Thursday, November 25, 2010

பக்... பக்

நீண்ட இடைவெளிக்கு பின்பு வாசகர்களை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி (பில்டப்பு)

நம்முடைய சிறுவயதில் தாயிடம் கேட்ட அதே டயலாக்கை குழந்தைகளிடம் சொல்லி சொல்லி இனியும் ஏமாற்ற முடியாது என்று ஒத்துக் கொண்டேன். வேறு என்ன, நாய் வளர்க்கத்தான் அப்படியே இந்த குஞ்சாமணி யைப் படித்துவிடுங்கள்


என் மகன் பக் என்ற நாய் வகையை வளர்ப்பது தன் லட்சியம் என்று அதற்கு பெயரும் இட்டாகி விட்டது என்று அறிவித்துவிட்டான். மகளோ வளர்த்தால் நாட்டு நாய் தான், என்று நம் அமலா,மேனகா காந்தி வழியில் பேசினாள். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

ஓடோபோன் விளம்பரத்தில் வருவதுப் போல ஒரு "பக்" இருந்தால் நமக்கு உதவியாய் இருக்குமே என்று லேசாய் ஒரு நப்பாசை தோன்றியதை நான் மறுக்கவில்லை. ஆனால் "பக்" வாங்க சில ஆயிரம் ரூபாய் ஆகும் என்பதால் யோசனையாகவும் இருந்தது.

இது இப்படி இருக்க, ஒரு நாள் தொலைக்காட்சியில் "பக்" நாயைக் குறித்த செய்தி வந்துக்
கொண்டு இருந்தது.

தன்னுடைய நாய் காணாமல் போய் போலீஸ் கமிஷனர் வரை புகார் கொடுத்து, தன்னுடைய
ஷூட்டிங் எல்லாம் கேன்சல் செய்து (பாவம் புரொட்யூசருக்கு எவ்வளவு கோடி நஷ்டமோ)
பிறகு கடவுள் அருளால் தன் நாய் கிடைத்த கதையை நடிகர் சின்னிஜெயந்த் உணர்ச்சி பூர்வமாய் விவரித்தார்.

அடுத்து ஒரு அம்மாள். வீட்டு வரவேற்பரை. சோபாவில் "பக்" ஸ்டைலாய் உட்கார்ந்து மிதப்பாய் காமிராவைப் பார்த்துக் கொண்டு இருந்தது. நாய் என்று சொல்லாமல் ,சுறா நாயகி தமனாவின் நாய் ரமேஷ் போல பெயர் சொல்லியே குறிப்பிட்டார். அதன் அருமை பெருமையையும் அதை வளர்க்க தான் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களைச் சொல்ல கேட்டு நான் ஆடிப்போனேன்.

என்னமோ மிச்ச மீதி தின்றுவிட்டு, வாசல் பக்கம் ஆடு மாடு நின்றால் கூட குரைத்து தள்ளும்
என் சின்ன வயசு மணி நினைவுக்கு வந்தது.

"சென்னை வெய்யில எப்போதும் ஏசி ரூம்ல தான் இருக்கும். அது என்னவோ சிலரை கண்டா அதுக்கு பிடிக்காது. அப்படி பட்டவங்க யாராக இருந்தாலும், நாங்க வீட்டுல சேர்க்க மாட்டோம் (ஒரு வேளை மாமியாரை சொல்ராங்களோ) என்று சொல்ல சொல்ல நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

வளர்த்தால் கன்ட்ரி நாய் தான். கல்யாணம் ஆனதில் இருந்து உங்க அப்பாவுக்கு, உங்களுக்குன்னு சிசுருஷைகள் செய்து அலுத்துப் போச்சு. ஏசி ரூம்ப்ல உட்கார்ந்து அது டீவி பார்த்துக்கிட்டு இருக்கும். வேளா வேளைக்கு அதுக்கு சாப்பாடு, அதோட டாய்லட் கிளீனிங் எல்லாம் என்னால் செய்ய முடியாது. என்று முடிவாய் அறிவித்து விட்டேன்.

அப்புறம் என்ன ஆச்சா? பொறுத்திருங்க .

Labels:

12 பின்னூட்டங்கள்:

At Thursday, 25 November, 2010, சொல்வது...

இந்தப் பிரச்சனைக்குதான் வீட்டில் பிராணிகளுக்கு தடா

 
At Thursday, 25 November, 2010, சொல்வது...

/என்னமோ மிச்ச மீதி தின்றுவிட்டு, வாசல் பக்கம் ஆடு மாடு நின்றால் கூட குறைத்து தள்ளும்
என் சின்ன வயசு மணி நினைவுக்கு வந்தது. /

குறைக்குமா? :)))


எப்படி இருக்கீங்க? நாட்டு நடப்பெல்லாம் தெரியுமா? :)

 
At Thursday, 25 November, 2010, சொல்வது...

பேப்பர் எல்லாம் படிக்கறீங்களா?

 
At Thursday, 25 November, 2010, சொல்வது...

எல்.கே! இது பொறுப்புதான். ஆனால் ஓவராய் அதை பேம்பர் செய்யாமல் நமக்காக அது என்றால் ஓ.கே.

இலவசம் இங்கு இலவச விளம்பரம் போட கூடாது:-) குறைத்தலை குரைத்து விட்டேன். நன்னி

 
At Thursday, 25 November, 2010, சொல்வது...

