Tuesday, May 16, 2006

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ளக் கதை- 2

பிரச்சனையின் ஆணி வேர் நம் சமுதாயம் * என்றாலும், முழு முதற்காரணம் இந்த பயல்களே! இருபத்தி எட்டு வயது( சராசரியாய்) வரை, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி விட்டு, திடீரென்று லகான் போட ஒருத்தி வருகிறாள் என்றால் இவனுக்கு முதலில் ஏற்படுவது பயம்.

ஆணின் வாழ்க்கைக்கும், பெண்ணின் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பெண்ணுக்கு கல்யாண பேச்சு என்பது நினைவு தெரிந்ததில் இருந்து விழுந்துக் கொண்டே இருக்கும். அதனால் கல்யாணம் நிச்சயம் ஆனதும், அவளுக்கு பயம் எல்லாம் தோன்றாது. என்னத்தான் படித்து வேலைக்குப் போனாலும், பதவிசாய் ( ஆக்ட் ஆனாலும்) வாங்கிய சம்பளத்தை வீட்டில் கொடுத்து விட்டு எதிர்காலத்தையும் பெற்றவர்களிடம் தந்துவிடுபவள் பெண்.

பழைய துணிகளைப் போட்டு எவர் சில்வர் பாத்திரம் வாங்குவார்கள். வீட்டில் இருக்கும் பாட்டி, அதை உபயோகிக்க வேண்டாம், அப்படியே ஜில்லுக்கு எடுத்து வைத்து விடு என்று ஆணைப் பிறப்பிப்பார்கள். பெற்றவளோ, அந்த பாத்திரத்தை ஜில்லுவிடம் கொடுத்து, நீ மாமியார் வீட்டுப் போகும்பொழுது இதைக் கொண்டுப் போக வேண்டும் என்றதும், நாலு வயது ஜில்லு அதை வைத்துக் கொண்டு அன்று முழுவதும் அலையும். இப்படி மாமியார் வீடு, கணவனுடன் குடித்தனம் என்ற போதனைகள் அவள் காதில் வேண்டியளவு வீழ்ந்துக் கொண்டே இருக்கும்.

இதனால் பெரும்பாலான பெண்கள், கல்யாணம் நிச்சயம் ஆனாலும் பெரியதாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். 99% சதவீத பெண்களுக்கு அவசரத்துக்கு குக்கர் வைக்க மட்டுமே தெரியும். பெற்றவள், நிச்சயமாகி விட்டது, சமையல் கற்றுக் கொள் என்று கெஞ்சினாலும், போமா காலம் முழுவதும் இனி சமைக்க வேண்டும், கொஞ்ச நாளாவது நிம்மதியாய் இருக்கிறேனே என்று சொல்லி விடுவார்கள். மாமியார் வீடு என்பதே வழக்கொழிந்துப் போய், கணவனுடன் தனி குடித்தனம் என்பதால், சமையலுக்கு எல்லாம் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று பெண்ணுக்கு நன்கு தெரியும்.

பையனுக்கோ, பதினைந்து வயதில் இருந்து ஹாஸ்டல், பிரண்ட்ஸ், வேண்டாத பழக்கங்கள், போதனைகள் எக்கசக்கம். இவையெல்லாவற்றையும் விட வேண்டும். பெண் என்ற ஜீவனாய் அவன் பார்த்தது, அம்மா மட்டுமே! வீட்டில் அக்கா, தங்கை இருந்தாலும், அம்மா
மட்டுமே அவனுக்கு தெய்வம். போதாதற்கு ஆண்டாண்டு காலமாய் சினிமாக்களும், இலக்கியங்களும் அம்மா என்றால் அன்பு, தெய்வம் என்று ஏற்றி விட்டதால், அம்மாவை அவன் ஒரு பெண்ணாகவோ, மனைவியாகவோ, மருமகளாகவோ அவன் கண்கள் பார்க்க
மறுத்திருக்கின்றன. சரி இந்த விஷயத்தை பிறகு பார்க்கலாம்.

எனக்கு தெரிந்த ஒரு பையனுக்கு கல்யாணம் நிச்சயமானது. பத்து நாள் கழித்துப் பார்க்கிறோம். பையன் முகத்தில் மீசையைக் காணோம். என்னவென்று விசாரித்தால், பெண் சொல்லிற்றாம், நீ நல்ல கலராய் இருக்கிறாய். மீசையை எடுத்தால் அசல் ஹிந்தி ஹீரோ மாதிரி இருப்பாய் என்று! சொல்லும்பொழுது பார்க்க வேண்டுமே, நாணத்தில் முகம் சிவந்துப் போயிற்று.

