கார்ட்டூனிஸ்ட் கேசவ்வின் “சரணாகதி”
என் வீட்டு சாப்பாடு அறை ஒரு பக்க சுவரில் மாட்ட புத்தனின் படம் ஒன்றை தேடிக் கொண்டு இருந்தேன். உண்மையில் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும், ஆனால் இந்த உருவம் என்று சொல்ல இயலாத அருவ படம் கண்ணில் படவேயில்லை. கிடைத்தால் இல்லையா விலையைப் பற்றி அடுத்து கவலைப்பட முடியும்?
ஒருநாள் ஏதாவது படிக்க தேறுமா என்று அம்மாவின் புத்தக குவியலை நோண்டியதில், பழைய சக்தி விகடன் கிடைத்தது. அதில் இருந்த இந்த ஓவியம் கண்ணை விட்டே அகலவில்லை. இன்று வந்த சக்தி விகடன் அட்டை படத்திலும் அதே ஓவியம்.
கார்ட்டூனிஸ்ட் கேசவ் என்ற பெயர் தான் நான் பார்த்தவரையில் இந்து
நாளிதழில் அரசியல் கார்ட்டூன் மட்டுமே! ஆனால் இந்த ஓவியம் மட்டுமில்லாமல் அவர் பிளாக்கில் பார்த்தால் அத்தனையும் அற்புதம்.
வெகு நாட்களாய் கண்ணில் கருணை பொழியும் புத்தனின் ஓவியத்தைத் தேடிக் கொண்டு இருக்கும்வேளையில் இப்படம்.
ஆன் லைனில் விகடன் குழும இதழ்களுக்கு சந்தா கட்டியுள்ளதால், தேடிப் பிடித்து என் கணிணி வால் பேப்பரில் போட்டுக் கொண்டு விட்டேன். இந்த ராமனும், அனுமனும் வித்தியாசமாய் இருக்கிறார்கள் இல்லையா?.
புத்தனின் அதே கருணை பார்வை, கொஞ்சம் வயதானதுப் போல தோற்றம் தரும் அனுமனின் பூரண சரணாகதியும். இதோ உங்கள் பார்வைக்கு
மானசீகமாய் சுவரில் படத்தை ஏற்றி விட்டேன். நிஜபடம் என்று சுவரில் ஏறும்? கேசவ் அவர்களிடம் கேட்க வேண்டும்.
8 பின்னூட்டங்கள்:
ஏனோ படம் ஏற மறுக்கிறது :-(
படம் இப்ப வந்திருக்கு பாருங்க :-)
அருமையான படம்.
அருமையான படம்; இதைக் குறித்துக் கட்டுரை ஒண்ணும் படிச்ச நினைப்பு இருக்கு. நல்லா இருக்காங்க ராமரும், அனுமரும்.
ஆஹா, இங்கே ஃபாலோ அப் ஆப்ஷன் இருக்கே! :)))))
அழகா இருக்கு..
பழைய விகடன்... புத்தன் (புது) ஓவியம்...
இராமனும்... அனுமனும்....
கண்டேன் காவியம்...!
ஏஜண்ட் ஞான்ஸ்
ரொம்ப வித்தியாசமான படம் தான்.
ராமா ..!
Post a Comment
<< இல்லம்