Sunday, April 30, 2006

அ.தியை, ரூபி, மோகம் மற்றும் ஆண்மனம்

இங்கு இந்தக் கூத்து அதிகம் எடுப்பட்டவில்லை. கூட்டம் வழக்கப்படி நகைக்கடையில் அம்முகிறது. என்ன நாளைக்கு வாங்கப்போவதை இன்னைக்கு வாங்கப் போறாங்க. அது என்ன நாளைக்கு என்று யோசிக்கிறீர்களா? நாளைக்கு முதல் தேதி, மளிகை சாமான் வாங்கிப்
போட மாட்டீங்களா? அதுப்போல தாங்க, துபாய்வாசிகள் நகை வாங்குவது என்பது மளிகை சாமான் வாங்குவதுப் போல!

விலை அதிகமாக ஆக, வாங்கும் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே போகிறது.. பவுன் விலை பத்தாயிரத்தை எட்டிடுமாம். அதனால் இப்பவே முடிந்த மட்டும் வாங்கிப் போட போகிறார்களாம். என்னத்த சொல்ல? பெண்கள் மட்டுமே வாங்குகிறார்கள். போடுகிறார்கள் என்று
தப்பாய் நினைக்காதீர்கள். கண்ணில் படும் சகோதரர்கள் கையில், கழுத்தில், விரலில் தங்கம், வைரம் மற்றும் நவரத்தின கற்கள் மின்னுகின்றன.

போன வருஷம், சென்னையில் இருந்தேனா? பக்கத்து வீட்டில் காலை நாலு மணிக்கு விளக்கு வெளிச்சம்.. ஏதோ ஊருக்கு கீருக்கு போகிறார்கள் என்று நினைத்தால் குளித்து முழுகி, அழகாய் புருஷனும், மனைவியுமாய் ஆறு மணிக்கு திறக்கப் போகிற நகைக்கடை வாசலில் ஐந்து மணிக்குப் போய் வரிசையில் நின்று, நான்கு நாட்களுக்கு முன்பு அட்வான்சு கொடுத்து, தேர்ந்தெடுத்து வைத்திருந்த நகையை வாங்கி வந்தார்கள். ஆஹா, மனைவியின் ஆசையை நிறைவேற்றும் இவர் அல்லவா, மனதினுக்கினிய காதல் கணவன் என்று பெரூமூச்சு விடும்பொழுது, உண்மையை எடுத்து சொன்னார்கள்.

என்னத்தான் மனைவியின் நகை மோகத்தை கிண்டல் அடித்தாலும், அதிகாலை இருட்டில் அவளை தனியாய் அனுப்ப இயலுமா? அடுத்து, வீட்டில் ஐஸ்வர்யம் பொங்கினால், நமக்கு நல்லதுதானே என்ற எண்ணமும் சேர, விருப்பமில்லாததுப் போல நடித்து, இந்த நாளுக்காக காத்திருந்து, அதற்காக மாதாமாதம் பணம் எடுத்து வைக்கும் பதிகளைப் பற்றி விவரமாய் எடுத்து சொன்னார்கள்.

இந்த முறை நடிகை சீதா, வைரம் வாங்குங்கள். ஐஸ்வர்யம் பொங்கும் என்று தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டு இருந்தார். எங்க வீட்டில் கூட, "மோகம்" விளம்பரத்தைப் பார்த்து நல்லா இருக்கு இல்லே என்று கமெண்ட் வந்தது. நான் யதார்த்தமாய்,
"இல்லைங்க, இந்தியாவில் விட இங்க ரூபி சூப்பரா இருக்கு" என்றேன்.

"நான் விளம்பரத்தை சொன்னேன்" பட் என்று பதில் வந்தது.

போன வாரம், இரண்டொரு முறை கிண்டலாய் அக்ஷயதிதியைக்கு நகை வாங்கிக் கொள்கிறாயா என்றுக் கேட்டதும், பெண்ணீய கொள்கை ஞாபகம் வர முறைத்தேன். ஆனால் இரண்டு நாளுக்கு முன்பு தமாசில் ( புகழ் பெற்ற நகைக்கடை) விண்டோ ஷாப்பிங்கில் ரூபி வளையல் ஒன்று கண்ணைப் பறித்தது. ஒன்றின் விலை 2500 திராம்ஸ்- ரூபாய் மதிப்புக்கு 11 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள். வளையல் என்றால் இரண்டு வாங்க வேண்டும்.

