Wednesday, March 10, 2010

ஏகாம்பரியுடன் - ஜான் ஆப்ரஹாம், மரப்பசு, நித்தி & ரஞ்சி

ரொம்ப நாள் கழித்து ஏகாம்பரியிடமிருந்து ஒரு அழைப்பு. செல்பேசியை எடுத்ததும், ஜான் ஆப்ரஹாம் படம், டீவில போட்டாங்களே பார்த்தியா? சூப்பர் படம் என்றாள்.

அடடா தவறவிட்டு விட்டோமே, வருத்தத்துடன் இல்லை என்றவள் என்ன படம்? டிவிடி கிடைக்குமா? யாரு ஹீரோயினி பிபாஷாவா என்றுக் கேட்டதும், சே என்றவள், இது கிளாசிக் படம். ஜான் ஆப்ரஹாம் டைரக்ட் செய்த அக்ரஹாரத்தில் கழுதை. சூப்பர்படம், எய்ட்டீஸ்ல பெஸ்ட் தமிழ்படம்ன்னு அவார்ட் வாங்கிய படம் என்று மூச்சு விடாமல் சொன்னவளை மறித்து, நீ படம் பார்த்தீயா என்று ஓரே ஒரு கேள்வி கேட்டேன்.

இல்லப்பா, ஒரு டெத், விசாரிக்க ஊருக்குப் போயிட்டேன் என்றாள்.

படம் பார்த்துட்டு வா. இந்த பில்டெப் எல்லாம் படிச்சி படம் பார்த்து, முழுக்க பார்க்க முடியாம
நொந்துப் போனேன் என்றேன்.

ஹூம், உனக்கு இதெல்லாம் புரியாது என்றாள்.

இந்த அறிவுஜீவிங்களே இப்படித்தான் என்று மனசுக்குள் முணங்கிக் கொண்டதும், பல அறிவுஜீவிகளால் புகழப்பட்ட அந்த நாவல் நினைவுக்கு வந்தது.

ஏகாம்பரி! தி.ஜானகிராமன் எழுதிய “மரப்பசு” படிச்சிருக்கீயா? என்றுக் கேட்டதும், “ஆஹா, மிக சிறந்த ஆக்கமில்லையா? அம்மணி கேரக்டரை மறக்க முடியுமா?

எனக்கு என்னமோ கே.பாலசந்தர் ஹீரோயினி மாதிரி அம்மணி கேரக்டர் அபத்தமாய் இருக்கு. பெண்ணீயம், சுதந்திரம் என்ற பெயரில் முழுக்க முழுக்க அபத்தம். பதினெட்டு வயசு பெண், வயசான கோபாலியைப் பார்த்ததும் கட்டிக் கொள்கிறாள். தெய்வீக காதல் என்றாலும் ஓ.கே அந்த
ஆளுக்கு பொம்பள வீக்னஸ். இவ எத்தினி பேர் கூட படுத்தேன்னு நூத்து கணக்குல சொல்கிறா. கடைசில தலை நரைத்து புத்தி வந்ததும், பழைய காதலனுடன் செட்டில் ஆகிறா. கல்கின்ன்னு ஒரு படம் வந்ததே ....முடிப்பதற்குள் ஏகாம்பரியின் குரல் சீறியது.

வில் யூ ஷட் அப். ஆணீய சமூகத்தில், பெண் உடலாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். அந்த தளையை உடைக்கும் ஒரு பெண்ணின் வெற்றியைச் சொல்லும் கதையை உன்னால கல்கி போன்ற திராபை படத்துடன் எப்படி ஒப்பிட முடிகிறது?

அடடா, இதே பெண்ணீய பேசும் கல்கி படம் மகளிர் தின ஸ்பெஷலாய் ஏதோ சேனலில்
போட்டார்களே என்றுச் சொல்லலாம் என்று நினைத்துப் பேசாமல் இருந்து விட்டேன்.

சரி சரி உனக்கு இதெல்லாம் புரியாது என்றவள், என்ன அந்நியாயம் பார்த்தீயா இந்த நித்தியானந்தம், ரஞ்சிதா மேட்டர். மனம் ஒப்பி வாழும் காதலர்களின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க நாம் யார்? சாமியார் வேண்டுமானாலும் டூபாக்கூர், தன்னை நம்பிய பக்தர்களுக்கு, ஒழுக்கம் போதித்தவர் செய்த நம்பிக்கை துரோகம். ஆனால் பாவம், இந்த ரஞ்சிதா? அந்த பெண்ணை நினைத்தால் பாவமாய் இருக்கிறது” ஏகாம்பரியின் குரல் தழும்பியது.

“இரு இரு. கல்யாணம் ஆனவள் செய்தது. அடல்ட்டரி (adultery), இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமில்லையா?

ஏகாம்பரி, “சரிபா. இன்னொரு கால் வருது. அப்புறமா பேசுகிறேன்
என்றுச் சொல்லி செல்பேசியை அணைத்துவிட்டாள்.

Labels:

3 பின்னூட்டங்கள்:

At Wednesday, 10 March, 2010, சொல்வது...

சரி குட்டு. (குட்டு தானே இல்ல நானா தான் உளறிட்டனா?)

 
At Wednesday, 10 March, 2010, சொல்வது...

:)

நமக்கு ஒன்னு பிடிச்சதுன்னா அது தான் சரி .. நமக்கு பிடிக்கலன்னா அது என்ன ஆனாலும் தப்பு தான்.. :)

 
At Wednesday, 10 March, 2010, சொல்வது...

பொற்கொடி, குட்டுக்கு நன்னி :-)

முத்து, இப்படி பொத்தாம்பொதுவா சொன்னா எப்பூடி :-)

 

Post a Comment

<< இல்லம்