Tuesday, February 14, 2012

அண்மைக்கு BOO என்ற அழகன்



எங்கோ படித்தது, வளர்ப்பு மிருகங்களுக்கு நீங்கள் எந்தளவு இடம் தருகிறீர்கள் என்ற பட்டியலில் இருந்தவை அனைத்துமே நாங்கள்செய்துக் கொண்டு இருக்கிறோம்.

“இனி” >உங்களுக்கு நினைவு இருக்கலாம். நாலு மாதங்களுக்கு முன்பு
வீட்டு வாசலில் ஏழெட்டு குட்டி பிள்ளைகள் ஊர்வலம் போய் கொண்டு இருந்தன.
சத்தம் கேட்டு பார்த்தால் ஒரு பையனின் கையில், உள்ளங்கை சைசில்
வெள்ளை வெளேர் என்று உயிரை கண்ணில் தேக்கிக் கொண்டு, பாதி
உயிரில் எங்களைப் பார்த்தது “BOO” . சரி, நம் “இனி” க்கு தோஸ் ஆச்சு
என்று ஃபூ வை அழைத்து வந்தோம்.

பாவம், யாரோ கொண்டு வந்து பார்க்கில் போட்டு இருக்கிறார்கள். ஒரு
நாள் முழுதும் கதறி இருக்கிறது. நாலைந்து நாள் குட்டி, ஒரு கிளாஸ்
பாலை நக்கி நக்கி குடித்தது.
“இனி” போல் இல்லை, மகா வால். நடக்கவே தெரியாது, துள்ளி துள்ளி
ஓட்டம்தான்.
ஹூம், குடும்பம் பெரிதாகிறது 

10 பின்னூட்டங்கள்:

At Wednesday, 15 February, 2012, சொல்வது...

வாழ்த்துகள்.

 
At Thursday, 16 February, 2012, சொல்வது...

“இனி” ... “BOO” ...

குடும்பம் பெரிதாகிறது!


Ok...Ok...!!!
:-)

- Agent NJ
njanapidam.blogspot.com

 
At Thursday, 16 February, 2012, சொல்வது...

“இனி” .. “BOO”...

... குடும்பம் பெரிதாகிறது...

Ok... Ok... :-)

ஏஜண்ட் NJ

 
At Thursday, 16 February, 2012, சொல்வது...

வாழ்த்துகள் உஷா :)

நீண்ட நாட்களாக கூகிள் ரீடரில் உங்கள் வலைப்பூவில் பதிவுகள் வராமல் இருந்தது. இன்றைக்கு உங்கள் பதிவைக் கண்டு மகிழ்ச்சி. :)

குடும்பம் பெரிதானால் பொறுப்புகள் நிறைய இருக்கும். ஆனால் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். பூ கொள்ளை அழகு.

வீடுகளில் வளர்ப்பதற்கு வெளிநாட்டு நாய்களை விட இந்திய நாய்கள்தான் நல்லதாம். ஆரோக்கியமாகவும் இருக்குமாம்.

சிறுவயதில் ஒரு நாய்க்குட்டி தட்டுத்தடுமாறி காம்பவுண்டுக்குள் வந்து விட்டது. இருந்த ரெண்டு பழைய பிஸ்கட்டுகளை பாட்டி அந்த நாய்க்குப் போட்டதும், அந்த ராஜா வீட்டில் ஒருவனாகி விட்டான். ராஜா எங்களோடு இருந்த காலம் இனிய காலம். :)

அன்புடன்,
ஜிரா
gragavanblog.wordpress.com

 
At Saturday, 18 February, 2012, சொல்வது...

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? வாழ்க உங்கள் அன்பு !! வளர்க உங்கள் Boo

 
At Wednesday, 22 February, 2012, சொல்வது...

கீதா, இந்த பதிவு போடும்பொழுது உங்களை (மோதியை) நினைத்தேன்.

ஞான்ஸ், பின்னுட்ட பெட்டி காத்து வாங்குது, அதனால ரெண்டு கிளிக்கையும் இங்க போட்டுவிட்டேன்.

ஜிரா நீயா? உண்மையில் நாட்டு நாய்கள் வளர்ப்பது மிக சுலபம். கொஞ்சம் வேலை வைக்குதுங்க.
ஆனாலும் அவைகள் காட்டும் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

unknown , known person மாதிரிதான் இருக்கு :-)

 
At Saturday, 10 March, 2012, சொல்வது...

எல்லாம் நலம் தானே?

வெகு நாட்கள் கழித்து மீண்டும் சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி
அதுவும் உங்கள் வீட்டில் புது வரவுடன்

'பூ' வுக்கும் 'இனி'க்கும் நல் வாழ்த்துக்கள்
ஸ்ரீதர் மற்றும் லதா

 
At Saturday, 24 March, 2012, சொல்வது...

Congrats. Have a good time with "ini"

 
At Saturday, 24 March, 2012, சொல்வது...

Missed your blog a lot madam.

 
At Wednesday, 04 April, 2012, சொல்வது...

அனைவருக்கும் நன்றி. வெற்றி மகள் வாரம் ஒரு பதிவாவது போட முயலுகிறேன்

 

Post a Comment

<< இல்லம்