Wednesday, March 07, 2007

பெண் பதிவர்கள் டாப்

நான்கு வருடங்களுக்கு முன்பு இணையம் அறிமுகம் ஆனப்பொழுது எழுத்தை சீர் அமைப்பதிலும், பின்பு வலைப்பதிவு விஷயங்களிலும் கைக் கொடுத்து உதவிய மதி, பின்பு ஜெயஸ்ரீ என்று மரத்தடி குழுவில் துளசி, ஷைலஜா, சக்தி பிரபா, பவித்ரா என்று பெண்கள் ஜமா சேர்ந்தது.

அவ்வப்பொழுது வந்தாலும் ஆளுமை நிறைந்த எழுத்தில் கைவந்த நிர்மலா, சிறந்த ஊர்சுற்றி சுபா :-) ( ஆள் காணாமல் போய்விட்டார்) மென்மையாய் கவிதை படைக்கும் மதுமிதா, பத்திரிக்கையாளர் அருணா ஸ்ரீனிவாசன், ஜெயந்தி என்று நட்பு வட்டம் இணையம் தாண்டியும் வளர்ந்தது.

அப்பொழுது ஆரம்பிக்கப்பட்ட வலைப் பதிவுகளில் மீனா, சந்திரவதனா, செல்வநாயகி, உதயா, தேன் துளி பத்மா, சிநேகிதி, ஸ்ரேயா, கலை, பொடிச்சி, அப்படிப்போடு, தாணு, நிலா, தாரா என்று எழுதும் பெண்கள் வட்டம் பெரியதாகிக் கொண்டு வந்தது.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் கவிதையாய் கட்டுரைகளாய் மலரத் தொடங்கின. அடுத்தக்கட்டத்தில் பொன்ஸ், கவிதா (அனிதாவும்தான்) மங்கை, பிரேமலதா, மதுரா போன்றவர்களும் சமீபத்திய தாரகையான தமிழ் நதி, முத்துலட்சுமி, ஜெசிலா மற்றும் ஆன்மீக பதிவாளர்கள் கீதா சாம்பசிவம், வல்லி சிம்ஹன் என்று ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையைப் பதிக்க தொடங்கினர். அபூர்வ தாரகையாய் லிவிங் ஸ்மைல் வித்யா கட்டுரைகளிலும் கவிதைகளிலும் திருநங்கைகளின் வலிகளையும் வேதனைகளையும் பதியத் தொடங்கினார்.

புது முகங்களான நல்ல கருத்துக்களைப் பதித்துவரும் கெளசி, நகைச்சுவையில் வீடு கட்டி அடிக்கும் கண்மணி, மிக சமீபத்தில் நல்ல சிந்தனைத்தரும் கட்டுரைகளை எழுதும் மை பிரண்ட் (அறிமுகப்படுத்திய பொன்ஸ்க்கு நன்றி) கண்ணி சார்ந்த தொழிற் நுட்பத்தை எடுத்து சொல்லும் தீபா, ராதா என்று பெண் வலைப்பதிவாளர்கள் வட்டம் இன்னும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.

இதில் நான் சந்தோஷமாய் குறிப்பிட வந்த விஷயம் கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை. ஒருவர் எழுதியதை மற்றவர்கள் மனம் உவந்து பாராட்டுகிறார்கள்.

பெண்கள் இருவர் சேர்ந்தால் சண்டை அவர்களிடம் ஒற்றுமையே இருக்காது, வம்பு தும்பு பேசுவார்கள் என்றெல்லாம் ஆண்டாண்டுக் காலமாய் சொல்லப்பட்டு வரும் கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை பெண் பதிவாளர்கள் நிருபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு அதற்காக எப்பொழுதும் ஒருவர் எழுதுவதை இன்னொருவர் போற்றி பாராட்டிக் கொள்வோம் என்று இல்லை. எங்கள் கருத்துக்களை, எதிர்வினைகளை நேராக சொல்லிவிடுவோம்.

2007ம் ஆண்டு மகளிர்தினத்தில் இந்தக் கட்டுரையை மன நிறைவுடன் பதிவு செய்கிறேன். இன்றுப் போல் என்றும் இந்த ஒற்றுமை நீடித்து இருக்க பெண் பதிவாளர்கள் உறுதியாய் இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
(தொடந்து எழுதும் அனைத்து பெண் பதிவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். யாராவது விட்டுப்போயிருந்தால் சொல்லவும், சேர்த்துவிடுகிறேன். நன்றி)

நீங்க போட்ட பட்டியலுக்கு நன்றி மதி. மேலும் காணாமல் போனவர்கள், அபூர்வமாய் எழுதுபவர்கள் என்று எல்லாரையும் சேர்த்து.

1. சந்திரவதனா 2. கீதா சாம்பசிவம் 3. வல்லி சிம்ஹன்
4. துளசி 5. கவிதா 6. பத்மா 7. பொடிச்சி 8. அருணா ஸ்ர்னிவாசன் 9. தாணு 10. செல்வநாயகி 11. கற்பகம் (அப்டிப்போடு/மரம்) 12. பொன்ஸ் 13. ஷ்ரேயா 14. கலை
15. அஞ்சலி 16. உதயா 17. ஜெயந்தி 18. ரம்யா 19. மதுமிதா
20. மங்கை 21. முத்துலெட்சுமி 22. லக்ஷ்மி 23. ஜெஸிலா
24. மதி 25. தமிழ்நதி 26. மதுரா 27. பிரேமலதா
28. சினேகிதி 29. தாரா 30. உ்ஷா 31. .:மை ஃப்ரெண்ட்:.
32. துர்கா33. பவித்ரா34. லிவிங் ஸ்மைல் வித்யா35. நிர்மலா
36. நிவேதா 37. பிரதீபா 38. தான்யா 39. நளாயினி 40. கறுப்பி
41. ஆராதனா 42. செல்லி 43. தூயா 44. சுவிஸ் ரஞ்சி
45. சந்திரலேகா 46. சுபா 47. ஜெயஸ்ரீ 48. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் 49. கௌசி 50. கண்மணி 51. அனாமிகா
52. மீனா (தோழியர்) 53. தீபா 54. கஸ்தூரிப் பெண்
55. அன்புத்தோழி 56. ப்ரியா 57. நிலா58. ஆதிரை 59.பூங்குழலி 60. Boo 61.witchy angel 62. சக்தி பிரபா, 63. ஷைலஜா. 64 பத்மஜா, 65. இம்சை அரசி

107 பின்னூட்டங்கள்:

At Wednesday, 07 March, 2007, சொல்வது...

நிலா, தாணு விட்டுப் போச்சு.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

முக்கியமான ஒரு ஆளு பேரு விட்டுப் போச்சு.

'உஷா' ;-)

உங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

பொறுப்புணர்ந்தும் , வம்புகளை விடுத்தும் குற்றம் குறை இருந்தால் திருத்திக் கொண்டும் எழுதி இன்னும் இன்னும் நல்ல பெயரை பெண்கள் எடுக்க வேண்டும் வலையுலகில்.
புதியவர்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது.லக்ஷ்மி , கௌசி அப்பப்ப எழுதறாங்க. ராதா வந்துருக்காங்க புதுசா.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

:) நல்லா சொல்லி இருக்கீங்க உஷா..

இருந்தாலும் உங்களோட பாசக்கார தோழி அனிதாவை அடைப்புக் குறிக்குள்ள போட்டிருக்க வேணாம் :-DDDDD

மகளிர் தின வாழ்த்துக்கள் :)

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//இதில் நான் சந்தோஷமாய் குறிப்பிட வந்த விஷயம் கும்பி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.//

அக்கா அது கும்பி அடித்தல் இல்லை... கும்மி அடித்தல்....

கும்மி என்பது தமிழுக்கு புதியதாய் வந்திருக்கும் பின்நவீனத்துவ இலக்கிய சுதந்திர வெளி. உங்களுக்கு கும்மி அடிக்கத் தெரியவில்லை என்பதற்காக தயவுசெய்து நல்ல இலக்கியக்கூறு ஒன்றினை கொச்சைப்படுத்தாதீர் :-)

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//இதில் நான் சந்தோஷமாய் குறிப்பிட வந்த விஷயம் கும்பி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை. ஒருவர் எழுதியதை மற்றவர்கள் மனம் உவந்து பாராட்டுகிறார்கள்.//

நீங்க சொன்னா சரிங்க உஷாக்கா!! ;))

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

அப்புறம் இந்த - கும்பி அடித்தல்

அது கும்பி இல்லைங்க. கும்பின்னா வயிறு. ஆனா யானைன்னும் சொல்லலாம்.

ஒரு வேளை பொன்ஸ் கலாய்த்தல் சங்கம் எதாவது ஸ்டார்ட் பண்ணறீங்களா?

:))

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

அப்புறம் நம்ம சேதுக்கரசியையும் உங்க லிஸ்டில் சேத்துக்குங்க. பாவம் பதிவு எழுதலைன்னாலும் சிரமம் பாராட்டாம எல்லார் பதிவையும் படிச்சு பின்னூட்டம் போடறாங்க.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

நல்லா சொன்னீங்க உஷா! :O)

விட்டுப் போன பெயர்களில இப்போதைக்கு ஞாபகம் வர்றது இவங்களை:
அஞ்சலிக்குட்டி
நிருபா
நிவேதா
செல்லி
கொஞ்சநாளாய்க் காணாமல் போயிருக்கும் கஸ்தூரிப்பெண்
தூயா

+ நீங்க ;O)

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

உஷா அக்கா,

துளசி தளம் "துளசி கோபலை" விட்டு விட்டிங்களே.

அன்புடன்
இஸ்மாயில் கனி

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//2007ம் ஆண்டு மகளிர்தினத்தில் இந்தக் கட்டுரையை மன நிறைவுடன் பதிவு செய்கிறேன். இன்றுப் போல் என்றும் இந்த ஒற்றுமை நீடித்து இருக்க பெண் பதிவாளர்கள் உறுதியாய் இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். //

நானும் :-)
இந்த சிரிப்புக்கு உள்குத்து எதுவும் இல்லை

தொடந்து எழுதும் அனைத்து பெண் பதிவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். யாராவது விட்டுப்போயிருந்தால் சொல்லவும், சேர்த்துவிடுகிறேன்.

சே!! ஏதாவ்து ரெண்டு பெய்ரை விட்டுவிட்டு எழுதியிருந்தால் பெண் பதிவர்களின் ஒற்றுமையை நேரடியாக அனுபவித்திருக்கலாம். தப்பு ப்ண்ணிடீங்களே சீடி? :-)

எப்படியோ, பொம்பளைங்க எல்லாம் நல்லா இருங்க!!

சாத்தான்குளத்தான்

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

உஷாக்கா நன்றி.உங்க கருத்துக்கள் எல்லாம் எனக்கும் உடன்பாடே .இந்த கலகமே 'நாரதர்களால்' தான் பிறக்கிறது.
பாருங்க 'கும்பி' ன்னு நீங்க பண்ண டைப்பிங் மிஸ்டேக் வச்சி இந்த லக்கியும்,கொத்ஸும் எப்படி 'கும்மி' கொட்டுறாங்க.[லக்கி &கொத்ஸ் டோன்ட் மிஸ்டேக் மீ சும்மா ட்டமாஸு]

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

சுய அறிமுகம்!
ப்ளாக்குக்கு புது வரவு
வேண்டும் உங்கள் உறவு
பதிவுகளோடு சந்திக்கிறேன் பெறவு
மாதர்தின வாழ்த்துக்கள்!!

நானானி

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

கொத்ஸ் சொல்வது போல் சேதுக்கரசி அவர்களையும் சேர்த்துக்க வேண்டும். அவர்கள் குழுமத்தில் அருமையாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//இந்த கலகமே 'நாரதர்களால்' தான் பிறக்கிறது.//

நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். ஆமா, அப்போ கலகம் தொடங்கிருச்சின்னு சொல்லறாங்களே. அது நிஜம்தானா? :)))

//[லக்கி &கொத்ஸ் டோன்ட் மிஸ்டேக் மீ சும்மா ட்டமாஸு]//

கண்மணி, நாங்க எதோ கும்மி அடிப்போம், அனாவசிய சச்சரவு செய்வோம், அனானி ஆட்டங்கள் ஆடுவோம், வேண்டாத அரசியல் பேசுவோம், பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்போம் (இதுக்கும் கும்மிக்கு வித்தியாசம் இருக்கா என்ன?) ஆனா அத்தனையும் தாண்டி ஒரு நகைச்சுவை உணர்வும் உண்டுங்க. அதனால சிரிப்பான் ஒண்ணு போட்டா போதும். புரிஞ்சுப்போம். இம்மாம் பெரிய டிஸ்கி எல்லாம் வேண்டாம்! :))

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உஷாக்கா, நீங்க இந்த ஒற்றுமை பத்தி எல்லாம் எழுதினதுனால உங்க கிட்ட கேட்கறேன். நம்ம இட்லி வடை இந்த பதிவு ஒண்ணு போட்டு இருக்காரு. அதுல பாருங்க வந்து இருக்கற எதிர்ப்பில் பெண்கள் எதிர்ப்புதான் அதிகம் இருக்கு. நமக்கு பிடிச்ச 5 பேரை சொல்லச் சொன்னா எதுக்குங்க இவ்வளவு எதிர்ப்பு? கொஞ்சம் விளக்குங்களேன்.

