ஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பத்திரிக்கைகள்.
அம்மாவின் விருப்பப்படி வீட்டில் சக்தி விகடன், திரிசக்தி, ஞான ஆலயம் போன்ற பத்திரிக்கைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் வெத்து பேப்பரில் எறும்பு ஊர்ந்தாலும், என்ன எழுத்து என்று வாசிக்க துடிக்கும் ஆளாச்சே, இதை படித்து வைக்கலாம் என்று எடுத்தால் ????
பெட்டி கடைகளில் இத்தகைய ஆன்மீகம் வளர்க்கும் பத்திரிக்கைகளும், பெண்களுக்கான
பத்திரிக்கைகளும் கணக்கே இல்லாமல் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. ஸ்டஃப் எல்லாவற்றிலும் ஒன்றுதான். அதாவது ஆன்மீகம் என்றால் இங்க இந்த கோவில், புராணம் சொல்லும் கதை, ஒரு பயணக்கட்டுரை, கேள்விபதில், அதைத்தவிர வாசகர்களுக்குள் எது எங்கு கிடைக்கும் போன்ற விஷயங்களைப் பரிமாறிக்கொள்வது.
பெண்கள் பத்திரிக்கை என்றால் திரும்ப திரும்ப பாவக்காய் அல்வா செய் முறை குறிப்பு,
குட்டி குட்டி சமையலறை குறிப்புகள், கேள்வி பதில், வாசகர்களுக்காக நாலு பக்கங்கள், பிரச்சனைகளை கண்ணீருடன் விளக்கும் கடிதங்கள், அதற்கு வாசக, நிபுணர்கள் சொல்லும் தீர்வுகள், பாசி மணி சுவர் அலங்காரம் என அரைச்ச மாவை அரைத்தல்.
ஆன்மீகம் என்ற பெயரில் இந்துமதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை ஆன்மீக பத்திரிக்கைகள்
நன்கு வளர்க்கின்றன. பக்கத்துக்கு பக்கம், மாந்தீரீக ஜோசிய விளம்பரங்கள், ஹோமங்கள்,
யாகங்கள் செய்விக்க கட்டண விவரங்கள் இதைத் தவிர கோவில் கட்ட நிதியுதவி வேண்டி,
எல்லாம் டிரஸ்ட் தான், நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு
என்ற உத்திரவாதத்துடன் தான்.
இதைத் தவிர மிக சுவாரசியமான விஷயம், அவ்வப்பொழுது கண்ணில் படுவது மறைந்த காஞ்சி பெரியவரைப் பற்றிய தங்கள் அனுபவம் சார்ந்த கட்டுரைகள், அனைத்திலும் பெரியவர் முக்காலமும் அறிந்த ஞானி, நாளை என்ன நடக்கப் போகிறது என்றுப் போகிற போக்கில் சொல்வது அப்படியே நடப்பது, காணாமல் போன குழந்தை கிடைக்கும், மரண படுக்கையில் கிடப்பவர்கள் எழுந்து உட்காருவது, அமங்கலி என்று நினைத்துக் கொண்டு இருந்தவள், சுமங்கலிதான் என்று குங்கும பிரசாதம் பெற்றுக் கொண்டு புல்லரித்து நிற்க, கணவன் எதிரில் பிரதட்சை ஆவது போன்ற அற்புதகங்களை நிகழ்த்தி இன்று அவரை கடவுளாய் காட்டும் கட்டுரைகள்.
ஆனால் ஒன்று இம்புட்டு சொன்னவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால், மடத்தோட பெயர் இப்படி நாறாடிக்க
விடாமல் சம்மந்தப்பட்டவர்கள் சுதாரித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
63 பின்னூட்டங்கள்:
ஒஹ்... நான்தான் பேதை. கம்மென்ட் மாடரேஷன் irukkaa?? அதைவிட பெரிய :))
இன்னும் எந்தப் பின்னூட்டமும் வராதது ஆச்சரியமே??
:))
ஃபாலோ அப்
எதுக்கு உஷா இதுல போய் நேரத்தை விரயம் செய்றீங்க? ப்ளாகு படிங்க :-P
வித்யா, போட்ட மறு செகண்ட் இன்னுமா மறுமொழி இல்லைன்னு நீங்க அங்கலாயப்பட்டதும்,
ஒரு நிமிஷம், தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் தோன்றி மறைந்தது. நா என்ன அம்பிட்டு
பெரிய பிளாக்கரா என்ன :-)
கெ.பி. கே! பாஃலோ அப் புக்கு :-))
ஒரு விசயத்தை விட்டுட்டீங்களே.....
எந்தக் கோவிலுக்குப் போனால் என்னென்னெ கிடைக்கும் என்பது.
பிரசாதம் இல்லைப்பா.பயன்கள்.
கடன் தீரும், புத்திர பாக்கியம்(???)
தொழில் வெற்றி. எதிரிகள் நாசம் வகையறா.......
உஷா,
எங்கள் வீட்டிலும் அம்மாவின் நச்சரிப்பினால் "ஞான ஆலயம்"
என்ற இதழை வாங்குகிறோம்.
உள்ளே மக்களை வீணாக்கும் எழுத்துக்கள்...மக்களின் மூட நம்பிக்கையை வளர்க்கும் உளறல்கள்....
பரீட்சையில் பாசாக ஒரு மந்திரம்,வேலை கிடைக்க ஒரு மந்திரம்...
வீடு கட்ட ஒரு கோயிலுக்கு பயணம்.....
காசு பார்க்க எதை வேண்டுமானாலும் எழுதுவது.....மிக கேவலம்.
ஆமாங்க.. இந்த விளம்பரங்களுக்கு கொஞ்ச சென்சார் செய்தா தேவலை.. விளம்பரத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு டிஸ்கி போட்டாலும்.. இவங்களும் உடந்தை தானே.. எஸ் எஸ் டீவியில் கூட தினம் ஒருத்தர் அனுமான் கவசம் விக்கிறார்... உடனே வாங்குங்க தீரப்போதுன்னு தினமும் சொல்றார். :)
This comment has been removed by a blog administrator.
//ஆனால் ஒன்று இம்புட்டு சொன்னவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால், மடத்தோட பெயர் இப்படி நாறாடிக்க
விடாமல் சம்மந்தப்பட்டவர்கள் சுதாரித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?//
தண்டத்தை போட்டு விட்டு ஓடிப்போன இந்த தண்ட கருமாந்திர மோக குருவையே திருப்பி மடத்துக்கு கூட்டி வந்த முக்காலமும் உணர்ந்த ஞானி அவர் :)
//ஆனால் ஒன்று இம்புட்டு சொன்னவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால், மடத்தோட பெயர் இப்படி நாறாடிக்க
விடாமல் சம்மந்தப்பட்டவர்கள் சுதாரித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?//
தண்டத்தை போட்டு விட்டு ஓடிப்போன இந்த தண்ட கருமாந்திர மோக குருவையே திருப்பி மடத்துக்கு கூட்டி வந்த முக்காலமும் உணர்ந்த ஞானி அவர் :)
//நா என்ன அம்பிட்டு
பெரிய பிளாக்கரா என்ன :-)//
அம்புட்டு பெரிய பிளாக்கர் ஆகல்லாம் இருக்கவே வேணாம்ங்க. எழுதி இருக்கு மேட்டர் மீட்டரை பறக்க வைக்கும் :))
அம்மாவுக்கு தேவலாமா?
////ஒருத்தர் அனுமான் கவசம் விக்கிறார்... உடனே வாங்குங்க தீரப்போதுன்னு தினமும் சொல்றார். :)////
பக்கா பிரைன் வாஷ்.... அரை மணிநேரம் பார்த்துக் கொண்டே இருந்தால், நமக்கே வாங்கிப் பார்க்கலாமோ என்று தோன்றி விடும்... பெண்கள் மனசொரு பைத்தியம், அதை வைத்துக் கொண்டுதான் வியாபாரங்கள் பலதும் நடக்கிறது. அதில் ஆன்மீகமும் ஒன்று.
எப்போதும் எனக்கு "என்னவோ போடா மாதவா"தான்.
சிறுவனாக இருந்த சமயத்தில் மே மாத விடுமுறையில் மாமா வீட்டுக்கு செல்கையில் அங்கு சேர்ந்திருக்கும் ஆன்மீக இதழினை - ஞான ஆலயமா -பெயர் சரியாக நினைவில் இல்லை எடுத்து வைத்து சித்திரகதைகள் வாசித்ததும் அழகிய ஓவிய கடவுள்களினை பார்த்து ரசித்ததும்தான் நினைவுக்கு வருகிறது அந்த காலகட்டத்து ஈர்ப்பினை இப்போதைய ஆன்மீக இதழ்கள் தருவதில்லை :(
அற்புதம் அட்டகாசம். என்னவொரு தீர்க்கம். இளிச்சயவாத மதமும் இளிச்சவாய மடமும் உங்களைப் போன்றவர்கள் முற்போக்குப் பெயர் பெறவே உள்ளது. நன்றாகத் தாக்குங்கள். மற்ற மதங்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசிவிடாதீர்கள். ஏனென்றால் இருக்கிறவே இருக்கிறது நான் என் மதம் பற்றித்தான் பேசமுடியும் என்கிற உப்புசப்புள்ள பதில்.
ஆனால் உங்கள் முகமூடி இன்னும் சரியாகப் பொருந்தி வரவில்லை. உங்களால் இன்னும் பெரியவர் என்றுதான் அழைக்கமுடிகிறது. சந்திரசேகேந்திரன் என்று சொல்லிப் பழகுங்கள். ஜெயேந்திரன் என்று தினம் ஒரு நூறு முறை எழுதிப் பழகுங்கள். ஜெயேந்திரன் வேறு என்னவெல்லாம் செய்தான் என்று கேட்டாவது தெரிந்துகொண்டு விடுங்கள். முற்போக்கு ஜகஜோதியில் உங்களை அடிக்க ஆள் இருக்காது.
ஆன்மிகப் பத்திரிகையைப் பற்றி நீங்கள் எழுதிய கருத்துகள் அக்ஷர சுத்தம். எனக்கும் உங்கள் கதைகளெல்லாம் அந்தப் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள் போல ஒன்றுக்கும் ஒப்பேறாமல்தான் இருக்கின்றன. இதை ஏன் சொல்கிறேன் என்றால் யாருக்கோ எங்கேயோ எதையெல்லாமோ பிடித்துக்கொண்டிருக்கும்போதே பிடிக்காமலும் போய்க்கொண்டிருக்கிறது.
தொடர்ந்து முற்போக்குப் பட்டம் பெற பாடுபடவும்.
மனுஷனுக்கு ஓரளவுக்கு மேலே துயரத்தை தாங்க வலிமை இல்லை. மனிதர்கள் பொதுவாக கோழைகள். அதனால் ஆன்மீகப் பாதையில் நுழைகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஆன்மீக குருக்கள், மத குருக்கள் எல்லாருமே கேவலம் மனிதர்கள்தான். அவர்களுக்கு கொஞ்சம் மனித சைக்காலஜி தெரியும், அவர்கள் பலஹீனத்தை சரிப்படுத்தத் தெரியும் ஆனால்..
***தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால்***
அவர்கள் முக்காலமும் உணர்ந்தவர் களல்ல!
ஒரு மடத்தின் தலைவர், தவறான எண்ணம் கொண்டு தவறாக நடக்க ஒரு நிமிடமோ, வினாடியோ போதும். அந்த ஒரு வினாடியில் மனது சஞ்சலப்பட்டுவிட்டால் முடிந்தது எல்லாம்! இது உணர்வுகளை அடக்கி வாழ நினைக்கும் மனிதர்களுக்கு விஸ்வரூபம் எடுக்கும். ஏன்னா இவர்களும் மனிதர்களே. இவர்களுடைய உடலிலும் ஹார்மோன்கள் ஓடுகின்றன. அதனால் இவர்கள் தவறாக நடக்க மாட்டார்கள் என்று நாம்புவதுதான் தவறு.
மனம் கண்ட்ரோல் இழந்துவிட்டது என்று உணர்ந்தவுடன் தன் தகுதியை இழந்த மதத்தலைவர், அந்தப் பதவியிலிருந்து விலகி ஒதுங்குவது நல்லது.
