புத்தக கண்காட்சி 2011ல் நான்
அல்வா கடையைப் பார்த்த சிறுமி போல, நாக்கு ஊற எனக்கு நானே ஆயிரெத்தெட்டு கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாலும், வெகு விரைவில் அவை எல்லாம் நீர்த்து விடும் என்பது சரித்திர உண்மை :-)
மதுமிதா தொகுத்த இரவு என்ற எழுத்தாளர்களின் இரவு குறித்த அனுபவம், கதை, கவிதை தொகுப்பை சந்தியா பதிப்பகம் ஸ்டாலில் கலெக்டர் சகாயம் வெளியிட்டார். பல பிரபலங்களும் என்னை போன்ற அபிரபலமும் எழுதியிருக்கிறோம். அருமையான வாசிப்பு அனுபவத்துக்கு நான் காரண்டி. வாங்குங்கள் :-)
அடுத்து சிங்கப்பூர் ஜெயந்தி சங்கர் எழுதிய தூரத்தே தெரியும் வான் விளிம்பு நிர்மலா வெளியிட, நான் பெற்றுக் கொண்டேன்.
முதலில் கிழக்கு பக்கம் போனோம். வாசலிலேயே பாரா, பிரசன்னாவும் உட்கார்ந்திருந்தானர். யாரோ கிழக்கில் எழுத்தாளர்களுக்கு முப்பது சதவீத தள்ளுப்படி என்றுக் கொளுத்திப் போட அப்படியா என்றால் பிரசன்னா அது கிழக்கு எழுத்தாளர்களுக்கு என்றான். அடுத்த தடவை கிழக்கில் எழுதியவர்களை பிடித்து அவங்க மூலம் நாலு புத்தகம் வாங்கணும் என்று
நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
பொதுவாய் புத்தகம் வாங்க நான் வைத்திருக்கும் அளவுக்கோல், உண்மையான
வாசகர்கள் கொடுக்கும் மதிப்புரைத்தான். வாங்கிவிட்டு காசுக்கு தண்டம் என்று
புலம்பியது மிக குறைவு. கிழக்கில் பார்த்த உலோகம் விமர்சனம் இன்னும்
வாசிக்கததால் அதை வாங்கவில்லை. நிர்மலா அதுவும் ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு வாங்கினார். முதல் பாகம் நான் சென்ற வருடம் வாங்கிவிட்டேன். இவை இரண்டையும் நிர்மலாவிடமிருந்து இரவல் வாங்கிப் படிக்க வேண்டும்.அங்கு மருந்து மட்டும் வாங்கினேன்.
தமிழினி பதிப்பகத்தில் நாஞ்சில்நாடனும், இராஜேந்திர சோழனும் இருந்தார்கள். அவர்கள் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, வழியில் ஞாநியைப் பார்த்தோம். ஞாயிறு கேணி கூட்டம் நினைவுப்படுத்தினார். என்னால்தான் போக இயலவில்லை.
இந்த வருட எங்கள் மொத்த ப்ர்சேஸ் பட்டியல்.
மருந்து- புனத்தில் குஞ்ஞப்துல்லா
வெள்ளெருக்கு- கண்மணி குணசேகரன்
வெட்டு புலி- தமிழ் மகன்
மிதவை- நாஞ்சில் நாடன்
தலைகீழ் விகிதங்கள்
என்பிதலனையும் வெய்யில் காயும்
சதுரங்க குதிரைகள்
ஆழிசூழ் உலகு-ஜோ.டி.குரூஸ்
சென்னையின் கதை- கிளீன் பார்லோ
சுபாங்கம்- மதுமிதா
எக்ளிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- சாரு நிவேதிதா
இராசேந்திரசோழனின் குறுநாவல் தொகுப்பு
இதைத் தவிர வெளியிட்டு காப்பி இலவசமாய் கிடைத்தது ஜெயந்தி சங்கரின்
தூரத்தே தெரியும் வான் விளிம்பு இத்துடன் என் பர்சேஸ் ஓவர்.
ஸ்டால் ஸ்டாலாய் பார்க்கவில்லை. மனதுக்குள் ஒரு லிஸ்ட் .அடுத்த வருடம் ஒவ்வொரு ஸ்டாலாய் நுழைந்து, நன்கு பார்த்து ஒன்றொன்றாய் ஆராய்ந்து வாங்க வேண்டும்.
மறுநாள் பிள்ளைகளுடன்!
Brahmin& Non – Brahmin by M.S.S.Pandian
Motururcycle diaries இவை இரண்டும் என்னுடைய சாய்ஸ்
Serious Men- Manu Joseph
The best of Franz Kafka – selected short stories
Bhagrt singh –The jail notebook and other writing
Bhagat singh on the path of liberation
Makers of modern India –Ramachandran guha
Theatre of the street
இதைத் தவிர ஒரு மெடிக்கல் டிக்னரி.
நல்ல நல்ல புத்தகங்கள் வாங்க வீட்டில்
எல்லோருக்கும் விருப்பம் உண்டு. ஆனால் அதை பத்திரப்படுத்துவது தான் ஒரு இல்லத்தரசியின் தலைவலி.
Labels: புத்தக கண்காட்சி 2011
8 பின்னூட்டங்கள்:
அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்
கண்டிப்பாக.. ஆண்களுக்கே மலைப்பாக இருக்கும் போது.. வீட்டைக்கட்டி ஆளும் உங்களுக்கு இன்னும் கொஞ்சம்...
கண்டிப்பாக.. ஆண்களுக்கே மலைப்பாக இருக்கும் போது.. வீட்டைக்கட்டி ஆளும் உங்களுக்கு இன்னும் கொஞ்சம்...
ஏகாம்பரி ஒண்ணும் வெளியிடலையா? ;)
Very good choices. Tell us more about M S S Pandian's book. I wanted to buy it this time but somehow did not do so, maybe next time.
நன்றி ராம்ஜி, yeskha
பொற்கொடி, அதுதான் சொல்லியிருக்கோமிலே ;-)
//மதுமிதா தொகுத்த இரவு என்ற எழுத்தாளர்களின் இரவு குறித்த அனுபவம், கதை, கவிதை தொகுப்பை சந்தியா பதிப்பகம் ஸ்டாலில் கலெக்டர் சகாயம் வெளியிட்டார். பல பிரபலங்களும் என்னை போன்ற அபிரபலமும் எழுதியிருக்கிறோம். அருமையான வாசிப்பு அனுபவத்துக்கு நான் காரண்டி. வாங்குங்கள் :-)//
கிருஷ்ணன், வடநாட்டு நண்பர் வீட்டில் பார்த்தது. புரட்டிப் பார்த்ததில் சுவாரசியமாய் இருந்தது.
கண்ணில் பட்டதும் வாங்கியாச்சு.
அடக்கடவுளே.. இப்ப நீங்க கோட் பண்ண் திருப்பி படிச்சும் அந்த "என்னை"ங்கற வார்த்தை மட்டும் கண்ல படவேயில்லை!!! வாழ்த்துகல் ஏகாம்பரி! =)
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me
Post a Comment
<< இல்லம்