Sunday, November 25, 2007

வயதுவந்தவர்களுக்கு மட்டும்- முடிவுரை

முன்னுரை எழுதாமல், "ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை" யை ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இது பலமுறை எழுத வேண்டும் என்று நினைத்த மேட்டர்தான். அவ்வப் பொழுது, அங்கங்கு தொட்டு விட்டு, "தேவை ஒரு அவள் விகடன்", கழுதைகள் மற்றும் எருமைமாடுகள்" போன்ற பதிவுகளில் நகைசுவை கட்டுரை என்று மேம்போக்காய் ( இது மட்டும் என்ன வாழுது என்று சொல்ல வேண்டாம்) எழுதியதுதான்.

இளவஞ்சி http://ilavanji.blogspot.com/2006/05/blog-post.html இதை ஆரம்பித்ததும், அவர் எழுதுவதற்கு பதில் என்று எழுதாமல் ஏன் இருபக்க பிரச்சனைகளையும் பேச கூடாது என்ற கேள்வியில் எழுந்த வினை இது.

நாலு பெண்கள் சேர்ந்தால், குடும்ப பிரச்சனைகளைப் பற்றி பேச்சு ஆரம்பித்துவிடும். சின்னவயதில் இருந்தே, கதைக் கேட்பதில் ஆர்வம் அதிகம் என்பதாலும், நடுவில் சில கேள்விகளை எழுப்பினால் போதும் மேட்டர்கள் மழையென கொட்டும். தவறு இரண்டு பக்கமும்தான் என்றும் தோன்றும். பிரச்சனையின் மூலக்காரணத்தைக் கொஞ்சம் விலாவாரியாய் பார்ப்போமா?

நம் இந்திய குடும்ப வாழ்க்கையில் நான் பார்த்த தம்பதியர் மூன்று வகைகள்.

1- கணவனே கண் கண்ட தெய்வம் டைப்- இது இப்பொழுது வெகு அரிதாய் கண்ணில் படும். நான் பார்த்ததில்லை. பாட்டிகள் காலத்தில் இருந்தது என்று சொல்ல கேள்வி. ஆனால் அவர்களும் வேறு வழியில்லாமல், வாயை மூடிக் கொண்டு இருந்ததாய் நான் நினைக்கிறேன்.

2- மனைவி சொல்லே மந்திரம் - இதுவும் கொஞ்சம் அபூர்வ வகைதான். ஆனால் மேற் சொன்ன, மனைவி வகையில்லாமல், மனம் உவந்து மனைவி சொல்லே வேதம் என்று ஏற்றுக் கொள்ளும் கணவனை அடைந்த மனைவி, போன ஜென்மத்தில் மிகப் பெரிய புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லையும், செயலையும் மனைவி மனம் கோளாமல் நடந்துக் கொள்வது என்பது மிகப் பெரிய தியாகம். இவர்கள் வீட்டில் எந்த பூசலோ, சண்டை சச்சரவோ அறவே இருக்காது. என்ன ஒன்று, கணவன் வீட்டார், இவர்கள் வீட்டில் மறந்தும் கால் வைக்க மாட்டார்கள்.

3- ஆடு புலி ஆட்டம்- நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது குடும்பங்கள் இந்த வரிசையில் வரும். பல ஆண்கள் பிறர் முன்னிலையும் நான் எது செய்தாலும் என் மனைவி சொல்படிதான் செய்வேன். அவள் விருப்பம்தான் என் விருப்பம் என்ற வசனத்தையும், பயந்தார்போல ஒரு ஆக்ட்டும் கொடுப்பார்கள். ஆனால் அந்த வசனமும், நடிப்பும் அவனுடைய வீட்டார் முன்னிலையில் இருக்காது. காரணம் அவர்கள், மனைவியின் முந்தானையைப் பிடித்து நடப்பவன் என்று சொல்லி விடுவார்களே என்ற பயம். அதேசமயம், மாமியார் வீட்டார் முன்பு
ஓவராய் மனைவி மேல் அன்பு காட்டுதல் நடக்கும். ( இங்கு ஒரு ரகசியம் சொல்லி விடுகிறேன் எல்லா வீட்டு ஆண்களையும், அவர்கள் பிறந்த வீட்டில் மனைவிக்கு அஞ்சியவன் என்றே நினைப்பார்கள்). டாம் அண்டு ஜெரி, உதாரணம் தந்தேனே, அதுப் போல மனைவிகளும்
கணவன் ஒழுங்காய் இருந்தாலும் சும்மா இருக்க மாட்டார்கள். மனைவி பரிமாறும்பொழுது எப்பொழுதும் தாய் சமையலுடன் ஒப்பிட்டுப் பார்கும் கணவன், வழக்கத்துக்கு விரோதமாய் மூன்றாவது நாளாய் மனைவி சமையலை புகழ்ந்ததும், மனைவி இடுப்பில் கை வைத்து, என்ன சமாச்சாரம் என்று கேட்டதும், இவரூ ஆடியில்ல போயிட்டாரூ. பாவம், திருந்தலாம் என்று
நினைத்தவனைக்கூட திருந்த விடாதது, யார் தவறு? ஆடு, புலியாக மாறும். புலி என்று நினைத்துக் கொண்டிருந்தது ஆடாகவும் மாறும் என்பது தாம்பத்திய சூத்திரம்.

