எழுதுங்க.

அடுத்து மதுரா. http://tamizhachchikal.blogspot.com

திருநெல்வேலி பொண்ணு போல, போடு போடுன்னு போடுராங்க. சின்ன சம்சயம், அவுங்களா இவுங்கன்னு :-) அடிச்சி தூள் கெளப்புராங்க. அதில அடிக்கடி தனக்கு ஓண்ணுமே தெரியாதுன்னு தன்னிலை விளக்கம் வேற. அவர் எழுதும் முறை, பாவிக்கும் வார்த்தை நடை மிக அதீதம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை, அடிச்சி ஆடுங்க. சில விஷயத்துக்கு இத்தகைய அணுகுமுறை சரியே :-) ஊரூ, உலகிலே கடவுள் எங்கேன்னு தேடி அலையும்போது, அம்மணிக்கு மெதுவடையிலும், தொட்டுக்கக் கொடுத்த கெட்டி சட்னில கடவுள் தெரிகிறார் இவருக்கு.

அடுத்த நம்ப பிரண்டு கோம்பை அம்மணி. http://premalathakombaitamil.wordpress.com/

எனக்கு பிரேமலதா என்று ஒரு பெஸ்ட் பிரண்டு இருந்தா. ஒரு மாதிரி குரு என்றும் சொல்லலாம். அவதானோ என்று தனிமெயில் போட்டு இல்லை என்று தெரிந்துக் கொண்டேன். பெயர் மட்டுமே மிக நட்பாய் உணர்ந்தால் படிக்க ஆரம்பித்து அம்மணியின் குறும்பு/ குசும்பு பிடிச்சிப் போச்! உதாரணமாய்- பார்ட்டில் நடப்பதாய் ஒரு குசும்பு (என் நினைவிருக்கும்வரையில்)

என்ன சூப்பர் பிரியாணி! நீயும் சமைக்கிறியே சவ சவன்னுட்டு
தோடா நாங்க என்ன சும்மாவா இருக்கோம், வேலைக்கும் போறோமில்லே?
ரொம்ப அலட்டாதே, ரமேஷ் கூட வேலைக்குப் போறார். உன்னைவிட ஹை போஸ்ட்


- போதுமா :-) அம்மணியின் குசும்பு. இந்த மூவரின் பிளாக்கை இட்லிவடையில் பெண்கள் வலைப்பதிவில் புலம்புகிறார்கள் என்ற கருத்து கணிப்புக்கும், என்னமோ பெண்கள் வாழ்க்கையை ரசிக்காமல் எந்திர தனமாய் இருக்கிறார்கள் என்று எழுதிய வெளிகண்ட நாதர்,
டெடிகேட் செய்கிறேன். அதே சமயம், எழுத்தில் குறும்பு மட்டுமல்ல, சமூகத்தைப் பார்க்கும் ஆழ்ந்த பார்வையும் உண்டுங்கோ!

சரி, இனி ஆண்குல திலகங்கள்.

இயற்கை நேசி- http://kurangumudi.blogspot.com/

தெக்கத்தியான் என்ற பெயரில் எழுதிக் கொண்டு இருந்தாலும், இயற்கையின் அற்புதகங்களுக்கு என்று இந்த பதிவு. இதில் என்ன போட்டாலும் பார்த்தவுடன் படித்துவிடுவேன்- காதில் புகை
விட்டுக் கொண்டு !

அடுத்து மா.சிவகுமார். http://ezhuththu.blogspot.com/

மனுஷன் வேறு சில பதிவுகள் வைத்திருந்தாலும் எண்ணங்களை எழுதுகிறேன் பிடித்துப் போய்விட்டது. சில சமயம், இழுவையாய் தோன்றினாலும், பல முறை எதையாவது யோசிக்க வைத்துவிடுகிறார்.

யோகன் - http://johan-paris.blogspot.com

இவர் பின்னுட்டங்கள் மூலம் அறிமுகம் ஆனவர். அவ்வருடம் அவர் எழுதிய பனைமரம் பற்றிய பதிவு- கற்பகதரூ மிக அருமையாய் வந்திருந்தது. பல புதிய விஷயங்கள், ஈழத்தைப் பற்றி பல செய்திகள் என்று எழுத ஆரம்பித்துள்ளார்.

