Tuesday, August 18, 2009

பெத்த படிப்புகள்- அக்கரை பச்சைகள்

மகளும், மகனும் பிளஸ் டூ வந்தவுடன், (நாங்கள் உட்பட) பல பெற்றோர்களிடம்
கண்ட சில விஷயங்கள்.

பெரும்பாலவர்களிடம் கண்ட ஒரு விஷயம், தான் படித்த படிப்பு, வேலை இவைகளில் இருக்கும் நெகட்டீவ் விஷயங்களை பெரியதாய் பேசுவது. இன்ஜினியரிங் படித்தவர்களை , இதுமாதிரி பிள்ளையை பீஇபடிக்க வைக்கலாமா என்றுக் கேட்டால், அந்தக்கால பிஏ மாதிரி ஆகிவிட்டது பி.ஈ, வேற படிப்பா இல்லை என்பார்கள்.

இன்றைய நிலையில் கணிணி படிப்புக்கு மவுசு குறைந்துவிட்டது, ஆனால் சில வருடங்களுக்கு முன்பு கணிணி துறையில் வேலைப்பார்ப்பவர்களிடம் கேட்டால், காசு வருகிறதே தவிர,
ஏகப்பட்ட டென்ஷன், வேலை பளு, நாற்பது வயதில் ஹார்ட் அட்டாக் வருவது உறுதி என்று பீதியைக் கிளப்புவார்கள்.

எங்கள் நண்பர், அந்தக்கால சி.ஏவில் கோல்ட் மெடலிஸ்ட், சிஏ படித்து பாஸ் செய்யப்பட்ட பாட்டையும், இன் ஜினியரிங்க்குக்கு இருக்கும் மவுசு இதுல இல்ல என்று கண்ணீர் விட்டார்.

அப்பா டாக்டர் என்றாலும், சொந்தமாய் நர்சிங்ஹோம் இருந்தால் மகனும் மகளும்
டாக்டருங்கதான். இல்லை என்றால், நாலே வருடத்தில் பிள்ளை கம்யூட்டர் இன் ஜினியர் ஆகி, கை நிறைய சம்பாதிப்பதே புத்திசாலிதனம் என்பது அவர்கள் முடிவு. மகனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆவல். எங்களுக்கு தெரிந்த பல மருத்துவர்களிடம், மருத்துவ படிப்பு பற்றிக் கேட்டாலே, ஏண்டா கேட்டோம் என்ற நிலைக்கு எங்களைக் கொண்டு வந்துவிட்டார்கள்

மகள் சட்டம் படிக்க வேண்டும் என்று ஒன்பதாவது படிக்கும்பொழுதே முடிவெடுத்துவிட்டாள். அதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் முதலில் கொஞ்சம் வியப்புடந்தான் பார்ப்பார்கள். அந்நேரம் கணிணி படிப்பு கோலோச்ச்சிக் கொண்டிருந்த காலம். ஒருவர் கூட நல்லவிதமாய்
சொல்லாமல், பெண்களுக்கு சட்ட படிப்பு சரியானதே இல்லை, கல்லூரிகள் வெறும் ரவுடிகள் ராச்சியம் போன்ற அறிவுரைகள் அதெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் மகளும் சட்டம் படித்துக் கொண்டு இருக்கிறாள்.

மகன் நுழைவு தேர்வு எழுதிவிட்டு, ரயிலில் வரும்பொழுது இன்னொரு பெற்றோரும்
உடன் வந்தனர். அரசு மருத்துவமனையில் கணவனும் மனைவியும் டாக்டர்கள்.
பொறியாளரான என் கணவர், மருத்துவ படிப்பின் மேன்மையை எடுத்துச் சொல்ல அவர்கள்
பொறியியல் படிப்பின் அருமையை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இருவரும்
தங்கள் கருத்தில் உறுதியாய் இருந்தார்கள். அவர்கள் சொந்தமாய் மருத்துவமனை வைத்திருந்தால்
அந்த பையனும் எம்பிபிஎஸ்தான் சேர்ந்திருப்பான் இல்லையா என்று நான் கேட்டதும்,
ஆமாம் என்றார்கள் சிரித்துக் கொண்டே,