மனம் சஞ்சலப்பட்ட பிறகும் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?
இவர்கள் இவர்களையே ஏமாற்றுவதுடன், பக்தர்களை ஏமாற்றுவதுடன், கடவுளையும் ஏமாத்துறாங்க.
ஆன்மீகப் பாதையில் பொய்யை அடிப்படியாக வைத்துப் போக முடியாது என்பதை ஆன்மீகவாதிகள் உணராமல் இருப்பது அதிசயமான ஒண்ணு!
ஆன்மீகமும், ஆன்மீக குருக்களும், ஆன்மீக பத்திரிக்கைக்களும் காலப்போக்கில்
"வியாபாரியாகி" (பணம் இல்லைனா புகழுக்கு அடிமையாகி) விடுவதை தவிர்க்கமுடியாது. இவர்கள் யாவருமே சாதாரண மனிதர்களே!
பிரசன்னா,
இக்கட்டுரையின்நோக்கம்"பெரியவரை" கடவுளாய் உருவகப்படுத்துவதை கண்டிப்பதுதான். உங்களுக்கு நினைவிக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. மரத்தடி இணைய குழுவில் எனக்கு பிடித்த "பெரியாரும், பெரியவரும்" என்ற கட்டுரை எழுதியிருந்தேன். பெரியாரை மதிப்பவர்களுக்கு பெரியவர் என்றால் நக்கல். பெரியவரை மதிப்பவர்களுக்கு பெரியார் என்றால் அலர்ஜி. முற்போக்கு சிந்தனையாளராய் காட்டிக் கொள்ள பெரியாரை புகழ்ந்தால் போதும்.
ஆனால் என்ன செய்ய, நீங்க தந்தாலும் இந்த பட்டங்கள் எல்லாம் எனக்கு தேவையில்லையே.
பெண்ணுரிமை, சாதி ஏற்றத்தாழ்வு யோசிக்கும்பொழுது பெரியார் ஆதர்சமாய் இருக்கிறார் எனக்கு.
அதேசமயம் பதினைந்து வயதில் வாசித்த கல்கி பக்கத்தில் பெரியவர் சொன்ன ஒற்றை வரியில்
கவரப்பட்டு இன்றுவரை பட்டுபுடைவை உடுத்துவதில்லை. என் ஓரே மகளுக்கு நாங்கள் வாங்கியதும் இல்லை. எழுத்துவது என் ஆத்ம திருப்திக்கு. எழுத்தை வைத்து வாழுபவர்களுக்கு வேண்டுமானாலும்
வலது, இடது பக்கம் தேவை . ஆனால் நான் எந்த பக்கமும் சேராமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப்
பார்ப்பவள்.
எப்படியோ இந்த ஆன்மீக பத்திரிக்கை எழுத்தைப் போன்ற (உங்கள் பார்வையில்) திராபையான என்னுடைய படைப்புகளையும் வாசிக்கும் உங்களுக்கு என் நன்னிங்க.
//ஆனால் ஒன்று இம்புட்டு சொன்னவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால், மடத்தோட பெயர் இப்படி நாறாடிக்க
விடாமல் சம்மந்தப்பட்டவர்கள் சுதாரித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?//
உஷா மேடம் சூப்பர்.
இதையெல்லாம் என்னைப் போன்றவர் எழுதினால், நாத்திகன், துஷ்டன் என்பார்கள்.
:)
உஷா, பட்டங்கள் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வாங்கிக்கொள்வதுதான் ஃபேஷன். அது இருக்கட்டும்.
/ஆனால் ஒன்று இம்புட்டு சொன்னவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால், //
இங்கே பெரியவரை கடவுளாக உருவகிக்கும் மக்களை நீங்கள் கண்டிக்கவில்லை. நேரடியாக பெரியவரைத்தான் சொல்கிறீர்கள். இதில் இரண்டு விஷயம் உள்ளது. ஒன்று, பெரியவரைக் கடவுளாக மாற்றுவது பெரியவரின் தவறல்ல. இது எல்லா இடங்களிலும், எல்லா மடங்களிலும், எல்லா மதங்களிலும் இன்று வரை நடந்துகொண்டு உள்ளது. இது மக்களின் ஆர்வம், பயம், பக்தி, போலித்தனம், அறிவின்மை எல்லாமே அடங்கியது.
இன்னொன்று, பெரியவரை விமர்சிக்கக் கூடாதா என்பது. நிச்சயம் விமர்சியுங்கள். ஆனால் அவர் அடுத்த வீட்டுக் குழந்தை தடுக்கு ஏன் விழும் என்று முன் கூட்டியே சொல்லவில்லை என்கிற ரேஞ்சில் அல்ல. அவர் சொன்ன கருத்துகளில் உள்ள பிற்போக்குத்தனம் என்ன, சாதியக் கருத்துகள் எவை, அவர் எந்த வகையில் மிகவும் முன்னேறி இருந்தார், எந்த வகையில் இந்து சமூகத்தை கட்டிக்காத்தார் என்கிற வகையில் பேசுங்கள். உங்களுக்கு அவர் இந்து சமூகத்தைக் கட்டிக்காத்தாரா இல்லையா என்பது நேரடியாகத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் சமூக நோக்கில் தேவைதான்.
பெரியார் பெரியார் என்கிறீர்கள். அவரது சமூகக் கருத்துகளைப் பற்றி ஆர்ப்பரிக்கிறீர்கள். பிடிக்காத மதம் என்று உள்ள ஹிந்து மதக் கடவுளுக்கு செருப்பு மாலை மாற்றியது பற்றி நீங்கள் விமர்சித்திருந்தால், அது மரத்தடியோ மர உச்சியோ எங்கிருந்தாலும், அந்த லிங்கை அனுப்புங்கள். படிக்கிறேன். பெரியார் என்று வரும்போது பிடித்ததை எடுத்துக்கொள்வதும், பெரியவர் என்று வரும்போது பிடிக்காததை கேலி செய்வதும் சரியான மனநிலையா என்று நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.
நான் வாரமலரையும் படிக்கிறேன், உங்கள் வலைப்பதிவையும் படிக்கிறேன். கையில் எது கிடைத்தாலும் படித்துவிட்டு, அது தன்க்கு ஏற்புடையதல்ல என்றாலும் அது பற்றி எழுதும் உங்களைப் பீடித்திருக்கும் பாழாய்ப் போன மனவியாதி என்னையும் பீடித்திருக்கிறது, என்ன செய்ய.
பிரசன்னா, மனத்திற்கு ஒவ்வாத கேவலமான செயல்களில் முதலில் நிற்பது தன்னை நிரூபிப்பது. என் கருத்து இது. இதை இப்படி
எழுதியிருக்கலாம், அப்படி ஏன் எழுதவில்லை என்பதற்கு எல்லாம் பதில் சொல்லி மாளாது.
அதே நம் மரத்தடி குழுவில் நாகூர் ரூமி ஒரு கவிதை எழுதியிருந்தார். வழக்கப்படி கவிதை
நினைவில்லை. இந்து, கிறிஸ்துவ கடவுள்கள் வரும். அதற்கு முதல் எதிர்ப்பு பின்னுட்டம் நான் போட்டது.
அதுக்கு உங்க பதிலும் இருந்தது, பொருள் இதுதான். கடவுள் நம்பிக்கையற்ற உஷாவின் பின்னுட்டம்
அன்று உங்கள் கண்ணுக்கு நான் நடுநிலைவாதியாய் காட்சியளித்தேன். இன்னும் பல உதாரணங்கள்
சொல்ல முடியும். கடவுள் மறுப்பு ஒரு கொள்கை. ஆனால் கடவுளை நம்புபவன் முட்டாள்
என்று நான் சொல்ல மாட்டேன். காரணம், இந்த ராமசாமி சொல்வதை நம்பாதே, உன் புத்தில
யோசித்து முடிவெடு என்றுச் சொன்னதை வாசித்ததன் பலன்
பிரசன்னா, மனத்திற்கு ஒவ்வாத கேவலமான செயல்களில் முதலில் நிற்பது தன்னை நிரூபிப்பது. என் கருத்து இது. இதை இப்படி
எழுதியிருக்கலாம், அப்படி ஏன் எழுதவில்லை என்பதற்கு எல்லாம் பதில் சொல்லி மாளாது.
அதே நம் மரத்தடி குழுவில் நாகூர் ரூமி ஒரு கவிதை எழுதியிருந்தார். வழக்கப்படி கவிதை
நினைவில்லை. இந்து, கிறிஸ்துவ கடவுள்கள் வரும். அதற்கு முதல் எதிர்ப்பு பின்னுட்டம் நான் போட்டது.
அதுக்கு உங்க பதிலும் இருந்தது, பொருள் இதுதான். கடவுள் நம்பிக்கையற்ற உஷாவின் பின்னுட்டம்
அன்று உங்கள் கண்ணுக்கு நான் நடுநிலைவாதியாய் காட்சியளித்தேன். இன்னும் பல உதாரணங்கள்
சொல்ல முடியும். கடவுள் மறுப்பு ஒரு கொள்கை. ஆனால் கடவுளை நம்புபவன் முட்டாள்
என்று நான் சொல்ல மாட்டேன். காரணம், இந்த ராமசாமி சொல்வதை நம்பாதே, உன் புத்தில
யோசித்து முடிவெடு என்றுச் சொன்னதை வாசித்ததன் பலன்
உஷா,
நீங்கள் முன்வைத்திருப்பது பெரும்பாலான இந்தியர்களின், மேல்தட்டு இந்துக்களின் மனநிலை. “இந்த மனநிலைதான் நடுநிலை” என்ற கருத்தின் பிரதிபலிப்புதான் உங்களுடைய இந்தக் கட்டுரையும். ஒரு சமூகத்தின் மனவோட்டத்தை வெளிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்.
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்பது போலத்தான் எழுதியுள்ளீர்கள். ஆனால், அது குறித்து ஒரு சலிப்பைக் காட்டி அலுத்துக்கொள்ளுவதன் மூலம் உங்கள் கடவுள் நம்பிக்கையானது மூட நம்பிக்கை இல்லை என்றும் நிறுவியாயிற்று. இது பொதுவாக படித்த இந்தியர்களான நாம் அனைவரும் செய்வதுதான்; உங்களுடைய தனிப்பட்ட குறை இல்லை.
ஏனெனில், நமக்குக் கடவுள் விஷயத்தில் முழுமையான நம்பிக்கையும் இல்லை. அதே சமயம் அவநம்பிக்கையும் இல்லை. அதனால் நமக்குப் பிரச்சினை ஏற்படும்போது கடவுளைத் தேடுவதும், மற்ற சமயங்களில் கடவுளாவது கண்றாவியாவது என்று சொல்லுவதும் ஏற்படுகிறது. கடவுள் குறித்த நிஜமான ஆர்வம் இல்லாததுதான், இந்த இரண்டும் கெட்டான் மனநிலைக்குக் காரணம்.
இந்த மனநிலையும் தவறில்லை. ஏனெனில், இந்தப் பிரச்சினையைப் பற்றிப் புரிந்துகொள்வதைவிட முக்கியமான தேவையான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன - குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது, சமூகத்தில் மதிப்பு பெறுவது, செல்வம் சேகரிப்பது என்று சிலபல. இவை முக்கியமானவை. அவசியமானவை. இவை நிறைவேறினால் அன்றி, கலை, இலக்கியம், ஆன்மீகம் போன்றவற்றில் நிஜமான ஆர்வம் ஏற்படாது.
ஆனால், முழுமையற்ற ஆர்வமும் ஆர்வம்தான். அறிந்துகொள்ளும் துடிப்புத்தான். அந்தத் துடிப்பில் இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கலாம்.
அங்கனம் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் கருத்துக்களை ஆராயலாம், அல்லது ஆபாசம், குப்பை, வன்மம் என்று தூற்றலாம், அல்லது நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி, அருமை, ஆகா ஓகோ என பின்னூட்டம் போடலாம்.
கட்டுரையில் உள்ள சமநிலையற்ற தன்மையைக் குறிப்பிட்டு, இது மோசமான கட்டுரை, வன்மத்தோடு எழுதப்பட்டது என்று கோபிக்கலாம். ஹரன் ப்ரசன்னா போல.