இந்த மூன்றாம் வகைக்கு தாங்க அனைத்து பிரச்சனைகளும். அதற்காக கல்யாணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை ஓட்டி விட முடியுமா? சமூகம் ஏதாவது பேசும். நமக்கே வாழ்க்கை போர் அடிக்கும்.

இப்பொழுது எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆன மறு நாளே, மாமியார் வரப் போகிறவரை அம்மா என்று அழைக்கத் தொடங்குவதும், அந்த குடும்பமும் என் குடும்பம்தான் என்று சொல்லிக் கொண்டு திரிவதும் மிக அதிகம். அதைத்தான் கல்யாணத்துக்கு முன்னால் உள்ளங்கையில் இருந்தவன் என்றுக் குறிப்பிட்டேன். அப்பொழுது, அந்த பெண்ணைப் பார்க்க வேண்டுமே, கழுத்து தலையில் நில்லாது. பெண்ணைப் பெற்றவளும் தன் மகளின் பாக்கியத்தை வர போகிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பாள்.

ஆனால், அங்கு பையன் வீட்டில் அவனை பெற்றவள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு இருப்பாள். அவளுக்கு மனதில் மலரும் நினைவுகள் ஓட ஆரம்பிக்கும். ஒரு முழம் பூ வாங்கி தர கூட, கூச்சப்பட்ட கணவன் எங்கே, மாமியாராய் வரப் போகிறவளுக்கு மதர்ஸ் டேக்கு பரிசு பொருள் வாங்கிக் கொடுக்கும் மகன் எங்கே என்று மனம் அழும். அவ்வப் பொழுது மெல்ல ஊசி ஏற்றத் தொடங்குவாள். மனைவி பேச்சைக் கேட்டு மானமிழந்து நிற்பவர்களின் பட்டியலை சொல்லுவாள். பையன், கேட்டால்தானே? அவளுக்கும் தெரியும் இப்பொழுது பேசினால் எதுவும் எடுக்காது என்று!

ஒரு சின்ன சம்பவம் சொல்கிறேன். கல்யாணம் நிச்சயம் ஆனது. இரண்டு பேருக்கும் நல்ல வேலை, கை நிறைய சம்பளம். இப்பொழுது தான் பாங்கில் வேண்டிய லோன் கொடுக்கிறார்களே என்று பையன், பெண்ணிடம் கன்சல்ட் செய்து, அவள் ஆபிசுக்கு அருகில் பிளாட் புக் செய்தான். பிறகு பார்த்து, பார்த்து வீட்டு பிளானில் திருத்தம் செய்வதும், அனைத்து டைல்ஸ், பெயிண்டிங், பர்னீச்சர் என்று எல்லாம் பெண்ணின் விருப்பம்.

