Wednesday, December 27, 2006

கில்லி நிர்வாகிகளுக்கு

இன்றுடன் மூன்று நாட்களாய் ஒரு பிரச்சனை. கில்லியில் தொடர்ந்து நிறைய பிரபலங்களை தேர்ந்தெடுத்து எழுத வைக்கிறீர்கள் என்பதை முன்பக்க தேன் கூடு காட்டுகிறது. ஆனால், அந்தோ, ஓவ்வொரு முறை கில்லியை கிளிக்கினால் இப்படி வருகிறதே

Network Error (tcp_error)
A communication error occurred: ""
The Web Server may be down, too busy, or experiencing other problems preventing it from responding to requests. You may wish to try again at a later time.
For assistance, contact Customer Support.

இது என் கணிணி கோளாறா அல்லது மற்ற யாருக்காவதும் இப்படி வருகிறதே? தெளிவுப்படுத்தினால் தன்யனாவேன்.

16 பின்னூட்டங்கள்:

At Thursday, 28 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

எனக்கும் கில்லி தெரிவதில்லை.. ஏன்னு புரியலை உஷா.. இங்க மத்தவங்களுக்கு போன் செய்து கேட்டேன். நல்லாத் தான் வருதுங்கிறாங்க..

அப்புறம் நண்பர் ஒருவரின் கணினியில் தான் என்னுதையே படிக்க முடிஞ்சது.. வீட்டுக் கணினியில் வருது.. அலுவலகத்தில் ம்ஹும்!! :((((

 
At Thursday, 28 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

கில்லி தளம் சில கணிணிகளால் தகாதென்று தீர்மானித்து தடையாகியுள்ளது.

அதே காரணம்.

Request Blocked by URL Filter Database

Your request to URL "http://gilli.in/" has been blocked by the Webwasher URL filter database. The URL is listed in categories (Swimwear/Lingerie/Nudity) which are not allowed by your administrator at this time.

 
At Thursday, 28 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

உங்களை எழுதக் கூப்பிட்டாட்டி அது வேலை செய்யக் கூடாதுன்னு ஏதாவது சாபம் விட்டீங்களோ என்னமோ? ;-)

நல்லா இருங்க!

சாத்தான்குளத்தான்

 
At Thursday, 28 December, 2006, Blogger பினாத்தல் சுரேஷ் சொல்வது...

தேன்கூடு-கில்லி நிர்வாகிகளுக்கு? அடுத்த ரவுண்டு அடி வாங்கத் தயாரா ஆயிட்டீங்களா;-))

கில்லி இணைப்பில்தான் பிரச்சினை. தேன்கூடு கொடுப்பது லிங்க் மட்டும்தான்.

எஅன்க்கு ஒரு ஆச்சரியம்.. அலுவலக பிராட்பேண்டில் கில்லி வருவதில்லை, வீட்டு டயலப்பில் வருகிறது! ஏமாறாதவன் சொன்னதுபோல எதாச்சும் பில்டர் பிரச்சினையோ தெரியவில்லை.

 
At Thursday, 28 December, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பொன்ஸ், பினாத்தலாரிடமிருந்து வந்த செய்தியைப் பார்க்கவும். நான் வைத்திருப்பதும் பிராட் பாண்ட்தான்.
பிழைதிருத்தம்- கில்லிக்கும், தேன்கூடுக்கும் சம்மந்தம் இல்லையாம்.
ஐயா, அறியாமல் செய்த பிழை இது மன்னித்தருளிக. பொன்ஸ், தட்டச்சு செய்துவிட்டு அதன் மீது கோடுப் போட்டதுப் போல அடிப்பார்களே (அட உன்னை இல்லமா :-) அது எப்படி?

 
At Thursday, 28 December, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஏமாறதவன், என்னவோ போங்க ஓண்ணுமே புரியலை.

பாய், கோக்கு மாக்காய் பேசாட்டி உமக்கு சரிப்படாதே (நற நற நற- பல்லைக் கடிக்கிறேன்)

பினாத்தலாரே, யாரிடமாவது வாங்கி கட்டிக் கொண்டு ரொம்ப நாள் ஆச்சு
:-)

 
At Thursday, 28 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

< s > < /s >

space இல்லாமல் பயன்படுத்தினால் அடித்து எழுதலாம் :)))

 
At Thursday, 28 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

உஷா,

ஒரு சில service providerகளில் .in domainகளிலிருக்கும் வலைப்பக்கங்களை பார்க்க இயலவில்லை என நினைக்கிறேன். கில்லியை தவிர்த்து வேறெதாவது .in domain உடைய வலைப்பக்கத்தை பார்க்க முடிகிறதா என சொல்லுங்கள். கில்லியில் மட்டும்தான் பிரச்சனையா என்று தெரிந்து கொள்ள இது உதவும்

-- Vicky

 
At Thursday, 28 December, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

விக்கி, இவ்வளவு நாளாய் கில்லி நல்லா தெரிஞ்சிக்கிட்டுத்தானே இருந்துச்சு. இப்ப மூணு நாளா தானே பிரச்சனை. மத்தப்படி நீங்க கேட்ட கேள்வி வழக்கப்படி எனக்கு புரியலை. என்னைப் போன்ற கணிணி கைநாட்டிடம் கேட்கலாமா? வேறு யாராவது பதில் சொல்கிறார்களா என்றுப் பார்ப்போம்!

