Tuesday, December 04, 2007

நானே நானா?

அதீத சந்தோஷம் நிறைவை தருவதை விட, பதட்டத்தையே அதிகம் தருகிறது. எனக்கா, நானா என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் மனதில் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. சிறிது நிதானம் கொள் மனமே என்று ஆர்பரிக்கும் மனதை அடக்க முயலுகிறேன்.

எத்தனை ஜாம்பவான்கள், இலக்கிய செம்மல்கள், மொழி வித்தகர்கள் முன்னால் பரிசு பெறப் போகிறேன் என்பதே பெரிய விஷயம் இல்லையா?

பாதம் பூமியில் பாவவில்லை, மிதப்பது போன்ற உணர்வு. . எத்தேசையாய், கண்ணாடியில் முகம் தெரிகிறது. புது கர்வத்தில் ஒளிர்ந்தது முகம். சட்டென்று காலடியில் பூமி நெகிழ்ந்த உணர்வு. அப்படி என்ன சாதித்துவிட்டேன்? அந்த பெயர் தெரியாத அம்மாளின் முகம்
நினைவுக்கு வந்தது. என் மனதில் குமறிக்கொண்டு இருக்கும் எண்ணங்களை அப்படியே நீங்கள் வார்த்தையால் வடிக்கிறாய். நன்றாக எழுதுகீறாய் என்று புகழ்ந்தாரே அவ்வார்த்தைகள் தந்த ஊக்கமா?

அந்த முதியவர், பெயர் பெற்ற தமிழ் எழுத்தாளர், எழுதுங்கள் அம்மா, நிறைய எழுதுங்கள். உங்களைப் போன்ற சமூக அக்கறை உள்ள பெண்கள் அதிகம் எழுத வர வேண்டும் என்று மன்றாடுவதைப் போல கேட்டாரே, அவ்வார்த்தைகள் தந்த ஊக்குவிப்பா?

கூட்டத்துடன் கூட்டமாய் நிற்கும்பொழுது, பெயரை சொல்லி அழைத்து, சமீபத்தில் பிரபலமடைந்துக் கொண்டு இருக்கும் பெண் எழுத்தாளர் என்று, கூட்டமே வியக்கும்படி, அறிமுகம் செய்தாரே அந்த பிரபல எழுத்தாளர் சொன்ன வார்த்தைகளா? நாளும்
எழுதுங்கள் மேடம் என்று வரும் மடல்களா? எவை என்னை எழுத உந்துகின்றன? பொருளுக்கும், புகழுக்கும் அல்லது பெயருக்கும் எழுதிகிறேனா? நாளும் தட்டச்சு செய்து செய்து விரல் தேய ....................

"என்ன அவசரமாய் தட்டிக்கிட்டு இருக்கிறே?"

"அதுவா? காலங்கார்த்தால காணும் கனவு பலிக்கும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க"

"அதுக்கு?"

" காபி குடிச்சிட்டு, சோபால படுத்தேனா, அப்படியே கண் அசந்துப் போச்சு. ரிடையர் ஆன அப்துல்கலாம்கிட்ட, சாகித்ய அகாதமியோ, ஞானபீடமோ வாங்குறா மாதிரி கனவு. அப்ப வந்த "தாட்" எல்லாம் அப்படியே நினைவுல இருந்துச்சா! எதுக்கும் இருக்கட்டும்னு அப்ப என்ன தோணீச்சோ அதை அப்படியே எழுதி வெச்சிடலாம்னு ஆரம்பிச்சேன்"

"இரு இரு! இன்னைக்கு ஞாயிற்று கிழம, மெதுவா எந்திரிச்சி, நா காச்சி வெச்ச பாலுல காபிய போட்டு குடிச்சிட்டு, ஏழு மணிக்கு சோபால, செகண்ட் டோஸ் தூக்கம். அப்ப வந்ததா இந்த காலங்கார்த்தால தூக்கம்? அந்த கனாவா உனக்கு நடக்கப் போவுது? இதுக்கு பேரூ அதிகாலை கனவா? நேரம் ஆச்சு, வழக்கப்படி அந்த உப்புமாவை கிண்ட போறீயா இல்லே பிரெட்டா?"

