Saturday, December 02, 2006

சந்தோஷ சமாச்சாரம்

கலைமகள் மாதாந்திர இதழ் நடத்திய அமரர் கி.வா.ஜா நூற்றாண்டு விழா நாவல் போட்டிக்கு அனுப்பிய "கரையைத்தேடும் ஓடங்கள்" என்ற நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. எழுத ஆரம்பித்து சரியாய் நாலு வருடம் ஆன நிலையில் இந்த பரிசு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. என் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளாமல் வேறு யாரிடம் சொல்லுவேன் :-)

64 பின்னூட்டங்கள்:

At Saturday, 02 December, 2006, சொல்வது...

vow!

vaazhthukkaL.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள்.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

துளசி, நன்மனம் நன்றி. டிசம்பர் இஷ்யூவில் அறிவிப்பு வருகிறது. யாராவது சென்னைவாசிகள் கண்ணில் கண்டால் சொல்லுங்க

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள்.....

நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க ...:-)

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள். கல்கியிலா??

At Saturday, 02 December, 2006, சொல்வது...

உஷா

வாழ்த்துக்கள்... இன்னும் வளரணும் :-)

At Saturday, 02 December, 2006, சொல்வது...

மனசு நன்றி நீங்கள் சொன்னதும்தான் தெரிந்தது. எடிட் செய்து திருத்திவிட்டேன். கலைமகள் மாதாந்திர இதழ் நடத்திய போட்டி இது.

மங்கை நன்றி

At Saturday, 02 December, 2006, சொல்வது...

நிலா, ஆமாம். வெற்றிக்கு எல்லையும் இல்லை. எல்லாம் கிடைத்துவிட்டது என்ற பெருமிதம் வந்தால் மேலும் வளர்ச்சி என்பது இருக்காது.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா.. புத்தகம் கண்ணில் பட்டால் உடனே வாங்கிவிடுகிறேன்..

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள்

அன்புடன்,
இராம.கி

At Saturday, 02 December, 2006, சொல்வது...

Wow.. ana unga ezhthuku edhu ellam sadharanam... entha ethalil ungaloada novel varudhu? muzhu novel a?

At Saturday, 02 December, 2006, சொல்வது...

மனசு நிறைய வாழ்த்துகிறேன் உஷா:-)

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள், அப்படியே ஒரு ட்ரீட் ரெடி பண்ணுங்க.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

சிறுவயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த புத்தகம் கலைமகள். நாராயணசாமி ஐயர் நினைவு போட்டிக்கதைகள் நிறைய எழுத்தாளர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. பிடிவாதமாக விளம்பரங்களை மறுத்துவந்த அந்தப் பத்திரிகை இன்னும் இயங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. அத்தகைய நிறுவனப் பரிசு கிடைத்தது உவகை அளிக்கிறது. நெஞ்சார வாழ்த்துகிறேன் !!

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள். !!!!!!!!1

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா. கலைமகளில் வந்த உடன் வலையிலும் ஏற்றுகிறீர்களா?

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா. கலக்குங்க. ஒரு 'போட்டியின்னு வந்துபுட்டா நீங்க சிங்கிதான் போல?'

:)

வாழ்த்துக்கள்.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

பொன்ஸ், இராம்கி,புனித் (தமிழ் வலையுலக புதுமுகம் மாதிரி இருக்கு இந்த பெயர்), கானாபிரபா, இலவசம் வாழ்த்துக்கு நன்றிகள்.

