Monday, September 21, 2009

எழுத்துப்பட்டறையும் இரா. முருகனும்!

நான் சென்னைக்கு செல்வேனா என்று எனக்கே சஸ்பென்சாய் இருந்ததாலும், ஒருமுறை டிக்கெட் எடுத்து அதை கான்சல் செய்து திரும்ப எடுத்து, ஞாயிறு காலை ஒரு விசேஷத்தில் மாட்டிக் கொண்டு, காலை ஒன்பதே முக்கால் மணிக்கு பட்டறையில் நுழைந்தேன்.

நம் வழக்கப்படி சரியாய் ஒரு மணிநேர தாமத்தில் ஆரம்பித்தது. பாஸ்கர் சக்தி,
யுவன் சந்திரசேகர், தேவதாஸ், பாரா என்று பத்தில் இருந்து மாலை ஆறுமணிவரை
சுவாரசியமாய் நேரம் போனது

பலரும் நேர்முக வர்ணனை செய்துவிட்டதால் சில டிட்பிட்ஸ் மட்டும். முன் வரிசையில்
இரண்டு பெண்களை கண்டதும் நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன். உமா சக்தியும், விதூஷ் வித்யா!

இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். எல்லா பதிவர்களையும் அறிமுகப்படுத்தி இருந்தால்
அறிந்துக் கொள்ள சுலபமாய் இருந்திருக்கும். டோண்டு வால் பையனை அறிமுகப்படுத்தினார். லக்கியிடம் நானே பேசினேன். அதிஷா அருகில் இருந்தார். தண்டோரா, கேபிள் சங்கர் அகநாழிகை வாசுதேவன், சாம்ராஜ்ய ப்ரியன் ஆகியோரிடம் பேசினேன். இன்னும் ஒரு சின்ன பையன், கல்லூரில் படிக்கிறாராம். பெயர் நினைவில்லை. மிக ஆர்வமாய் பேசினார்.

வித்யாவின் பதிவு பார்த்த நினைவு இல்லை. உமாசக்தி கவிதாயினியானதால் என் வாசிப்பு பட்டியலில் அவர் இல்லை :-)

வித்யா, மொழிப்பெயர்ப்புகளில் மிக ஆர்வமாய் செயல்படுகிறார். உமாவோ உலக புகழ் மணிரத்தினம் அவர்களிடம் வேலை செய்கிறார்.

90% சதவீத பதிவர்களை என்னால் அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. பதிவுலகம் விட்டு ஒதுங்கிப் போய் கொண்டு இருக்கிறேன் என்ற உண்மை புலப்பட்டது. பதிவும் ரெகுலராய் போட வேண்டும், பின்னுட்டங்களிலும் தலையை காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

பேசிய நான்கு பெரும்தலைகளில் திரு. தேவதாஸ் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. மெல்லிய, அமைதியான குரலில், செறிவான பேச்சு. அவரை அறிய வைத்த சிவராமனுக்கும், சுந்தருக்கும் நன்னி, நன்னி.

பாராவிடம் யுவன் சந்திரசேகர் அவர்களை என்னை அறிமுகப்படுத்த சொன்னேன்.அவரின் குள்ளன் சரித்திரம் மட்டும் வாசித்திருக்கிறேன். நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார் போல, இணையத்தில் தேடி படிக்க வேண்டும்.

பைத்தியக்காரன் என்ற சிவராமனுக்கும், ஐயோவரம் சுந்தருக்கும் என் நன்றிகள். அருமையான நிகழ்ச்சிக்கும், நாலு புத்தகங்களும் உணவுக்கும்.

விதூஷ் வித்யாவிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன். வேறு என்ன இன்னுமா கிளம்பவில்லை என்று போன் மேல் போன். இதில் பட்டறை முடிந்த பிறகு சுற்றுலா போனார்களாம். ஹூம் ஆண்கள் உலகம் :-(

பி.கு சென்னை சுவரொட்டிகளில் உ. போ. ஒ போஸ்டர்களில்mஇரா.மு பெயர் இருக்கிறதா என்று கண்ணில் எண்ணைவிடாமல் தேடி ஏமாந்தேன். நம்ம தோஸ்த் இல்லையா? ஆனால் இட்லிவடை பதிவுப் படித்து, நொந்துப் போனேன். இன்றைய டிரெண்ட்படி எனக்கும் சினிமாவில் ஸ்கிரிப்ட் ரைட்டர் போன்ற வாய்ப்பு கிடைத்தால், டைட்டிலில், சினிமா போஸ்டர்களில் என் பெயர் போட்டே ஆக வேண்டும் என்று முதலில் எழுதி வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன் (நோ ஸ்மைலி)

9 பின்னூட்டங்கள்:

At Monday, 21 September, 2009, சொல்வது...

