Friday, February 12, 2010

LG split a/c ஒரு விசித்திர பிரச்சனை- உதவி ப்ளீஸ்

சமீபத்தில் எல்.ஜி ஸ்பிலிட் ஏசி வாங்கிப் பொருத்தியுள்ளோம். அதில் ஒரு விசித்திர பிரச்சனை.
இண்டிகேட்டர் லைட் மிக பிரகாசமாய் உள்ளது. அதற்காக (என் ஐடியா) ஒரு அட்டையை கத்தரித்து உட் பக்கம் வைத்துள்ளேன். அதனால் வெளிச்சம் குறைந்துள்ளது. ஆனால் அட்டை, காகிதம் என்பதால்தீப்பிடிக்குமோ, அப்படி வைப்பது சரியா? இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு? வெளிச்சம் மிக அதிகமாய் இருப்பதால் தூக்கம் கெடுகிறது.
என்ன செய்வது உதவி ப்ளீஸ்

11 பின்னூட்டங்கள்:

At Friday, 12 February, 2010, சொல்வது...

பொதுவா இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்லறது இல்லை. இருந்தாலும் அக்கா நீங்க கேட்கறீங்களேன்னு சொல்லறேன்.

இந்த இண்டிகேட்டர் வெளிச்சப் பிரச்சனைக்கு ரொம்ப எளிதான தீர்வு ஒண்ணு இருக்கு. அது என்னன்னா...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஏசியை ஆப் பண்ணி வைக்கிறதுதான். அப்படிச் செஞ்சா அதுக்கு அப்புறம் இந்த வெளிச்சப் பிரச்சனை இருக்கவே இருக்காது.

இந்த தொழில் ரகசியத்தை வெளியே சொல்லிட்டாதீங்கக்கா!!

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

எல்ஜி ஸ்ப்லிட் ஏசி தான் எங்க வீட்டிலேயும் அப்படி ஒண்ணும் இண்டிகேட்டர் லைட் பிரகாசமா இல்லையே?? அட்டையை உள்ளே வைக்கிறதுக்குப் பதிலா உங்க கண்ணின் மேல் ஒரு துணியைப் போட்டு மூடிக்கலாம், தூங்கற வரைக்கும்,:)))))))) இல்லாட்டி ஸ்டெபிலைசரை எங்காவது மறைச்சு வைக்கலாம். ஸ்டெபிலைசரை அந்த இடத்திலே இருந்து கண்ணுக்குத் தெரியாம மாத்துங்க!

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

எங்கள் வீட்டில் சாம்சங்.. சேம் ப்ளட்.. :))

பேப்பரை கட் பண்ணி செலோ டேப் போட்டு மேலே ஒட்டியிருக்கிறேன். ஆறுமாதங்களாக எந்த பிரச்சினையும் இல்லை.

எதாவது அழகான ஸ்டிக்கர் இருந்தால் ஒட்டிக்கொள்ளவும்.

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

பொதுவாக ஏசி ஓடும் போது காற்றின் ஓட்டம் இருப்பதால் Front indication Board சூடாக வாய்ப்பு இல்லை. இந்த டிஸ்பிளே போர்டுக்கு அதிக வோல்டேஜ் வராது.அதனால் நெருப்பு பிடிக்காது. ஏசியின் வலது புறம் மோட்டருக்கு அருகிலே தான் மெயின் பிசி போர்ட் இருக்கும்.

நீங்கள் வெளியேவே லைட்டின் மீது ஏதாவது அழகான ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்ளலாம். லைட்டை நீக்க வேண்டுமெனில் டிஸ்பிளே போர்ட்டில் கை வைக்க வேண்டி இருக்கும். அது நல்லதல்ல.. வெளிச்சம் வரும் இடத்திற்கு நேராக வெளியே ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டி வையுங்கள்.. :)

இந்த வெளிச்சமே உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? அவ்வ்வ்

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

பாலோ அப்.

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

இலவசம், உலக வெப்பமயமாதலை தடுக்க நினைக்கும் உம்முடைய நல்ல மனசு எனக்கு புரியுதுபா. அதாவது ஏசியை ஆப் பண்ண சொன்னீயே அதுக்கு :-)

கீதா, உள்ளங்கை அகலத்துக்கு , பெளர்ணமி பூரணசந்திரன் மாதிரி இருளில் ஒளிகிறது :-(

வெண்பூ, நன்னி நன்னி! ஏதோ ஒருத்தராவது என்னைப் போல இருக்காங்காங்களே ;-) ஸ்டிக்கர்
செல்லோ டேப் ஒட்டினால் அசிங்கமாய் இருக்குமேன்னு பார்த்தேன். வேற வழியில்லை போல இருக்கு.

தமிழ் பிரியன், உள்ளே நாலைந்து குட்டி குட்டி மெர்குரி விளக்குகள் உள்ளன. ஒன்று/ இரண்டு தவிர
மற்றவைகளை நீக்கினால் பிரச்சனை தீர்ந்துவிடும். அல்லது வெண்பூ சொன்ன வழிதான். உள்ளே
வைத்த அட்டை, தீ பிடிக்குமோ என்று பயமாய் இருக்கு.

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

ரொம்ப‌வே தூக்க‌ம் வ‌ர‌ ம‌றுத்தால் த‌குந்த‌ ஆளை கூப்பிட்டு அவ்விள‌க்குக்கு வ‌ரும் கேபிளை க‌ட் செய்திடுங்க‌.அது வேண்டாம் என்றால் ஸ்டிக்க‌ர் தான் பெஸ்ட்.
இ.கொத்த‌னார் அம்பு ரொம்ப‌வே வேக‌மா பாயுது. :‍)

 
At Tuesday, 16 February, 2010, சொல்வது...

குட்டி குட்டி பல்பு நாலுல இரண்டை உடைச்சிருங்க. :) எல் ஜி எலக்ட்ரீசியனிடம் விபரம் கேட்டால் நல்லதொரு பதில் கிடைக்கும், பேப்பர் எல்லாம் எடுத்துவிடவும்.

 
At Friday, 19 February, 2010, சொல்வது...

ஏ சி அப்படின்ன என்னங்க? :)

 
At Saturday, 20 February, 2010, சொல்வது...

ராதாகிருஷ்ணன், எல்ஜில கேட்டு இருக்கேன். வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க, இப்ப வெளிய
அட்டை ஒட்டியிருக்கேன் (வெண்பூ ஐடியா)

சிவா, லாங் டைம் நோ சீ. ஆமாம் உங்க ஊரே ஏசி, நாங்க ஹீட்டர்ன்னா என்னான்னு கேட்போமே :-)நிமோ நலமா?

 
At Wednesday, 24 February, 2010, சொல்வது...

ஸ்டிக்கர் பொட்டு கூட நல்ல ஆப்ஷனாக இருக்கலாம்.

இலவசகொத்தனார்..முடில...:))

 

Post a Comment

<< இல்லம்