Tuesday, October 27, 2009

வார்த்தை, கிழக்கு பதிப்பகம், கலைஞர், செல்பேசி & நுனிப்புல்

இந்தியா வந்ததும் முதலில் செய்தது நாலைந்து இலக்கிய இதழ்களுக்கு சந்தா கட்டியது. காலச்சுவடு தவிர, ஏனோ அந்த பத்திரிக்கையை எடுத்தாலே, பாட புத்தகங்களை
கையில் எடுக்கும்பொழுது ஏற்படுமே பயம், சலிப்பு போன்ற உணர்வுகள். வேற
என்ன? ஒன்றும் புரிவதில்லை.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வார்த்தை ரொம்ப பிடித்துள்ளது. அம்மா,”அந்தக் காலத்தில் விகடன் கல்கி எல்லாம் இப்படித்தான் இருக்கும். இப்பத்தான் எல்லாத்துலையும் சினிமா" என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். யுகமாயினி நல்லா இருக்கு என்று அப்பா சர்டிபிக்கேட்.

காந்திக்கு பிந்திய இந்தியா ராமசந்திரா குஹா எழுதி, தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகத்தை சென்னை நடை பாதை கடையென்றில் பார்த்தேன். ஆஹா, தமிழ் புத்தகங்களுக்கு fake கூட வருகிறதா? தமிழ்எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு இவ்வளவு ஒளிமயமான எதிர்காலமா
நாளை என் நாவலுக்கு இப்படி போலி பதிப்பு பிளாட்பாரங்களில் குவிந்துக்
கிடக்க போகிறதா என்றெல்லாம் கற்பனை கன்னா பின்னா வென்று ஓட,“இல்லைங்க கிழக்கு பதிப்பக புத்தகங்கள் சப்ளை செய்கிறார்கள்” என்றார். வாங்க நினைத்தது, வாங்கி விட்டேன். படித்துக் கொண்டு இருக்கிறேன். மொழிப்பெயர்ப்பு என்றே தெரியாமல், அருமையாய் மொழி பெயர்த்துள்ளார்கள் வாழ்த்துக்கள்.

தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் அஷ்டோத்திர நாமாவளி, சாமிக்கு சொல்லி, முக்தியில் இருந்து முந்தா நாள் காணாமல் போன மாட்டை கண்டுப்பிடித்து தர வேண்டுவது போல, முதலமைச்சரை நாளும்புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு காரியம்
ஆக வேண்டுமில்லையா? இதில் அடுத்த வருடம் தமிழ் உலக மாநாடாம்! தெய்வமே!
கலையுலகத்தினரின் முழு ஆதரவு இதற்கு உண்டாம். மேடையில் லைவாய் மானாட மயிலாட தமிழ் அன்னைக்கு சமர்பணம் இருக்குமா?

மருத்துவமனைகளில், மருத்துவர்கள் செல்பேசி பாவிப்பதை தடை செய்ய வேண்டும். நாலைந்து இடங்களில் பார்த்துவிட்டேன். ஜூனியர் டாக்டர்கள், ஒரு கையும், கண்களும் செல் பேசில் வைத்துக் கொண்டு நோயாளிகளிடம் பேசுகிறார்கள். நம்மால் ஆனது, புகார் பெட்டி
இருக்கும் இடங்களில் எழுதிப் போட போகிறேன்.


ஆயிற்று, நுனிப்புல் ஆரம்பித்து நான்கு வருடங்கள்( 6-10-2005). சினிமா எடுத்துவிட்டு, நாலு
பெரிய ஆட்களுக்கும் போட்டு காட்டி, இது போல் சினிமா தமிழ் கூறும் நல்லுலகம் கண்டதில்லை என்பதுப் போல, நுனிப்புல்லின் அருமை பெருமைகளை நாலு பேரிடம் வாங்கிப் போட ஆசையாய் தான் இருக்கு. யாராவது விருப்பப்பட்டா கையை தூக்குங்க,
மேற்கொண்ட நாலுவரிகளில் தற்சமய சக பர்த் டே பேபியான இட்லி வடை உட்பட யாரையும் கிண்டல் அடிக்கவில்லை.

