Tuesday, January 16, 2007

அன்புள்ள பூங்கா நிர்வாகிகளுக்கு

நம்ம தமிழ்மண பிள்ளைகள் கொஞ்சம் அதீத ஆர்வகோளாரால் பாதிக்கப்பட்டு ஓவராய் போய் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க சர்வாதிக்காரி வெறியன் புஷ் ஒன்னை எச்சரிக்கிறேன் என்று அமைந்தகரை, மஞ்சாகொல்லை மேடையில் இருந்து சவுண்டு விடுவதுப் போல குமுதத்தில்
ஆரம்பித்து டைம் பத்திரிக்கை வரை கூவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சத்தியமாய் கண்டுக்கொள்ளப் போவதில்லை. இவர்களுக்கு பதிவு போட ஒரு மேட்டர் என்பதா அல்லது சிந்தனையை பொறியை சுஜாதா கிளரிவிட்டாரா என்று தெரியவில்லை.

ஆனால் பூங்கா என்பது என்ன தமிழ்மண திரட்டியில் இருந்து தொகுப்பாளர்கள் குழு சிறந்ததை ஒரு புத்தகம் போல தொகுப்பாய் வாராவாரம் வெளியிடுவதுதானே? அதனால் சுஜாதா சிறுகதை ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் ஒரு தனி தொகுப்பு வெளியிடுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சுஜாதாவின் கதை படித்ததும், கல்பனா சாவ்லா இறந்ததும் தினமலரில் வகையறா கவிதையான "விண்ணில் போனாயே, விண்ணோடு போனாயே" நினைவில் வந்தாடியது. ஹூம், எழுதியது சுஜாதாவாச்சே :-)

சுஜாதா கதை மற்றும் இது சம்மந்தமான சுட்டுகளை தந்தால் ஓரிடமாய் சேர்த்துவிடுகிறேன். ஏதோ என்னால் ஆன சேவை:-)

விளையாட்டு இல்லாமல் பூங்கா நிர்வாகிகளுக்கு கோரிக்கை, இந்த மேட்டரில் மாயவன் எழுதிய உருப்படியான பதிவு. இதை பூங்காவில் சேர்க்க வேண்டும் என்பது வேண்டுக்கோளை வைக்கிறேன்.இதோ அதன் சுட்டி

13 பின்னூட்டங்கள்:

At Tuesday, 16 January, 2007, சொல்வது...

கவனத்துக்கு பதிவு எழுதி கொஞ்ச் நாள் ஆச்சேன்னு நினைச்சேன். :)))

 
At Tuesday, 16 January, 2007, சொல்வது...

http://snakebed.blogspot.com/2007/01/blog-post.html
இதுதாங்க காணாம போன மாயவன் அவர்களின் பதிவு. தலைப்பு "இதை குமுதம் வெளியிடாது, குழலியாவது வெளிடுவாரா?"
வரதன் ஐயா, யதார்த்தமா வேண்டுகோள் வைத்தேன், வரவர எல்லாத்துலையும் "உட்பொருள் காண்பது கெட்ட பழக்கமா
போய்ட்டு இருக்கு :-)

இலவசம், பழக்க தோஷம் :-)

 
At Wednesday, 17 January, 2007, சொல்வது...

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதை மறுபடியும் ஆரம்பித்து விட்டீர்களா? :-))

கொஞ்ச நாள் முன்னாடி சொந்த செலவில் சூனியம், தர்ம அடி போடுவது எப்படி என்று பதிவுகள் எழுதி, இனிமேல் ஜாக்கிரதையா இருக்கப் பொவதாகச் சொன்ன ஞாபகம். :-)) சரி, ஆசை அப்படி என்றால், யார் காப்பாற்ற முடியும். முதுகில் தலையணை கட்டிக் கொண்டு அடிவாங்கத் தயாராகுங்கள். :-))

முகமூடியின் லேட்டஸ்ட் பதிவிலும் உங்க கமெண்ட் எதையும் காணோம். சரி, உஷா உஷாரா இருக்கிறாங்க. பிழைச்சுப்பாங்கன்னு நினைச்சேன். :-)) ஆனா, காலையிலே வந்து பார்த்தால், ஹூம்...