போன வாரம் நகை வேணுமா என்றுக் கேட்டதும், மோகம் விளம்பரமும் நினைவில் , மெல்ல "நல்லா இருக்கு இல்லே" என்றேன்.

"ஆமாம்! நல்லா இருக்கு" என்று சொல்லிவிட்டு வேக வேகமாய் நடையைக் கட்டினார்.

பொம்பளைங்க மனசு பொம்பளைக்குதான் தெரியும் என்பது சுத்த பேத்தல். மனைவியின் மனம் தெள்ள தெளிவாய் கணவனுக்குப் புரியும். பாருங்க, வளையல் நல்லா இருக்கு என்று சொன்ன மறுகணம், ஆள் அங்கு இல்லை. ஹ¥ம்!

20 பின்னூட்டங்கள்:

At Sunday, 30 April, 2006, சொல்வது...

//என்னத்தான் மனைவியின் நகை மோகத்தை கிண்டல் அடித்தாலும், அதிகாலை இருட்டில் அவளை தனியாய் அனுப்ப இயலுமா?//

ஒருவேளை காந்தியோட கனவை நனவாக்க புறப்பட்டிருப்பாங்களோ..? :)

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

நல்லா இருக்கு. நான் வாங்கிக்கப்போறேன்னு சொல்லவேண்டியதுதானே உஷா.

நீங்க வேணுமுன்னு கேட்டா வாங்கித்தரலாமுன்னு இருக்காரோ என்னமோ?

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

//வளையல் நல்லா இருக்கு என்று சொன்ன மறுகணம், ஆள் அங்கு இல்லை. ஹ¥ம்! //.

வேறென்ன செய்ய முடியும். Cash Counter க்கு போயிருப்பார்:-))))

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

//பாருங்க, வளையல் நல்லா இருக்கு என்று சொன்ன மறுகணம், ஆள் அங்கு இல்லை. ஹ¥ம்! //

:) :)

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

//அதுப்போல தாங்க, துபாய்வாசிகள் நகை வாங்குவது என்பது மளிகை சாமான் வாங்குவதுப் போல!//

என்னை ஏங்க இழுக்கறீங்க இதிலேயெல்லாம்? ;) நான் எல்லாம் அப்படி வாங்குறது இல்லை. :))

நேற்றைய தங்கம் விலையை விட இன்று 1 தி. அதிகம். இதிலேயே தெரியவில்லையா எத்தனை ஆண்கள் இன்று மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறார்கள் என்று?

(ஒரு திர்ஹாம் இன்னைக்கு தேதிக்கு 12 ரூ. க்கும் மேலேங்கோ.)!

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

//பாருங்க, வளையல் நல்லா இருக்கு என்று சொன்ன மறுகணம், ஆள் அங்கு இல்லை. ஹ¥ம்! //

ஒரு வேளை கடைக்குள்ள போயிருப்பாரோ வாங்க???

எதுக்கும் வீட்ல தேடிப்பாருங்க, surprise ah கொடுக்க வாங்கிவச்சிருப்பார்.

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

தங்காச்சி,

2500க்கு ஜோடி வளையலுங்களா? ரூபி செட்டிங்குங்களா? மூணு மூணர பவுனுதான் தங்கம் தேறும். மீதிக்கு ரூபிதான் எடை. ரூபியும் அதே எடை - வெலைக்குப் போட்டா இந்த நெலமைதான்.

ரூபி செட்டிங் எப்படின்னு பாத்துருங்க. நம்மூரு செட்டிங்ல கல்லோட கீழயும் தங்கம் இருக்ற மாதிரி இல்லாம, கல்லுக்குக் கீழ தங்கம் இல்லாம இருக்ற செட்டிங்குன்னா ஒடனே வாங்கிருங்க.

எங்க தங்காச்சி பாத்தீங்க? ஜனகோடிகளுடெ விஷ்வஸ்த்த ஸ்தாபனத்துலங்களா இல்ல நம்மூரு ஹஸீனாஸுங்களா?

ரெண்டுமில்ல அண்ணாத்தே டமாஸ், ஜாவேரின்னு வடக்கத்தி சமாச்சாரம் எத்தையோ சொல்லப்போறீங்களா?

அன்புடன்
ஆசாத்

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

பொன்ஸ், கல்யாணம் ஆகாத சின்ன பெண்களுக்கு மனை வாழ்வு வகுப்பு எடுக்கலாம் என்று இருக்கிறேன் :-)

மனசு, சான்சே இல்லை. அதுவும் இவ்வளவு காஸ்ட்லியாவா :-(((

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

அக்ஷ்ய த்ரிதயை அன்னிக்கு மத்திரம் தான் இந்த வெளியேட்றமா?
??????