"சே, நல்லா நாலு வார்த்தை சொல்லாட்டியும் போகுது. ஆனா ஆள எறக்குறா மாதிரி நக்கல் அடிக்க வேண்டியது. ஒரு எழுத்தாளனின் வெற்றிக்கு பின்னால் மனைவி இருப்பாளே தவிர, எந்த எழுத்தாளினி வெற்றியிலும் பின்னால் ஒரு கணவன் இருக்கவே மாட்டான்"
துக்கத்தில் தோய்ந்த வார்த்தைகள் எழுத்தாளினி ஏகாம்பரி வாயில் இருந்து வெளியேறியது.

பி.கு சர்வேசன் நடத்தும் "நச்" கதைப் போட்டிக்கு எழுதியது. தலைப்புல "நச்" சுன்னு போட்ட சஸ்பென்ஸ் போயிடும்னு கடைசியில் போட்டு இருக்கேன் :-)

33 பின்னூட்டங்கள்:

At Tuesday, 04 December, 2007, சொல்வது...

//காபி குடிச்சிட்டு, சோபால படுத்தேனா//
சூப்பர் ஃபில்டர் காபி குடிச்சிட்டு அப்படியே உட்கார்ந்த நிலையிலேயே ஒரு குட்டி தூக்கம் போடறது!

ஆஹா ஆஹாஹா...!!

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

யெக்கோவ்..கதை நச்சா இருக்குது :-(

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

ஜூப்பர் ஆனா முடிவு கெஸ் பன்ன முடிஞ்சது!!!

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

//"இரு இரு! இன்னைக்கு ஞாயிற்று கிழம, மெதுவா எந்திரிச்சி, நா காச்சி வெச்ச பாலுல காபிய போட்டு குடிச்சிட்டு, ஏழு மணிக்கு சோபால, செகண்ட் டோஸ் தூக்கம். அப்ப வந்ததா இந்த காலங்கார்த்தால தூக்கம்? அந்த கனாவா உனக்கு நடக்கப் போவுது? இதுக்கு பேரூ அதிகாலை கனவா? நேரம் ஆச்சு, வழக்கப்படி அந்த உப்புமாவை கிண்ட போறீயா இல்லே பிரெட்டா?"
//
பலே, பேஷ், பிரமாதம் :)))

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

//நா காச்சி வெச்ச பாலுல காபிய போட்டு குடிச்சிட்டு//

பால் தான காச்சி வச்சார்.. காபி நீங்க தான போட்டீங்க...அப்புறம் என்ன.. யூ கேரி ஆன் உஷா..:-))

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

அப்பப்பா ஓவர் நச்சா இருக்கே??!!

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

தலைப்ப பார்த்துட்டு "நானே நானா? யாரோ தானா?" பாட்ட பத்தி தான் போட்டிருக்கீங்களோன்னு வந்தேன்...

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

:))

'அனுபவம்/நிகழ்வுகள்' என்று போட்டிருந்ததால் ஆசையாகப் படித்தேன்... நம்பவே கூடாது :)

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

ஹா ஹா ஹா...

பின்குறிப்பு:
நெசமாவே வாய்விட்டு சிரிச்சிட்டேன். கொஞ்ச நாளா தமிழ்மணத்துக்கு வரலையா... நாட்டு நடப்பு தெரியல எனக்கு. :)

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

:-)))))

நீங்களுமா உப்புமான்னு அப்படியே ஒரு நிமிசம் வெலெவெலத்துப் போயிட்டேன்:-)))

இன்னிக்கு அதிகாலையில்(?) நான் கண்ட கனவில் கீதா பென்னெட் வந்தாங்க:-)

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

// நா காச்சி வெச்ச பாலுல காபிய போட்டு குடிச்சிட்டு, ஏழு மணிக்கு சோபால, செகண்ட் டோஸ் தூக்கம். அப்ப வந்ததா இந்த காலங்கார்த்தால தூக்கம்? அந்த கனாவா உனக்கு நடக்கப் போவுது? இதுக்கு பேரூ அதிகாலை கனவா? //

என்ன மனுஷன் பெட் காபி குடுக்கல்லைன்னாலும் இவ்வளவு பேச்சு மட்டும் பேசத் தெரியுது.

