வயது வந்தவர்களுக்கு மட்டும்- ஒன்று
பொங்கி எழுந்து விட்டேன் எத்தனை நாட்களுக்கு பொறுத்துப் போவது? பேசுகிறார்கள், நா கூசாமல் பொய்யும் புனை சுருட்டுமாய். அறியா பிள்ளைகளை பாழ்கிணற்றில் தள்ளிப் பார்த்து வேடிக்கைப் பார்க்கிறார்கள். திராபை படம் என்று தெரிந்தும் பார்த்துவிட்டு, போகிறவர்களை எல்லாம் போகாதே போகாதே என்று ஒப்பாரி வைப்பதுப் போல, வாழ தெரியாமல், மனைவிகளை கொடுமைப்படுத்திக் கொண்டு, ஆசையாய் மணக்கும் பையன்களின் மனதில் நஞ்சை கலக்கிறார்கள் நயவஞ்சக கயவர்கள்.
இதோ "ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை" என்ற தலைப்பில் முன்பு போட்டது
மீள்பதிவு.
எம். ஜி. எம் நிறுவனத்தார் தயாரிப்பில் உருவான "டாம் அண்டு ஜெரி" கார்ட்டூன் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஓயாமல் எலியை பூனை துரத்தி துரத்தி பாடாய் படுத்தும். அதே சமயம், பூனை பேசாமல் இருக்கும்பொழுதும், இந்த எலி வாலை சுருட்டிக் கொண்டு இராமல், பூனையை வம்புக்கு இழுக்கும். நன்கு கூர்ந்துப் பார்த்தால், அந்த பூனையாலும், எலியாலும் ஒன்றை ஒன்று பிரிந்து இருக்கவே முடியாது என்பது விளங்கும்.
அதுப் போலதாங்க, நம்ம ஊரூ, புருஷன் பொண்டாட்டியின் தாம்பத்திய வாழ்க்கையும். என்னத்தான் நித்தமும் அடிச்சிக்கிட்டாலும், டிவோர்ஸ்க்கு எல்லாம் போக மாட்டாங்க. நமக்கு வாச்சது அவ்வளவுதான் என்று தத்துவம் பேசிக்கிட்டு இருப்பாங்க. இது ஆணுக்கும்
பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.
நான் இப்ப இங்க பதியப் போகிற சமாச்சாரம் எல்லாம், சொந்த மேட்டரூ அல்லாம, அங்க இங்க கேட்டது, பார்த்தது சேர்த்துதாங்க. ஆனா ஒண்ணுங்க, இது பெண்ணீய போர்வையில் ஆண்களை தவறாக சித்தரிக்கப் போவதில்லை. பொதுவாய் கணவன், மனைவி இருவர்களின் பிரச்சனை, மனநிலை என்று எழுதப் போகிறேன். சில சமயம் சேம் சைடு கோல், அப்பட்டமா இருந்தா யாரும் கோச்சிக்காதீங்க.
ஒரு காமடியான விஷயம். சினிமா ஸ்டாரூங்க, கல்யாணம் ஆன மூணாவது நாளு, அசத்தலான போட்டோக்களுடன் பத்திரிக்கைகளில் போஸ¥ம், பேட்டியும் கொடுப்பாங்க. ஈரோ, மனைவி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று, புது மனைவியைச் சொல்வதும், அத்தனை பெரிய ஈரோ காலையில் காப்பி போட்டு தன்னை எழுப்பவார் என்று காதல் பொங்க மனைவி சொல்லும்பொழுது, கோடிகள் வாங்கிக் குவிக்கும் ஈரோ, வீட்டில் நாலைந்து வேலைக்காரர்கள், சமையலுக்கு ஆள் இருக்க, அவரே காப்பி போட்டு எழுப்புவார் என்றால் படிப்பவள் கண்ணில் நீர் வருமா இல்லையா?
அதை விட, தன் மனைவி , சீதா தேவி, பத்தினி தெய்வம் கண்ணகிக்கு இணையானவள் என்று தியாக பட்டியலை, ஈரோ சொல்ல சொல்ல, நம் ஆளுக்கு வயிறு எரியும். சே என்று பத்திரிக்கையை தூக்கி எறிந்து தன் இயலாமையை தணித்துக் கொள்வார். ஆனால் இந்த "மேட் பார் ஈச் அதர்" ஜோடி, கல்யாணம் ஆன சில வருடங்களில் புட்டுக் கொண்டு, அதே பத்திரிக்கையில் இருவரும் ஒருவரை ஒருவர் நாற அடித்துக் கொள்வார்கள்.
