Thursday, March 11, 2010

அரசு பள்ளிகளிலும் கதைச் சொல்லுதலும், book readingம் தேவை

இந்து செய்தித்தாளின் மெட்ரோ பிளஸ்ஸில் அவ்வப்பொழுது கண்ணில் படுவது, குழந்தைகளுக்கு கதைச் சொல்லுவது, கூட்டமாய் புத்தகங்கள் வாசிப்பது பிறகு அதைக் குறித்து கலந்துரையாடல் போன்றவைகளைப் பற்றிய செய்திகள்.

நானும் அம்மாவும் சில மாதங்களுக்கு முன்பு எங்கள் காலனி குழந்தைகளுக்கு கதை நேரம் ஆரம்பித்தோம். கடவுள், கடவுளர்கள் கதைகளை தவிர்த்து சிறு வயதில் கேட்ட கதைகள், தெனாலிராமன் வகையறா கதைகள் என்று லிஸ்ட் போட்டதிலேயே நூற்றுக்கணக்கில் கதைகள் கிடைத்தன. என் காடாறு மாதம், நாடாறு மாத வாழ்க்கையில் அது நின்றுப் போனது. ஆறு வயதில் இருந்து பன்னிரெண்டு வயதுவரையான குழந்தைகள் மிக ஆவலுடன் வந்தார்கள்.

இதில் இன்னும் ஒரு சுவாரசியம் என்னவென்றால், அம்மாக்களும் கதைக் கேட்க உட்கார்ந்ததுதான். அக்கதைகளை அந்த அம்மாக்கள் கேட்டதும், படித்ததும் இல்லை என்றார்கள். வேறு என்ன, வாசிக்கும் பழக்கம் பெற்றவர்களுக்கு இல்லை. ஆனால் இன்றைய டிரெண்டு படி குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் புத்தகம் வாங்க செலவழிக்கவும் தயங்குவது இல்லை.

ஆனால் குழந்தைகள் வாசிக்க விரும்புவதில்லை என்ற புகாருக்கு என்னுடைய காலணா அறிவுரை, நீங்கள் முதலில் படிக்க தொடங்குங்கள் என்பதுதான்.

வாசித்தல் என்பது ஒரு பழக்கம். சிறு குழந்தைகளுக்கு, பள்ளிகளிலேயே கதை சொல்லுதல், புத்தக வாசிப்பு போன்றவைகளை ஆரம்பித்தால், தொலைக்காட்சி மோகம் குறையலாம்.

நான் முதல் பாராவில் குறிப்பிட்ட பள்ளிகள் எல்லாம் பிரபல சிபிஎஸ்ஸி பள்ளிகள்
அரசு பள்ளிகளிலும், மெட்ரிக்குலெஷன் பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளுக்கும்
கதை நேரம் ஆரம்பிக்க வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் உட்பட பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆவல்
உள்ளது. அதற்கு கடினமாய் உழைக்கவும் செய்கிறார்கள். ஆனால் நல்ல விஷயங்களை
அவர்களுக்கு சொல்லிகொடுக்க வழிக்காட்டிகள் இல்லை. சுலப பொழுதுப்போக்கு என வீட்டில் இருக்கும் நேரங்களில் டிவி சீரியல்களில் மூழ்கிப் போகிறார்கள்

புத்தகங்கள் இதற்கு நல்ல தீர்வு. சாதாரண மக்கள் படிக்கும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வாசிக்கும்பழக்கத்தை உண்டாக்க சென்னையில் ஒரு தன்னார்வ குழு உருவாக்கினால் என்ன? யாராவது ஆரம்பித்தால், நானும் பங்குப் பெற ஆவலாய் உள்ளேன்.

Labels:

6 பின்னூட்டங்கள்:

At Thursday, 11 March, 2010, சொல்வது...

பாட்டி, தாத்தா என்ற கதை சொல்லிகள் இல்லாத காரணம் தான் குழந்தைகளுக்கு
கதை தெரியவில்லை.

உங்களையும்,அம்மாவையும் பாராட்ட வேண்டும்.

பள்ளியில் நீதி போதனை வகுப்பில் கதைகள் உண்டு,படம் பார்த்து கதை சொல் உண்டு அந்த காலத்தில்.

நான் என் பேத்திக்கு நிறைய கதை சொல்வேன்.

குழந்தைகளுக்கு பரிசாக கதை புத்தகம் தான் கொடுப்பேன்.

என் குழந்தைகளுக்கும் நிறைய கதை புத்தகம் வாங்கி கொடுத்து, படிக்கும் பழக்கத்தை வளர்த்துள்ளேன்.

 
At Thursday, 11 March, 2010, சொல்வது...

மிக அருமையானதொரு முயற்சி !

டிவிக்களே பொழுதுபோக்கும் சாதனமாகிவிட்ட நாளில் குழந்தைகளுக்கும் + பெற்றோர்களுக்கும் கூட மிக உபயோகமாக இருக்கக்கூடும் !

குழந்தைகளோடு பெற்றோர்களும் சேர்ந்து அமர்ந்து கதை கேட்கையில்/சொல்கையில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கும்!

சென்னையில் நிறைய கதைசொல்லிகள்/Storyteller இருப்பதாக செய்திகள் வலைகளின் மூலம் தெரியவருகிறது

தகவலுக்காக ஒரு இணையத்தினை சுட்டிகாட்டுகிறேன்

http://kathalaya.org/

நன்றி அக்கா!

 
At Thursday, 11 March, 2010, சொல்வது...

ஆரம்பிக்கலாமா நான் ரெடி....

 
At Friday, 12 March, 2010, சொல்வது...

உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு ஈமெயில்-லில் அனுப்புங்கள். :)

 
At Saturday, 13 March, 2010, சொல்வது...

கோமதி அரசு, பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் நானும் தான். நீதிக்கதைகளை விட,
கதை சொல்லிய பிறகு அவர்களை கதையைக் குறித்து பேச சொல்லுங்க,

ஆயில்யன், கதைச் சொல்லிகளைப் பற்றி அடிக்கடி செய்திதாள்களில் வருகிறது. நானும் பார்த்துக்
கொண்டு இருக்கிறேன். உங்க சுட்டியும் ரொம்ப புரோஃஷனலாய் இருக்கு :-)

அமுதா கிருஷ்ணன், மிக சந்தோஷம். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை பள்ளிகளில்
நுழைவது சுலபமில்லை

வித்யா, இதோ அனுப்புகிறேன்.

 
At Wednesday, 17 March, 2010, சொல்வது...

உண்மை. ரென்டு வயசில் இருந்தே கதை கேட்டு வளந்தேன். அதனால இப்பவும் எந்த நிகழ்ச்சியையும் விஷுவலா தான் திங்க் பண்ண முடியுது. :))

என் பையனுக்கும் ஆறு மாததிலிருந்தே ஆரம்பித்து விட்டேன். கதை புரிஞ்சு எப்படா திரும்ப கேள்வி கேப்பான்?னு ஆவலா இருக்கேன். :))

பெண்கள் கதை மட்டும் தான் சொல்வீங்களோ..? :p

 

Post a Comment

<< இல்லம்