Friday, January 21, 2011

முழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த ஏகாம்பரியை சிறிது யோசனையுடன் நோக்கினார் அவள் கணவன்.

’’நானும் ரெண்டு நாளாய் பார்க்கிறேன், ஓரே யோசனையாய் இருக்கே? என்ன விஷயம்? ஏதாவது புதுசா எழுதப் போகிறாயா? ‘ என்றுக் கேட்டதும் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு “ஆமாங்க, ஆனா.. பிரச்சனை அது இல்லைங்க. நா முழு நேர எழுத்தாளர் ஆகலாம்னு இருக்கேன்’’ என்றாள்.

அவள் சொல்வது புரியாமல், “ என்ன சொல்றே? நீ என்ன வேலைக்கா போறே? வீட்டூல தானே இருக்கே?” குழப்பமாய் கேட்டார்

’’அதுதாங்க, வீட்டுல இருக்கிறதால, வீட்டு வேலை சமையல் கடைக்குப் போவது, பிள்ளைங்க பாடம்ன்னு நிறைய டைம் வேஸ்ட் ஆகுது. அதனால...

“அதனால....” கொஞ்சம் வேகமாய் கேட்டார் மிஸ்டர் ஏகாம்பரி.

மீண்டும் நீண்ட பெருமூச்சு. கொஞ்சம் பீடிகையுடன் ஆரம்பித்தாள் ஏகாம்பரி,

“எழுதுவது என்பது விளையாட்டான விஷயம் அல்ல. அது ஒரு தவம். இந்த வேலைகள் எல்லாம் என் சிந்தனைகளை குறுக்கிடுகின்றன. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எப்படி எழுதி புகழ் பெறுகிறாங்க தெரியுமா? இருபத்திநாலு மணி நேரமும் ஆன்மாவையும் உடலையும் வருத்தி எழுத்திலேயே கவனம் செலுத்துவதாலத்தான் உலகமே அவங்களைப்
பாக்குது’’ என்றாள்

‘’ சரி, அதுக்கு என்ன? காலைல நாங்க எல்லாரும் கிளம்பிட்டா திரும்ப வர சாயந்தரம் ஆயிடுது. இனிமேலே நா வரும்பொழுது காயி, சாமான் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துடரேன். பசங்களையும் அவுங்க அவுங்க வேலையை செய்ய டிரெயின் செய்யலாம்” என்றார்
கணவன்.

ஏகாம்பரி பதில் சொல்லவில்லை.

கொஞ்சம் கலவரத்துடன் அவளைப் பார்த்தார்.

“கிடைச்ச பொழுதுல எழுதுவது எப்படி தவமாகும்? இனி மேலே வீடு, குடும்பம் எல்லாம் நீங்க பார்த்துக்குங்க. முழு மூச்சாய் எழுத்துல கவனம் செலுத்தி ஒரு சாகித்ய அகாதமியாவது வாங்குவது என் லட்சியம் என்றாள் தீர்மானமாய்.

‘என்ன விளையாடுறீயா? ஆபீஸ் வேலை எல்லாம் யார் பார்க்கிறது? என்றார் கடுப்புடன்.

இதோ பாருங்க. பல எழுத்தே தவமாய் இருக்கும் பிரபல எழுத்தாளர்களோட மனைவிகள் வேலைக்கும் போறாங்க, வீட்டு வேலையும் செய்யிராங்க, குழந்தை குடும்பத்தையும் க்வனிக்கிறாங்க. எழுத்தில் சாதிக்கும் ஆண் எழுத்தாளர்களை அவர்கள் மனைவிகள் எந்த பொறுப்பும் தராமல் பூவை போல உள்ளங்கையில் வைத்து தாஙகுவதால, சாதனை புரிவது அவர்களுக்கு சுலபமாய் இருக்கு. பெண்கள் செய்யும்பொழுது, ஒரு பெண் எழுத்தாளர் வாழ்வில் சாதிக்க, கணவர் நீங்க ஏன் இந்த தியாகங்களை செய்யக்கூடாது?

ஏகாம்பரியின் ஆணி தரமான பேச்சைக் கேட்டு திகைத்துப் போன கணவர் என்ன சொல்வது ஏது சொல்வது என்று அறியாமல் உலக நாயகனைப் போல வாயை திறந்து திறந்து மூடினார்.