அடுத்து, பிரபலங்கள் பேட்டி, அதிலும் இத்தகைய கணவன்/ மனைவி கிடைக்க தான் போன ஜென்மத்தில் என்ன பாக்கியம் செய்தோமா என்று எல்லா பிரபலங்களும் சொல்லி வைத்தார் போல ஓரே மாதிரி சொல்வார்கள். ஆனால் இவை எல்லாம் எந்தளவுக்கு உண்மை
என்றால், அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.
ஒரு விஷயம் யோசிச்சிப் பாருங்க, ஒரு குடும்பத்தில் கணவன் சொன்னதை எல்லாம் மறு பேச்சு கேட்காமல், மனைவி செய்வதும், மனைவி சொல்லே மந்திரம் என்று வீடு இருந்தால் அது நல்லாவா இருக்கும். மேலே சொன்ன வரிகளை நல்லா ஒரு முறைப் படிச்சிக்குங்க.
நான் சொல்ல வருவது இருவரும் ஒருவர் பேச்சை அப்படியே கேட்டு நடப்பது, ஒருவர் மட்டும் அல்ல :-)
அப்ப, அப்ப சின்ன சின்ன சண்டைகள்/ இலக்கிய தரமாய் சொல்ல வேண்டும் என்றால் ஊடல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை சுவைக்கும். சண்டையே போடாத தம்பதியர் என்று யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் ஏதோ பிரச்சனை. பெயருக்கு கணவன் மனைவியாய் ஊருக்காக வாழ்ந்துக் கொண்டு அவரவர் வழியில் போய் கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
எதற்கும் ஒரு முறை "தேவை ஒரு அவன் விகடன்" என்று எழுதி இருந்தேன். இதைப் படித்துவிடுங்கள்.
சரி, முதலில் பிரச்சனை எப்படி ஆரம்பிக்கிறது என்றுப் பார்ப்போமா?
20 பின்னூட்டங்கள்:
ம்ம்ம், ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு. எக்ஸ்பீரீயன்ஸ் போட்டவங்க எல்லாம் வந்து என்ன சொல்றாங்க?னு ஓரமா இருந்து என்ன நடக்குது?னு பாக்கறேன். :))
@கொத்ஸ், அண்ணே! வலைய விரிச்சு இருக்காக, அம்புட்டுதான் சொல்வேன். அப்புறம் மண்டகபடி வாங்கினேன்!னு நீங்க பதிவு போட்டா அவங்க பொறுப்பில்லை. :p
//
அதுப் போலதாங்க, நம்ம ஊரூ, புருஷன் பொண்டாட்டியின் தாம்பத்திய வாழ்க்கையும். என்னத்தான் நித்தமும் அடிச்சிக்கிட்டாலும், டிவோர்ஸ்க்கு எல்லாம் போக மாட்டாங்க. நமக்கு வாச்சது அவ்வளவுதான் என்று தத்துவம் பேசிக்கிட்டு இருப்பாங்க. இது ஆணுக்கும்
பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.
//
எக்கா இதுதான் நீங்க பாத்தது கேட்டது படிச்சதா!!!!
என்னத்த சொல்ல!!
ஊர் உலகத்துல நடக்கிறத நல்ல கவனியுங்க , சரியா படியுங்க.
நியாயமான பதிவு.
நீங்கள் சொல்வது போல ஒருவர் மற்றவருக்கு அடிமையாய் இருந்தால் அது குடும்பம் இல்லைதான்.
ஆனால் பல கணவர்கள் மனைவிக்கும் உணர்வுகள் உண்டு என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
அதே போல பல மனைவிகள் கணவர்கள் தங்களின் அடிமைகள் என்பது போல நடந்துக்கொள்கிறார்கள்....
உங்களின் அடுத்த பதிவில் இது பற்றி இன்னும் சில விளக்கங்களையும் வழிமுறைகளையும் எதிர்பார்க்கிறேன்.....நன்றி...
அம்பி, யதார்த்தமாய் சொல்லுவதை அந்த கூட்டம் ஒத்துக்காது. இன்னும் இரண்டு பாகம் பாக்கியிருக்கு.
ம.சிவா, முழுக்க படிச்சிட்டு சொல்லுபா. சின்ன புள்ளையா லட்சணமா, ஒழுங்கா படி :-)
ரங்கன், நகைச்சுவை என்றுச் சொல்லிக்கொண்டு, சீரியசாய் விஷயங்களை அலசுகிறேன்.
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்! திருமணத்திற்கு பிறகு என்ன, காதலிக்கும் போது கூடத்தான் ஊடல் வருகிறது. ஆனால் "வெள்ளை ரோஜா சிவந்தது" என்று காதலிக்கும் போது சொன்ன அதே வாய் தான், "பத்ரகாள், ராட்சஸி' என்றும் சொல்கிறது. இதெல்லாம் கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா?