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

நல்லா இருக்குதுங்க. அனுபவித்து ரசித்தேன்.

 
At Tuesday, 04 December, 2007, சொல்வது...

நல்ல ரசிக்கும்படி ஒரு கதை

 
At Wednesday, 05 December, 2007, சொல்வது...

அய்யோ.. பரிசை உங்களுக்கே குடுத்தாட்டாங்களோன்னு பயந்தே போயிட்டேன்.. அப்பாடி கடேசில "நச்" தான்....ரொம்ப நல்லா இருக்கு.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்

 
At Wednesday, 05 December, 2007, சொல்வது...

'Nach' certified! :)

 
At Wednesday, 05 December, 2007, சொல்வது...

'Nach' certified! :)

 
At Thursday, 06 December, 2007, சொல்வது...

//மெதுவா எந்திரிச்சி, நா காச்சி வெச்ச பாலுல காபிய போட்டு குடிச்சிட்டு, //
அடடா! அங்கேயும் இதே கதை தானா? வீட்டுக்கு வீடு வாசப்படி. :p

 
At Thursday, 06 December, 2007, சொல்வது...

:))))

 
At Friday, 07 December, 2007, சொல்வது...

சுவாரஸ்யமா இருக்கு.
[இப்போதான் புதுக்கணிணி கிடைச்சது.உங்க பதிவ பிரச்னை இல்லாம படிக்க முடிய்து.உங்க பழய பதிவெல்லாம் படிக்கணும்.கடைசியா எந்த பதிவ படிச்சேன்னு ஞாபகம் இல்லையே]

 
At Friday, 07 December, 2007, சொல்வது...

அனைவருக்கும் நன்னிங்கோ, அது என்னவோ ஆரம்ப பத்திகளை கண்டுக்கொள்ளாமல், கடைசி
நாலு பத்தி, காபி குடிப்பது, உப்புமா கிண்டுவதை மட்டுமே எல்லாரும் ரசித்தது மனதுக்கு கஷ்டமாய் இருக்கு. பரிசு கிடைத்த உணர்வுகள், ஐ மீன் ஏகாம்பரி பெருமிதத்துடன் சொன்னதை
யாருமே கண்டுக்கொள்ளவில்லையே :-)

 
At Friday, 07 December, 2007, சொல்வது...

ஒன்னுஞ் சொல்றாப்ல இல்ல...நடத்துங்க..நடத்துங்க...:-))

 
At Friday, 07 December, 2007, சொல்வது...

கதை நல்லா இருக்குங்க உஷா. ஆனா கனவு தான்னு முன்னாடியே யூகிக்க முடிஞ்சது.

(தமிழ்மணத்துல இப்போ எந்த போஸ்ட் படிச்ச்சாலும் கடைசி வரி பாத்துட்டுதான் படிக்க ஆரம்பிக்கிறேன் ;-) )

 
At Tuesday, 11 December, 2007, சொல்வது...

ரொம்பவே கெஸ் பண்ணக்கூடிய கதைதான்கா. சர்வேசன் பதிவிலிருந்து வந்ததால் ட்விஸ்ட் எதிர்பார்த்துத்தான் வந்தேன்.

//வழக்கப்படி அந்த உப்புமாவை கிண்ட போறீயா //

வழக்கப்படி நானும் இதைப் பத்தி சொல்லிடறேன். நீங்க ப்ரேக்பாஸ்டுக்கு முன்னாடி பதிவு போடறதைத்தானே ரங்கமணி இப்படிச் சொல்லறாரு.

