Saturday, December 09, 2006

எனக்கு கிடைத்த இன்னொரு பரிசு

விடுமுறை நாள். நல்ல குளிர் வேறு. எழுந்ததே தாமதமாய். காலை பலகாரம் கிடையாது என்று அறிவித்துவிட்டு மெல்ல காபி குடித்துக் கொண்டு வலை மேய ஆரம்பித்தால், மணி
பன்னிரெண்டு. பிள்ளைகள் பசி பசி என்று அலற மெல்ல சமையலை ஆரம்பித்தேன். முடித்துவிட்டு கணிணி பக்கம் வந்தால், டெஸ்க் டாப் பேக்ரவுண்டில் எனக்கு கிடைத்த நற்சான்றிதழ் ;-)

ஹூம் , யாரோட பிள்ளைகள், குறும்புக்கு கேட்கணுமா?

குறும்பு- தேன்கூடுப் போட்டிக்கு.

20 பின்னூட்டங்கள்:

At Saturday, 09 December, 2006, சொல்வது...

:))

At Saturday, 09 December, 2006, சொல்வது...

அவ்வளவு பசியிலும் bad mother ஐ டிக் செய்யாது Good writerஆக குழந்தைகள் தேர்ந்தெடுத்தது நிச்சயம் அளப்பறிய பரிசே!

At Saturday, 09 December, 2006, சொல்வது...

:)))

பி.கு. இன்னும் கதை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. ஒருவேளை அதை வாசித்திருந்தால் எனக்கும் Good reader, Bad mother பட்டம் கிடைத்திருக்கும், :)))

At Saturday, 09 December, 2006, சொல்வது...

இந்த ஸ்டார்விங் கிட்ஸ் நீங்க எழுதுவதை படித்திருப்பார்கள் என்று உறுதியா நம்புறீங்களா....

:-)))))))))))))))))))))))))))))

At Saturday, 09 December, 2006, சொல்வது...

இது தான் உண்மையான பரிசு Usha

தேவை தான்...:-)))

At Saturday, 09 December, 2006, சொல்வது...

பன்னிரெண்டு. பிள்ளைகள் பசி பசி என்று அலற?
என்னப்பா ரெண்டு தானெ உங்களுது?:-)

At Saturday, 09 December, 2006, சொல்வது...

அப்படிப்போடுங்க குழந்தைங்களா!!

At Saturday, 09 December, 2006, சொல்வது...

அசத்தலான குறும்பு!

அருமையான பரிசு!!

அது சரி காலை டிபனும் கொடுக்காம மதிய உணவையும் பனிரெண்டு மணிக்குமேல சமைக்க ஆரம்பிச்சா...ம்... பாவம் ரொம்ப சமத்துப் பசங்க போலயிருக்கு!

At Saturday, 09 December, 2006, சொல்வது...

சரியாத்தான் சொல்லியிருக்காங்க!

:))

At Saturday, 09 December, 2006, சொல்வது...

ஃபுஜைராவில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் சௌதியில் ரியாத்தில் வார இறுதிகளில் நள்ளிரவு 12 மணி / 1 மணி வரை ஊர் சுற்றுவதும், மறுநாள் விடியற்காலை 10 மணி / 11 மணி வரை தூங்குவதும் இயல்பாகவே இருக்கும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்கும் பலர் வாரநாட்களில் காலை உணவு அதிகம் சாப்பிடுவதில்லை.

At Saturday, 09 December, 2006, சொல்வது...

சமைச்சு போடலன்னாலும் சமத்தா இருந்து சர்ட்டிபிகேட் குடுக்கற புள்ளீங்களா.. ஆகா..

திருஷ்டி சுத்தி போடுங்க..

At Saturday, 09 December, 2006, சொல்வது...

Valarum KusumbarkaL :-))))))

At Saturday, 09 December, 2006, சொல்வது...