அதற்குள் கல்யாணம் ஆனது, கல்யாணம் ஆன மூணாம் மாதம் கிருகப்பிரவேசம். அன்று வெடித்த பிரச்சனை, வருடம் இரண்டு ஆகியும் தீரவில்லை. வேறு ஒன்று இல்லை, கிருகப்பிரவேசத்தை தன் பெற்றவரை உட்கார வைத்து செய்துவிட்டான் புது கணவன்.
கிருகப்பிரவேசத்துக்கு புடவை என்ன டிசைன் என்று ஜோ மாதிரி, அதையும் டிசைன் செய்தவளால், இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் முதலில் செய்தது அதீதம், என்றாலும் கடைசியில் செய்தது அதைவிட தவறு. பெரியோர்களை உட்கார வைத்து செய்தது
தவறில்லை, அனைத்தையும் வரப் போகிறவளிடம் முழுப் பொறுப்பையும் தந்தவன், இருந்தார்போல, அவளிடம் சொல்லாமல் முடிவெடுத்தது தவறில்லையா?

இதில் இந்த காலத்து மாமியார்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். இவர்களுக்கு அந்தக்கால மாமியார்கள் போல கொடுமைப் படுத்தவும் இயலாது, அதற்காக மேல் நாட்டினர் போல கல்யாணம் முடிந்ததும் டாடா காட்டிவிட்டுப் போகவும் முடியாது. அதனால் சமயம் வாய்க்கும்பொழுது தன் இருப்பைக் காட்டாமல் விட மாட்டார்கள். மகனின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு பழைய நினைவுகளை எழுப்பும். இப்பொழுது, என்ன சொன்னாலும் கேட்கும் கணவன் இன்று இருந்தாலும், அந்த காலத்தில் தான் பட்ட பாடுகள் அவர் மனதில் மாறாவடுவாய் இருக்கும். இதில் நாத்தனார் கேரக்டர் ஒன்று. துப்பறியும் நிபுணர் போல, சதியாலோசனையில் முக்கிய பங்கு. அனைத்தையும் கண்காணித்து, போட்டுக் கொடுப்பது.

இப்பொழுது மனைவியாய் ஆனவளுக்கு விரக்தியும் வெறுப்பும் ஏற்படும். கணவனுக்கோ அம்மா சொல்வது இப்பொழுது சரியோ என்ற யோசனை ஓடும். என்னத்தான் தனிக்குடித்தனம் அமெரிக்காவில் இருந்தாலும், ரிமோட் கண்ட்ரோலில் போதனைகள் நடக்கும்.
வாரம் ஒரு முறை ஊருக்கு போன் செய்தால் போதாதா? இப்படியே வாழ்க்கைப் போய் கொண்டு இருக்கும். அதைத்தான் மோகம் முப்பது நாள், ஆசை அறுபதுநாள் என்று அன்றே சொல்லிவிட்டார்கள்.

இவள் ஆண்களை மட்டும் குறை சொல்கிறாளே என்றுப் பார்க்கிறீர்களா? உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொன்னேன். பார்த்ததெல்லாம் கேட்பது, தம்முடைய நிலைமையை மறந்து ஆடம்பரம் செய்வது, உடன் பிறப்புகள், வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையை ஒப்பிட்டு நோக்குவது, கணவன் வீட்டார் யாரையும் வீட்டில் சேர்க்காமல் இருப்பது, அவசர உதவிக்குக்கூட அவர்களுக்கு உதவி செய்யவிடாமல் கணவனை தடுப்பது என்று பெண்கள் மீதும் தவறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி மனோதத்துவமோ, கவுன்சிலிங்கிலோ சரி செய்ய முடியாத பிரச்சனைகள் ஆண்கள் மீதும் வேண்டியது இருக்கிறது.

இவ்வளவு கதை சொன்னீர்களே, தீர்வு எங்கே என்றுக் கேட்கிறீர்களா? இந்த விஷயத்தில் தீர்வே கிடையாது. ஆரம்பத்தில் இருக்கும் தாங்க முடியாத பிரச்சனைகள் நாளாவட்டத்தில் நீர்த்துவிடும் என்ற உறுதி மொழியைத் தருகிறேன். அதாவ்து நீங்கள் பிரச்சனையுடன் வாழ பழகிவிடுவீர்கள் மற்றும் பிரச்சனைகளை கையாளும் விதத்தையும் இந்த பல வருட தாம்பத்தியத்தில் கற்றுக் கொண்டு விடுவீர்கள். என்னடா இவள் இப்படி சொல்கிறாளே என்று நினைக்கிறீர்களா? அதுதாங்க உண்மை!