அப்படி இல்லாமல், இந்தக் கட்டுரையைப் பாராட்டிப் பின்னூட்டம் போடலாம். அப்படிப் பின்னூட்டம் போட்டு இக்காலச் சமூகம் நம்பும் புனித பிம்பங்களில் ஒருவன் நான் என பொதுப் புலத்தில் விளம்பரமாக்கலாம். விளம்பர டாக்டர் ருத்ரன் போல.
இந்த இரண்டும் இல்லாமல், கருத்துக்களை ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த புரிதல்கள் குறித்துத் திறந்த மன நிலையையே இந்துத்துவவாதிகள் எடுப்பார்கள். என்னைப் போல.
இந்தக் கட்டுரையில் நீங்கள் தொட்டிருக்கும் விஷயங்கள்:
- அதிசயங்கள், அற்புதங்கள், மற்றும் பூலோக சுகங்களைப் பற்றி மட்டும் பேசும் ஆன்மீகப் பத்திரிக்கைகள்
- சமையல் குறிப்புகள், சுய பிரச்சினைகளுக்குத் தீர்வு, வீட்டையும் தன்னையும் அலங்காரம் செய்வது பற்றி மட்டும் பேசும் பெண்கள் இதழ்கள்
- காஞ்சிப் பெரியவரைக் கடவுளாக்கச் செய்யப்படும் முயற்சிகள்
- கடவுளாகக் காட்டப்படும் காஞ்சிப் பெரியவரின் மானுட பலவீனங்கள்
- காஞ்சிப் பெரியவர் குறித்துக் குறை சொல்ல உங்களுக்கு இருக்கும் தகுதி
இவை குறித்த எனது புரிதல்களை நான் ஒவ்வொன்றாக இங்கே சொல்லுகிறேன்.
முதலில், ஆன்மீகப் பத்திரிக்கைகள் குறித்து:
- இவை மூட நம்பிக்கைகளைப் பரப்புகின்றன என்று சொல்லுகிறீர்கள். மூட நம்பிக்கை என்று எதைச் சொல்லுகிறீர்கள் ? கடவுளின் பெயரால் நடக்கும் அற்புதங்கள் மற்றும் அதிசயங்களையா ?
அற்புதங்கள் மற்றும் அதிசயங்கள் செய்யாத தெய்வங்கள் இந்த உலகில் இல்லை. தன்னால் முடியாததை செய்து காட்டுகிற அல்லது தன்னால் முடியாத ஒன்றைச் செய்ய தனக்கு உதவுகிற ஒன்றை தெய்வம் என்று மனித மனம் வரிக்கிறது. அதற்குக் கடவுள் என்றோ, ஏசு என்றோ, முகம்மது என்றோ, ஊழ் என்றோ, இயற்கை என்றோ பெயரைக் கொடுக்கிறது. அதிசயங்கள் செய்யாத ஒன்றை அல்லது ஒருவரை யாரும் கடவுள் என்று கருதுவதில்லை.
எனவே, அதிசயங்கள் இல்லாத ஆன்மீகம் இல்லை. எனவே, ஆன்மீகப் பத்திரிக்கைகள் அதிசயங்களைப் பற்றித்தான் பேசும்.
இந்த அதிசயங்களையும் மீறி, மனித ஆற்றலின் முழுமையையும் பெற உதவும் ஆன்மீகமே நல்லது என வாதிடுபவர்கள் உள்ளார்கள். அவர்கள் நடத்தும் ஆன்மீகப் பத்திரிக்கைகளும் பல உள்ளன.
மேலோட்டமான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் இந்து மதம் குறித்த புரிதலை மிக மேலோட்டமாக வைத்திருக்கவே இவை செயல்படுகின்றன.
மிக வலிமையான, நிலைநிறுத்தப்பட்ட மார்க்கெட்டிங் சக்திகளான இவைகள் தரம் மிகுந்த படைப்புகளைத் தருவதில்லை. இந்த நிலை இவர்கள் வெளியிடும் ஆன்மீக பத்திரிக்கைகளில் மட்டும் அல்ல, இலக்கிய மற்றும் சமூக பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும்.
ஆனால், ஆன்மீக விஷயத்தில் மட்டுமே குறை சொன்னால்தான் நம்மை இந்த இந்திய அடிமை சமூகம் மதிக்கும். அதனால், நாம் அந்த விஷயத்தில் மட்டும்தான் குறை சொல்லுகிறோம். அந்தப் பத்திரிக்கைகளின் நான்காம்தர கதை கட்டுரைகளை நாம் குறைசொல்லுவதில்லை.
இத்தனை குறைகள் இருந்தாலும், ஒரு இந்துத்துவவாதியாக, இந்தப் பத்திரிக்கைகளில் நல்லதையும் நான் காணுகிறேன்.
நீங்கள் குறை சொல்லும் விகடன் சக்தி, குமுதம் பக்தி போன்ற இதழ்களால் எத்தனையோ பாழ்பட்டுப் போய் கிடந்த, தமிழர்தம் கலையுணர்வை வெளிப்படுத்தும் கோயில்கள் புணர் நிர்மாணம் செய்யப் படுகின்றன. இந்துக்களின் சொத்துக்கள் அழிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இது போன்ற முயற்சிகள் பாராட்டத் தக்கவை.
மூட நம்பிக்கைகளை முன்வைக்காமல் உயர்ந்த கருத்துக்களை முன்வைக்கும் ராமகிருஷ்ண விஜயமும், இண்டெக்ரல் யோகா குறித்து அருமையான கட்டுரைகள் வெளியிடும் அரபிந்த ஆசிரம இதழ்களும், விசிஷ்டாத்வைதம் குறித்து வைணவ மடாலயங்கள் வெளியிடும் இதழ்களும், சங்கர மடம் மற்றும் ஆதீனங்கள் வெளியிடும் இதழ்களும், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற தனிமனிதர்கள் வெளியிடும் சக்தி போன்ற ஆன்மீக இதழ்களும் இருக்கின்றன. பல பத்திரிக்கைகள் வேதாந்தக் கருத்துக்களைப் பற்றி, தத்துவங்களைப் பற்றி, மெட்டாஃபிஸிக்ஸ் பற்றிப் பேசுகின்றன. அவற்றை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். உயர் கருத்துக்களைப் போதிக்கும் இதழ்களுக்குக் குறையில்லை.
ஆனால், உங்கள் வீட்டில் வாங்குவதில்லை. எங்கள் வீட்டிலும் வாங்குவதில்லை. ஏனெனில், அவை நமக்குத் தேவையாகப் படவில்லை.
உங்கள் வீட்டில் வேதாந்த கேசரி எனும் பத்திரிக்கையை விட, சுகி சிவம் கட்டுரைகள் எழுதும் விகடன் பக்தி போதுமானதாக இருக்கிறது. லேசான விஷயங்களைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லுவதை விரும்புபவர்கள் அதிகம் இருப்பதால் அப்படிப் பட்ட பத்திரிக்கைகள்தான் அதிகம் விற்பனையாகின்றன. எனவே, வாசகர்களின் தரத்தைத், தேர்ந்தெடுப்பைத் தாண்டி பிரபலமான பத்திரிக்கைகள் போவதில்லை. எது வாங்கப்படுகிறதோ, அதை விற்கிறார்கள்.
மேம்பட்ட ஆன்மீக இதழ்கள் தேவையாகப் பட்டிருந்தால் உங்கள் வீட்டில் அவை கண்டிப்பாக இருக்கும்.
அதே சமயம் நீங்கள் சொல்லும் இந்தப் பக்தி இதழ்கள் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ளக் கூடாதா, உயர்ந்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லக் கூடாதா என்ற கேள்விகளும் நியாயமானவை.
இந்தப் பத்திரிக்கைகளில் ஆன்மீகச் சான்றோர்களைக் கடவுளாகக் காட்டும் முனைப்பு, அவர்கள் சொன்ன உயர்கருத்துக்களைப் பதிப்பதில் இல்லை. ஏனெனில், அவற்றைப் பற்றிப் பேசினால் வெளியிட்டால் இந்து மதத்தின், பாரம்பரியத்தின், நவீனத்தின் உயர்வைப் பற்றிப் பேசித்தான் தீரவேண்டும். இவற்றின் உயர்வைப் பற்றிப் பேசினால் அந்தப் பத்திரிக்கைகள் மதவெறிப் பத்திரிக்கைகள் என்று பொதுப்புலத்தில் கெட்ட பெயர் வந்துவிடும். அதனால், சுற்றுலாப் பத்திரிக்கைகளாக, தனிமனித விளம்பர இதழ்களாக மட்டுமே இவை இருக்கின்றன.
அதனால்தான், “இந்து” என்ற வார்த்தையை மிகக் கவனமாகத் தவிர்க்கும் இந்த இதழ்கள், உங்களைப் போலவே ஒருவித பொலிடிக்கல் கரக்ட்னெஸ்ஸைப் பின்பற்றுகின்றன. (இருப்பினும், பிரபலமாகிவிட்டதால் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் போட்டுத் தொலைக்க வேண்டியும் இருக்கிறது.) ஆன்மீக விஷயங்களை ஆழமாகக் கற்றுணர்ந்தவர்களின் கட்டுரைகளை இந்த இதழ்கள் கவனமாகத் தவிர்க்கின்றன. பகவத் கீதை உரைகளோ, தமிழ் பக்தி இலக்கியங்களோ இந்தப் பிரபலப் பத்திரிக்கைகளில் வெளியாவதில்லை. அவை எல்லாம் விஷய கனமுள்ளவை, மக்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுகிறார்கள்.
ஆனால், கனமான விஷயங்களை எளிமையாகச் சொன்னவைதான் இந்து இலக்கியங்கள். கனமான தத்துவங்களை எளிமையாக, அழகாகக் கிருபானந்த வாரியார் சொல்லி இருக்கிறார். ஆனால், அவரது பேச்சுக்களை இவை வெளியிடுவதில்லை.
- அடுத்தது, பெண்கள் பத்திரிக்கைகள் பற்றி.
தமிழ்நாட்டில் பிரபலமான தமிழ் பத்திரிக்கைகள் என்றால் இரண்டே இரண்டு வகைதான் இருக்கின்றன - மஞ்சள் பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கைகள்:
1. விகடன், குமுதம், குங்குமம், நக்கீரன் போன்றவை மஞ்சள் பத்திரிக்கைகள்
2. கல்கண்டு, அமுதசுரபி, மஞ்சரி போன்ற தரமான பத்திரிக்கைகள் மற்றும் பெண்கள் பத்திரிக்கைகள்
பெண்களின் பெருமை, பிரச்சினைகளைக் கண்டுப் பின்வாங்காமல் முன்னேறும் பெண்களைப் பற்றிய தகவல்கள், பிரச்சினைகளைச் சமாளிக்க யோசனைகள் போன்றவற்றை இந்தப் பெண்டிர் இதழ்கள் பேசுகின்றன.
இவை தவிர வேறு என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? உலகமே சாக்கடை, அரசியல் சுத்த மோசம், மனிதர்கள் கெட்டவர்கள், இந்து மதம் மட்டமானது என்று பேசுவதற்குத்தான் அச்சில் மஞ்சள் பத்திரிக்கைகளும், இணையத்தில் ப்ளாக்குகளும் இருக்கின்றனவே.
சமையல் குறிப்புகள், சுய பிரச்சினைகளுக்குத் தீர்வு, வீட்டையும் தன்னையும் அலங்காரம் செய்வது பற்றி பேசுவதில் என்ன குறை கண்டீர்கள் என்பது புரியவில்லை. இவையெல்லாம் அழகுணர்வும், கலையுணர்வும் மிக்கவர்களுக்குப் பிடித்தமானவை. ஆண்களும் விரும்பிப் படிப்பவை. தமிழ்நாட்டில் தரமான கருத்துக்களைப் பேசும் பிரபலமான இதழ்கள் என்றால் பெண்டிர் இதழ்கள் மட்டுமே என்று உறுதியாகச் சொல்லலாம்.