பொன்ஸ், முதலில் டெஸ்க் டாப்பையே, பேஸ் காப்பி பேஸ்ட் செய்யலாம் என்று இருந்தேன்,
ஆனால் பிறகு வேண்டாம் என்று ரைட் கிளிக் செய்து, மேட்டரை மட்டும் காப்பி பேஸ்ட் செய்துப்
போட்டேன்.

மணியன் உங்க சந்தேகத்தைக் கேட்டேன். பசி மயக்கத்தில் ரைட், ராங் மாத்திப் போட்டு விட்டாங்களாம்.
முதலுக்கு தவறு, அடுத்ததுக்கு சரி என்பதே சரியான விடையாம் :-))))

கலை!
ஐந்தாறு வயதுவரை என் அம்மா பெஸ்ட் என்னும், பிறகு தன் அம்மாவைப் போல மோசமான
அம்மாவே இல்லை என்று சொல்லிவிட்டு, ஊரில் உள்ள அம்மாக்கள் செய்யும் தியாகங்களைப்
பட்டியல் இட ஆரம்பிப்பார்கள்.

வழி! என்னுடைய கொள்கைகளில் ஒன்று- யாரையும் நான் எழுதுவதை படி என்று சொல்வதில்லை.
நம்மாளு, நாலு நாளுக்கு முன்னால் தானே மனம் உவந்து எங்கே கதை என்றார். இதற்காக டெஸ்க் டாப்பில் போட்டு வைத்தேன். இன்று காலையில் படிச்சாச்சா என்றால் நேரமே இல்லை, படித்து விடுகிறேன் என்றார். போதுமா சொந்த சோகக்கதை :-(

At Saturday, 09 December, 2006, சொல்வது...

மங்கை, சிபி, சுரேஷ்! :-)))))

வல்லிஈஈஈஈஈஈஈஈ ,
பன்னிரெண்டுக்குப் பிறகு புள்ளி. பிறகு பிள்ளைகள் என்று படிக்கவும் (நற, நற....)

சிந்தாநதி,
பலகாரம் என்றால் தோசை இட்லி, இதைத் தவிர பல்லில் போட்டு அரைக்க வீட்டில் வஸ்துக்கள்
இல்லையா என்ன?

பாலராஜன் கீதா சார்,
இந்த மாதிரி கெட்ட பழக்கம் எல்லாம் பழகியாச்சு,. ஊருக்குப் போகணும் என்றால் பயமாய்
இருக்கு :-)

அரை பிளேட்,
மணியனுக்குப் போட்ட பதிலைப் படிக்கவும். ஆனால் சுத்திப் போடாவிட்டாலும் சமுத்து பசங்கத்தான்.

குசும்ஸ்,
மாயவரம் குசும்பும், கோவை குசும்பும் ரத்தத்தில் கலந்து இருக்கே :-)
ஹை பீரீட் வெரைட்டி :-))))

At Sunday, 10 December, 2006, சொல்வது...

:)))
senshe

At Sunday, 10 December, 2006, சொல்வது...

சென்ஷி, உங்கள் புன்னகைக்கு இதோ ஒரு பதில் புன்னகை :-)

At Sunday, 10 December, 2006, சொல்வது...

உஷா!
இதுதான் குசும்புக் குறும்பு என்பதோ!!!
"பால் நினைந்தூட்டும் தாய்"
யோகன் பாரிஸ்

At Sunday, 10 December, 2006, சொல்வது...

நல்லாப் போட்டாங்கையா சர்டிபிகேட்!

At Sunday, 10 December, 2006, சொல்வது...

யோகன் நக்கல், நையாண்டி, குசும்பு, குறும்பு இதில் குறைவே இல்லை. சில சமயங்களில் நாங்கள் மூணு பேரும் சேர்ந்து,தலைவரை ஓட்டுவோம் . பாவம் மனுஷன்ன்னு நெனைக்காதீங்க, சில சமயம் இதே அஸ்திரம் என் மீதும் ஏவப்படும்.

ஜி, பாராட்டா திட்டான்னு விளங்கலை :-)

At Friday, 22 December, 2006, சொல்வது...

ஓட்டு போட்டாச்சுங்க. :-))

Post a Comment

<< இல்லம்