எனக்கு தெரிந்து வசனகர்த்தா பெயர் பொதுவாகவ போட மாட்டார்கள்.

சுஜாதா பெயர் போடுவார்கள்.

சிம்பு மற்றும் ஷங்கர் படங்களில் மட்டும் பாலகுமாரன் பெயர் போட்டதை ஞாபகம்.

முருகனின் வசனம் சிறப்பாக உள்ளது என்று பலரும் பாராட்டுகின்றனர்.

 
At Monday, 21 September, 2009, சொல்வது...

ராம்ஜி, இலக்கியவாதிக்கு தர வேண்டிய மரியாதை. கட்டாயம் பெயர் போட்டு இருக்க வேண்டும்.

 
At Monday, 21 September, 2009, சொல்வது...

போஸ்டர்களில் பெயர் போடுவது என்பது விளம்பரம். யார் பெயர்கள் இன்னும் நாலு பேரை இழுக்க வாய்ப்பிருக்கிறதோ அவர்கள் பெயர்கள் நிச்சயம் வரும். இரண்டாம் படத்தில் போடும் அளவுக்கு இரா முவின் வசனங்கள் இருக்கின்றன :-)

உங்க படத்துல மெயின் செல்லிங் பீச்சரே உங்க வசனம்தானே.. போடாம? (பெண் சிங்கம் - வசனம்தானே பேமஸ்?)

 
At Monday, 21 September, 2009, சொல்வது...

//
90% சதவீத பதிவர்களை என்னால் அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. பதிவுலகம் விட்டு ஒதுங்கிப் போய் கொண்டு இருக்கிறேன் என்ற உண்மை புலப்பட்டது. பதிவும் ரெகுலராய் போட வேண்டும், பின்னுட்டங்களிலும் தலையை காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.//


பலத்த கரகோஷங்கள் :))

 
At Monday, 21 September, 2009, சொல்வது...

//ஹூம் ஆண்கள் உலகம் :-//

நானும் பலசமயம் நினைப்பதுண்டு. இது மாதிரி விஷயங்களுக்காகவாச்சும் ஆம்பளையா பிறந்திருக்கக்கூடாதான்னு

 
At Monday, 21 September, 2009, சொல்வது...

சுரேஷ், தயாரிப்பாளர் பெயர் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆயில்யன், தீர்மானம் எடுத்தாச்சு, ஆனால் ஒழுங்காய் கடைப்பிடிக்க வேண்டுமே :-)

சின்ன அம்மணி, பெண்ணாய் பூமியில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு சமயத்திலாவது ஆணாய்
பிறக்காமல் போனோமே என்று வருத்தப்பட்டிருப்பார்கள் இல்லையா?

 
At Tuesday, 22 September, 2009, சொல்வது...

//சினிமாவில் ஸ்கிரிப்ட் ரைட்டர் போன்ற வாய்ப்பு கிடைத்தால்//
ஐயோ ! உங்கள் ஒரிஜினாலிடி போயிடும்

 
At Thursday, 24 September, 2009, சொல்வது...

ஸ்க்ரீன்ப்ளே வும் எழுதினா போடுவாங்கனு நினைக்கிறேன்.

//இன்னும் ஒரு சின்ன பையன், கல்லூரில் படிக்கிறாராம். பெயர் நினைவில்லை. மிக ஆர்வமாய் பேசினார்.

நானோ என்று யோசிக்கிறேன். அந்தப் பையன் தலையில் கேப் போட்டிருந்தானா?

 
At Saturday, 26 September, 2009, சொல்வது...

சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு பட்டறையைக் குறித்து எழுதியுள்ளீர்கள். என்னையும் நினைவு கூர்ந்ததிற்கு நன்றி!!

 

Post a Comment

<< இல்லம்