Friday, February 12, 2010

சென்னை மாநகராட்சி கவனிக்குமா?

சென்னை வேளச்சேரியில் நூறு அடி பைபாஸ் தெருவில், சாலையின் ஒருபக்கத்தில் அகலமாய்
திறந்த சாக்கடை உள்ளது. சில கடைகளில் அதற்கு மூடிப் போட்டு தங்கள் கடைக்கு வரும் வழியாய் வைத்துள்ளார்கள். ஆனால் இச்சாக்கடை முழுக்க குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள் தேங்கி நின்று கொசு உற்பத்தி வழி வகுக்கிறது. மூக்கை துளைக்கும் நாற்றம், சாலையின் இரு பக்கமும் அங்கங்கு பொங்கி வழியும் குப்பைகள். இதில் சாக்கடைக்கு இந்த பக்கம் நெடுக, கையயேந்தி பவன்கள். சாக்கடையை தாண்டி அந்தபக்கம், பிரபல உணவகங்கள். ஈக்களுக்கும் கொண்டாட்டம்.

குப்பைகள் இப்படி தேங்கி நின்றால், மழைக்காலத்தில் சாக்கடையில் மழை நீர் தேங்கி வெள்ளம்
வராதா? காமிரா பழுது அடைந்துள்ளதால், படம் எடுத்துப் போட முடியவில்லை.சாக்கடையை மூடி விட்டால் கொசு தொல்லை நீங்கும். குப்பைகள் போட முடியாது. மாநகராட்சி
கவனிக்குமா?

Labels:

11 பின்னூட்டங்கள்:

At Friday, 12 February, 2010, சொல்வது...

க‌வ‌னிக்காது.இப்ப‌ என்ன‌ அவ‌ச‌ர‌ம்? ம‌ழையும் வ‌ர‌ப்போவ‌தில்லை அதோடு எந்த‌ தேர்த‌லும் அறிவிக்க‌ப்ப‌ட‌வில்லை.இதெல்லாம் இப்போது அனாவ‌சிய‌ செல‌வு.:‍)
யாராவ‌து ச‌ர்வே எடுத்தா சென்னையில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் இதே மாதிரி பார்க்க‌லாம்.

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

அட, நீங்கவேறே, இங்கே சாலைனு ஒண்ணே கிடையாது எங்களுக்கு, பத்து வருஷமா, முட்டி மோதாத இடமே இல்லை. இப்போத் தான் திடீர்னு மாநகராட்சியோட இணைச்சதா அறிவிப்பு வந்தது. அதுக்கப்புறம் சுறுசுறுப்பா இருப்பாங்களோனு பார்த்தால் ம்ஹும், அசைஞ்சே கொடுக்கிறதில்லை! நாங்களும் படம் பிடிச்சு, ஹிந்துவிலே போட்டு, உள்ளூர்ப் பத்திரிகையிலே போட்டு, நேரிலே கமிஷனரைப் போய்ப் பார்த்துனு எல்லாம் பண்ணியாச்சு. பிரிண்டர்லே இங்கும், ஏ4 பேப்பரும் செலவாகிறது தான் மிச்சம். சாலை போடறதுனா என்னனு தெரியுமானே எனக்குச் சந்தேகம் உண்டு! இதைவிட மோசமான பள்ளங்கள் உண்டு சென்னையிலே, இதெல்லாம் ஜுஜுபி!!

 
At Saturday, 13 February, 2010, சொல்வது...

உடனே கவனிக்கிறோமுன்னு துணை முதல்வரும், சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரும் இப்போதான் மெயில் அனுப்புனாங்க!!!!!!!!!!!!!!!!!

 
At Monday, 15 February, 2010, சொல்வது...

I reside in Velachery. The thing you have pointed out is a persistent eyesore. No steps have been taken so far in that regard. All commercial establishments on that stretch can gang together and work out a solution.

 
At Tuesday, 16 February, 2010, சொல்வது...