“நா முடிவா சொல்லிட்டேன். எங்கம்மா அடுத்த வாரம் கண் ஆபரேஷனுக்கு வராங்க. நீங்க லீவ் போட்டுட்டு அவங்களை கவனிச்சிக்கோங்க. எழுந்திருங்க காலை சமையலுக்கு இப்பவே காய் நறுக்கி வெச்சிட்டா ஈசியா இருக்கும்... வாஷிங் மெஷின்ல ராத்திரியே துணிப் போட்டு வெச்சிட்டா, காலைல மெஷின ஆன் பண்ணிடலாம் ஏகாம்பரி சொல்லிக் கொண்டே போக,

‘’ இதோ பாரு, இதெல்லாம் ஓவரு..’’ குரல் கம்ம அவர் ஆரம்பிக்க, “ எந்த ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண்ணின் தியாகம் இருக்கும். நான் வெற்றி பெற நீங்க பின்னால் இருக்கக்கூடாதா?” என்று பக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்த கணவரைப் பிடித்து உலுக்க, நல்ல உறக்கத்தில் இருந்த கணவர் அலறி அடித்துக் கொண்டு எழுந்தவர் தன்னை சமாளித்துக் கொண்டு, ஏகாம்பரி ஏகாம்பரி என்று உலுக்கப்பட்ட ஏகாம்பரி கண் விழித்தாள்.

என்ன ஏதாவது கனவா? உளறிக்கிட்டு இருந்தே? கையில புக்கை வெச்சிக்கிட்டே தூங்கிட்டே “ என்ற கணவனிடம், ‘’ஆமாங்க, அவள் விகடன் படிச்சிக்கிட்டு இருந்தேனா அப்படியே கண் அசந்துடுச்சு. என்னமோ கனா கூட வந்துச்சு “

நல்ல கனவா கெட்ட கனவா என்றுக் கேட்ட கணவனைப் பார்த்து "தெரியலேயே” என்றாள் நாயகன் கமலைப் போல!

***********************************************************************************

டிஸ்கி: கதையும் அதில் வரும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனை

Labels:

18 பின்னூட்டங்கள்:

At Friday, 21 January, 2011, சொல்வது...

முத வெட்டு

 
At Friday, 21 January, 2011, சொல்வது...

ஆஹா இதை அவள் விகடனுக்கே அனுப்பலாம். கலக்கல் காமெடி

 
At Friday, 21 January, 2011, சொல்வது...

சி.பி.செந்தில்குமார் நன்றி. அவள் விகடனைப் போன்ற பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ்
பெறும் ஆவல் குறைந்துவிட்டது :-) பிளாக்கில் எழுதுவதே போதும் என்ற சோம்பேறிதனம்தான்

 
At Friday, 21 January, 2011, சொல்வது...

டிஸ்கி படிச்சதும்தான் 'உண்மை'க் கனவுன்னு புரிஞ்சது:-)

 
At Friday, 21 January, 2011, சொல்வது...

நினைச்சேனே, இப்படி ஏதோ ஒண்ணு சொல்லப் போறீங்கனு! :)))))))))))

 
At Friday, 21 January, 2011, சொல்வது...

அன்றைக்கு அம்பை கூட சொன்னாங்க..
எல்லா ஆண் எழுத்தாள்ர்களும் வீட்டில் ஒரு குறுநிலமன்னர் போல வாழ்கிறார்கள் ந்னு :))

 
At Friday, 21 January, 2011, சொல்வது...

என்ன ப்ளாக் எழுதுவது போதுமென்ற சோம்பேறித்தனமா?.. ஏகாம்பரி டூ மச்.
இதற்காக ஓவ்வொரு ப்ளாக்கரும் படும் கஷ்டம் தெரியாம என்ன பேச்சு :))

 
At Saturday, 22 January, 2011, சொல்வது...

கலக்கல்

 
At Saturday, 22 January, 2011, சொல்வது...

:-)))))

 
At Saturday, 22 January, 2011, சொல்வது...

:)))) கலக்கல்!