சரி, கல்யாணம் ஆனதா, ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் மீசையின் அறிகுறிகள் தென்பட்டன. என்னடா என்றுக் கேட்டால், மீசை என்பது தன் தனிப்பட்ட விஷயம், இதில் எல்லாம் மனைவிக்கு இடம் கொடுத்தால், தலைக்கு மேல் போய் விடுவாள் என்ற ஞானோதயம் ஏற்பட்டு இருக்கிறது. ஒண்ணுமில்லை, ஏதோ தகராறு இருவருக்கும், தன் கோபத்தை மீசை வளர்ப்பில் காட்டியிருக்கிறார்ஐயா.

இதுதாங்க, இவங்க பிரச்சனை! மீசை எடுத்ததும் தவறு, போதாதற்கு வீட்டில் யாராவது பெருசுகள், இவன் அவ பேச்சைக் கேட்டு மீசை எடுத்தவன் தானே என்ற அவதூறும் காதில் விழுந்திருக்கும். இதே ஒரு பெண், வரப் போகிறவனுக்காக எதையாவது செய்தால் அது
தியாகப்பட்டியலில் சேர்ந்து விடும்.

கல்யாணத்திற்கு முன்பு, எள் என்றால் எண்ணையாய் நின்றதும், கல்யாணம் ஆகி பத்தே நாளில் எல்லாம் தெளிந்து, போதாதற்கு வீட்டு பெருசுகள், நட்புகள், அலுவலக நண்பர்கள், ரொம்ப எடம் கொடுத்திடாதடா என்று அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்ததும், பையன் பேச்சில், நடத்தையில் மாற்றம் தோன்ற ஆரம்பிக்கும். பெண்ணிற்கு ஒன்றும் புரியாது. கைக்குள் இருந்தவன் நடத்தையில் மாற்றம், ஏறுமாறான பேச்சு, பெற்ற தாய் போல வருமா போன்ற பேச்சுக்கள் அவளை விரக்தியின் விளிம்பில் கொண்டுப் போய் நிறுத்திவிடும்.பிரச்சனைகள் ஆரம்பிக்கத் தொடங்கும்.

ஆதரவைப் பொறுத்து தொடரும்

19 பின்னூட்டங்கள்:

At Tuesday, 16 May, 2006, சொல்வது...

அன்புள்ள உஷா,

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள*க்*(???) கதை உங்களுக்கு நகைச்சுவை / நையாண்டியாக உள்ளதா ?
:-)))

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

//இருபத்தி எட்டு வயது( சராசரியாய்) வரை, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி விட்டு//
என்ன சொல்ல வர்றீங்க! எல்லா பசங்க மட்டும் தான் ஆடுறாங்களா! சென்னைல இருந்தா கொஞ்சம் கிழக்கு கடற்கரை சாலை போய் வாங்க மேடம். ஆட்டம்னா என்னனு தெரியும். அம்மா போடாத லகானா?
//பையனுக்கோ, பதினைந்து வயதில் இருந்து ஹாஸ்டல், பிரண்ட்ஸ்,///
பொண்ணுங்க இப்பொ இதெல்லாம் அனுபவிக்குறதே இல்லையா?? யாரும் கல்யாணத்துக்காக கெட்ட பழக்கத்த விட்டதா எனக்கு தெரியல.
///இதே ஒரு பெண், வரப் போகிறவனுக்காக எதையாவது செய்தால் அது
தியாகப்பட்டியலில் சேர்ந்து விடும்.///
அப்படி ஏதாவது செஞ்சா தான் சொல்லுங்களேன். தனிக் குடித்தனம் அப்படின்ன உடனே வீட்ட தன் டேஸ்டுக்கு மாத்திகுறது அவங்க தான. ஒரு வேளை நீங்க இந்த பேஷியல், பிளீச்சிங், ஐப்ரௌ ட்ரீட்மெண்ட் இதெல்லாம் சொல்றீங்களா?
///பையன் பேச்சில், நடத்தையில் மாற்றம் தோன்ற ஆரம்பிக்கும். பெண்ணிற்கு ஒன்றும் புரியாது. கைக்குள் இருந்தவன் நடத்தையில் மாற்றம், ஏறுமாறான பேச்சு, பெற்ற தாய் போல வருமா போன்ற பேச்சுக்கள்//
இதெல்லாம் சமாளிக்க சொல்லி குடுக்காம எந்த பொண்ண மணவறைல உக்கார வைக்குறாங்க. அக்கா எல்லார் ஆதரவும் உண்டு, தொடருங்கள்
பிரசன்னா

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

லதா, "க்" வராது இல்லே? அது சரி, துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு கண்ணதாசன் சொல்லியிருக்காரு இல்லே, வாழ்க்கையும் அப்படிதாங்க !