எந்த படிப்பு ஆனாலும், பிள்ளைகள் விருப்பம் முதலில். அதற்கு தகுதி இருக்கிறதா,
படித்து முடிக்க திறமை இருக்கிறதா என்பது முக்கியம்.மருத்துவ படிப்பு என்றால் அறிஞ்சவங்க, அறியாதவங்க எல்லாரும் சொல்லும் அறிவுரை, பத்துவருஷம் படிக்கணும், பதினைந்து வருஷம் படிக்கணும் என்ற பயமுறுத்தல்.

பொறுமை அவசியம், உன் கிளாஸ்மேட்டுங்க, இன் ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலையில சேர்ந்து செட்டில் ஆயிட்டாங்ன்னு மூக்கால அழக்கூடாது என்று மகனுக்கு சொல்லிவிட்டே, அவன் எழுதிய பதினேழு பொறியியல், மருத்துவம் நுழைவு தேர்வுகளில், தேர்வுப் பெற்ற மூன்று பொறியியல், ஒரு மருத்துவப்படிப்பில், அவன் மிக, மிக ஆசைப்பட்ட மருத்துவம் தேர்வு செய்தோம்.

எந்த படிப்பு வேலை என்றாலும் நல்லவைகளும் உண்டு, சில நெகட்டீவ் விஷயங்களும் உண்டு. எதுவானாலும் நன்கு படித்து நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த பதிவு எழுதத் தூண்டிய டாக்டர் புருனோவுக்கு நன்றி

Labels:

20 பின்னூட்டங்கள்:

At Tuesday, 18 August, 2009, சொல்வது...

நல்ல தேர்வு.

படிக்கப்போறது பிள்ளைகள்தானே? நாமா படிக்கறோம்? அதனால் அவுங்க விருப்பம்தான் முக்கியம்.

விருப்பத்தோடு படிச்சால்தான் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

மகனுக்கு இனிய வாழ்த்து(க்)களை அட்வான்ஸாச் சொல்லிக்கறேன்.

எனக்கு ஃப்ரீ கன்ஸல்டேஷன் உண்டு என்ற நம்பிக்கையுடன்:-))))

 
At Tuesday, 18 August, 2009, சொல்வது...

படிப்பைத் தேர்ந்தெடுக்கிறதும், அந்த இடத்தில அட்ஜஸ்ட் செய்து கொண்டு பசங்க இருக்கிறதும் எந்தத் துறையிலும் சிரமம்தான்.

கலாச்சாரம் கேளிக்கைனு வேற கவனம் திரும்பும். எல்லாவற்றையும் சமாளிக்கக் குழந்தைகளைப் பழக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

நன்றி துளசி, வல்லி &
முகமூடி ஐயா :-)

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

//எந்த படிப்பு ஆனாலும், பிள்ளைகள் விருப்பம் முதலில். அதற்கு தகுதி இருக்கிறதா,
படித்து முடிக்க திறமை இருக்கிறதா என்பது முக்கியம்.மருத்துவ படிப்பு என்றால் அறிஞ்சவங்க, அறியாதவங்க எல்லாரும் சொல்லும் அறிவுரை, பத்துவருஷம் படிக்கணும், பதினைந்து வருஷம் படிக்கணும் என்ற பயமுறுத்தல். //

மேடம்

அதை பயமுறுத்தல் என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல் நிதர்சணத்தை எதிர்கொள்ளல் என்று எடுத்துக்கொள்ளலாமே

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

//பொறுமை அவசியம், உன் கிளாஸ்மேட்டுங்க, இன் ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலையில சேர்ந்து செட்டில் ஆயிட்டாங்ன்னு மூக்கால அழக்கூடாது என்று மகனுக்கு சொல்லிவிட்டே, //

இந்த பக்குவம் இருந்தால் போதும் !!