வாங்க! வாங்க!! :))



சில நேரங்களில் வெள்ளைக்கார அம்மிணிகள் ஐயா’க்கள் இந்த ஸ்பெஷல் டைப் நாய்களை வைச்சுக்கிட்டு கொஞ்சுவதை பார்க்கையில் ச்சே என்னமா பில்ட்-அப் கொடுக்குறாங்க வூட்டு உள்ளே குந்திக்கிடற நாய்க்கு எதுக்குடா இம்புட்டு பில்ட்-அப்ன்னு கேக்கதோணும் பட்ஷே அது வளர்ப்புபிராணிகள் கேட்டகிரியில வந்திடுமாம்! நம்ம ஊர்லதான் நம்மளோட பாதுகாப்புக்கு நாயை தெருவுல நிப்பாட்டுறோம்ன்னு நண்பர் சொன்னாரு ! :)

 
At Thursday, 25 November, 2010, சொல்வது...

எப்படி இருக்கீங்க...கோவைலயா இருகீங்க

நாய் வளர்த்து, அது எங்களை விட்டுபோய்..அதுல இருந்து எங்கூட்டு அம்மணிய மீட்டுட்டு வர்ரதுகுள்ள போதும் போதும் னு ஆயுடுச்சு... ஆனால் அது இருந்த சமய்ங்கள்... வீட்டில் பிரச்சனைகள் வந்தால் கூட சீக்கிறம் காணாமல் போய்விடும் என்பது உண்மை.. எல்லோரையும் சந்தோஷப்படுத்திய ஒரு ஜீவன்

 
At Friday, 26 November, 2010, சொல்வது...

//கல்யாணம் ஆனதில் இருந்து உங்க அப்பாவுக்கு, உங்களுக்குன்னு சிசுருஷைகள் செய்து அலுத்துப் போச்சு. ஏசி ரூம்ப்ல உட்கார்ந்து அது டீவி பார்த்துக்கிட்டு இருக்கும். வேளா வேளைக்கு அதுக்கு சாப்பாடு, அதோட டாய்லட் கிளீனிங் எல்லாம் என்னால் செய்ய முடியாது.//

ஐயையோ நாய்ல என்னங்க கன்ட்ரி நாய்,பக் நாய் னு பார்த்துகிட்டு,அது தொல்லை கம்மி,இது ரொம்ப ஜாஸ்தி இப்டி தான் பேதம் பார்க்கணும்,
:(
ஆனா மொத்தத்துல நாய் எப்படியும் வேலை வைக்கத்தான் போகுது உங்களுக்கு.

பேசாம நாய் வளக்கற திட்டத்தை கேன்சல் பண்ணிடுங்க.
:))

 
At Friday, 26 November, 2010, சொல்வது...

for follow up ...

 
At Friday, 26 November, 2010, சொல்வது...

ஆயில்யன், நம்மூரு ஆளுங்களே சொந்த பிள்ளைகளைக்கூட இப்படி அருமையாய் பார்த்திருப்பாங்களோ என்ற ரேஞ்சுக்கு பாசத்தை பொழிவது ஓவரோ ஓவர்.

மங்கை சென்னை வந்தாச்சு. இங்க இப்ப வேணாம்ன்னு சொல்ல முடியாத நிலை.

கார்த்திகா, நானே இன்னும் யோசனையில தான் இருக்கிறேன் :-)

 
At Saturday, 27 November, 2010, சொல்வது...

ம்ம்ம்ம்??? செல்லங்களோடு நிறைய அநுபவம் உண்டு. இப்போத் தான்பத்து வருஷங்களா வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு நிறுத்தி இருக்கோம். ஒரு வகையில் வசதி, எங்களை மாதிரித் தனி வீட்டில் இருப்பவங்களுக்குக்காவல் துணை என்றாலும் வெளியே எங்கும்போக முடியலை. எங்க செல்லத்தைப் பார்த்துக்கறதுக்காகவே என் கணவரும் நானும் சேர்ந்து எந்த விசேஷங்களுக்கும் போனதில்லை, எங்க பொண்ணு கல்யாணம் தவிர, :)))))))) ஒண்ணு அவர் லீவ் போட்டுட்டு(கொஞ்சம் ஓவரா இருந்தாலும் இது தான் நிஜம், நான் வெளியே போயிட்டேன்னா, கத்திக் கூப்பாடு போட்டு ஊரைக்கூட்டிடும் எங்க மோதி!)பார்த்துப்பார். இல்லைனா அவரைப் போகச் சொல்லிட்டு நான் வீட்டிலே இருப்பேன். இதுக்காகவே எங்க பொண்ணு கல்யாணத்தை அம்பத்தூரில் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள சத்திரத்திலே வைச்சுண்டோம். யாரானும் ஒருத்தர் மாத்தி மாத்தி வந்து பார்த்துக்கலாமேனு தான். அப்படி ஒரு தரம் அதுக்குச் சாப்பாடு எடுத்துண்டு வந்த எங்க பையருக்கு அடி விழுந்து....... அது ஒரு பெரிய கதை! சுய புராணமாய்ப் போயிடுச்சோ?? நிறுத்திக்கறேன். ம்ம்ம்ம்ம் இந்த டிசம்பர் பதினாறாம் தேதியோட அது உயிரை விட்டு 12 வருடம் ஆகிறது. :((((((((((

 
At Monday, 06 December, 2010, சொல்வது...

ஓ! வந்தாச்சா ... வாங்க ,, வாங்க..

 
At Monday, 06 December, 2010, சொல்வது...

//வளர்த்தால் கன்ட்ரி நாய் தான்//
வளர்க்கறது முடிவு பண்ணிட்டீங்க, உங்க ஆசைக்கு ஒன்னு, பிள்ளைங்க ஆசைக்கு ஒன்னு... பக்...டக்-ன்னு முடிவு எடுங்க.

 

Post a Comment

<< இல்லம்