நீங்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். மனுஷ மனசுக்கு திருப்தியே கிடையாது. எப்படிப்பட்ட உத்தமர் அல்லது உத்தமி வாய்த்தாலும் அப்படி இல்லையே, இப்படி இல்லையே என்று பிறருடன் ஒப்பிட்டு மனதை குழப்பிக் கொள்ளும். ஆக, இந்த சின்ன
விஷயத்தை எல்லாம் பெரியதாய் நினைக்காமல் சம்சார சாகரத்தில் குதித்து, யாம் பெற்ற இன்பம், நீங்களும் பெற பிரம்மசாரி, பிரம்மசாரிணிகளை கேட்டுக் கொள்கிறேன்.

முடிவுரை- நான் மனித மனங்களை அறிந்த எழுத்தாளரோ, அபூர்வ பிறவி சீரியல் ஹிரோயினியோ இல்லை. இது கவுன்சிலிங்கும் கிடையாது. நானும் சம்சார சாகரத்தில் அனு தினமும் மூச்சு திணறி அல்லல் படும் சாதாரணி ( இதையே என் கணவரும் இங்கு பதிய சொன்னார்) நான் எழுதியதில் தவறோ, சந்தேகமோ இருந்தால் கேளுங்கள். சொல்கிறேன்.

24 பின்னூட்டங்கள்:

At Sunday, 25 November, 2007, Blogger பாச மலர் / Paasa Malar சொல்வது...

//நீங்கள் பிரச்சனையுடன் வாழ பழகிவிடுவீர்கள் மற்றும் பிரச்சனைகளை கையாளும் விதத்தையும் இந்த பல வருட தாம்பத்தியத்தில் கற்றுக் கொண்டு விடுவீர்கள்...//

இதுதான் நிஜம்...பல வருட தாம்பத்தியம்..என்பதுதான் key word ..well said ...

உங்கள் பதிவுகள் அருமை...

 
At Sunday, 25 November, 2007, Blogger மங்களூர் சிவா சொல்வது...

//
கணவன் வீட்டார் யாரையும் வீட்டில் சேர்க்காமல் இருப்பது, அவசர உதவிக்குக்கூட அவர்களுக்கு உதவி செய்யவிடாமல் கணவனை தடுப்பது என்று பெண்கள் மீதும் தவறுகளை சொல்லிக் கொண்டே போகலாம்
//
ஐயையோ இப்படியெல்லாமா பன்னுவாங்க
:-(((((((

 
At Sunday, 25 November, 2007, Blogger Ungalranga சொல்வது...

ரொம்ப எதிர்பார்த்தேன்.....
கடைசி நேரத்தில் ஜகா வாங்கிட்டீங்க.....
எப்படியோ ரெண்டு பக்கத்தையும் ஒரு வாங்கு வாங்கிட்டீங்க....
இப்போ சந்தோசம் தானே....
வாழ தெரிந்தால் வாழலாம்...!!!

 
At Sunday, 25 November, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பாசமலர் நன்றி

மங்களூர் சிவா, இப்படி எல்லாம் அப்பாவியா கேள்வி கேட்டா நம்பிடுவாங்களா :-)

ரங்கன், இது ஒரு மீள்பதிவு. எந்த மனநிலையில் அன்று எழுதினேன் என்று நினைவில்லை. இளவஞ்சி பையன்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருந்தார் என்பது மட்டும் நினைவிருக்கிறது. லிங்க் தந்துள்ளேன், மிக பிரபல பதிவு அது.
படித்துப்பாருங்கள்.

 
At Sunday, 25 November, 2007, Blogger பாரதி தம்பி சொல்வது...

பிலாசபிக்கலா இல்லாம பிராக்டிகலா நிறைய மேட்டர் சொல்லியிருக்கீங்க. உள்ளங்கையை மூடி வச்சுருக்குற வரைக்கும்தான் உள்ள இருக்குறது என்னன்னு தெரிஞ்சுக்குற ஆர்வமும், சஸ்பென்ஸும் இருக்கும். திறந்து பார்த்துட்டா, உள்ள இருக்குறது என்னவா இருந்தாலும், 'ப்பூ.. இவ்வளவுதானா..'ன்னு ஒரு எண்ணம் வந்துடும்னு சொல்வாங்க. அதுபோலதான் கல்யாண விசயமும் போலருக்கு.