//ஒரு பெண் எழுத்தாளர் வாழ்வில் சாதிக்க, கணவர் நீங்க ஏன் இந்த தியாகங்களை செய்யக்கூடாது?//

இங்கே ஒரு எக்கோ எஃபெக்ட் கொடுத்திருந்தா? அட எழுத்தாளினி என்ன சீரியல் டைரக்டராவே ஆகிடலாமே ! நவ் த டைம் டூ திங்க் எபவுட் விச் ரூட் ! :)

 
At Saturday, 22 January, 2011, சொல்வது...

உலக நாயகனைப் போல வாயை திறந்து திறந்து மூடினார்.//

ஹாஹாஹா... வரும் பொழுதே கலவரத்தை கிளப்பிகிட்டே வாரீங்க.

சிரிச்சு கட்டுபடியாகவில்லை. அடிக்கடி எழுதுங்க ஏகாம்பரி... :))

 
At Saturday, 22 January, 2011, சொல்வது...

குடும்பத்தையும் பார்த்து எழுதுவதும் எல்லார்க்கும் வராது. நீங்கள் அதையும் செய்கிறர்கள். ஏகாம்பரி கனவில் கண்ட மாதிரி உங்கள் வாழ்கையில் உண்மையில் நடந்து அதன் பின் எழுதினால் இப்போது போல் அந்த எழுத்தில் நவரசங்களும் இருக்கும் என்று எதிர்பாற்கிர்களா?

 
At Saturday, 22 January, 2011, சொல்வது...

துளசி:)

கனவில பொய்க் கனவு உண்மைக் கனவுனு இருக்கா.;)

உஷா, உங்கள் கனவு பாதி பலித்துவிட்டது. மிச்சமும் பலிக்க என் வாழ்த்துகள்.;)
ஏகாம்பரியை நல்லாத் தூங்கச் சொல்லுங்கப்பா.

 
At Saturday, 22 January, 2011, சொல்வது...

துளசி, இல்லாத ஒன்றை கிளப்பிவிடாதீங்க :-)

கீதா, நன்னி

முத்து, பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக்கூடாது. ஐயா பொறந்துவிட்டா எழுத்துக்காரி
ஆகக்கூடாது....
முத்து, பிளாக்கு என்பது கையில காசு, வாயில தோசை மாதிரி. என்னத்தையாவது எழுதி சுட சட போட்டோமா, நாலு கமெண்ட் பார்த்தோமான்னு போயிக்கிட்டே இருக்கலாம். ஆனா,பத்திர்க்கைக்கு அனுப்பவது சள்ளை பிடித்த வேலையாய் தோணுது

 
At Monday, 24 January, 2011, சொல்வது...

//அவள் விகடனைப் போன்ற பிரபல பத்திரிக்கைகளில் எழுதி ///
அவள் விகடனா ? உஷாவா ??

 
At Monday, 24 January, 2011, சொல்வது...

சின்ன அம்மிணி, அமைதிச்சாரல் நன்றி

ஆயில் நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன்? சீரியல் பக்கம் போக சொல்ல சாபம் கொடுக்கிறாய் :-(

தெகா, நன்றி

வாசகன், நல்ல கேள்வி. வீடு அமைதியாய் இருந்தால் என்னால் எழுத முடிவ்தில்லை. அப்படியே
பழகி விட்டேன்.

வல்லி, இது கற்பனை கதை. இதில் வரும் பாத்திர சம்பவங்களுக்கு என்னையும் உட்பட யாரும் சம்மந்தமில்லை.

வாங்க ரவியா, யாங் டைம் நோ
சீ ;-)

 
At Tuesday, 01 February, 2011, சொல்வது...

ஒரு நாயகி...ஈ ஈ ஈ
உதயமாகிறாள்...ள் ள் ள்
ஊரார்களின்...ன் ன் ன்
இதயமாகிறாள்...ள் ள் ள்
.... .... .... .... ....


புல் நன்றாக ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டு அகமகிழ்ந்தோம் யாம்!
வாழ்த்துக்கள்!! :-)

comment by:
Agent NJ ஞான்ஸ்

 
At Friday, 04 February, 2011, சொல்வது...

நன்றி குருவே ;-)

 

Post a Comment

<< இல்லம்