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

//எந்த படிப்பு வேலை என்றாலும் நல்லவைகளும் உண்டு, சில நெகட்டீவ் விஷயங்களும் உண்டு. எதுவானாலும் நன்கு படித்து நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.//

நமது தொழிலில் உள்ள சாதகங்களை அனுபவித்து கொண்டு பாதகங்களை குறைத்து ஒதுக்க பழக வேண்டும்

அவ்வளவு தான்

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

புருனே சார்,
நீங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு தெரிந்த அனைத்து மருத்துவர்களும், டிஸ்கரேஜ்ஜே செய்தார்கள்.
நான் அதிகப்படுத்திச் சொல்லவில்லை. ஊக்கமாய் சொன்ன ஓரே ஒருவர் பதிவர் டாக்டர்பத்மா அரவிந்த் (தேன் துளி) மட்டுமே படிப்பும்சம்மந்தமான விஷயங்களை சொன்னார்.
அனைத்து மருத்துவர்களிடமும், தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அங்கிகாரம் இல்லை என்ற
எண்ணம் மேலோங்கியிருக்கிறது. ஏன் என்று புரியவில்லை? தங்கள் துறை வேண்டாம் என்று
பொதுவாய் எல்லாரும் சொல்வார்கள், ஆனால் மருத்துவர்கள் சொல்வது மிக அதிகம் என்பது என்
அனுபவம்.

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

நல்ல பதிவு, படித்தவுடன் சிறுது நேரம் ( மாவது) ..யோசிக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள் - உங்கள் பிள்ளைகளுக்கு.

எல்லாரும் சொல்வது போல் மருத்துவத்தில் - நிறய காலம் செலவிட வேண்டும், மறுக்க முடியாதது.

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

நல்ல முடிவு என்பது எங்கள் ஒருமித்த கருத்து.உங்கள் மகனுக்கு எங்கள் மன பூர்வமான வாழ்த்துகள்.

பலவித கருதுக்கள் இருப்பது நிஜமே. அவை எல்லாவற்றையும் மீறி, மகன் மருத்துவம் படிப்பது உங்கள் குடும்பத்திற்கே பெரிய மதிப்பு அன்றோ?

நல் வாழ்த்துகள்.
லதா மற்றும் ஸ்ரீதர்

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

//அனைத்து மருத்துவர்களிடமும், தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அங்கிகாரம் இல்லை என்ற
எண்ணம் மேலோங்கியிருக்கிறது. ஏன் என்று புரியவில்லை? தங்கள் துறை வேண்டாம் என்று
பொதுவாய் எல்லாரும் சொல்வார்கள், ஆனால் மருத்துவர்கள் சொல்வது மிக அதிகம் என்பது என்
அனுபவம்.//

பிற துறையினரை விட மருத்துவத்துறையில் தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அங்கிகாரம் இல்லாதவர்களின் சதவிதம் அதிகம் என்பதால் தான் !!

 
At Wednesday, 19 August, 2009, சொல்வது...

//நீங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு தெரிந்த அனைத்து மருத்துவர்களும், டிஸ்கரேஜ்ஜே செய்தார்கள்.//

நான் டிஸ்கரேஜ் செய்யவில்லையே !!!

 
At Thursday, 20 August, 2009, சொல்வது...

//எந்த படிப்பு வேலை என்றாலும் நல்லவைகளும் உண்டு, சில நெகட்டீவ் விஷயங்களும் உண்டு. எதுவானாலும் நன்கு படித்து நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.//
மிகச் சரியான கருத்து.நல்ல மார்க் என்பதை விட நல்ல திறன் என்பது முக்கியம்.ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் திறன் வளரும். திறனிருந்தால் மார்க் தானாகவே வரும்.மார்க் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திறனும் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம்.

மகனுக்கு இனிய வாழ்த்துகள் !!

 
At Thursday, 20 August, 2009, சொல்வது...

வாழ்த்துக்கள்.
கோவை பிஎஸ்ஜியா..? :)

 
At Thursday, 20 August, 2009, சொல்வது...

பையன் மெடிக்கல் காலேஜ் சேரப் போரான் அப்படீன்னு சொல்ல வர்ரீங்க..ம்..வாழ்த்துக்கள்---உங்களுக்கில்லை..கஷ்டப்பட்டு படிச்சு பரிட்சை எழுதுன/தேர்வான உங்கள் மகனுக்கு :)

 
At Thursday, 20 August, 2009, சொல்வது...