(பி.கு.: இதேபோல எந்த வகையான ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும் என்றும் எழுதவும். அதன்படி மாற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும்:)))

 
At Sunday, 25 November, 2007, Blogger கிருத்திகா ஸ்ரீதர் சொல்வது...

நல்ல பதிவு.. இயல்பாக இருக்க பழகிக்கொள்வதே இதற்கெல்லாம் பதிலாய் அமையும். "பிரச்சனைகளை கையாளும் விதத்தையும் இந்த பல வருட தாம்பத்தியத்தில் கற்றுக் கொண்டு விடுவீர்கள்..." அது என்னவோ உண்மைதான்.. ஆனாலும் பல நேரங்களில் நேற்றய தீர்வுகள் இன்றைய பிரச்சனைகளுக்கு விடையாவதில்லை... புதிய தீர்வுகள்.. அணுகுமுறைகள்... சம்சார சாகரத்தின் சுவாரசிய அலைகள் இவை தானே... வாழ்த்துக்களுடன்

 
At Sunday, 25 November, 2007, Blogger Osai Chella சொல்வது...

aahaa.. anaithaiyum padithuvitten! intha thodar arumai! nermaiyaaka kaiyaandiruppathaakave ninaikiren. vaazhthukkal

 
At Sunday, 25 November, 2007, Blogger ரசிகன் சொல்வது...

// அதற்காக கல்யாணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை ஓட்டி விட முடியுமா?//
அதானே...ரொம்ப சரியாச் சொன்னீங்க.. உஷா அக்கா...

 
At Sunday, 25 November, 2007, Blogger ரசிகன் சொல்வது...

// இப்பொழுது மனைவியாய் ஆனவளுக்கு விரக்தியும் வெறுப்பும் ஏற்படும். கணவனுக்கோ அம்மா சொல்வது இப்பொழுது சரியோ என்ற யோசனை ஓடும். என்னத்தான் தனிக்குடித்தனம் அமெரிக்காவில் இருந்தாலும், ரிமோட் கண்ட்ரோலில் போதனைகள் நடக்கும்.//
உஷா அக்கா .. நண்பரை கொற சொல்லிப்புட்டு இப்ப நீங்களே பயம்புறுத்துறீங்களே.. நியாயமா?..

 
At Sunday, 25 November, 2007, Blogger ரசிகன் சொல்வது...

//நான் மனித மனங்களை அறிந்த எழுத்தாளரோ, அபூர்வ பிறவி சீரியல் ஹிரோயினியோ இல்லை. இது கவுன்சிலிங்கும் கிடையாது. நானும் சம்சார சாகரத்தில் அனு தினமும் மூச்சு திணறி அல்லல் படும் சாதாரணி //
ஆனாலும் எம்புட்டு தன்னடக்கம் ஒங்களுக்கு.....ஹிஹி...

 
At Sunday, 25 November, 2007, Blogger ரசிகன் சொல்வது...

// இந்த சின்ன
விஷயத்தை எல்லாம் பெரியதாய் நினைக்காமல் சம்சார சாகரத்தில் குதித்து, யாம் பெற்ற இன்பம், நீங்களும் பெற பிரம்மசாரி, பிரம்மசாரிணிகளை கேட்டுக் கொள்கிறேன்.//

ஹிஹி.... இந்த மேட்டர அப்படியே.. எங்க பேரண்ட்ஸ் காதுலயும் சொல்லி ஹெல்ப் செஞ்சிடுங்களேன்..

 
At Sunday, 25 November, 2007, Blogger இலவசக்கொத்தனார் சொல்வது...

மாமியாரைப் பத்தி எம்புட்டு பேசி இருக்கீங்க, ஆனா மாமனாரைப் பத்தி ஒரு வார்த்தை உண்டா? இதிலிருந்து தெரியவில்லையா? அமைதியாக இருப்பது யார்? குழப்பத்தை உண்டு பண்ணுவது யார்? என்று.