நான் 5 பெண்கள் பெயரைப் போட்டாச்சு, லிஸ்டில் நீங்களும் உண்டு. அதுனால் திட்டறதா இருந்தா கொஞ்சமாவே திட்டுங்க! :))

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

மற்றபடி அவர்களின் ஒற்றுமை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியதே!! அணைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

பொன்ஸ், கண்மணி, ஜெசிலா,முத்துலஷ்மி, அபி அப்பா! வருகைக்கும் கருத்துகளுக்கும், திருத்தங்களுக்கும் நன்றி.
புதுப்பாலம் ஆரம்ப வரிகளிலேயே மதி, துளசி என்று மரத்தடி நட்புகளைச் சொல்லியிருக்கிறேனே! எனக்கு அவங்க துளசி
மட்டுமே :-)

நானானி, வாங்க வாங்க. சீக்கிரம் பதிவுப் போட ஆரம்பிங்க.

ஸ்ரேயா, செல்லியை எப்படி மறந்தேன்? அங்க போடுகிற பழைய இலக்கிய சம்மந்தமான பதிவுகளுக்கு நான் விசிறி. இன்னும்
யாரையாவது விட்டு இருக்கிறேனே? எல்லாத்தையும் சேர்த்துவிடுகிறேன்.

இலவசம், நான் சொன்னா எப்பொழுதும் சரியாய்தான் இருக்கும் :-)

சேதுக்கரசி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இலவசத்துடன் சேர்ந்து நானும் உங்களை ஜோதியில் ஐக்கியம் ஆக அழைக்கிறோம் :-)))

லக்கி, இலவசம் திருத்திட்டேன். அது என்ன கும்மி என்றதும் டகால்னு வந்து ரெண்டு பேரூம் நிக்கிறீங்க :-)))))))))))
லக்கி, பொருள் விளக்கத்துக்கு நன்னி.

ஆசிப் அண்ணாச்சி, என்னத்தான் உள் குத்து இல்லைன்னு சொன்னாலும் மனசு நம்ப மறுக்குதுங்க.

இலவசம், கொஞ்சம் பொறுய்யா, வரேன் :-)

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//லக்கி, இலவசம் திருத்திட்டேன். அது என்ன கும்மி என்றதும் டகால்னு வந்து ரெண்டு பேரூம் நிக்கிறீங்க :-)))))))))))//

சுர்ர்ர்ர்ருன்ன்னு ஏறுதில்லை....

(பருத்திவீரன் கார்த்தி Slangல் படிக்கவும்)

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//மற்றபடி அவர்களின் ஒற்றுமை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியதே!!//

யோவ் அபி அப்பா, இது என்னய்யா உள்குத்து. ஏற்கனவே அவங்க வாசிச்ச லிஸ்டில் இந்த உள்குத்து வெச்சு எழுதறது ஒண்ணுதான் இல்லை. அதையும் சொல்லிக் குடுத்துருவீரு போல இருக்கே!!

// அணைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!//

அப்புறம் அனைவரும் அப்படின்னு எழுதணும். தப்பாக் கூட 'அணை'ன்னு சொன்னா விபரீதமாகிடும். ஜாக்கிரதை. :))

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//லக்கி, இலவசம் திருத்திட்டேன். அது என்ன கும்மி என்றதும் டகால்னு வந்து ரெண்டு பேரூம் நிக்கிறீங்க :-)))))))))))//

நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க டகால்ன்னு வந்து நிக்க? :))

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

சுர்ர்ர்ர்ருன்ன்னு ஏறுதில்லை....//

ஆஹா லக்கியாரே, இப்பத்தான் புரிஞ்சிது. இதன் பின்விளைவுகள்தான் இலவசம் அனுப்பிய ஏழு பின்னுட்டங்களா?

லக்கி, இலவசம், கும்மி என்பதன் பொருளாய் நான் நினைத்து எழுதியது அனானிமஸ் மற்றும் அதர் ஆப்ஷனில் பிற வலைப்பதிவர்களைப் பற்றி தரக்குறைவாய் எழுதுவதைதான் சொன்னேன்.

இலவசம், என்னமோ உள்குத்து பற்றி எனக்கு தெரியாது மாதிரி இல்லே பேசுறீரூ? சரித்திரத்தை புரட்டி பார் தம்பி :-)

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//இதில் நான் சந்தோஷமாய் குறிப்பிட வந்த விஷயம் கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை// நச் கமெண்ட். ரொம்ப நாள் கழிச்சு மகளிர் தினத்துக்குன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன், படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//லக்கி, இலவசம், கும்மி என்பதன் பொருளாய் நான் நினைத்து எழுதியது அனானிமஸ் மற்றும் அதர் ஆப்ஷனில் பிற வலைப்பதிவர்களைப் பற்றி தரக்குறைவாய் எழுதுவதைதான் சொன்னேன்.//

இப்பம் சரியா புரிஞ்சிரிச்சில்லா. இனி தப்பாச் சொல்லாதீக என்ன. நீங்க சொல்ல வாரீயள்ளா, அதுக்கு பேரு என்னான்னு தெரியுமா? அதாங்க தனிநபர் தாக்குதல். இதையும் தெரிஞ்சு வெச்சுக்கிடுங்க என்ன.

அட பேரை மட்டுந்தான் சொன்னேன், நீங்க வேற போயி நாந்தேன் சொன்னேன்னு யாரையாவது பிடிச்சு ஏசிப்பிடாதீக. சரிதானே.

நம்பர் 8!

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க டகால்ன்னு வந்து நிக்க? :))//

ஆமா! (கும்பின்னு) அது டைப்பிங் மிஸ்டேக். என்னுடயது ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

//இலவசம், என்னமோ உள்குத்து பற்றி எனக்கு தெரியாது மாதிரி இல்லே பேசுறீரூ? சரித்திரத்தை புரட்டி பார் தம்பி :-)//

நமக்கு தெரிஞ்ச சரித்திரம் எல்லாம் அசோகர் ரோட்டோரம் மரம் நட்டார்தான். (நாடார் இல்லைங்க நட்டார் சரியா படியுங்க. அப்புறம் மரம் நடறது, வெட்டறதுன்னு இங்க வந்து ஜாதி அரசியல் பேசறேன்னு சொல்லிடப் போறீங்க) அதை பொரட்டிப் பார்த்தா இலைதளை எல்லாம் மண்ணுக்குள்ள போயி வேரெல்லாம் வெளியா தெரியாதா? அது நல்லாவா இருக்கு?

ஆமா உள்குத்துக்கும் இதுக்கும் என்ன முடிச்சு? ஒண்ணும் புரியலையே. :)

பத்துக்கு ஒண்ணு கம்மி!

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

அன்றொருநாள் உங்க வீட்டுப்பக்கம் வந்தன் பெரிய பூட்டுப்போட்டு பூட்டியிருந்திச்சு.எங்கயோ போயிட்டிங்க என்று நினைச்சன்.

நலமா மாம் :-)))

அப்புறம் எல்லாருக்கும் மகளிர் தின வாழத்துக்கள்.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

பன்னாட்டு மாதர் தின வாழ்த்துக்கள், உஷா அவர்களே.

இந்த சமயத்திலே உங்கள் மனம் குளிரும்படி ஒரு விடயம் சொல்லிவிடுகிறேன். உங்கள் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். கவிதை எழுதுவதில் நீங்கள்தான் எனது மானசீக குரு :)

அடிக்கடி கவிதை எழுதுமாறு விண்ணப்பிக்கிறேன்.

 
At Wednesday, 07 March, 2007, சொல்வது...

கீதா மேடம் பேரை யாரும் முன்மொழியாததால் நான் பின்னூட்டமொழிகிறேன் :)

// ஆசிப் மீரான் said...
//2007ம் ஆண்டு மகளிர்தினத்தில் இந்தக் கட்டுரையை மன நிறைவுடன் பதிவு செய்கிறேன். இன்றுப் போல் என்றும் இந்த ஒற்றுமை நீடித்து இருக்க பெண் பதிவாளர்கள் உறுதியாய் இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். //

நானும் :-)
இந்த சிரிப்புக்கு உள்குத்து எதுவும் இல்லை//

:)))))))

இதுதான் பின்னூட்ட சிரிப்பு

சென்ஷி

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

இலவசம்,
//நம்ம இட்லி வடை இந்த பதிவு ஒண்ணு போட்டு இருக்காரு. அதுல பாருங்க வந்து இருக்கற எதிர்ப்பில் பெண்கள் எதிர்ப்புதான் அதிகம் இருக்கு. //

டெக்னிகலா ஒர் கொஸ்டின்,
1) டாப்னா, எதுல டாப்? எப்படி டாப்? க்ரைட்டீரியா என்ன?
2) அப்புறம், இந்தமாதிரி "போட்டி மனப்பான்மை" ஆண்களோட characteristic குணம். நீங்களே வைச்சுக்கங்க. உங்களோட நிறைய பிரச்சினைகளுக்கு இந்த "ஸ்பெஷல்" குணம்தான் காரணம்.
3) பயப்பட்டுக்கிட்டுத்தான் பெண்கள் எதிர்குரல் விட்டாங்கன்னு நினைக்கிறதுக்கு காரணமே உங்களோட இந்த "ஸ்பெஷல்" குணம்தான் காரணம்.
4)இன்னும் நிறய இருக்கு. ஆனா, பொண்ணுங்களுக்கெல்லாம் வேல அதிகம். இட்லி மாதிரி வெட்டியா இல்ல.
5) சந்தோச மனநிலையைக் கொடுக்கிறமாதிரி வாழ்த்திட்டு மட்டும் போகாம, இப்படி கோபம் உண்டுபண்ணிவிட்டுட்டுப் போற ஆணின் "ஸ்பெஷல்", மற்றும் "புத்திசாலித்தனமான" ஸ்பெஷல் குணங்களைக் கொண்ட இலவசம் மற்றும் சாத்தான்(குளத்தான்) இன்னும் வரபோகும் மற்றும்பல "the great"களும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.


@உஷா,
நிறயபேர் விட்டிருக்கு. ஆனா லிஸ்ட் கொடுக்க பெரிசா தோணல எனக்கு. மதி ஒரு லிஸ்ட் போட்டிருக்காங்க பாருங்க. அதிலயும் சிலர் விட்டுப்போயிருந்தது, ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன்.

ஆமா, ஆங்கிலத்தில எழுதுற பொண்ணுங்கள ஏன் சேர்த்துக்கிறதில்ல பொதுவாவே?

@இலவசம் again,
எல்லத்துக்கும் மேல, இலவசம், கடைசியா ஒண்ணு சொல்றேன். ஆம்பிளைங்களோட புத்திசாலித்தனமான மூளைக்கு இது எட்டும்கிற நம்பிக்கை வைக்கிற அளவுக்கெல்லாம் நான் புத்திசாலி இல்லை.
அதாகப்பட்டது, "பெண்கள் இருவர் சேர்ந்தால் சண்டை அவர்களிடம் ஒற்றுமையே இருக்காது, வம்பு தும்பு பேசுவார்கள்" அப்படிங்கிறத, 1)is not true. 2)"கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது" போன்ற உயர்வான வேலைகளை நாங்கள் பொதுவாக செய்வதில்லை என்பதுதான் கன்குளூஷன். "சண்டை போடவே மாட்டோம்", என்பது அப்நார்மல். you see, we are just normal people. ஆம்பிளைங்க அளவுக்கு அப்நார்மல்லாம் கிடையாது.
நன்றி. வணக்கம். (சிரிப்பான் போடும் எண்ணம் இல்லை).

