Sunday, June 06, 2010

இ.பாவின் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விழா.

கிழக்கு பதிப்பகம் பத்ரியின் பதிவில் பார்த்த பிறகு, மெயில் பாக்சிலும் அழைப்பு இருந்தது.
பத்ரியின் பயமுறுத்தல் நினைவுக்கு வந்து, பிரசன்னாவுக்கு மெயில் போட்டேன். இதையே
அழைப்பாய் வைத்துக் கொள்ளலாமா என்று. ஓ.கே என்று வந்தது.

என் பதினென்மங்களில் என் வயது தோழியர் மாய்ந்து மாய்ந்து ரமணிசந்திரன் வாசித்துக் கொண்டு இருந்தப் பொழுது குருதி புனலும், மாயமான் வேட்டையும், தந்திர பூமியும் என்னை கவர்ந்தன. இ.பா வின பல கதைகளில் வரும் சொல் "சினிக்" அதன் பொருளே தெரியாமல் வீட்டில் சினிக் என்று யாரையோ சொல்ல அப்பா திட்டியது நன்றாக நினைவுள்ளது.

என்னை மிக கவர்ந்த எழுத்துக்காரர்களில் முதல் இடம் இ.பா தான். எழுத்தில் இருக்கும் ஸ்மார்ட்னஸ், "கிருஷ்ணா கிருஷ்ணா" வில் பல இடங்களில் புன்னகை பூக்க வைக்கும்.

வெந்து தணிந்த காடுகள்,வேதபுரத்து வியாபாரிகள் (வீட்டுக்கு ஆட்டோ/ சுமோ வரவில்லையா சார்?) வேர் பற்று, ஏசுவின் தோழர்கள் என தேடி தேடிப் படித்தேன். இப்பொழுது , 600 ரூ மதிப்புள்ள புத்தகம், 150 ரூபாய்க்கு முழு சிறுகதைத் தொகுப்பு, பதிவு செய்தாகிவிட்டது. கூரியரில் வருமாம் காத்திருக்கிறேன்

நிகழ்ச்சி மிக மிக நன்றாக இருந்தது. மிக முக்கியமாய் திருப்பூர் கிருஷ்ணன் சொன்ன கதை. அப்படியே விஷூவலாய் பார்க்க வைத்து விட்டார். கடைசியாய் அஸ்வதாமாஎன்ற
கதையைச் சொன்னவரும் , தத்துவார்த்தமாய் மிக நன்றாக அலசினார்

எஸ். ஆர். மது அவர்களின் ஆங்கில அறிமுகம் தமிழ் எழுத்தாளரின் தமிழ் புத்தக
வெளியிட்டு விழாவுக்கு தேவையா என்ற கேள்வி எழுந்தது. இதை தவிர்க்க வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள். புத்தகம் தமிழில், வந்திருந்த அனைவருக்கும் தமிழ் தெரியும். அவருக்கு தமிழ் தெரியாது என்றால் அவர் பேச்சை மொழிப் பெயர்க்க செய்திருக்க வேண்டும்.

அடுத்து எழுந்த நடிகர் சிவகுமார், தனக்கு எதிலும் பற்று இல்லை. புகழ், பணம், காதல், பெண் எதிலும் விருப்பமில்லாமல் சாமியாராக போகும் எண்ணம் இருந்தது என்று சொல்லிவிட்டு, உச்சி வெய்யில் என்ற கதையை மறுப்பக்கம் என்ற பெயரில் சேதுமாதவன் இயக்கிய படத்தைப் பற்றியும், படக் கதையையும் சொன்னார். (எனக்கு படத்தில் நினைவிருந்தது ராதா மட்டுமே) அடுத்து சம்மந்தமில்லாமல் தன் கம்பராமாயண காவியத்தைப் பற்றி விலாவாரியாய் எடுத்துரைத்து விட்டு, விழாநாயகனை வாழ்த்தி ஒரு வரி சொல்லிவிட்டு அமர்ந்தார்.

விழாவில் தென்பட்ட ஹைகிளாஸ் அம்மணிகள் கூட்டம் ஆச்சரியத்தை அளித்தது. குடும்ப விழா போல, இவர்கள் எல்லாம் தமிழ் படிக்கவா செய்வார்கள் என்ற கருத்து, அவர்களும் புத்தகம் வாங்க கூட்டத்தில் முண்டியதைப் பார்த்ததும் என் ஆச்சரியம் அதிகமாகிவிட்டது.

வெளியே வந்ததும் தரப்பட்ட பில்டர் காபி சூப்பர்

13 பின்னூட்டங்கள்:

At Sunday, 06 June, 2010, சொல்வது...

>>நடிகர் சிவகுமார், தனக்கு எதிலும் பற்று இல்லை. புகழ், பணம், காதல், பெண் எதிலும் விருப்பமில்லாமல் சாமியாராக போகும் எண்ணம் இருந்தது என்று சொல்லிவிட்டு...

- You should have advised him not to watch his movies those he participated as a hero :).

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

//வெளியே வந்ததும் தரப்பட்ட பில்டர் காபி சூப்பர்//

இது எப்போ? ஏமாந்துட்டேனே!

