Monday, May 01, 2006

கமெண்டுக்களைக் காணவில்லை

இன்று துளசியின் பதிவில் சாதாரணமாய் ரூபி மேட்டருக்கு ஏன் பின்னுட்டம் போடவில்லை என்றுக் கேட்டதும், அவங்க மூணு கமெண்ட் போட்டேன் நீங்கத்தான் பப்ளிஷ் பண்ணவில்லை என்றதும், முதலில் புரியவில்லை. என்னுடைய மெயில் பாக்சில் இருப்பதை பப்ளிஷ் செய்துவிட்டேனே என்று குழம்பிப் போனேன். பிறகு பிளாக்கர் வழியாய் கமெண்ட் மாடரேஷன் கிளிக் செய்தால், பல கமெண்டுகள், நிறைய வேண்டாதவையும் சேர்ந்து இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் என் மெயில் பாக்சில் வரவில்லை. ஏன் இப்படி ஆகிறது என்று வல்லுனர்கள் சொல்ல முடியுமா? சமீபத்து பதிவுக்கு நிலா நண்பன், முத்துகுமரன், துளசி, ஆசாத் மற்றும் துபாய்வாசியின் கமெண்டுகள் கண்ணில் பட்டன. இந்த பிளாக்கர் செய்யும் குழப்பத்தில், மன்னிக்கவும் துபாய்வாசி இப்படி எத்தனை பேர்கள் தவறாய் நினைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.

ஜெயகுமாருக்கு நான் நேற்றுப் போட்ட பின்னுட்டம் இன்னும் வரவில்லை. இதற்கு முன்பு நிர்மலாவுக்கு போட்டதும் வரவில்லை. அதற்கு முன்பு இப்படி எனக்கும் ஆகியுள்ளது. பலோ அப் செய்ய முடியாததால், அப்படியே விட்டு விடுவேன். நானாக டெலிட் செய்தவை, ஆபாச மற்றும் இன்னொருவர் பெயரில் வந்தவைகளை மட்டும்தான். சிலர் வேண்டாத லிங்குக்களை
தருகிறார்கள் அதையும் பப்ளிஷ் செய்வதில்லை. இந்த பிரச்சனை மற்றவர்களுக்கும் இருக்கிறதா? பார்க்கவும். ஏதோ எழுதி, நாலு கமெண்டு தேற்றலாம் பார்த்தால் அதிலும் குளறுபடியா? பதிவு போட்டுவிட்டு, இலவு காத்த கிளியாய் கமெண்டுக்கு ஏங்கும் மனம், எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்குதானே புரியும்

14 பின்னூட்டங்கள்:

At Monday, 01 May, 2006, சொல்வது...

தவறாக நினைக்கவில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன்:-)))

இதாவது வருமா??????

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. எனக்கு மட்டும் என்று நினைத்தேன் ?!!

இப்போது இரண்டு இடத்திலும் பார்ப்பது என் வழக்கம்.

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

இது வருதான்னு பாருங்க.

'பரீட்சை.'

டெஸ்ட்ன்னு சொல்லி போரடிக்குது.

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

எனக்கெல்லாம் கவலையெ இல்லை.
இந்த பின்னூட்டம் வருகிரதா என்று பாருஙகள்.எனக்கும் மெயில் பதில் வருகிறது .வல்லி

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

அப்படியா சேதி? மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் தேவையில்லை.

நான் உங்கள் பதிவில் இட்ட முதல் பின்னூட்டம் அது. அதற்கு அந்த கதி என்றால், இதற்கு?

பொறுத்திருந்து பார்க்கிறேன் - முதல் கோணல் முற்றும் கோணல் தானா என்று.

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

முத்துகுமரன், துளசி, துபாய்வாசி உங்க மூணு பேர்களுடையதும் மெயில் பாக்சுக்கு வரவில்லை.. குப்பையை கிளறிக் கண்டுப்பிடிச்சது இது. இனி இது ஒரு வேலையா :-(

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

//பதிவு போட்டுவிட்டு, இலவு காத்த கிளியாய் கமெண்டுக்கு ஏங்கும் மனம், எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்குதானே புரியும்//

:-)))))

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

//

சமீபத்து பதிவுக்கு நிலா நண்பன், முத்துகுமரன், துளசி, ஆசாத் மற்றும் துபாய்வாசியின் கமெண்டுகள் கண்ணில் பட்டன. இந்த பிளாக்கர் செய்யும் குழப்பத்தில், மன்னிக்கவும் //

தமிழ்லயே எனக்கு பிடிக்காத வார்த்தை சாரிதான்.. :)


தவறாக நினைக்கவில்லை..ஒருவேளை மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன் உஷா அவ்வளவுதான்..

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

உஷாக்கா, இப்படி இருக்குமோ,
ப்ரொபைலில் மெயில் ஐடி காட்டுபவர்களின் (பப்ளிஷ்) செய்பவர்களின் பின்னூட்டம் மட்டும் தான் உங்களுக்கு மெயிலில் வருகிறதோ? உங்க ஸ்பாம் மெயில் பாருங்க.. noreply-comment@blogger.com எல்லாம் அங்கே வந்திருக்கா என்று?

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

நீங்கள் எந்த செயகுமாருக்கு பின்னூட்டம் அளித்தீர்கள்?!

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

நிலவு நண்பரே, பழைய பதிவுகளுக்கு உங்க பின்னுட்டங்கள் நாலைந்து இருந்ததைப் பார்த்து வருத்தமாகிவிட்டது. மொதல் காரணம் தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கில்லையா? நானாலும் அப்படிதானே நினைத்திருப்பேன். பிறகு என்ன பின்னுட்ட்ம் வேஸ்டாகி விட்டதே என்று :-)

பொன்ஸ், என் மெயில் பாக்ஸ் ஸ்பாமிலும் இல்லை. நான் பிளாக்கர் உள்ளே போய், நியூ போஸ்ட் கிளிக்கி, அங்கு மாடரேட் கமெண்ட்டைப் பார்த்தால் 81 பின்னுட்டங்கள் இருந்தன. பாதிக்கு மேல் அனானிமஸ்
மற்றும் போலி பெயரில். இன்னைக்கு காலையில்தான் கமெண்ட், ஒன்லி ரிஜிஸ்டடட் யூசர்ஸ்க்கு
மாற்றினேன்.

விகடன் புகழ் சிங், உங்க பதிவுக்கு இல்லை. தலித் தலைவர்களின் துரோகம் எழுதிய ஜெயகுமாருக்கு.

குமரன் இல்லையா பின்ன :-)))

 
At Tuesday, 02 May, 2006, சொல்வது...

தவறாக நினைக்கவில்லை! ஆனால் அது தங்களுக்கு நான் அனுப்பிய முதல் பின்னூட்டம். இதாவது வருகிறதா என பார்ப்போம்?
அன்புடன்
நாகை சிவா

 
At Tuesday, 02 May, 2006, சொல்வது...

சிவா, இதுவும் குப்பையில் கிடந்த மாணிக்கம்தான் :-)

 
At Tuesday, 02 May, 2006, சொல்வது...

நான் எப்பவும் மெயில், பிளாக்கர் ரெண்டு இடத்துலேயும் பார்ப்பேன். இது ஏன் ஆகுதுன்னு தெரியலை. :(

 

Post a Comment

<< இல்லம்