என்னமோ புதுசாத்தான் பொங்கி எழுந்திருக்கீங்கன்னு பாத்தா மீள்பதிவுதானா? அப்பவே இளவஞ்சியின் க.க.வா தொடருக்கு முன் போட்டியில் நில்லாமல் சுருண்டதன் மீள்பதிவுதானே?
மைக்ரோவேவ் அவன் இல் வைத்திக் கொடுக்கப்படும் பண்டம் "சூடு மாதிரி" இருக்கும்.. ஆனா சுவை??
மீண்டும் போட்டி சவால் என்று வந்திருக்கும் உம்மை வாழ்த்தி, வரவேற்கிறேன்,உதட்டோரத்தில் புன்னகையோடு.
Mudhal varughai..vedha vin blog vazhiyaga..aarambame swarasyimaga irukku..meendum nicchhayam vara thonum..nandri
TC
CU
//அதுப் போலதாங்க, நம்ம ஊரூ, புருஷன் பொண்டாட்டியின் தாம்பத்திய வாழ்க்கையும். என்னத்தான் நித்தமும் அடிச்சிக்கிட்டாலும், டிவோர்ஸ்க்கு எல்லாம் போக மாட்டாங்க. நமக்கு வாச்சது அவ்வளவுதான் என்று தத்துவம் பேசிக்கிட்டு இருப்பாங்க. இது ஆணுக்கும்
பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும். //
ஆனால் இப்போதெல்லாம் விவாகரத்து / குடும்ப வழக்குகள் அதிகரித்துக்கொண்டுதான் வருவதாக (குடும்ப) நீதிமன்றங்கள் கூறுகின்றனவே அது உண்மையா இல்லையா ?
மூணு பாகமும் படிச்சுட்டுத்தான் சொல்லணுமா?
சரிங்க:-))))
// ஆசையாய் மணக்கும் பையன்களின் மனதில் நஞ்சை கலக்கிறார்கள//
உஷா அக்கா..யாரு எம்புட்டு பயப்படுத்தனாலும்.. அது அது நடக்க வேண்டிய காலத்துல தானா நடக்கும்.(ஹிஹி..எனக்குந்தேன்).
// அப்ப, அப்ப சின்ன சின்ன சண்டைகள்/ இலக்கிய தரமாய் சொல்ல வேண்டும் என்றால் ஊடல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை சுவைக்கும். சண்டையே போடாத தம்பதியர் என்று யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் ஏதோ பிரச்சனை.//
நான் இதை முழுமையாய் ஆதரிக்கிறேன்..என்னோட பதிவுலயும் இத ஒத்துக்கிட்டிருக்கேன்..
http://rasigan111.blogspot.com/2007/11/3.html
// வயது வந்தவர்களுக்கு மட்டும் //
நான் ஃகுவாலிப்பைடான்னு புரியலையே..ஹிஹி..:)))))
ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும். :))
பினாத்தலாரே, படத்துக்கு படம் லல்லா மீச்சிங் போட்டு புது ரீ ரிகார்டீங், புது பாட்டு மீசீக் என்று
பாவலா காட்டும் அரச்ச மாவு கலாசாரம்தான் உம் பதிவுகளிலும் மிக நைசாய் தெரிகிறது- நைஸ்
என்றால் அரைத்ததையே அரைத்து அரைத்து நைஸ் ஆனதாய் பொருள் கொள்க. போட்டியா
உம்முடனா? அதுக்கு எல்லாம் ஒரு தகுதி இருக்கணும் ஐயா!
ரசிகன், நீ தாம்பா, அருமையான மாணவன். ஒழுங்காய் இப்பதிவுகளைப் படித்து வாழ்க்கையில் உய்
CU நன்றி
பாலராஜன் கீதா சார், மனைவியின் பெயரையே பின்னால் போட்டுக் கொண்டு இருக்கும் நீங்கள்
இப்படி கேட்கலாமா? நீங்கள் சொல்வதில் உள்ள உண்மை எனக்கும் தெரியும், ஆனால் ஆணும்,
பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையை கெடுக்க சில புல்லூருவிகள் செய்யும் நச்சு பிரசாரத்தின் விளைவே இது. ஏதோ என்னால் ஆன முயற்சியாய், அக்கால பெண்கள் போல இல்லாமல்,
இன்று பெண்கள் படித்து கை நிறைய சம்பளமும் வாங்குகிறார்கள். அதனால் ஆண்கள் தங்கள் ஆணாதிக்க எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்
// ஆசையாய் மணக்கும் பையன்களின் மனதில் நஞ்சை கலக்கிறார்கள் நயவஞ்சக கயவர்கள்//
//ஆணும்,
பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையை கெடுக்க சில புல்லூருவிகள் செய்யும் நச்சு பிரசாரத்தின் விளைவே இது//
இப்படி காழ்ப்புணர்ச்சியைக் கொட்டி தனிமனிதக் கீறல் செய்யும் அம்மணிதான்,
//. போட்டியா
உம்முடனா? அதுக்கு எல்லாம் ஒரு தகுதி இருக்கணும் ஐயா!//
என்றும் சொல்கிறார் என்பதால்,யாருடைய தகுதி பற்றி பேசுகிறார் என்ற சந்தேகம் எழுகிறதே!!