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

ராஜ் சந்திரா, யாருக்கு யார் அட்வைஸ் செய்வது ;-)

பிரசன்னா, விழா முடிந்ததும் நானும் உன்னைத் தேடினேன், கண்ணில் விழவேயில்லை. காபியின்
மணம் சுண்டி இழுத்தது என்றால் மிகையில்லை

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

/விழாவில் தென்பட்ட ஹைகிளாஸ் அம்மணிகள் கூட்டம் /

ஹலோ மேடம், உங்களையும் அறிமுகம் இல்லாதவர்கள் பார்த்தால் அப்படித்தான் நினைப்பார்கள் என்பது எ தா அ :-)

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

//கண்ணில் விழவேயில்லை. //

பிரசன்னா உங்கள் கண்ணில் விழவில்லையென்றால் சீக்கிரம் கண்ணாடியை மறு பரிசோதனை செய்யவும் :))

இ. பா வை அவ்வப்போது படித்திருக்கிறேன். முழுவதுமாக படிக்க வேண்டும்.

விழா கவரேஜ்க்கு மிக்க நன்றி :)

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

//கடைசியாய் அஸ்வதாமாஎன்ற
கதையைச் சொன்னவரும் , தத்துவார்த்தமாய் மிக நன்றாக அலசினார்//

உங்களுக்கு அப்புடியா தோணிச்சி :))

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

//என் பதினென்மங்களில் என் வயது தோழியர் மாய்ந்து மாய்ந்து ரமணிசந்திரன் வாசித்துக் கொண்டு இருந்தப் பொழுது குருதி புனலும், மாயமான் வேட்டையும், தந்திர பூமியும் என்னை கவர்ந்தன//

இந்த வரிகள் என்னள கவர்ந்தன. அழகான பதிவு.

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

கைக்கு வந்ததும், நீங்க முடிச்சுட்டு எனக்கும் அனுப்புங்க.

ஒரு + போட்டுருக்கேன்.

 
At Sunday, 06 June, 2010, சொல்வது...

//ஒரு + போட்டுருக்கேன்.//
இதுக்கப்புறம்
//கைக்கு வந்ததும், நீங்க முடிச்சுட்டு எனக்கும் அனுப்புங்க.// இதை போட்டிருந்தா புரிந்துணர்வு என்னான்னு எல்லாருக்கும் ஈசியா புரிஞ்சிருக்கும். :)))))))

 
At Monday, 07 June, 2010, சொல்வது...

சென்னையில் செட்டிலா ?

 
At Monday, 07 June, 2010, சொல்வது...

//இ.பா வின பல கதைகளில் வரும் சொல் "சினிக்" அதன் பொருளே தெரியாமல் வீட்டில் சினிக் என்று யாரையோ சொல்ல அப்பா திட்டியது நன்றாக நினைவுள்ளது//

'சினிக்'னா என்னங்க ? பு த செ வி; இல்லேன்னா எங்கே விவரம் கிடைக்கும்னு தயவு செய்து சொல்லவும் :-)

 
At Tuesday, 15 June, 2010, சொல்வது...

அட! ரவியா!!!!

நலமா?

 
At Tuesday, 15 June, 2010, சொல்வது...

ராம் சுரேஷ், தப்பா எழுதிவிட்டேன், ஹை கிளாஸ் மாமிகள் என்று எழுதியிருக்க வேண்டும் ;-)

ஸ்ரீதர்! முழு சிறுகதை தொகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறேன். படித்த அனைத்தும் கீழ்தட்டு
பிராமண கதாப்பாத்திரங்கள். ஆனால் அவருடைய நாவல்கள் அனைத்தும் அந்த அந்த காலக்கட்ட
அரசியலே பிரதானம். அதில் இருந்த சுவாரசியமும், பிரச்சனைகளை அலசும் தைரியமும் , நடப்பு
நிகழ்வுகளின் அபத்தமும் கவர்ந்த அளவு சிறுகதைகள் கவரவில்லை. நான் கொடுத்த நாவல்
லிஸ்ட் பாருங்க, படிக்க ஆரம்பிங்க.

சங்கர், சரி சரி அரசியலும் என்றுச் சொல்லலாம்.

வெற்றிமகள், துளசி நன்றி

ரவியா ஆமாம் இல்லை :-)

கதிரவன், சினிக் என்ற வார்த்தை எப்ப வரும் என்று அவர் கதைகளை வாசிக்கும்பொழுது காத்திருப்பேன்:-) வார்த்தையின் பொருள் எதிர்மறையாய், நெகட்டீவாக பேசுவது. முகத்தில் அடித்தாற்
போல பேசுவது என்றும் கொள்ளலாம்.

லஷ்மி, துளசிக்காவது புத்தகம் தருவதாவது. அம்மணி அலமாரி நிறைய புத்தகங்களாய் வெச்சியிருந்தாங்க. பாவம் சண்டிகருக்கு சுமந்துக் கொண்டு போகணுமே என்ற நல்ல உள்ளத்துடன்,
கேட்டால் தர மறுத்துட்டாங்க.ஹூம் :-(

 

Post a Comment

<< இல்லம்