Sunday, June 20, 2010

குழந்தையும் தெய்வமும்

ரோட்டுல என்னா டிராபிக். தனியா ரோட்டுக்குப் போகாதேன்னு சொன்னா கேக்கிறதே இல்லை.

நான் ரோடுக்கு போகலை. கீழே தான் போனேன்.

பிஸ்கெட் தீர்ந்துப் போச்சு. வரும்பொழுது வாங்கிக்கிட்டு வா.

முந்தா நேத்துதானே ,முழு பாக்கெட் தந்தேன். இப்படி தின்னா உடம்புக்கு ஆகுமா?

நான் ஒரு நாளுக்கு ரெண்டே ரெண்டு தான் தின்னேன்.

இந்த வாஷ்பேசின்ல யார் கிரேப்ஸ் கொட்டையை துப்பியது?

நான் இல்லை. நா கிரேப்சையே பார்க்கவில்லையே!

பெட்ல உட்காந்து சாக்கலேட் திங்காதேன்னு சொன்னா கேட்பது இல்லை. ஓரே எறும்பு.

சாக்லேட்டா நா இல்லையா?

பேனாவை டெலிபோன் பக்கத்துல வெச்சா போதும், எடுத்து உன் அலமாரியில வெச்சிக்கிறே, நீ என்னத்த எழுதுரே? ஒரு பேனா போதாதா?

நா எடுக்கலையே?

வெளிய போறீயா

ஆமாம்.

எப்ப வருவே

எட்டு மணிக்கு. ஆனால் ஆறு மணில இருந்து போன் செய்து எப்ப வருவேன்னு தொந்தரவு செய்யக்கூடாது. நா போகிற இடத்துல நீ கேட்டது கிடைச்சா வாங்கிட்டு வரேன். இல்லைன்னா
நாளைக்குதான். சும்மா தொண தொணக்கூடாது.

இதெல்லாம் அப்படியே மூன்று வயசு வாண்டு செய்வது மாதிரி இல்லை. ஆனால் இவை எல்லாம் எண்பத்தி ஆறு வயது அப்பா அடிக்கும் கூத்துக்கள். சில சமயங்களில் எரிச்சலும்,
கோபமும் வருகிறதுதான். ஆனால் உடனே பாவமாய் போய் விடுகிறது.

அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து எல்லாம் சொல்லவில்லை. தினமும் தந்தையர்தினமாய் வாழ்க்கைப் போய் கொண்டு இருக்கிறது :-)

22 பின்னூட்டங்கள்:

At Sunday, 20 June, 2010, சொல்வது...

தந்தையர் தினம் என்று ஒன்று இருக்கிறது என்று gnabagapaduthiyadharkku மிக்க நன்றி. செய்தி தாளில் தந்தையர் தினம் பற்றி எதாவது செய்தி உண்டா என்று தேடி, டைம் வேஸ்ட் செய்தது தான் மிச்சம்
Latha sridhar

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

அட இது வித்யாசமான கோணமா இருக்கே! வாழ்த்துக்கள் 86 வயது குழந்தை அப்பாவுக்கு!!!

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

hahaha!!! Happy father's day to all appas! :)))

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

வித்தியாசமாக !

நார்மலாகவே பிள்ளைகள் மீது இருக்கும் பாசம்/பொறுப்புணர்வினை விட கொஞ்சம் அதிகமாகவே இந்த வயதில் பிள்ளைகள் மீது வருவது இயல்பானதுதானாம்!

//சில சமயங்களில் எரிச்சலும்,
கோபமும் வருகிறதுதான். ஆனால் உடனே பாவமாய் போய் விடுகிறது.//

எரிச்சலும் கோபமும் மறைந்து போகட்டும் பாவம் என்ற சொல்லோடும்..!

தந்தையர் தின வாழ்த்துக்கள் :)

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

புதுமையாக எழுதி இருக்கிறீர்கள் உண்மைகளை .

தந்தையர் தின வாழ்த்துக்கள்

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

தந்தையர் தினத்தில் வாசித்த கும்மிகளில் மனதில் நின்ற வரிகள் நீங்கள் எழுதியவை. எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது, நீங்கள் எழுதி எனக்குப் பிடித்துவிட்டதே என்று. :>

86 வயது அப்பா - சாதாரண விஷயமல்ல இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துக் கொள்வது.