- அடுத்ததாக, மகாப் பெரியவரைக் கடவுளாக்கும் கட்டுரைகள்
மகாப் பெரியவரைக் கடவுளாக்கும் முயற்சிகள் ஏதோ புதிதாக நடைபெறுவது போலவும், அதை இந்தப் பத்திரிக்கைகள்தான் ஆரம்பித்து முன்னின்று நடத்துவது போலவும் எழுதியுள்ளீர்கள். தவறான புரிதல்.
மகாப் பெரியவரை அவர் வாழும் காலத்திலேயே கடவுளாகக் கண்டவர்கள் பலர் உண்டு. அவரது எளிமை, தனது வாழ்க்கையை முற்றிலும் எல்லார் பார்வையிலும் படும்படி வாழ்ந்த ஒளிவுமறைவற்ற தன்மை, தத்துவத்திலும், கலைகளிலும், கல்வியிலும் அவருக்கு இருந்த தேர்ச்சி - இவை எல்லாவற்றையும் விட சொல்லும் செயலும் ஒன்றான நேர்மை - இவற்றைக் கண்டும், அவரால் பலன் அடைந்ததாகச் சொல்லுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அவரை அவர் வாழும் காலத்திலேயே கடவுளாகப் பலர் மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணதாசன், எழுத்தாளர் சாவி என்று எத்தனையோ பேரைக் காட்டலாம்.
ஆனால், இது என்னவோ புது முயற்சி போல நீங்கள் எழுதியுள்ளீர்கள். அவருக்குக் கோயில் கட்டுவதும், அவரால் நிகழ்ந்த அற்புதங்களையும் பற்றிக் கட்டுரைகள் வருவதைக் குறை சொல்லி உள்ளீர்கள்.
அதில் என்ன தவறு? கோயில் கட்டுபவர்களும், அற்புதங்கள் கதைப்பவர்களும், அவற்றைப் படிப்பவர்களும் அவரிடம் இருந்த நல்ல உயர்வான குணங்களால்தான் அந்த ஆற்றலை அவர் பெற்றார் என்று கருதுகின்றார்கள். இந்த நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படும் செயல்களால் என்ன தீமை ஏற்பட்டுவிடப் போகிறது ?
மேலும், மகாப் பெரியவர் முன்வைத்த பிற்போக்குக் கருத்துக்களை அவரது காலத்திலேயே அவரது பக்தர்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். அதை அவரே சொல்லியும் இருக்கிறார். அவரது பக்தர்கள் அவருடைய உயர்ந்த குணங்களுக்காகத்தான் அவரை மதிக்கிறார்களேயன்றி, பிற்போக்குக் கருத்துக்களுக்காக இல்லை.
அவருக்குக் கோயில் கட்டப்பட்டால், அவரைப் பிடித்தவர்கள் போகப் போகிறார்கள். அவரைப் பிடிக்காதவர்கள் போகப் போவதில்லை.
- அடுத்ததாக, மகாப் பெரியவரின்மேல் மரியாதை எனக்கு இருக்கிறது, மகாப் பெரியவரும், பெரியாரும் என்றெல்லாம் கட்டுரை எழுதி இருக்கிறேன் என்று சொல்லி உங்களது நடுநிலைமையைப் பறை சாற்றியது குறித்து.
மகாப் பெரியவரின் வாரிசு தலித்துகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். பள்ளிகளும், மருத்துவமனைகளும், சமூக சேவை அமைப்புகளும் ஏற்படுத்தினார். கலைஞர்களையும், அறிஞர்களையும் கௌரவித்தார்.
அவரைப் பின்பற்றும் பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்களை அதிகம் செய்கின்றனர். தமிழ்நாட்டுக் காவல் நிலையங்களில் உள்ள வன்கொடுமைப் புகார்கள் எதுவும் இந்தப் பார்ப்பனர்கள் மேல் இல்லை.
காஞ்சி சங்கராச்சாரியார்கள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அதற்குத் தீர்வாக ஒரு நேர்மறையான மாற்றுப் போக்கை முன்வைத்தார்கள். வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார்கள். எதையும் அழிக்கவோ உடைக்கவோ சொல்லவில்லை.
ஆனால், ஈவேரா என்ற அந்தப் பிறவி இதுவரை பேசியதில் வளர்ச்சிப் பணிகள் பற்றி ஏதேனும் பேசியிருக்கிறதா ?
தலித் பெண்கள் ஜாக்கெட் போட்டதால்தான் துணி விலை ஏறியது என்று பேசி இருக்கிறது. அதனது சாதிக்காரர்கள் தலித்துகளை ஒட்டுமொத்தமாக எரித்தபோது கண்டுகொள்ளாமல் போனது. சாதிப் புத்தி உண்டு அது மாறாது என்று வலியுறுத்தி இருக்கிறது. காசு கொடுக்காதவரைத் திட்டிப் பேசுவது, கேவலப்படுத்துவது என்ற கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தது அது. பாதிரியார்கள் இந்து மதத்தைப் பற்றி தெருக்களில் செய்த வசவை, காசு வாங்கிக்கொண்டு மேடையில் செய்து பெரும்பணம் ஈட்டியது அது. கிறுத்துவப் பாதிரிகள் பேசியதைத்தான் நானும் பேசுகிறேன் என்று சொல்லாமல், இதெல்லாம் நானே சொந்தமாக யோசித்துக் கண்டுபிடித்தக் கேள்விகள் என்று வெட்கம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் பொய் சொன்னது. அதன் வாரிசுகளும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். உன் புத்தியில் தோன்றியதைச் செய் என்று மேடையில் பேசிவிட்டு, நான் சொல்லுவதைக் கேட்கும் முட்டாள்தான் எனக்கு வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் பேசியது இந்த ஈவேரா. நாடகமாட மேடை, மேடையில் சொன்னதை செயல்படுத்தாத நடைமுறை இதுதான் ஈவேரா. அதன் மேடைப் பேச்சைப் படித்துப் பாராட்டவும் பத்து இளிச்சவாயர்கள்.
அதனது வாரிசுகள்தான் திண்ணியத்தில் மலத்தை மனிதர் வாயில் திணிக்கிறார்கள். சாதிப் பெயரில் ஓட்டு வாங்குகிறார்கள். அவர்களிடையே கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு. வன்கொடுமை சட்டத்தின் மேல் அவர்கள்மேல்தான் புகார்கள் இருக்கின்றன.
இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அதுவும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின்புதான் இந்தக் கொடுமைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஈவேரா என்பது சாதி வெறியின் கௌரவத் தோற்றம்.
அந்த மலத்தோடு, மகாப் பெரியவர் என்னும் மலரை ஒப்பிடாதீர்கள்.
நுனிப்புல் மேயாமல் சற்று விஷயங்களைத் தெரிந்துகொண்டு எழுதுங்கள்.
இப்படி அவர் செய்த எத்தனையோ “குறைகள்” அந்த மகாப் பெரியவருக்குத் தெரியாமல் போனது உங்களுக்குக் குறையாகத் தெரிவது நியாயம்தான்.
அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிற, பிறசாதியினருக்கும் மரியாதை தருகின்ற, தலித்துகளின் குடிசைகளுக்குச் செல்லுகின்ற இந்த சங்கராச்சாரியாரைக் கேவலப்படுத்துவதில் பல சடங்காச்சார பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுகூட நியாயம்தான்.
ஆனால், இப்படி தலித்துகள் உள்ளிட்ட அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கு உதவி செய்ய அமைப்புகளையும் ஏற்படுத்திய ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மேல் கிறுத்துவ அமைப்புகள் பொய்யான புகார்களைப் போட்டு அழிக்கின்றன என்பது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும்.
அவரின்மேல் உள்ள ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் போய்விட்டன. இருந்தாலும், அவர் குற்றமற்றவர் என்ற உண்மையைச் சொல்லாமல் தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. கேஸ் இழுத்தடிக்கப்படுகிறது.
அவர் மேல் உள்ள கேஸ் வாபஸ் செய்ய வேண்டும் என்றால், அவர் மடத்தில் பிராமணர்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பேரம் பேசிய இந்து பத்திரிகை அதிபர் பற்றி யாரும் பேசப் போவதில்லை. ஜனகல்யாண் அமைப்பின் சாதனைகளைப் பற்றி யாரும் பேசப் போவதில்லை.
அவருடைய நிலைக்கு இணையான ஒரு போப்பை விடுங்கள், தமிழ் நாட்டில் சிறுவர்களைப் புணரும் கிறுத்துவப் பாதிரியார்கள் மேல் இத்தகைய பிரச்சாரங்கள் தொடருகின்றனவா? வாரம் இரண்டு கொலைகளைச் செய்யும் இசுலாமிய சகோதரர்களைப் பற்றி...?
அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை. ஆதரவற்ற ஏழை கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைப்பது முற்போக்கு என்று போதிக்கப்பட்டால் அதையும் செய்பவர்கள்தான், காஞ்சி மடாதிபதியையும் கேவலப் படுத்திப் பேசி, எழுதி கைதட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்.
தீப்பொறி ஆறுமுகம் பேச்சிற்குக் கைதட்டும் மக்கள்தான் இதற்கும் கைதட்டுகிறார்கள்.
அவரைக் கேவலப்படுத்துவதோடு, அவரது வாரிசையும் குறை சொல்லி உள்ளீர்கள். அப்படி அவரது வாரிசு என்ன தவறு செய்து விட்டார் ?
மற்ற பாரம்பரிய மடங்கள் பிற்போக்குவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும்போது, ஆன்மீகப் பண்ணையார்களாக மட்டும் வாழும்போது, தலித்துகளின் குடிசைகளுக்குச் சென்ற சங்கராச்சாரியார் தற்போதுள்ள ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மட்டுமே.
அவரது ஜனகல்யாண் அமைப்பின் மூலாம் பார்ப்பனர்கள் அல்லாதவரையும் ஒன்றிணைத்து சாதிப் பாகுபாட்டின் அளவை குறைக்க முயற்சிகள் எடுத்தவர் அவர் மட்டுமே.
மற்ற ஆதீனங்களும், மடங்களும் வெறும் சாதிச் சங்கங்களாக மட்டுமே இருந்த போது அவர்களுக்கெல்லாம் சாதி மறுப்புப் போரில் முன்னோடியாக இருப்பவர் அவர் மட்டுமே.
மடத்தின் சொத்துக்களை தங்களது சுயபோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் ஆதீனங்களுக்கு நடுவில் மருத்துவமனைகளையும், கல்விக் கூடங்களையும் கட்டி தரமான கல்வியையும், மருத்துவ சேவையையும் தர ஆரம்பித்தவர் அவர் மட்டுமே.
- கடவுளாகக் காட்டப்படும் காஞ்சிப் பெரியவரின் மானுட பலவீனங்கள் பற்றிய உங்களது கருத்து பற்றி
மற்றவர்களுக்கு ஏற்பட இருக்கும் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்கச் சொன்ன காஞ்சிப் பெரியவர், தனது வாரிசு செய்த லீலைகளை முன்கூட்டியே கண்டறிந்து சொல்லி இருக்கலாமே என்று பஞ்ச் டயலாக்கோடு கட்டுரையை முடித்துள்ளீர்கள்.
இந்து மதத்தில் ஞானிகள், சக்தி மிகுந்த அதிசயங்கள் செய்த பெரியவர்கள் அத்தனை பேர் வரலாற்றையும் எடுத்துப் பாருங்கள். அவர்கள் மானுட குறைகளோடுதான் காட்டப்பட்டுள்ளார்கள். ரமணரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் கேன்சர் வந்துதான் இறந்தார்கள். மற்றவர்களது வியாதிகளைத் தீர்க்கும் புட்டப்பர்த்தி சாயிபாபவிற்கு டயபட்டீஸ் இருப்பது அவரது பக்தர்களுக்குத் தெரியும். இருந்தாலும், வியாதி தீர அவரை வேண்டுவது தொடரத்தான் செய்கிறது.
ஒழுக்கத்தின், உன்னத குணத்தின் உச்சமாக விளங்கிய ராமச்சந்திர பிரபுவை ஒரு ஹிந்து முழுமையான அவதாரமாகக் கருதவில்லை. வெண்ணை திருடிய, காதலித்த, தந்திரங்கள் செய்த கிருஷ்ணரைத்தான் அவன் முழு அவதாரமாகக் கருதுகிறான்.