//எந்த எழுத்தாளினி வெற்றியிலும் பின்னால் ஒரு கணவன் இருக்கவே மாட்டான்" //

என்ன இன்னிக்கு ரங்கமணியோட எதனா சண்டையா இப்படி போட்டு வாங்கறீங்க?

என்னாது இது உங்க சொந்தகதை இல்லையா? சரி சரி, நம்பிட்டோம். :))

 
At Friday, 14 December, 2007, சொல்வது...

எப்படியெல்லாம் கனவு காண்றாங்கையா..

நச்சுன்னு ஒரு (சொந்தக்?) கத

 
At Monday, 17 December, 2007, சொல்வது...

<==
ramachandranusha(உஷா) said...
ஏகாம்பரி பெருமிதத்துடன் சொன்னதை
யாருமே கண்டுக்கொள்ளவில்லையே :-)
==>
இது கனவுன்னு எல்லாருக்குமே சரியா யூகிச்சு தொலச்சுடுராங்களே. ஏகாம்பரிக்கு ஆறுதல் சொல்லுங்கோ.

 
At Monday, 17 December, 2007, சொல்வது...

//ஒரு எழுத்தாளனின் வெற்றிக்கு பின்னால் மனைவி இருப்பாளே தவிர, எந்த எழுத்தாளினி வெற்றியிலும் பின்னால் ஒரு கணவன் இருக்கவே மாட்டான்" //

உஷா!
இது நச்சுனு இருக்கு!!!!!

 
At Friday, 21 December, 2007, சொல்வது...

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள். :(

//ஒரு எழுத்தாளனின் வெற்றிக்கு பின்னால் மனைவி இருப்பாளே தவிர, எந்த எழுத்தாளினி வெற்றியிலும் பின்னால் ஒரு கணவன் இருக்கவே மாட்டான்//

ஏன் இல்லாமல். இல்லையா என்ன. காலை உணவை தியாகம் செய்து கொண்டு :))

 
At Thursday, 27 December, 2007, சொல்வது...

கதை நல்லா இருக்குங்க

 
At Friday, 28 December, 2007, சொல்வது...

ஒரு வாரமாய் சர்வர் டவுனு. நெட்டு இணைப்பு மதியம்தான் கிடைத்தது. அனைவருக்கும் நன்றி
நித்யா- ஏசி பாளையம் புதுமுகமாய் இருக்கு?

 
At Friday, 28 December, 2007, சொல்வது...

ஆஹா...உஷா! ஒரு நிமிசம் ஆடிப்போய்டேன். கடோசில ஒரு 'நச்'. அப்துல்கல்லம் கனவுதான் காணச்சொன்னார். அவரையே கனவில் காணச்சொல்லவில்லை..ஹி..ஹி..
இருந்தாலும் எப்பவோ ஒரு காலத்தில் பலிக்க ஆசிகள்!(வாழ்த்துக்கள்ன்னு போட்டு போட்டு அலுத்துவிட்டது)
உப்புமா செய்த பாவம் என்னவோ? பாவம்தான் அந்த உப்புமா!

 
At Friday, 28 December, 2007, சொல்வது...

எழுத்தளினி ஏகாம்பரி சொன்னது நூத்துக்கு நூறு சரியே. நானும் அப்பப்ப திரும்பிப் பார்த்துக்கொள்வேன்.யாரும் தென்படமமட்டார்கள்.

 
At Saturday, 29 December, 2007, சொல்வது...

நானானி, இதுல ஆடிப் போக என்ன இருக்கு :-) எனக்கு இதுமாதிரி விருது எல்லாம் கிடைச்சால், கேஷீவலாய் போய் வாங்கிக் கொள்ளுவேன். ஏகாம்பரி மாதிரி உணர்ச்சிவசப்பட மாட்டேன் :-))

 

Post a Comment

<< இல்லம்