Saturday, December 12, 2009

என்னுடைய முதல் நாவல்- கரை தேடும் ஓடங்கள் வெளியாகிவிட்டது



என்னுடைய முதல் நாவல் கரை தேடும் ஓடங்கள் வெளி வந்துவிட்டது. நாவலைக் குறித்து பார்க்க இங்கே

. நம் கவிதாயினி மதுமிதா சந்தியா பதிப்பகம் திரு. நடராஜன் அவர்களை தொலைப்பேசியில் அறிமுகப்படுத்தினார், கதையை அனுப்பி வைத்தேன். என் வேலை அவ்வளவுதான். கடந்த ஆறுமாதமாய் வீட்டு வேலை, இட பெயர்ச்சி என்று ஆயிரத்தெட்டு பிரச்சனைகள், அதனால் புத்தக முயற்சியில் என் பங்கு எதுவும் இல்லை. ஆனால் அட்டை படம் உட்பட எல்லாம் நிறைவாய் உள்ளது.

அதிகம் அறிமுக இல்லாத, நேரில் பார்க்காத திரு நாகூர் ரூமி அவர்களிடம்
நாவலுக்கு முன்னுரை கேட்டு வாங்கினேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் கவனக்குறைவால் என்னுரையில் அவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டேன்.

ஏதோ,எனக்கு அறிமுகமுள்ள எழுத்தாளினி ஏகாம்பரியிடம் புத்தகத்தை தந்து
என்ன சொல்ல போகிறார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்தால் புத்தகத்தை
புரட்டியவர், திகைப்பூண்டை மிதித்தார்போல என்னது இது என்று அலறினாள்.

என்னடா இன்னும் என்ன குழப்படிகள் செய்து இருக்கிறோம் என்ற யோசனையுடன்
அவளை நோக்கினால், “கடைசி பக்கத்தில் புகைப்படம் போட சில விதி முறைகள்
உண்டு. இப்படியா பல்லைக்காட்டிக் கொண்டு போஸ் கொடுப்பது என்றாள்.

அவ்வளவு தானே என்று நிம்மிதி பெருமூச்சு விட்டதும், “படைப்பாளி என்றால்
சிந்தனையுடன் போஸ் கொடுக்க வேண்டும். லேசாய் ஆகாயத்தைப் பார்த்துக்
கொண்டு. இல்லாவிட்டால் பேனை பிடித்துக் கொண்டோ அல்லது இன்றைய
டிரெண்ட் படி கணிணி முன் அமர்ந்தும் போஸ் கொடுக்கலாம். பின்னணியில் உலக இலக்கிய புத்தங்களை அடுக்கி வைத்து அட்டகாசமாய் போஸ் கொடுப்பது போன்றவைதான் வழக்கம் மரபு” கோபமாய் ஆரம்பித்து சோகமாய் முடித்தாள்.

ஹி ஹி மரபை உடைக்கும் புரட்சி என்று வைத்துக் கொள்ளேன் என்றேன் வேறு என்ன சொல்ல 

21 பின்னூட்டங்கள்:

At Saturday, 12 December, 2009, சொல்வது...

வாழ்த்துகள் :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

நல்வாழ்த்துக்கள்!

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

நல்வாழ்த்துக்கள்!

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

இனிய வாழ்த்து(க்)கள் உஷா.

புத்தகத்தை நேரில் பார்த்தேன்.

அதில் உங்கள் உரையை மட்டும் படித்தேன்:-)

எந்தப் பேனை பிடிச்சுக்கிட்டுப் போஸ் கொடுக்கணும்???

ஈறைப் பேனாக்கி........


அடுத்தக் கட்டதுக்கு அதைக் கொண்டுபோய் பெருமாளாக்கணுமா?

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

மனமார்ந்த வாழ்த்துகள் :)

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

வாழ்த்துக்கள் ! :))))

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

//படைப்பாளி என்றால்
சிந்தனையுடன் போஸ் கொடுக்க வேண்டும்.//

அட ஆமாம்! விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும்படியோ,அல்லது பேனாவை கைகளில் வைச்சுக்கிட்டு போட்டோ எடுத்ததுமே அடுத்த கதை எழுதுற டென்ஷனோட,இல்லாட்டி வீட்ல வாசல்படியில உக்கார்ந்துக்கிட்டு எழுதிக்கிட்டிருக்கும்போதே சைடுல போட்டோவுக்கு போஸ் கொடுக்கறமாதிரி ! - அட இப்படி எதுவுமே இல்லாம சிரிச்சுக்கிட்டிருக்கிற மாதிரியா ? ம்ஹும் எழுத்தாளினி சொல்ற மாதிரி டிரெயினிங்க் எடுத்துக்கிட்டு அடுத்த புக்ல சரி பண்ணிடுங்க :)))

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

வாழ்த்துகள்

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

வாழ்த்துக்கள். :-)

எங்கே எப்படி வாங்குவது என்பதையும் சுட்டி கொடுத்திருக்கலாம்.

சென்ற முறை துபாய் சென்ற போது கவனித்தது, மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் திருட்டு டிவிடி விற்க வரும் தாய்லாந்த் பெண்கள்...