வலைப்பதிவின் எதிர்காலம் பற்றி பலரும் அலச ஆரம்பித்துள்ளார்கள். இவ்வருடத்திய சாதனையாளர், தனிப்பட்ட முறையில்

செந்தழல் ரவியின் வேலை வாய்ப்புக்கான பிளாக்-http://tedujobs.blogspot.com/
வாழ்த்துக்கள் ரவி

அடுத்து குழு பதிவர் முறையில்- விக்கிபசங்க- http://wikipasanga.blogspot.com/
நல்ல உருப்படியான விஷயம். நல்லா செய்யுங்க பசங்களா!

வலைப்பதிவுகள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சுதந்திரம், இந்த சுதந்திரமே சில சமயம் வழி மாறிப் போகவும் செய்தது. ஆனால் உண்மையில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன், சிந்தனையுடனும் முயற்சி செய்பவர்களுக்கு வலைப்பதிவுகள் ஒரு வரப்பிரசாதம்

இந்த வரிகளும் சென்ற வருடம் எழுதியவை. வேறு சிலரின் சில மனத்திற்குப் பிடித்த பதிவுகளை எடுத்து எழுத வேண்டும் என்று இருந்தேன். நேரமில்லை. இனி இவ்வருடம் புதியதாய் பதிவு எழுத வருபவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

14 பின்னூட்டங்கள்:

At Thursday, 14 December, 2006, சொல்வது...

செம கலக்சனுங்க..
சிலரை புதிதாய் பார்க்கிறேன் ஒரு எட்டு போய் படிச்சுட்டு வாறேன்.

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

நன்றி சிறீல். நாலு பேரூ பார்க்கட்டும் என்ற எண்ணத்தில் பின்னுட்ட கயமை அனுமதிக்கபப்டுகிறது :-)

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

நல்ல பதிவர்களை ஊக்குவிக்கும் பதிவு. சிறில் போல எனக்கும் சிலர் புதுசுதான். அறிமுகத்திற்கு நன்றி.

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

நல்ல லிஸ்ட், முன்ன பின்ன பாக்காத புது ப்ளாக் ரெண்டு முணு வேற இருக்கு. போய் படிச்சு பாக்குறேன். டாங்க்ஸ்

 
At Friday, 15 December, 2006, சொல்வது...

இந்த ஊக்குவிப்பு அவசியம்...
நல்ல பதிவு உஷா...

ஏதாவது ஒரு விதத்தில எல்லா பதிவுகளும் தனித்தன்மை பெற்றவை.. அதற்கு பின்னால இருக்கும் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இந்த பதிவு கண்டிப்பா ஒரு ஊக்குவித்தலா இருக்கும் உஷா

இத மாதிரி யாராவது போடமாட்டாங்களான்னு நான் நினச்சுட்டு இருந்தேன்,...

ம்ம்ம் நல்ல பதிவு...நன்றி உஷா

 
At Friday, 15 December, 2006, சொல்வது...

கவி, வாழ்த்துக்கள், விடாதீங்க இந்த உத்தியை. தொடர்ந்து எழுதுங்க.//

நன்றி உஷாஜி, உங்களின் ஊக்குவிப்பு மிகவும் அவசியமானது தான்.. மங்கை சொல்றமாதிரி நன்றி :)

அணிலும் நன்றி சொல்ல சொல்லிச்சு :)

 
At Friday, 15 December, 2006, சொல்வது...

மணியன், WA அதுக்குதானே போடுவது. எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை. நானும் சின்னதா
ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன். அதைத் தாண்டி வேற பார்ப்பதில்லை. தவறு என்று தெரிகிறது, ஆனால் சில பக்கங்களை திறக்கும்பொழுதே, அதுவும் காலையில் கண்ணில் விழுந்தால் எரிச்சலாய் வருகிறது.

 
At Saturday, 16 December, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Saturday, 16 December, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Saturday, 16 December, 2006, சொல்வது...

அம்மணி,

உசுப்பேத்தி, உசுப்பேத்தித்தேன் உடம்பே ரணகளமா இருக்கு. :)

இட்லியாரோட பதிவுல அஞ்சு பின்னூட்டம்; கொழுப்பெடுத்த "மூட்"ல இருக்கும்போது போட்டது. ;)

:D

 
At Monday, 18 December, 2006, சொல்வது...