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

வூட்டுக்கரர் படிக்கிறாராருங்களா அம்மணி இதெல்லாம்....

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

//பெண்ணிற்கு ஒன்றும் புரியாது. கைக்குள் இருந்தவன் நடத்தையில் மாற்றம், ஏறுமாறான பேச்சு, பெற்ற தாய் போல வருமா போன்ற பேச்சுக்கள் அவளை விரக்தியின் விளிம்பில் கொண்டுப் போய் நிறுத்திவிடும்.// 'முந்தானைக்குள்ள முடிஞ்சு வச்சுக்கன்னு'ம் சொல்லி கொடுப்பாங்க அந்த பக்கம், அப்புறம் என்ன, இந்த விரக்தி?

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

//பதவிசாய் ( ஆக்ட் ஆனாலும்) வாங்கிய சம்பளத்தை வீட்டில் கொடுத்து விட்டு எதிர்காலத்தையும் பெற்றவர்களிடம் தந்துவிடுபவள் பெண்.//

பிரசன்னா, இதுக்கு என்ன அர்த்தம் ?


//தனிக் குடித்தனம் அப்படின்ன உடனே வீட்ட தன் டேஸ்டுக்கு மாத்திகுறது அவங்க தான//

தம்பி, கல்யாணத்துக்கு முன்னாடி இந்த இடத்தை ( சாவியை) தந்துட்டு அப்புறம் ஏன் முழிக்கணும்? இதைப் பற்றி விரிவாய் பேசலாம் சரியா?

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

நேசகுமார்ஜி வாங்க வாங்க. ஆஹா, பதினேழு வருட கதையா?

வெளிகண்ட நாதரே, சில எக்ஸ்செப்ஷன் எல்லாத்துக்கும் உண்டு. முந்தானையில் முடிய முடியாத கேஸ்களும் உண்டு.
கொஞ்சம் இருங்க, கண்ணைத் துடைச்சிக்கிறேன்.

மனசு, தெரியாது :-)

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

முக்கிய பிரச்சனை-- நன்றாகவே
ஆராய்கின்றீர்கள்
ஆதரவு ஆதரவு அமோக ஆதரவு

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

மீசைக்கதைதான் இந்த பதிவுக்கே மோட்டிவேஷன் போல உள்ளது? இதுபோல மழித்தல் நீட்டல் எல்லாமே coming to terms with married life என்ற வகையில் வரும். வாழ்வின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் இந்த swinging to the extreme and coming to the balance என்ற நிலையைக்காணலாம்.

பழைய துணிபோடும் கதையெல்லாம் ஒரு 20 வருடத்துக்கு முந்தைய கூட்டுக்குடும்ப நிலை போலத்தெரிகிறது உஷா.

மற்றபடி, இன்றைய தனிக்குடித்தன வாழ்க்கையில் பல வீடுகளிலும் மனை மாட்சி என்பதே மனைவியின் ஆட்சியாகத்தான் உள்ளது. என் நண்பர் ஒருவர் சொல்வார்: "Husband's importance in his family is inversely proportional to the number of married years" என்று. 20 வருடங்கள் கழித்து for all practical puroses he becomes irrelevent in all key decisions. அதுவும் குழந்தைகள் எல்லாம் பெண்களாகப்போய் விட்டால் ஆணின் நிலையைக் கேட்கவே வேண்டாம். தமிழக சட்டசபையில் பாஜக நிலை மாதிரிதான்- non-existent.

"கைக்குள் இருந்தவன் நடத்தையில் மாற்றம், ஏறுமாறான பேச்சு, பெற்ற தாய் போல வருமா போன்ற பேச்சுக்கள் அவளை விரக்தியின் விளிம்பில் கொண்டுப் போய் நிறுத்திவிடும்.பிரச்சனைகள் ஆரம்பிக்கத் தொடங்கும்".

இந்த வாக்கியத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது "கைக்குள் இருந்தவன்" என்ற பிரயோகம்.
"கைக்குள் போட" நினைப்பதுதான் அது நிறைவேறாத போது ஏற்படும் விரக்திக்கும் காரணம் அம்மணி.