ஒரு இந்துவின் எதிர்பார்ப்பு வேறுபட்டது. மானுடத் தன்மையற்ற தெய்வத்தை அவன் தெய்வமாகவே மதிப்பதில்லை. ஆனால், இதை ஒரு இந்துத்வ மனம் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில் மகாப் பெரியவரின் மானுட பலவீனமாக நீங்கள் கருதுவதை இந்து மனம் பலவீனமாகவே கருதாது. குறைகள் இல்லாதவராகவே அவரைக் காட்ட அவர் ஏசுவோ, முகம்மதுவோ இல்லை.
தவறான வாக்கிய அமைப்பு:
அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை.
சரியான வாக்கியம்:
அரசியல் செல்வாக்கு இல்லாத, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது சாதி வெறி பிடித்தவர்களுக்கு எளிமையான வேலை.
மகா பிற்போகுத்தனமான மட்டமான கூட்டம் இந்தக்கூட்டம்.
1.மாட்டுத் தொழுவத்தில் சந்திப்பது.
(விதவையாம் அட தூ)
2.வேலைக்குச் செல்லும் பெண்களின் ஒழுக்கம் பற்றிய பேச்சு.
(மனுசனாயா நீங்க?)
3.வயசான காலத்தில் தலையில் தங்கக்காசுகளை அடுத்தவர் கொட்டி விழா எடுக்க, சும்மா தேமே என்று இருந்தது.
(துறவிக்கு விழாவும் தங்கமும் தேவையா?)
அதிகம் படிக்க...
(திண்ணை பற்றிய கேள்விகளை திண்ணைக்கு அனுப்பவும்)
சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203092514&edition_id=20030925&format=html
சங்கராச்சாரியாரின் நல்ல குணங்கள்
http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/blog-post_06.html
( வழக்குப் போட வேணடும் என்றால் புத்தகம் வெளியிட்ட நக்கீரன் மீது போடலாம்)
// 1929 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் காந்தியடிகள், அப்போது அங்கு முகாமிட்டிருந்த பெரியவர் சந்திரசேகரரைப் பார்க்க விரும்பினார்.காந்தி வைசியர். அவரை மாட்டுத் தொழுவத்தில் வைத்து சந்தித்தார் பெரியவர்.அங்கு வாலாட்டிக் கொண்டு நின்ற பசு காந்தியைச் சந்தித்ததால் உண்டான தீட்டை அவ்வப்போது கழித்துக் கொண்டிருந்ததாம்.
//பெரியவர் ராமலிங்கனாரை மடத்துக்கு வரவழைத்து மண்டபத்தில் தம் கோரிக்கைகளையும் கணக்குகளையும் சொன்னார். ஈராமலிங்கனார் வடக்கு நே¢ாக்கி நிற்க,சந்திரசேகரேந்திரர் கிழக்கு நோக்கி நின்று கொண்டு சம்ஸ்கிருதத்தில் கோரிக்கைகளைச் சொன்னார். தமிழில் இன்னொருவர் மொழிபெயர்த்தார். திரும்பி வரும்போது வருவாய் அலுவலரிடம், இராமலிங்கனார் சங்கராச்சாரி ஏன் தமிழில் பேசவில்லை என்று கேட்க அதற்கு அவர், முற்பகலில் நீச பாஷையில் பேசமாட்டார். பிற்பகலில் தான்தமிழில் பேசுவார் என்று விடையளித்துள்ளார்.//
//வைசியரான காந்தியடிகளை மாட்டுத் தொழுவத்தில் வைத்துப் பேசினார். அரிசி வாங்குவதற்காக சூத்திரரான கி.ஈராமலிங்கனாரை மண்டபத்தில் வைத்துப் பேசினார்.வளர்பொழுது வேளையில் தமிழ் போன்ற நீசபாஷையில் பேசினால் அம்மொழி வளர்ந்து விடுமோ என்ற கவலையில் சம்ஸ்கிருதத்தில் பேசினார்.இ வர்தாம் சங்கராச்சாரியார்! அத்வைதம் இவர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி! பச்சைப் பார்ப்பன வெறியர் தாம் சங்கரர் தொடங்கி இன்றுவரை உள்ள சங்கராச்சாரிகள் ஏற்கெனவே பூரிசங்கரச்சாரி தீண்டாமை எனது பிறப்புரிமை என்றார்.//
//பிரதமராக இருந்தாலும் விதவை என்பதற்காக இந்திரா காந்தியைக் கிணற்றடியில் வைத்துத்திரை மறைவில் உரையாடினார் சந்திரசேகரேந்திரர்.
//ஜெயேந்திரசரசுவதியோ,வேலைக்குப்போகும் பெண்கள் விபச்சாரிகளைப் போன்றவர்கள் என்றும்,(குமுதம் நேர்காணலில்)விதவைப் பெண்களை மறுமணம் செய்வதால் எய்ட்ஸ் நோய் வரும் என்றும், விதவைப்பெண்கள் தரிசுநிலம் என்றும் கூறிவருகிறார்//
சுழியன் அவர்களே, உங்கள் கருத்துக்களுக்கு என் நன்றிகள். உங்கள் ஒவ்வொரு வரிக்கும் என்னாலும் பதில் அளிக்க இயலும், ஆனால் இப்படியே நீட்டிக் கொண்டு போவதில் விருப்பமில்லாமல் சில கேள்விகளுக்கு மட்டும் என் பதில்கள். அடுத்த வாரிசைப் பற்றி, அவரின் அதிகார ஆசை, மாநில, மத்திய ஆட்சியாளர்களுடான நட்பு, அரசியல் எல்லாம் துறவிக்கு தேவையா?
எந்த மடமானாலும், அதன் உள் விவகாரங்களில் அவரவர் சாதி, அதன் உட்பிரிவுகளுக்கு மட்டுமே அனுமதியுண்டு. தலித் குடிசைக்கு இவர் போகலாம், மடத்தின் வெளி வாசலைத் தாண்டி உள்ளே
நுழைய, அவங்க ஆட்களை விடுத்து பிறர் போக இயலுமா?
பெரியவரை கடவுளாய் நினைத்து வழிப்படுபவர்களை நானும் பார்த்திருக்கிறேன். அது
அவர்களின் தனிப்பட்ட உணர்வு. ஆனால் இப்பத்திரிக்கைகள் அவரை கடவுளாய் ஆக்குவது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு அல்லவா?
இந்த கேள்வி எல்லாம் கேட்க எனக்கு என்ன தகுதி என்றுக் கேட்டு உள்ளீர்கள்? சினிமா பார்த்து
விட்டு திராபை என்றுச் சொல்லும் சாதாரண ரசிகன் நிலையே என் நிலைமை :). வாங்கிப்படித்த
பத்திரிக்கை குறித்த என் விமர்சனம் இது,
அடுத்து எனக்கு அறவே கடவுள் நம்பிக்கை இல்லை. இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.
//மடத்தின் வெளி வாசலைத் தாண்டி உள்ளே நுழைய, அவங்க ஆட்களை விடுத்து பிறர் போக இயலுமா? //
இயலும். காஞ்சி பரமாச்சாரியாரை பலர் பல இடங்களில் சந்திருக்கிறார்கள். அவர் பொதுவாகவே ஏதாவது பசு கூடம் குளக்கரை என்கிற மாதிரி இடங்களில் இருந்து கொண்டுதான் பேட்டி கொடுத்திருக்கிறார். அதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை. பரமாச்சாரியாரின் சமுதாய கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. கல்கியும் வைத்தியநாத ஐயரும் அவருடைய கருத்துக்களில் கடுமையாக மாறுபட்டிருக்கிறார்கள். பரமாச்சாரியாரே தம்முடைய சமுதாய கருத்துக்களை பின்னாட்களில் மாற்றியிருக்கிறார். தற்போதைய காஞ்சி ஜெயேந்திரர் மீனவ குல பெண் துறவியான அமிர்தானந்த மயியை சந்தித்திருக்கிறார். பரமாச்சாரியாரோ பெண்களுக்கு ஜீவன்முக்தி கிடையாது என்றே சொல்லியிருக்கிறார். சமுதாயம் மாறுகிறது. இம்மாற்றத்துக்கான காரணிகளை எங்கே தேடுவது? சிறியனவே சிந்தித்தலன்றி வேறறியா சிறியான் ஈவெராவிலா? "1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கவுரவக்குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலை இல்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?" என்று 1972 இல் கூட தாழ்த்தப்பட்டவர்கள் படித்ததால் கூலி ஏறிவிடுகிறது என புலம்பிய நிலவுடமைசாதி வெறி பிடித்த சிறியான் ஈவெராவா? தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்ட பெண்மணி அத்வைதத்தால் உத்வேகம் அடைந்தவர். தென் தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியையும் அதனை சாக்காக வைத்துக்கொண்டு ஆதிக்க சாதியத்தின் முடைநாற்றத்தில் கொசுவாக வளர்ந்த அன்னிய மதமாற்றத்தையும் எதிர்த்த அய்யா வைகுண்டர் நம் ஆன்மிக பாரம்பரியத்தால் உத்வேகம் அடைந்தவர். எனவே காஞ்சி பரமாச்சாரியார் என்பது ஒரு passing phenomenon ஹிந்து தர்மம் அதனைக்காட்டிலும் பல மடங்கு விரிந்தது. எனக்கு தெரிந்து பாரம்பரியமாக தமிழ்நாட்டில் இருந்துவரும் இரண்டு மிகச்சிறந்த ஹிந்து ஆன்மிக பத்திரிகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இன்றைக்கும் தமிழகத்தின் மிக அதிக விற்பனை கொண்ட ஆன்மிக பத்திரிகை. அவை எதிலும் நான் சோசியப்பகுதியைக் கூட பார்த்ததில்லை. இவையெல்லாம் நுனிப்புல் மேயும் கூட்டங்களுக்கு கண்ணில் படாததில் அதிசயம் ஏதுமில்லை. இருந்தாலும் சில பாரம்பரியமான ஹிந்து ஆன்மிக இதழ்களை நான் பரிந்துரைக்கிறேன்.
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்
தர்மசக்கரம்
விவேகவாணி
//////பெட்டி கடைகளில் இத்தகைய ஆன்மீகம் வளர்க்கும் பத்திரிக்கைகளும், பெண்களுக்கான
பத்திரிக்கைகளும் கணக்கே இல்லாமல் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. ஸ்டஃப் எல்லாவற்றிலும் ஒன்றுதான். அதாவது ஆன்மீகம் என்றால் இங்க இந்த கோவில், புராணம் சொல்லும் கதை, ஒரு பயணக்கட்டுரை, கேள்விபதில், அதைத்தவிர வாசகர்களுக்குள் எது எங்கு கிடைக்கும் போன்ற விஷயங்களைப் பரிமாறிக்கொள்வது.
பெண்கள் பத்திரிக்கை என்றால் திரும்ப திரும்ப பாவக்காய் அல்வா செய் முறை குறிப்பு,
குட்டி குட்டி சமையலறை குறிப்புகள், கேள்வி பதில், வாசகர்களுக்காக நாலு பக்கங்கள், பிரச்சனைகளை கண்ணீருடன் விளக்கும் கடிதங்கள், அதற்கு வாசக, நிபுணர்கள் சொல்லும் தீர்வுகள், பாசி மணி சுவர் அலங்காரம் என அரைச்ச மாவை அரைத்தல்.////////
இதை தவிர வேறு ஏதாவது எழுதினால் நீங்கள் அனைவரும் சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவீர்களே என்று சொல்லாமல் சொல்கிறார்கள் .
"அடுத்து எனக்கு அறவே கடவுள் நம்பிக்கை இல்லை. இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்."
அய்யோ பாவம் அவங்கதான் திருப்பி திருப்பி எத்தனை தரம் தன்னை நிருபிப்பாங்க, தனக்கு கடவுள் பக்தி இல்லன்னு.
நீங்க தொடருங்க உஷா, அப்புறம் பாகற்காய் சூப்பா/ஜூசா சரியா ஞாபகம் இல்லை, அது பத்தியும் எழுதுங்க ஆனா அதுபத்தி எழுதினா நான் என்ன பெரியா பிளாக்கரான்னு கேட்டுக்க முடியாது...இத்தனை பின்னூட்டம் வராது என்ன செய்ய . விக்கற சரக்குக்குதானே மரியாதை.. வாழ்த்துக்கள் போன ஒரு வருடத்தில் எழுதிய பதிவுகளிலேயே அதிக மறுமொழி இந்தப்பதிவிற்குத்தான் என்பது கூடுதல் தகவல்.. வாழ்த்துக்கள்.. பாராட்டும் ஒரு போதைதானே...