துளசி, அதெல்லாம் இல்லை. இதுக்கும் உங்க கமெண்ட் எங்கே?
அரைபிளேட், நாணயத்துக்கு மட்டுமல்ல, பிளடுக்கும் இரண்டு பக்கம் உண்டு :-)
பினாத்தலாரே, வலைமாமணியான உம்முடனே? எனக்கு கொஞ்சம் தன்னடக்கம் அதிகம்.
//என்னத்தான் நித்தமும் அடிச்சிக்கிட்டாலும், டிவோர்ஸ்க்கு எல்லாம் போக மாட்டாங்க.//
அக்கா, எந்த உலகத்தில் இருக்கீங்க? இப்போ எல்லாம் ஆண்கள் முன்ன மாதிரி இல்லை. ஸ்பெஷல் போலீஸ் எல்லாம் இல்லைனாலும் சாதரணப் போலீஸ் கிட்டயாவது போய் ஒரு கம்பிளெயிண்ட் குடுத்துட்டு அப்பாலிகா கோர்ட் படி ஏறிடறாங்க. அவங்க எல்லாம் முன்ன மாதிரி உள்ளுக்குள்ளயே அழுதுக்கிட்டு இருக்கிற காலம் எல்லாம் மலையேறிப் போயிடுச்சு.
இன்றைய நிலையை கருத்தில் கொள்ளாமல் எழுதப்பட்டிருக்கும் பதிவு என்பது தெளிவு. Move on with the times Ma'am!
இந்த மாதிரி பதிவில் இருக்கும் லாஜிக் குழப்பங்கள் பற்றி பேச ஆசை, ஆனா வாரயிறுதியில் வெளிய போக வேண்டிய வேலை இருக்கும் போது இங்க உட்கார்ந்து இருந்தா தங்கமணி நமக்கு வாச்சது அவ்வளவுதான் என்று தத்துவம் எல்லாம் பேசாம நேரா ஆக்ஷனில் இருங்குவார்கள் என்பதால் அப்புறமா வரேன்.
இலவசம், ஒரு ஆணின் உள்ள குமறல்களை மிக அழகாய் சொல்லிவிட்டீர்கள். அதே போல
பெண்களின் விழிப்புணர்ச்சியையும் உம்மை அறியாமல் மிக சரியாய் சொல்லிவிட்டீர்கள். உம்ம
தோஸ்த் செய்த உப்புமா வைப் படித்து, அனைத்து பிள்ளைகளும் கிளுகிளூவென்று சிரிக்கிறதுகள்.
ஆனால் பெண்கள் இந்த உப்புமாவுக்கு எல்லாம் அசர மாட்டார்கள் என்பதை உங்கள் கடைசி
பாரா தெளிவாய் சொல்கிறது. நன்றி.
//மேலே சொன்ன வரிகளை நல்லா ஒரு முறைப் படிச்சிக்குங்க.
நான் சொல்ல வருவது இருவரும் ஒருவர் பேச்சை அப்படியே கேட்டு நடப்பது, ஒருவர் மட்டும் அல்ல :-)//
ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கீங்க :))) என்னதான் நடக்குதுன்னு பொறுத்திருந்து பாக்குறோம் :)))
என்னக்கா எதிர்க்கடையா?....ஹி..ஹி.
சில தினங்களுக்கு முன்னாடித்தான் அவன் விகடன் பதிவை பார்த்தேன்.
ஆமா நீங்க இந்தியா வந்துட்டீங்க தானே?. சென்னைல ஒரு அசோசியேஷன் இருக்கு 2 வருடமா. பெயர் தெரியுமா?. Association for protection of Men's rights...இத பத்தி விகடன் தீபாவளி மலர்-ல ஒரு கட்டுரையும் வந்திருக்கு.....கொஞ்சம் படிங்க...
இந்த அசோஷியேஷனுக்கு வரும் ஆண்கள் எல்லாம் மணமானவர்களே, வீட்டுத் தொல்லை தாங்க முடியாம புகார் ப்ரொடெக்ஷன் என்று அலைகிறார்கள்....ஏன் நடிகர் ப்ரஷாந்த் கூட இதில் மெம்பராம்.
Post a Comment
<< இல்லம்