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

நான் ரொம்ப லேட்டா வரேன் உஷாஜி, பொன்ஸ் சொன்னமாதிரி அனிதா வா நீங்க முதல்ல சொல்லிட்டு பிறகு என்னை சொல்லி இருக்கலாம்.. அது இன்னும் நோட் பண்ணல, பண்ணா.. உங்க கிட்ட சண்டைக்கு வந்து நிக்க போகுது..!! :)

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

எல்லா பதிவர்களுக்கு உஷாஜி பதிவுல.. "மகளிர் தின நல்வாழ்த்துக்களை" தெரிவித்து கொள்கிறோம்.. - கவிதா & அனிதா

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

மகளிர்தின வாழ்த்துக்கள் ! பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமில்லை, மேன்மையானவர்கள் எனவும் கூறியிருக்கிறீர்கள்.
எங்கள் காரமும் உங்கள் சாரமும் இருந்தால்தானே விருந்து :)

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

இலவசம்,சாத்தான்(குளத்தான்), நீங்க ரெண்டுபேரும் MCP கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சிலசமயம் "நல்லா இருங்க"ன்னு மட்டும் வாழ்த்திட்டுப் போற psychology தெரிஞ்சிருக்கணும். "என்ன இன்னைக்கு டல்லா இருக்கீங்க"ன்னு நல்லா இருக்கிற யாரையாவது கேட்டுப் பாருங்க கொஞ்ச நேரத்துல கண்டிப்பா டல்லாகிடுவான். (எப்பயாவது யாரியாவது போட்டுப்பாக்கணும்னா யூஸ் பண்ணிக்குங்க :-) ). காலங்காத்தால காப்பி குடிக்க உட்கார்ந்தா கோபத்த உண்டு பண்ணிட்டீங்க (முக்கியமா அந்த இட்லி).

இப்போ போட்டுக்கங்க ஒரு சிரிப்பான். peace.
பதிலுக்கு கோபம் உண்டுபண்றமாதிரி பின்னூட்டம் போட்டதுக்கு மன்னிக்கவும்.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

கடைசியா ஒண்ணு சொல்றேன். ஆம்பிளைங்களோட புத்திசாலித்தனமான மூளைக்கு இது எட்டும்கிற நம்பிக்கை வைக்கிற அளவுக்கெல்லாம் நான் புத்திசாலி இல்லை//

பிரேமலதா, காலை மானிட்டராண்ட காட்டுங்க கும்புட்டுகிறேன். யக்கா! இனி நா சொல்ல என்ன இருக்கு? சிரிச்சி, சிரிச்சி வயிறு வலிக்குது :-)
மத்தவங்களுக்கு அப்பால வரேன்.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//@இலவசம் again,
எல்லத்துக்கும் மேல, இலவசம், கடைசியா ஒண்ணு சொல்றேன். ஆம்பிளைங்களோட புத்திசாலித்தனமான மூளைக்கு இது எட்டும்கிற நம்பிக்கை வைக்கிற அளவுக்கெல்லாம் நான் புத்திசாலி இல்லை. //

நான் நம்புறேன்.. நீங்க புத்திசாலியில்லன்னு

சென்ஷி

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

வழிப்போக்கன், கவிதைக்கு நான் குருவா? இப்படி வெளியே எல்லாம் சொல்லிடாதீங்க. எதுக்கு வம்பு, இந்த மேட்டரை நம்மோட வெச்சிப்போம் :-) முன்னாடி ஒரு கமெண்ட்டில் நீங்கள் பர்சனலாய் எழுதியதற்கு அதில் இருந்த மெயில் ஐடிக்கு
போட்ட ரிப்ளை பவுன்ஸ் ஆகிவிட்டது. அதிக அறிமுகமில்லாவர்கள் சொல்லும் இத்தகைய ஊக்குவிப்புகள் எழுத தரும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. நன்றி திரு. வழிப்போக்கன்.

சென்ஷி, கீதா என்பது கீதா சாம்பசிவம் மேடத்தைதானே சொல்கிறீர்கள். அவர் பெயர் இருக்கிறதே?

தாணு, உங்க பதிவு கண்ணில்படவில்லை. படித்துவிட்டு சொல்கிறேன்.

இலவசம், கும்மி என்பது வெறும் தனிநபர் தாக்குதல் மட்டுமல்ல. இத்துடன் போதும் விளக்கம் கொடுத்தால் கதை வேறு
திசையில் பயணிக்கும். எனக்கெல்ல்லாம் இருபது பின்னுட்டம் தாண்டினாவே கிறுகிறுன்னு வருது.

அபி அப்பா, ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆனாலும், நாங்க சரியாய்தான் புரிஞ்சிப்போம் :-)

சிநேகிதி, இப்ப லீவில்தான் இருக்கிறேன் :-) இது ரொம்ப நாளா சொல்ல நினைத்தது. இன்று சொன்னால்
பொறுத்தமாய் இருக்கும் என்று மடமடவென்று எழுதி விட்டேன்.

கவிதா, அனிதாக்கும் எனக்கு இருக்கும் பாசபிணைப்பை தெரியாம பேசாதீங்க :-(

மணியன், பெண்கள் மென்மையானவர்கள் என்று கவிஞர்கள் புளுகியதை எல்லாம் நம்பாதீர்கள். எல்லை மீறினால், காளி அவதாரம் எடுத்து வகுந்திடவும் தயங்க மாட்டாள் :-)

சென்ஷி, புத்திசாலி இல்லைதான், உங்களவு என்பதை சேர்த்துக்கொள்ள மறந்திடாதீங்க ;-))))))))))))))))))))

பிரேமலதா, கூல் டவுன். இப்ப என்ன ஆச்சு? இதை எல்லாம் சீரீயசாய் எடுத்துக்காதீங்க.பாவம், அவங்க
சீரீயசா எழுதினாக்கூட நான் சிரிச்சிக்கிட்டு போவேன். வாழ்க்கையில் இதெல்லாம் காமெடிங்க. ரசியுங்க :-)

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

ஆமாங்க பெண் பதிவர்கள் இணையங்களில் சண்டையோ, சச்சரவோ போட்டுக்கொண்டதில்லை, (ஜெசீலாக்கா உண்மைதானே??) வெட்டியாக கும்மியும் அடிப்பதில்லை! ஏன்னா அவங்களுக்கு பல வேலைகளுக்கு இடையில கிடைக்குற கொஞ்ச நேரத்தையும் மத்தவங்கள ஊக்கப்படுத்தறதிலயும், கருத்துக்களை சொல்வதிலும் செலவிடுறாங்க! எங்கள மாதிரி நிறைய நேரம் இணையத்துல செலவிடுற மாதிரி ஆச்சுன்னா ஒரு வேளை எந்த எண்ணம் வருமோ!
:))
ஸ்மைலியெல்லாம் போட்டுருக்கேன், சீரியசா எடுத்துக்கப்படாது

இங்கு வந்திருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். மேன்மேலும் உங்கள் பங்களிப்புகள் தொடரட்டும்.

அன்புடன்
தம்பி

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

தம்பி, கருத்து மோதல்களை, அபிப்ராய வித்தியாசங்களை அவரவர் பெயர்களிலும், எழுது பெயரில் சொல்வதில்லை தப்பில்லை. எங்களுக்கு கருத்து வேற்றுமை இல்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் அதீத அத்துமீறல்களை வார்த்தைகளில் காட்டவில்லை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

@தம்பி,
//எங்கள மாதிரி நிறைய நேரம் இணையத்துல செலவிடுற மாதிரி ஆச்சுன்னா ஒரு வேளை எந்த எண்ணம் வருமோ!
:))
//

you see, idle mind is devil's workshop. உருப்படியா வேலை, வாழ்க்கை வேலை-ன்னு ஓடுனா, இந்தமாதிரி வலைப்பதிவு சம்பத்தப்பட்ட பிரச்சினையெல்லாம் வராது.
சிரிப்பான் போட்டு போட்டு சிரிச்சு சிரிச்சு லூசுன்னு நினைச்சுக்கப் போறாங்க. :))))))))))
பாருங்க, நானும் ஸ்மைலிலாம் போட்டிருக்கேன், ஸீரியஸ்ஸாலாம் எடுத்துக்கப்படாது.உஷா, கொஞ்சம் வேலை. அப்பால வரேன். மீ கூலோ கூல். நோ ப்ராப்ஸ். செம பார்ம்ல இருக்கேன். வெளில வெயிலடிக்குது. வீட்டுல வேல செய்றவன் (ceiling repair) பயங்கரம் flirt பண்றான். வேலைக்குப் போகாம வீட்டுல இருந்து என்ஸாய் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்போ வெளில போறேன். ஸோ, ஸூ யூ லேட்டர். வர்ட்டா.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//நான் நம்புறேன்.. நீங்க புத்திசாலியில்லன்னு//

நான் என்னா பண்ணுவேன் இப்போ, இப்படி சென்ஷி அய்யா சொல்லிட்டாரு. சென்ஷியே சொல்லிட்டாரு. அயகோ. அம்மகோ. I am crying.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

இது வரைக்கும் ஒத்துமையா இருந்தீங்க சந்தோஷம்....ஹி...ஹி...இன்னிக்கு எல்லாரும் ஒன்னுபோல அந்த ஒத்துமை மேல கண்ணூ போட்ருக்கீங்க்க.....என்ன ஆவப்போவுதோ...ஹி..ஹி....
(எதோ நம்மால முடிஞ்சது...ஹி..ஹி...கிள்ளிப் போட்டுட்டேன்.)

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

எங்கே ரேவதி நரசிம்மன்?

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

இவ்வளவு நேரம் பேசினோமே, யாரும் வந்து கேள்வி கேட்க ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். வாங்க பிரேமலதாக்கா. படிச்சிட்டு டென்ஷனாகிட்டீங்க போல இருக்கு. அப்புறம் காபி கீபி சாப்பிட்டு ரிலாக்ஸ் ஆகிட்டீங்க. இப்போ கொஞ்சம் பொறுமையா மேட்டரைப் பாக்கலாமா?

இட்லிவடை என்ன கேட்டாரு? உங்களுக்குப் பிடிச்சு இருக்கிற டாப் பெண் வலைப்பதிவாளர்கள் யாருன்னு சொல்லுங்க அப்படின்னாரு. சொல்லப் பிடிக்குதா சொல்லலாம். இல்லையா சொல்ல வேண்டாம். அது ஒண்ணும் வலையுலகின் அதிகாரபூர்வ ரேட்டிங் இல்லையே!

ஆனா அதுக்கு வந்திருக்கிற பதில்களைப் பாருங்க.

//இது ஒரு மாதிரி நீ பெரிது நான் பெரிது என்று நினைத்துக்கொள்ளத் தூண்டாதா...?//

//ஒற்றுமையை பிரித்து விடாதீர்கள் !! //

இது எதனால்? சர்வேசன் டாப் பதிவாளர் யார் அப்படின்னு போட்டி நடத்தும் பொழுதோ, இண்டிபிளாக்கீஸ் தேர்தலின் போதோ இந்த மாதிரி சத்தம் வரவில்லையே. அது ஏன்?

சரி போகட்டும். இப்போ உங்க கேள்விகளையே கூட எடுத்துக்கலாம்.

1) டாப்னா, எதுல டாப்? எப்படி டாப்? க்ரைட்டீரியா என்ன?

உங்களுக்குப் பிடித்த மாதிரி எழுதும் 5 பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் நீங்க நினைக்கும் க்ரைட்டீரியாதான். அவர் செய்யப் போவது, இத்தனை பேர் வோட்டு போட்டு இருக்காங்க. இவங்க இவங்களுக்கு இவ்வளவு வோட்டுன்னு சொல்லப் போறாரு.

2) அப்புறம், இந்தமாதிரி "போட்டி மனப்பான்மை" ஆண்களோட characteristic குணம். நீங்களே வைச்சுக்கங்க. உங்களோட நிறைய பிரச்சினைகளுக்கு இந்த "ஸ்பெஷல்" குணம்தான் காரணம்.

அதாவது போட்டி மனப்பான்மை ஆண்களுக்கே உரியதுன்னு சொல்ல வறீங்களா பிரேமலதாக்கா? நீங்களே இதை திரும்பி படிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வரல? இல்லை, நான் சொல்வது சரிதான் அப்படின்னு நீங்க மறுபடியும் சொன்னீங்கன்னா, உங்க கனவுலகைக் கலைக்க நான் வரலை.

3) பயப்பட்டுக்கிட்டுத்தான் பெண்கள் எதிர்குரல் விட்டாங்கன்னு நினைக்கிறதுக்கு காரணமே உங்களோட இந்த "ஸ்பெஷல்" குணம்தான் காரணம்.

யாரோ, அல்லது உங்க பாஷையில் சொல்லணுமுன்னா வெட்டியா இருக்கிற இட்லி, ஒரு போட்டி வைக்கிறாரு அதுனால உங்களுக்கு உள்ள உயர்வு தாழ்வு வந்திடும், ஒற்றுமை குலைந்திடும் அப்படின்னு எல்லாம் பேசினது ஆண்கள்தானோ? உங்க ஒற்றுமை என்ன அவ்வளவு Fragileஆ?