("உள்ள'க்' கதை", "கொண்டு'ப்'போய்", "வழக்கொழிந்து'ப்' போய்" எனப் பல இடங்களில் "சந்தி சிரிக்கிறது" :))

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

கல்யாணமான ஆம்பளங்க கண்ட்ரோலுல இருக்குறது முடி விஷயம் மட்டும் தான்'னு நம்ம பிரண்டு சொன்னாருங்கோ. கோவம் வந்தா மீசை பணால். திடீர்னு தாடி. இல்லேன்னா அந்நியன் ஸ்டைலுல ஜடா முடி. கேட்டாக்கா "வெட்ட வெட்ட வளரும் ஒரே விஷய்ம் இதுதான்; மேலும் போனா *** போச்சுங்றார்".

பாவம்'க்கா இந்த கல்யாணமான பயலுக...

சேம்சைடு கோல் இன்னும் ஜாஸ்தியா போடுவீங்கன்னு நினைக்கிறேன்.

அப்புறம் நம்மளோட பரிபூரண ஆதரவு உண்டுங்க. சும்மா அடிச்சு ஆடுங்க :-)

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

//கணவனுடன் தனி குடித்தனம் என்பதால், சமையலுக்கு எல்லாம் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று பெண்ணுக்கு நன்கு தெரியும்.//

சரியாச் சொன்னீங்க. அந்த "சமையல்"ங்கிறத கணவன் கத்துக்கிட்டுருந்தா போதாதா என்ன!! ;O)

நல்லாருக்குதேன்னு பெருவிரலை உயர்த்தலாம்னா பட்டை அனுமதிக்குதில்ல!!

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

இந்த மீசையை எடுத்து, பின் திரும்பவும் வைத்த இடைவெளியில் நடக்கும் சில பல விஷயங்களைச் சொன்ன நீங்கள், ஒரு முக்கியமானதை, விட்டு விட்டீர்களே!

ஆஹா! என் சொல்லுக்கு இவ்வளவு பலனா!, இன்னும் கொஞ்சம் ஆட்டலாம் போலிருக்கேன்னு நெனச்சு 'அவங்க' அந்த 'லவ் டார்ச்சர்' [அதாங்க! அன்புத்தொல்லை!] ரேஞ்சை இன்க்ரீஸ்[increase] பண்ணூம் போதுதான், நாம எவ்வளவு கேனையனா இருந்திருக்கோம்னு இவன் முழிச்சுக்கிறான்!

அதுக்கு கூடவே நண்பர்களும், பெரிசுகளும் ஒத்து ஊதி, மீசை தானா வளர ஆரம்பிக்குது!

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

//("உள்ள'க்' கதை", "கொண்டு'ப்'போய்", "வழக்கொழிந்து'ப்' போய்" எனப் பல இடங்களில் "சந்தி சிரிக்கிறது" :))
//
அருணகிரி, இதுக்கு என்ன அர்த்தம்? ஒற்றுவரும்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா? இல்லைன்னுதான் நான் படிச்சது..

உஷாக்கா, ஆதரவு என்னிக்கும் உண்டு. ஆரம்பிச்ச பிரச்சனை என்ன ஆச்சுன்னு தெரிந்து கொள்ள ஆவலுடன் .. பொன்ஸ்

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

சிவஞானம்ஜி, ஷ்ரேயா, பொன்ஸ், பொன்ஸ் நன்றி

குசும்பரே! பிரச்ச்னைன்னு பேச வந்துட்டா, ரெண்டு பக்க நியாய, அநியாயத்த பேச வேண்டாமா?

அருணகிரி,
அடுத்த பதிவு இதைப் பற்றிதான். பாத்திரம் எடுத்து வைப்பது, இபொழுது இன்னொரு பரிணாமமாய் விரிவடைந்திருக்கிறது.
போன வருஷம், நண்பிக்கு ரெண்டும் பெண் குழந்தைகள். அக்ஷ்யதிதியைக்கு, பத்தாயிரத்துக்கு நகை வாங்கினா, வெள்ளில
( அல்ப) சாமான், தராங்கன்னு இருபதாயிரத்துக்கு வாங்கி வந்தாங்க. ரெண்டு பொண்ணாச்சே! ஒண்ணு நாலாவது, இன்னொன்னு ஒண்ணாவது படிக்குதுங்க. அவங்க கணவர், நொந்துப் போயி, அதுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, அதையே வாங்கியிருக்கலாமே என்று வருத்தப்பட்டார். இது மிடில்கிளாஸ் மற்றும் ஹை மிடில் கிளாஸ் மெண்டாலட்டி.

