Saturday, January 27, 2007

பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு

கொஞ்சம் மலைப்பாய் இருக்கிறது. செய்ய வேண்டிய வேலைகள், மூட்டைக்கட்ட வேண்டிய பணிகள், புது வேலை, புது இடம் என்று நினைக்க நினைக்க யோசனைகள், யோசனைகள். வெகு செளகரியமாய் வாழ்ந்த பன்னிரண்டு வருட வாழ்க்கையை விட்டுவிட்டு நம் நாட்டிற்கு போகிறோம் என்ற் ஓரே மகிழ்ச்சியுடன் செல்கிறோம்.நர்சரியில் இருந்து இங்கு படிக்கும் மகனிடம் எல்லாம் சரியாகிவிடும் என்று திரும்ப திரும்ப எடுத்து சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அவனுக்கு எங்கு, எந்த பள்ளியில் போடுவது இருந்து நாளும் உதயமாகும் புது புது குழப்பங்கள். இதனால் எழுத்து, இணையம் சம்மந்தப்பட எந்த விஷயத்தில் தற்சமயம் என்னால் என் சிந்தனையைச் செலுத்த முடியாது. மீண்டும் வருகிறேன். சில மாதங்களுக்கு பிறகு.

12 பின்னூட்டங்கள்:

At Saturday, 27 January, 2007, சொல்வது...

எல்லாம் சீக்கிரமே செட் ரைட் ஆகி விரைவில் பதிவு போடுகிறீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

 
At Saturday, 27 January, 2007, சொல்வது...

எல்லாம் சரியாகிச் சீக்கிரம் மீண்டும் வந்து கலக்க வாழ்த்துக்கள்!

 
At Saturday, 27 January, 2007, சொல்வது...

எல்லாம் சரியாகி விடும்.

மாற்றம் மட்டுமே நிரந்தரம்.

புது ஊர், வீடு, பள்ளி மற்றும் வேலைக்கு வாழ்த்துக்கள்

 
At Saturday, 27 January, 2007, சொல்வது...

சில மாதங்களுக்கு பிறகு சந்திப்போம்....

வாழ்த்துக்க்ள்...


(சில மாதங்கள் என்பதை மறந்து விடாதீர்கள்....ஹி..ஹி...)

 
At Saturday, 27 January, 2007, சொல்வது...

நன்றி சிபி, இலவசம், சிவா, பங்காளி.

 
At Saturday, 27 January, 2007, சொல்வது...

எங்கிருந்தாலும் வாழ்க........

இதயம் அமைதியில் வாழ்க.....

நல்லபடியா செட்டில் ஆனதும் எழுதுங்க உஷா.

வாழ்த்து(க்)கள்.

 
At Saturday, 27 January, 2007, சொல்வது...

எல்லாம் இனிதே முடியும்.
வாருங்கள்.
வந்துவிடுங்கள்.

 
At Sunday, 28 January, 2007, சொல்வது...

பையன் சீக்கிரம் செட்டிலாகி விடுவான் உஷா.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் வேறு மேல் படிப்புக்கு நம்ம ஊருக்குத் தானே எல்லாரும் வருகிறார்கள். அதனால் பதிவுகளுக்குத்
தயவுசெய்து சீக்கிரமாக
வரவும்.எல்லாம் நல்லபடியாக இருக்கும்.

 
At Monday, 29 January, 2007, சொல்வது...

சொந்த மண்ணிற்கு திரும்பும் மகிழ்ச்சியும் மாற்றத்தின் மனக்கவலைகளையும் பகிரவும் பதிவுலகம் ஒரு வடிகால் தான். இருப்பினும் எடுத்த காரியத்தை தொடுத்து முடித்து மனநிம்மதியுடன் மீண்டும் வரும் நாளை எதிர்நோக்கியிருப்போம்.

 
At Monday, 29 January, 2007, சொல்வது...

நன்றி ஞானவெட்டியான் ஐயா, துளசி, வல்லி, மணியன். கட்டாயம் வருவேன். என்னை புதுப்பித்துக்கொண்டு :-)

 
At Monday, 29 January, 2007, சொல்வது...

பயணமும், இடமாற்றமும் settling inம் நல்லபடியாக நடக்கும். சீக்கிரமே வாங்க என்ன!

 
At Thursday, 01 February, 2007, சொல்வது...

கடைசி வாழ்த்து சொன்னது ஷ்ரேயா என்று நினைவு. நன்றி. புது பிளாக்கருக்கு மாறியாச்சு. கையைப்
பிடித்து இழுத்து மாற வைத்தாகிவிட்டது. கணிணி கைநாட்டுக்கு கைக் கொடுத்த தம்பிக்கு நன்றி. இன்னும் கொஞ்சம் மராமத்து வேலை இருக்கு, மெல்ல நேரம் இருக்கும்போது செய்யட்டும்.

 

Post a Comment

<< இல்லம்