4)இன்னும் நிறய இருக்கு. ஆனா, பொண்ணுங்களுக்கெல்லாம் வேல அதிகம். இட்லி மாதிரி வெட்டியா இல்ல.

சரிதாங்க. எப்பவாவது கொஞ்சம் நேரம் கிடைக்கும் பொழுது சொல்லுங்க. பேசலாம். இந்த வலைப்பதிவு செய்யறது எல்லாம் நமக்கு பொழுது இருக்கும் போது மட்டும்தான். அந்த விஷயத்தில் அட்லீஸ்ட் ஒண்ணா இருக்கோமே. இருக்கட்டும். அப்படி இருக்கும் போது இட்லி வெட்டியா இருக்காருன்னு நீங்க எழுதறது வந்து கும்மி (உஷாக்கா டெபனிஷன் படி) இல்லைங்களா? உஷாக்கா,இதுக்கு நீங்க என்ன சொல்ல வறீங்க?

5) சந்தோச மனநிலையைக் கொடுக்கிறமாதிரி வாழ்த்திட்டு மட்டும் போகாம, இப்படி கோபம் உண்டுபண்ணிவிட்டுட்டுப் போற ஆணின் "ஸ்பெஷல்", மற்றும் "புத்திசாலித்தனமான" ஸ்பெஷல் குணங்களைக் கொண்ட இலவசம் மற்றும் சாத்தான்(குளத்தான்) இன்னும் வரபோகும் மற்றும்பல "the great"களும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.

பிரேமலதாக்கா, உங்களை வாழ்த்திப் பதிவே போட்டு இருக்கோம். இங்க கொஞ்சம் வந்து பாருங்க. (உஷாக்கா, இலவச விளம்பரத்துக்கு நன்றி.) ஆனா பாருங்க, எல்லா சராசரி மனிதர்கள் கிட்ட இருக்கற குணங்கள் எதுவுமே பெண் பதிவர்கள் இடையே இல்லை அப்படின்னு உஷாக்கா சொன்னாங்க பாருங்க. அதுதான் கொஞ்சம் இடிச்சுது. முதலில் ஒவ்வொரு குணத்துக்கும் எடுத்துக்காட்டா பதிவுகளைப் போடலாமுன்னுதான் இருந்தேன். ஆனா அது அவங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கற மாதிரி ஆகிடும் அப்படின்னு தோணினதுனாலதான் நிறுத்தினேன்.

மத்தபடி நான் சொல்லறது எல்லாம் சொல்லுவேன், அதை நீ எதிர்கருத்து சொல்லாம கேட்டுக்கணும். நீ மட்டும் ஒரு கேள்வி கேட்டாலோ அல்லது கொஞ்சம் சிரிப்பா எதாவது சொன்னாலோ நாங்க அதுக்கு கோபம் வந்து நீங்க அடைப்புக்குறிக்குள்ள ஸ்பெஷல், புத்திசாலி அப்படின்னு எல்லாம் போட்டு என்ன வேணா சொல்லலாம். அது வந்து உங்க ரூல்ஸ் படி அனுமதிக்கப் பட்ட அளவினுள் இருக்கு. இல்லையா? வெரி குட்.

//you see, we are just normal people. ஆம்பிளைங்க அளவுக்கு அப்நார்மல்லாம் கிடையாது.
நன்றி. வணக்கம். (சிரிப்பான் போடும் எண்ணம் இல்லை).//

இதுதாங்க மேட்டர். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. நார்மலா இருக்குறவங்க எல்லாரும், ஆம்பிள்ளையானாலும் சரி, பெண்பிள்ளையானாலும் சரி, சில நேரங்களில் சில இடங்களில், கும்மி, பாலிடிக்ஸ், வம்பு தும்பு எல்லாம் செய்யத்தான் செய்வாங்க. அதெல்லாம் இல்லை. அது ஆண்கள் மட்டுமே செய்வாங்க. பெண்கள் செய்ய மாட்டாங்கன்னு உஷாக்கா சொன்னதும், இப்போ நீங்க அதையே உங்க கன்க்ளூஷனா சொல்வதும்தான், முரணா இருக்கு. அதைச் சொல்ல வந்த எனக்கு நீங்க குடுத்த புத்திசாலி பட்டம் நல்லாவே இருக்கு. நன்றி.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

எல்லாத்துக்கும் என் வாழ்த்துக்கள்.

முதல வாழ்த்து சொல்லிட்டு போறேன். அப்பால கருத்து சொல்ல வரேன். கொஞ்சம் காபி குடிச்சுட்டு ரிலாக்ஸ் வரேன்.....

தலைவா, கொத்துஸ் நீரும் வாரும், ஒரு நல்ல காப்பி குடிச்சுட்டு வருவோம். தெம்பா அடி வாங்கனும்ல நீர்.... :-))))

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

ஜல்லி, கும்மி எல்லாம் பெண்கள் அடிப்பது இல்லையா?

தமிழ் மணத்தை விட்டு கொஞ்சம் வெளியே ஒரு ரவுண்ட அடிச்சு பாருங்க தெரியும்.

அது தப்புனு நான் சொல்ல வரல, யாருக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய தான் பிளாக். இங்கயும் இப்படி இருக்கனும், அப்படி தான் எழுதனும் சொல்லுறது சரி கிடையாதே!

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

அப்புறம் பிரேமலதாக்கா, உங்க இரண்டாவது பின்னூட்டத்துக்குப் போகலாமா? நானாகட்டும் நம்ம மட குரு சாத்தாங்குளத்தாராகட்டும் MCP இல்லை அப்படின்னு நினைச்சதுக்கு நன்றிங்க. ஆனாலும் ஒரு டவுட்டுங்க. அப்படின்னா உங்க விளக்கம் என்னங்க? ஏன் கேட்கறேன்னா, இந்த பதிவைப் பத்தி பார்க்கும் பொழுது பெண்களை விமர்சனம் செய்ய வந்தாலே இந்த பட்டம் கிடைச்சுடுமோன்னு சந்தேகமா இருக்கு. நீங்க நாங்க ரெண்டு பேரும் அப்படி இல்லைன்னு நினைக்கறது எப்படி எனக்குத் தோணுதுன்னா - Inspite of whatever you have said here, I dont think you guys are MCPs அப்படின்னு பொருள் வரா மாதிரி இருக்குங்குங்க. பெண்களும் சராசரி மனிதர்களே, அவர்களுக்கும் ஆசை, பாசம், நேசம், சண்டை, சச்சரவு, கலாட்டா, குறும்பு, அரசியல் எல்லாம் இருக்கு, இதை எல்லாம் துறந்த முனிவர்கள் ரேஞ்சில் இல்லை அப்படின்னு சொன்னா MCPங்களா? இம்புட்டு சந்தேகம் வருது பாருங்க. எதுக்கும் தெளிவா ஒரு விளக்கம் சொல்லிடுங்க.

அப்புறம் ஒரு நல்ல நாள் கிழமைன்னா, வந்து வாழ்த்துச் சொல்லறது வந்து Decency அப்படின்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா அதுக்கு என்னமோ பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லறீங்க. நானும் அந்த மாதிரி வாழ்த்து சொல்லாம இல்லை. முதலில் செஞ்ச வேலை அதுதான். இருக்கட்டும். அதுல பாருங்க, இவ்வளவு எல்லாம் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க ஆனா ஒரு சின்ன விமர்சனம் அப்படின்னு வந்துட்டா மட்டும் ஏன் இப்படி கோபம் தலைக்கேறி நிதானம் இல்லாம போகுது? சரி, அப்படியே கோபம் வந்துதா, கணினி கிட்ட இல்லாம எழுந்து போயி இந்த காப்பியைக் குடிச்சிட்டு நிதானமா வந்து பார்த்தா அது வெறும் பதிவைப் பத்தின விமர்சனமா அல்லது ஆணாதிக்க அலட்டலான்னு புரிஞ்சு இருக்குமில்ல. சரி போகட்டும்.

அப்படி என்னங்க இட்லியார் மேல கோபம் அது எனக்கு இன்னும் புரியலை. அவரு அப்படி என்னங்க சொல்லிட்டாரு உங்களுக்கு இவ்வளவு கோபம் வரதுக்கு? உண்மையிலேயே புரியலை. ஒரு வேளை நீங்க நினைச்ச அளவு நான் 'புத்திசாலி' இல்லையோ என்னமோ!! கொஞ்சம் விபரமாத்தான் சொல்லுங்களேன். உங்களுக்குப் பிடிச்ச பெண் வலைப்பதிவர்கள் 5 பேரு யாருன்னு கேட்கறது அவ்வளவு பெரிய தப்பா? Or am I missing something here? நான் வேற அங்க போயி ஒரு லிஸ்டை நீட்டிட்டு வந்துட்டேனே! லிஸ்ட் குடுத்ததுக்காக வேற ஸ்பெஷலா எதாவது பட்டம் எல்லாம் குடுத்துட மாட்டீங்களே! இப்போ எல்லாம் எல்லாத்துக்கும் பயமா இருக்கு. நம்மளை இப்படிப் பண்ணிட்டீங்களே!!

உங்க பின்னூட்டம் எல்லாம் பாத்து எனக்கு கோபம் எல்லாம் வரலைங்க. அதனால மன்னிப்பு எல்லாம் வேண்டாம். அதுவும் பாருங்க, உங்க கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமை இருக்கு. நம்ம எல்லாரும் கொஞ்ச நாகரீகமா எழுதணுமுன்னு பார்க்கறதுனால நம்ம கருத்தைச் சொல்லும் போது அடுத்தவங்க மனம் புண்படக்கூடாதேன்னு ஒரு உள்ளுணர்வு இருந்துக்கிட்டே இருக்கு. உங்களுக்கும் இருக்கு, எனக்கும் இருக்கு. அதனாலதான் இந்த மன்னிப்பு எல்லாம். ஆனா அதுக்காக மாற்றுக் கருத்தே சொல்லக்கூடாதுன்னு இல்லை. ஆரோக்கியமான விவாதமா என்ன வேணாலும் சொல்லலாம். ரொம்ப கோவம் வந்திச்சுன்னா அந்த உள்ளுணர்வு காணாம போயிடும். அதனால அதிகம் கோபம் வேண்டாம். நிதானமா பேசலாம், நல்ல படியா பேசலாம். எடுத்தோம் கவுத்தோமுன்னு எதையாவது சொல்லிட்டு அப்புறம் நான் எதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்குங்கன்னு சொல்ல வேண்டாம். இல்லையா?

ஆகவே மக்கள்களே, பிரேமலதா அக்கா மாதிரி நானும் கன்க்ளூஷன் சொல்லணுமுன்னா பெண்களும் ஆசை, பாசம், நேசம், சண்டை, சச்சரவு, கலாட்டா, குறும்பு, அரசியல் எல்லாம் இருக்கிறவங்கதான். அது எல்லாம் இல்லை அப்படின்னு ஒரு புனித பிம்ப (அப்பாடா! நானும் இந்த வார்த்தையை எங்கையாவது சொல்லணுமுன்னு நினைச்சேன், சொல்லிட்டேன்) வேஷம் போட்டுக்கிட்டீங்கன்னா உங்களையே நீங்க ஏமாத்திக்கறதாத்தான் அர்த்தம். சிரிப்பான் எல்லாம் போடலைங்க. சீரியஸாத்தான் சொல்லறேன்.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//ஜல்லி, கும்மி எல்லாம் பெண்கள் அடிப்பது இல்லையா?

தமிழ் மணத்தை விட்டு கொஞ்சம் வெளியே ஒரு ரவுண்ட அடிச்சு பாருங்க தெரியும்.//

ஏன் சிவா, இங்க அடிக்கிறதே இல்லையா? :))

//அது தப்புனு நான் சொல்ல வரல, யாருக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய தான் பிளாக்.//

அதே. அது மாதிரி நாங்க இதெல்லாம் செய்யறதே இல்லைன்னும் சொல்ல வேண்டாம். :))

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//டாப்னா, எதுல டாப்? எப்படி டாப்? க்ரைட்டீரியா என்ன?//

இதுக்கு கொத்ஸ் பதில் சொல்லிட்டார். அதான் என் பதிலும்....

//அப்புறம், இந்தமாதிரி "போட்டி மனப்பான்மை" ஆண்களோட characteristic குணம். நீங்களே வைச்சுக்கங்க. உங்களோட நிறைய பிரச்சினைகளுக்கு இந்த "ஸ்பெஷல்" குணம்தான் காரணம்.//

இது எங்களுக்கு மட்டும் உள்ள குணம் ஒரு பட்டம் கொடுத்து இருக்கீங்க. ரொம்ப நன்றிங்க. இதை இல்லனு சொல்ல போறது இல்ல. போட்டி இருக்கனும், போட்டி போட்டு தான் ஜெயிக்கனும். பொறாமை தான் இருக்க கூடாது.