மணியன், சின்ன வயதில் அம்மா மிக விரும்பிப்படித்த தொடர்நாவல் நீங்கள் குறிப்பிட்ட நாராயணசாமி ஐயர் நினைவு
விருது பரிசுப்பெற்ற கதவு- கமலா சடகோபன் எழுதியது. அதை தொகுத்து ஊசி நூலில் தைத்து வைத்திருந்ததை, நானும்
படித்து ரசித்தேன். ஆனால் அப்பொழுது இதே பத்திரிக்கையில் நானும் எழுதுவேன் என்றெல்லாம் நினைத்ததும் இல்லை.என் வாழ்க்கை பல அதிசயங்களும், அபத்தங்களும் கொண்டது என்றால் மிகையில்லை- வார்த்தை உதவி மதுரா :-)

பத்மா, டிசம்பர் மாத இதழில்தான் அறிவிப்பே வரப்போகிறது, முதலில் முதல் பரிசு பெற்ற நாவல் வரும். பிறகு தானே என்னுடையது. கலைமகள் ஆசிரியருடன் பேசிவிட்டு இணையத்தில் போடுவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும்.

செந்தழல் நன்றி

At Saturday, 02 December, 2006, சொல்வது...

சிறில் கஜினி முகமதுக்கு பெண்பால் என்ன :-)))

At Saturday, 02 December, 2006, சொல்வது...

அடடா கஜினி முகமதௌ படையெடுத்தார்னா நீங்க படைப்பெடுக்கிறீங்கன்னு சொல்ல வர்றீங்க.

இதனால் சகலருக்கும் அறிவிக்கப்படுவதென்னவென்றால் கஜினி முகமதுக்குப் பெண்பால் உஷாதான்.

அதுசரி முதலை வாயிலேயே தலைய உட்டவங்க ஆச்சே நீங்க...

:)

At Saturday, 02 December, 2006, சொல்வது...

உஷா
கதவு என்ற தொடரில் மாலதி என்பதுதானே நாயகியின் பெயர்? எனக்கும் படித்த நினைவு இருக்கிறது. கலைமகள் தீபாவளி மலர் எனக்கு முன்பெல்லாம் படிக்க பிடிக்கும்.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

சிறில் அந்த முதலை வாய் படம் சிம்பாலிக்காய் இணையத்தில் எழுதுவதைக் குறிப்பது :-) அதை பதிவில் இருந்து எடுத்தது எனக்கே பெரிய குறைதான்.

பத்மா, ஆமாம், நாயகி மாலதி, நாயகன் மாதவன்.இப்ப யோசித்தால் கொஞ்சம் ரமணி சந்திரன் வாடை இருக்கும். செம்ம மசாலா கதை. வில்லனும் உண்டு. கமலஹாசன்ம், ஜெயசித்ரா நடிக்க படமாய் வரப்போகிறது என்று பேசும்படத்தில் ஸ்டில் பார்த்த ஞாபகம். ஆனால் படம் வெளிவரவில்லை.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துகள் உஷா!

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா மேடம்!
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

At Saturday, 02 December, 2006, சொல்வது...

உஷாவின் அடுத்த இலக்கு சாஹித்ய அகாதெமியாக இருக்க வாழ்த்துகிறோம்.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

மதி, சிபி நன்றி

பாலராஜ்கீதா, ஞானபீடம் விருதையும் சேர்த்துக்குங்க :-)))))

At Saturday, 02 December, 2006, சொல்வது...

ஜெயஸ்ரீ நன்றி

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் ... உங்கள் எழுத்துப் பயணம் இன்னும் இனிமையாக தொடரட்டும்.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

congrats. kalakkunga.

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் நுனிப்புல் அவர்களே...சாரி...உஷா அவர்களே :-)

At Saturday, 02 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். ட்ரீட்?

At Sunday, 03 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் சகோதரி!

At Sunday, 03 December, 2006, சொல்வது...

ஆதிரை, இன்பா (என்ன அழகான பெயர்), WA, நன்றி

வழிபோக்கன்,நுனிப்புல் என்றால் என் பெயர் நினைவில் வரும். ஆக எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்க ;-)

At Sunday, 03 December, 2006, சொல்வது...

சுப்பய்யா சார், வாழ்த்திற்க்கு மனமார்ந்த நன்றிகள்

At Sunday, 03 December, 2006, சொல்வது...