எஸ்.கே.
அன்பு தொல்லை பற்றி விரைவில்

பகல் கனவு,
பெண்கள் அதிகம் விவரமுள்ளவர்களாய் இருப்பதாலும் பிரச்ச்னைத்தான் :-)

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

மொத்தம் இருக்குற பிளாக் 3 லட்சம், அதுல தமிழ் முவாயிரத்து பத்து, இதுல சாதி சண்டை போடறது 300, அரசியல் பேசறது 420, ஜொள்ளு விட்டு அலையரது 200, கவிதைங்கற பேர்ல வரிக்கு 3 வார்த்தை எழுதறது 20, தமிழ் இலக்கணம் சொல்லித்தரேன்னு திரியரது 5, கல்யாண வகுப்பு எடுக்கறது 2, மீதி எல்லாம் பிளாக் ஆரம்பிச்சுட்டு எஸ்கேப் ஆனது... இந்த வகுப்பு எடுக்கரவங்க பிளக்கில் தவராம அட்டெணன்ஸ் குடுப்பது மட்டும் இல்லாமல் சிலேட் வச்சுக்க்ற அளவுக்கு மாணவர்கள் இருப்பதால் கூடிய விரைவில் செமெஸ்டர் பத்தி பேச ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க... இப்போதே விஜய காந்த் மாதிரி பேசி வைப்போம். எக்சாம் எழுதாமையே பாஸ் பண்ணி விட்டிருவாங்க...

 
At Wednesday, 17 May, 2006, சொல்வது...

உதயகுமார், கேப்டன் மாதிரி புள்ளிவிவரம் எல்லாம் அடுக்குறீங்க, பார்க்கலாம், அடுத்த பகுதியைப் படிச்சிட்டு என்ன சொல்லப்
போறீங்கன்னு :-)

 
At Wednesday, 17 May, 2006, சொல்வது...

இருந்தாலும் ஆண் வர்க்கத்தை ரொம்பே தவறாக புரிந்து வைத்து கொண்டு இருக்கின்றீர்க்கள். நீங்கள் கூறுவது போல் கிடையாது. ஒரு வேளை உங்கள் இளவயது வருடங்களிலே இன்னும் உள்ளரீகளா. தற்போதய நவநாகரீக பெண்கள் பண்ணும் சேட்டையை ஆண்களால் கூட பண்ண முடியாது.
ஆதலால் ஒரு பக்கமாக சாடமால் நடுநிலைமையுடன் கூறினால் நன்றாக இருக்கும்

 
At Wednesday, 17 May, 2006, சொல்வது...

//இதனால் பெரும்பாலான பெண்கள், கல்யாணம் நிச்சயம் ஆனாலும் பெரியதாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.//
//பெண் சொல்லிற்றாம், நீ நல்ல கலராய் இருக்கிறாய். மீசையை எடுத்தால் அசல் ஹிந்தி ஹீரோ மாதிரி இருப்பாய் என்று!//

இது ரெண்டும் ஒன்னை ஒன்னு முட்டிக்குதே... ஏங்க, உங்களுக்குத்தான் இதெல்லாம் முன்னாடியே தெரியுமே, அப்புறம் எதுக்கு மீசை எடு அது இதுன்னுட்டு... ஏன்னா, உங்களுக்கு ஹிந்தி ஹீரோ மாதிரி புருஷன் வேணும் அப்படிங்கற ஆசை...

ஆனா, திட்டுவது எல்லாம் எங்களை மாதிரியான அப்பாவி ஆண்களை...

 
At Thursday, 18 May, 2006, சொல்வது...

நாகை சிவா, என்னை அறியாமல் பெண்கள் பக்கம் சார்ந்து எழுதியிருக்கலாம் :-)

உதயகுமார், இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறீரே? மீசை இல்லாட்டி, ஆணுக்கு அழகு மீசை என்று அதை முதலில் வைக்க செய்திருப்போம் இல்லே :-)
ஆணின் வெளிப்படையான மாற்றமோ அல்லது பயமோ, பெண்ணிடம் இருக்காது. அவள் செய்யும் ஓரே எக்ஸ்ட்ரா வேலை, கொஞ்சம் அழகு படுத்திக் கொள்ள ப்யூட்டி பாலாருக்கு போவதும், வீட்டில் பேஷியல் என்று எதையாவது முகத்தில் தடவிக்
கொள்வது மட்டுமே :-)

 

Post a Comment

<< இல்லம்