ஒரு உதாரணம் பாருங்க, பள்ளி, கல்லூரியில் பெரும்பாலும் பரீட்சைக்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி போய் பொண்ணுங்க கிட்ட கேளுங்க, ஏய் எல்லாம் படிச்சிட்டியானு, முக்கால்வாசி அட இல்லப்பா, ஒன்னுமே படிக்கல ரொம்ப பயமா இருக்குனு டயலாக் வரும். அதே பசங்ககிட்ட இருந்து கால்வாசி தான் வரும். ரிசல்ட் பாத்தா உல்டா இருக்கும். அங்க முக்கால்வாசி நல்ல மார்க் வாங்கி இருக்கும், இங்க கால் வாசி தான்.

படிச்சா படிச்சேன், படிக்காட்டி படிக்கல அப்படினு சொல்லுறதிலே பாருங்க எப்படிப்பட்ட மன்பான்மைனு....

நம்ம பய புள்ளகளுக்கு இந்த மார்க் விசயத்தில் போதும் என்ற மனம் ரொம்பவே உண்டு. ஆனா அங்குட்டு பாருங்க க்ளோஸ் பிரண்ட் கூட மார்க் எடுத்தா கூட அவள விட அடுத்த தடவை கூட மார்க் எடுக்கனும் அப்படினு ஒரு மனப்பான்மை பெரும்பாலும் பெண்களுக்கு தான் உண்டுனு என்னால் உறுதியா கூற முடியுங்க...

மார்க் எடுக்குறது வாழ்க்கையில் இருக்குற போட்டி மனப்பான்மையும் போட்டு குழப்பிக்காத அப்படி யாரும் ஜல்லி அடிக்காதீங்க ப்ளிஸ்... இது எல்லாத்துக்கு தான்.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//ஏன் சிவா, இங்க அடிக்கிறதே இல்லையா? :))//

இங்க சொன்னா மொத்திடுவாங்களோனு ஒரு பயம் தான் :-)))))))

ஒரு வேளை ஜல்லி அடிப்பது என்றால் என்னனு தெரியாமலே ஜல்லி அடிச்சு இருப்பாங்களோ சில பேர்.....

அது போகட்டும் ஆபிஸ் ல வேலையில்லையா என்ன, பதிவு போட வேண்டியதை எல்லாம் பின்னூட்டமா போட்டுக்கிட்டு இருக்கீங்க.... இதே வேலையா போச்சுய்யா உமக்கு ;-))))

இங்க பாரும்மய்யா, உம்மக்கிட்ட பேசியபடியே ஒரு ஜல்லிக்கு ஒரு எ.கா. காட்டியாச்சு. :-))))))

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//இங்க பாரும்மய்யா, உம்மக்கிட்ட பேசியபடியே ஒரு ஜல்லிக்கு ஒரு எ.கா. காட்டியாச்சு. :-))))))//

ஆஹா! இம்புட்டுக் கஷ்டப்பட்டேன். கடைசி நேரத்தில் வந்து 50 நீ அடிச்சுட்டியே புலி!!!

இன்னுமொரு எடுத்துக்காட்டு!! ;-)

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

இலவசம், பெண்களை வைச்சு ஜோக் அடிக்கும் இட்லியின் நகைச்சுவை உணர்வு is not nice. இது இட்லியோட சில பதிவுகளைக் கவனித்ததில் வந்த profiling.

எடுத்தோம் கவுத்தோம்னு பேசிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்கல, மரியாதைக்காக மற்றவங்க நல்ல மூடை கெடுக்காம போகணும், நீங்க செஞ்ச தப்பை நானும் பண்ண விரும்பாத என்மேல உள்ள நல்ல எண்ணத்துல "I am sorry"னு சொன்னேன். Don't flatter yourself too much and don't push your luck too much.

பொங்கிட்டீங்க போலிருக்கு. உங்க பின்னூட்டம் முழுசா படிக்கல. அங்கிங்கன்னு மேய்ஞ்சேன். அதனால பாயிண்ட் பாயிண்டா பதில் சொல்ல முடியாது. அப்புறமா பதில் சொல்ற எண்ணமும் இல்லை.
I do not think you are MCPங்கிறது i know you didn't mean it that wayனு அர்த்தம். that is all it is. also, profiling comes into help there.

மேல சொன்னமாதிரி எல்லாத்துக்கும் பதில் போட முடியல என்னால. பொங்காதீங்க. நான் பொங்கவல்லாம் இல்ல. மீ நோ டென்சன். யூ டூ டோண்ட் கெட் டென்சன்..

btw, MCPனா எனக்கும் என்னான்னு தெரியாது. ரீஜண்ட்டாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

இதில் நான் சந்தோஷமாய் குறிப்பிட வந்த விஷயம் கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//இதில் நான் சந்தோஷமாய் குறிப்பிட வந்த விஷயம் கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.//

:))))

பொதுவாய் ஆண்களிடம் இருக்கும் ஒற்றுமை (வேலை தேடுவதில் ஆகட்டும், அல்லது தண்ணி அடிப்பதில் ஆகட்டும்) பெண்களிடம் கண்டிப்பாக இல்லை. ஒரு குழு இருந்தால் அது ஒற்றுமையான குழுவாக இருக்காது, மாறாக மல்டிபிள் ஸோலோ குழுக்கள் தாம்.
வேண்டுமாணால் வலைப்பதிவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு மூவர் குழு தோழியர் இருக்கும் (முபெருந்தேவியர்). ஆனால், அவர்கள் மூவருக்குள்ளும் பயங்கர பாலிடிக்ஸ் இருக்கும். இதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். ஆண்கள் சண்டை போட்டுக் கொண்டாலும் அது வெளிப்படையாக இருக்கும். ஆனால், அந்த மூவருமே மற்றவருக்கு சில விஷயங்கள் தெரியக்கூடாது என்பதில் பயங்கர முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள்.

ஆண்கள் ஒரு குழுவாக இருந்தால் அவர்களிடம் ஒற்றுமை இருக்கும். நாங்கள் வேலை தேடும் பொழுது ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு இருந்தால் மற்ற நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டு, அவனையும் அழைத்துக் கொண்டு செல்வோம். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் அவள் தோழிகள் பற்றி பேசும் பொழுது, எங்கு நேர்முகத் தேர்வு இருந்தாலும் சொல்ல மாட்டார்களாம், எங்கே மற்றவர்களுக்கு வேலை கிடைத்து விடுமோ என்று. (இது அவளாகவே சொன்னது).

ஒரு ஒப்பீட்டிற்கேனும் பார்த்தால், நிச்சயம் ஆண்களை விட இந்த ஒற்றுமையில் பெண்கள் குறைவு தான் (என்பது என் கருத்து).

டிஸ்கி: இவை நான் கண்டது. மற்றபடி, குறை சொல்வதற்காக சொல்லவில்லை.

(போன பின்னூட்டம் மிஸ் ஆகிடுச்சு...)

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//பொண்ணுங்களுக்கெல்லாம் வேல அதிகம். இட்லி மாதிரி வெட்டியா இல்ல.//

ஆமாம். கூடவே சாம்பார், சட்னின்னு செஞ்சு வைக்கணும். சிலசமயம் மொளகாப்பொடியும்.:-)

உஷா, நம்ம ஒற்றுமையைக் கெடுக்க யாரோ(????) குழி ஒண்ணு தோண்டறமாதிரி இல்லே? :-)))))

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

இந்த வரிவரை சீராக ஓடிக்கொண்டிருந்த ஓட்டம், இங்கே வந்ததும் ஒரு பீட் விட்டது -
//எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.//

சரி பின்னூட்டம் பாக்கலாம்னு வந்தா
//உங்களோட நிறைய பிரச்சினைகளுக்கு இந்த "ஸ்பெஷல்" குணம்தான் காரணம். //
இங்கே நல்லா சூடேறிடுச்சி.

சரி காரசாரமா பதில் சொல்லலாம்ணு எழுத உக்காந்தா, கொத்ஸ் எல்லாத்தையும் எழுதிவிட்டிருக்காரு

இதனால் அறிவிப்பது என்னவென்றால் -- என் புல் சப்போர்ட் கொத்தனாருக்கே!!

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//இதில் நான் சந்தோஷமாய் குறிப்பிட வந்த விஷயம் கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.//

இந்த பதிவுல இருக்குற பின்னூட்டத்தை எல்லாம் படிச்ச பிறகு நீங்க சொல்றதை நூத்துக்கு நூறு நம்பியாச்சு :-)) (நானும் ஸ்மைலி போட்டிருக்கேன்)

அப்பறம் சொல்ல மறந்துட்டேன்... மகளிர் தின வாழ்த்துக்கள்!!! (இன்னும் இங்க மணி 12 ஆகல)

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//பொதுவாய் ஆண்களிடம் இருக்கும் ஒற்றுமை (வேலை தேடுவதில் ஆகட்டும், அல்லது தண்ணி அடிப்பதில் ஆகட்டும்) பெண்களிடம் கண்டிப்பாக இல்லை. ஒரு குழு இருந்தால் அது ஒற்றுமையான குழுவாக இருக்காது, மாறாக மல்டிபிள் ஸோலோ குழுக்கள் தாம்.
வேண்டுமாணால் வலைப்பதிவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு மூவர் குழு தோழியர் இருக்கும் (முபெருந்தேவியர்). ஆனால், அவர்கள் மூவருக்குள்ளும் பயங்கர பாலிடிக்ஸ் இருக்கும். இதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். ஆண்கள் சண்டை போட்டுக் கொண்டாலும் அது வெளிப்படையாக இருக்கும். ஆனால், அந்த மூவருமே மற்றவருக்கு சில விஷயங்கள் தெரியக்கூடாது என்பதில் பயங்கர முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள்.

ஆண்கள் ஒரு குழுவாக இருந்தால் அவர்களிடம் ஒற்றுமை இருக்கும். நாங்கள் வேலை தேடும் பொழுது ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு இருந்தால் மற்ற நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டு, அவனையும் அழைத்துக் கொண்டு செல்வோம். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் அவள் தோழிகள் பற்றி பேசும் பொழுது, எங்கு நேர்முகத் தேர்வு இருந்தாலும் சொல்ல மாட்டார்களாம், எங்கே மற்றவர்களுக்கு வேலை கிடைத்து விடுமோ என்று. (இது அவளாகவே சொன்னது).

ஒரு ஒப்பீட்டிற்கேனும் பார்த்தால், நிச்சயம் ஆண்களை விட இந்த ஒற்றுமையில் பெண்கள் குறைவு தான் (என்பது என் கருத்து).

டிஸ்கி: இவை நான் கண்டது. மற்றபடி, குறை சொல்வதற்காக சொல்லவில்லை.//

ரிப்பீட்டே!!!

இதை நானும் என் அனுபவத்திலே சொல்கிறேன்! சில சமயம் பசங்களுக்கு சொன்னாலும் சொல்வாங்க. ஆனா அவுங்க க்ளோஸ் ஃபிரெண்டுனு நாம நினைச்சிட்டு இருக்கவங்ககிட்ட சொல்ல மாட்டாங்க...

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

//ராதா என்று பெண் வலைப்பதிவாளர்கள் வட்டம் இன்னும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.//

யுரேகா யுரேகா !! என் பேர பாத்து புல்லரிச்சு போச்சுங்க....

அது சரி இங்க எல்லோரும் பின்னூட்டம் போடராங்களா பதிவூட்டம் போடராங்களா ?? என் பதிவே இவ்ங்க பின்னூட்டம் சைசுக்குதானே இருக்கும்??:)

மகளிர் தின வாழ்த்துக்கள் உஷா!!

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

என்னங்க அக்காக்களா,
தமாஷுக்கு கொத்ஸு ஏதோ சொல்லப்போக.. மாட்டினாண்டா ஒருத்தன்னுட்டு குனிஞ்சு குத்துங்கடி கும்மாங்கோனு கும்மி அடிச்சுட்டு ஆண்களுக்கு மட்டும் தான் கும்மியடிக்கத்தெரியும்னு டயலாக் வேற விட்டாக்க எந்த ஊரு நியாயம்?

இதெல்லாம் நல்லாயில்லை.

இனி கொத்ஸுக்கு ஒன்றென்றால் உயிரையும் எடுக்க தயாராக இருக்கும் கூட்டம் இங்கே அணிவகுத்து ஆதரவை மறைமுகமாக அவைக்கு வெளியிலிருந்து காட்டுமென்று தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுவும் கும்மிப்பின்னூட்டம் தான்.