நீங்கள் இடுகையில் துவங்கிய விஷயத்தை பற்றி முடிக்காமல் திசைதிரும்பிவிட்டீர்.
1.ஆன்மீகப் பத்திரிக்கை பற்றி அருமையாகக் கூறினீர்.
2.ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட இதழ்கள் இதுபோன்று மேலும் எழுதாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை எழுதவில்லை.மேலும்
3.ஆன்மீக இதழ் என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்று தாங்கள் கூறாதது ஏமாற்றத்தை அளித்தது.ஆக உங்கள் நோக்கம் காஞ்சி மடாதிபதியை சாடுவது மட்டுமே
நீங்கள் இடுகையில் துவங்கிய விஷயத்தை பற்றி முடிக்காமல் திசைதிரும்பிவிட்டீர்.
1.ஆன்மீகப் பத்திரிக்கை பற்றி அருமையாகக் கூறினீர்.
2.ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட இதழ்கள் இதுபோன்று மேலும் எழுதாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை எழுதவில்லை.மேலும்
3.ஆன்மீக இதழ் என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்று தாங்கள் கூறாதது ஏமாற்றத்தை அளித்தது.ஆக உங்கள் நோக்கம் காஞ்சி மடாதிபதியை சாடுவது மட்டுமே
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் - என்ற நமக்கு சொன்ன பாவத்துக்கு அந்த ஆளை கடலின் நடுவில் பாறை மீது தப்பு செஞ்ச பையனை பெஞ்சு மேல் நிற்க வைப்பது போல நிற்க வைத்திருக்கிறோம். ஆனால் நாம் நல்லவற்றை நாடுவதும் இல்லை. அல்லவற்றை நாடி சென்று வாங்கி அதனை புண்ணை சொரிந்து இன்பம் காணும் அஃறிணையைப் போல சொரிந்து சொரிந்து "புண்ணைப் பார் புண் சீழைப் பார்" என்று சொல்லிக் கொள்கிறோம். அம்மணி, இந்த மாதிரி பத்திரிகைகள் வளர்ப்பதல்ல ஆன்மிகம் இப்படிப்பட்ட பத்திரிகைகளும் இருக்கின்றன என இரண்டையும் காட்டியிருந்தால் நல்லவை நாடி இனிய சொல்லி அறம் பெருக்கும் நல்லவர் என நினைத்திருக்கலாம். ஆனால் ஊழலும் குடும்ப அரசியல் ஆபாசமும் கொண்ட தமிழக திராவிடவக்கிரங்கள் தன்னை அரசு சின்னமாக செய்து ஆபாசங்களின் சாட்சியாக்கிவிடுவார்களோ என பயத்தில் சிலையாக உறைந்து நிற்கும் பொய்யாமொழிப்புலவர், அம்மணி செய்திருக்கும் வேலைக்கும் ஒரு குறளைப் பாடியிருக்கிறார். ஆனால் சின்ன தவறு செய்துவிட்டார். "மகன் எனல் மக்கட்பதடி எனல்" என முடித்திருக்கிறார் அந்த குறளை - ஆண்பாலாக.
கருத்துக்கள் அளித்த அனைவருக்கும் நன்றி.
///ஆனால் ஒன்று இம்புட்டு சொன்னவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால், மடத்தோட பெயர் இப்படி நாறாடிக்க
விடாமல் சம்மந்தப்பட்டவர்கள் சுதாரித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?///
Excellent analysis...I don't think anyone will answer that question. If asked they may say some things are NOT said because every thing should happen according to விதி, தலைவிதி அப்படின்னு கதை விடுவானுங்க.
Keep up your good work.
அன்புடன்
ஆட்டையாம்பட்டி அம்பி
அருமையான கருத்துக்கள் சுழியம் அவர்களே, நான் படிச்சுட்டு மனம் நொந்து போய்விட்டேன், பின்னூட்டம் இட மனமில்லாமல், என் மன ஓட்டத்தைப் பிரதிபலித்துள்ளீர்கள். உஷா இந்தப் பின்னூட்டத்தை வெளியிடுவாங்களா தெரியலை. உண்மையில் அரவிந்த நீலகண்டன் பரிந்துரைத்திருக்கும் ஆன்மீகப் புத்தகங்கள் அருமையானவை. பொள்ளாச்சி மஹாலிங்கம் அவர்களின் ஓம்சக்தியும் அருமையாக இருக்கும், என்றாலும் உஷா குறிப்பிட்டிருக்கும் பத்திரிகைகளையும் வாங்கத் தான் செய்கிறோம். குமுதம், விகடன்,குங்குமம் போன்ற பத்திரிகைகள் தவிர. ஆன்மீகமே நம் நாட்டின் ஆன்மா. அது தொலைந்ததினாலேயே, பள்ளிகளில் நல்லொழுக்கங்களைப் போதிக்கும் கல்வி இல்லாததினாலேயே இன்று சமுதாயமும், குடும்ப அமைப்பும் சீரழிந்து கொண்டிருக்கிறது.
ஒழுக்கத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. மன சாட்சி இருந்தால் மட்டும் போதும்.
தவறு செய்து விட்டு அதற்க்கு பரிகாரம் தேடத்தான் ஆன்மிகம் தேவை. இல்லை இல்லாத கடவுளை நினைத்து அதனிடம் எல்லவிதமான கோரிக்கைகளை வைப்பது. இதற்க்கு தான் ஆன்மிகம் தேவை. இது தான் எல்லா மதத்தினரும் பின்பற்றும் ஆன்மிகம்.
நாட்டில் 99 % ஆன்மீகவாதிகள் தான். அவர்கள் தான் எல்லா ஜெயிலிலும் இருக்கிறார்கள். அங்கு கோயிலும் இருக்கிறது!
கீதா, நான் தனிப்பட்ட தாக்குதல், ஆபாச பின்னுட்டங்கள் மட்டுமே பிரசுரிக்க மாட்டேன்.
நாம் சார்ந்த சமயம் என்று வரும்பொழுது, மனசு குறுகிப்போய்விடுகிறது. மதங்களை
கடந்த, ஆனமீகத்தில் இதுதான் கடவுள் என்ற உருவகமும் இல்லை. எண்ணங்கள் மேம்படும்
என்பது என் கருத்து. இது தனிப்பட்ட உண்ரவாய் இருந்தால் சரி. இல்லை என்றால் ஆனால் அதுவே புதிய மதமாகவும் மாறும் அபாயமும் உண்டு:-)
//கீதா, நான் தனிப்பட்ட தாக்குதல், ஆபாச பின்னுட்டங்கள் மட்டுமே பிரசுரிக்க மாட்டேன்.//
நீங்க சொல்லி இருப்பது ரொம்ப சரியே, இதையே உங்க பதிவுகளை எழுதும்போதும் கடைப்பிடித்திருக்கலாமோ என்பதுதான் எனக்கு வருத்தம். ஒருத்தர் மேல் சேற்றை வாரித்தூற்றுவது ரொம்ப சுலபம். பின்னால் உண்மை நிலை தெரியும்போது மனம் வருந்தும்! அதைத் தவிர்த்திருக்கலாமோ?? :(((((((((((((((((
கீதா, இப்பதிவு பெரியவரை இகழும் நோக்கத்துடன் எழுதப்படவில்ல். அவரை கடவுளாக்கும்
அபத்ததுக்கு ஒரு எதிர்குரல் மட்டுமே
அவரை கடவுளாக்கும்
அபத்ததுக்கு ஒரு எதிர்குரல் மட்டுமே //
பலவீனமான குரல் உஷா, அவர் ஏற்கெனவே பலருக்கும் நடமாடும் கடவுளாகவே இருந்திருக்கிறார், இருந்தார், இனியும் இருப்பார். இவை நம்பிக்கை, உணர்வு, உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவரவரே அநுபவித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆகவே நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :((((((((((
மரத்தடி கால நண்பரான உங்களை நேற்று நேரில் சந்தித்தது மகிழ்ச்சி.
- சிமுலேஷன்
//பலவீனமான குரல் உஷா, அவர் ஏற்கெனவே பலருக்கும் நடமாடும் கடவுளாகவே இருந்திருக்கிறார், இருந்தார், இனியும் இருப்பார். //
ஒரு மனிதன் சமூகத்தின் மீது, சக மனிதர்கள் மீது, பெண்கள் மீது காட்டுகின்ற காழ்ப்புணர்வுகளை, சாதி இந்துத்துவத்தை, வருணாசிரம தர்மத்தை ஆதரிப்பதையும் மீறி அவரை கடவுளாகத்தான் நினைப்பேன் என்று நீங்கள் சொல்வது ஆச்சர்யமாய் இருக்கிறது.
குறைந்தபட்சம் கடவுளாய் கண்மூடித்தனமாய் ஏற்றி விடுகிறார்களே என்ற அங்கலாய்ப்பே தனி மனித தாக்குதல் என்றும், வலிக்கிறது என்றும் சொல்லும் நீங்கள் அந்தாளு உதிர்த்த கருத்துக்களால் தாக்கப் பட்டவர்களுக்கும் வலிகளோ, உணர்வுகளோ இல்லை என்று நினைக்கிறீர்களா?
அவர் உதிர்த்த, கடைபிடித்த சில கொள்கைகளுக்ககவே அந்தாளை மனிதனாய் கூட மதிப்பிடாமல் போகச் சொல்லலாம். தப்பே இல்லை.
கீதா,
வீரமணி என்ற ஒருவர் இருந்தார். அவர் சென்னை மீனவ பகுதி மற்றும் அவரை அண்டி வாழ்ந்தவர்களுக்கு தெய்வத்திற்கும் மேலனவராகக் கருதப்பட்டார். கடவுளாகவே இருந்திருக்கிறார், இருந்தார், இனியும் இருப்பார். இவை நம்பிக்கை, உணர்வு, உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவரவரே அநுபவித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஆனால் கடைசியில் போலிஸ் அவரை என்கவுட்டரில் போட்டுவிட்டது.
ஒரு கும்பலுக்கு ஒருவர் தெய்வமாக இருக்கிறார் என்பதற்காக ஒருவரை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்றால் உலகில் யாரும் யாரையும் எதுவும் சொல்ல முடியாது.
**
இவரின் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டு இருக்கும்போது இந்த திரு. சந்திரசேகரன் குத்தவைத்துக் கொண்டு வர்ணம் நல்லது என்று அருள் வாக்கு கொடுத்துக் கொண்டு இருந்தார்.
**
சாமியார்ப்பயல்களால் எந்த சமுதாய சீர்திருத்தமும் வந்தது இல்லை. பெண்கள் வேலைக்குப்போவதை கிண்டல் செய்தவர்கள்தான் இந்த மடவாதிகள்.
உடன்கட்டை இருந்த காலத்தில் இந்த மடங்கள் இருந்தது. ஆனால் மடங்கள் ஒன்றும் செய்யவில்லை அதைத் தடுக்க. ஆனால் இந்த திரு. சந்திரசேகரன் குத்தவைத்துக் கொண்டு விதவையைப் பார்க்க மாட்டாராம். உடன்கட்டை தடுக்கப்பட்டு, பெண்ணே பிரதமராக இருந்தகாலத்தில் விதவையைப் பார்ப்பது தவறு என்று வாழ்ந்தவ சமூக ஆன்மிகவாதி.
என்ன கொடுமை .
இவர் சில குழுவிற்கு தலைவராக கடவுளாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவரின் செயல்களை விமர்சிக்கக்கூடாது என்பது சரியல்ல.
**
நந்தா,
உங்களின் பதிலும்
//அவர் உதிர்த்த, கடைபிடித்த சில கொள்கைகளுக்ககவே அந்தாளை மனிதனாய் கூட மதிப்பிடாமல் போகச் சொல்லலாம். தப்பே இல்லை.//
எனது எண்ணங்களும் ஒத்துப்போவதும், ஒரே சமயத்தில் வந்துள்ளதும் ஆச்சர்யாமய் உள்ளது. :-)))
**
இந்த திரு. சந்திரசேகரன் சும்மா குத்தவைத்துக் கொண்டு கடைசிக் காலத்தில் தன் தலையில் தங்கக்காசுகளை பிறர் கொட்ட வேடிக்கை பார்த்தவர்.