நான் சிறிது காலம் வேலை செய்த அலுவலகத்தின் ஊழியர், ஒரு பெண் ( ப்ரோக்ராம்மர் ) சார்ஜாவில் தங்கி, துபாயில் வேலை பார்த்து விட்டு, இரண்டு மணி நேரம் இரண்டு குழைந்தைகளுக்கு டூஷன் சொல்லிக்கொடுத்துவிட்டு, வீடு திரும்புவார். எல்லாம் சீக்கிரம் இந்தியா திரும்பலாம் என்று எண்ணத்தில் தான் என்றார்! கணவர் கன்ஸ்ட்ரக்சன் இஞ்சினீர்.

இப்போது நடக்கும் துபாய் திவால் நிலை, நிறைய பேருக்கு வேலை இல்லாமல் செய்கிறது... கத்தார் பஹரின் சென்று விட்டார்கள்.

 
At Tuesday, 15 December, 2009, சொல்வது...

நன்றி சொக்கன்,ராமலஷ்மி, காஞ்சனா ராதா கிருஷ்ணன்,துளசி, வெ.இராதாகிருஷ்ணன், ஆயில்யன்,
திகழ், விஜயாசங்கர், சாம்ராஜ்யப்ரியன் நன்றி

துளசி, கதையை படியுங்கள்

ஆயில், அடுத்த முறை பார்த்துக்கலாம். அதற்குள் வளர்ந்திடுவோமில்லே :-)

வித்யா சங்கர், ஆயிரெத்தியெட்டு துயர கதைகளுக்கு மேல் இருக்கிறது. நீங்களும் உங்கள் அனுபவங்களை
எழுதுங்களேன்.

 
At Tuesday, 15 December, 2009, சொல்வது...

வித்யா, இந்த புத்தகம் புத்தககண்காட்சியில் கிடைக்கும்

 
At Tuesday, 15 December, 2009, சொல்வது...

உஷா,

முந்தி நீங்க PDF file ல் அனுப்புனதைப் படிச்சுருக்கேன்.:-)))))

 
At Wednesday, 16 December, 2009, சொல்வது...

வாழ்த்துகள் !!

 
At Wednesday, 16 December, 2009, சொல்வது...

WOW! Congratulations! :)

 
At Wednesday, 16 December, 2009, சொல்வது...

நல்வாழ்த்துகள் மேடம் !

பெண் பதிவர்களில் முதலில் நூல் வெளியிட்டவர் என்கிற பெருமை உங்களது.

 
At Wednesday, 16 December, 2009, சொல்வது...

கவிஞர் வாலி முறையில் உங்களை வாழ்த்த முயல்கிறோம்

"உங்கள் திறனோ அஸாத்யம்
உங்கள் படைப்போ அதிஅஸாத்யம்

நீங்கள் எங்களுக்கு தருவது பேரானந்தம்
நாங்கள் அடைவது பரமானந்தம்

நாங்கள் உங்களுக்கு வேண்டுவது உடல் ஆரோக்கியம்,
மன ஆரோக்கியம், பரம சௌக்கியம்

வாழ்க வளர்க உங்கள் சிறந்த பணி"

லதா மற்றும் ஸ்ரீதர்

 
At Thursday, 17 December, 2009, சொல்வது...

வாழ்த்துக்கள்! உங்களுக்கு இல்ல, உங்க கணவருக்கு. :))

இந்த நாவலை எழுத பக்கபலமாக இருந்து எத்தனை தியாகங்களை செய்து இருப்பார்னு நினைச்சு பாக்கறேன். :))

செல்போனில் பேசுவது போல, கையை கட்டி கொண்டு நாப்பத்தஞ்சு டிகிரியில் சுவத்தில் சாய்ந்து இருப்பது போல (முக்யமா காதில சுடிதார் டாப்ஸ் இருக்கனும்) இப்படி நிறைய்ய இருக்கு.

உங்க அழகான கையெழுத்து போட்ட இலவச காப்பி எல்லாம் கிடைக்காதா? :))

 
At Thursday, 17 December, 2009, சொல்வது...

Congrats, will surely get hold of your novel and read it.

 
At Thursday, 17 December, 2009, சொல்வது...

வாழ்த்துக்கள்.

 
At Thursday, 17 December, 2009, சொல்வது...

நன்றி கோவி, மணியன், ஸ்ரீதர்- லதா, கிருஷ்ணன், அம்பி, ச.சங்கர், மதுரா.

துளசி, நினைவுக்கு வருது.

கோவி! புத்தகத்தின் என்னுரையில் "இணையத்தில் இருந்து அச்சு உலகில் நுழைந்த முதல் எழுத்தாளர்" என்றுப் போட்டுக் கொண்டு இருக்கிறேன் :-)

ஸ்ரீதர் சார், வாலி காபிரைட் வாங்கி வைத்திருக்கப் போகிறார் :-)))

மதுரா, நீங்களா? நலமா?

அம்பி, இனி கையெழுத்துப் போட வேற பழகணுமா :-)இலவ்சமா என்றால் சாப்ட் காபி இருக்கு,
மெயில் ஐடி தந்தால் அனுப்புகிறேன்

 
At Tuesday, 29 December, 2009, சொல்வது...

வாழ்த்துகள். ஏற்கனவே PDFல படிச்சிட்டேன். இருந்தாலும் அடுத்த வாரம் புத்தகக் கண்காட்சியில் வாங்கி எங்க அக்காவுக்கு பரிசா கொடுத்துடுவோம்.

 

Post a Comment

<< இல்லம்