 
At Thursday, 08 March, 2007, சொல்வது...

அட என்னங்க இது? இப்படி நின்னு போச்சு? நல்லா ஓடுமுன்னு நினைச்சு விளம்பரம் எல்லாம் வேற குடுத்தேனே?

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

//அப்புறமா பதில் சொல்ற எண்ணமும் இல்லை.//

இதை முதலில் சொல்லி இருந்தா டயம் வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டோமில்ல.

//பொங்காதீங்க. நான் பொங்கவல்லாம் இல்ல. //

பொங்குனது நீங்கதான். நான் நிதானமா யோசிச்சுதான் பதில் போட்டு இருக்கேன். படிக்கிறவங்களுக்கு இது புரியும். ஓ! நீங்க படிக்கலை இல்லையா. அதை மறந்துட்டுப் பேசறேனே. பை பை!

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

//இதனால் அறிவிப்பது என்னவென்றால் -- என் புல் சப்போர்ட் கொத்தனாருக்கே!! //

பினாத்தல் புல் சப்போர்ட் அவருக்கு, எனக்கு ஒரு ஆப் சப்போர்ட் குடுங்க அண்ணாத்த.....

//இனி கொத்ஸுக்கு ஒன்றென்றால் உயிரையும் எடுக்க தயாராக இருக்கும் கூட்டம் இங்கே அணிவகுத்து ஆதரவை மறைமுகமாக அவைக்கு வெளியிலிருந்து காட்டுமென்று தெரிவித்துக்கொள்கிறோம்.//

நீர் சொன்ன மாதிரி அவரு உயிர எடுக்க தான் வந்தேன் வே... ஆனா இங்க ரூட் மாறி போயி அவரோடவே கூட்டணி வைக்கும்ப்படி ஆகிப் போச்சு.

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

//அட என்னங்க இது? இப்படி நின்னு போச்சு? நல்லா ஓடுமுன்னு நினைச்சு விளம்பரம் எல்லாம் வேற குடுத்தேனே? //

ஒவரா விளம்பரம் குடுத்தா இப்படி தான் ஆகும் ;-)

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

ரொம்ப நன்றி Usha.
இத்தனை பேர்கள் இருப்பது இப்போதுதான் தெரியும். ரொம்ப அழகாக் கோர்வையா சொல்லிட்டீங்க.
உங்களுக்கும் மற்ற எல்லோருக்கும் மங்கையர்தின வாழ்த்துக்கள்.
பிரேமலதா என்னைவிசாரித்தது இன்னும் சந்தோஷம்.

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

//சில சமயம் பசங்களுக்கு சொன்னாலும் சொல்வாங்க. ஆனா அவுங்க க்ளோஸ் ஃபிரெண்டுனு நாம நினைச்சிட்டு இருக்கவங்ககிட்ட சொல்ல மாட்டாங்க...//

ஆமா. அந்த மூவரில், ஒருத்தி என்னுடைய க்ளோஸ் ஃபிரண்ட். சில சமயம் சில விஷயங்களை சொல்லிட்டு, 'ஏய்! இத அவகிட்ட சொல்லிடாத ஃப்ளீஸ்'-ன்னு சொல்லுவா. இத்தனைக்கும் அவங்க மூனு பேரும் அப்படியொரு க்ளோஸ். அதான் ஆச்சரியமே!!!

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

நா.சி, வெட்டிப்பயல், சீனு! இங்க பேசுவது இணையத்தில் பெண் பதிவாளர்களைக் குறித்து மட்டுமே, அதுவும் பதிவில் எழுதப்படும் விதம் குறித்து. மூணாங்கிளாசில் நான் பக்கத்து பெஞ்சு தோழியைப் பற்றி டீச்சரிடம் கோழி மூட்டிய விஷயம் எல்லாம் இப்ப வேணாம் :-)

ராமனாதா உன் நட்பின் ஆழம் எங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன? பினாத்தலாரே, நீங்கத்தான்
உம்ம சிஷ்யனுக்கு எடுத்துக் கொடுத்ததா மண்டபத்துல பேசிக்கிறாங்க ????

ராதா, வல்லி, நன்றிக்கு நன்றி.

துளசி கவனீச்சீங்களா? என்ன ஒத்துமையா வந்து சவுண்டு விடராங்க? "சர்ரூன்னு" ஏறுடுச்சில்ல :-))))

(சூடான்) புலியாரே, உமக்கு எதுக்கு "புல்"?

இலவசம், போதும் மூச்சு எறைக்குது. ஓடின வரை போதுடாப்பா!

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

//ramachandranusha said...

நா.சி, வெட்டிப்பயல், சீனு! இங்க பேசுவது இணையத்தில் பெண் பதிவாளர்களைக் குறித்து மட்டுமே, அதுவும் பதிவில் எழுதப்படும் விதம் குறித்து. மூணாங்கிளாசில் நான் பக்கத்து பெஞ்சு தோழியைப் பற்றி டீச்சரிடம் கோழி மூட்டிய விஷயம் எல்லாம் இப்ப வேணாம் :-)//

நான் வலைப்பூல பெண் பதிவர்கள் கும்மி அடிச்ச பதிகளையே எடுத்து கொடுக்க முடியுங்க...

இருந்தாலும் Premalatha ஒருத்தவங்களுக்காக மத்தவங்க மனச கஷ்டப்படுத்த விரும்பல...

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

வெட்டி, நன்றி. பெண் பதிவாளர்கள் யார் யாரைப் பற்றி அவதூறு, காழ்ப்புணர்ச்சி பதிவுகளை எழுதினார்கள் என்று எனக்கு அனுப்புங்கள். பிரசுரிக்க மாட்டேன். தெரிந்துக் கொள்ள மட்டும்.

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

//எனக்கு அவங்க துளசி
மட்டுமே :-)//

பிடிச்சிருக்கு.

ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு.
நன்றி உஷா.

ஓரமா உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன்.
ஒரே சிரிப்பாணிதான் போங்க :-))))))))

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

காழ்ப்புணர்ச்சி பதிவுக்கு மத்த எந்த பதிவையும் சொல்ல வேண்டாங்க...

இந்த பதிவுல வந்த பின்னூட்டத்துல

// Premalatha said...

இலவசம்,சாத்தான்(குளத்தான்), நீங்க ரெண்டுபேரும் MCP கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். //

இதுல அந்த MCP (Male Chauvanist Pig) னா என்னங்க அர்த்தம்??? அப்படி இதுல என்ன Male Chauvinism இருந்துச்சினு எனக்கு புரியல...

சாத்தான்குளத்தார் நக்கல் அடிச்சார்னு ஃபீல் பண்ணா பதிலுக்கு நீங்களும் அழகா அவரை நக்கல் பண்ணிருக்கலாம். அதுக்காக இவ்வளவு அநாகரிகமா திட்டனுமா?

//5) சந்தோச மனநிலையைக் கொடுக்கிறமாதிரி வாழ்த்திட்டு மட்டும் போகாம, இப்படி கோபம் உண்டுபண்ணிவிட்டுட்டுப் போற ஆணின் "ஸ்பெஷல்", மற்றும் "புத்திசாலித்தனமான" ஸ்பெஷல் குணங்களைக் கொண்ட இலவசம் மற்றும் சாத்தான்(குளத்தான்) இன்னும் வரபோகும் மற்றும்பல "the great"களும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.//
இதுல இருக்கறது காழ்ப்புணர்ச்சியா தெரியலையா???

அப்பறம் கும்மினா அவதூறு, காழ்ப்புணர்ச்சி மட்டுமில்லை.. மொக்கையா ஒரு பதிவை போட்டு நிறையா பின்னூட்டம் வாங்கறது.
அதுக்கும் பதிவுகளை காட்ட முடியும்... ஆனா மத்தவங்க பதிவை எதுவும் சொல்ல விரும்பல... ஏன்னா என் பதிவே பாதிக்கு மேல அப்படித்தான் இருக்கும் :-) (நாங்க எல்லாம் பெரிய எழுத்தாளரில்லைங்கோ)

கடைசியா வார்த்தைய பிடிச்சி தொங்கினேன்னு என்னையும் வந்து அவுங்க MCPனு திட்டுவாங்க... அதனால இந்த பதிவுக்கு நான் இனிமே வரலைங்க...

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

கொத்ஸு பதிவில் அடித்த கும்மி இங்கு இன்னும் பொருத்தமாக இருக்குமென்பதால்.. இதோ
**********
கொத்ஸு
உமக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக்

ஒரு வருஷம் முன்னாடி நாம போட்ட ரூல்ஸ்புக்லேர்ந்தே ஐட்டம்ஸ இங்க பாலோ செஞ்சு சிலரு உம்ம போட்டு பின்னி எடுக்கற மாதிரி இருக்கு.

-------------------------
இராமநாதன் said...

4. பின்னூட்டமே வரல. யாருமே நம்மள கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னா.. வெட்கமேயில்லாம விளம்பரம் கொடுக்கலாம். நிறைய அடி (ஹிட்) வாங்கற பதிவுகளுக்கு போய் உங்களோட கருத்துகளையும் (சம்பந்தமிருக்கோ இல்லியோ) பின்னூட்டமா போட்டுட்டு அதுலேயே உங்க பதிவுக்கும் விளம்பரம் கொடுத்துடலாம்.

February 02, 2006 4:48 AM
இராமநாதன் said...

4.1 மேல சொன்னபடி அடுத்தவங்க பதிவுக்கு போனீங்கன்னா, இன்னொரு ராடிகல் டெக்னிக் இருக்கு. அந்தப் பதிவாளர் சொல்றது தப்போ ரைட்டோ, நார் நாரா கிழிச்சு, இன்னா மேன் எழுதற நீயெல்லாம்னு மரியாதையா கேட்டீங்கன்னா.. கண்டிப்பா அந்தப் பதிவ படிக்கற எல்லாரும் உங்க விளம்பரம் மூலமா உங்க பக்கம் வருவாங்க. ஆனா, இது கொஞ்சம் ரிஸ்கி. ஏன்னா, பதிவாளர் விஷயம் தெரிஞ்சவரா இருந்து பதிலடி கொடுத்திட்டா. அப்படியும் கவலையில்லை. அம்பது சதவிகிதமாவது பாவப்பட்டு உங்க பக்கம் வருவாங்க.
-------------------

நான் தீர்க்கதரிசின்னு இப்பவாவது ஒத்துக்கங்கா மக்கா!

 
At Friday, 09 March, 2007, சொல்வது...

யாருப்பா என் தலைய உருட்டுறது? இருந்தாலும் நன்றிங்க.. ஹிஹி.

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//பொங்குனது நீங்கதான். நான் நிதானமா யோசிச்சுதான் பதில் போட்டு இருக்கேன். படிக்கிறவங்களுக்கு இது புரியும். ஓ! நீங்க படிக்கலை இல்லையா. அதை மறந்துட்டுப் பேசறேனே. பை பை! //

என்ன கொத்துஸ், சிரிப்பானே காணாம். மறந்துட்டீரா, இல்ல மறக்காம போடலையா???? :-)

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//நா.சி, வெட்டிப்பயல், சீனு! இங்க பேசுவது இணையத்தில் பெண் பதிவாளர்களைக் குறித்து மட்டுமே, அதுவும் பதிவில் எழுதப்படும் விதம் குறித்து. மூணாங்கிளாசில் நான் பக்கத்து பெஞ்சு தோழியைப் பற்றி டீச்சரிடம் கோழி மூட்டிய விஷயம் எல்லாம் இப்ப வேணாம் :-)//

அடப்பாவமே! முற்றும் தெரிந்த உஷாக்காவா இப்படி பேசுவது.... சிவா சிவா ( என்னைய தான் கூப்பிட்டுக்கிட்டேன்)

பதிவுலகில் இருக்கு பெண் படைப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் மற்ற பெண் பதிவாளர்களை பற்றி என்னிடம் என்ன சொன்னாங்கனு எனக்கும் சொன்னவங்களும் தான் தெரியும். என்கிட்ட மட்டும் சொல்லுங்க கேட்கப்பிடாது சொல்லிட்டேன் :-))))

ரகசியம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும், அதான்..... :-)))))

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//(சூடான்) புலியாரே, உமக்கு எதுக்கு "புல்"?//

நான் எங்கங்க புல் கேட்டேன், ஆப் தாங்க கேட்டேன்..... சின்ன பையன் தானே எனக்கு அது போதும் ஒரு தன்னடக்கம் தான். :-))))

//இதுல அந்த MCP (Male Chauvanist Pig) னா என்னங்க அர்த்தம்??? அப்படி இதுல என்ன Male Chauvinism இருந்துச்சினு எனக்கு புரியல...//

யோவ் வெட்டி, அதுக்கு இதுனா அர்த்தம்... கொத்துஸ் அப்பால சொல்லுறேன், அப்பால சொல்லுறேன் சொன்னப்பவே நினைச்சேன்... சாய்ச்சிப்புட்டாங்களே மக்கா.....