கீதா, வ.குமார் சென்னையே இப்படிதான் என்றாலும் சாப்பாட்டு கடைகள் என்பதால், அரசு
கவனிக்கக்கூடாதா என்ற ஆதங்கம்.
கிருஷ்ணன், கடைக்காரர்களுக்கு செளகரியமாய் இருக்கு இல்லே ;-( அசைவ கழிவுகள், காய்கறி குப்பைகள்,
காகித, பிளாஸ்டிக் குப்பைகள், ஏன் சிமெண்ட் கல் குவியல்கள் (ரப்பிஷ்) கூட கொட்ட செளகரியமான
இடம். அரசை குற்றம் சொல்லும்பொழுது, நம் மக்கள் செய்வதும் சரியில்லை என்பதும் கண்டிக்கதக்கது.

துளசி ஜோக்கு :-)

 
At Tuesday, 02 March, 2010, சொல்வது...

இந்த பதிவின் நோக்கம்:

1) பிரபல பெண் பதிவர் வேளசேரியில் தான் (இப்போதைக்கு)இருகார்.

2) அரசியலில் சேர ஆர்வம் உள்ளது,

3)ஒரு கவுன்சிலர், வட்டம், மாவட்டம்னு போகலாம். 33 சதவீதம் வேற வந்தாச்சே! யாரு கண்டா வேசேரியே பெண்கள் தொகுதியா அறிவிக்கப்படலாம்.

இவ்ளோ இருந்தும் வேசேரி (per Sq feet)ரேட் மட்டும் ஏறிட்டே போகுது கவனிச்சீங்களா? :))

 
At Wednesday, 10 March, 2010, சொல்வது...

:) nice post, keep on writing public issues, but with pictures and responsible authorities names, etc.,

very good, thanks. :)

 
At Wednesday, 10 March, 2010, சொல்வது...

அம்பி, என்னத்தான் 33% வந்தாலும், பில்லியனுருங்க தான் எலிக்ஷனுல நிக்க முடியும், தெரியுமில்லே :-(

மணிப்பக்கம், போட்டோ எடுத்துப் போடுகிறேன்.

bogy.in அழைப்புக்கு நன்றி

 
At Wednesday, 10 March, 2010, சொல்வது...

உஷாக்கா,

முதலில் ஒரு விசயம். சென்னை மேயரோ, மாநகராட்சி ஆணையரோ ப்ளாக் படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள்.
--
இங்கே பலர் மேம்போக்காக.. அள்ளி வீசிவிட்டு போவதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. எத்தனை முயற்சிகள் எடுத்தோம்.. அவர்களின் கவனத்திற்கு கொண்டு போக..? இப்படி பதிவு எழுதினால்.. வந்து கருத்து சொல்ல எல்லோரும் தயாராக இருக்கிறோம் என்பது வருத்தமான உண்மை. :(

---

சென்னை மாநகராட்சியின் புகார் தெரிவிக்க இலவச எண்சேவை- 1913
--
அவர்களின் இணையதள முகவரி
http://www.chennaicorporation.gov.in/

--
ஆன் லைனில் கூட புகார் தெரிவிக்கலாம்.

http://210.212.62.123/pgr/

--

முயன்று பாருங்கள். அடுத்த பதிவு இது பற்றிய அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன்..

பாலா

 
At Wednesday, 10 March, 2010, சொல்வது...

பாலா., இந்த குப்பை மேட்டர் பற்றி விசாரித்ததில் தெரிந்தது பலரும் முயன்றிருக்கிறார்கள், முயன்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிகிறது.

 
At Wednesday, 10 March, 2010, சொல்வது...

பாலா., இந்த குப்பை மேட்டர் பற்றி விசாரித்ததில் தெரிந்தது பலரும் முயன்றிருக்கிறார்கள், முயன்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிகிறது.

 

Post a Comment

<< இல்லம்