திரும்ப சென்னை பயணம். அதனால் கொஞ்ச நாட்களுக்கு நுனிப்புல்லுக்கு
லீவ். எஞ்சாய்!

15 பின்னூட்டங்கள்:

At Tuesday, 27 October, 2009, சொல்வது...

//பாட புத்தகங்களை கையில் எடுக்கும்பொழுது ஏற்படுமே பயம், சலிப்பு போன்ற உணர்வுகள். வேற
என்ன? ஒன்றும் புரிவதில்லை.)

:)))))))

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

//ஆயிற்று, நுனிப்புல் ஆரம்பித்து நான்கு வருடங்கள்( 6-10-2005).//


வாழ்த்துக்கள் :)


எழுத்தாளினி எப்ப வருவாங்க??

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

//திரும்ப சென்னை பயணம். அதனால் கொஞ்ச நாட்களுக்கு நுனிப்புல்லுக்கு
லீவ். எஞ்சாய்!/

நல்லாவே கொண்டாடுறீங்க அவ்வ்வ்வ் :))

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

thanks for the post. i am ashamed that i amnot aware of vaarththai

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

காலச்சுவடுன்னா எனக்குக் கூட ஒரு மாதிரி ‘கிலி’ அடிக்கும்.

ஸோ....4 வருஷமாச்சா ?

கங்கிராட்ஸ் !!

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

நான் இரண்டு கையும் தூக்கிவிட்டேன்! (சரணாகதின்னு அர்த்தம் வச்சிக்கலாம்) அடுத்த மாதம் நானு நான்காம் ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கிறேன். ஆசி வேண்டும்! சென்னையில் சந்திப்போம்!! தற்போது மயிலாடுதுறை காவிரி ஸ்நானம் என்பதை சமூகத்துக்கு தெரிவித்து கொள்கிறேன்!!!

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்!

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

ஆயில்யன், மூன்று கமெண்டா? நல்லா இரு

அபிஅப்பா, வாழ்த்துக்கள். காவேரில தண்ணி ஓடுதா என்ன? (பதிவர் மீட்டிங் போட்டுடலாம்)

சுந்தர், ரொம்ப சந்தோஷம். உங்களுக்கும் அந்த கிலி உண்டு என்பதைக் கண்டு ;-)

உழவன், நன்றி

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

Dr.Rudhran!
http://pksivakumar.blogspot.com/- இங்கு வார்த்தை இதழின் விவரங்கள் பார்க்கலாம்.
யுகமாயினிக்கு http://yugamayini.blogspot.com/ பார்க்கவும்

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

நுனிப்புல்லின் நான்காண்டு நிறைவுக்கு நல்வாழ்த்துக்கள் உஷா!

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

ரெண்டு வருசம்தான் உங்கப்பதிவுல சூடா இருந்துச்சு. நீங்க எப்ப இந்தியா போனீங்களோ அன்னிக்கே உங்கப் பதிவு கிணத்துல போட்ட கல்லு மாதிரி ஆகிருச்சுங்க. இருந்தாலும் இந்த வருசத்துல நெறைய எழுதுவீங்கன்னு நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்!

 
At Tuesday, 27 October, 2009, சொல்வது...

காலச்சுவடு... ஒன்றும் புரிவதில்லை.

- Uhoh...Kannan is going to write a scathing article about you :)

 
At Sunday, 01 November, 2009, சொல்வது...

வாழ்த்துகள் உஷா..

 
At Monday, 02 November, 2009, சொல்வது...

அக‌நாழிகை வாங்கி ப‌டிச்சீங்க‌ளா உஷா. நான்காம் ஆண்டு வாழ்த்துக‌ள் நுனிப்புல் வ‌லைப்பூவிற்கு.

 
At Tuesday, 03 November, 2009, சொல்வது...

4 வருஷமாச்சா.... ????

நல்வாழ்த்துகள் ! ! ! !


- comment pasted! by Agent NJ

 

Post a Comment

<< இல்லம்