அப்படியே என்னைய கைத்தாங்கல கூட்டிட்டு போப்பா வெட்டி....

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

நாகை சிவா, இந்த பின்னுட்டம் படிக்கும்வரையில் இப்பதிவையும் அதைத் தொடர்ந்த பின்னுட்டங்களையும் வெகு சாதாரணமாய்தான்
எடுத்துக் கொண்டேன். இப்பொழுது மிக வருத்தமாய் உள்ளது. நானே பிற பதிவாளர்கள் பற்றி அவர்களின் பரசனல் விஷயங்களைப் உங்களிடமோ மற்றவர்களிடமோ ஏதாவது சொன்னேனா? இதில் முற்றும் அறிந்தவர் என்று என்னைக் குறிப்பிடுவது ஏன்?
என்னிடம் மெயிலில் தொடர்ப்புக் கொள்ளும் வெகு சில பதிவாளர்கள் யாரைப் பற்றிய விஷயங்களையும், சாதாரணமாகவோ தரக்குறைவாக சொன்னதில்லை. நான் சந்தித்த பெண் பதிவாளர்கள் உட்பட எழுத்தை அலசியிருக்கிறோமே தவிர எங்களின் சொந்த விஷயங்களைகூட பகிர்ந்துக் கொண்டதில்லை. நீங்கள் என்னுடன் போனில் பேசியிருக்கிறீர்கள்.
பொதுவாய் பெண்கள் ஆபாச, தனிப்பட்ட, காழ்புணர்ச்சியைக் காட்டும் பதிவுப் போடுவதில்லை என்ற என் கருத்து, ஆண் பதிவாளர்களை இந்தளவு பாதிக்கும் என்று நான் கொஞ்சமும் எண்ணவில்லை. இதுவரை பதிவில் எழுதப்பட்டும் விஷயங்கள்
எப்படி, எந்த திசையில் போகும் என்று மிக சரியாய் கணிப்பேன் என்று என்னை நானே மெச்சிக் கொண்டதற்க்கு இது சரியான அடி. நன்றி

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

Vanakkam Usha..

Penkal bloggersil vattaaram peruguvathu paarkka mika makizhciyaaka irukku. :-)
menmelum valara vendum enRu virumbukiren.. :-)

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//பதிவுலகில் இருக்கு பெண் படைப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் மற்ற பெண் பதிவாளர்களை பற்றி என்னிடம் என்ன சொன்னாங்கனு எனக்கும் சொன்னவங்களும் தான் தெரியும்.//

உஷாக்கா, ஏன் இந்த டென்ஷன்? அவர் நீங்க அவர் கிட்ட சொன்னதா சொல்லவே இல்லையே. அதை ஏன் நீங்க சொன்னதா எடுத்துக்கிட்டு இவ்வளவு பெரிய விளக்கம்?

அவர் தொடர்பில் இருக்கும் மற்ற பெண் பதிவர்கள் வேறு யாராவது விவகாரமா சொல்லி இருக்கலாம். அதைப் பத்தி அவர் இங்க குறிப்பிட்டு சொல்லி இருக்கலாம்.

அதை ஏன் உங்களை சொன்னதா நினைச்சுக்கிட்டு இப்படி? என் பதிவில் நீங்க தூங்க போனதுனால பின்னூட்டங்கள் நின்னு போச்சுன்னு சொன்னதுக்கும் இப்படித்தான் நான் உங்களை குத்தம் சொன்னா மாதிரி எழுதிட்டீங்க. நானும் தன்னிலை விளக்கம் குடுக்க வேண்டியதாப் போச்சு.

ஏன் இப்படி? கொஞ்சம் டென்ஷன் ஜாஸ்தியா இருக்கோ? வரும் பின்னூட்டங்களை ஒரு முறைக்கு ரெண்டு முறை படியுங்க. எழுதும் பதிலை உடனடியாக எழுதாம ஒரு பத்து நிமிஷம் கழித்து எழுதுங்க. எழுதினதை ஒரு தடவை படிச்சிட்டுப் போடுங்க.

மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ்.

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

////பொங்குனது நீங்கதான். நான் நிதானமா யோசிச்சுதான் பதில் போட்டு இருக்கேன். படிக்கிறவங்களுக்கு இது புரியும். ஓ! நீங்க படிக்கலை இல்லையா. அதை மறந்துட்டுப் பேசறேனே. பை பை! //

என்ன கொத்துஸ், சிரிப்பானே காணாம். மறந்துட்டீரா, இல்ல மறக்காம போடலையா???? :-)//

இல்லைப்பா! மறக்காமத்தான் போடலை. நம்ம எழுதினதுக்குப் பதில் சொன்னாங்களேன்னு அவங்க எழுதினதைப் படிச்சிட்டு யோசிச்சி திரும்ப நம்ம கருத்தைச் சொன்னா, அதை படிக்கக் கூட நேரம் எடுத்துக்காம எடுத்தோம் கவுத்தோமுன்னு Profiling பண்ணிட்டுப் போயிட்டாங்களேன்னு ஒரு வருத்தம்தான்.

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//நான் தீர்க்கதரிசின்னு இப்பவாவது ஒத்துக்கங்கா மக்கா!//

உமக்கு நம்ம பதிவில் சொன்ன பதில்தாங்க.

இராம்ஸு, குருவே, என்னமோ ரொம்ப உள்குத்தோட சொல்லி இருக்கீங்க. அதெல்லாம் நம்ம சிற்றறிவுக்கு ஏறலையே!!

ஆனா இந்த மாதிரி ரூல்ஸ் புக் போட்டதுக்காக உங்களுக்கு நான் அன்னைக்கே 'இணையக்கோனார்' அப்படின்னு பட்டம் குடுத்தாச்சே!! :))

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//யோவ் வெட்டி, அதுக்கு இதுனா அர்த்தம்... கொத்துஸ் அப்பால சொல்லுறேன், அப்பால சொல்லுறேன் சொன்னப்பவே நினைச்சேன்... சாய்ச்சிப்புட்டாங்களே மக்கா.....//

சின்னப்பையன் மனசு புண்படக்கூடாதே, பக்குவமாச் சொல்லலாமேன்னு பார்த்தா பட்டுன்னு போட்டு உடைச்சுட்டாரே இந்த வெட்டி!! சரி, நடந்தது நடந்து போச்சு, நீ மனசைத் தளரவிடாதே. பொது வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தான். ரொம்ப மனசுல போட்டுக் குழப்பிக்காம அப்படியே போயிகிட்டே இரு, என்ன!

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

உஷாக்கா என்ன இது? இப்படி ஒரு அவச்சொல் ஏன் மீது? ஐயக்கோ என்ன செய்வேன் நான்? :-)))))))))

இப்ப கொஞ்சம் சீரியஸ்சாவே பதில் சொல்லுறேன். முதலில் உங்க மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக பெரிய மரியாதை உண்டு. அதற்கு காரணம் நீங்களாக எனக்கு மடல் அனுப்பி என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள வைத்து என் பயணத்திற்கு வாழ்த்து சொன்னதால். இதை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. இப்படிக் கூட ஒரு தனி முயற்சி எடுத்து செய்வாங்களா என்று நான் ஆச்சரியப்பட்டேன் அன்று.

இந்த பதிவில் நான் பின்னூட்டம் போடும் போது மிகவும் கவனம் எடுத்து ஒன்றுக்கு இரண்டு முறை படித்து விட்டு தான் அனைத்து பின்னூட்டங்களும் போட்டேன். காரணம் இந்த விசயத்தில் பெரும்பாலான பெண்கள் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். என்ன சொல்ல வரோம் என்பதை விட்டு விட்டு நாம் பயன்ப்படுத்தி ஏதாவது ஒரு வார்த்தையை மட்டுமே எடுத்துக் கொண்டு தவறாக அர்த்தம் கற்பித்து கொண்டு விடுவார்கள். அவ்வளவு கஷ்ட்பட்டும் கடைசியில் நான் என்ன நடக்க கூடாதுனோ நினைத்தேனோ அது நடந்து விட்டது.

சரி பரவாயில்லை விடுங்க. நினைப்பது எல்லாம் நடந்து விட்டா உலகில் வேற என்ன இருக்கு.

உங்க கமெண்ட்க்கு போறதுக்கு முன்னால இன்னொரு விசயத்தையும் சொல்லிடுறேன்.

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

என்னடா நாம் அம்புட்டு சிரிப்பான் போட்டும் உஷாக்கா இப்படி ஒரு பதில் போட்டு இருக்காங்களே அப்படினு யோசிக்கிட்டு உங்க சைட் பார்ல பாத்தா நம்ம கழுகார் பதிவு. அந்த பதிவ இப்ப தான் பார்த்தேன். அதுவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தது. நான் சொன்னத போய் அதனுடன் பொருத்தி பார்த்து வீட்டீர்கள் என்பதை நினைக்கும் போது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்க, நம்ம கமெண்ட்ல ஏதோ தப்போனு

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//அப்புறமா பதில் சொல்ற எண்ணமும் இல்லை.// - பிரேமலதா!

//அதனால இந்த பதிவுக்கு நான் இனிமே வரலைங்க...// - வெட்டி

//அப்படியே என்னைய கைத்தாங்கல கூட்டிட்டு போப்பா // - சிவா

என்னை இப்படி தனியா புலம்ப விட்டுட்டு போறீங்களே...... :)

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//நாகை சிவா, இந்த பின்னுட்டம் படிக்கும்வரையில் இப்பதிவையும் அதைத் தொடர்ந்த பின்னுட்டங்களையும் வெகு சாதாரணமாய்தான்
எடுத்துக் கொண்டேன். //

இப்பவும் சாதாரணமாகவே எடுத்துக்கோங்க :-)

//இப்பொழுது மிக வருத்தமாய் உள்ளது. நானே பிற பதிவாளர்கள் பற்றி அவர்களின் பரசனல் விஷயங்களைப் உங்களிடமோ மற்றவர்களிடமோ ஏதாவது சொன்னேனா? //

சத்தியமா கிடையாது. நான் அப்படி சொல்லவே இல்லையே. உங்ககிட்ட பேசினது ஒரே ஒரு முறை தான். அப்பக்கூட பதிவுலகை பற்றி ஏதும் பேசலையே?

//இதில் முற்றும் அறிந்தவர் என்று என்னைக் குறிப்பிடுவது ஏன்?//

இது என்னங்க இப்படி கேட்குறீங்க, முற்றம் அறிந்தவர் என்றால் ஒரளவுக்கு பொது விசயங்கள் பலவற்றை அறிந்தவர் என்று அர்த்தங்க. அந்த கமெண்ட் நான் எதுக்கு போட்டேன், நீங்க மூன்றாம் வகுப்பு என்று சொல்லியதால் நான் அப்படி சொன்னேன். பதிவுலகில் இருக்கும் பெண்கள் என்ன தனியாக குதித்தா வருகின்றார்கள். அவர்களும் மற்ற பெண்களை போல தானே. அப்படி இருக்கும் போது பதிவுலகில் இருப்பவர்கள் அப்படி கிடையாது என்று நீங்கள் கூறியதற்காக நான் அந்த கமெண்ட் போட்டேன்.

அதில் நான் உங்களை என்று சொல்லவில்லை. எனக்கு தெரிந்த சில பதிவாளர்கள் என்று சொன்னேன், அவர்கள் என்னிடம் சாட் செய்பவர்கள், தனி மெயில் தொடர்பு கொள்பவர்கள். நீங்கள் கிடையாது கிடையாது, கிடையவே கிடையாது.

இத்தனைக்கு அந்த கமெண்ட்க்கு அத்த சிரிப்பான் வேற போட்டு இருந்தேன். அத்தனையும் வேஸ்டா போச்சு.

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

// நான் சந்தித்த பெண் பதிவாளர்கள் உட்பட எழுத்தை அலசியிருக்கிறோமே தவிர எங்களின் சொந்த விஷயங்களைகூட பகிர்ந்துக் கொண்டதில்லை. //

நாங்களும் அப்படி தாங்க, சில விசயங்களை அலசுவோம். எண்ண ஒட்டங்கள் ஒத்துப் போனால் பதிவுலகையும் தாண்டிய நண்பர்கள் என்ற அளவில் பழக ஆரம்பிப்போம். நண்பர்கள் என்ற கட்டத்தை அடையும் போது தனிப்பட்ட வாழ்க்கை சிலரிடம் பகிர்வது சகஜம் தான்.