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

உஷா, நல்லா எழுதியிருக்கீங்க

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

ஸ்ரீதர் சார், நன்றி

அபிஅப்பா, நட்ராஜ் அடிக்கிற லூட்டி மாதிரியே இல்லை :-)

பொற்கொடி, நன்றி

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

ஆயில்யன் சிலசமயங்களில் எரிச்சலும் பொறுமையின்மையும் தலையை தூக்கத்தான் செய்கிறது.
அந்த நேரம் விலகிப் போய்விட்டாலும், மனசு கேட்பதில்லை. எந்த சொத்து, பணம் காசு இல்லாமல் வெறும் மாச சம்பளத்தில் வளர்த்து ஆளாக்கி இன்று இந்த நல்ல நிலைமையில் இருக்க வைத்தற்கு நன்றியாவது இருக்க வேண்டும் இல்லையா?

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

பனிதுளி சங்கர் நன்றி.

இராமு, அபூர்வ வருகைக்கு நன்றி

பிரசன்னா, குப்பையில் மாணிக்கம் தேடும் உன் நல்ல உள்ளத்துக்கு நன்னி நன்னி நன்னி

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

உஷா மாமி! நீங்களா?! சிறப்பான எழுத்து இது.

 
At Sunday, 20 June, 2010, சொல்வது...

//உஷா மாமி! நீங்களா?! சிறப்பான எழுத்து இது.//

என்னது இது, வரிசையாய் பிரபலங்கள் வருவதைப் பார்த்து மயக்கமே வருது. தினமலர் எடுத்து
ராசிபலன் பார்க்கணும் :-)

நன்றி பாரா சார் !

 
At Monday, 21 June, 2010, சொல்வது...

எரிச்சல் வந்தாலும் அடுத்த கணமே அது மறைந்தும் போகுமே!

 
At Monday, 21 June, 2010, சொல்வது...

அருமை உஷா, நீங்க எழுதினதிலே இதுதான் மனதைத் தொட்டிருக்கிறது என்று சொல்வேன். எங்க வீட்டிலேயும் இப்படி எல்லாம் நடந்தது, நடக்கிறது. இன்னும் ஜாஸ்தியாவே இருந்தது. எல்லாவற்றையும் நினைவு கூர வைத்துவிட்டீர்கள். தந்தையர் தினத்துக்கு வித்தியாசமான இந்தப் பதிவுக்கும் உங்கள் தந்தைக்கும் வாழ்த்துகள். வணக்கங்களும் உங்கள் தந்தைக்கு. அதிலும் சாப்பிடும்போது கவனிச்சுப் பாருங்க, ரொம்பவே பரிதாபமா நம்ம கண்ணிலே நீர் வந்துடும்! அப்படித் தெரியும்! இவரா ஒரு காலத்திலே நம்மளை அரட்டி உருட்டினார்னு தோணும். எழுதிண்டே போகலாம் அவ்வளவு நினைவுகள் அலை மோத வைத்து விட்டீர்கள்.

 
At Monday, 21 June, 2010, சொல்வது...

கீதா, வந்த பின்னூட்டங்களிலேயே நெகிழ வைத்தது உங்க எழுத்துக்கள். நன்றி

 
At Tuesday, 22 June, 2010, சொல்வது...

வித்யாசமான கோணம்.. எளிமையாக ஆனால் மனதில் பதிந்த பதிவு !!

 
At Wednesday, 23 June, 2010, சொல்வது...

//அதிலும் சாப்பிடும்போது கவனிச்சுப் பாருங்க, ரொம்பவே பரிதாபமா நம்ம கண்ணிலே நீர் வந்துடும்! அப்படித் தெரியும்! இவரா ஒரு காலத்திலே நம்மளை அரட்டி உருட்டினார்னு தோணும்.//

ரொம்ப moving lines.

அருமையான பகிர்வு உஷா மேடம். :)

 
At Saturday, 10 July, 2010, சொல்வது...

நல்ல பதிவு! வாழ்த்துக்கள் உஷா! ஷேக்ஸ்பியரின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன. முக்கியமாக - Second Childishness!

.........................The sixth age shifts
Into the lean and slipper'd pantaloon,
With spectacles on nose and pouch on side;
His youthful hose, well sav'd, a world too wide
For his shrunk shank; and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion;
Sans teeth, sans eyes, sans taste, sans everything.

 
At Saturday, 10 July, 2010, சொல்வது...

பிரதீபா, விதூஷ், வந்தியதேவன் நன்றி

 
At Saturday, 10 July, 2010, சொல்வது...

அருமையான ரசனை வந்தியத் தேவரே, நன்றி, கடைசி வரி மனதைத் தொட்டது.

 
At Tuesday, 13 July, 2010, சொல்வது...

நல்ல பதிவு.

உஷா மாமி, என்னை ஞபாகம் இருக்கிறதா?

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

 
At Sunday, 18 July, 2010, சொல்வது...

ரவிச்சந்திரன், நினைவு வரவில்லையே? பூர்வாச்சிரம மரத்தடி நட்பாய் இருக்க வேண்டும் என்று
நினைக்கிறேன்

 

Post a Comment

<< இல்லம்