'தமிழ் எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு போன்றது கலைமகள் நடத்தும் போட்டியில் கிடைக்கும் பரிசு'

மணியன் தனது கதைகளில் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுவார்.

நல்ல தரமும், தாக்கமும் உள்ள எழுத்துக்கள்தாம் கலைமகளில் ஏற்கப்படும் என்பது நம்பிக்கை. அதன் பரிசு உங்களுக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,

மா சிவகுமார்

At Sunday, 03 December, 2006, சொல்வது...

எல்லோருடைய வாழ்த்துக்களையும் நான் வழிமொழிகிறேன் :)

At Sunday, 03 December, 2006, சொல்வது...

உஷா!
கலைமகள் பரிசா??,தமிழில் அது நோபலுக்கு ஈடானது.
வாழ்த்துக்கள்!!
தொடரவும்
யோகன் பாரிஸ்

At Sunday, 03 December, 2006, சொல்வது...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உஷா.

At Sunday, 03 December, 2006, சொல்வது...

அட்றா சக்கை...

சக்கை போடு... போடு ராசா...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(தனிமடலில் கதையை மின்னஞ்சல் செய்ய இயலுமா? படித்து மகிழ வாய்ப்பு கொடுத்தால் தன்யனாவேன்)

At Sunday, 03 December, 2006, சொல்வது...

உஷா,
மனம் நிறை வாழ்த்துக்கள் ! பாபா கூறியது போல், (முடிந்தால்) தனிமடலில் எனக்கும் கதையை
அனுப்புங்கள், வாசித்து மகிழ்வேன்.

'கதவு' எழுதிய கமலா சடகோபன் என் உறவினர், அவர் கணவர் கோபு, இயக்குனர் ஸ்ரீதரிடம்
பணியாற்றியவர்.

போலியில்லா :))
எ.அ.பாலா

At Sunday, 03 December, 2006, சொல்வது...

உளம் கனிந்த வாழ்த்துக்கள்!

At Sunday, 03 December, 2006, சொல்வது...

சிவக்குமார், யோகன்! நன்றி. நீங்கள் சொன்னது உண்மை. இணையம் மூலம் அரிச்சுவடி எழுத ஆரம்பித்து இன்று பரிசு பெறும் இடத்தில்
நிற்பதற்க்கு முழு காரணம் தமிழ் இணையமும், அதன் மூலம் கிடைத்த அருமையான நட்புகளும்.

விக்னேஷ்,கலை! நன்றி நன்றி.

பாபா, பாலா, கட்டாயம் அனுப்பி வைக்கிறேன். அங்கங்கு சிதறிக் கிடக்கிறது. ஒழுங்காய் சேர்த்து அனுப்பி வைக்கிறேன். ஒரு
வாரம் பொறுங்கள்.

பாபாவிடமிருந்து வாழ்த்து வரவில்லையே என்று கொஞ்சம் ஏங்கிப் போய்விட்டேன் :-)

பாலா, நானும் உங்க பிரண்டு என்று சொல்லிக்கலாம் :-))))))

At Sunday, 03 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள்.

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

engal idhaya poorvamana, kanivana nal vaazhthukkal. I cant just wait till i could buy the particular kalaimagal issue when yr gr8 padaippu is published. pl arrange to mail me also as 'thani madal'

romba romba sandhosham.

Sridhar(latha)

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா..

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

ஸ்ரீதர், சு.கோபால் பாராட்டுக்கு நன்றி .ஸ்ரீதர் சார், மெயில் வருது.

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள்!!!

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

உஷா, அன்புடன் வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய வெற்றி தேடி வரணும்.
கலைமகள் மட்டுமே படிக்க அனுமதி எங்க வீட்டிலே.
அதில் சூடாமணி, கமலா சடகோபன்,லட்சுமி ராஜரத்தினம்,
அகிலன்,மாயாவி என்று வளர்ந்தவள் நான்.
சக வலைப் பதிவாளினி (?) பரிசு வாங்கியது ரொம்பப் பெருமை.