//பொதுவாய் பெண்கள் ஆபாச, தனிப்பட்ட, காழ்புணர்ச்சியைக் காட்டும் பதிவுப் போடுவதில்லை என்ற என் கருத்து, ஆண் பதிவாளர்களை இந்தளவு பாதிக்கும் என்று நான் கொஞ்சமும் எண்ணவில்லை.//

எங்களை பாதித்து இருந்தால், இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு இங்க பதில் சொல்லிக்கிட்டு இருப்போமா என்ன? இது வரைக்கு கமெண்ட் போட்டு இருக்கும் அனைவரின் கமெண்டையும் மறுபடியும் படிச்சு பாருங்க. எங்காவது ஒரு இடத்தில் நாங்க யாராவது எல்லை மீறி இருக்கோமா என்று. எந்த அளவுக்கு நாகரீகமாக சொல்ல முடியுமோ அந்த அளவு சொல்லி இருப்பதாக எனக்கு படுகின்றது. எதற்கு இப்படி சொல்லனும். நீங்க விசயம் சொன்னீங்க, இல்லங்க இப்படியும் நடக்குது அப்படி நாங்க சொன்னாம். அவ்வளவு தானே, ஒரு விவாதமாக தானே இது வரை வந்துச்சு. இப்ப ஏன் வேற மாதிரி திசை மாறுது.

//இதுவரை பதிவில் எழுதப்பட்டும் விஷயங்கள் எப்படி, எந்த திசையில் போகும் என்று மிக சரியாய் கணிப்பேன் என்று என்னை நானே மெச்சிக் கொண்டதற்க்கு இது சரியான அடி. நன்றி //

இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, சரியான திசையில் தான் போய் கொண்டு உள்ளது. கொஞ்சம் சைட் மாறுச்சு, மறுபடியும் வளைச்சு நேரா கொண்டு வந்தாச்சு. :-))))))))))

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

மை பிரண்ட் வருகைக்கு நன்றி.

ராமனாதா, இலவசம் நன்றி. அது என்னய்யா இலவசம் அடிக்கடி உணர்ச்சிவசப்பாடாதேன்னு
ஒரு அறிவுரை :-) நானே சீரியசான மேட்டரையை ஜாலியா எடுத்துக்குற ஆளு. லோ பிபி ஏறுவனாங்குது. அப்படி உணர்ச்சிவசப்படாவாது நல்லதுன்னு பார்க்கிறேன். உமக்கு கொடுத்த பின்னுட்டம் ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே :-)

நாகை சிவா விளக்கங்களுக்கு நன்றி. உங்க பின்னுட்டம் பார்த்து கொஞ்சம் குழப்பம் அடைந்தேன் அவ்வளவே.

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//அது என்னய்யா இலவசம் அடிக்கடி உணர்ச்சிவசப்பாடாதேன்னு
ஒரு அறிவுரை //

நீங்க வசை பாடறீங்கன்னு நான் எங்க சொன்னேன்? :))

 
At Saturday, 10 March, 2007, சொல்வது...

//உமக்கு கொடுத்த பின்னுட்டம் ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே //

அடிக்கடி நீங்களும் தன்னிலை விளக்கம் குடுத்து அடுத்தவங்களையும் குடுக்க வெச்சுடறீங்களே. அதான் சொன்னேன். :))

என்ன சிவா நான் சொல்லறது சரிதானே!! :)))

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

//என்ன சிவா நான் சொல்லறது சரிதானே!! :))) //

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க பாக்கின்றீரே ஐயா....

நான் என்ன பதில் சொன்னாலும் அதில் இருந்து புதுசா ஒரு உள்குத்தை உருவாக்குவீர் நீர்....

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

//நாகை சிவா விளக்கங்களுக்கு நன்றி. உங்க பின்னுட்டம் பார்த்து கொஞ்சம் குழப்பம் அடைந்தேன் அவ்வளவே. //

நீங்க சாதாரணமா சொல்லிட்டீங்க, ஒவர் டைம் போட்டு உங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன். எதாச்சும் கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க...
:-)))))

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

சேதுக்கரசி, பலத்த சிபாரிசுகள் உங்களுக்கு வந்தாலும் உங்களை பட்டியலில் சேர்க்கவில்லை :-) சீக்கிரம்
பதிவு போட ஆரம்பிங்க.

நாகை சிவா, இலவசம் நூறு பின்னுட்டத்தைத் தாண்டினால் தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடுவாங்களாம் :-)

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

//நான் என்ன பதில் சொன்னாலும் அதில் இருந்து புதுசா ஒரு உள்குத்தை உருவாக்குவீர் நீர்....//

உள்குத்து எல்லாம் உருவாக்கறது இல்லை சிவா. ஆங்கிலத்தில் Invention and Discovery அப்படின்னு ரெண்டு வார்த்தைகள் இருக்கு. முதலாவது இல்லாததைக் கண்டுபிடிக்கறது. இரண்டாவது இருப்பதை வெளிக் கொணர்வது. உள்குத்துக்களைப் பொறுத்த வரை எப்பவுமே டிஸ்கவரிதான்.

அது சரி அதெல்லாம் செய்யலைன்னா எப்படி 100 அடிக்கிறது?? :)

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

//நீங்க சாதாரணமா சொல்லிட்டீங்க, ஒவர் டைம் போட்டு உங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன். எதாச்சும் கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க..//

ஆஹா! இதெல்லாம் இருக்கா? தெரியாமப் போச்சே. உஷாக்கா, இங்க இருக்கறதுலையே அதிகம் கஷ்டப்பட்டது நாந்தான். செட்டில்மெண்ட் நடக்கும் போது நம்மளை மறந்துடாதீங்க.

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

//சேதுக்கரசி, பலத்த சிபாரிசுகள் உங்களுக்கு வந்தாலும் உங்களை பட்டியலில் சேர்க்கவில்லை :-)//

சேது, நாங்க ஆம்பிளைங்க செஞ்ச சிபாரிசுன்னாலையே உங்க வாய்ப்பு அப்பீட் போலத் தெரியுதே!! மாப்பு! மாப்பு! :))))

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

//நாகை சிவா, இலவசம் நூறு பின்னுட்டத்தைத் தாண்டினால் தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடுவாங்களாம் :-)//

அது சரி! இதை பார்க்காம முன்னாடி 100 அடிக்கிறதைப் பத்திப் பேசிட்டேன். அதுக்கு இது காரணம் இல்லை. நீங்க வேற தன்னிலை விளக்கம் எதாவது குடுத்து என்னையும் வந்து தன்னிலை விளக்கம் குடுக்க வெச்சுடப் போறீங்க! ;-)

 
At Sunday, 11 March, 2007, சொல்வது...

//நாகை சிவா, இலவசம் நூறு பின்னுட்டத்தைத் தாண்டினால் தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடுவாங்களாம் :-) //

அப்ப சதம் அடிச்சிடலாமா.... :-)))))

 
At Monday, 12 March, 2007, சொல்வது...

//நா.சி, வெட்டிப்பயல், சீனு! இங்க பேசுவது இணையத்தில் பெண் பதிவாளர்களைக் குறித்து மட்டுமே, அதுவும் பதிவில் எழுதப்படும் விதம் குறித்து. மூணாங்கிளாசில் நான் பக்கத்து பெஞ்சு தோழியைப் பற்றி டீச்சரிடம் கோழி மூட்டிய விஷயம் எல்லாம் இப்ப வேணாம் :-)//

இதென்னடா வம்பா போச்சு. I'm proving by Induction method...:) Thats it. அப்போ நடந்த விஷயத்த வெச்சு நீங்க சொன்னதுக்கு நான் சொன்னேன். சொல்லவே கூடாதா என்ன?

//இப்படி ஒரு அவச்சொல் ஏன் மீது? ஐயக்கோ என்ன செய்வேன் நான்? :-)))))))))//

ஜோக்கிரி.காம் வைகோ மாதிரியே ரியாக்ஷன் கொடுக்கறாரே?

 
At Monday, 12 March, 2007, சொல்வது...

நானே 100!!!

உஷக்கா, இனி தமிழ்மணத்தில் இந்த இடுகை மட்டும்தான் வராதா இல்லை இந்த பதிவில் வரும் எந்த இடுகையும் வராதா?

அப்படி எல்லாம் நினைச்சு 100 அடிக்கலை. ஜஸ்ட் ஒரு சந்தேகம். :)))

 
At Monday, 12 March, 2007, சொல்வது...

உஷா,

100 க்கு வாழ்த்து(க்)கள்.

இதுதான் நூறோ?

 
At Monday, 12 March, 2007, சொல்வது...

//பலத்த சிபாரிசுகள் உங்களுக்கு வந்தாலும் உங்களை பட்டியலில் சேர்க்கவில்லை//

பரவாயில்லீங்க அடுத்த வருசம் ஞாபகம் வச்சிக்கங்க. அதுக்குள்ள எழுதிருவேன்னு நினைக்கிறேன் :-D

 
At Tuesday, 13 March, 2007, சொல்வது...

நம்ம கொத்தனார் இலவசமா ஆண்வர்க்கத்தின் ஒற்றுமையையும் அதன் பெருமையையும் உறுதியான சங்கர் சிமெண்ட் போட்டு கட்டியிருக்கார்.

கொத்தனாரின் வலிய கருத்துக்களை கூடமாட சித்தாளா இருந்து இந்தப் பின்னூட்டம் மூலமாகச் சுமக்கிறேன்!

ஆண்களின் இந்த ஒற்றுமைக்கும்மி ஓங்குக!

 
At Tuesday, 13 March, 2007, சொல்வது...

Ada...idu nalla irukkae :D

 
At Saturday, 17 March, 2007, சொல்வது...

ஆகா நானும் இருக்கேனா?? என்னை வலையுலகில் அதிகம் தெரியாது என நினைத்துக் கொண்டிருந்தேன்...

 
At Friday, 30 March, 2007, சொல்வது...

வலைத்தளங்களுக்குள் நான் பார்த்தவரையில் இந்த ஒரு பதிவில் மட்டுமே பின்னூட்டங்கள் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே செல்கிறது.. பொதுவாக பெண்கள் வாயைத் திறந்தால் நிறுத்த மாட்டார்கள் என்பது அகில உலகத்திற்கும் தெரியும். அதற்காக இப்படியா? அல்லது ஒரு வேளை.. உஷாக்கா மீது தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் இவ்ளோ பாசமா? ம்ஹ¤ம்.. எதுவான்னாலும் இந்தத் 'தம்பி'யும் ஒரு துண்டை போட்டு வைச்சிர்றேன்.. வணக்கம்க்கா.. உண்மைத் தமிழனின் ஒரு உண்மை வணக்கம். நிறைய எழுதிருக்கீங்க.. படிச்சேன். நமக்கு இந்த உலகத்துல புடிக்காத ஒரேயொரு வார்த்தை கவிதைன்ற வார்த்தை மட்டும்தான். அதுனால அந்தப் பக்கம் மட்டும் நான் போகலை.. மத்தபடி 'உங்களுக்குள்ளயே' அல்லாத்தையும் பேசிக்குறீங்களா? பல தடவை மண்டை குழம்பிப் போயிட்டேன்.. அல்லாத்தையும் பிரிண்ட்அவுட் எடுத்துக்கூட படிச்சுப் பார்த்தேன். தலை சுத்தினதுதான் மிச்சம்.. சரிக்கா.. மொத்தம் 75 பேராமே.. (இதுல இருக்கிறது.. நீங்க சொல்லி.. அவுக சொல்லி.. அப்புறம் இருக்குன்னு நீங்க திரும்பி கத்தி.. அல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்துப் போட்டக் கணக்கு) நல்லாயிருங்க.. வாழ்க.. வளமுடன்..

 
At Thursday, 03 May, 2007, சொல்வது...

இத்தனை அனுமார் வாலையும் படித்து முடித்து விட்டேன். அஹா! யார் சொன்னது தமிழ் மொழி அழிந்து வருகிறது என்று? புதிது புதிதாக வார்த்தைகள்!'ஜல்லி அடிப்பது' (சுஜாதா உபயம்?) 'கும்மி அடிப்பது'. ஆஹா ஆஹா!காது குளுருது. நகைச்சுவை பொங்கி வருகுது புதுப் புனல் போல்.

பதிவும் பின்னூட்டங்களும் அருமையோ அருமை.வளர்க உங்கள் குடுமி பிடி சண்டை! ஆஹா! எனக்கேது குடுமி என்று சிலர் சண்டை போட வரலாம். வரட்டும்! எனக்கென்று சில தோழர்கள் இல்லாமலா போய் விடுவார்கள்?

 

Post a Comment

<< இல்லம்