 
At Wednesday, 17 January, 2007, சொல்வது...

பி.கே.எஸ் ஐயா, இது என்ன வம்பா போச்சு ;-) ஏதோ நல்லா இருக்கே என்று சிபாரிசு செஞ்சா அது ஒரு குத்தமா? சொந்த வேலைகள் கொஞ்சம் வேலை அதிகம்.புலி வாலை பிடிக்கும் உத்தேசம் இல்லை. பின்னுட்டமும் இடம், பொருள், ஏவல் பார்த்து மட்டுமே! மற்றப்படி வில்லங்கம் இல்லாமல் ஜாக்கிரதையாய் தற்சமயம் இருக்க உத்தேசம். கவனிக்க தற்சமயம் மட்டுமே :-)

 
At Wednesday, 17 January, 2007, சொல்வது...

தற்சமயம்-ங்கிறது never exists in real sense. The moment present is present, it becomes past, and future is no more future and slips into present and before you realise it is already past. தற்சமயம் never exists. :-)

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

பிரேமலதா, உங்க கமெண்ட் படிச்சதும் கண்ணு கலங்கிடுச்சுங்க. இந்த மாதிரி ஒரு டீச்சர் தமிழ்லையும் வாய்க்கலை, இங்கிலீஷ்லையும் அமையலை. இப்ப என்ன சொல்ல வரீங்க. தற்சமயம் என்கிற இடத்துல என்ன போடணும் :-)

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

இந்த nobody, somebody, everybody வச்சு ஆங்கிலத்தில ஒரு pun இருக்கும். அந்த மாதிரி இல்ல ஆகிப் போச்சு.

தற்சமயம் தற்சமயமா மட்டுமே இருக்கறதனால், தற்சமயம் சொல்றதெல்லாம் தற்சமயமே கிடையாதுனு தற்சமயம் அவங்க சொல்றதினால,

தற்சமயத்திற்கு, தற்சமயத்திற்கு பதிலா தற்சமயம் போட்டுக்குங்க...
இன்னொரு சமயம் பார்க்கலாம்!

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

தற்காலிகமாக இந்த மேட்டர் இத்துடன் முடிக்கப்படுகிறது சரிதானே ஸ்ரீதர் வெங்கட் ;-)

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

நாலாவது தடவையா என் பின்னூட்டம் ஏன் வரலைன்னு நீதி கேட்டு நெடும்பயணம் போகப்போறேன்... எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும் (தனி மடல்லயாவது)

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

ஐயா முகமூடி, நீங்க இந்த பதிவுக்கு நாலு பின்னுட்டம் போட்டீங்களா அல்லது இதுவரை நுனிப்புல்லுக்கு நீங்க போட்ட நாலு பின்னுட்டத்த நான் பப்ளிஷ் செய்யலையான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்கைய்யா! இப்பத்தான் மாடரேஷன் பக்கமும் போய் பார்த்துட்டு வரேன், எந்த பின்னுட்டமும் இல்லை. எந்த புண்ணியவன் கன்ணு பட்டுச்சுவோ, பின்னுட்டம் ஒற்றை இலக்கை தாண்ட மாட்டேங்குது. அதுல பாதி
என்னுது :-))))))))))

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

இந்த பின்னூட்டத்த பத்திதான் சொன்னேன்... ஒண்ணுக்கு நாலா சொல்றதுதானே தமிழன் வழக்கம் :)))

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

//எந்த புண்ணியவன் கன்ணு பட்டுச்சுவோ, பின்னுட்டம் ஒற்றை இலக்கை தாண்ட மாட்டேங்குது. அதுல பாதி
என்னுது :-))))))))))//

யூ நீட் ஹெல்ப்?!!! :))))

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

இலவசம், நோ சாட்டிங் :-)))

 

Post a Comment

<< இல்லம்