அனைவருக்கு நன்றி. மங்கை! உங்க முதியோர் இல்லம் குறித்தான பதிவுப்போல, எனக்குப் பிடித்த சில பதிவுகளை எழுதலாம் என்று நினைத்துவிட்டு, பிறகு முடியாமல் போனது. குளிர்கால விடுமுறை என்பதால், பிள்ளைகள் கணிணியைத் தர மறுக்கின்றன.

நினைவுப்படுத்திப் பார்த்தால், கால்கரி சிவா குறிப்பிட்ட பஜனைப்பாடல், பொன்ஸ்சின் கணிணி சம்மந்தமான கட்டுரைகள், வஜ்ராவின் அத்வைதம், நா. கண்ணனின் இரண்டு பதிவுகள் (எண்ணங்கள், ஆன்மீகத் தேடல்), தமிழினி முத்துவின் புத்தக மதிப்புரைகள், சிறில், லக்கி லுக், வெட்டிபயல் ஆகியோரின் சிறுக்கதைகள், கூத்தாடி, ராஜ்வனஜ் ஆகியோரின் இரண்டொரு பதிவுகள், டோண்டுவின் சுய மதிப்பீடு- ஒரு பதிவு, கானாபிரபாவில் தேடி எடுத்து வடிக்கட்டி சில :-)
பினாத்தலாரின் பிளாஷ், ஜிரா, தேசிகனின் பயணக்குறிப்புகள், கனகு, யோகன், மணியன் இவர்களுடையது இரண்டு, முத்துக்குமரன், ரா.மணிகண்டன் அவர்களின் கவிதைகள், ஜொள்ளு பாண்டியின் வம்பு, சமீபத்தில் கல்யாணம் கட்டிக்கிட்ட கார்த்திக்கின் அனுபவங்கள், ஜோ, தர்மியின் பதிவும், அதுவிட சுவாரசியமான பின்னுட்டங்களும், பத்மா, செல்வராஜ் இவர்களுடையது சில என்று பட்டியல் பெரியதாகிப் போய் கொண்டு இருக்கிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னும் கிடைக்கும், சும்மா ராண்டமாய் சொல்லியிருக்கிறேன்.
போட்டால், லிங்க் கொடுத்துப் போட வேண்டும் என்பதால் நேரமில்லாமல் விட்டுவிட்டேன். யாராவது எடுத்து செய்யுங்கப்பா!

 
At Tuesday, 19 December, 2006, சொல்வது...

உங்க பதிவு பாத்துட்டு இரண்டு நாளா கால் தரையில நிக்கலை. பறந்துகிட்டே இருக்கேன் பெருமையில.
மனமார்ந்த நன்றி உஷா.

அஞ்சலி படத்துல ஐஸ்கிறீம் உள்ளையே குதிச்சி ஆடுற மாதிரி வருமே கனவுப் பாட்டு அந்த மாதிரி ஒரு சந்தோஷத்தை குடுத்துச்சி உங்கள் பாராட்டு.

இன்னைக்கு தான் நேரம் கிடைச்சுது நன்றி சொல்றதுக்கு.
நன்றி நன்றி நன்றிகள் பல.

 
At Wednesday, 20 December, 2006, சொல்வது...

//ramachandranusha said...

நினைவுப்படுத்திப் பார்த்தால்,
கானாபிரபாவில் தேடி எடுத்து வடிக்கட்டி
சில :-)//


ஆஹா இப்பிடிக் கவுத்திட்டீங்களே:-(
பிடிக்காததையும் சொன்னா நாங்க திருத்திக்கலாமில்ல

 
At Tuesday, 26 December, 2006, சொல்வது...

மதுரா, நான் மட்டுமா சொல்லியிருக்கேன், இன்னும் ரெண்டு வலையுலக ஜாம்பவான்களும் சொல்லியிருக்காங்களே! எனக்குப்
பிடிச்சக் காரணம் என்னைப் போலவே கொஞ்சம் கிறுக்கு :-)

பிரபா, அதெப்படி :-)

பிரேமலதா, நீங்க போட்ட கமெண்ட்டை நீங்களே எடுத்த காரணம் உகித்தேன். ஆனா பாருங்க, மாடரேஷன்ல ஒண்ணு
இருந்துச்சு, பப்ளிஷ் செஞ்சிட்டேன். தயவு செஞ்சி இதை தூக்கிடாதீங்க.

 

Post a Comment

<< இல்லம்