Tuesday, December 26, 2006

மீரான் மைதீன், அ.முத்துலிங்கம் -26th Dec,2006

மூன்று நாட்களுக்கு முன்பு கல்ப் நீயூஸ் செய்தித்தாளில் ஒரு செய்தி. விசா இல்லாமல் தங்கியிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு போலீஸ் சோதனை இட வர, வீட்டில் இருந்த உகாண்டாவை சேர்ந்த ஒருவர்,தப்பிக்க மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து குதித்து
உயிர் துறந்திருக்கிறார்.

துபாய், ஷார்ஜாவில் மனித நடமாட்டம் அதிக உள்ள இடங்களில் பல முறை நான் பார்த்திருக்கிறேன். எங்கோ போலீஸ் சைரன் ஒலி கேட்கும். சர சரவென்று மனிதர்கள், பாம்பைப் போல ஓடி ஒளிவார்கள். மாட்டினால் அவ்வளவு தான். அது என்ன
தண்டனை என்கிறீர்களா? இந்த கதை இவ்வாரம் திண்ணையில் வந்துள்ளது.
எழுதியவர் பெயர்- மீரான் மைதீன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=10612214&format=html

படிக்க, படிக்க மனம் நடுங்குகிறது. அப்படியும் வேலைத் தேடி மனிதர்கள் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறை சாரா பணிக்கு, சரியான வழிக்காட்டல் இன்றி, விசிட் விசாவில், ஏசண்டுகளால் ஏமாற்றப்பட்டு ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வரும் மக்களின்
துயரக்கதைகள் ஏராளம். படிப்பறிவு இன்மையும் வறுமையுமே காரணம். என்ன வளம் இல்லை நம் திரு நாட்டில் என்று பாடல் பாட நன்றாக இருக்கிறது. ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று இருப்பதை விற்று, கடனும் வாங்கி, தான் கஷ்டப்பட்டாலும்,
தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவதிபடும் ஆண்களின் தியாகங்கள் அதிகம் பேசப்படுவதில்லை.

இந்தக்கதையைப்படித்துக்கொண்டிருப்போதே அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய "கொழுத்தாடு பிடிப்பேன்" என்ற சிறுக்கதை நினைவுக்கு வந்தது. அதுவும் சிறையில் வாடும் ஒரு அகதியின் கடிதம், சிறுகதை வடிவில்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=10301122&format=html

அதை திண்ணையில் தேடிப்பிடித்து, முதலிரண்டு வரிகளில் அந்த கதைத்தானா என்று உறுதி செய்துக் கொண்டு, மேற் கொண்டு படிக்க தைரியமில்லமால் மனம் கனக்க இங்கு லிங்க் இட்டிருக்கிறேன். சோகத்தைப் போகிற போக்கில் சொல்லிக்கொண்டுப் போகும் உத்தி, இன்னும் சோகத்தை அதிகப்படுத்துகிறது இல்லையா?

1 பின்னூட்டங்கள்:

At Sunday, 06 March, 2011, சொல்வது...

Thanks for sharing. Very bad state of human race.

 

Post a Comment

<< இல்லம்