பிள்ளைகள் விருப்பம் போல் படிக்க வைத்தால் மட்டும் போதாது.அவர்கள் முன்னேற்றத்தில் உண்மையான அக்கரையுடன் ,அவர்கள் தடுமாறும் பொழுது தோள் கொடுத்து தடைக் கல் த்டுக்கும் பொழுது கைத்தாங்கலாகவும் நிற்க வேண்டும் .
அதுவும் பெற்றோரது கடமை.
அவர்கள் வெற்றி இலக்கைத் தொடும் வரை பொறுமை காத்தல் ,அதைவிட முக்கியம்

 
At Thursday, 20 August, 2009, சொல்வது...

நுனிப்புல்லிலேயே இத்தனை விஷயம் இருக்கும் பொழுது முற்றின கதிரில் எத்தனை இருக்க வேண்டும்!!!???

 
At Thursday, 20 August, 2009, சொல்வது...

நல்ல பதிவுங்க.. நல்லா எழுதி இருக்கீங்க!!!

 
At Friday, 21 August, 2009, சொல்வது...

//
எந்த படிப்பு வேலை என்றாலும் நல்லவைகளும் உண்டு, சில நெகட்டீவ் விஷயங்களும் உண்டு. எதுவானாலும் நன்கு படித்து நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.//

மிகச்சரியான கருத்து. நூற்றுக்கு நூறு உண்மை.

 
At Sunday, 13 September, 2009, சொல்வது...

மகனுக்கு வாழ்த்துக்கள் உஷா.

எந்தத் துறை என்பது பிள்ளைகளது ஆர்வங்களினூடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது மிகஅவசியம்.

எனது மகள் சின்ன வயதில் டொக்டருக்குப் படிக்கப் போகிறேன் என்றாள்.

ஒரு தடவை பாடசாலையில் தவளை வெட்ட வேண்டி வந்ததோடு அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சட்டம் படிக்கப் போகிறேன் என்றாள். சில வருடங்களில் அந்தப்படிப்புக்கான அதி நீண்ட வருடங்களைக் கணக்குப் பண்ணி அந்த ஆசையையும் விட்டு விட்டாள். இப்போது கணினி, கணிதத்துறை என்று படிப்பை முடித்து திருப்தியோடு வேலை செய்கிறாள்.

சின்னவன் கணினித்துறையைப் படித்து விட்டு அதில் திருப்தி கொள்ளாமல் Jounalisum படித்து பத்தரிகைத்துறைக்குள் புகுந்து விட்டான். இது கொஞ்சம் Stress ஆன வேலை என்றாலும் நாள் முழுக்க ஒரு அறைக்குள் கணினியின் முன் அமர்ந்திருப்பதை விட இது திருப்தியான சந்தோசமான வேலை என்கிறான்.

எதுவானாலும் பிள்ளைகள் வாழப்போவது அந்த வேலையுடன்தான் என்பதால் அவர்களுக்கு முழுத்திருப்தி தரும் வேலையாக அமைந்தால் மிகவும் சந்தோசமாகும்.

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

//எந்த படிப்பு ஆனாலும், பிள்ளைகள் விருப்பம் முதலில். அதற்கு தகுதி இருக்கிறதா,
படித்து முடிக்க திறமை இருக்கிறதா என்பது முக்கியம்.//

தங்கள் புதல்வனுக்கு வாழ்த்துகள். மிகவும் அருமையான கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறீர்கள்.

இது எதிர்மறையாகப் பேசப்படுவது அல்ல. இருக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்திச் சொல்வது எனக் கொள்ளலாம். உன் மனதை இதற்கெல்லாம் தயார்படுத்திக்கொள் என பாடம் படிக்கும் முன்னரே அறிவுறுத்திச் சொல்வது என இவைகளை எடுத்துக் கொண்டால் ஒரு நல்ல அறிவுரையாகவே இருக்கும்.

 

Post a Comment

<< இல்லம்