துறவு என்பது தலையில் தங்கக்காசு கொட்ட விழா எடுப்பதா? கொடுமை....
**
மிகவும் பிற்போக்குத்தனமான சமூதாய விரோதக் கொள்கைகளுக்கு பெயர்போன இந்தமடத்திற்கு ஆதரவாய் இருப்பவர்கள் யார்?
வர்ணத்தின் மேல் அடுக்கில் உட்கார்ந்து கொண்டு இன்னும் பெண்கள் மாத இரத்தப் போக்கு காலத்தில் கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்லும் அறிவாளிகள்தான்.
இந்த மாதிரி கருத்துள்ளவர்களுக்கு அவர் கடவுளாய் தெரிவதில் வியப்பில்லை.
**
பிக்பாக்கெட் காரர்களுக்கு சம்பல் கொள்ளைகார தலைவர்கள் கீரோக்கள்தான்.
:-(((
.
கீதா,
ஒரு சேரியில் பிறந்து, அடுத்தவர்களால் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்பட்டு சாப்பாட்டிற்காக பொதுக் கக்கூசைக் கூட்டிக் கழுவி அந்தக் கக்கூசிற்கு அருகிலேயெ அமர்ந்து உணைவையும் சாப்பிட்டு விட்டு , பலரால் கேவலப்படுத்தப்பட்டு அவமானமடைந்து , குழந்தைகளுக்க்காக அதைச் சகிக்த்துக் கொண்டு இருப்பது வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவரவரே அனுபவித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
அப்படி பிறப்பால் வரும் வர்ண அடுக்கையும் அது சொல்லும் குலத்தொழிலையும் அடுத்த தலைமுறையில் கூட மாறிவிடக்கூடாது என்று எண்ணி சிலாகித்து அப்படியே இருத்தல் நல்லது என்று நம்பியவர் செயல்பட்டவர் இவர்.
***
ஜிம்மி கார்ட்டர் என்பவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி. அவர் இந்தியாவிற்கு வந்து கட்டிட சித்தாள் வேளை செய்தார். http://www.habitatindia.in/jimmi_carter.html
மக்களுக்காக நேரடிப் பங்கு.
மடவாதிகள் சேரிக்கு வந்து சாக்கடை அள்ளுவர்களா? நெய் சாப்பிட்டுவிட்டு வர்ணம் நல்லது என்று சொல்வதற்கு கடவுள் தேவை அல்ல.
***
தலையில் தங்காக்காசைக் கொட்டி விழா கொண்டாடியவர் இப்போது இல்லை. அவரின் வழி வந்த உயர்திரு இருள் நீக்கி சுப்பிரமணியும், அவரிக் கடவுளாகப் பார்க்கும் நீங்களும் வர்ணம் சரி என்று சொல்லும் வேதங்களை தீயில் போட்டு எரிக்கத் தயாரா?
***
இவர் சமூகத்திற்கு செய்த ஒரு நல்ல செயலைச் சொல்லுங்கள். உங்களுக்கு மட்டும் நல்லது செய்தார் என்று சொல்வீர்களேயானால்... ஆம் அயோத்தியா குப்பம் வீரமணி அவர்கள் குப்பத்திற்கும் மட்டும் நல்லது செய்தார்.... சோ வாட்?
:-(((
.
(இரண்டு பகுதிகளா பின்னூட்டம் இடுகிறேன்):
பகுதி 1:
முதல்ல உஷாவின் பதிவைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியதை ஏற்கனவே சொல்லியாச்சு: //எதுக்கு உஷா இதுல போய் நேரத்தை விரயம் செய்றீங்க? ப்ளாகு படிங்க//. மேய்வது நுனிப்புல் தான், உண்மையான ஆன்மிகப் பத்திரிகைகள் பலவும் படிச்சதில்லைன்னும் ஒப்புக் கொண்டிருக்காங்க. (ஊர்ல இருந்த வரை, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், விவேகவாணி கையில கிடைச்சப்ப எல்லாம் படிச்சிருக்கேன்).
இப்படி சொல்வதுக்கு எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை: கீதாம்மா கிட்ட, பெண்கள் மது அருந்துவதிலோ, பாருக்குப் போவதிலோ தப்பு இல்லை, அப்படித் தப்புன்னு சொல்வதுக்கு யாருக்கும் (பெண்களுக்குமே) உரிமை கிடையாதுன்னு சண்டை போட்டிருக்கேன். நான் விரும்பிச் செய்வதை நான் பெண் என்பதற்காக செய்யக் கூடாதுன்னு ஏன் சொல்லணும்?
அதே போல, உஷாவை ஒருவர் தவறாகச் சொன்னார் என்று எனக்குத் தோன்றிய போது, அந்த் ஒருவரே சொன்னாப் போல் அவங்க பதிவிலும் இவங்க பதிவிலும் கு$ விட்டுருக்கேன்.
ஆன்மிக உணர்வுகள் பற்றீ இங்கே எழுதியிருக்கும் எவருமே, மற்ற பதிவர்கள் மேல (பார்ப்பன சாதி பற்றியில்லாமல்) நேரிடையாக இப்படி எழுதுவீங்களா? "கெக்கெ பிக்குணி பதிவுகள் போரடிக்குது". "கெ.பி. முகமும் கோணல், முற்றும் கோணல்".... இல்லை, கருணாநிதி, ஜெயலலிதா பற்றி உங்கள் உண்மையான உணர்வுகளை எழுதுவீங்களா? எப்படி ஊருக்கு இளைச்சவன் மசூதி ஆண்டியாகவோ, சர்ச்சிலோ இல்லாமல், பிள்ளையார் கோயிலில் பிச்சைக்காரனா மட்டும் இருக்கான்?
நான் கேக்கிறதுக்கு கூட மத்தவங்க பதில் சொல்லாம உரியவர்கள் மட்டுமே மறுமொழி கொடுக்கணும். தயவு செஞ்சு.
உஷா: //மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால்//இதை இன்னும் விளக்க வேண்டும். லீலைகள் என்று எவற்றைச் சொல்கிறீர்கள்? அப்படி"யாம்" என்றில்லாமலே குறிப்பிட்டு நிரூபிக்கப் படக் கூடியதை எழுத வேண்டும்.
பகுதி 2:
நான் கேக்கிறதுக்கு கூட மத்தவங்க பதில் சொல்லாம உரியவர்கள் மட்டுமே மறுமொழி கொடுக்கணும். தயவு செஞ்சு.
நந்தா: (1) //ஒரு மனிதன் சமூகத்தின் மீது, சக மனிதர்கள் மீது, பெண்கள் மீது காட்டுகின்ற காழ்ப்புணர்வுகளை// இது ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டு அரசாளும் பேய்களுக்கும் சரியாக வரும். இல்லை என்று எடுத்துக் காட்டுங்கள். (2) //அவர் உதிர்த்த, கடைபிடித்த சில கொள்கைகளுக்ககவே // காந்தியும் பெரியாரும் கூட இப்படி உதிர்த்திருக்கிறார்கள். அவற்றைப் படித்தும் கூட (சாதி பற்றி இருவரும் சொல்லி விட்டுப் பின்னால் பேச்சை மாற்றியது, பெரியாரின் திருமணம் என் சொந்த வாழ்வில் நான் போராடியதற்கு எதிர்மாறானது), இன்னமும் இவர்கள் இருவரையுமே எம்மை வாழ்விக்க வந்த எம்மான்களாகவே இருவரையும் கருதுகிறேன். இவர்கள் இருவரின் குறிப்பாக பெரியாரின் பச்சோந்தித் தனம் பற்றி உங்கள் கருத்து என்ன?
கல்வெட்டு: //ஒரு சேரியில் பிறந்து, அடுத்தவர்களால் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்பட்டு சாப்பாட்டிற்காக பொதுக் கக்கூசைக் கூட்டிக் கழுவி அந்தக் கக்கூசிற்கு அருகிலேயெ அமர்ந்து உணைவையும் சாப்பிட்டு விட்டு // நான் சேரியில் பிறக்கவில்லை; சேரி பக்கத்திலேயே தகரக்குடிசையில் வளர்ந்தேன். மாதவிலக்கின்போது நீங்கள் சொன்ன மற்ற எல்லாம் பட்டிருக்கிறேன் இப்போது இருக்கும் அதே வீறு கொண்டெழும் உணர்வுகளோடு. அன்பாலே போராடி என் வழிக்கு மற்றவர்களை மாற்றியிருக்கிறேன் (மாமியாரையும்). என் அம்மாவுக்காக எனக்கு விருப்பமில்லாத இடங்களூக்கும் போயிருக்கிறேன், எந்த அவமானத்தையும் ஏற்றிருக்கிறேன், அந்த நியாயங்களோடு கேட்கிறேன்:
1. நீங்கள் உங்களுக்கு உவக்காத மற்றவர்க்ளின் பின்னூட்டங்களிலிருக்கும் பாலை (நீர் இல்லாமல், அன்னப் பறவை போல) அருந்த மாட்டீர்களா? அரவிந்தன் நீலகண்டன், சுழியம் எழுதியதைப் படிக்கவில்லையா? காந்தி, பெரியார் போல் பின்னால் பேச்சு மாற்றிய //வகையில் மகாப் பெரியவரின் மானுட பலவீனமாக நீங்கள் கருதுவதை இந்து மனம் பலவீனமாகவே கருதாது. // இது உணர்வு தொடர்புள்ளது. மானாட மயிலாட ஒருவர் அவையிலே பொதுப் பணத்தை செலவழிப்பதற்கும், கோவில் பணத்தில் பாலாபிஷேகத்துக்கும் என்ன வேறுபாடு? பின்னதை மட்டும் இல்லாமல், முன்னதையும் பழியுங்களேன், ஒரு பெரிய பதிவில்?
2. கேனையன், காது, கேப்பைன்னு நினைச்சு கேக்கிறீங்களா: //இவர் சமூகத்திற்கு செய்த ஒரு நல்ல செயலைச் சொல்லுங்கள்// //தலித்துகளின் குடிசைகளுக்குச் சென்ற...//, //ஜனகல்யாண் அமைப்பின் மூலாம் பார்ப்பனர்கள் அல்லாதவரையும் ஒன்றிணைத்து // இவற்றை மறுக்காமல் நீங்கள் எழுதியிருப்பதால், இவற்றை படிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
நான் காணும் வண்ணங்கள் மட்டுமே நீங்களும் காண ஓடி வாங்கன்னு சொல்றது கூட பதிவர்களின் பலவீனம்னு ஓரளவு தாங்கிக்கலாம். எல்லாம் குனிஞ்சிட்டே வரிசையிலே வாங்க, குட்டு வாங்கிட்ட்ட்ட்ட்ட்ட்டே இருங்கன்னு சொல்லும் போது கோபம் தான் வருது.
@கல்வெட்டு,
@நந்தா,
@கெபி, எல்லாருக்கும் என் கிட்டே பதில் இருக்கு, ஆனாலும் மீண்டும் மீண்டும் முடிவற்ற விவாதங்களையே வளர்க்கும் என்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
//இப்படி சொல்வதுக்கு எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை: கீதாம்மா கிட்ட, பெண்கள் மது அருந்துவதிலோ, பாருக்குப் போவதிலோ தப்பு இல்லை, அப்படித் தப்புன்னு சொல்வதுக்கு யாருக்கும் (பெண்களுக்குமே) உரிமை கிடையாதுன்னு சண்டை போட்டிருக்கேன். நான் விரும்பிச் செய்வதை நான் பெண் என்பதற்காக செய்யக் கூடாதுன்னு ஏன் சொல்லணும்?//
ஆனால் கெபி,
ஒன்றே ஒன்று மட்டுமே சொல்லிக்கிறேன், கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் தான் விழுவேன் என்றால் யாராலும் காப்பாற்ற முடியாது. இதிலே பெண்களுக்கு உரிமை இருக்கிறதாயும், இதனாலேயே பெண்ணின் உரிமைகள் காக்கப் படுவதாயும் எனக்குத் தோணலை. ஆண்களின் சுயநலத்திற்குப் பயன்படும் என்பதைத் தவிர வேறு எதுவும் இதில் இல்லை.