பொன்ஸ், ஏதோ தட்டுதடுமாறி செய்யப்போய் தேன்கூடு கட் ஆயிடுச்சு. ஆனா இன்னொருதடவை தப்பா எழுதி அடிச்சி
எழுதி, பார்த்திடரேன் ;-)

 
At Thursday, 28 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

// நீங்க கேட்ட கேள்வி வழக்கப்படி எனக்கு புரியலை.

நம்ம தங்கிலிஸ் அப்படி :-(

நான் கேட்டது, http://rediff.in, http://sify.in, http://vicky.in ;) போன்ற .in னில் முடியும் வலைத்தளங்களை உங்கள் கணினியில் பார்க்கமுடிகிறதா என பார்த்து சொல்லுங்கள்

 
At Thursday, 28 December, 2006, Blogger Sud Gopal சொல்வது...

ஆஹா..வாங்க.. எலைட் லிஸ்டில சேர்ந்துட்டீங்க போல.

கன்சல்டண்ட் ஆக இருப்பதைக் காட்டிலும் கொடுமையான விஷயம் ஏதுமில்லை. தனக்குன்னு இருக்க நிலையான இடம் இல்லாம நாடோடிக மாதிரி சுத்திக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு.

இன்னையிலிருந்து புது ஆப்பீஸ்.என்ன காரணத்தினாலோ இங்கன கில்லியை ப்ளாக் பண்ணியிருக்காக :-(

வீட்டுக்கணிணியின் ஓ.எஸ். வேற கிராஷ் ஆகியிடுச்சு.பட்ட காலிலே படும்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.

கூகிளாண்டவர் துணையால கண்டுபுட்ச்ச உரலைக் கீழே தந்திருக்கேன்.முயற்சி செஞ்சு பாருங்கோ...

http://www.google.com/gwt/n?u=gilli.in

மேலும் சில வொர்க் அரௌண்டுகள் கீழே உள்ள உரலில்:
http://labnol.blogspot.com/2005/12/how-to-access-blocked-websites.html

 
At Thursday, 28 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

விக்கி,
வேறு ஒரு .in தளத்தின் பெயரைச் சிபாரிசு செய்யுங்களேன்.. நாங்கள் பார்த்துச் சொல்லுகிறோம் ..

 
At Thursday, 28 December, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

விக்கி, நீங்க இங்கிலீபீசுல எழுதியிருந்தாலும் எனக்கு புரிஞ்சி இருக்காது :-)

சு.கோபால், பொன்ஸ், என்ன மாயமோ மந்திரமோ தேன்கூட்டில் போய் கில்லியை கிளிக்கினால் பேஜ் ஓபன் ஆகுது, அவ்வளவுதான் மேட்டர் சால்வுடூ.

பொன்ஸ், அந்த அடித்தல் வர மாட்டேங்குதே, உங்களுக்கு ஒரு மெயில் அடிக்கிறேன்.
இந்த பீட்டா மேட்டர் சந்தேகமும் கேட்கணும்.

 
At Thursday, 28 December, 2006, Blogger PRABHU RAJADURAI சொல்வது...

இங்க BSNL Dataone...கில்லிய காணோம்;-)

ஆனா, ஐகாராஸுக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவார். கில்லிக்கு இவ்வளவு ஆதரவான்னு...

 
At Monday, 01 January, 2007, Blogger  வல்லிசிம்ஹன் சொல்வது...

உஷா புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழ் எ.பி சகஜமாக எனக்குத் தான் உண்டு என்று நினைத்தேன் நீங்களுமா/
எனக்கு கில்லியில் '' மைலாப்பூர் மாமி'' பதிவு படிக்க நான்கு நாள் முயற்சி எடுக்க வேண்டிவந்தது.அது ஏன் மைலாப்பூர் மாமி? டி.நகர்,அடையாறில் அவர்கள் இல்லையோ?:-)
பொன்ஸ் எழுதிவிட்டு அடிக்கணுமா/அடித்துவிட்டு எழுதணுமா:-)

 
At Monday, 01 January, 2007, Blogger Boston Bala சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துகள்.

 

Post a Comment

<< இல்லம்