உங்க வகைப்படுத்தல் எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்குங்க. இன்னும் நிறையா பிரிவுகளைக் காணும். என்னவோ போங்க. உங்க ஸ்டாண்டேர்டுக்கு ரொம்ப வீக். அந்த காலத்தில் எல்லாம் அப்படித்தான் இருந்தீங்க போல!! :))

 
At Sunday, 25 November, 2007, Blogger மெளலி (மதுரையம்பதி) சொல்வது...

இந்த பதிவினை படித்தவுடன் ரொம்ப வேகமா ஆரம்பித்து ஏதோ அவசரத்தில் சட்டென முடித்துவிட்ட மாதிரியான ஒரு பீலிங்.

நீங்க நடுநிலையா எழுதியிருப்பதை நிறுபிக்கவாவது இன்னும் 2 பதிவு (பெண்களால் வரும் பிரச்சனைகள் அப்படின்னு...ஹிஹி) எழுதி அதன் பிறகு இந்த முடிவினை எழுதியிருக்கலாமோ? :)

 
At Sunday, 25 November, 2007, Anonymous Anonymous சொல்வது...

Dear Usha,
என்னத்தான் தனிக்குடித்தனம் அமெரிக்காவில் இருந்தாலும், ரிமோட் கண்ட்ரோலில் போதனைகள் நடக்கும்.

Paiyanuku matum dhan control madhiri solli irukeenga,

ponnu ellavatraiyum amma kite sollikaradhu illaiya??

ponnoda amma solli kodukaradhu illaiya??
(ippo indha ammavin manadhu - thannai mahdiiri YEMAILA than ponnu irundhuda kodadhu enru thonri, advice nadakumae??? adhaiyum sollungo......

அவன் முதலில் செய்தது அதீதம், என்றாலும் கடைசியில் செய்தது அதைவிட தவறு.

Inagayum gavaningo.
Ivvalavu seidha husband dhan idhaiyum seidhu irukan.
Ennavenru parporm enra oru porumai - idhu konjam andha ponnuku irundhu irukalamae??

LIFE AI TRUST ODA START PANNA KATHU KODUKANAM....

idhu engae paiyain thavara agaum??

Marriage la dhan problem vara madhiri ninaikum ninaipai vitudanam.

Life nalae prob dhan. Adhai solve panna than kathukanam.

Before marriage - Prob vandhadhillaiya?? kastham padaradhu illaiya??

Edho marriage nalae kashtam varadhu gra ennathai vechuka kudadhu.

podhuva oru varthai solvanga - Ponnuku ponnu dhan edhiri -

So,
Amma garavanga - ponna pethalam,. paiyanai pethalum.
prob pannama iruka kathu kodukanam.
adjust panna kathu kodukanam,
vittu koduka kathu kodukanam.
endha prob thukum namba dhan karanam nu nenaika arambicha solution kedaikum.idhaiyum kathu kodukanam.

Indha points ellam marriage kaga matum illai.
veetilo, societyilo - engayum nallavidhama oru life ai nadatha than. idhu pinnalil marriage life kum help a irukum.

Ammakal - kids seriya valarkanam.

idhai oru porupana ninaivugaludan ungalidam share pannikaren Usha.Thats all.
Ponnum, paiyanum valandhutanga.Namaku porupu avvalavu dhan enru ninaikamal,.
nammudaiya kadamai avargalain marriage vishayathil -

Otrumaiyudan vaazha vaikum porupum namaku iruku enra ninaivudan avargaluku solli koduka vendum....

Ennudaiya orae paiyan - +2 padikum avanai - indha mahdiri oru ninaivugaludan dhan valarthu kondu varugiren.

Avanuku ippodhae solli iurken - Wife garava - Un life partner.Avanoda sandai pottuka kudadhu.
Innum niriaya sollalam......

LIFE IS BEAUTIFUL.... Idhai kathu kodukanam.....

Unga padhivin moolam en neenda naal karuthai solli kolla mudindhadhu Usha.
Adharkaga ungaluku ennudaiya Special Big Thanks.........


With Love,
Usha Sankar.

 
At Sunday, 25 November, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

போன பதிவுகள் எழுதி ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. என் பிள்ளைகளும் வளருகிறார்கள் என்பதனாலா அல்லது என் பார்வையும் மாறத் தொடங்கியுள்ளதா என்று தெரியவில்லை. அதிகம் உட்கார்ந்தால் முதுகுவலி வருகிறது. உஷா சங்கரின் பின்னுட்டத்துக்கு விரைவில் பதில் எழுதுகிறேன்

 
At Sunday, 25 November, 2007, Blogger Never give up சொல்வது...