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

அடடே உஷா ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போதான் இந்த விஷயம் கண்களில் பட்டது. வாழ்த்துக்கள். ஆமா, அன்னிக்கு ஒரு நாள் கடற்கரையில் நடந்துவரும்போது சொன்ன குறிக்கோள் நிறைவேறியாச்சு என்று நினைக்கிறேன். மேன்மேலும் வளர ஆசிகள் :-) Keep pushing the bar and scale heights :-)

அருணா

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள்! முடிஞ்ச நாவலை மின்பிரதி அனுப்பி வைக்க முடியுமா?

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

உஷா,

இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துகள்!

அன்புடன், பி.கே. சிவகுமார்

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

வெட்டிப்பயல், பி.கே.எஸ் நன்றி

அருணா, குறிக்கோள் என்று சொன்னதாக நினைவில்லை. ஆனால் இப்படி ஒரு நாட் இருக்கு, கலைமகள் போட்டிக்கு எழுதி அனுப்பப்போகிறேன் என்று கடற்கரையில் இருந்து கிளம்புபொழுது, நீங்கள் கார் ஓட்ட நான் பின்னிருக்கையில் இருந்து சொன்னேன்.
வாழ்த்துக்கு நன்றி அருணா.

வல்லி, நான் என்றுமே முதலில் இணைய எழுத்தாளினிதான். வாழ்த்துக்கு நன்றி வல்லி, வெ.நா.

வெ. நாதரே, விரைவில் அனுப்பு வைக்கிறேன்.

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

நிறைந்த வாழ்த்துகள்.
அருள்

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

///அருணா, குறிக்கோள் என்று சொன்னதாக நினைவில்லை. ஆனால் இப்படி ஒரு நாட் இருக்கு, கலைமகள் போட்டிக்கு எழுதி அனுப்பப்போகிறேன் என்று கடற்கரையில் இருந்து கிளம்புபொழுது, நீங்கள் கார் ஓட்ட நான் பின்னிருக்கையில் இருந்து சொன்னேன்.
வாழ்த்துக்கு நன்றி அருணா.///

அடப்பாவமே
அப்ப பக்கத்தில் இருந்தது
யார்?
யார்?
யார்?

அருணா, உஷா கொஞ்ச நாள்
(20 நாட்கள்)வலைப்பதிவுக்கு வரலை என்றால் இப்படிக் கூடவா மறக்கும்:-(

At Tuesday, 05 December, 2006, சொல்வது...

அருள் செல்வன் நன்றி

மது, வாழ்த்துக்கு நன்றி. அந்த வாழ்த்தை தனிமடலாய் பாவிக்கிறேன். ஆக, என் பார்வைக்கு
மட்டும் :-),
ஆமாம், அன்று அருணா காரில் நீங்களும் இருந்ததது நினைவு வந்து, நான் என்ன சொன்னேன் என்று சாட்சிக்கு அழைக்கலாம் என்றும் நினைத்தேன் :-)))

At Wednesday, 06 December, 2006, சொல்வது...

உடல்நிலையைப் பொருட்படுத்தாது இன்று இணையத்துக்கு இத்தனைமுறை வந்தது எதற்காம்
வாழ்த்துவதற்காகத்தானே?????