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

மனு, என்ன சொல்றீங்க? புரியலையே

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

//பொன்ஸ், கல்யாணம் ஆகாத சின்ன பெண்களுக்கு மனை வாழ்வு வகுப்பு எடுக்கலாம் என்று இருக்கிறேன் :-)//

உஷாக்கா, வகுப்புல எனக்குத் தான் முதல் சீட் சொல்லிட்டேன்.. :)

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

பினாத்தல் சுரேஷ் அவர்களின் பின்னுட்டம்


//"ஆமாம்! நல்லா இருக்கு" என்று சொல்லிவிட்டு வேக வேகமாய் நடையைக் கட்டினார்.//

பாவம் அப்பாவியா இருக்கார். நானா இருந்தா - "அவளுக்கு நல்லா இருக்கு"ன்னு சொல்லி மேட்டரை அங்கேயே க்ளோஸ் செய்துடுவேன்!

//தமாசில் ( புகழ் பெற்ற நகைக்கடை) விண்டோ ஷாப்பிங்கில் //

எனக்கு இப்போ துபாய் ஷார்ஜாவில் எல்லா பொது இடங்களுக்கும் "தமாஸைத் தவிர்த்துச் செல்லும் சுற்றுவழியை" வழக்கமான வழி ஆக்கிவிட்டேன். இதையும் அவருக்கு சொல்லணும்.

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

///பாவம் அப்பாவியா இருக்கார். நானா இருந்தா - "அவளுக்கு நல்லா இருக்கு"ன்னு சொல்லி மேட்டரை அங்கேயே க்ளோஸ் செய்துடுவேன்!///

பினாத்தல் சுரேஷ்,
அப்புறம் ஒரு வாரத்துக்கு வயித்துக்குச் சரியா சாப்பாடு கிடைக்காது.. பரவாயில்லையா?. ஆண்கள் இதுமாதிரி மேட்டரை கண்டுக்காதது மாதிரி-புரியாதது மாதிரி, நேரடியாய் எதையும் சொல்லாமல் சமாளிப்பதும் காரணமாய்த்தான்.

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

அப்பா, ஒரு சீடி கிடைச்சாச்சு- இது பொன்சுக்கு

முத்து, நல்ல அனுபவம் போல இருக்கு :-)

சுரேஷ், இந்த பதிவும், அதன் பின்னுட்டங்களும் திருமதி. சுரேஷ்க்கு அனுப்பப்பட்டுவிட்டது.

 
At Sunday, 30 April, 2006, சொல்வது...

வளையல் வாங்கற ஜோர்லே நம்ம பின்னூட்டத்தைக் குப்பையிலே கடாசிட்டீங்களா?

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

Any reason for not allowing my comments?

If it was 'offending' someone, let me know - to ask pardon!

Thank you!

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

ஆசாத் தம்பி என்னா சொல்றாரு? ஓப்பன் செட்டிங்குன்னா பரவாயில்லையாமா?

 
At Monday, 01 May, 2006, சொல்வது...

ஆசாத்ஜி, 2500 திராம்ஸ் ஒரு வளையலுக்கு :-( கல்லுக்கு கொடுக்கிற காசு அம்பேல்தானா?
சே, கண்ணுலையே இருக்கு. நம்ம ஊர்ல சொல்லுங்க, கல்லுக்கு ரீ சேல் வேல்யூ கிடையாது என்று.
ஆனா இங்க, ரூபி, எமரால்ட் கற்கள், ஏறக்குறைய வைரத்துக்கு இணையாய் விலை வெச்சிருக்காங்களே?
திரும்ப விற்கப் போனா கல்லுக்கு போட்ட காசு, வேஸ்டா? சே! இந்த பதிவை படிச்சிட்டு, வளையல்
வாங்கி தருவார் என்ற நப்பாசை, ஆசாத்தின் பின்னுட்டம் பார்த்ததும் பணால்.
(மனசாட்சி.- ஆசாத் பின்னுட்டத்த அப்படியே விட்டிருக்கலாம், ஏன் பப்ளிஷ் செஞ்ச :-)))))))))))))))))))

 
At Tuesday, 02 May, 2006, சொல்வது...

அட்சய த்ரிதியை மட்டும் தான் கானாமல் பொவாரா/ இல்லை நகை என்ற வார்த்தை ஒன்றிலெயெ நகர்ந்துவிடுவாரா என்று கேட்டேன். மனு

 

Post a Comment

<< இல்லம்