உங்க பதிவு ரொம்ப நல்ல இருக்கு ஆனா ஏன் சீக்கிரம் முடிச்சிட்டீங்க?

 
At Monday, 26 November, 2007, Blogger ambi சொல்வது...

இப்ப தான் மிஸ் பண்ணிய பதிவை படித்து முடித்தேன். வீக் எண்டில் நெட் ஓபன் பண்ண கூடாது! என எங்க வீட்டில் 144 சட்டம். :))

ரெண்டு பக்கமும் நல்லா கச்சேரி பண்ணி இருக்கீங்க.
பெண்ணின் அம்மாக்கு தான் முக்ய பொறுப்பு இருக்கிறது. ஒரு புட்பால் கோச் மாதிரி தன் பெண்ணுக்கு கொம்பு சீவி விடாமல் இருந்தாலே பெரிய புண்ணியம்.

பையன்களூக்கு தான் ரெண்டு பக்கமும் இடி. பெற்றவர்களை கடைசி காலம் வரை காப்பாத்தனும், தங்கமணி பேச்சையும் கேட்டுகனும். :))

 
At Monday, 26 November, 2007, Blogger மங்களூர் சிவா சொல்வது...

@அம்பி
//
இப்ப தான் மிஸ் பண்ணிய பதிவை படித்து முடித்தேன். வீக் எண்டில் நெட் ஓபன் பண்ண கூடாது! என எங்க வீட்டில் 144 சட்டம். :))
//

இப்பதானே வோய் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ளயேவா???

அவ்வ்வ்வ்

 
At Monday, 26 November, 2007, Blogger Shobana சொல்வது...

Very true, very true. EAch and every word that you wrote. Ella MIL'kum ory vethamaana attitude problem. Ennamo avanga sollrathu thaan correct, naama sollrathy ellam, kenayan vaaila irunthu vantha maadhiri. I also think, it is a result of jealousy, which is what is happening ennga veetala. Idai ellam paarthu thalaila thaan adichikanum.

 
At Monday, 26 November, 2007, Blogger தங்ஸ் சொல்வது...

என்னங்க நீங்க....இப்படி பயமுறுத்தறீங்க....எனக்கு மாசி-ல கண்ணாலம்..

 
At Monday, 26 November, 2007, Blogger அரை பிளேடு சொல்வது...

திருமணம் என்ற ஆயுள் கால போர்களத்திற்கு பெண்கள் சிறுவயதிலிருந்து அம்மாக்களால் பாட்டிக்களால் தயார் படுத்தப் படுகிறார்கள்.
"புருசனை கைக்குள்ள மடக்கி வைத்துக்கொள்வதற்கு வேண்டிய டிரெயினிங்" அவர்களுக்கு கிடைக்கிறது.

எந்த யுத்தகளப் பயிற்சியும் இல்லாமல் களம் காணும் ஆண்கள் அடிபட்டு துவண்டு போகிறார்கள்.

விவரம் பத்தாமலேயே வாழ்க்கையை முடித்துவிட்ட அப்பாக்களும் தாத்தாக்களும் பையனுக்கு என்ன சொல்லிக் கொடுத்து விடப்போகிறார்கள்.

பாவம் ஆண்கள்தான். :))))

 
At Tuesday, 27 November, 2007, Blogger pudugaithendral சொல்வது...

ஆமாம். உடனே இந்த ஆம்ப்ளைங்க மடங்கி விடப்போறாங்க. போங்கப்பா.

தாய் தாரம் இருவரையும் அரவணைத்து போகத்தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

சரியாக புரிந்து கொண்டால் பிரச்சனை ஏது? இது கணவன், மனைவி இருவருக்கும் பொது.

 
At Thursday, 29 November, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

அனைவருக்கும் நன்றி

 
At Monday, 03 December, 2007, Blogger pudugaithendral சொல்வது...

இன்னைக்கு தாங்க பாத்தேன்.

எப்படீங்க இப்படி? கலக்கிட்டீங்க.

 

Post a Comment

<< இல்லம்