///மது, வாழ்த்துக்கு நன்றி. அந்த வாழ்த்தை தனிமடலாய் பாவிக்கிறேன். ஆக, என் பார்வைக்கு
மட்டும் :-),///

உஷா
இதை வன்மையாய் கண்டிக்கிறேன்
(கோபத்துக்கு என்ன ஸ்மைலி போடணும். இங்கே போட்டுக் கொள்ளவும்)

பொதுவில் இட்டது தனிமடலாய் உங்கள் பார்வைக்காக அல்ல.
அது தவிர இங்கே பப்ளிஷ் செய்ய முடியாத அளவில் என்ன எழுதியிருக் கிறேன் என்று அறிய ஆவல்:-)

இதுவும் போடப்படவில்லையென்றால்
போராட்டம் ஆரம்பிக்கப்படும் அஹிம்சாமுறையில் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

துளசி, நன்மனம், மங்கை, மனசு, நிலா, பொன்ஸ், இராம.கி, புனித், கானாபிரபா, கொத்ஸ், மணியன், ரவி, பத்மா,சிறில், மதி, சிபி, பாலராஜன்கீதா, ஜெயஸ்ரீ, இன்பா, ஆதிரை, வழிப்போக்கன், வா, சுப்பையா, மா.சிவகுமார், விக்னேஷ், யோகன், கலை, பாபா, அன்புடன் பாலா, ஜோ, தேவ், ஸ்ரீதரன், சுதர்சன்.கோபால், வெட்டிப்பயல், வல்லிசிம்ஹன்,அருணா,வெளிகண்டநாதர்,பிகேஎஸ், அருள்செல்வன்

இவர்கள் சாட்சியாக:-)

எனது போராட்டத்திற்கு துணை வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கமெண்ட்:-)

At Wednesday, 06 December, 2006, சொல்வது...

வாழ்த்துகள் உஷா. கலைமகள் பத்திரிகையின் தரம் நிரந்தரம். விளம்பரங்களிலும் வண்ணப்புகைப்படங்களிலும் இலவசங்களிலும் ஆழ்ந்து போன இன்றைய தமிழ்ப் பத்திரிகை உலகத்தில் நீண்ட காலமாக நிலைத்து வரும் இதழ் கலைமகள். அது பெங்களூரில் கிடைப்பதில்லை என்பது வருத்தமே. சந்தா கெட்டினால் அனுப்புவார்கள் என்றால் நானும் வாங்கத் தயார்தான். அப்படி ஒரு பத்திரிகையில் நீங்கள் பரிசு பெற்றிருப்பது மிகச் சிறப்பு. என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள். தலைப்பு பழைய எம்பது சினிமாத் தலைப்பு போல இருந்தாலும் கதை புதுமையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஞானபீடம், சாகித்ய அகாடமி, நோபல் என்றெல்லாம் காதில் விழுகின்றன. எழுத்து வியாபாரி ஆவதற்கு வசதியாக உங்களுக்குத் தள்ளுவண்டி கிடைத்திருக்கிறது. வியாபாரம் முன்னேறி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைக்க வாழ்த்துகள்.

At Wednesday, 06 December, 2006, சொல்வது...

மது ஹூ ஹூம்ம்ம்ம் :-))))

ஜிரா, பார்க்கலாம். பொதுவாய் கனவு காண்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பார்க்கலாம். பெரிய எதிர்ப்பார்ப்பு எந்த விஷயத்திலும் இல்லை. நேர்மையான பாதையில், என் முழு முயற்சியுடன் செல்கிறேன். இனி காலம் போடும் பாதையில்!

At Friday, 22 December, 2006, சொல்வது...

வாழ்த்துகள் உஷா.

At Friday, 22 December, 2006, சொல்வது...

உஷாஜி, வாழ்த்துக்கள், ரொம்ப சந்தோஷமா இருக்கு.. !!

At Saturday, 23 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா

அன்புடன்...ச.சங்கர்

At Tuesday, 26 December, 2006, சொல்வது...

குமரன், கவிதா, ச.சங்கர் வாழ்த்துகளுக்கு நன்றி. கலைமகள் ஏப்ரல், 2007 மாத இதழில் கதை ஆரம்பிக்கிறது
படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

At Monday, 23 March, 2009, சொல்வது...

வாழ்த்துக்கள்!

Post a Comment

<< இல்லம்