//ஆண்களின் சுயநலத்திற்குப் பயன்படும் என்பதைத் தவிர வேறு எதுவும் இதில் இல்லை.// என் தலைமுறையில் நடைமுறையில் இல்லை.
என் சார்பற்ற நிலைப்பாட்டைக் காட்டத் தான் எழுதினேன், கீதாம்மா. பதிவுக்கும் இதுக்கும் மற்ற தொடர்பில்லை. வேறு களத்தில் அதைப் பற்றிப் பேசுவோம்.
ஏனையோருக்கு: "சார்பற்று ஆழப் படித்து அறிந்து எழுதவும். இல்லையென்றால் மொக்கை என்றே தைரியமா ஒப்புத்துகிட்டு, போயிட்டே இருக்கலாம்" - என்பதைச் சொல்ல வந்தேன். தெளிவாச் சொல்லலை என்றால் மன்னிக்க.
கெக்கே பிக்குணி,
# 1. //இது உணர்வு தொடர்புள்ளது. மானாட மயிலாட ஒருவர் அவையிலே பொதுப் பணத்தை செலவழிப்பதற்கும், கோவில் பணத்தில் பாலாபிஷேகத்துக்கும் என்ன வேறுபாடு? பின்னதை மட்டும் இல்லாமல், முன்னதையும் பழியுங்களேன், ஒரு பெரிய பதிவில்?//
ஒரு வேறுபாடும் இல்லை. அவனவன் அவன் மனம் விரும்புவதற்கு செலவழிக்கிறான். எனது பதிவின் பின்னூட்டங்களைப் பாருங்கள். "மானட மசிராட" என்றே சொல்வேன். அந்த அளவிற்கு அதை விமர்சித்துள்ளேன்.
சந்திரசேகரிடம் இருக்கும் மரியாதையின் அளவே இந்த நிகழ்ச்சியுயிலும் உள்ளது.
****
#2. கேனையன், காது, கேப்பைன்னு நினைச்சு கேக்கிறீங்களா: //இவர் சமூகத்திற்கு செய்த ஒரு நல்ல செயலைச் சொல்லுங்கள்//
//தலித்துகளின் குடிசைகளுக்குச் சென்ற...//
மனிதன் எப்படி தலித் ஆனான்?
வர்ணம் வேண்டும் என்று கருத்துச் சொல்லி அந்த வேதத்தைக் காப்பார். அதே வர்ணத்தால் ஒருவனை தலித்தாக்கி ..அதாவது அடிக்க அருவளும் செய்து கொடுத்துவிட்டு அடிவாங்கியபின் போய் பார்ப்பதா?
வர்ணம் சொல்லும் வேதத்தை தவறு என்று முதலில் சொல்லட்டும். நீஙகள் தலித் என்று அடையாளப்படுத்த தேவையே இல்லை. வேதம் காக்க மடமும் தேவை இல்லாமல் போகும்.
//ஜனகல்யாண் அமைப்பின் மூலாம் பார்ப்பனர்கள் அல்லாதவரையும் ஒன்றிணைத்து //
யார் பார்ப்பனர்கள் ? எப்படி பார்ப்பனர்கள் ஆனார்கள் .நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
**
#3 //நீர் இல்லாமல், அன்னப் பறவை போல) அருந்த மாட்டீர்களா?//
அயோத்தியாகுப்பம் வீரமணி, மும்பையில் குண்டு வைத்த கசாப் இவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் நீங்கள்
ஏற்று அவர்களை நீங்கள் பாராட்டி அல்லது கடவுளாக்கி நீங்கள் கட்டுரை எழுதும் போது நானும் வர்ண மடாதிபதிக்கு பாராட்டு கட்டுரை எழுதுகிறேன்.
அது போல் நான் சொன்னதில் நல்லது ஏதாவது இருந்தால் அதை மட்டும் எடுத்து மற்றதை விலக்கிச் செல்லும் மாதிரி அன்னப்பறவையாக நீங்கள் இருந்திருந்தால் " கேனையன், காது, கேப்பைன்னு" என்று உணர்ச்சிவசப்படமால் எனது கருத்தை குப்பையாக நினைத்து போயிருக்கலாம். எடுத்துக்காட்டாய் இருங்கள். பழமொழிகள் வேண்டாம்.
கேள்வி..
-வர்ணம் நல்லது .
-பிறப்பின் வழி வந்த வர்ண வேறுபாடு இருக்க வேண்டும் என்று ஒருவன் சொல்கிறான்.
-வேலைக்குப் போகும் பெண்கள் விபச்சாரிக்கு சமமானவர்கள் என்றும் சொல்கிறான்.
கெக்குப்பிக்கு கேணி அவர்களே நீங்கள் அவனை என்ன செய்வீர்கள்?
இவன் சொல்லும் கருத்தை விட்டுவிட்டு கும்பிடுவீர்களேயானால், கசாப்பையும் கும்பிடுங்கள்.
**
உயர்திரு மடாதிபதி அவரது வர்ண நம்பிக்கையை எப்படி சாகும்வரை விடவில்லையோ அது போல கசாப்பும் நம்பிக்கையை இன்னும் விடவில்லை. குண்டு வைக்கும் நோக்கம் சார்ந்த ஏதோ ஒரு அவருக்கான நியாயத்தை குற்றமா ஏற்கவில்லை. நினைத்து வருந்தி அழுகவில்லை.
வர்ணம் அவசியம் என்று சொல்லிவிட்டு கொஞ்சம்கூட வருத்தம் இல்லாமல் இருந்தவர்கள் போலவே காசாப்பும் இருக்கிறார்.
நீங்கள்தான் அன்னப்பறவையாயிற்றே. எந்தக் குற்றவாளியிடமும் ஏதோ ஒரு நல்லது தேடினால் கிடைக்கும். அதை மட்டும் எடுத்து நீங்கள் தீர்ப்ப்பு வழங்கலாம்.
**
//கருணாநிதி, ஜெயலலிதா பற்றி உங்கள் உண்மையான உணர்வுகளை எழுதுவீங்களா?//
??
நான் அரசியல்,சமூகம் பற்றி செய்துள்ள விமர்சனங்களை தேடிப்படியுங்கள்.
இந்த ஆள் செய்வது மடத்தனம் என்றால், ஏன் அவர் செய்யவில்லையா இவர் செய்யவில்லையா என்பது போல் கேட்கிறீர்கள்.
இது அரசியல் கட்சிகள் ஊழலின்போது அவர் மட்டும் ஒழுங்கா என்று கேட்பது போல் உள்ளது.
"கடவுள் மறுப்பு பேசும் முதல்வர் கருணாநிதியும் சுயநலவாதி. . வர்ணம் பேசிய மடாதிபதி சந்திரசேகரும் சுயநலவாதி"
நான் சொல்லிவிட்டேன்.
எங்கே நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள்.
.
நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கவில்லை. எனது கருத்தைச் சொன்னேன். அன்னமாக நீங்கள் இருந்து, நல்லது ஏதும் எனது பதிலில் தெரியாத போது பதில் சொல்லி உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம்.
.
கீதா,
//ஒன்றே ஒன்று மட்டுமே சொல்லிக்கிறேன், கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் தான் விழுவேன் என்றால் யாராலும் காப்பாற்ற முடியாது.//
உண்மை ஏற்றுக் கொள்கிறேன்.
நிச்சயம் கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் தான் விழுவேன் என்று சொல்பவர்களைக் காப்பற்ற முடியாது.
.
என் தலைமுறையில் நடைமுறையில் இல்லை//
இல்லை என நிரூபிக்க எத்தனையோ இருக்கு, என்றாலும் இப்போத் தான் வேறொரு விவாதத்தில் கலந்து கொண்ட அலுப்பு, களைப்பு, அதோடு இந்தத் தளமும் நீங்க சொல்றாப்போல் இதுக்கு ஏற்றதல்ல. பிறிதொரு சமயம் பேசுவோம். நன்றி கெபி, மற்றும் பொறுத்துக்கொள்ளும் உஷாவுக்கும்.
//பார்ப்பனர்கள் வங்கொடுமையில் ஈடுபடுவதில்லை...அதிக அளவில் கலப்பு திருமணம் செய்கின்றனர்//.....
சக மனிதனை நூற்றாண்டு காலமாக இழிவு படுத்தி, தாழ்த்தி வரும் கொடுமைக்கு நிகராக வேறு எதையும் ஒப்பிடவே முடியாது. அதிக அளவில் கலப்புத் திருமணம் செய்யும் மனம் உயர்ந்த மனிதர்கள், மனைவியையும் இன்னும் வீட்டு வராந்தாவில் தன் வசிக்க வைத்துள்ளனரா? எல்லா சாதியினரிடத்தும் வர்ணாசிரமக் கொள்கைகள் இருந்ததை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பார்ப்பனர்கள் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே 90% மாறி விட்டனர்.
மென்பொருள் துறையில் வேலை பார்த்தாலும் கூட ஒன்றாய் அமர்ந்து உணவருந்தும் போது தப்பித் தவறி கூட பார்ப்பனர் அல்லாதவரின் சோற்றுப் பருக்கை கூட அருகில் விழுந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்ளும் நிலை இன்றும் இருக்கிறது. கேள்விப் பட்டதைப் பேசவில்லை. அனுபவத்தையே சொல்கிறேன். உஷா என்ன கூறினார் என்பது இருக்கட்டும். ஒரு பார்ப்பன குருவை சின்னதாய் விமர்சனம் செய்ததற்கே, ஒட்டு மொத சாதிக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றீர்களே, எத்தனை காலமாய் எம் மக்களை நீசர்கள் என்று கூறி, கேவலப் படுத்தி, நாங்கள் வளர்ந்து வரும் இந்த கணிணி யுகத்திலும் அதைத் தொடர்ந்து வரும் உங்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் எவ்வளவு பெரியதாய் இருக்கும்?
//பார்ப்பனர்கள் வங்கொடுமையில் ஈடுபடுவதில்லை...அதிக அளவில் கலப்பு திருமணம் செய்கின்றனர்//.....
சக மனிதனை நூற்றாண்டு காலமாக இழிவு படுத்தி, தாழ்த்தி வரும் கொடுமைக்கு நிகராக வேறு எதையும் ஒப்பிடவே முடியாது. அதிக அளவில் கலப்புத் திருமணம் செய்யும் மனம் உயர்ந்த மனிதர்கள், மனைவியையும் இன்னும் வீட்டு வராந்தாவில் தன் வசிக்க வைத்துள்ளனரா? எல்லா சாதியினரிடத்தும் வர்ணாசிரமக் கொள்கைகள் இருந்ததை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பார்ப்பனர்கள் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே 90% மாறி விட்டனர்.
மென்பொருள் துறையில் வேலை பார்த்தாலும் கூட ஒன்றாய் அமர்ந்து உணவருந்தும் போது தப்பித் தவறி கூட பார்ப்பனர் அல்லாதவரின் சோற்றுப் பருக்கை கூட அருகில் விழுந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்ளும் நிலை இன்றும் இருக்கிறது. கேள்விப் பட்டதைப் பேசவில்லை. அனுபவத்தையே சொல்கிறேன். உஷா என்ன கூறினார் என்பது இருக்கட்டும். ஒரு பார்ப்பன குருவை சின்னதாய் விமர்சனம் செய்ததற்கே, ஒட்டு மொத சாதிக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றீர்களே, எத்தனை காலமாய் எம் மக்களை நீசர்கள் என்று கூறி, கேவலப் படுத்தி, நாங்கள் வளர்ந்து வரும் இந்த கணிணி யுகத்திலும் அதைத் தொடர்ந்து வரும் உங்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் எவ்வளவு பெரியதாய் இருக்கும்?
உங்களது ஆன்மீக தகவல்கள் அனைத்தும் அருமை. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/spiritual என்ற இணையதள முகவரியை பார்த்தேன். அதில் ஆன்மீக தகவல்கள். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.
Post a Comment
<< இல்லம்